Sunday, July 23, 2017

ஞாயிறு 170723 : கலர் கலரா .... .........கட்டிடங்கள்!
வாடகைக்கு ரெடி... இப்படி கட்டைகளைப் போட்டு வைத்தால் வியாபாரம் எப்படி நடக்கும்!ஓ...  அதனால்தான் இவர்கள் வேறு கடை நாடிச் செல்கிறார்களோ!இதற்குத்தான் இந்தக் கட்டைகளா...!இன்னும் கொஞ்சம் வண்டிகள்....கலர்கலரா ....   .........கட்டிடங்கள்!பின்னணியில் மலைச் சிகரங்கள்....
இங்கே கிளிக் செய்து தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம்.

16 comments:

நெல்லைத் தமிழன் said...

படங்கள் எப்போதும்போல் நல்லா இருக்கு. கலர் கலரா கட்டடங்கள் பார்க்கும்போது, வாஸ்து பெயரில் போணியாகாத கலரை விற்பனை செய்யும் தந்திரம் எங்கேயும் உண்டு என்பது தெரிந்தது. த ம

துரை செல்வராஜூ said...

படங்கள் அழகு..

வாழ்க நலம்..

Geetha Sambasivam said...

படங்கள் எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. அந்தக் கட்டைகளை எல்லாம் பார்க்கையில் 2010 ஆம் ஆண்டில் எங்க வீட்டு வாசலில் அக்கம்பக்கம் குடியிருப்புக் கட்டுவோர்கள் போட்டு வைத்த சாமான்கள் நினைவில் வருது. இப்படித் தான் சாமான்களையும் போட்டு வண்டியையும் நிறுத்தி நாங்க வெளியே வரமுடியாதபடிக்குச் செய்துடுவாங்க! :(

கோமதி அரசு said...

படங்கள் அருமை.
மூங்கில் கட்டைகள் புதுசாக இருக்கிறது.
சாரம் கட்ட இப்போது சில இடங்களில் இரும்பு குழாய் பயன்படுத்துகிறார்கள்.

KILLERGEE Devakottai said...

சாரம் கட்டும் கட்டைகளோடு கட்டைகளையும் இரசித்தேன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

படங்களை ரசித்தோம்.

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் நன்றாக இருக்கின்றன.... கலர் கலராய்.. கட்டடங்கள் கூட அழகுதான் போல...சரி...கௌதம் அண்ணாவிடம் இன்னும் டார்(ஜி)லிங் சிக்கி(ம்) கிடக்குது போல..ஹஹஹ....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கட்டடம், கட்டிடம் இரண்டிலும் எது சரி என்று எனக்குக் குழப்பம் வந்த போது..... சிறு வித்தியாசம் உண்டு என்று எங்கேயோ வாசித்த நினைவு. கட்டிடம்....கட்டு+இடம்....கட்டுவதற்கு உள்ள இடம்..அதாவது மனை...கட்டப்பட்டவை...கட்டடம் என்று விளக்கம் சொல்லப்பட்டிருந்தது.... தமிழ் அறிஞர்கள் விளக்கலாம்....

கீதா

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அழகு.

Bagawanjee KA said...

இந்த மாதிரி இடங்களில் இத்தனை மாடிக் கட்டடங்கள் பாதுகாப்பு அற்றவை போல் தோன்றுகிறதே :)

நெல்லைத் தமிழன் said...

தில்லையகத்து கீதா ரங்கன் - நீங்கள் சொன்னபிறகுதான், கட்டடம், கட்டிடம் என்பதில் எது சரியாக இருக்கும் என்று யோசித்தேன். சரியான தீர்வு தெரியவில்லை. நெட்டில் உள்ள கீழே உள்ள விளக்கத்துக்கும் பல எதிர் விளக்கங்கள் இருக்கின்றன. INCONCLUSIVE.

"கட்டடம் என்பது தொழிற்பெயர்; கட்டிடம் என்பது இடப்பெயர்; பொருளை மாறிப் பயன்படுத்தக் கூடாது. கட்டிடத்தின் மேல் கட்டடம் நிற்கிறது. அடம் என்பது அடுக்குதல் என்ற வினையில் கிளர்ந்த ஓர் ஈறு. கட்டுதல் என்பது சேர்த்தல்; கட்டி அடுக்குவது கட்டடம். குடில், குடிசை, மாளிகை, கோயில், அரண்மனை என எல்லாமே கட்டி அடுக்குவது தான்"

Thulasidharan V Thillaiakathu said...

ஆம் நெல்லைத்தமிழன் இப்படியான அர்த்தம் தான் பார்த்தேன்...அதில் கட்டுவதற்கான இடம் கட்டிடம்..காலி இடம்.....

அடுக்கடுக்காய் கட்டப்படுவது கட்டடம்..நீங்கள் சொல்லியிருப்பது...போல....நான் சொல்லுயிருப்பதும் கிட்டத்தட்ட அதேதானோ...??

கீதா

G.M Balasubramaniam said...

மலைகளின் ஊடே இவ்வாறு உயரமான கட்டடங்கள் ஏற்புடையதா

ராஜி said...

இயற்கை அழகைவிட செயற்கை அழகா உயர்ந்தது?!

ஸ்ரீராம். said...

@கீதா ரெங்கன், நெல்லைத்தமிழன்...

கட்டிடம் - கட்டடம்

வித்தியாசம் கேட்டு இப்படி எல்லாம் அடம் பிடிக்கக் கூடாது!!! பதில் சொல்லி கட்டி வராது!

Asokan Kuppusamy said...

கண்களை குளிர வைக்கும் காட்சிகள்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!