கர்ணன். தமிழில் முதன் முதலாக ஈஸ்டமென்கலரில் வெளியான திரைப்படம். 1964 ல் பந்துலு இயக்கத்தில் சக்தி கிருஷ்ணஸ்வாமி வசனத்தில் வெளியானது. கண்ணதாசன் பாடல்கள். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை.
இன்று பகிரப்பட்டுள்ள இந்தப் பாடல் யு டியூபில் துண்டு துண்டாகக் கிடைத்தது. இப்போது சேந்து ஒரே காணொளியாக கிடைக்கவும் சேர்த்தே பகிர்ந்து விட்டேன். முதலில் மூன்று துணுக்குகளாக எடுத்து வைத்திருந்தேன்.
சிவாஜி அதாவது கர்ணனை வள்ளல் அது இது என்று ஐஸ் வைத்து புகழும்போது அவர் முகத்தில் தெரியும் பெருமிதம், உடனே பொருள்களை எடுத்து கொடுக்கும் பெருமை..
பாடலின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சுவாரஸ்யம், இனிமை. டி எம் சௌந்தரராஜன், பி பி ஸ்ரீனிவாஸ், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் குரல்களில் பாடல். ஆயிரம் கரங்கள் நீட்டி பாடலில் குழுவினராக பாட ஆரம்பித்தாலும், 'தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்' வரியில் டி எம் எஸ்ஸின் குரல் ஓங்கி ஒலிக்கும்.
படத்தில் வரும் அளவு கர்ணன் நாயக குணங்கள் கொண்டவன் இல்லை என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் மகாபாரதம் எல்லா கருத்துக்கும், எல்லா யூகத்துக்கும் இடம் கொடுக்கிறது. எல்லோருக்கும் சமமான நாயக அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. குணம் நாடி குற்றமும் நாடி போல அளவில்தான் மாற்றம். துரியோதனன் வில்லன் என்றாலும் மகாவீரன்.
பந்துலு இந்தப் படத்துக்காக திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களிடமும், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் அவர்களிடமும் விவரங்கள் விசாரித்துக் கொண்டாராம்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலும் ஆயிரம் கரங்கள் நீட்டி பாடலும் வரிகளாக எழுதி அப்புறம் டியூன் போடப்பட்டு மற்ற பாடல்கள் எல்லாம் டியூனுக்கு எழுதிய பாடல்களால். இரண்டே நாட்களில் கண்ணதாசன் பாடல்களை எழுதிவிட, மூன்றே நாட்களில் பாடல்கள் ஒலிப்பதிவு முடிந்ததாம்.
மழை கொடுக்கும் கொடையுமொரு
இரண்டு மாதம்…ம்ம் ம்ம் ம்ம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு
மூன்று மாதம்…ம்ம் ம்ம் ம்ம்
பசு வழங்கும் கொடையுமொரு
நான்கு மாதம்…ம்ம் ம்ம் ம்ம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ
நாளும் மாதம்…..
பார்த்திபனாம் கர்ணனுக்கோ
நாளும் மாதம்…
நாணிச் சிவந்தன
மாதரார் கண்கள்
நாடு தோறும் நடந்து சிவந்தன
பாவலர் கால்கள்
நற்பொருளை தேடிச் சிவந்தன
ஞானியர் நெஞ்சம்…ம்ம்…..ம்ம்ம்
தினம் கொடுத்து
தேய்ந்து சிவந்தது
கர்ண மாமன்னன் திருக்கரமே….
தேய்ந்து சிவந்தது
கர்ண மாமன்னன் திருக்கரமே
மன்னவர் பொருள்களை
கை கொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார்…
மாமன்னன் கர்ணனோ
தன் கரம் நீட்டுவார்
மற்றவர் எடுத்துக் கொள்வார்…
வலது கை கொடுப்பதை
இடது கை அறியாமல்
வைத்தவன் கர்ண வீரன்
வறுமைக்கு வறுமையை
வைத்ததோர் மாமன்னன்
வாழ்கவே வாழ்க வாழ்க
என்ன கொடுப்பான்
எவை கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணும் முன்னே…ஏ…ஏ…
பொன்னும் கொடுப்பான்
பொருள் கொடுப்பான்
போதாது போதாதென்றால்
இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால்
எங்கள் கர்ணன்
தன்னைக் கொடுப்பான்
தன் உயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே…
ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி
தாயினும் பரிந்து
சாலச் சகலரை
அணைப்பாய் போற்றி
தழைக்கும் ஓர் உயிர்கட் கெல்லாம்
துணைக் கரம் கொடுப்பாய் போற்றி
தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி
ஞாயிறே நலமே வாழ்க
நாயகன் வடிவே போற்றி
நானிலம் உளநாள் மட்டும்
போற்றுவோம் போற்றி போற்றி…
=======================================================================================
கர்ணன் படம் பற்றி இணையத்தில் வாசித்தது...
ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்த மக்கள் மஹாபாரத கதையை அறிந்தவர்கள், அவர்கள் அப்படத்திலுள்ள பெரும்பாலான காட்சிகள் ஜோடிக்கப்பட்டவை என்பதை உணர முடிந்தது. ஆனால் இன்று இருப்பவர்களுக்கு பாரதக் கதையே தெரியாதே, திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதை அப்படியே நம்பிவிடும் வாய்ப்பே அதிகம்...
இத்திரைப்படத்தில் ஜோடிக்கப்பட்டுள்ள காட்சிகளில் மிகவும் கண்டிக்கத்தக்க காட்சி: இறுதியில் கிருஷ்ணர் கர்ணனிடம் வந்து தர்மத்தை பிச்சை கேட்கும் காட்சி. எடுத்துச் சொல்வதற்கு ஆள் இல்லை என்பதால், பெரும்பாலான தமிழக மக்கள், கிருஷ்ணர் கர்ணனிடம் பிராமண ரூபத்தில் வந்து அவன் செய்த தானத்தின் பலன்களை தானமாகப் பெற்றார் என்று இன்றும் நம்பிக் கொண்டுள்ளனர். இதில் எள்ளளவும் உண்மையில்லை, இது ஏமாற்றுத்தனத்தின் உச்சகட்டம். கிருஷ்ணர் தனது விஸ்வரூபத்தை கர்ணனுக்குக் காட்டியதாகக் கூறுவதும் பொய், "வஞ்சகன்_கண்ணனடா" என்பதும் துளியும் ஏற்கத்தக்கதல்ல. கதாநாயகர்களுக்காக வடிவமைக்கப்படும் இத்தகைய காட்சிகள் பெரும் கண்டனங்களுக்கு உரியவை. அந்தோ பரிதாபம்! கண்டிக்கத்தான் ஆள் இல்லை!
இதர சில குளறுபடிகள்
திரைப்படத்தின் குளறுபடிகள் சொல்லி மாளாதவை, அவை எமது நோக்கமும் அல்ல. இருப்பினும், முக்கிய குளறுபடிகளை சுட்டிக் காட்டுவதை கடமையாக உணர்கிறோம்.
* கர்ணன் செய்த அனைத்து அட்டூழியங்களும் மறைக்கப் பட்டுள்ளன.
* கர்ணன் அர்ஜுனனால் தோற்கடிக்கப்பட்ட காட்சிகளில் ஒன்றையும் காணோம்.
* குந்தி போர்க்களத்திற்கு ஓடிவந்து, மகனே என்று அழுவதெல்லாம் சுத்த பொய். மஹாபாரதத்தின்படி போர் முடிந்த பின்னர், இறந்த உறவினர்களுக்கு யுதிஷ்டிரர் ஈமச் சடங்குகளைச் செய்யும்போது மட்டுமே குந்தி அதனை வெளிப்படுத்துவாள். போர்க்களத்திற்கு வந்து அழுவதாகவும், அதற்காக கர்ணன் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்ததுபோலவும் காட்டியிருப்பது வேதனைக்குரியதாகும்.
* கர்ணனின் மகன் விருஷஷேணன், அவனது கண்களுக்கு முன்பாக முறையான போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான். அவன் ஒரு சிறுவனும் அல்ல, பின்னால் இருந்து தாக்கப்பட்டவனும் அல்ல. விருஷஷேணனை சிறுவனாகக் காட்டியதும் பின்னால் இருந்து கொல்லப்பட்டதாகக் காட்டியதும் வெற்று அனுதாபங்களை கர்ணனுக்கு சேகரிப்பதற்காகவே.
* சல்லியன் தேரிலிருந்து ஓடியவனா? இல்லை. சல்லியன் பெரும் முயற்சி செய்தும் தேரை உயர்த்த முடியாததால், கர்ணனே இறங்க வேண்டியிருந்தது என்பதே உண்மை.
* நாக அஸ்திரத்தை இரண்டாம் முறை பிரயோகிக்க கர்ணன் மறுத்ததற்கு, “நான் எனது வெற்றிக்கு நாகங்களைச் சார்ந்தவன் அல்ல,” என்ற கர்ணனின் அகந்தையே காரணம். குந்தி அவ்வாறு வரம் கேட்டதாக வருவது கற்பனை.
* கர்ணன் பரசுராமரிடம் பொய் சொல்லி கலை கற்றது துரியோதனனின் தூண்டுதலினால் அல்ல. துரியோதனனைச் சந்திப்பதற்கு முன்பாகவே கர்ணன் பரசுராமரிடம் கலை கற்றிருந்தான்.
* மனைவியைப் பணயம் வைத்ததை கர்ணன் திட்டுவது போன்ற காட்சிகள் உண்மையை திருப்பிப் போடுகின்றன. திரௌபதியை அவமானப்படுத்தியதில் கர்ணன் மிக முக்கிய பங்கு வகித்தான் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
* அதர்மத்தின் பக்கம் நின்ற கர்ணனைக் காண தர்ம தேவதை வருவதுபோன்ற காட்சிகள் எதற்காக?
* கர்ணனின் திருமண வாழ்க்கை குறித்த தகவல்கள் கற்பனைகளால் மூழ்கியுள்ளன.
மொத்தத்தில் சினிமா பார்த்து மஹாபாரதம் கற்க வேண்டாம் என்பதை இதன் மூலமாக பகவத் தரிசன வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறோம்...
__நன்றி _: ஶ்ரீ கிரிதாரி தாஸ் 
(மீள் பதிவு)
Narayanasami Krishnaswami
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திரைப்படத்தில் ஒரு காட்சி. இந்திரன் வயோதிக அந்தணர் வேடம் கொண்டு கர்ணனின் கவச குண்டலங்களை பெற வருவதாக அக்கட்சி அமைப்பு. கர்ணனின் தந்தையான சூரியன் அதை கர்ணனுக்கு சொல்லி எச்சரிக்கிறான். 'உயிரைக்கூட தானம் செய்வேன் என்னும் கொள்கையை உடைய கர்ணன் அதையும் கொடையாகக் கொடுக்கிறான்.
காட்சியில் சூரியன் சன்னதியிலிருந்து சிவாஜி வெளியே வந்து ராமதாஸை பார்க்கிறார். "வணக்கம் வயோதிகரே" என்று கரம் குவிக்கிறார். வயோதிகர் வேடத்தில் வந்திருக்கும் இந்திரன் தடுமாற்றத்துடன் "வ.. வணக்கம் மன்னா" மன்னனைப் பணிகிறான். கர்ணன் சட்டென விலகி உள்ளே சன்னதியை இந்திரன் வணங்குமாறு நிற்கிறான். நல்ல காட்சியமைப்பு. ரசிக்கும்படி இருந்தது. அதன் பின்னரான காட்சியில் சகுனி கர்ணனை துரோகம் செய்து விட்டதாகக் குற்றம் சாட்டும்போது சிவாஜியின் சட்டென கை நீட்டி மாமாவைக் காட்டி, அதே வேகத்தில் திரும்பி கைகளை துருரியோதனன் பக்கம் நீட்டி துரியோதனனைப் பார்க்கும் காட்சி..

கர்ணன் படப் பாடல்களை எத்தனை முறைகள் கேட்டாலும் அலுக்காது. அருமையான இசை, பாடல் வரிகள்.
பதிலளிநீக்குமழை கொடுக்கும் கொடை... இந்தப் பாடல் எனக்கு விருப்பமானது. பல ஜாம்பவான்கள் சேர்ந்து பாடி, அந்தப் பாடல் நம் மனதைக் கவர்வது என்பது அபூர்வம். இதில் ஒவ்வொருவர் குரலையும் நம்மால் ரசிக்கமுடியும்.
நல்ல பகிர்வு
வாங்க நெல்லை.. சில படங்களில் குறைந்த அளவே பாடல்கள் இருந்தாலும் ஒரு பாடல் கூட மனதில் நிற்காது. நிறைய பாடல்கள் இருக்கும் படங்களில் சில பாடல்கள் மனதில் நிற்கும். ஆனால் இந்தப் படத்தில் பாடல்கள் அதிகம். எல்லாப் பாடல்களும் அருமையான பாடல்கள்.
நீக்குகர்ணன் தேர் அழுந்தியதாகச் சொல்லப்படும் இடம் மற்றும் அதனையொட்டியுள்ள அவனது மறைவு இடத்தையும் சில மாதங்களுக்கு முன் சென்றிருந்த யாத்திரையில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு குருஷேத்திரத்தில் கிடைத்தது. யாத்திரையில் வந்திருந்த பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு அது.
பதிலளிநீக்குஅங்கும் கர்ணன், பிராமணன் கடைசி கட்டத்தில் யாசகம் கேட்கும் சிலை வைத்திருந்தார்கள்.
இதெல்லாம் மஹாபாரதத்தில் இல்லையென்று சொல்கிறார்கள், இடைச்செருகல்கள் என்கிறார்கள். ஆனால் அவர்களும் அதற்கு சிலை வைத்திருக்கிறார்கள். எப்படி?
நீக்குYesso yessu.
நீக்குநேற்றும் இன்றும் கர்ணனைப் பற்றிய மகாபாரத்த்தின் உண்மை முகம் பேசப்பட்டிருப்பதால், ஒரிஜனல் மகாபாரத்த்தின் தமிழாக்கம் படிக்கும் ஆவல் வந்துவிட்டது.
பதிலளிநீக்குகர்ணபரம்பரைக் கதைகள் ரசிக்கத் தகுந்தவை. இருந்தாலும் உண்மைக் கதை படிக்கவேண்டும்.
சிவாஜியின் நடிப்பு மிக அருமை. இருந்தாலும் இருபது முப்பது கிலோ குறைந்த சிவாஜி இன்னும் பொருத்தமாக இருந்திருப்பார்.
மஹாபாரதம் எப்போது கைக்கு கிடைத்தாலும் வாசிக்கத்தோன்றும். அது சம்பந்தப்பட்ட கதைகள் என்றாலும் படிக்கும் ஆர்வம் வரும். இப்போது எஸ் எல் பைரப்பாவின் 'பருவம்' வாங்கி தூங்குகிறது.. இதோ.. அடுத்த புத்தகக்கண்காட்சியே வந்து விட்டது!
நீக்குபேசாமல் ஏதேனும் குறிப்பிட்ட நாளில் இராமாயணமோ மகாபாரதமோ தொடர்ந்து எழுதவா இரண்டு பத்திகள்?
நீக்குநல்ல ஐடியாதான். எங்கே Fit செய்வது என்று பார்க்கலாம். ஒவ்வொரு வாரம் ஓரொரு நாளில் கூட வெளியிடலாம் என்று இப்போது முதற்கண் தோன்றுகிறது.
நீக்குமுன்னரே கூட வாரம் ஒரு பாசுரம் வியாழனில் வெளியிட உங்களைக் கேட்டிருந்தேன், நினைவிருக்கிறதா?
நீங்க ஸ்லாட் சொல்லுங்க. இரண்டு வாரம் டயம் கொடுங்க. எழுதிடலாம்.
நீக்குஇப்போதைக்கு வியாழன்.
நீக்குஎன் ஓட்டு "வாரம் ஒரு பாசுரத்திற்கு"
நீக்குநானும் கூட வோட்டு போடுவேன். நான் பெறுபவன். பேராசை இருக்கும். இரண்டு வோட்டு போடத் தோன்றும்!!
நீக்குகிஷோரி மோஹன் கங்குலியால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மஹாபாரதத்தைத் திரு அரசன் என்பவர் தமிழாக்கம் செய்திருக்கார். நெல்லைக்கு விருப்பமானால் அதைத் தேடிப் படிக்கலாம். இணையத்தில் இரண்டும் கிடைக்கிறது. ஹரி வம்சமும் கிடைக்கிறது. என்னோட "கண்ணன் வருவான்" தொடருக்காக நான் இவற்றை அடிக்கடி படிச்சிருக்கேன்.
நீக்கு// கிஷோரி மோஹன் கங்குலியால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மஹாபாரதத்தைத் திரு அரசன் என்பவர் தமிழாக்கம் செய்திருக்கார். //
நீக்குநானும் ஆரம்ப காலத்தில் கொஞ்சம் படித்தேன். நன்றாக இருந்தது. அந்த சமயம்தான் ஜெமோவும் வெண்முரசு தொடங்கினார் என்று ஞாபகம்.
நீங்க ஸ்லாட் சொல்லுங்க. இரண்டு வாரம் டயம் கொடுங்க. எழுதிடலாம்.//
நீக்குஆஹா! நெல்லை, டயத்தை எனக்குக் கொஞ்சம் கொடுங்க!!!! கூடவே உங்க மைன்ட்ல ஸ்பேஸ் இருந்தா அதையும் கொடுங்க!!!!!
கீதா
கடவுளே! "வெண்முரசு" மஹாபாரதமா? இஷ்டத்துக்கு ஜெயமோகன் கன்னாபின்னாவென எழுதினது இல்லையோ?
நீக்குகரெக்டுதான்.. அது வந்த நேரம்னு மட்டும்தான் சொன்னேன். அதுவும் வெண்முரசுன்னு பெயர் மட்டும்தான் குறிப்பிட்டிருக்கிறேன்!
நீக்குபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லையாமே
பதிலளிநீக்குசில இடங்களில் நூறு நாட்கள் ஓடியும் கூட பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டதால் போட்ட காசு தேறவில்லை. மேலும் சிவாஜியே கூட இதற்கு ஒரு காரணம். ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்த படங்களை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் வருவதால் முந்தைய படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு அப்படி சோதனையாக வந்தது பச்சைவிளக்கு!
நீக்குகர்ணன் பட நஷ்டத்திற்காக ஈடு செய்ய சிவாஜி பந்துலுவுக்கு "முரடன் முத்துவுக்கு" கால்ஷீட் கொடுத்தாராம். பந்துலு எவ்வளவோ கெஞ்சியும் "நவராத்ரி" படம் "முரடன் முத்து"வுக்குப் போட்டியாக ரிலீஸாகி முரடன் முத்துவும் பந்துலுவின் நஷ்டக் கணக்கில் சேர்ந்து விட்டது என்று எங்கேயோ படித்த ஞாபகம்.
நீக்குஆமாம். நான் கூட இங்கு பகிர்ந்திருந்தேனோ என்று சந்தேகம் வருகிறது. வாங்க சூர்யா...
நீக்குஆகா! இங்கேதான் தாங்கள் பகிர்ந்த அந்தச் செய்தியைப் படித்தேனா? கொல்லன் உலையிலேயே ஊசி விக்க வந்தேனா?
நீக்குஒரு விஷயம் கவனிக்கத் தக்கது. சிவாஜியை வைத்துப் பல படங்கள் எடுத்த ஜாம்பவான்கள் பணக் கஷ்ட்டத்தில் தத்தளித்தபோது கை தூக்கி விட்டது எம்ஜியார்தான். உதாரணம்: ஸ்ரீதர் (மீனவ நண்பன்), பந்துலு (ஆயிரத்தில் ஒருவன்), ஏ.பி. நாகராஜன் (நவரத்னம்).
நீக்கு// ஆகா! இங்கேதான் தாங்கள் பகிர்ந்த அந்தச் செய்தியைப் படித்தேனா? கொல்லன் உலையிலேயே ஊசி விக்க வந்தேனா?//
நீக்குஅதெப்படி வேறெங்கும் இல்லாமல் இங்கு வந்துவிடுமா? "ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா.. இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையாகுமா" என்று டி எம் எஸ் பாடி இருக்கிறாரே... நானும் இணையத்தில் இருந்துதானே எடுத்துப் போட்டிருப்பேன்?!
சிவாஜி எம் ஜி ஆர் நஷ்ட லாபம் தெரியும் என்றாலும் அதை எனக்கு இங்கே சொல்ல மனம் வரவில்லை. இப்படிதான் அமிதாப்பே கடனாளி ஆகி மற்ற நடிகர்களை வைத்து பணம் பார்த்தார் என்றும் படித்த நினைவு. ABC Corporation
நீக்கு.// சிவாஜியை வைத்துப் பல படங்கள் எடுத்த ஜாம்பவான்கள் பணக் கஷ்ட்டத்தில் தத்தளித்தபோது கை தூக்கி விட்டது எம்ஜியார்தான். //
நீக்குநம்ம அருமை நண்Pஅர் அப்பாதுரையின் அப்பா நஷ்டப்பட்டுப் பணம் இழந்ததும் நடிகர் திலகத்தாலே தான் எனச் சொல்லி இருக்காரே! படம், "ஆண்டவன் கட்டளை" நு நினைவு.
// அப்பாதுரையின் அப்பா நஷ்டப்பட்டுப் பணம் இழந்ததும் நடிகர் திலகத்தாலே தான் எனச் சொல்லி இருக்காரே! படம், "ஆண்டவன் கட்டளை" நு நினைவு. //
நீக்குஅப்படியா? தெரியாதே...
முருகா சரணம்
பதிலளிநீக்குஓம் சரவணபவா...
நீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
எங்களையும் வெவ்வேறு முருகன் நாமங்களை யோசிக்க வைத்து விடுகிறீர்கள்!
எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை
பதிலளிநீக்குஎனினும் காலஙகளைக் கடந்தும்
பேசப்படுகின்றது...
ஆனாலும்,
லாபம் நஷ்டம் உலோகாயதம்...
ஆமாம். இன்றளவும் பேசப்படும் படம். சில நஷ்டங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை!
நீக்குவீரபாண்டிய கட்டபொம்மன் படத்திலிருந்து பாடலொன்று பகிர்னவுடனேயே சிவ கங்கைச் சீமை படத்திலிருந்தும் ஒரு பாடலை மனம் எதிர்பார்த்தது. ஏன் என்று கேட்காதீர்கள். செழுமையும் எளிமையுமாய் ஒன்றுக்கொன்று போட்டியாக திரையிடப்பட்ட அந்நாளைய நினைவுகளின் ஏக்கம் இது.
பதிலளிநீக்குஆமாம். கண்ணதாசன் தயாரிப்பு அல்லவா அது? போட்டியில் வென்றதென்னவோ வீரபாண்டியன்தான்! ஆனால் இன்று கட்டபொம்மன் எங்கே வந்தார்? வாங்க ஜீவி ஸார்...
நீக்குபதிவைப் படிக்காமல் பாடலைப் பார்த்து பின்னூட்ட மிட்ட விளைவு. ஆமாம். கர்ணன் படப்பாடலை வீ.பா.கட்டபொம்மன் பாடலாக அவதானித்து விட்டேன். தவறு என்னுடையது தான்.
நீக்குநினைத்தேன். பரவாயில்லை ஜீவி ஸார்.. . இப்போது கர்ணன் பாடல்களை பற்றி கதைக்கலாமே..
நீக்குஅதுசரி, இன்றுதான் பதிவைப் படிக்காமல் கருத்தா?
கர்ணன் படப் பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதவை
பதிலளிநீக்குஇனிமையான இசை,
ஆமாம். ஒரு பாடல் கூட சோடை போகவில்லை. ஆமாம், சோடை என்றால் என்ன?!
நீக்குசோடை என்றால் "Hollow...without stuff / வெத்து வேட்டு" என்று சொல்லலாமோ? சில கடலைகளை உடைக்கும்போது உள்ளே பருப்பு இருக்காது. அவற்றை "சோடைக் கடலை" என்று சொல்வது உண்டு.
நீக்குசரியாக இருக்கிறது.
நீக்குகர்ணன் படப் பாடல்கள் கேட்டு ரசித்த பாடல்களே.
பதிலளிநீக்குமீண்டும் இங்கே கேட்கத் தந்தமைக்கு நன்றி.
வாங்க வெங்கட். நன்றி. 'என்றும் இனியவை' என்று சிலோன் ரேடியோவில் போடும் நிகழ்ச்சி போல என்றும் இனிமை இந்தப் பாடல்கள்.
நீக்குசில அபூர்வ, கலைநுணுக்கம் வாய்ந்த படங்களின், எழுத்து படைப்புகள், ஏனைய கலை வெளிப்பாடுகளின் வெற்றி அதன் காலங்கடந்த தன்மையில், கம்பீரத்தில், தீராத புகழில் இருக்கிறது. காசில் அளக்கப்படும் சங்கதியல்ல இது. காசு வெறும் தூசு!
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்... எனக்கும் அதே எண்ணம்தான், கருத்துதான்... ஆனால் தயாரிப்பாளர் அப்படி நினைத்திருக்க மாட்டார்!
நீக்குதயாரிப்பாளர் இப்படியெல்லாம் நினைத்தால் அவர் தயாரிப்பாளராக ஆகியிருக்கமாட்டார்! அவருலகம் காசுலகம். அதிலே கலக்கப் பார்ப்பதுதான் அவர் வர்க்கம். அப்படிப்பட்டவர்களும் சமூகத்தின் பகுதிதானே....
நீக்குஸப் சல்த்தா ஹை.. இஸ் ரங்கீன் துனியா மே !
மிகவும் உண்மை.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்கு///ஆமாம், சோடை என்றால் என்ன?!...///
பதிலளிநீக்குசொத்தை விதைகள்...
முளைக்கின்ற திறனற்றவை...
தீய்ந்து போனவை... கூ முட்டை விதைகள்..
நானும் எடுத்து வைத்திருக்கிறேன்.. குன்ஸா தெரியும் என்றாலும் சரியா என்னன்னு பார்த்தேன். ஆமாம் குன்சா என்றால் என்ன?!!
நீக்கு"சோடை (chotai) என்பது வறட்சி, காரியக்கேடு, சோர்வு, காய்ந்துபோன மரம், அறிவிலி, அல்லது தரம் குறைந்த பொருளைக் குறிக்கும் தமிழ் வார்த்தையாகும். இது பெரும்பாலும் வளர்ச்சி குன்றிய, சத்து இல்லாத (எ.கா: பருப்பு இல்லாத தானியம்) அல்லது சாமர்த்தியம், வலிமை இல்லாத தன்மையைக் குறிக்கப் பயன்படுகிறது"
உச்சரிப்பு: சோடை (Sodai) !
நீக்குஆமாம். ஆனால் இது அங்கு AI View வில் வந்தது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வு அருமை. கர்ணன் படத்தின் பாடல்கள் அனைத்துமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. அனைத்துமே கேட்பதற்கு இனிமையானவை. நீங்கள் பகிர்ந்திருக்கும் இப்பாடலும், பாடும் ஒவ்வொருவரின் குரல் வன்மையோடும், அதற்கேற்ப நடிகர் திலகத்தின் நடிப்பபோடும் மிக நன்றாக இருக்கும். கர்ணன் படம் எந்த காலத்திலும் பார்க்கத் தூண்டும் படம். அன்றொரு முறை நீங்கள் இப்படத்தின் பாடல்கள் பகிர்ந்ததும், நானும் இப்படத்தைப் பார்த்தேன்.எத்தனை முறை பார்த்தாலும் படத்தோடு ஒன்றிப்போகச் செய்யும் சிவாஜி அவர்களின் நடிப்பு. படத்தைப்பற்றிய செய்திகளையும், பகிர்ந்த படத்தின் பகுதி ஒன்றினையும் படித்துப் பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குகமலாக்கா இன்று எப்படி உடல்நலம் தேவலாமா?
நீக்குகீதா
கர்ணனுக்குப் போட்டியாக வந்தவன் வேட்டைக்காரன்...
பதிலளிநீக்குநான் சொன்னது சிவாஜி படங்களிலேயே..
நீக்குஅருமையான பாடலைப் பகிர்ந்ததற்கு நன்றி! நீங்கள் கூறியுள்ளது போல் டி.எம்.எஸ் /'தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்'/ என்ற வரியில் உச்ச ஸ்தாயில் பாடுவதைக் கேட்பது ஓர் தனி இன்பம்.
பதிலளிநீக்குஇப்போதுதான் கவனிக்கிறீர்களா, இல்லை நீங்களும் முன்பே கவனித்திருக்கிறீர்களா என்று அறிய அவள்!!
நீக்குமுன்பே கவனித்திருக்கின்றேன். எப்படி மற்ற பாடகர்கள் ஈகோ இல்லாமல் இணைந்து பாடினர் அந்தக் காலத்தில் என்று ஆச்சரியமும் அடைந்திருக்கின்றேன். டிஎம்எஸ்ஸுக்கு எந்த ஈகோவும் இல்லை போல் இருக்கிறது. அகத்தியர் படத்தில் சீர்காழியிடம் டிஎம்எஸ் பாட்டுப் போட்டியில் தோற்பார். "ஒரு நாள் போதுமா" பாடலுக்காக முதலில் சீர்காழியிடம் கேட்டதாகவும் அவர் பாட்டுப் போட்டியில் தோற்குமாறு காட்சி வந்ததால் பாட மாட்டேன் என்று சொன்னதாகவும் அதன் பின்னர்தான் பாலமுரளியை கேவி மகாதேவன் புக் செய்ததாகவும் ஒரு செய்தி உண்டு.
நீக்குஆம். பாலமுரளி பாடல் தோல்வி செய்தி நானும் படித்திருக்கிறேன்.
நீக்கு'தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்'/ என்ற வரியில் உச்ச ஸ்தாயில் பாடுவதைக் கேட்பது ஓர் தனி இன்பம்.//
நீக்குஆமாம், ஒவ்வொரு முறை (முன்ன) கேட்கும் போதும் இந்த இட்ம வரும் போது மட்டும் நானும் குரல் உயர்த்திப் பாடுவேன்/ வோம் (வீட்டில் பெரியவங்க யாரும் இல்லாத போதுதான் இல்லைனா பாட்டு கேட்க முடியாதே ரேடியோ...போட முடியாதே!)
அப்புறம் இன்னிக்குக் கேட்கறப்ப பாடினேன்!
கீதா
பாடினீங்களா? குரல் அவ்வளவு உயரம் போனதா?
நீக்குமுதல் மூன்று வரிகள் எளிமையாகப் புரிகின்றது. ஆனால் இந்த நாலாவது வரி /பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்…./ புரியவில்லை. என்ன சொல்ல வருகிறார் கவிஞர்?
பதிலளிநீக்கு'உலகை ஆள்பவன்' என்னும் பொருளில் வரும் பார்த்திபன் அர்ஜுனனைதான் பெரும்பாலும் குறிக்கும். கர்ணனுக்கும் ஏன் இதை குறிப்பிடுகிறார் கவிஞர் என்பது என் சந்தேகமாக இருந்தது.
நீக்குஒவ்வொன்றும் பொழிவது சில மாதங்கள்தாம். ஆனால் கர்ணன் கொடையோ எல்லா நாட்களிலும். மாத்த்தில் பெய்வதுபோல் நாளிலேயே அவ்வளவு தானமளிப்பவன்.
நீக்குநன்றி நெல்லை. பொருத்தமான விளக்கம். துரை செல்வராஜும் அதே கருத்தைச் சொன்னார். அவருக்கும் நன்றி
நீக்குசோடை இதுவே நெற்கதிர்களில் சாவி எனப்படும்.. நெல்லில் பதர் எனப்படும்..
பதிலளிநீக்குஅந்தந்த வட்டார வழக்குகளில் வேறுபடலாம்...
லாம்.
நீக்கு/// கர்ணனுக்கோ நாளும் மாதம்///
பதிலளிநீக்குஒரு சனிப் பிரதோஷம் பலவற்றுக்கு இணை என்பது போல
ஒரு நாள் கொடை பல மாதங்களுக்கு இணையானது என்று கொள்ளலாம்...
கொள்ளலாம்.
நீக்குகர்ணன் திரைப்படம் நஷ்டக் கணக்கு அல்ல...
பதிலளிநீக்குஎதிர்பார்த்த வெற்றி முதலில் இல்லை..
லாபத்தில் குறைவு...
செலவு செய்த அளவு பணம் திரும்பி வரவில்லை என்று படித்ததாக ஞாபகம்.
நீக்குஅட! நேற்றும் கர்ணன் இன்றும் கர்ணன்!
பதிலளிநீக்குகர்ணன் படப் பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள். நிறைய கேட்டிருக்கிறேன். படமும் பார்த்த நினைவு.
கீதா
வாங்க கீதா.. படமும் பார்த்த நினைவா? இந்தப் படம் பார்க்காமலும் இருப்பார்களா? திருவிளையாடல், திருமால்பெருமை, திருவருட்ச்செல்வர் கர்ணன், போன்ற படங்கள் எல்லாம் தவிர்க்கமுடியாத படங்களாச்சே...
நீக்குஆமாம், ஆனால் தியேட்டரில் இல்லை. தேரடியில்! அதனால் அப்படி.
நீக்குஆனால் யுட்யூபில் பார்க்க வேண்டும் என்று ஆசை உண்டு. நேரம் ....நேரம்...
கீதா
நேற்றைக்கு முதல்நாள் தியேட்டரில் சென்று படையப்பா பார்த்துத் தொலைத்தோம்... ச்ச்சே... பார்த்து வந்தோம்.
நீக்குபடையப்பாவா? திரும்ப அடுத்த பாகம்னு வந்திருக்கஆ? இல்லை மீள் பதிவு மாதிரி போடறாங்கா?
நீக்குகீதா
அதே பழைய படம்தான். பெரிய சைஸ் கே டிவில பார்க்கற மாதிரி இருந்தது. நிறைய இடங்கள் தெரிவற்று பர் ஆகி இருந்தன! ஆனால் தியேட்டரில் நல்ல கூட்டம். செம கூச்சல். சில இளைஞர்கள் திரைக்கு கீழே மேடையில் ஏறி டான்ஸ் ஆடினார்கள். நான்கைந்து வெளிநாட்டுப் பெண்களும் டான்சில் கலந்து கொண்டார்கள்.
நீக்குநேற்றைய எல் கே யின் பதிவில் கர்ணன் கொடைவள்ளல் என்பதற்கான அர்த்தமே வேறாகச் சொல்லியிருந்த நினைவு. சினிமாவையும் சொல்லிக் காட்டி.
பதிலளிநீக்குஆனால் நமக்குப் பதிந்த கர்ணன் இந்தக் கர்ணன்தான்!!!!
கீதா
ஈ
நீங்கள் சொல்வது புரிகிறது.
நீக்குபுரியாதது கடைசி 'ஈ...' ஹிஹிஹி
ஈ ஈ என்று இளிக்கிறேன்னு வைச்சுக்கலாம்!!!! அந்த ஒரு இமோஜி இருக்குமே பல்லைக்காட்டும் முகம்....அப்படின்னு
நீக்குகீதா
:))
நீக்கு//குந்தி போர்க்களத்திற்கு ஓடிவந்து, மகனே என்று அழுவதெல்லாம் சுத்த பொய். மஹாபாரதத்தின்படி போர் முடிந்த பின்னர், இறந்த உறவினர்களுக்கு யுதிஷ்டிரர் ஈமச் சடங்குகளைச் செய்யும்போது மட்டுமே குந்தி அதனை வெளிப்படுத்துவாள். போர்க்களத்திற்கு வந்து அழுவதாகவும், அதற்காக கர்ணன் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்ததுபோலவும் காட்டியிருப்பது வேதனைக்குரியதாகும்.//
பதிலளிநீக்குஇதன் மூலம் மணிக்கொடி எழுத்தாளர் திரு பி.எஸ்.ராமையா அவர்களால் எழுதப்பட்ட "தேரோட்டி மகன்" நாடகமே காரணம். புத்தகமாய் வெளி வந்து நான் சின்ன வயசிலேயே படிச்சும் இருக்கேன். தாத்தா (அம்மாவின் அப்பா) கொடுத்து படிக்கச் சொல்லி இருக்கார்.
கடைசியாக அவர்தான் குற்றவாளியா?!!
நீக்குஅப்படிச் சொல்ல முடியாது. அந்தக் காலகட்டங்களில் இது எஸ்.வி.சஹஸ்ரநாமம் அவர்கள் குழுவாலோ, திரு மனோகர் அவர்கள் குழுவாலோ மேடை நாடகமாக நடிக்கப்பட்ட மிகப் பேசப்பட்டது என நினைக்கிறேன். அதனால் கவரப்பட்டப் படத் தயாரிப்பாளர்கள் திரைப்படமாக எடுத்திருக்க வாய்ப்பு உண்டு. அப்பா எல்லா ஜிவாஜி படங்களையும் வந்த உடனே பார்த்துடுவார். இதைப் பார்த்துட்டு வந்து எல்லோரையும் திட்டிக் கொண்டு இருந்தார் என்பதும் கப்பலோட்டிய தமிழன் பார்த்துட்டு வீட்டுக்கு வந்து விமரிசனம் செய்யும்போது அழுததும் நினைவில் இருக்கு. :)
நீக்குஇந்த்ப் புத்தக விஷயம் முன்னரே ஒரு தரம் மின் தமிழ் அல்லது முத்தமிழ்க் குழுமத்துக்காகவோ அல்லது ஜிவாஜி பற்றிய விமரிசனங்கள் போதோ சொன்ன நினைவும் இருக்கு.
நீக்குநீங்கள் சொல்லும் குழுமங்களில் நான் இருந்ததது கிடையாது. நீங்கள் அடிக்கடி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
நீக்குவரிகள் எழுதி பாட்டு போட்டது பெரிய விஷயம். அதுவும் ஆஹிர்பைரவி - உள்ளத்தில் நல்ல உள்ளம்...
பதிலளிநீக்குதலைப்பின் வரி பாருங்க....வறுமைக்கு வறுமை வைத்ததோர்.....என்ன அழகான வரி ...கவிஞர் கவிஞர் தான்
இரண்டு நாளில் எழுதி முடித்திருக்கிறார்!!!!
சிவாஜியின் expressions வாவ் போட வைக்குதில்லையா?! ஸ்ரீராம்...
ராகமாலிகை....கேட்டு ரசித்தேன் ஸ்ரீராம்
கீதா
ராகமாலிகை தெரிகிறது. எதெது என்னென்ன ராகம்?
நீக்குஅதை அப்புறம் உங்களுக்கு ஒன் டு ஒன்னில் சொல்றேன் ஸ்ரீராம்
நீக்குகீதா
(Y)
நீக்குஇங்க ராகம் எல்லாம் செல்லுபடியாகாதேன்னுதான்...இப்ப அதிகம் சொல்றதில்லை, ஸ்ரீராம். அதைப் பத்தி ரொம்பப் பேசறதும் இல்லை. அதனாலதான் ஒன் டு ஒன் ன்னு போட்டேன்.
நீக்குஇருந்தாலும் என் அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன்.
மழை கொடுக்கும் கொடையுமொரு - நாளும் மாதம்… - ஹிந்தோளம்
நாணிச் சிவந்தன - கர்ண மாமன்னன் திருக்கரமே - தர்பாரிகானடா/கானடா,
மன்னவர் பொருள்களை - வாழ்கவே வாழ்க வாழ்க - மோஹனம்
என்ன கொடுப்பான் - தன் உயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே… - ஹம்சானந்தி
ஆயிரம் கரங்கள் நீட்டி - போற்றுவோம் போற்றி போற்றி…- சக்கரவாகம் என்று நினைக்கிறேன்.
கீதா
ராகம் தாளம் என்று போஸ்ட்மார்ட்டம் பண்ணாமல், அதுபற்றித் தெரிந்துகொள்ளாமலேயே அவ்வளவு ரசிக்க முடிகிறது. ரொம்ப போஸ்ட்மார்ட்டம் செய்தால் இசையின் அழகை ரசிக்க முடியாதோ?
நீக்குஎன்ன வார்த்தை உபயோகிச்சுட்டீங்க நெல்லை... அதுவும் டிசம்பர் சங்கீத சீசனில்! ராகம் தெரிந்து கொள்வதால் கூடுதல் உபயோகம்தான். இன்று கூட ஆபேரி ராகத்தில் ராகம் பெயர் சொல்லாமல் சட்சட்டென பாடல்களை ஓரொரு வரி பாடும் காணொளி ஒன்று கீதாவுக்கு அனுப்பினேன். அடுத்தமுறை பாடல் கேட்கும்போது நமக்கும் இது ஞாபகத்துக்கு வரும்!
நீக்குஒவ்வொரு பாடகரின் குரலில்....அருமை...அப்புறம் எல்லாரும் சேர்ந்து கோரஸ் பாடுவது....
பதிலளிநீக்கு//டி எம் சௌந்தரராஜன், பி பி ஸ்ரீனிவாஸ், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன்//
தனித்தனியாகப் பாடும் போது கண்டுபிடிக்கவும் முடியும். கேட்டு ரசித்தேன்
கீதா
மூன்று மாதங்களாக இந்தப் பாடல் லிஸ்ட் டிராஃப்டில் கிடந்தது!.
நீக்கு"வ.. வணக்கம் மன்னா" மன்னனைப் பணிகிறான். கர்ணன் சட்டென விலகி உள்ளே சன்னதியை இந்திரன் வணங்குமாறு நிற்கிறான். நல்ல காட்சியமைப்பு. ரசிக்கும்படி இருந்தது. //
பதிலளிநீக்குஆமாம். காட்சி அமைப்புகள் ரொம்ப நன்றாக இருக்கும் பல காட்சி அமைப்புகளைச் சொல்லலாம்.
கீதா
ஆமாம். எதைச் சொல்ல? எதை விட?
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தேவகோட்டையாரே.... வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் கில்லர்ஜி. உங்கள் பேரன், பேத்திகளோடுக் கூடி இருந்து குளிர்ந்து மகிழ்வாக இருக்கப் பிரார்த்தனைகள்.
நீக்கு//பெரும்பாலான தமிழக மக்கள், கிருஷ்ணர் கர்ணனிடம் பிராமண ரூபத்தில் வந்து அவன் செய்த தானத்தின் பலன்களை தானமாகப் பெற்றார் என்று இன்றும் நம்பிக் கொண்டுள்ளனர்.//
பதிலளிநீக்கு//சல்லியன் தேரிலிருந்து ஓடியவனா? இல்லை. சல்லியன் பெரும் முயற்சி செய்தும் தேரை உயர்த்த முடியாததால்,//
//நாக அஸ்திரத்தை இரண்டாம் முறை பிரயோகிக்க கர்ணன் மறுத்ததற்கு, “நான் எனது வெற்றிக்கு நாகங்களைச் சார்ந்தவன் அல்ல,” //
திரைக்கதை கர்ணன் வேறு. மஹாபாரதம் சொல்லும் போர்க்காட்சிகள் வேறு. வீரபாண்டிய கட்டபொம்மனே, 'வயலுக்கு நீர் பாய்ச்சினாயா, பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக்கொடுத்தாயா' என்று இல்லாத வசனங்களைப் பேசவைத்த திரையுலகம் ஆயிற்றே.
கர்ணன் நாகாஸ்திரத்தை ஏவ முயன்றபோது, அதில் அர்ஜுனன் மீது கோபம் கொண்டிருந்த அஸ்வசேனன் என்ற பாம்பு யோக சக்தியின் உதவியால் அந்த கணைக்குள் நுழைந்திருந்தது கர்ணனுக்குத் தெரியாது. கிருஷ்ணரின் உதவியால், தேர் அழுந்தியபோது அந்தக் கணை அர்ஜுனனின் கிரீடத்தை மாத்திரமே பறிக்கமுடிந்தது. அந்த நாகாஸ்திரம் மீண்டும் கர்ணனிடம் திரும்பி வந்தபோது, அஸ்வசேனன், கர்ணனைப் பார்த்து, என்னை ஒரு முறை பார்த்து மீண்டும் அந்த அஸ்திரத்தை ஏவு, நான் அர்ஜுனனைக் கொல்வேன் என்று சொன்னதற்கு கர்ணன், ஒரே கணையை இருமுறை நான் ஏவமாட்டேன் என்று சொல்லி மறுத்துவிடுகிறான்
தன்னுடைய தேர்ச்சக்கரம் சாபத்தால் பூமியில் அழுந்திவிட்டபோது, கர்ணன் அதனைத் தூக்க முயன்றான். வெறுப்போடு 'அறமானது தன்னை வழிபடுபவர்களை-அதாவது அறத்தோடு ஒழுகுபவர்களை எப்போதும் காப்பாற்றாது போலிருக்கிறது' என்றான். தேர்ச்சக்கரத்தைத் தூக்க முயலும்போதும் அவனை அர்ஜுனன் தாக்கினான். அப்போது, போரில் கலந்துகொள்ளாதோர், பிராமணன், கூப்பிய கரத்தை உடையவன், சரணடைந்தவன், , தன் ஆயுதத்தை விட்டுவிட்டவன், கணைகள் தீர்ந்து போனவன், ஆயுதம் விழுந்துவிட்டவன், ஆயுதம் உடைந்துபோனவன் ஆகியோர் மீது ஒருபோதும் போரின் அறம் தெரிந்தவர்கள் தங்கள் ஆயுதங்களை ஏவுவதில்லை. தேர்ச்சக்கரத்தை எடுக்கும் வரை காத்திரு என்றான். உனக்கோ அல்லது கிருஷ்ணனுக்கோ நான் பயந்தவனில்லை என்றான். அப்போதுதான் கிருஷ்ணன், கர்ணன் அறமற்றுச் செய்த செயல்களைப் பட்டியலிட்டு, அப்போதெல்லாம் உன் அறம் எங்கே போயிற்று என்று கேட்கிறான். பிறகு கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில், கர்ணன் தேரில் ஏறுவதற்கு முன்பு அஞ்சலிகம் என்ற கணையால் அர்ஜுனன் கர்ணனின் தலையைக் கொய்தான். கர்ணனின் தலை, அவன் உடலோடு சேர்ந்து பூமியில் விழுந்தது. கர்ணன் இறந்தான்.
கர்ணன் இல்லாத அந்தத் தேரை பிறகு சல்லியன் ஓட்டிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான்.
இதுதான் மஹாபாரதம் சொல்வது. மற்றபடி குந்திதேவி இரண்டாம் முறை நாகாஸ்திரம் பிரயோகிக்கக்கூடாது என்று சொன்னது, கர்ணன் இறந்தவுடன் போர்க்களத்தில் வந்து அழுதது. தர்மதேவதை கர்ணனின் புண்ணியத்தைத் தாரைவார்த்துத் தரச் சொன்னது என்று பல சுவையான விஷயங்கள் பிற்காலக் கற்பனைகள்.
ஆனால் பாருங்க, திரைக்கதையைப் பார்த்துவிட்டு, கர்ணனின் தேர் அழுந்திய இடத்தில், கர்ணன், பிராமணர் இருவரின் சிலையைப் பார்த்ததும், மனது, அடடா இந்த இடத்தில்தானா கர்ணனின் புண்ணியத்தை யாசகமாகக் கேட்டார் என்று மனது ஒரு கணம் மயங்கியது.
நெல்லை.. நீங்கள் சொல்லி இருக்கும் விவரங்களிலேயே நிறைய இடைச்செருகல்கள் இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரிஜினல் மஹாபாரத வெர்ஷன் எங்கு கிடைக்குமோ... கும்பகோணம் பதிப்பு என்று ஒன்றைச் சொல்வார்கள். யாரிடம் கேட்டாலும் இருக்காது.
நீக்குKumbakonam Mahabaratham Original version and very costly. Booking orders only as far as I know.
நீக்கு