20.8.25

தேவன், சாவி, பாக்கியம் ராமசாமி, சுஜாதா யாருடைய நகைச்சுவையை அதிகம் ரசிப்பீர்கள்?

 

நெல்லைத்தமிழன்: 

பெண்கள் ஆறு போன்ற மிகுந்த எழுச்சியும் தீரமும் நிரம்பப்பெற்றவர்கள் என்பதால் அவர்களுக்கு பலமான கரை அல்லது பாதுகாப்பு தேவைப்படுகிறது, ஆண்கள் அதிலிருந்து கிளைத்துவரும் வாய்க்கால் போன்றவர்கள் என்பதால் கட்டுப்பாடு தேவையில்லை என்று சமீபத்தில் படித்தேன். பொதுவாகவே இந்த உலகம் 'ஆண்களே உயர்ந்தவர்கள்' என்ற எண்ணமுடையவர்களைக் கொண்டதால் இப்படியெல்லாம் சித்தரித்து பெண்களை அடக்கியே வந்திருக்கிறார்களோ?   

# வீட்டுக்குள் பெண்தான் தலைவி.  கல்யாண மார்க்கெட்டில் இப்போது பெண் வைத்ததுதான் சட்டம்.  இந்த இரண்டு தவிர வேறு எல்லா தளங்களிலும் ஆணாதிக்கம்தான்.  விலங்குகள் கூட விலக்கல்ல.‌  ஆண்-பெண் சமத்துவம் என்பது ஒரு மாயக் கனவு என்பதே நடப்பு.‌ இதற்கான காரணங்கள் மிகச் சிக்கலான பல.‌

குளிர்சாதனப் பெட்டி மற்றும் பல்வேறு இயற்கைக்கு மாறான கெமிக்கல் வசதிகளெல்லாம் இருப்பதனால்தான் நாம் 'புதியதாக' உள்ளதைச் சாப்பிடும் வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறதோ? நம் முன்னோர்கள், ஓரளவு புதிய பழங்கள், காய்கறிகள் சாப்பிட்டனர், நாமோ மிகவும் பழையதான ஆனால் புதியதுபோலக் காட்சியகப்படுத்தப்பட்ட பழங்கள் காய்கறிகளை உண்ண நேர்கிறதோ?  

# விரயம் வேண்டாம் என குளிர் சாதனப் பெட்டியை நாடுபவர்கள் அடுத்த நாளே சேமித்ததை வெளியே எறிவார்கள்.  மாறாக ஏன் சற்றுக் குறைவாக சமைக்கக் கூடாது என்பது புரியாத புதிர்.‌

மார்க்கெட்டில் நான் கிலோ 30 ரூபாய்க்கு வாங்குவது என் வீட்டருகே இருக்கும் கடைகளில் 40-50 ரூபாயாக ஆகிவிடுகிறது. போக்குவரத்துக்கான செலவு என்று ஒத்துக்கொண்டாலும், அப்போ பல வாரங்கள்/மாதங்கள் கஷ்டப்பட்டு விளைவிப்பவனுக்கு 10 சதம் கூடப் போய்ச்சேருவதில்லை என்பது ஜீரணிக்கக்கூடியதாகவா இருக்கிறது?   

# லாபத்தில் பெரும் பங்கு விளைவித்தவருக்குத்தான் சேரவேண்டும்.‌ எளிதில் பாழாகும் பொருள்கள் என்பதால் இப்படி அவர்களை நடு ஆட்கள் வஞ்சித்து லாபத்தை அள்ளிக் கொண்டு போகிறார்கள்.  மிகப் பெரிய அளவில்  கூட்டுறவு முயற்சிகளை யாரோ ஒருவர் முன்னெடுத்துச் செய்யாதவரை இந்த அவலம் இப்படியேதான் இருக்கும்.‌

தியேட்டர்களில் திரைப்படம் பார்க்கும்போது 500-1000 ரூபாய் பத்துபைசா பெறாத பாப்கார்னுக்குச் செலவழிக்க மனம் உள்ளவர்கள், கோயிலுக்குச் செல்லும்போது 10 ரூபாய் தட்டில் போட ஏன் இவ்வளவு தயங்குகிறார்கள்?

# தனக்கென்றால் கணக்குப் பார்க்காதது நம் ரத்தத்தில் ஊறிவிட்ட சுபாவம். தெரு வியாபாரிகள் விலையைக்குறைக்க இயலாமையைச் சொல்லும் போது வெளிப்படும் பரிதாபக் குரலை கவனித்திருக்கிறீர்களா ?

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

தேவன், சாவி, பாக்கியம் ராமசாமி,  சுஜாதா யாருடைய நகைச்சுவையை அதிகம் ரசிப்பீர்கள்?

# சாவி, பாக்கியம் ராமசாமி, சுஜாதா, தேவன் என்பது என் வரிசை.

& என்னுடைய வரிசை : பாக்கியம் ராமசாமி, தேவன், சாவி, சுஜாதா. 

கோவிலில் நெரிசல், சினிமா தியேட்டரில் தள்ளு முள்ளு, கோவில் உண்டியலில் இத்தனை ரூபாய் வசூல், டாஸ்மாக்கில் இத்தனை ரூபாய் வருமானம் போன்ற செய்திகளை வாசிக்கும் பொழுது என்ன நினைத்துக் கொள்வீர்கள்?

# நல்லதுக்கும் கெட்டதுக்கும் பெரிய அளவில் ஆர்வம் காட்டும்  மக்களை நினைத்து வியப்படைவேன்.

அநியாய விலை கொடுத்து , ஒரு மிகச் சாதாரணமான சினிமாவைப் பார்க்க ஒரு பெருங்கூட்டம் கூடுகிறது என்பதைப்  பார்க்கும் போது வெகுஜன மதிப்பீடுகளுக்கான அடிப்படை என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது.

வடை, பஜ்ஜி, போண்டா இந்த  மூன்றில் காபி அல்லது டீக்கு முன்பாக சாப்பிடுவதற்கு ஏற்ற ஸ்நாக் எது? 

# எனக்கு பஜ்ஜி, பெரும்பாலோர்க்கு வடை.

& எனக்கு போண்டா! 

கே. சக்ரபாணி, சென்னை 28.


வாழைப்பழத்தை  எந்தபக்கத்திலிருந்து  உரித்து  சாப்பிடுவது  சரியான முறை?  காம்பு பக்கத்திலிருந்தா  அடுத்தபக்கத்திலிருந்தா.  எப்படி  வேண்டுமானாலும் சாப்பிடலாம்  என்ற  பதில் வேண்டாம்.  சரியான முறை  வேண்டும். 

& ஒரு இஞ்ஜினியராக என் பார்வையில் ... 

காம்புப் பக்கத்தை ஒரு கை விரல்களால் உறுதியாகப் பிடித்துக் கொண்டு, மற்ற கை விரல்கள் உபயோகித்து தோலை உரித்தல் சரியான முறை. 

விளக்கம் : When you perform operation on a work piece, the work piece must be held firmly in a jig or fixture. 

= = = = = =  =

படமும் பதமும் :

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

கோகுலாஷ்டமிக்கு என் பேத்தி வரைந்த ஓவியம். அவளே நெட்டில்  பார்த்து வரைந்தாள். 

- - - - - - -

ஸ்ரீராம் : 

நிழலும் தராது.  காற்றும் வராது. ஆனால் தோற்றம் மட்டும் காற்றாடி மாதிரி!

- - - - - - - - - - -

நெல்லைத்தமிழன் : 


சூரியனுக்கே இப்போதெல்லாம் விமானம் விட்டுவிட்டார்களா?  மனிலாவில் (பிலிப்பைன்ஸ்), சூரியனை விமானம் கடந்த சமயத்தில் நான் எடுத்த படம்.

(விமானம், கீழே உள்ள இரண்டாவது படத்தில் நன்றாகத் தெரியும்.)


- - - - - - - - -

நம் ஊரில் ஷேர் ஆட்டோ என்று படு திராபையான ஆட்டோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். (சாதாரண ஆட்டோக்கள் மாத்திரம் என்ன வாழ்கிறது? என்று நினைக்கிறீர்கள் அல்லவா? தற்போது வரும் எலெக்ட்ரிக் ஆட்டோ கொஞ்சம் அழகாகவே இருக்கின்றது). பிலிப்பைன்ஸில் இந்த மாதிரி சிறிய பேருந்து என்று சொல்லமுடியாது, ஷேர் ஆட்டோவின் அழகிய வடிவம் என்று வேண்டுமானால் சொல்லலாம், டிரான்ஸ்போர்ட்டுக்கு உபயோகிக்கிறார்கள். ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குச் செல்ல இத்தகைய ஜீப்னிக்களை (jeepney) உபயோகிக்கிறார்கள். இது மிகவும் குறைந்த கட்டணத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல உபயோகப்படுகிறது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தம் அல்லது முக்கிய இடங்களிலும் இத்தகைய ஜீப்னிக்கள் நிறைய இருக்கும். பயணிகளைக் கூவிக்கூவி அழைப்பார்கள். இரண்டு வரிசைகளில் பயணிகள் உட்கார்ந்துகொள்ளும் விதத்தில் இருக்கும். கசகசவென இருக்கும், சுகாதாரமற்ற ஷேர் ஆட்டோக்களைவிட இத்தகைய ஜீப்னிக்கள் மிகவும் உபயோகம்தானே?


- - - - - - - - - - - - - - - 


பிலிப்பைன்ஸில் தேங்காய்கள் மிக மிகப் பெரியவை. அந்த அளவில் நான் வேறு எங்கும் பார்த்ததில்லை.  சிலர், சில tropical islandsல் (வெப்ப மண்டலத் தீவுகளில்) தேங்காய் மிகப் பெரிதாக வளரும் என்று சொல்கின்றனர். ஒரு தேங்காய்/இளநியில் 1 லிட்டர் தண்ணீர் வரும்.  இந்தக் கடை, அங்கு இருக்கும் எரிமலைத் தீவுப் பகுதியில் அமைந்துள்ளது. அதனாலும் அங்கு விளையும் பழங்கள் மிக ருசியாக இருக்கும்.  படத்தில் காணும் பெண் இந்த மாதிரி இளநிக்களை வெட்டி, அதன் தண்ணீர் மற்றும் தேங்காய்ப் பகுதிகளை உபயோகித்து அவர்கள் செய்யும் வினிகருக்காக கடைகளுக்கு பெரிய அளவில் அனுப்புகிறார். எனக்கு இரண்டு இளநீரை வெட்டி இரண்டு ஒரு லிட்டர் பாட்டிலில் தந்தார். அவ்வளவு ருசி.


இந்த இரண்டாவது படத்தில் பாத்திரத்தில் அவற்றைச் சேகரிப்பது தெரியும். கேனில் உள்ளவை தேங்காய் நீரை உபயோகித்துச் செய்த வினிகர். இது பிலிப்பைன்ஸ் ஸ்பெஷல்
- - - - - - - - - - - - - -


பிலிப்பைன்ஸில் நான் பார்த்த இன்னொரு வகையான டிரான்ஸ்போர்ட். பைக்கில் மழைக்கான தடுப்பும், அதையொட்டி பயணிகள் அமர சிறு வண்டியும் (கூரையுடன்). ஒரு பைக்கில், ஐந்து பேர் லக்கேஜுடன் பயணித்துவிடுகிறார்கள்.
- - - - - - - - 



இது நம்மூரில் நாம் ஸ்கூட்டருடன் இருக்கும் சிறிய அட்டாச்மெண்ட் மாதிரி இல்லை. கூடுதல் பயணிகள் மற்றும் லக்கேஜுகளுடன் பயணிக்க மாறுதல் செய்யப்பட்ட பைக்குகள் இவை. 
==   ===    ===     =====    =====

KGG பக்கம் : 

கடந்த 108 மாதங்களில் மிகவும் சந்தோஷமாக நான் உணர்ந்து கொண்டு உள்ளது இந்த ஆகஸ்ட் 2025 மாதம்தான். உறவினர்கள், நண்பர்கள் வருகை, பல வருடங்கள் கழித்து உறவினர்களுடன் நீண்ட தூர உல்லாசப் பயணம்.

இதெல்லாம் வாழ்க்கையில் இனி மீண்டும் வருமா என்று ஏங்கித் தவித்திருந்த நிகழ்வுகள். எல்லாம் கொடுத்த இறைவனுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். 

யாருக்கும் ஒரே இடத்தில், ஒரே மாதிரி வாழ்க்கையை தொடர்ந்து வாழ்ந்து கொண்டு இருந்தால், வாழ்க்கை சீக்கிரம் அலுத்துவிடும். சின்னச் சின்ன மாற்றங்கள், பலவகை மனிதர்கள், பலவகை இடங்கள், பலவகை உணவுகள் என்றெல்லாம் அடிக்கடி மாற்றங்கள் இருந்தால் மனம் இறக்கை கட்டிப் பறக்கிறது! 

குழுவாக பல இடங்களுக்கும் பயணம் செய்பவர்கள், அதற்கான வசதி, வாய்ப்பு, நேரம் இருப்பவர்கள் பாக்கியசாலிகள். 

நம் எ பி குடும்பத்தில் அப்படி பலர் உள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

சமீபத்தில் நான் சென்று வந்த பயணத்தின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே. 






















= = = = = = = =

47 கருத்துகள்:

  1. ​கேள்விகளும் பதில்களும் இன்டெரெஸ்ட்டிங் ஆக இல்லை. ஆனாலும் உடம்புக்கு எலும்பு என்பதுபோல் அவைதாம் புதனின் பதிவுகளை கட்டமைக்குகின்றன.

    @ஸ்ரீராம். தென்னையும் நிழல் தரும். இங்கு கேரளத்தில் தென்னை மரம் இல்லாத வீடே இருக்காது, இத்தனைக்கும் தென்னை வளர்ப்பு என்பது வணிக அளவில் நஷ்டம் தரும் முதலீடு.

    எந்த ஊர் படங்கள் என்று kgg சார் சொல்லவில்லையே.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹரப்பனஹல்லி.

      நீக்கு
    2. விஜயநகர சாம்ராஜ்யம். அதை
      நிறுவிய ஹரிஹரர் ( + புக்கராயர்)
      நிறுவிய நகரம் என்று நினைக்கிறேன்
      ஹரப்பனஹல்லி.

      நீக்கு
  2. வாழுப்பழத்தை எப்படி உரிப்பது என்பதிலேயே சக்ரபாணி சாருக்கு சந்தேகம் வந்திருக்கிறதே. மற்ற எல்லாப் பழங்களையும்விட வாழைப்பழம் சாப்பிட எளிது. பழத்தை அலம்பணும், உடை பாழாகிவிடும், கையை அலம்பணும் என்ற தொந்தரவுகள் கிடையாது.

    எனது உறவினர் ஒருவர் திராட்சைப் பழத்தைத் தோலெடுத்துவிட்டுத்தான் சாப்பிடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // திராட்சைப் பழத்தைத் தோலெடுத்துவிட்டுத்தான் சாப்பிடுவார்.//

      ஆ.....

      நீக்கு
    2. உலர்ந்த திராட்சையா? காய்ந்த திராட்சையா?

      நீக்கு
    3. புது திராட்சைப் பழம். ஆமாம் உலர்ந்த, காய்ந்த இரண்டுக்கும் வேறுபாடு உண்டா?

      நீக்கு
    4. ஹா ஹா - 'உலர்ந்த திராட்சையா அல்லது புது திராட்சையா' என்று கேட்க நினைத்து மதிய தூக்கக் கலக்கத்தில் ... என்னவோ எழுதிட்டேன் !!

      நீக்கு
  3. ஒன்பது வருடங்கள் வெளியூர் எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் வாழ்வது ரொம்பவே கஷ்டமான விஷயம். வெளியூர் பயணம் கௌதமன் சாருக்கு சிறையிலிருந்து விடுபட்டது போன்று இருந்திருக்கும். என்னுடைய எண்ணம்.... அந்தப் பயணம் தமிழகம் நோக்கி இருந்திருந்தால் அருமையான உணவு கிடைத்திருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. தற்போதெல்லாம் ஓரிரு மாதங்கள் ஆனாலே எங்கேயாவது வெளியூர் சென்றுவரவேண்டும் என்று தோன்றிவிடுகிறது. பசங்க இருந்தபோதும் வருடத்துக்கு மூன்று முறைக்குமேல் வெளியூர் சென்றுவிடுவோம் (எங்கள் பயணங்கள். விசேஷத்தில் கலந்துகொள்ள அல்ல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ஆசை உண்டு என்றாலும், சூழ்நிலை தடங்கல்கள் கொடுக்கிறது!

      நீக்கு
  5. வீட்டில் தென்னைமரம் வளர்ப்பது ஃபேஷனாகப் போய்விட்டது. எங்கள் அப்பா வீட்டில் ஆறு தென்னை மரங்கள் இருந்தன. தேங்காய் சிறிது. எனக்குப் பிடித்த மாமரங்கள் ஏழு இருந்தன. பலா மரமும் உண்டு. அதைவிட தோட்டம் முழுவதும் பச்சை நிறப் பூக்கள் கொண்ட கனகாம்பரச் செடிகள் உண்டு. பலத்த காற்று அடித்துவிட்டால் சீசனில் மாங்காய்கள் நிறைய கீழே விழுந்துவிடும்.

    அது சரி.. தற்போது இளநீர் 60ரூ, தேங்காய் 50-60 ரூ என்று விலை அளவுக்கு அதிகமாக ஏறிவிட்டதைக் கவனித்தீர்களா?

    பதிலளிநீக்கு
  6. சூரியனா? நிலவு போல தோற்றம்ளிக்கிறதே?
    ஸ்ரீராம் அனுப்பியிருக்கும் தென்னை அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதே சந்தேகம்!

      நீக்கு
    2. சூரியன். இந்தப் படம் எடுத்தபோது மதியம் தாண்டிவிட்டது

      நீக்கு
  7. நகைச்சுவை எழுத்தாளர்களில் என்னைக் கவர்ந்தவர்களின் வரிசை பாக்கியம் ராமசாமி, சுஜாதா, தேவன், சாவி.

    பதிலளிநீக்கு
  8. கே ஜி ஜி அவர்களே எனது கேள்விக்கு டெக்னிக்கலாக
    வீடியோவுடன் பதில் அளித்ததற்கு நன்றி.
    என் சந்தேகம் தீர்ந்தது மன்னா.
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரங்கே! சக்ரபாணி சாரிடமிருந்து கன்சல்டிங் ஃபீஸ் ஆயிரம் பொற்காசுகள் வசூல் செய்யுங்கள்!

      நீக்கு
  9. ஒரு வாழைப்பழத்தைப் பிய்த்து உள்ளே தள்ள, வடிவேலு கொசு அடிக்க மெஷின் கண்டுபிடித்ததுபோல ஒரு மெதட் சொல்வது அதிசயம்தான்.

    பதிலளிநீக்கு
  10. கிருஷ்ணர் ஓவியம் அழகு. முயற்சி திருவினையாக்கும்

    பதிலளிநீக்கு
  11. நெல்லை, விவசாயிகள் தாங்கள் விளைவிப்பதை நேரடியாகச் சந்தைப்படுத்த வேண்டும். அப்படிச் சந்தைப்படுத்தினால், நாம் தான் அந்தந்த இடத்திற்கு அல்லது அருகில் சென்று வாங்க வேண்டிவரும். நான் சொல்வது பெரும் விவசாயைகள். சின்ன அளவில் என்றால் ஊருக்குள்ளேயே அல்லது சுற்றுவட்டாரச் சந்தையிலேயே விற்றுவிடும்.

    இரண்டாவது அவர்கள் பெரிய விவசாயிகள் என்றால் அதைச் சந்தைப்படுத்த இடைத்தரகர்கள், ஏஜண்டுகள் தேவையாயிற்றே. நம் வீட்டருகில் கிடைக்க வேண்டும் என்றால் விலை கூடுதலாகத்தான் இருக்கும். ஆனால் விளைவிப்பவர்கள் பெரிய விவசாயிகளாக இருந்தால், சந்தைவிவரம் அறிந்த நபராக இருந்தால் லாபம் இல்லாமல் இடைத்தரகர்களுக்கு விற்கமாட்டார்கள். இப்படியானவர்களைப் பார்க்க முடிகிறது தற்போது. அதுவும் ஐடி யிலிருனு விவசாயம் பண்ணச் சென்றவர்கள்.

    இதில் நடுத்தரமான விவசாயிகள், சின்ன விவசாயிகள்தான் அதாவது ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்பவர்கள்தான் பாவம் கஷ்டப்படுகிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை என்ன சொல்கிறார் பார்ப்போம்.

      நீக்கு
    2. விவசாயியின் வேலை, விளைவிப்பது. விற்கும், பதுக்கும், விலையேற்றம் செய்யும், பொருட்களை ஓரிடத்திற்குக் கொண்டு செல்லும், சில்லரை வியாபாரிகளிடம் விற்கும் திறமைகளெல்லாம் அவர்களுடையது அல்ல. அதனால்தான் வியாபார செயின், பிழைக்கிறது. நாமே நேரடியாக விவசாயி விளைவிக்கும் இடத்திற்குச் சென்றால், ஒரு மீடியம் சைஸ் கேபேஜ் 20 ரூபாய்க்குக் கிடைக்குமா என்று பார்ப்போம். இப்படி ஒருத்தர் ஒருத்தருக்கா விவசாயியினால் விற்பனை செய்ய இயலாது. அதனால் மொத்த வியாபாரியிடம் ஒரு கேபேஜ் 4-5 ரூபாய்க்கு விற்றுவிடுகிறார் (2 ரூபாயாகவும் இருக்கலாம்)

      நெல்லையில் நேந்திரன் வாழைக்குலைகளை கிலோ 30 ரூபாய்க்கு கேரள வியாபாரிகள் வாங்குகிறார்கள். கடைசியில் அது கடைகளுக்கு வரும்போது கிலோ 70-80 ரூபாயாகிவிடுகிறது.

      நீக்கு
  12. என் தங்கை கணவர், பெரிய கம்பெனியில் டைரக்டராக இருந்தவர். வெளியில் தெரியவே தெரியாது அவர் டைரக்டர் என்று. அவருக்குக் கிராமத்தில் குடும்ப நிலம், தோட்டம் எல்லாம் உண்டு. ஆட்கள் இருந்தார்கள். என்றாலும் இவரும் வார இறுதியில் சென்று காய்கறி தேங்காய், எல்லாம் கொண்டு வருவார். ஆனால் சமீப வருடங்களில் ஆட்கள் குறைந்துவிட, இப்போது வேலையையும் அவர் விட்டுவிட்டதால் தன் கிராமத்தில் விவசாயம் அவரே பார்த்துவருகிறார் ஒவ்வொரு வார இறுதியிலும் அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறை என்று கிராமம் சென்று பார்த்துவருகிறார்.

    வயலை உழ ஆட்கிடைக்காததால், இவரே ட்ராக்டர் ஒட்டி உழுகிறார். இடையில் மஞ்சள் போட்டு பறித்து மஞ்சள் எல்லாம் கழுவி காய வைத்து பூஞ்சான் பிடிக்காமல் நேரடிப்பார்வையில் காய வைத்து அத்தனையையும் பொடித்து குடும்பங்களுக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அது போல தேங்காய் எண்ணை, தேங்காய் பறித்து உரித்து கொப்பரையை காய வைத்து எண்ணை ஆட்டிப் பயன்படுத்துகிறார்கள். காய்கள் வாழை எல்லாமே இப்படி.

    கிராமங்களில் ஆட்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதாம். 100 நாள் வேலைத்திட்டம் என்று யாரும் வேலை செய்யாமல் ஆண்கள் சீட்டாட்டம், பெண்கள் பல்லாங்குழி, தாயக்கட்டம் வம்பு என்று போவார்களாம் தவிர இப்படியான வேலைகளுக்கு வருவதில்லையாம். வேலை செய்யாமல் அவர்களுக்கு ரூபாய் கிடைக்கிறது என்பதால்.

    அவர்கள் வீட்டிலிருந்து எனக்குக் கடலை, தேங்காய் எண்ணை, மஞ்சள் பொடி எல்லாம் கொடுத்து கொண்டு வந்தேன். அப்போது சொல்லிக் கொண்டிருந்ததுதான் மேலே சொன்ன அந்த கிராமத்து நிலவரம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைக்காமல், பணம் கிடத்தால் வாங்கி உல்லாச
      வாழ்க்கை வாழும் அணுகுமுறை மிகவும் பரிதாபமானது.

      நீக்கு
  13. நெல்லை, படங்கள் பிலிப்பைன்ஸ் என்று நீங்கள் சொன்னால்தான் தெரியும். இல்லை என்றால் கேரளம் நாரோயில்னு நினைச்சிடலாம். அப்படித்தான் இருக்கு.

    அப்படினா முன்ன நீங்க பகிர்ந்திருந்த ஒரு படம் இளநீ தேங்காய் கடை, அதுவும் பிலிப்பைன்ஸ்தான் இல்லையா? எந்த ஊர்னு கேட்டிருந்தீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் படம் ஓமான் என்று சொல்லியிருந்தேனே (சலாலா)

      நீக்கு
    2. நான் அதுதான் சொல்லியிருந்தேன் நீங்க கேட்டதுடுக்கு அப்ப கரெக்ட்டாதான் சொல்லியிருந்திருக்கிறென்/... அப்படினா.....உங்க பதிலை பார்க்கலையோ நான்,

      கீதா

      நீக்கு
  14. ஸ்ரீராம், படம் சூப்பர். உங்கள் வரியும் சூப்பர்.

    தென்னந்தோப்பு நிழல் தரும் ஆனால் ஒற்றைத் தென்னை கடினம்தான் குட்டைத் தென்னை மற்றும் நிறைய ஓலைஅள் இருந்தால் கொஞ்சம் வேணா நிழல் இருக்கும் அவ்வளவுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அடேங்கப்பா! வாழைப்பழம் உரிக்க ஒரு வீடியோவா!!! ஆச்சரியமா இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழைப்பழம் சாப்பிடுவது எப்படி என்று கூட ட்யூட்டோரியல் இருக்குமோ!

      நீக்கு
  16. பானுக்கா, உங்க பேத்தி வரைந்த ஓவியம் சூப்பர். இன்னும் பயிற்சி கொடுத்தால் நன்றாக வரைவார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. வடை, பஜ்ஜி, போண்டா இந்த மூன்றில் காபி அல்லது டீக்கு முன்பாக சாப்பிடுவதற்கு ஏற்ற ஸ்நாக் எது? //

    எந்த ஒரு ஸ்னாக் அல்லது டிஃபனுடன் காஃபி சாப்பிடுவது நல்லதில்லையாம். டிஃபனோ அல்லது ஸ்னாக்ஸோ சாப்பிட்டபின் அலல்து முன் அதற்கும் காஃபிக்கும் இடையே நிறைய நேரம் இருக்க வேண்டுமாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிபன் சாப்பிட்ட உடனே (ஹாஸ்டலில்) டீ சாப்பிட நல்லாவே இருக்கும். காஃபி அதன் கசப்பினால் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காது.

      நீக்கு
    2. காஃபியும் சரி டீயும் சரி சாப்பிடக் கூடாதாம் டிஃபன் சாப்பிட்டதும், அல்லது ஸ்னாக்ஸ் சாப்பிட்டதும் அலல்து கூடவே.

      கீதா

      நீக்கு
  18. கௌ அண்ணா படங்கள் எல்லாம் சூப்பர்.

    எனக்கும் பயணங்கள் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆமாம் வீட்டிற்குள்ளேயே இருந்து மனதிற்கு நல்லதல்லதான். ஆனால் சமீபத்தில் எங்கும் செல்ல முடியவில்லை. அதுவும் நெடுந்தூரம் எல்லாம் சாத்தியமில்லை. கடமைகள்..

    அது எனக்கு அவ்வப்போது ஒரு சோர்வு வருகிறதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வசதிகளுடன் ஆரோக்கியமாக , சௌகரியமாக பயணம் சென்றால்
      மிக சந்தோஷமாக இருக்கும்.

      நீக்கு
  19. கேள்வி பதில்கள் நன்று. வாழைப்பழம் எப்படி உரிப்பது? நல்ல சந்தேகம் :)

    படங்களும் தகவல்களும் நன்று.

    KGG அவர்கள் பயணம் - மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!