சிச்சன் இட்ஸா மற்றும் பிற இடங்கள்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும், நம்ம ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் இருக்கும்போது வரும் உணர்ச்சி இங்கு வரவில்லை. ஆக்ரா கோட்டை, முகலாய அரசர்களின் அரியணை போன்றவற்றைக் காணும்போதும் அவர்கள் இடங்களைப் பார்க்கும்போதும் மனதில் தோன்றும் வியப்பு இந்த இடத்தில் எனக்கு ஏற்படவில்லை. இதற்குக் காரணம், என்னால் அந்த இடத்துடன் ஒன்ற முடியவில்லை.
இருந்தாலும் தென் தமிழகத்தின் ஒரு கோடியில் பிறந்த ஒருவன், இன்னொரு கண்டத்தின் ஒரு பகுதியில் இருக்கும் கலாச்சாரச் சின்னத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்ற வியப்பும் என் மனதில் தோன்றியது.
நான் புதிய தேசத்தில் வேலை பார்க்க ஆரம்பித்திருந்த புதிது. அது ஒரு கன்சல்டன்சி நிறுவனம். அதில் எனக்கு ஒரு முக்கியமான போஸ்ட். சில பல ப்ராஜக்டுகளுக்கு நான் பொறுப்பு. அங்கு சுமார் 30 பேர்கள் வேலை செய்துகொண்டிருந்தோம். அது 1995. என்னுடன் வேலை பார்த்த பலர் இரவில் அமெரிக்க கம்பெனி இண்டர்வியூவில் கலந்துகொண்டு சட் சட் என்று ஆஃபர் லெட்டர் வாங்கிவிடுவார்கள். ஒரு சில மாதங்களில் ஒரு நாள் காணாமல் போய்விடுவார்கள் (நாங்கள் எல்லோரும் அலுவலக வளாகத்திலேயே எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு படுக்கை அறை அமைப்பில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்தோம். இரண்டு குடியிருப்புக்கு பொதுவான கிச்சன்.) யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால், அமெரிக்கன் எம்பஸிக்கு விஸா ஸ்டாம்பிங்குக்குப் போயிருக்கிறார்கள் என்று அர்த்தம் என எல்லோரும் பேசிக்கொள்வார்கள். என்னுடன் வேலை பார்த்த 4-5 பேர்கள் இது போல அமெரிக்க வாய்ப்பு கிடைத்து கம்பெனியை விட்டு விலகவும் எனக்கும் என் திறமையைச் சோதித்துப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது.
ஒரு முக்கியமான கட்டத்தில் (என் வாழ்வில்) எனக்கு இந்தக் கம்பெனி ஆஃபர் கொடுத்திருந்தது. ஒரு கம்பெனி நன்றாக இருக்கும்போது, குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது தொடர்ந்து அங்கு வேலை பார்க்கவேண்டும், சட் சட் என்று வேலையை, காசுக்காக மாற்றக்கூடாது என்பது என் எண்ணம். வேலை செய்யும் நிறுவனத்திற்கு ரொம்பவே loyal ஆக இருப்பது என் குணம்.
ஒரு நாள் நான் என் பாஸ் அறைக்குச் சென்று (அவர்தான் எம்.டி.), எனக்கும் அமெரிக்க கம்பெனிகளின் இண்டர்வியூக்களில் கலந்துகொள்ள ஆசை இருக்கிறது. ஆஃபர் கடிதங்கள் கிடைத்தால் என் ஃபைலில் வைத்துக்கொள்ள ஆசை. ஆனால் நிச்சயம் இந்த நிறுவனத்தில் 3 வருடங்களாவது வேலை செய்வேன். பிறகு இந்த தேசத்திலேயே ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்குமானால் எனக்கு ‘ஆட்சேபணை இல்லை’ என்ற கடிதத்தை கம்பெனி வழங்கவேண்டும், எந்தக் காரணம் கொண்டும் நான் அமெரிக்காவிற்கு வேலைக்குச் செல்ல மாட்டேன் என்று அவரிடம் சொன்னேன். நீயாக என்னிடம் இதனைச் சொல்லியிருக்கிறாய். பலரும் என்னிடம் உண்மையைச் சொல்லாமல் ஆஃபர் கிடைத்தவுடன் ஏதேனும் சாக்குச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அவர்களை இங்கு கொண்டுவந்து டிரெயின் பண்ணுவதற்கு எவ்வளவு செலவாகிறது, எவ்வளவு கஷ்டம் என்பதையெல்லாம் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை என்று சொன்னார்.
பாஸிடம் அனுமதி பெற்ற பிறகு நான் ஒரு சில இண்டர்வியூக்களில் கலந்துகொண்டேன். அப்போதெல்லாம் டெக்னிகல் கேள்விகளே கிடையாது. என்ன அனுபவம், என்ன என்ன தெரியும் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு உடனே ஆஃபர் லெட்டர் அனுப்பிடுவாங்க. எனக்கு அந்த மாதிரி இரண்டோ அல்லது மூன்றோ ஆஃபர் கடிதங்கள் வந்தன. அதில் ஒன்றை அனுப்பிய கம்பெனியின் பொது மேலாளர், ஏற்கனவே இந்த கம்பெனியில் வேலை பார்த்தவர். 2 வருடங்களுக்குள்ளாகவே க்ரீன் கார்டுக்கு அப்ளை செய்துவிடுவோம் என்றார். என்னவோ எனக்கு அமெரிக்காவில் வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை. அதற்குக் காரணங்கள் என்று நான் நினைத்ததை இங்கு எழுதினால், அது விவாதங்களுக்கு வழி வகுக்கும். அதனால் தவிர்க்கிறேன். இப்போது டைம் மெஷினில் பின்னோக்கிச் செல்லமுடியுமானால், அதே முடிவைத்தான் இப்போதும் எடுப்பேன் என்பதை உறுதியாக என்னால் சொல்லமுடியும்.
அந்தக் கம்பெனியிலேயே நான் சொன்னதுபோல 3 ½ வருடங்கள் இருந்தேன். பிறகு ஒரே நேரத்தில் மூன்று ஆஃபர்கள் கிடைத்தன. என் பாஸ், நான் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அவருக்கு சந்தோஷமே என்று சொல்லும்படியாக நான் அவரிடம் நடந்துகொண்டேன். (ஆனால் பாருங்க என் உண்மையான குணத்தை அவர் சரியாக கணிக்கவில்லை. நான் அவருக்கு loyal என்று நினைத்துக்கொண்டார். நானோ வேலை பார்க்கும் கம்பெனிக்கு loyal என்பதை பிறகு புரியவைத்தேன். அது பிறிதொரு சமயம்)
ஏற்கனவே குறிப்பிட்ட கிணறு இதுதான். ஆங்கிலேயர்கள் (அமெரிக்கர்கள்) இந்த இடத்திற்கு வந்தபோது, இந்தக் கிணறு முக்கியம் என்றால் இதன் அடியில் ஏதேனும் புதையல் கிடைக்கலாம் என்று முடிந்த வரை கிணற்றுத் தண்ணீரை இரைத்தும், கயிறை உள்ளே விட்டும் தேடிவிட்டார்கள். ஒன்றும் உருப்படியாகத் தேறவில்லை போலிருக்கிறது.
அடர்ந்த காட்டுப் பகுதியின் மத்தியில் இந்த இடம் இருக்கிறது என்று புரிந்தது.
வனாந்திரப்பகுதியாக இருக்கிறது. கொஞ்சதூரம் நடந்துசென்று பார்க்கலாமா என்று நினைத்தேன். அவர்களே பாதையை அடைத்து வைத்திருக்கின்றார்கள்.
Guide வைத்திருந்த புத்தகத்தில் இருந்த கிணற்றின் படம் மற்றும் அதிலிருந்து ஆங்கிலேயர்கள் புதையல் கிடைக்குமா எனத் தேடிய படம்.
கிணற்றின் முன்பு நின்றுகொண்டு (இங்க வந்ததற்கு சாட்சி வேண்டாமா?)
நிறைய கடைகள். ஒவ்வொன்றிலும் எழில் மிக்க நினைவுப்பொருட்கள். கலைப்பொருட்கள் கடையில் 10 டாலர் சொன்ன தொப்பி இங்கு 1 டாலர்தான். வாங்கியிருக்கலாம். என்னவோ வாங்காமல் வந்துவிட்டேன். இதுபோலத்தான் இந்தோனேஷியாவில் ஒரு எரிமலைப் பகுதிக்குச் சென்றபோது மரத்தால் ஆன செஸ் (எல்லா காயின்களும் சிற்பங்கள் போல மரத்தில் செய்திருந்தார்கள். எடை அதிகம்). கடைசியாக 15 டாலர் என்று சொன்னான், நான் 10 டாலர்னா வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.
நினைவுப் பொருட்களின் உபயோகம் என்ன? நாம் அங்கு சென்றோம், வாங்கினோம் என்பது நமக்கு மாத்திரம்தான் தெரியும். நமக்கு அது உணர்வு பூர்வமான ஒன்று. மற்றவர்களுக்கு அது இன்னொரு பொருள், வீட்டில் இடத்தை அடைத்துக்கொண்டு. இந்தக் கருத்தைக் கொண்டு எஸ்.ரா அவர்கள் (னு நினைவு) எழுதிய ஒரு அனுபவக் கட்டுரையைப் படித்திருக்கிறேன். ஒரு பழங்கால வீட்டில் கிடந்த புத்தகங்கள். அதனைச் சேகரித்தவர் இறந்துவிடுகிறார். அவர் வாரிசுகளுக்கு அவை குப்பைகள். அவர் மகன் சொல்கிறார், உருப்படியான எத்தனையோ பொருட்களை வாங்கியிருக்கலாம், எங்களுக்கும் உபயோகமாக இருந்திருக்கும். காசையெல்லாம் இந்த மாதிரி உபயோகமில்லாத புத்தகங்கள் வாங்கி வீணாக்கிவிட்டாரே என்று சொல்லுவார்.
முகமூடிகள் விதவிதம். இதைச் சுவற்றில் மாட்டி வைக்கலாம். வேறு என்ன உபயோகம் என்று தெரியவில்லை. ஆனால் வீட்டில் மாட்டியிருந்தால் ஏதோ ஆவி பிடித்த வீடு மாதிரியான தோற்றம் தராது?
80களில் (நான் பார்த்தது 89ல்) விமானப் பயணத்தின்போது டிரிங்க்ஸ் அழகிய சிறு பாட்டில்களில் தருவார்களாம். அது தற்போதுள்ள 8 ml Roll On Perfume பாட்டில் அளவு. விதவிதமாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு டிசைனில் இருக்கும். நான் அப்போது சென்னை கம்ப்யூட்டர் இன்ஸ்ட்டிடியூட்டில் டிரெய்னி (அதாவது PG Diploma முடித்துவிட்டு, என்னையும் என் நண்பனையும் அங்கு வேலைக்கு எடுத்திருந்தார்கள்). டிப்ளமா கோர்ஸில் கடைசியில் ஒரு ப்ராஜக்ட் பண்ணவேண்டும். அது 4 - 5 பேர்கள் சேர்ந்து பண்ணுவார்கள். அதைச் செய்து முடிக்கும்போது ஓரளவு அப்ளிகேஷன் நாலட்ஜ் வந்துசேரும். அதற்கு ஒரு பையனுக்கு நான் உதவி செய்தேன். அவனுக்கு என்னவோ என் மேல் ஒரு பிரியம் ஏற்பட்டுவிட்டது. ஒரு நாள் தன் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு அழைத்தான். நான் அவனிடம், மற்றவர்கள் வீடுகளில் சாப்பிடுவதில்லை, சுத்த சைவம் என்பதால் என்று சொன்னேன். அவனோ, இல்லை சார், முழு சைவம்தான் வாங்க என்று கூப்பிட்டான். அவனுடைய வீடு பாண்டிபஜாரில்தான் ஒரு இடத்தில் இருந்தது. பக்கத்தில்தானே இருக்கிறது என்று அவன் வீட்டிற்கு ஒரு மதியம் போனேன். பார்த்தால் பெரிய பணக்காரர்கள் போல இருந்தது. அவனுடைய அம்மா அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வாராம். அதனால் ஷோ கேசில் பலவிதமான இந்த பாட்டில்களை அழகாக அடுக்கி வைத்திருந்தார். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அவனுடைய அப்பா வந்தார். அவர் சொன்னார், தான் ஆந்திரத் திரையுலகில் இருக்கிறேன், ரொம்ப influential person. அதில் என்ன வேண்டுமானாலும் உங்களுக்குச் செய்துதர முடியும் என்றார். நாம இருக்கும் நிலை என்ன… ஆந்திரா திரைத்துறை எங்கே இருக்கிறது… ரொம்ப நன்றி சொல்லிவிட்டு வந்து சேர்ந்தேன்.
கலைப்பொருட்கள் மிக அழகாகத்தான் இருக்கின்றன. வாங்கி என்ன செய்வது?
இடத்தில் basement எப்படிக் கட்டியிருக்கிறார்கள். இதன் மீது பல கட்டிடங்கள், அரண்மனைகள் போன்றவை இருந்திருக்கலாம்.
இன்றைக்கு கதையும் படங்களும் ரொம்ப அதிகமாகிவிட்டனவோ? அடுத்த பகுதியில் தொடரலாமா?
(தொடரும்)
கலைப்பொருள்கள் அழகாகத்தான் இருக்கின்றன. வாங்கி என்ன செய்வது?
பதிலளிநீக்குநல்ல கேள்வி. உண்மை.
கைவினை பொருட்கள் ஏழை கலைஞனின் வயிற்றை நிரப்பும். உபயோகம் உள்ளது என்று வாங்கும் அவசியமில்லாதவை கார்பொரேட் முதலாளிகளின் பையை நிரப்பும்.
நீக்குரவிக்கை பிட் டிரான்ஸ்பர் செய்வது போல யாருக்காவது பரிசளிக்கலாம். அவர் அதை யாருக்காவது அளிப்பர். வாங்கியவர் இன்னொருவருக்கு..
நீக்குசமயங்களில் சொந்த பங்களாவில் வசிப்பவர்கள் கூடத்தில் அலங்காரமாய் வைத்து விடுவார்கள்!!
வாங்க ஸ்ரீராம்... கலைப்பொருட்களை வாங்கி வீட்டில் மாட்டி வைக்கலாம். ஆனால் தினமும் பராமரிக்க முடியாதவர்கள் இவைகளை வாங்குவதே வீண் என்பது என் எண்ணம்
நீக்குவாங்க ஜெயகுமார் சார்.. ஏழை கலைஞனின் வயிற்றை நிரப்புவதற்காக, அவசியமில்லாத பொருட்களை வாங்குவதா?
நீக்கு//சொந்த பங்களாவில் வசிப்பவர்கள் கூடத்தில் // இதைப் படித்ததும் நான் தொலைக்காட்சியில் 2004 வாக்கில் பார்த்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. மைக்கேல் ஜாக்சன், அந்தப் பெரிய கடைக்குச் சென்று, பூக்கள் வைக்கும் பெரிய தொட்டி, மிகப் பெரிய ஜாடி என்று வகை தொகை இல்லாமல் வாங்குவதைக் காட்டினார்கள். அளவுக்கு மீறி பணம் இருந்தால் அதனால் உபயோகம் இல்லை என்பதை உணரவைத்த நிகழ்வு அது.
நீக்குஉபயோகம் இல்லாத புத்தகங்கள் வாங்கி...
பதிலளிநீக்குபடிக்கும்போது ஒரு மாதிரி இருந்தாலும், புத்தகம் படிக்கும் பழக்கம், ஆர்வம் இல்லாதவர்கள் பார்வையில் அது சரிதானே?
அவருடைய கருத்து எனக்குச் சரியாகவே படுகிறது. உதாரணமாக நீங்கள் நிறைய பத்திரிகைகளில் வந்த தொடர்களை பைண்டிங் செய்துவைத்துள்ள புத்தகங்கள் நிறைய வைத்திருக்கலாம். அவை உங்களுக்கு வெறும் புத்தகங்கள் அல்ல, நினைவுகள். ஆனால் அந்த உணர்வு மற்றவர்களுக்கு இருக்க இயலுமா?
நீக்குஎன் அனுபவத்தில், புத்தகங்கள் வைத்திருப்பவர்கள் அவைகளை பொக்கிஷம் என்று கருதி பிறருக்குத் தருவதில்லை. பிறகு அவை யாருக்கும் உபயோகம் இல்லாமல் வீணாகின்றன
நீக்குஅந்த படிகள் போன்று இருக்கும் இடத்தில் ஏறிச்செல்ல முடியுமா? இல்லை சும்மா அலங்கார கட்டுமானமா?
பதிலளிநீக்குபடிகள் இருந்தன. தற்போதும் உள்ளன. படிகள் செங்குத்தாக இருப்பதால் எற முயற்சித்து விழுவார்கள் என்று பயந்து படிகளை தாற்காலிகமாக நிரப்பி சாய்மானம் ஆக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
நீக்குJayakumar
படிகள் ஏறிச்செல்வதற்காக ஏற்பட்டவை. அலங்காரமன்று. ஆனால் இப்போது பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. கட்டுமானம் சிதைவுறலாம், பார்வையாளர்கள் புகைப்படம் எடுக்கிறேன், நினைவுக்காக எடுத்துக்கொள்கிறேன் என்று சிதைத்துவிட வாய்ப்புண்டு. இல்லை தங்கள் பெயரைப் பொறிக்கிறேன் என்று ஆரம்பிக்கவும் வாய்ப்புண்டு.
நீக்குஇல்லை ஜெயகுமார் சார். மற்ற பகுதிகள் சாய்வான கட்டுமானம். ஆனால் நான்கு புறத்திலும் படிகள் உண்டு
நீக்குமற்ற இடங்களை விட இந்த இடத்தில் கலைப்பொருள்களின் விலை குறைவு என்றால் நமக்கு அந்தப் பொருளின் உண்மைத்தன்மை மீதும், தரத்தின் மீதும் சந்தேகம் வந்து விடுமே...!
பதிலளிநீக்குஅப்படி அல்ல. ஒரே பொருளை பல இடங்களில் அதிலும் நினைவுப்பரிசுகள் விற்கும் கடைகளில் மிக மிக அதிக விலையில் விற்பார்கள். நீங்கள் விமான நிலையக் கடைகளில் பார்த்திருப்பீர்களே. எல்லாப் பொருட்களின் தரமும், செய்யும் இடமும் ஒன்றே என்று நான் எப்போதும் நம்புகிறேன்
நீக்குஇந்த காலர் டி ஷர்ட் உங்களுக்குத் பிடித்தது என்று நினைக்கிறேன். அடிக்கடி உங்களை இந்த நிற டி ஷர்ட்டில்தான் புகைப்படத்தில் பார்க்கிறேன்!
பதிலளிநீக்குநெல்லை எப்போதும் சிவப்பு டீ ஷர்ட் அணிவது மற்றவர்களுக்கு ஒரு அறிவிப்பு தான். என்கிட்டே வச்சுக்காதே. டேஞ்சர் என்று மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்கிறார்.
நீக்குJayakumar
:))
நீக்கு// இந்த காலர் டி ஷர்ட் உங்களுக்குத் //
கலர் காலராகிவிட்டது!
சில நிறங்கள் எனக்குப் பிடித்தமானவை. மெரூன் நிறம் போன்று. மனைவிக்கு நான் வாங்கும் உடைகள் பலவும் மெரூன் நிறத்தில் இருக்கும். என் பெண் ஒரு தடவை எனக்கு நீல நிற டி.ஷர்ட் பரிசளித்தாள். (எல்லா நிறமும் எனக்குப் பிடித்தமானவை அல்ல. இருந்தாலும் பெண்ணாச்சே.. என்று உபயோகித்தேன். பலரும் அந்த நிறம் நல்லா இருக்கு என்றார்கள். அவளுக்கு இந்த நிறம் இவர்களுக்கு நல்லா இருக்கும் என்ற தேர்ந்தெடுக்கும் திறமை உண்டு)
நீக்கு//எப்போதும் சிவப்பு டீ ஷர்ட் அணிவது மற்றவர்களுக்கு ஒரு அறிவிப்பு தான்.// இது புதுவித தத்துவமாக இருக்கிறதே. துபாய் சென்ற புதிதில் மிகப் பிரபல பிராண்டின் போலி டி.ஷர்டுகள் பலவித விலைகளில் கிடைப்பதைப் பார்த்து நான் எல்லா நிறத்திலும் ஒன்று வாங்கியது நினைவுக்கு வருகிறது. அந்த பிராண்டின் ஒரிஜினல் விலை 5000 ரூ. அதன் போலி, 100 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை நான் வாங்கியிருக்கிறேன் (600 ரூபாய் நல்ல தரமானது)
நீக்குநெல்லை, ஜெ கெ அண்ணா சொல்லியிருக்காப்ல காலேஜ்ல ஒரு பையன்....இப்படித்தான்...
நீக்குஅதாவது அவன் சிவப்பு ஷர்ட் போட்டிருந்தால் எச்சரிக்கையாம். நீலம் போட்டால் மகிழ்ச்சியாம், கறுப்பு என்றால் வருத்தமாம், பச்சை என்றால் சிக்னல், வெள்ளை என்றால் சமாதானமாம்...
இதெல்லாம் மத்தவங்களுக்கு இல்லை அவன் ஆளுக்கு!!!
கீதா
கீதா ரங்கன்.... பாவம் பெண்களின் அப்பாக்கள். பெண்ணுக்காக விதவிதமாக அவள் டிரெஸ் எடுக்கும்போது பணத்தைக் கொடுப்பார்கள், பெண் சந்தோஷப்படுகிறாள் என்று. ஆனால் அவள் காதல் சிக்னலுக்காக விதவிதமான நிறங்களில் உடைகள் வாங்குகிறாள் என்ற உண்மை தெரிந்தால்? ஹா ஹா ஹா
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குநெல்லை அவர்களுக்கு அன்பின் வணக்கம்
வாங்க துரை செல்வராஜு சார். வணக்கம். நலமா?
நீக்கு//காலைப் பொருட்கள் அழகாய்தானிருக்கின்றன, வாங்கி என்ன செய்வது?//வாஸ்தவமான கேள்வி.
பதிலளிநீக்குபிரமிட் மாதிரி இருக்கும் கட்டிடங்கள் என்ன என்று சொல்லவேயில்லையே?
அது என்ன என்று எனக்கும் புரியலை. ஆனால் அது, அரசர்கள் பூசாரிகளோடு கலந்துகொள்ளும் நிகழ்வுக்காக, பலியிடுதல், தவறு செய்பவர்களைத் தண்டித்தல் போன்றவற்றையும் உள்ளடக்கிய விழாவுக்காக ஏற்பட்டது என்று நினைக்கிறேன் பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம்.
நீக்குகலைப்பொருட்கள் படங்கள் எல்லாம் அழகு. பார்த்து ரசிக்கலாம்!!!
பதிலளிநீக்கு//காலைப் பொருட்கள் அழகாய்தானிருக்கின்றன, வாங்கி என்ன செய்வது?//
மிகவும் யதார்த்தமானது.
நானும் இப்படிக்கலைப்பொருட்களைப் பார்த்தால் எனக்கு ஆசை எழும். ஆனால் யார் பராமரிப்பது என்றும் தோன்றும். ஆசைப்பட்டு வாங்கிய ஒரு சில பொருட்களையே தூக்கிப் போட வேண்டிய நிலை.
கீதா
கலைப்பொருட்கள் என்று வந்திருக்க வேண்டும் காலைப் பொருட்கள் என்றாகிவிட்டது.
நீக்குகீதா
வாங்க கீதா ரங்கன் க்கா.. கலைப்பொருட்கள் பலவும் இடத்தை அடைத்துக்கொள்ளும். அதனால் என்னைப் பொருத்தவரையில், வருபவர்கள் பார்த்து ஆஹா என்று மனம் மகிழவே நாம் கலைப்பொருட்களை வாங்கி நம் வீட்டை அடைப்பது என்று நினைக்கிறேன்.
நீக்குஎஸ் ரா தான் சொல்லியிருந்தார், நெல்லை
பதிலளிநீக்குஇன்று வீட்டின் கலைப் பொருட்கள் நாளை கடையில் - என்ற பொருளில் சொல்லியிருந்தார். தேசாந்திரி என்று நினைக்கிறேன் தொடராக வந்ததே அதில்.
கீதா
நான் சில பல இடங்களில் (அருங்காட்சியகத்தில்) இத்தகைய கலைப்பொருட்களைப் பார்த்திருக்கிறேன் (உதாரணமா சமீபத்தில் தஞ்சை சரஸ்வதி மஹாலில் பார்த்த, அரசர்கள் உபயோகிக்கும் பல்லக்கு, அரண்மனை பெட்டகங்கள் மற்றும் பல. அவைகள் அவைகளின் உபயோகத்தை இழந்து கன காலமாகின்றது. அதனால் அடுத்த தலைமுறைக்கு அவை குப்பைகள்தாம்
நீக்குநினைவுப் பொருட்களின் உபயோகம் என்ன? நாம் அங்கு சென்றோம், வாங்கினோம் என்பது நமக்கு மாத்திரம்தான் தெரியும்.//
பதிலளிநீக்குஅ
அதைச் செய்தவர்களுக்கு ஒரு வருமானம். ஆனால் நமக்கு அதைப் பராமரிப்பதற்கான பொறுமை நேரம் இல்லை என்றால் ஆட்கள் இருக்க வேண்டும்.
நீக்குபணக்கார வீடுகளில் அவை ஹாலை அழகு படுத்தும். சினிமாவில் பார்த்திருப்போமே அதைத் துடைத்து வைக்கும் ஆட்கள் என்று.
ஆனாலும் எனக்குப் பிடிக்கும். வாங்குவதில்லை ஹிஹிஹிஹி. ஃபோட்டோ எடுத்துக்குவேன்!!!!
கீதா
பலரும், இது காந்தியின் பல், காந்தி உபயோகித்த கத்தி என்று சேகரம் செய்துவைத்துக்கொள்வார்கள். எனக்கென்னவோ அவைகளில் பணத்தை முதலீடு செய்பவர்களைப் பார்த்தால் பாவம், அளவுக்கு அதிகமாக பணத்தை வைத்திருக்கிறார்கள் என்று நினைப்பேன். திருமணத்துக்கு வருகை தருவதற்காக ஒவ்வொரு நடிக நடிகைகளுக்கு பல கோடி ரூபாய், தங்குவதற்கு இடம், வருவதற்கு விமானக் கட்டணம் என்று செலவு செய்யும் அம்பானிகள் போல
நீக்குநெல்லை நீங்கள் குறிப்பிட்டிருப்பவை நிச்சயமாக சுத்த வேஸ்ட்.
நீக்குஓ திருமணத்துக்கு வந்தவங்களுக்கு விமான கட்டணம் கூட அம்பானியா செலவு செய்தார்? யம்மாடியோவ் அவ்வளவு பணமா அவரிடம். சத்தியமாக என்னால் அதை யோசித்துக் கூடப் பார்க்க முடியலை. பலரும் சொல்வாங்களே 10 தலைமுறைக்குச் சேர்த்து வைத்திருக்கான் என்று...நான் எப்படி அப்படி என்று நினைப்பேன். நாம செலவு செய்ய செய்ய குறையும் இல்லையா? அது எப்படிப் பெருகும், குட்டி போடும் என்றெல்லாம் யோசிப்பேன்!!!! ஹிஹிஹி
நமக்கு 1 ற்கு அடுத்து 5 சைபர் இருந்தாலே பெரிய விஷயம்.
என் மகனின் நண்பர் குஜராத் ஜாம் நகரில் அம்பானி பையனின் ஜூவில்தான் பணி செய்கிறார். ரொம்ப நன்றாக இருக்குமாம். எங்களை அழைத்துக் கொண்டே இருக்கிறார்.
கல்யாண அழைப்பு அவருக்கும் வந்ததாம். போக வேண்டும் என்று சொன்னார். அதன் பின் கேட்க மறந்து போச்சு. அடுத்த முறை பேசும் போது கேட்க வேண்டும்.
கீதா
நீங்க அம்பானியைப் பற்றிச் சொல்றீங்க. (அவர்ட லட்சம் கோடிகள் இருக்கு). நம்ம ஊர் நெபோலியனே, தன் மகனின் ஜப்பான் திருமணத்துக்கு பணத்தைக் கொடுத்து சரத்குமார், குஷ்புவைலாம் அழைத்தார் என்று சொல்றாங்க. இந்த மாதிரி காசு வாங்கிட்டு வர்றவங்களுக்கு திருமணம் செஞ்சுக்கப் போறவங்க மீது என்ன அக்கறை இருந்துவிட முடியும்?
நீக்குமுகமூடிகள் விதவிதம். இதைச் சுவற்றில் மாட்டி வைக்கலாம். வேறு என்ன உபயோகம் என்று தெரியவில்லை.//
பதிலளிநீக்குஹாலோவின் டே கொண்டாடுறாங்களே அதுக்குப் பசங்க போட்டுக்குவாங்க!!!!!!!
கீதா
இந்த ஹாலூவின் கொண்டாட்டங்களிலெல்லாம் எனக்கு விருப்பமோ இல்லை ஆர்வமோ இருந்ததில்லை. ஹாலூவின் கொண்டாடினால் அவங்க ரொம்ப மாடர்ன் என்றும், நம்ம ஊர் கரகாட்டம், ஜல்லிக்கட்டு என்னவோ ஏழைகளுக்கானது என்றும் நினைப்பவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வரும்
நீக்குசிச்சன் இட்ஸா - இதை வாசிக்கும் போதெல்லாம் . சிச்சன் இட்ஸா சிங்குச்சா என்று என் உதடு தானாகவே முணு முணுக்கிறது!!!!!!
பதிலளிநீக்குகீதா
நல்லவேளை என் படத்தைப் பார்த்து, சிவப்பு கலர் சிங்குச்சா என்று பாட ஆரம்பிக்கவில்லையே
நீக்குஅடர்ந்த காட்டுப் பகுதி என்று தெரிகிறது படங்களில்.
பதிலளிநீக்குஅந்தக் கிணறு ஆஹா! அழகு. இப்படியான பெரிய கிணறுகளை இங்கு தென்னகத்தில் சில கிராமங்களில் பார்க்கலாம்.
படத்தில் இருப்பது ரொம்பப் பெரிசுதான்.
கீதா
தென்னகத்து கிணறுகள் பல பராமரிப்பு இல்லாதவை. அவைகளில் நீச்சலடிக்க முடியுமா என்பது சந்தேகமே. இருந்தாலும் எனக்கு குளம் போன்றவற்றில் நீச்சலடிக்க ஆசை (நீச்சல் ஒழுங்காகத் தெரியாத போதும்)
நீக்குநீங்க நீஞ்சியிருக்கீங்களே நெல்லை. அப்புறம் ஏன் தெரியாதுன்னு சொல்றீங்க! நீச்சல் ரொம்ப நல்லது. நுரையீரலுக்கு. ரத்த ஓட்டத்திற்கும். நல்ல உடற்பயிற்சி. தொப்பை குறையும், கலோரி குறையும். உங்க வளாகத்துல இருக்குமே. நல்லா பராமரிச்சாங்கன்னா, நல்ல தண்ணியா இருந்தா நீங்க அதுல பயிற்சி செய்யலாம் நெல்லை.
நீக்குகீதா
பாதுகாப்பு கவசம் போட்டுக்கிட்டு நீஞ்சறதுலாம் ஒரு நீச்சலா? எங்க வளாகத்துல அருமையான நீச்சல் குளம் (?) இருக்கிறது. இன்னும் ஒன்று வேறு வருகிறது. இந்த ஐந்து வருடங்களில் ஓரிரு முறையே போயிருக்கிறேன். ஹாஹாஹா
நீக்குபடங்கள் எல்லாம் மிக அருமை. அதோடு கூடிய விளக்கங்களும்.
பதிலளிநீக்கு95 களில் அங்கிருந்து, வேறு யாராவதாக இருந்தால் அமெரிக்காவுக்குப் போய் செட்டிலாகியிருப்பார்கள். நீங்கள் செல்லவில்லை என்பது அது இப்போதும் கூட இழப்பு இல்லை என்று நினைப்பதே பெரிய விஷயம். சந்தோஷமான விஷயம்.
கிணற்றுடன் நீங்களும் படம் எடுத்துக் கொண்டது நல்ல நினைவுக்கான ஒன்று. இப்போது அக்கிணறு எப்படி இருக்கும் என்றும் எண்ண வைக்கிறது.
89ல் ஆந்திரா திரைப்படத் துறையைச் சேர்ந்தவரைச் சந்தித்திருக்கிறீர்கள் அதையும் வேண்டாம் என்று சொல்லும் மனம், அதுவே சிறந்தது. இல்லை என்றால் உங்களை இன்று திரைப்படத் துறையில் கதாசிரியராகப் பார்த்திருப்போமோ?
துளசிதரன்
வாங்க துளசிதரன் சார்... அமெரிக்கா - அது என்னுடைய (அல்லது நான் நம்பும்) கலாச்சாரத்தை மாற்றிவிடும் என்ற பயம்தான். நம்ம பசங்களுடைய வாரிசுகள் என்ன பண்ணப்போறாங்க என்பது அவங்க பிரச்சனை. குறைந்த பட்சம், நம் கண் முன்னே கலாச்சாரம் மாறிவிடக்கூடாது என்ற எண்ணம்தான். (யூரோப் தேசத்திலிருந்த அப்பா, பையனை-சிறுவன் கோபித்துக்கொண்டார் என்று அவன் போலீஸுக்கு போன் போட்டு, அப்பா பம்மும்படியாக ஆகிவிட்டது, பிறகு வெகேஷனுக்கு நல்லாப் பேசி பையனுடன் கேரளா வந்தபோது ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் பையனை அடி அடி என்று அடித்தார் என்ற செய்தி நான் பஹ்ரைனில் இருக்கும்போது பெரிய பேசுபொருளானது. அமெரிக்க கலாச்சாரம் என்பது மாடர்ன் கலாச்சாரமல்லவா?) எனக்கு முதன் முதல் வெளிநாட்டு ஆஃபர், அபுதாபி ஆர்மியிடமிருந்து வந்தது. அதைப்பற்றி ஒரு நாள் எழுதுகிறேன்.
நீக்குகருணாநிதி சொன்ன மாதிரி, நம்ம உயரம் நமக்குத் தெரியாதா துளசிதரன் சார்? அவர் ரொம்ப எனக்கு அழுத்தம் கொடுத்து என்ன வேணும்னு கேட்டிருந்தார்னா, ஒன்றிரண்டு நடிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ளணும்னு சொல்லியிருப்பேனாயிருக்கும். ஆனாலும், திரைத்துறை என்பது பெரும்பாலும் பெரும் பணத்தைக் கொடுக்கும் துறைதான்.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம். நல்லா இருக்கீங்களா?
நீக்குநலம் என்று சொல்ல வேண்டும் என்று ஆசைதான், சில உடல் தொந்திரவுகள் இருக்கிறது . இறைவனிடம் பொறுத்துக்கொள்ளும் மனபலத்தை கேட்டு கொண்டு இருக்கிறேன் .
நீக்குஉங்கள் அலுவலக அனுபவங்கள் நன்று.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
கலைப்பொருட்கள், புத்தகங்கள் எல்லாம் நினைவுகளை தாங்கி இருக்கும் . பாதுகாப்பதும் கடினம் தான்.
தூசி துடைத்து வைத்து பாதுகாக்க வேண்டும். முன்பு இணையம் வீட்டுக்குள் வராத சமயம் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றாலும் புத்தகங்களை படித்து அதில் இருந்து கருத்துக்களை மேற்கோள் காட்ட எடுப்போம்.
பள்ளி, கல்லூரிகளில் உள்ள நூலகத்தில் புத்தகங்களை தேடி எடுப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய புத்தகம் கிடைக்காது, வேறு யாராவது எடுத்து போய் இருப்பார்கள், காத்து இருக்க வேண்டும்.
நூலகம் நூலகமாக சார் அழைந்து திரிந்து முனைவர் பட்டம் வாங்க படித்தார்கள், புத்தகங்கள் வாங்கினார்கள்.
இப்போது பிள்ளைகள் நாங்கள் எங்களுக்கு வேண்டியதை எடுத்து கொண்டு மற்றவற்றை நூலகத்திற்கு கொடுத்து விடலாம் என்று சொல்கிறார்கள். மற்றவர்களிடமிருந்து பாதுகாத்து தான் வைத்து இருக்கிறேன்.
பேத்தி கொஞ்சம் புத்தகம் எடுத்து போனாள்.
இப்போது இணையத்தில் தேடி எளிதாக எடுத்து விடுகிறார்கள் குழந்தைகள் கூட.
//இணையம் வீட்டுக்குள் வராத சமயம் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றாலும்// எனக்கும் இந்தக் காலங்கள் நினைவில் இருக்கிறது. நிறைய புத்தகங்களை வைத்துக்கொண்டு அவற்றை ரெஃபர் செய்து தகவல்கள் சேகரிப்பேன். அதுபோல மதுரை காமராஜர் யூனிவர்சிட்டி நூலகத்தில், எங்களுக்குத் தேவையான புத்தகங்களை, சம்பந்தமே இல்லாத வரிசையில் கொண்டுபோய் பதுக்கி வைப்போம், அடுத்த முறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று (குவாண்டம் புத்தகத்தை நாவல்களின் இடையில், ஆப்டிக்ஸை, கெமிஸ்டரி புத்தக வரிசையில் என்று)
நீக்குஇணையம் வந்த பிறகு, புத்தகங்கள் வாங்கும் ஆசை குறைந்துவிட்டது. பிடிஎஃபில் எளிதாகப் படித்துக்கொள்ளலாம்.
வனாந்திரப்பகுதியாக இருக்கும் படம், கிணறு படங்கள் , கலைப்பொருட்கள் கடை எல்லாம் அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்குபாம்பு பற்களை காட்டிக் கொண்டு பயமுறுத்துகிறது.
முகமூடிகளை வாங்க குழந்தைகள் ஆசைபடுவார்கள்.
குழந்தைகளுக்கு முகமூடியில் ஆசை இருக்கும்தான். உங்கள் கருத்துகளுக்கு நன்றி கோமதி அரசு மேடம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய மெக்சிகோ பதிவு மிக அருமையாக இருக்கிறது. படங்களும் மிக அருமை. கலைப்பொருட்கள் ஒவ்வொன்றும் நன்றாக. உள்ளது தங்களின் அனுபவபூர்வமான நினைவலைகள் படிக்கவே ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. உங்களின் நேர்மையான நல்ல மனது நீங்கள் சொல்லும் அலுவலகத்தின் பழைய விஷயங்களிலிருந்து தெளிவாக புரிகிறது.
/நினைவுப் பொருட்களின் உபயோகம் என்ன? நாம் அங்கு சென்றோம், வாங்கினோம் என்பது நமக்கு மாத்திரம்தான் தெரியும். நமக்கு அது உணர்வு பூர்வமான ஒன்று. மற்றவர்களுக்கு அது இன்னொரு பொருள், வீட்டில் இடத்தை அடைத்துக்கொண்டு. இந்தக் கருத்தைக் கொண்டு எஸ்.ரா அவர்கள் (னு நினைவு) எழுதிய ஒரு அனுபவக் கட்டுரையைப் படித்திருக்கிறேன். ஒரு பழங்கால வீட்டில் கிடந்த புத்தகங்கள். அதனைச் சேகரித்தவர் இறந்துவிடுகிறார். அவர் வாரிசுகளுக்கு அவை குப்பைகள். அவர் மகன் சொல்கிறார், உருப்படியான எத்தனையோ பொருட்களை வாங்கியிருக்கலாம், எங்களுக்கும் உபயோகமாக இருந்திருக்கும். காசையெல்லாம் இந்த மாதிரி உபயோகமில்லாத புத்தகங்கள் வாங்கி வீணாக்கிவிட்டாரே என்று சொல்லுவார்/
உண்மை. நாம் சென்ற இடத்தின் நினைவாக ஏதேனும் வாங்கி வருவோம். சேர்த்து வைப்போம். அதன் உபயோகம் என்று ஏதும் இல்லாமல் போனாலும், அதன் நினைவுகள் நமக்கு என்றும் ஆனந்தம். பிறருக்கு அது குப்பையான ஒரு பொருள். அழகாக சொல்லியுள்ளீர்கள். ஒவ்வொரு வீட்டிலும் இப்படித்தான். அதனால்தான் நாங்கள் இப்போது வெளியில் சென்றால், இந்த மாதிரி கலைப்பொருட்கள் ஏதும் வாங்குவதை தவிர்க்கிறோம்.
எல்லா படங்களும் மிக அருமையாக உள்ளது. பார்த்து ரசித்தேன். இன்றைய தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பேத்தி நலமா?
நீக்குதற்போதெல்லாம், ஏதேனும் பயணம் சென்றால் (சுற்றுலா தலங்கள்) மனைவி, பசங்களுக்கு ஏதேனும் நினைவுப் பொருட்கள் வாங்க எண்ணுகிறாள். எனக்கு எல்லாமே தேவையில்லாத பொருட்கள் எனத் தோன்றும். ஆனால் யாத்திரைத் தலங்களில் தலத்தின் இறைவனின் படங்களை வாங்குவேன், மாட்டி வைக்க இடம் இல்லை என்று தெரிந்தும்.
நன்றி