26.12.25

செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை துடைப்பது சுகம்தானோ

 

பிராப்தம்.  1964 ல் வெளியான 'மூக மனசுலு' என்னும் தெலுங்குப்படம் 1967 ல் மிலன் என்று ஹிந்தியில் எடுக்கப்பட்டு, 1971 -ல் பிராப்தம் என்று தமிழில் எடுக்கப்பட்டது.

ஜெமினி கணேசன், தன் காதல் மனைவியிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்காமல் சாவித்ரி இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கி கையை பலமாக சுட்டுக் கொண்டார்.  கதாநாயகன் சிவாஜி கணேசன்.  சிவாஜி தரப்பில் வழக்கம்போல இன்னொரு தவறு நடந்ததாம்.  'சுமதி என் சுந்தரி' படமும் இதே நாளில் வெளியாகி இருந்திருக்கிறது.  இந்தப் படம் அட்டர் ஃபிளாப்.  பாவம் சாவித்திரி.

படம் தோல்வி அடைந்தாலும் இசைக்காக எம் எஸ் விஸ்வநாதன் விருது பெற்றார்.  பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார்.  தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மூன்றிலுமே பாடல்கள் யாவும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. தமிழிலும், ஹிந்தியிலும் இசை அமைப்பாளர்கள் விருது வாங்கினார்கள்.

இந்தப் படத்திலிருந்து இன்று மூன்று பாடல்கள்.  நான்கு பாடல்கள் ஒரேயடியாக பகிரவேண்டாம் என்று 'தாலாட்டு பாடி' பாடலை விட்டு விடுகிறேன்!  அது சோகப்பாடல் வேறு.  இந்தப் பாடல் சோகப்பாடல் இல்லையா என்று கேட்பவர்களுக்கு, கேட்பதற்கு சோகம் மாதிரி தெரிந்தாலும், காட்சி அமைப்பில் இது ஒரு மாதிரி வாழ்த்துப் பாடல்!  பாடல்களை டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி பாடி இருந்தனர்.

முதல் பாடலாக 'நேத்து பறிச்ச ரோஜா' பாடல். இந்தப் பாடலை டி எம் சௌந்தரராஜன் தனித்துப் பாடி இருக்கிறார்.

ஜமீன்தார் வீட்டுப் பெண்ணான சாவித்ரி ஏழை படகோட்டி மேலே மனதில் ஒரு காதலை வளர்த்துக் கொண்டாலும் ஊர் ஒற்றாருக்குப் பணிந்து தன்னுடன் படித்த ஸ்ரீகாந்தை மணக்கிறாள்.  விரைவிலேயே கணவன் இறந்து கைம்பெண்ணாக வீட்டுக்கு வந்து விடுகிறாள்.  திருமணம் நடக்கும்போது பெண்ணை வாழ்த்தி சிவாஜி பாடும் பாடல் இது.  

நேத்து பறிச்ச ரோஜா…..
நான் பாத்து பறிச்ச ரோஜா…..

நேத்து பறிச்ச ரோஜா…..
நான் பாத்து பறிச்ச ரோஜா…..
நேத்து பறிச்ச ரோஜா…..
நான் பாத்து பறிச்ச ரோஜா…..
முள்ளில் இருந்தாலும் முகத்தில் அழகுண்டு
நேரம் போனால் வாசம் போகும்
வாசம் போனாலும் பாசம் போகாது

நேத்து பறிச்ச ரோஜா…..
நான் பாத்து பறிச்ச ரோஜா…..
நேத்து பறிச்ச ரோஜா…..

எந்த கோவில் ஆனால் என்ன
தெய்வம் தெய்வம்தான்
எந்த தெய்வம் ஆனால் என்ன
கோவில் கோவில்தான்

எந்த கோவில் ஆனால் என்ன
தெய்வம் தெய்வம்தான்
எந்த தெய்வம் ஆனால் என்ன
கோவில் கோவில்தான்
ஓடும் நதியின் நீரும்
ஆடும் கடலில் சேரும்
கரையில் நிற்கும் நாணல்
கண்ணீர் சிந்தலாமா

நேத்து பறிச்ச ரோஜா…..
நான் பாத்து பறிச்ச ரோஜா…..
நேத்து பறிச்ச ரோஜா…..

எந்த கோலம் கொண்டால் என்ன
சொந்தம் சொந்தம்தான்
எந்த பிறவி வந்தால் என்ன
பந்தம் பந்தம்தான்

எந்த கோலம் கொண்டால் என்ன
சொந்தம் சொந்தம்தான்
எந்த பிறவி வந்தால் என்ன
பந்தம் பந்தம்தான்
பிரியும் பெண்ணைக் கண்டு

உருகும் நெஞ்சம் உண்டு

பிரியும் பெண்ணைக் கண்டு
உருகும் நெஞ்சம் உண்டு
தந்தை உள்ளம் ஒன்று
தனிமை ரோஜா ஒன்று

நேத்து பறிச்ச ரோஜா…..
நான் பாத்து பறிச்ச ரோஜா…..
நேத்து பறிச்ச ரோஜா…..

பொட்டும் பூவும் கட்டித் தந்தோம்
பச்சைக் கிளியொன்று
கண்ணில் வைத்து காத்திட வேண்டும்
கருணை மனம் கொண்டு

பொட்டும் பூவும் கட்டித் தந்தோம்
பச்சைக் கிளியொன்று
கண்ணில் வைத்து காத்திட வேண்டும்
கருணை மனம் கொண்டு
மஞ்சள் பூசும் பெண்ணும்
மை விளையாடும் கண்ணும்
என்றும் உன்னுடன் வாழ்க
மங்கல மங்கையாக
மங்கல மங்கையாக
மங்கல மங்கையாக


==============================================================================================

காணொளியை காண பொறுமை இல்லாதவர்கள் கீழே நான் கொடுத்திருக்கும் 'விஷய சுருக்க'த்தை படித்து வீட்டுக் கடந்து விடலாம்!


உயர்ந்த மனிதன்


அந்த நாள் ஞாபகம் பாடல் காட்சியில் ஓடிவரும் சுந்தரராஜன் கால் தடுமாறுகிறதே, கவனிக்கவில்லையா என்று கேட்க, ஆமாம், முதலில் கவனிக்கவில்லை. ஆனால் பிரிவியூ பார்க்கும்போது பார்த்து ஒன் மோர் எடுத்துடலாமா என்று கேட்டபோது சிவாஜி, இது இயல்புதானே, ஓடும்போது அப்படி கால் தடுமாறுவது இயல்புதானே... என்ன கேமிராமேன் என்று கேட்க, ' இல்ல சார்.. நான் கவனிக்கவே இல்ல, என்றதும் ம் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவைக் கேட்டால் அவர்களும்ம் யோசித்துவிட்டு ஆமாம், இருக்கட்டும் என்று சொல்லி விட்டார்கள்.

படத்தில் அவருக்கும் சௌகார் ஜானகிக்கும் ஒரு சின்ன உரசல் வந்ததாம். சாப்பாடு பிரச்னையில்தான் வந்தது. ஒரு காட்சியில் சௌகார் அனுப்பும் சாப்பாட்டை சாப்பிடாமல் அப்படியே திருப்பி கொண்டு வந்து விடுவார் வேலைக்காரர். அதே சமயம் அவர்கள் வீட்டு டிரைவரின் பெண் செய்து அனுப்பும் சமையலை சாப்பிடுவார். மனைவி அனுப்பிய சமையல் உப்பு சப்பில்லாமல் இருந்தது என்றும், டிரைவர் பெண் அனுப்பிய சாப்பாடு காரசாரமாக இருந்ததது என்றும் காட்சி.

திருப்பி அனுப்பப்பட்ட சாப்பாட்டைப் பார்த்ததும் சௌகார் கோபப்பட்டு நடிக்க வேண்டும். ஜாவர் சீதாராமன் அந்தக் காட்சியில் உண்மையாக எழுதி இருந்தார். சௌகார் நடித்ததும் சிவாஜி சரியில்லை என்று அவரிடமே சொல்லி விட்டார். இன்னும் கொஞ்சம் கோபமாக பேசி கத்தி, பாத்திரங்களைத் தூக்கிப் போட்டு நடிக்க வேண்டும் என்று சொன்னார். நீ என்னை சிவாஜியா பார்க்காதே.. உன் கணவனாய் பார் என்றார். ஒரு மனைவி தன் கணவன் எதிலும் கணவனை பங்கு போட விரும்ப மாட்டாள். சாப்பாட்டானாலும் சரி, வேறு விஷயமானாலும் சரி என்றார். 

 சௌகார் 'நான் சரியாகத்தான் நடித்தேன்? என்ன சார்?' என்று இயக்குநரைக் கேட்க, ஆனால் அவரும் சிவாஜி கருத்தை ஆமோதித்திருக்கிறார். 'என்ன குறை?' என்று கேட்ட சௌகாரிடம் 'நீங்க நடிச்சது கொஞ்சம் ஆங்கிலப்பட  ஸ்டைலில் இருந்ததது..  மென்மையாக இருந்தது.. இன்னும் கோபம் வெளிப்பட வேண்டும்' என்று சொல்லி இருக்கிறார். 

 சௌகாரும் அப்படியே மீண்டும் நடித்துக் கொடுத்ததும் ஓகே ஆனது. ஆனால் சௌகாருக்கு அப்புறம் சிவாஜியிடம் ஒரு அதிருப்தி தோன்றி விட்டது. சௌகார் சீனியர் நடிகை. சிவாஜிக்கெல்லாம் ரொம்ப காலம் முன்னாலேயே வந்து நடித்து பரிசுகள் வாங்கியவர். எனவே இயல்பாக அவருக்குள் ஒரு அதிருப்தி வந்து விட்டது. ஹிந்தி தெலுங்கு என்றெல்லாம் நடிப்பவர் அவர். வெர்சடைல் ஆர்ட்டிஸ்ட். என்றாலும் சில சமயங்களில் அவருக்கு தான் என்கிற எண்ணம் வந்துவிடும். தான் செய்ததுதான் சரி என்று நினைப்பார். சிவாஜிக்கு அது பிடிக்காது. சாதாரணமாக பேசும்போது இங்கிலிஷ்ல பேசுவார். அது சிவாஜிக்கு பிடிக்காது. கொஞ்சம் ஒதுங்கிப் போய்விடுவார். வெளிப்படையாக இல்லா விட்டாலும் அவர்களுக்குள் மறைமுகமாக ஒரு மனத்தாங்கல் இருந்தது.

==========================================================================================

அடுத்த பாடல் 'சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து'.. இந்தப் பாடல் அமைந்திருக்கும் காட்சி அமைப்பில் பின்னர் வேறு இரண்டு பாடல்களும் வந்தன.  ஒன்று ரிக்ஷா மாமா படத்தில்.  இன்னொன்று ஆனந்தரங்கம் படத்தில்.

கல்லூரியில் நடக்கும் பாட்டுப்போட்டிக்கு சாவித்ரி பாடும் பாடல் நன்றாக இஃள்ளாகி என்று படகோட்டி சிவாஜி சொல்லிக் கொடுத்து சாவித்ரி கற்றுக் கொண்டு பாடி ஜெயிக்கும் காட்சி அமைப்பு.  டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா பாடியுள்ள பாடல்.  அந்தக் காலத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட, ரசிக்கப்பட்ட பாடல்.

இந்தப் பாடல் மத்யமாவதி ராகத்தில் அமைந்திருக்கிறது என்று இதற்கு மட்டும் குறிப்பு கொடுத்திருக்கிறது விக்கி.


TMS   : ம்….சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து

P. சுசீலா : சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காற்று

TMS  : தென்னங்காத்து..

P. சுசீலா : தென்னங்காற்று
..
TMS  : ஆஹா காற்று இல்லே காத்து

P. சுசீலா : தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து

TMS  : ம்….சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து

P. சுசீலா : அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து

P. சுசீலா TMS : சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து

TMS  : செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பாத்து

P. சுசீலா : தெம்மாங்கு பாடுது நம்மைப் பாத்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்குபோல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு

P. சுசீலா TMS : ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு

P. சுசீலா TMS : சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து

TMS  : ஓஹோ…..ஓஒ…..ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ

TMS  : ஓஹோ…..ஓஒ…..ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ

TMS  : பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப்போல் கிடப்பதும் நமக்காக

P. சுசீலா : பட்டுப்போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சலசல ஓசையில்
சங்கீதம் கேட்பதும் நமக்காக

P. சுசீலா TMS : சங்கீதம் கேட்பதும் நமக்காக

P. சுசீலா TMS : சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து

P. சுசீலா : மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு

TMS  : நான் பார்க்கக்கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு

P. சுசீலா TMSவர் : சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து

P. சுசீலா : நானாச்சு வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சு என்றாலும் பூவாச்சும் வருமென்று
மீனாட்சி சொல்வதும் நமக்காக
மீனாட்சி சொல்வதும் நமக்காக

P. சுசீலா : சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து
ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…ம்ம்….
லா லால லலல்ல லலல்ல லா……


=================================================================================================

சிவாஜியைப்  பற்றி மோகன்.  இவர் நடிகர் திலகம் சிவாஜி என்று மூன்று பாகங்கள் ஆராய்ச்சி புத்தகம் எழுதியவர்.


அவர் நடையை வச்சு பேசியிருக்கேன் நிறையா...  ப்ராமின்க்கு மட்டும் ரெண்டு காலையும் வச்சு சேர்த்தபடிதான் நடப்பார்.   நிற்கும்போது லெஃப்ட்டை தூக்கி வச்சார்னா வாரியர் கேரக்டர்.  வலதுகாலை தூக்கி வச்சார்னா ரிச்மேன் இல்லன்னா புலவரா இருக்கும்.  மகாகவி காளிதாஸ்ல 'காலத்தில் அழியாத'ன்னு கே பி சுந்தராம்பாள் பாடும்போது காலை எதுல வச்சு நிக்கறார்னு பாருங்களேன்...அப்படிதான் நடிப்பார்.  

காலை யூஸ் பண்றது, கையை யூஸ் பண்றது...  இந்த இடத்தைத் தொடுவது (இடது மேல் மார்பில் கைவைத்துக் காண்பிக்கிறார்),  நெஞ்சுக்கு நடுவில் தொடுவது, இதற்கெல்லாம் ஒரு அர்த்தம் வச்சுக்கிட்டிருப்பார் சிவாஜி . இந்த மாதிரி எல்லாம் எந்த நடிகரும் வச்சுக்கிட்டு நடிக்கறது கிடையாது.  

அது மாதிரி அவர் நடிக்கற கதைல சப்போஸ் கொலைகாரனா நடிச்சார்னா  அந்தப் படம் முழுக்க இடது கையதான் யூஸ் பண்ணுவார்.  இல்ல, படத்தோட கதையின் பாதில கொலை பண்ணாருன்னா இடது கையதான் யூஸ் பண்ணுவார்.  பாபு படத்துல கொலை பண்ணியிருப்பாரு..  'இதோ எந்தன் தெய்வம்' பாட்டுஇ இருக்குல்ல...  அதுல பாருங்க எந்தக் கையை காமிச்சு பாடறாருன்னு...  லெஃப்டைதான் காட்டுவார்.   இதை யாருமே கவனிக்க மாட்டாங்க..  இதுதான் ஆராய்ச்சிங்கறது..   கையை எப்படி யூஸ் பண்றார், காலை எப்படி யூஸ் பண்றார்   

அப்புறம் இதுல வந்து கண்ணை எப்படி யூஸ் பண்றதுன்னு ஒண்ணு இருக்கு...   அதை ராஜபார்ட் ரங்கதுரைல பண்ணியிருப்பார்.  தங்கச்சி மாப்பிள்ளை தங்கச்சியை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணுவான்ல...   அந்த கல்யாணத்துக்கு வந்து உட்கார்ந்திருப்பார்.  அவனை பார்த்துக்கிட்டேதான் இருப்பார்.  கொஞ்ச நேரத்துல அவன் ஓடி வந்து கால்ல விழுந்து என்னை மன்னிச்சுடுங்க மச்சான் ம்பான்.  அது பார்வையிலேயே அந்த நடிப்பைக் காண்பிக்கறது.  

=================================================================================================
அடுத்த பாடல் டூயட் பாடல்.  இதுதான் படத்தின் ஆரம்பம் என்று ஞாபகம்.  சிறு வயதில் இந்தப் பாடல் போடும்போது நான் ரொம்ப ரசிப்பேன் என்று வீட்டில் சொல்வார்கள்.

ஆரம்ப ஹம்மிங்...  அப்புறம் பாடல்.  இந்தப் படத்தில் MSV சந்தூர் வாத்யம் எல்லாம் உபயோகப்படுத்தி இருப்பார் போல..  

TMS - சுசீலா பாடிய பாடல்.  TMS குரல் ஆரம்பத்திலிருந்தே ஒருமாதிரி கம்பீரம் கலந்த இனிமையாக இருக்கும்.

P. சுசீலா : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

TMS : எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது

P. சுசீலா : என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது

P. சுசீலா TMS  : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

TMS : விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை
ஜாடையில் நான் காண
விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை
ஜாடையில் நான் காண

P. சுசீலா : வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்
கோலத்தை நான் காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்
கோலத்தை நான் காண

P. சுசீலா : இளமையை நினைப்பது சுகமோ

P. சுசீலா : முதுமையை ரசிப்பது சுகமோ

P. சுசீலா TMS  : செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ

P. சுசீலா TMS : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

P. சுசீலா : ஆ…..ஆஹா…..ஆஹஅஹா…..ஆ ஆஹா
ஓஹோ ஹோ ஹோ ஹோ

P. சுசீலா : நிலத்தில் படரும் பனிப் பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர

P. சுசீலா : நிலத்தில் படரும் பனிப் பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர

TMS : நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர
நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர

P. சுசீலா : சூரியன் ஒளியில் மின்ன

TMS : தோகையின் விழிகள் பின்ன

P. சுசீலா TMS : பொன் வண்ணக் கலசம் பூ வண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ

P. சுசீலா TMS : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

P. சுசீலா : ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்ம்….ம்ம்…ம்ம்….

20 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    மூன்று பாடல்களும் கேட்ட பாடல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பாடல்களைத் தேர்வு செய்துள்ளீர்கள். ரிலீஸான ரெண்டு மூணு நாட்களுக்குள்ளே நான் பார்த்த வெகு சில படங்களுள் "ப்ராப்தமும்" ஒன்று. இவ்வளவு சுலபமாக டிக்கெட் கிடைக்கிறது என்றால் படம் பப்படம்தான் என்று தெரிந்தும் போனேன்...பின் வருந்தினேன்.

    //TMS : தென்னங்காத்து
    P. சுசீலா : தென்னங்காத்து
    TMS : ஆஹா காற்று இல்லே காத்து//
    இரண்டாவது வரியிலே "காற்று" என்று வர வேண்டோமா ஸ்ரீராம்? அப்பதானே TMS கரெக்ஷன் சொல்ல முடியும்?
    மூலம் ஏதோ தெலுங்குப் படம்....முதலில் ஹிந்தியில் எடுத்தார்கள். அதில் கூட இதே பாட்டில் இப்படி male voice pronounciation correction சொல்வது போல் உண்டு. ஹிந்திப் படம் சூப்பர் ஹிட். ஏனோ பாவம், சாவித்திரிக்கு ஊத்திக் கொண்டது. அவர் பொருளாதார நிலை அழிவதற்கு இந்தப் படம் ஒரு பெரிய காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா..   நான் இதை தஞ்சாவூர் ஹௌசிங் யூனிட்டில் மாதாந்திர படமாக பார்த்த நினைவு.  தியேட்டருக்கு செல்லவில்லை.  காத்து காற்று வித்தியாசம் நான் கவனிக்கவில்லை.  நீங்கள் சொன்னதும் இப்போது சரி செய்து விட்டேன்.  நன்றி. 

      ஹிந்தியில் மிலன் என்று எடுத்தார்கள்.  முகேஷ் லதா குரலில் ஸாவன் கா மஹீனா என்னும் பாடல்.  மிக அருமையாக இருக்கும்.  அதன் சரணங்களை தமிழில் என்னுயிர்த்தோழி படத்தில் 'மான் குட்டியே' ​பாடலின் சரணங்களில் காபி அடித்தார்கள்.  கொஞ்சம் கவனித்துக் கேட்டால் பல்லவியே ஸாவன் கா மஹீனாவின் திரிபு என்று கண்டு கொள்ளலாம்.

      நீக்கு
  3. இன்றைய மூன்று பாடல்களும் நல்ல தேர்வு. நிறையமுறை சிறிய வயதில் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை. நானும்.

      அடிக்கடி கேட்பது 'சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்'

      நீக்கு
  4. நேற்றுத்தான் தொண்ணூறு வயதான பி சுசீலாவை ஒய்ஜி மகேந்திரன் சந்திக்கும் போட்டோ பார்த்தேன்.

    திரையுலகப் பாடகிகளில் குறிப்பிடத்தக்க உயரம் தொட்டவர் அவர்.

    ஜாம்பவான்கள் திரையுலகில் வாழ்ந்த காலம் சரியில்லை, நம்ம ஆரம்பகால கபில் காவஸ்கர் போல. ஒரு முழுப் பாடலுக்குமே 700 ரூ பட்ஜெட்டுன்னா பாடகர் பாடகிகளுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது. இப்போ லட்சங்களில் கொழிக்கறாங்க. கபிலுக்கு 1000 ரூபாய். இப்போ பத்து லட்சத்திற்கு மேல் ஒரு நாள் விளையாட. சிவாஜி சில லட்சங்கள் சம்பளம் ஆனால் இப்போ நம்பர் ஒன் நடிகர் 200 கோடிக்கும் மேல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுசீலாம்மா இந்த வயதில் பேசுவது கூட சிரமம்.  அவர் பேட்டி நான் இன்னும் பார்க்கவில்லை. 

      அந்தக் கால பட்ஜெட் இந்தக் கால விலை நிலவரத்துடன் ஓத்தே போகாது.  அதே சமயம் அன்று சென்னையில் முக்கிய இடங்களில் கூட ஒரு கிரௌண்ட் விலை சில ஆயிரங்களில் வாங்கக் கூடிய அளவில் இருந்ததது என்பதும் குறிப்பிடத்தக்கது.

      நீக்கு
  5. காலை எட்டரை மணிக்கும் வராத காலை வணக்கம் ப்ரார்த்தனை எத்தனை மணிக்கு வரலாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம்; மகன் குடும்பம் வந்திருக்கலாம். வெளி இடங்கள் சென்றிருக்கலாம்!

      நீக்கு
  6. பதில்கள்
    1. முருகா முருகா..

      வாங்க செல்வாண்ணா..  வணக்கம்.

      நீக்கு
  7. நடிகர் திலகத்தின் நடிப்பை ஆய்வு
    செய்ததோடு செய்திகளும் தாராளம் ...
    சிறப்பு

    பதிலளிநீக்கு
  8. இரண்டு பாடல்களும் இதமானவை...
    மிகவும் பிடித்த பாடல்கள்...

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம், முதல் பாட்டு கேட்ட நினைவில்லை. ஆனால் இரண்டாவது பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் ரசித்த ரசிக்கும் பாடல்.

    அந்தக் கரெக்ஷன் இடம்...எல்லாம் ரொம்ப அப்போ ரசித்தது புதுமையா இருக்கே என்று

    கீதா

    பதிலளிநீக்கு
  10. மத்யமாவதி தான் ....

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சௌகார், சிவாஜி மறைமுகமான அந்த மனத்தாங்கலை வாசித்தேன். பின்னர் காணொளி பார்க்கிறேன் ஸ்ரீராம். பாடல்கள் மட்டுமே கேட்டேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இந்தப் படத்தின் கதை போல கிட்டத்தட்ட....வேறு ஒரு படம் நினைவுக்கு வருதே. ஆனால் கணவன் இறந்துவிடுவானா அது நினைவில்லை.

    தமிழ் சினிமால இதெல்லாம் சர்வசகஜமான தீம்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!