குடைவரை கோஸிற்குள் புதைந்திருக்கும் ரகசியம்!
இந்த ரெசிப்பி ஒரு தத்துவ பொக்கிஷங்க!!!! அப்படி அடிச்சு விட்டுக்குவோம்! அட! என்னங்க உலக உருண்டைக்குள் எத்தனை ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன! எவ்வளவு நொந்து நூடுல்ஸ் சிக்கல்கள்?
ரகசியம் எதுவும் இல்லை. எல்லாம் நாம குடைந்து புதைத்து வைக்கறதுதான்! மனதிற்கும் பொருந்தும்.
சென்னைல இருக்கறப்ப புதுசு புதுசாய் சாப்பிட விரும்பும் உறவினர்/கள். அது ஒரு கனா காலம்! அவங்க சமீபத்துல வந்திருந்தார்கள். வந்து கொண்டிருந்த போதே என்னை அழைத்து, முன்பு, நான் ஃப்ரைட் ரைஸ் செய்தப்ப இப்படிச் செய்ததை சாப்பிட்டதை நினைவு வைச்சுருந்து, "நாம அதைச் செய்வோம். நீங்க இப்ப மில்லட் சாப்பிடறீங்க அதுக்காகவே இந்த முறை "ஆர்கானிக் மில்லட் நூடுல்ஸ் கொண்டு வரேன்" என்று சொல்லிவிட்டார். அவர் நட்பு வட்டத்தில் கொடுக்கப்பட்ட நூடுல்ஸாம்! 45 நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவார்கள்.
"வாழ்க்கையே நூடுல்ஸ்தான். நாம அதைப் பிரிச்சு மேயும் பிஸ்தாஸ்! செஞ்சுடுவோம்" கீதாவின் தத்துவ வசனம்.
பரபர என்று ஆயத்தாமானேன். மைன்ட் வாய்ஸ் 'ஸ்ரீராம் கோஸின் கண்ணீர் பதிவு போட்டப்ப, நான் வேற ஜம்பமா இதப் பத்தி சொல்லி, "ஸ்ரீராம், நான் செய்யறப்ப ஃபோட்டோ எடுத்து அனுப்பறேன்னு.'
'ஓ கடவுளே! ஃபோட்டோ எடுக்கணுமே'.....எடுத்துக்குவோம் எப்படியாச்சும்...வந்தவங்க டயர்டா இருந்ததால் 'பேசிக் கொண்டே ரெஸ்ட் எடுங்க!!! நான் வேலைய முடிக்கறேன்னு' இல்லைனா அவங்க எடுத்திருப்பாங்க எனக்கும் ஈசியா இருந்திருக்கும். ஒரு சின்ன வீடியோ ...அதை மட்டும் அவங்களை எடுக்கச் சொன்னேன்.
சரி வாங்க நாம கொஞ்சம் நேரம் சிற்பியாக மாறி....கோஸை குடைந்து குடைவரை கோஸாக மாற்றும் முன்...
முதலில் நூடுல்ஸை கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அது வெந்ததும் தண்ணீரை வடித்து கொஞ்சம் குளிர்ந்த நீரிலும் போட்டு வடித்து வைத்துவிடலாம். தண்ணீ நல்லா வடியட்டும். அதுக்குள்ள,
வீட்டில் கோஸ் இல்லை. அவர்கள் வருவதற்குள் அருகில் கடைக்குச் சென்று கோஸ் கூடையை ஆராய்ந்து.... இதற்குக் கோஸ் வாங்கும் போது சிறியதாகக் கைக்குள் அடங்கும் சைஸ் அளவு போதும். படத்தில் பெரிதாகத் தெரிகிறது. டென்னிஸ் பந்து சைஸ் ஒன்றும், அதைவிடக் கொஞ்சம் பெரியதாக மற்றவையும் கிடைத்தன.
நூடுல்ஸிற்குத் தேவையான,
வெங்காயம் 2,
பெரிய குடை மிளகாய் - 1
காரட் - 1 தோல் எடுத்துக் கழுவி...
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
துருவிக் கொண்ட பனீருடன் சிறிது உப்பு, கொஞ்சம் மஞ்சள் தூள், மிளகுப் பொடி, மிளகாய் தூள், சின்ன துண்டு குடைமிளகாயைப் பொடியாக நறுக்கி, ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, ஒரு பச்சை மிளகாயைப் பொடிப்பொடியாக நறுக்கி, எல்லாம் நல்லா கலந்து வைத்து....
குடைவரைக் கோஸின் நடுவிற்குள் நன்றாக அழுத்தி அடைத்த பின், கொஞ்சம் மிளகாய்த் தூள், கொஞ்சம் உப்புத் தூளையும், சிறிது எண்ணையும் கலந்து அதை கோஸின் இலைகளுக்குள் தெரியும் இடைவெளியில் எல்லாம் மெதுவாக விட்டுத் தடவி விட்டு, (ஃபோட்டோ எடுக்க முடியலை. வெளி இலை ஒன்றை உரித்து மேலே மூடி அதற்கென்றே உள்ள சின்ன மரக்குச்சியால் குத்தி.... உள்ளே என்ன என்று தெரியாமல்! ஆனால் அன்று நான் மூடவில்லை.) ஆவியில் வைத்து எடுக்கலாம். 20-25 நிமிடங்கள் ஆகலாம். உள்ளுக்குள் வைப்பவை நம் விருப்பம். நம் கற்பனை.
நான் ரைஸ் குக்கரில் நீர் விட்டு, மேலே வடிதட்டு ஒன்றைப் போட்டு அதில் கோஸ்களை வைத்து மூடி போட்டு ஆவியில் வைத்து எடுத்தேன்.
ஆவி பிடிக்கட்டும்! ஸ்ரீராமிடம் கண்ணீர் விட்ட கோஸாயிற்றே!
கோஸை கொஞ்சம் அழுத்திப் பாருங்க (இந்த செட்டில் முதல் படம்) மென்மையாக இருந்தால் உள்ளேயும் லேசாக வெந்திருக்கும். அதிகம் வெந்திடாமல் பார்த்துக்கணும். (இப்படி ஆவியில் வைக்காமல் நேரடியாத அடுத்த படிநிலைக்கும் போகலாம். ஆனால் அதிக எண்ணையைத் தவிர்க்க ஆவியில் வைப்பது என் வழக்கம்) அதை எடுத்து வாணலியில் 2 ஸ்பூன் எண்ணை விட்டு, கோஸை அதில் போட்டு, மேலே காரம் உப்பு கொஞ்சம் தூவி மெதுவாகக் கவனமாகப் புரட்டிவிட்டால் எல்லாம் ரெடி. அடுத்து Exhibition! Photo shoot!
கொடுத்ததை சாப்பிடுவது உங்க விருப்பம்!! அதை எப்படிச் சாப்பிடுவது என்பதும் உங்க இஷ்டம்! இல்லைனா பொருட்காட்சியில் கண்ணால் பார்த்துவிட்டு நகர்வது போல நகர்வதும் உங்க விருப்பமுங்க! என்ன சொல்றீங்க!! டேஸ்ட் பார்க்கறீங்களா இல்லை சும்மா பார்த்துட்டு நகர்ந்துடறோம்னு சொல்றீங்களா!
அதுவும் சரிதான். எதுக்கு ரிஸ்க் இல்லையா! ரைட்டோ!
பின் பொன் குறிப்பு - 1 - நான் கோஸின் இரண்டு இலை லேயர்களைப் பிரித்து, நடுவில் உள்ள கலவையோடு நூடுல்ஸையும் வைத்தும், ஒரு சில இலைகளுக்குள் நூடுல்ஸை வைத்துச் சுருட்டியும்....இப்படிப் பல விதங்களில் சாப்பிட்டேன்/சாப்பிட்டோம்.
ஹாங் சொல்ல மறந்து போச்சு பாருங்க! அவர்களுக்குப் பிடித்திருந்தது. 80ன் கடைசி வருடத்தில் இருப்பவர் ஒருவர், 80ஐத் தொட இருப்பவர் ஒருவர், என்னிடம் செய்யச் சொல்லிக் கேட்டவர் 60 ஐ நெருங்குபவர்!
பின் பொன் குறிப்பு - 2 - இதை ஃப்ரைட் ரைஸ் செய்து (அதில் கோஸ் போடாமல் இப்படிச் செய்து நடுவில் வைக்கலாம். கொஞ்சம் பெரிய கோஸாக இருந்தால் இரண்டாகவோ நான்காகவோ நறுக்கி நூடுல்ஸ் அல்லது ஃப்ரைட் ரைஸ் நடுவில் ஒரு பாகம் வைத்து தரலாம்.
என் மகன் இப்படிச் செய்த கோஸ் ஒன்றே ஒன்று நறுக்கிச் சாப்பிடுவான். கலோரி குறைவு, உள்ளே பனீர் ப்ரோட்டின் இருப்பதால். உள்ளே சன்னா, பயறு என்று எது வேண்டுமானாலும் சுண்டல் போலச் செய்து வைக்கலாம். உங்கள் விருப்பம்.
முருகா சரணம்
பதிலளிநீக்குவியாழக்கிழமைப் பதிவைப் போல பிரம்மாண்டமான பதிவு..
பதிலளிநீக்குபுதிய செய்முறை..
நலம் வாழ்க
ஓ! துரை அண்ணா படங்களும் நிறைய சேர்த்திருப்பதால் அதுவும் நீங்க மொபைலில் பார்ப்பதால் அப்படித் தெரிந்திருக்கும்.
நீக்குபதிவு ம் கொஞ்சம் பெரிசுதான் நானும் கதை விட்டிருக்கிறேனே!!
நன்றி துரை அண்ணா.
கீதா
ஒவ்வாமைப் பிரச்னையால் முட்டைக் கோஸையும் இரண்டு வருடங்களாக ஒதுக்கி வைத்தாயிற்று...
பதிலளிநீக்குசிலருக்கு முட்டைக் கோஸ், காலிஃப்ளவர் முள்ளங்கி போன்றவை ஒத்துக் கொள்வதில்லை என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன், துரை அண்ணா.
நீக்குநன்றி துரை அண்ணா.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்களில் தங்கள் செய்முறையாக வந்த குடவரை கோவில் சிற்பத்தை (கோஸின் சிற்பத்தை) படித்து ரசித்தேன். புதிய முறையில் அழகாக செய்து, அருமையாக தந்துள்ளீர்கள். இதைச் செய்வதற்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். கோதுமை நூடுல்ஸ் எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இது போல் காய்கறிகளை சேர்த்தால், அவர்களுக்கு பிடிக்குமா என்பது தெரியவில்லை. பெரியவர்களாக நாங்கள் இதுபோல் செய்து சாப்பிட வாய்ப்பு உள்ளது. இதுபோல் ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.
அருமையான படங்களுடன், ஒவ்வொரு பதத்திற்கும் நல்ல விளக்கங்களுடன் செய்து காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள் சகோதரி. ரசித்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என் பதிவுகளை படிக்க வரவில்லையே வேலைகள் நிறைய இருந்ததா ? அது தான்
நீக்குவரவில்லையா கமலா?
முதல் வரிக்குச் சிரித்துவிட்டேன்!!!
நீக்குஆமாம் கமலாக்கா, கொஞ்சம் வேலை வாங்கும் விஷயம்தான்.
நம் வீட்டில் நூடுல்ஸ் வாங்கும் பழக்கம் இல்லை மகன் இருந்தப்பவும் கூட ரொம்ப அபூர்வம் வாங்குவது அதுவும் சிறுதானிய நூடுல்ஸ் வந்தப்ப வாங்கியதுண்டு.
சேவை போலத்தான். ஆனால் நான் வீட்டில் சிறுதானிய சேவை செய்யறப்ப கொஞ்சம் கோதுமை மாவு இல்லைனா, பக்வீட் மாவு கொஞ்சம் கலந்து கொள்வேன் (வறுத்து) அப்ப அது பிய்ந்து போகாமல் வரும்.
குழந்தைகளுக்குப் பிடித்தால் செய்து கொடுங்க கமலாக்கா.
கருத்துக்கு மிக்க நன்றி கமலாக்கா.
கீதா
வணக்கம் கோமதி அரசு சகோதரி
நீக்குஆம் சகோதரி.. இரண்டு மூன்று நாட்களாக வீட்டில் கொஞ்சம் அதிகப்படியான வேலைகள் வந்து விட்டன. உங்கள் பதிவை பார்த்தேன். படித்து ரசித்தேன். ஆனால், தொடர்ந்து வந்த பல வேலைகளினால், உடனே கருத்து தர இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும். இன்று உங்கள் பதிவுக்கு வந்து மறுபடியும் படித்து கருத்துத் தருகிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
குடைவரை கோயிலா ! இன்றா? என்று முதலில் நினைத்து விட்டேன்.
பதிலளிநீக்குஅருமை கீதா. பொறுமையாக குடையும் காணொளி அருமை.
செய்முறை சொன்னது அருமை.
//டேஸ்ட் பார்க்கறீங்களா//
பார்த்து விட்டேன், கீதா செய்மூரை நல்லா இல்லாமல் போகுமா நன்றாக இருக்கிறது.
//ஹாங் சொல்ல மறந்து போச்சு பாருங்க! அவர்களுக்குப் பிடித்திருந்தது. 80ன் கடைசி வருடத்தில் இருப்பவர் ஒருவர், 80ஐத் தொட இருப்பவர் ஒருவர், என்னிடம் செய்யச் சொல்லிக் கேட்டவர் 60 ஐ நெருங்குபவர்! //
வந்தவர்கள் வயதானவர்களாக இருந்தாலும் முட்டைகோஸ் பதமாக வேக வைத்ததை சாப்பிட்டது மகிழ்ச்சி.
கடைசியில் உள்ளவரை வய்தௌ ஆகி விட்டது என்று சொல்லவில்லை.
குடைவரை கோயிலா இன்றா//
நீக்குசிரித்துவிட்டேன் கோமதிக்கா. எதில் குடைந்தாலும் குடைவரைதானே!!!!!
காய்கள் பழங்களில் இப்படிப் பல வடிவங்களில் குடைந்து செய்து வைப்பதுண்டே இதும் கலைதான் இல்லையாக்கா.
ஆமா அக்கா இதுக்கு முட்டைக்கோஸ் ரொம்ப வெந்துவிட்டால் அதைக் கட் செய்து சாப்பிடுவது சிரமம் தான் பாதி வெந்து வேகாமல் ஒரு சாலாட் டைப்பில்
ஹாஹாஹா நமக்கெல்லாம் வயசாகலையே கோமதிக்கா!!!!!!!
வேலை வாங்கும் விஷயம் கூடவே வயசானவங்களுக்குக் கொஞ்சம் சிரமம்தான் செய்வதும் சாப்பிடவும்.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
சரி பார்க்கும் முன் வெளியாகி விட்டது , பிழைகளுக்கு மன்னிக்கவும் .
பதிலளிநீக்குபரவால்லக்கா, உங்க கணினி பிரச்சனை தெரியுமே.
நீக்குஇது எல்லாருக்கும் நடப்பதுதான். இதோ எனக்கும் கீஸ் குதிக்கும் கர்சர் குதிக்கும்....அடிக்கும் போதே அடுத்த வரி மேல் வரியோடு போய்விடும். என்னடா எங்கு போயிருக்கு அந்த லைன் என்று பார்த்து எடுத்து கீழ போடணும்.
பிழைகளுக்கு எதுக்கு மன்னிப்பு எல்லாம் கோமதிக்கா....புரிகிறதே கருத்து அப்புறம் என்ன!
கீதா
அநியாயம், அக்கிரமம். கோஸை இப்படி குடைந்து குடலை(நூடில்ஸ்) திணித்து ஆவியில் சமைத்து சாப்பிட பரிமாறுவது அக்கிரமம்.
பதிலளிநீக்குஅது சரி. கோஸ் சைவமா, அசைவமா? ஏன் முட்டை கோஸ் என்ற பெயர்? வடிவம் முட்டை போல் இல்லையே, பந்து போல் அல்லவா உள்ளது.
படங்கள் கவரவில்லை. செய்முறை தெளிவில்லை.
Jayakumar
ஹாஹாஹா, ஜெ கே அண்ணா.
நீக்குoblong வடிவத்திலும் உண்டே அதனால் அப்படி முட்டை என்று சொல்றாங்களோ என்னவோ.
கருத்திற்கு மிக்க நன்றி.
கீதா
என்ன இவ்வளவு நெடிய செய்முறை?
பதிலளிநீக்குஏற்கனவே கத்திரிக்காய் பொடியடைச்ச கறி வேண்டுமென்றால், பொடிதூவி பண்ணித்தரேன், பொடியனைச்ச கறி கஷ்டம்னு வீட்டுல சொல்றாங்க. இதுல நூடுல்ஸ் அடைச்ச கோஸ் கறி என்ற பெயரைக் கேட்டாலே என்னாகுமோ
நூடுல்ஸ் எங்க அடைச்சிருக்கு< நெல்லை?
நீக்குஅடைத்திருப்பது பனீர் காய்கள் தானே....சரியா கவனிக்கலை போல...ஹாஹாஹா
நன்றி நெல்லை
கீதா
முதல்ல படிச்சபோது அப்படித்தான் புரிந்துகொண்டேன். அதாவது மசாலா சேர்த்த நூடுல்ஸை அடைத்துப் பண்ணியிருக்கிறார் என்று. இப்போ திரும்ப ஒரு முறை படித்தபோதுதான் அப்படி அல்ல, காய்கள்தான் அடைப்பதற்கு, வெளியில் நூடுல்ஸ். பார்க்க நல்லாவே இருக்கு
நீக்குஹாஹாஹா பரவால்ல நெல்லை, சிலப்போ நாம கண்ணு ஓடும் போது இப்படி ஆகும்தான். சும்மா உங்களை ஓட்ட வேண்டாமா? இல்லைனா தூக்கம் வராது எனக்கு.
நீக்குகீதா
எனக்கு நூடுல்ஸ் பிடிக்காது. இதுவரை சாப்பிட்டதில்லை.
பதிலளிநீக்குமிகச் சிறிய கோஸில் இந்த மாதிரி பொடியடைச்ச கறி செய்தால் நல்லா இருக்கும்னு தோணுது.
வித்தியாசமான செய்முறைக்குப் பாராட்டுகள்.
Brussels எனப்படும் சின்ன முட்டைக்கோஸ் மாதிரியான வெளிநாட்டுக் காயில் நெல்லை சொல்றாப்போல் அடைச்ச கறி செய்து பார்க்கலாம். ஆனால் அந்த வாசனை வெளிநாட்டுக்காய்களில் வரும் வாசனையா இருக்கு. ஆகவே இம்மாதிரிப் பாரம்பரிய முறைப்படியான அடைச்ச கறிக்குச் சரியா வருமா தெரியலை.
நீக்குபதஞ்சலி ப்ராடக்ட்ஸின் கோதுமை நூடுல்ஸ் நல்லா இருக்கும் நேல்லை. நான் அதை சேமியா உப்புமா மாதிரிப் பண்ணுவேன்.
நீக்குஇது நார்மல் நூடுல்ஸ் இல்லை நெல்லை. சிறுதானிய நூடுல்ஸ். கோதுமை கலந்த சிறுதானிய நூடுல்ஸ் சேவை போலதான்....
நீக்குநன்றி நெல்லை
கீதா
கீதாக்கா ஆமா. கோதுமை நூடுல்ஸ் நல்லாருக்கும் நானும் உப்புமா போல செய்ததுண்டு அது போல இந்த சிறுதானிய நூடுல்ஸையும் செய்யலாம் அக்கா.
நீக்குநன்றி கீதாக்கா
கீதா
நெல்லை கோஸிற்குள் பொடி அடைச்சு செய்தாலும் ரொம்ப நல்லாருக்கும். ஆனால் கோஸ் சின்னதாக இருக்கணும். நான் செய்திருக்கிறேன் ஆனால் கோஸை கட் செய்துதான் பரிமாற வேண்டியிருக்கும்.
நீக்குகீதாக்கா சொல்லிருப்பது போல ப்ருஸல்ஸிலும் செய்யலாம்
கீதா
முட்டைக் கோஸில் எனக்கு மிகவும் பிடித்தது மிளகூட்டு. அப்படி இல்லைனா பச்சை நிறம் போகாமல் செய்யும் கறி. இப்போல்லாம் மிகவும் விலை மலிவு.
பதிலளிநீக்குஎனக்கும் கோஸில் கூட்டு, மிளகூட்டு பொரித்த கூட்டு பிடிக்கும்.
நீக்குகீதா
குடவரை அழகாக வந்துள்ளது.
பதிலளிநீக்குநீங்கள் கூறியதுபோல ப்ரைட்ரைஸ், சாதத்துக்கு நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
ஆமாம் மாதேவி ஃப்ரைட் ரைஸ் சாதத்துக்கு நல்லா இருக்கும்.
நீக்குமிக்க நன்றி மாதேவி.
கீதா
தி/கீதா செய்திருக்கும் முறை ரொம்பவே நேரம் பிடிக்கும் போல் இருக்கு. இருந்தாலும் இப்போல்லாம் இம்மாதிரிப் புதிய செய்முறைகள் செய்து பார்க்கும் ஆவலும் இல்லை. இங்கே வசதியும் இல்லை. அநேகமா நான் எனக்கு மட்டும் சமைத்துக் கொள்வது எப்போவோ தான். சில நாட்கள் மாலை வேளைகளில் எனக்கு மட்டும் தோசை வார்த்துப்பேன். மற்றபடி மருமகள் பண்ணுவது தான். அவள் எல்லாவற்றிற்கும் ஏதோ மசாலா தக்காளி சேர்த்து அரைச்சுச் சேர்க்கிறார். எனக்கு என்னமோ அந்த ருசி பழகவில்லை.. வயிறும் ஏற்றுக் கொள்வதில்லை. பயங்கரமாக அசிடிடி வந்துடுது. இங்கே உள்ள தண்ணீரைக்குடி குடி என்பதால் சூடு பண்ணிச் சாப்பிட்டதும் ஒரு பெரிய தம்பளரில் குடிக்கிறேன். அது தான் ஒத்துக்கலையோ என்னும் எண்ணம். ஏனெனில் எனக்குச் சிலவகை மினரல் தண்ணீர் ஒத்துக்கொள்ளாது. முக்கியமாய் பிஸ்லேரி.
பதிலளிநீக்குஆமாம் அக்கா கொஞ்சம் நேரம் பிடிக்கும்தான்.
நீக்குஓ மசாலா தக்காளியா? அது என்ன அது?
அங்கு தண்ணீர் கடல் தண்ணீரைத்தான் ப்ராஸஸ் செய்து குடி நீராக்கறாங்க இல்லையா?
நன்றி கீதாக்கா
கீதா
கடல் நீரெல்லாம் குளிக்க, துவைக்க, பாத்திரங்கள் கழுவ மட்டும். குடிக்க, சமைக்க மினரல் வாட்டர் கேன் தனியா வருது. அது தான் ஒத்துக்கலை. குழாய் நீரில் வாய் கொப்புளிக்கையில் நல்லாத் தான் இருக்கு. ஆனால் பையர் அதைக்குடிக்காதேனு சொல்லிட்டார்.
நீக்கு//மசாலா தக்காளியா? //மசாலாப்பொருட்களைத் தக்காளி சேர்த்து அரைக்கிறாங்க.
நீக்குகுடிக்க, சமைக்க மினரல் வாட்டர் கேன் தனியா வருது. அது தான் ஒத்துக்கலை. //
நீக்குஒரு சில மினரல் வாட்டர் எப்படி சுத்தப்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து இருக்கறதுனால அப்படி ஆகிறது இல்லையாக்கா.
//குழாய் நீரில் வாய் கொப்புளிக்கையில் நல்லாத் தான் இருக்கு. ஆனால் பையர் அதைக்குடிக்காதேனு சொல்லிட்டார்.//
சுத்தப்படுத்தாத தண்ணீரோ அதாவது இங்க எல்லாம் நாம பைப் தண்ணீர் காவிரி என்றாலும் கூடக் குடிப்பதில்லையே அப்படியாக இருக்குமோ?
//கடல் நீரெல்லாம் குளிக்க, துவைக்க, பாத்திரங்கள் கழுவ மட்டும். //
சோப் நுரை வருதா? உப்பு தண்ணீர் என்றால் பாத்திரம் எல்லாம் கரை ஆகும் இல்லையா?
கீதா
மசாலாப்பொருட்களைத் தக்காளி சேர்த்து அரைக்கிறாங்க.//
நீக்குஓஹோ. அது நாம பொதுவா சப்பாத்திக்குச் செய்யும் கூட்டு வகைகளுக்குச் செய்வது இல்லையா? அது கூட எல்லா வகைகளுக்கும் இல்லைதான்.
தினப்படி சமையலுக்கு நாம் தக்காளி சேர்ப்பது எண்ணினாப்ல ஒரு சிலதுக்குத்தானே இல்லையா? கூட்டுவகை, பொரியல் வகைகளுக்குச் சேர்ப்பது இல்லைதானே?
கீதா
கடல் நீர என்றால் அப்படியே கடல் நீர் கிடையாது. desalinated water. crystal clear ஆக இருக்கும். துணிகள் பளிச்சென்று வெளுக்கும். ஏன் என் நகைகள் கூட பாலீஷ் போட்டது போல ஆகி விடும்.
நீக்குகுடைமிளகாயில் இப்படி ஸ்டஃப் செய்யலாம். நாங்க அடைச்சதைக் கட்லை மாவு, மி.பொடி, அரிசிமாவு, உப்பு, காரம் போட்டுக் கரைத்த பஜ்ஜி மாவில் முக்கி எடுத்துப் பொரித்தும் வைப்போம். அதெல்லாம் ஒரு காலம்.
பதிலளிநீக்குஅதே அதே கீதாக்கா. குடை மிளகாயில் நிறைய அடைத்துச் செய்யலாம் கிரேவி போன்றும் செய்யலாம் பொரித்தும் செய்யலாம்
நீக்குநானும் இப்ப பொரித்துச் செய்வதில்லை கீதாக்கா. எண்ணை வேண்டாம் என்பதால். ஆனால் கிரேவி செய்வதுண்டு.
நன்றி கீதாக்கா
கீதா
அசாத்திய பொறுமை உங்களுக்கு கீதா! பொறுமையாகசெய்து, அதை படிப்படியாக படமெடுத்திருக்கும் உங்களை எப்படி பாராட்டுவது?சீக்கிரம் சமைக்க வேண்டுமென்றால் நூடுல்ஸ் செய்வோம், அதுவே இத்தனை வேலை வாங்கும்படியா? கம்ப்யூட்டர் அப்ளிகேஷங்களை படிக்கும்பொழுது தலையைச் சுற்றும். ஆனால் செய்வது சுலபமாக இருக்கும். அந்த வகையோ?
பதிலளிநீக்கு