Wednesday, February 8, 2017

புதன் 170208 புதிர்.


சென்ற வாரத்தில் கேட்டவை:  

ஒன்று :  

புதன் கிழமை என்றால், செவ்வாய் என்ன?  

இரண்டு :  

எங்கள்  வீட்டு, பழைய சுவர்க் கடிகாரம் ஒன்று, வீதியில் கிரிக்கட் ஆடிய  சிறுவன் அடித்த  பந்து  மூர்க்கமாக  வந்து  தாக்கியதில், அதன் எண் தகடு, பொடிப்பொடியாக  உதிர்ந்து  கீழே  விழுந்தது. அப்படி  உடைந்து  விழுந்த ஒவ்வொரு  துண்டிலும் ஒரு எண் மட்டுமே இருந்தது! 

ஆனால் பெரிய  எண்  கொண்ட துண்டுகள் மொத்தம்  நான்கு  இருந்தன. 

அந்தப்  பெரிய  எண் கொண்ட தகடில்  இருந்த எண்(ணிக்கை) என்ன?  

மூன்று:  

முன்  காலத்து  டி ராஜேந்தர்  யார்?  (குறிப்பு : அவருக்கு தாடி கிடையாது)


பதில்கள் :  

ஒன்று : 
புதன் = கிழமை என்றால், செவ்வாய் = இளமை. 

இரண்டு : 

முன் காலத்து  கடிகாரம் . ஆகவே ரோமன் நியூமரல்ஸ். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு எண் . I, V, X. அதிக பட்ச எண்  X . 

அதுவே நான்கு துண்டுகளில் இருக்கும். 

பெ சொ விக்கு முழு மதிப்பெண்கள். 

மூன்று : 

அந்தக்கால டி ஆர் :  (வீணை) பாலச்சந்தர். படம் : பொம்மை. 

முதல் கேள்விக்கும் மூன்றாம் கேள்விக்கும் யாருக்கும்  மதிப்பெண்  கிடையாது. 

எல்லோருக்கும்  O P S.  (0 Points Students!) 

இந்த வாரக்  கேள்விகள் : 

1 )   புதன் கிழமை என்றால், வியாழன் என்ன? 

2 )  If a . x** 2 = x **3,  what is the value of x? 

3)  ஒரு தமிழ் சினிமாப் பாடலின் நடுவில், " அட தத்தாரித் தத்தாரித் தய்யா  ; அவன் தலையைப் பாரு கொய்யா " என்று வரும். அந்தப்  பாடலின் ஆரம்ப வரிகள் என்ன?

=============================

15 comments:

Anuradha Premkumar said...

வணக்கம்...!

Dr B Jambulingam said...

எனக்கும் புதிருக்கும் தூரம்.

'நெல்லைத் தமிழன் said...

சும்மா பதில் எழுதினாப் போதுமா? விளக்கவேண்டாமா? இளமை, கிழமை, முதுமைன்னு என்ன இப்படிச் சொல்லிக்கிட்டே போறீங்களே....

எப்படி வீணை பாலசந்தரை அந்தக் கால டி.ஆர் என்று சொல்லிட்டீங்க? ஓரளவுதானே பொருந்தும். அதற்கு பானுமதி இன்னும் apt candidate இல்லையா?

'தலையைப் பாரு கொய்யா' என்று சொல்லியதற்குப் பதில், நீங்கள் எல்லோரும் தலையைப் பிச்சுக்குங்க ஐயா என்று சொல்லியிருக்கலாம்.

Bhanumathy Venkateswaran said...

எஸ்.பாலச்சந்தரையும், டீ.ராஜேந்தரையும் ஒப்பிட்டு விடை கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

செவ்வாய் என்பதற்கு இளமை(??!!) என்று ஒரு பொருள் இருக்கலாம். சிவந்த வாய் என்பது தவறு கிடையாது. "பன்னிரு தோளும், பவளச் செவ்வாயும் என்று கேள்வி பட்டதில்லையா"?

பானுமதியை அஷ்டாவதானி என்று ஒப்புக் கொள்ள மறுத்த உங்களின் ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்த்து மெரீனாவில் போராட்டம் துவங்கலாம் என்று நினைத்தேன். பாவம் நம் அரசுக்கும், காவலர்களுக்கும் இருக்கும் தொல்லை போதும் என்று கை விட்டு விட்டேன்.

Bhanumathy Venkateswaran said...

1. அட போங்க சார் நீங்களும் உங்க கேள்வியும், புதன் கிழமை என்றல் வியாழனும் கிழமைதான்

3. என்னதான் கோபம் என்றாலும் தத்தாரி, கித்தாரி என்றெல்லாம் திட்ட மாட்டோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

புதன் என்றால் எனக்கு மிகவும் விருப்பம்...

Anonymous said...

3. சித்திரை செவ்வானம் சிவக்க கண்டேன் பாடல்- Madumitha

பெசொவி. said...

செவ்வாய் = இளமை ???? எப்படி என்று புரியவில்லை, விளக்கினால் நலம் பயக்கும்.
செம்மையான வாய், சிவந்த வாய் என்ற இரண்டு பொருள்களும் உண்டு. (தமிழில் இலக்கணப்படி பாடல்கள் எழுதுபவன் என்ற முறையில் என்னுடைய பதிலை ஏற்றுக் கொள்ளாததில் வருத்தமே!)

இரண்டாவது கேள்விக்குப் பதில் சரி என்று கூறியமைக்கு நன்றி!

பெசொவி. said...

1. வியாழன் என்பது கோள், கிழமை. இது தவிர, புதன் கிழமை என்றால் வியாழன் என்பது அடுத்த நாள்.

2. x = a

3. நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்

'நெல்லைத் தமிழன் said...

@பெசோவி - கேஜிஜி நினைத்திருப்பது இதுதான் என்று நினைக்கிறேன். செவ்வாய்க்கு அடுத்ததுதான் புதன். புதன் என்பது 'கிழமை' என்றால், அதாவது, வயதாவது, கிழப் பருவம் என்றால், அதற்கு முந்தைய ஸ்டேஜ் இளமைதானே. அப்படீன்னா, வியாழன், இன்னும் முதிர்வடைவது. அதாவது முதுமை. சனி - வேற என்ன பொணம்தான்.

athira said...

எனக்கில்ல... எனக்கில்ல... பரிசு எனக்கில்ல....:)

Thulasidharan V Thillaiakathu said...

இன்று ஒன்றும் புரியவில்லை..ரெண்டு பேரும் ...இவ்வளவு நேரம் தலையைப் பிய்த்துக் கொண்டாச்சு ஹிஹீஹிஹி...(கீதா: ஏற்கனவே மூளை குயம்பிப் போய் கிடக்குது...நெல்லைத் தமிழன் சொல்லுவதைப் பார்த்தால் வியாழன் என்றால் முதுமை என்றால் விடு ஜூட்!!! நாங்க எப்பவுமே மார்க்கண்டேயன்...!!!)

KILLERGEE Devakottai said...

பரிசு எனக்கு வேண்டாம்

பரிவை சே.குமார் said...

விடைக்காக வெயிட்டிங்க்...

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, இப்போத் தான் பார்த்தேன்! மெதுவா அடுத்த புதன்கிழமை வந்து பதிலைப் படிச்சுக்கறேன். வியாழனும் ஒரு கிழமை தானே! புதனும் கிழமை, வியாழனும் கிழமை தான்! :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!