வியாழன், 27 ஜூலை, 2017

ரெட்டைக் குழப்பம் - இறந்தும் இருப்பவன்



​ரெட்டையாப் பொறந்தோம். 

அவன் செய்த குற்றங்களுக்கு 
தண்டனை கிடைத்தது 
என்னமோ
​எப்பவுமே ​எனக்குதான்

இரண்டு இரண்டு முறையாக
அவனே பல நேரங்களில் சாப்பிட்டான்

எனக்கு பசி ஏப்பம் மட்டுமே சொத்தானது 

​கடுப்பாகி 'இதைச் சரி செய்' என்று
கடவுளை வேண்டியபோதெல்லாம்
பலன் என்னமோ அவனுக்கே கிடைத்தது. 
 

கடவுளுக்கே குழப்பம் போல!

கடைசியாக் கிடைச்சது விடிவு!
நான்
செத்த ​போது அவனைப் புதைச்சுட்டாங்க..


காரணக்கரு  :  எ​ந்தக் குழந்தை இறந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.  இதிலே நான் இருக்கறது பரிதாபத்துக்குரிய ஒரு ரகசியம்.  நானே உயிரோடிருப்பவன் என்று எல்லோருமே எண்ணி விட்டார்கள்.  உண்மையில் நான் உயிரோடில்லை.  என் அண்ணன்தான் உயிரோடிருப்பவன்.  மூழ்கி இறந்தவன் நானே  - மார்க் ட்வைன்


​===========================================================================





       ஜெ.....யின் இந்த ஓவியத்தைப் பாருங்கள்.  அந்தப் பெண் முகத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?  வெயிட்...  வெயிட்...  ஓடாதீங்க...  கதை எல்லாம் எழுதச் சொல்லப் போவதில்லை!  சில வாரங்களுக்கு முன் தினமணிகதிரில் இடம்பெற்ற இந்த ஓவியம் அதன் கதைக்கு  மிகப்பொருத்தமாக இருந்தது. 

       உணர்வுகள்!   

      உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று சுருக்கமாகச் சொல்லுங்கள்!




=======================================================================


     ஜெ... யின் ஓவியங்களில் அந்தக் காலத்தில் இளம் பெண்கள் படங்களில் டி ஷர்ட் போடும் பெண்கள் மார்பில் ஏதாவது வாசகம் அமைத்து வரைவார்.  உதாரணமாக  It's For U.  இது, அதாவது இந்த வழக்கம் ரொம்பப் பிரபலம் அப்போது!  அதை வைத்து அப்போது வெளியான ஒரு ஜோக்!  அதற்கும் ஜெ யே ஓவியம்!





============================================================================


      இவர் என்ன செய்கிறார் என்று தெரிகிறதா?!!  கவனிக்கவும் இது புதன் புதிர் அல்ல!!!








==============================================================================




     நமது வலையுலக எழுத்தாளர்களுக்கு - சிறுகதைப் படைப்பாளிகளுக்கு -  ஒரு அரிய வாய்ப்பு.    கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே....




     நன்றி ஏகாந்தன் ஸார்.  நீங்கள் சொன்னபிறகுதான் முகவரி வெட்டுப் பட்ட படத்தை வெளியிட்டிருக்கிறேன் என்பது தெரிந்தது.  அனுப்பவேண்டிய முகவரி :

தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டி
29, இரண்டாவது முதன்மைச் சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை - 600 058



=====================================================================




பயமுறுத்தும் பகிர்வு..   எச்சரிக்கை ஊட்டும் பதிவு... விழிப்புணர்வு தரும் பதிவு... 



========================================================================

தமிழ்மணத்தில் வாக்களிக்க இந்த இடத்தில் க்ளிக் செய்யவும்!

55 கருத்துகள்:

  1. கதம்பம். அப்புறமா மெதுவா வரேன்.

    பதிலளிநீக்கு
  2. ரெட்டைக் குழப்பம் படிச்சிருக்கேன், சொல்ல மறந்துட்டேன். :)

    பதிலளிநீக்கு
  3. ஓவியர் ஜெ... அவர்களின் சித்திரங்கள் தனித்துவமானவை..
    பதின்ம வயதுகளில் ஓரளவுக்கு விவரம் (!) புரிந்ததும் -

    ஓய்.. கிழம்.. அதெல்லாம் இப்போ எதுக்கு?..

    இருந்தாலும் உண்மையத் தாங்க சொன்னேன்...

    பதிலளிநீக்கு
  4. இந்த ஓவியத்தில்
    அந்தப் பெண்ணில் விழிகளில் நீர் திரண்டிருப்பது தெரிகின்றது..

    அவன் குடிகாரன் போலத் தெரிகின்றான்..

    இந்த மேடையில் அந்த நாடகம் எத்தனை நாளம்மா?.. - என்ற கேள்விக் குறி தான் அடிநாதம்..

    பதிலளிநீக்கு
  5. அயையோ ரெட்டைக் குழப்பம்...ரெண்டு பேருமே தண்ணில மூழ்கியதில் வந்தக் குழப்பமோ? இல்லைனா கண்டு பிடிக்க முடிந்திருக்கமே! பாவம்! கடைசில ரெண்டுமே இல்லாம போச்சே...உங்கள் வரிகள் நல்லாருந்துச்சு..

    ஜெயராஜ் ஓவியம் அழகு! ஜோக்கும் செம...

    துளசி: அவர் என்ன செய்கிறார் என்று புரியவில்லையே...பார்த்தா ஏதோ இண்டக்ஷன் ஸ்டவ் ரிப்பேர் போலவும் இருக்கு...இல்லை கணினியோ...ஆனா...

    கீதா: ஹஹஹ அவர் ஊஞ்சல் கட்டுகிறார்!!!!! ஆனா ரொம்பக் குட்டியா இருக்கே!!!!!! ஜோக்ஸ் அபார்ட்..ரெண்டு பேர் ஏதோ ரிப்பேர் செய்கிறார்கள்....அது கணினி போலவும் இருக்கு ஆனா இல்லை.. இண்டக்ஷனாவும் தெரியலை...ஆனா எதுக்கு மேலே சீலிங்கில் ப்ளக் பாயின்ட் டெஸ்டிங்க்...சரி விடுங்க நெல்லை, கில்லர்ஜி, அப்பாதுரை சார் (வந்தார்னா) இல்லை இன்னும் பலர் இருக்காங்களே அவங்க சொல்லிடுவாங்க...அஹஹ்ஹ

    கீதா: ஜெ ஓவியம்...அழகாக இருக்கின்றது... உணர்வுகள்...பல சீதைகள் நினைவுக்கு வந்தாலும்...குறிப்பாக..மஞ்சுசம்பத்தின் சீதையும், ஹேமாவின் தாட்சாயிணியும் நினைவுக்கு வந்தார்கள்...பொருத்தமாக இருக்குமோ என்று

    கீதா: சிறு கதைப் போட்டி...எழுத்துகள் ரொம்பச் சின்னதா இருக்கு...கொஞ்சம் நிதானமா படிக்கணும் ரூல்ஸ்...

    துளசி: புட்டி நீர்....பயமுறுத்துகிறது என்றாலும் கேரளத்தில் பயமில்லை...ஆனால் இங்கும் இப்போது நீர் சேமிப்பு பற்றி அறிவுறுத்தல்கள் நகரங்களில் குறிப்பாகத் தலைநகரில் போர்டுகள் வைகக்த் தொடங்கிவிட்டார்கள்...அவசியம்தான். இருக்கிறது என்று எல்லோரும் இங்கு மட்டுமில்லாமல் எங்கு சென்றாலும் நீரை அதிகம் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள் கேரளத்தவர்...

    கீதா: புட்டி நீர் பயமுறுத்துகிறது...தமிழ்நாடு கேவலமாகிக் கொண்டிருக்கிறது என்பதும் தெரிகிறது. துளசி சொல்லியிருப்பது போல் நான் சமீபத்தில் திருவனந்தபுரம் சென்றிருந்த போது அங்கு சிக்னலில் எலக்ட்ரானிக் எழுத்துகள்ஃப்ளாஷ் ஆகின்றன...ஸேவ் வாட்டர் என்று. கேரளத்திலும் சில இடங்களில் தண்ணீர் பிரச்சனை தொடங்குவது போல் தோன்றுகிறது...சரி தமிழ்நாட்டிற்கு எப்போது விடிவுகாலம்..? எல்லாமே கார்பொரேட் மயம் ஆகப் போகிறது என்றால் கார்ப்பொரேட் மட்டும் ஊழல் பண்ணாதா என்ன? அங்கும் தான் இருக்கு ஊழல்...எதை நம்புவது? மழை நீரை!! அதில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் எல்லோரும் மழை நீரைச் சேமிக்க வேண்டும்...அதெல்லாம் சரி மழை??!!

    பதிலளிநீக்கு
  6. False ceilingல பல்ப் பாயின்டுகளுக்குத் தேவையான வோல்டேஜ் வருகிறதா என்று செக் பண்ணுகிறாரா?

    கவிதையை ரசிக்கமுடிந்தது. சாதாரண அண்ணன் தம்பிகளுக்குள்ளேயே போட்டி பொறாமை இருக்கும்போது, இரட்டைப் பிறவிகளுக்குள், இருவருக்கும் வித்தியாசம் உடலளவில் இல்லாதபோதும் மனத்தளவில் இல்லாது போகுமா?

    எனக்குப் பிடித்த ஓவியர் ஜெ....க்கு அப்புறம் வருகிறேன். படத்தைப் பார்த்தவுடன் பல கதைக்கான கருக்கள் ஞாபகம் வருகிறது.

    நல்ல கலவை. த ம.

    பதிலளிநீக்கு
  7. 01 கவிதை மிகவும் அருமை
    02 இலன் எந்த நேரமும் பேப்பர் படிக்கிறதுலயே..... இருக்கானே..... புதுப்பொண்டாட்டி நம்மளோடு பேசணும்னு நினைப்பே வராதா ?
    03 டி சர்ட் இல்லாமல்..... என்ன வில்லத்தனம் ?
    04 கரணஅடை திருடுவது போலவும் இருக்கு.....
    05 பரிசு எனக்கே...

    பதிலளிநீக்கு
  8. நல்ல தொகுப்பு. புட்டி நீர்.. விழிப்புணர்வைத் தரும் நூல் குறித்த பகிர்வு. ஹுஸைனம்மாவுக்கு நன்றி. புதிர் அல்லாத அந்த 4வது புதிருக்கு விடை அறியக் காத்திருக்கிறேன். 2வது ஜெ.. ஓவியம்: “ராமனை மன்னிப்பதா.. வேண்டாமா.. குழப்பத்தில் சீதை!”

    :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமனை மன்னிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில்...// அட! சூப்பர்! ராமலஷ்மி...மிகவும் ரசித்தேன்...

      கீதா

      நீக்கு
  9. என் அன்புக்குரிய, ஓவியர் ஜெ.... அவர்களின் படத்துக்கான கதைக்கருக்கள்.

    1. தாய் தந்தைக்கு ஒரே பெண். தன் கணவனுடன் வேறு இடத்தில் இருக்கிறாள். தாய்க்கு உடம்பு முடியவில்லை. தான் போய்ப் பார்த்துக்கொண்டு தந்தைக்கும் உணவு சமைத்துவைத்து ஓரிரு மாதம் இருந்துவிட்டு வரவேண்டும் என்று நினைக்கிறாள். அதற்கு கணவன், 'அது அவர்கள் பாடு' என்று சொல்கிறான். அவள், ஓரிரு வாரமாவது போய்வருகிறேனே என்று கேட்கிறாள். அதெல்லாம் முடியாது, மீண்டும் மீண்டும் இதைப்பற்றிப் பேசாதே என்று சொல்லிவிட்டு, பேப்பர் படிப்பதில் ஆழ்கிறான். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கண்களில் நீர் முட்டிக்கொண்டுவருகிறது. அழுதாலும் என்ன சொல்வானோ, அங்கே தன் பெற்றோர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்களோ.

    2. கிராமத்திலிருந்து சென்னைக்கு தம்பி வேலை கிடைத்து வந்திருக்கிறான். அவன் நம்மோடு தங்கட்டுமே. அவனுக்கு நகரம் பழகும்வரை நம்மோடு இருந்தால், எனக்கும் பேச்சுத்துணை, எங்க அம்மா அப்பாவுக்கும் கொஞ்சம் கவலை இருக்காது என்று கணவனைக் கேட்கிறாள். சும்மா உங்க வீட்டுக்காரங்களுக்கு நாம செலவழிக்கமுடியாது, எப்பயாச்சும் பார்க்கவேணா வரட்டும், மத்தபடி அவன் வாழ்வை அவந்தான் பாத்துக்கணும் என்று கறாராகச் சொல்கிறான் கணவன். அவளுக்கு தம்பிகிட்டயோ அல்லது அப்பா/அம்மா கிட்டயோ என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. கண்களில் கண்ணிர் வருகிறது, இப்படி கணவன் விட்டேத்தியாக இருக்கிறானே என்று. தான் திருமணம் ஆகாதபோது, தன் அண்ணனும் அண்ணியும் எப்படித் தன்னைத் தன் குழந்தை மாதிரித் தாங்கினார்கள் என்று நினைக்கும்போது கண்களில் கண்ணிர் வரப்பார்க்கிறது.

    3. அழகையும் சொந்த வீட்டையும் பார்த்துத் தான் திருமணம் செய்துகொண்ட தன் கணவன், வேலைக்குப் போகாமல், சோம்பேறியாக வீட்டிலேயே வளைய வருவதையும், இருக்கும் காசைச் செலவழித்துக்கொண்டு ஹாயாக இருப்பதையும் பார்த்து, அவனைச் சொல்லிச் சொல்லிப் பார்க்கிறாள். அவனோ, காலையில் வெறும் பேப்பரை மேய்ந்துகொண்டு, காபி டிபன் சாப்பிட்டுவிட்டு, வெறும்ன ஊர் சுத்திவிட்டு பொழுதுபோக்குகிறான். இன்றைக்காவது தீர்மானமாகச் சொல்லவேண்டும் என்று ஆரம்பித்த்போது, 'உன் வேலையைப் பார்' என்று கடும் சொற்களால் கணவன் சொல்லிவிட்டு, எப்போதும்போல் பேப்பர் படிக்க ஆழ்ந்துவிடுகிறான். அதை நினைத்து மனைவிக்குக் கண்ணில் கண்ணீர் வருகிறது.

    இப்படி எத்தனையோ யோசித்து எழுதலாம் (பொறுமை இருந்தால்)

    ஜெ... அவர்களின் ஓவியங்கள் ரொம்பவும் செக்சியாக இருக்கும். நிறைய தடவை கதைக்கான படமாக இருக்காது. அவர், அப்புசாமி கதைகளுக்கும் இன்னும் பல கதைகளுக்கும் சிறப்பான பொருத்தமான ஓவியங்கள் வரைந்து இருப்பதால், அவர் சம்பந்தமில்லாமல், முக்கியமில்லாத சீனுக்கு பெண்கள் படத்தை வரையும்போது, எனக்கு, பத்திரிகை ஆசிரியர் ஜெ....விடம் இந்தமாதிரி படம் வரையுங்கள் என்று (அந்தக் காலத்தில் கவர்ச்சி ஸ்டில்கள் இல்லாத குறையைப் போக்க) சொல்லியிருப்பாரோ என்றும் தோன்றும். அவருடைய டிரேட் மார்க் என்று பலவற்றைக் குறிப்பிடலாம் (சிலவற்றை இங்கு எழுதக்கூடாது). என்னால் உடனே வரைந்து காண்பிக்கமுடியும். அதில் ஒன்றுதான், டி.ஷர்ட் வாசகங்கள். (ஆனால் இது அவர் கண்டுபிடித்தது என்று எண்ணவேண்டாம். இப்போதும் சில பிராண்டுகளில் பலவிதமான வாசகங்கள் கொண்ட அத்தகைய டி.ஷர்டுகள் வந்துகொண்டிருக்கின்றன). அவருடைய பெண்களின் போஸ், இயற்கையாக அப்படி இருக்கும் போஸ்கள் அல்ல. ரொம்ப செயற்கையாக இருக்கும். (சரி..சரி.. போதும்)

    அவர் ஒருதடவை எழுதியிருந்தார். வெளி நாட்டு டூர் போனபோது (பாரிஸ்?), டாய்லட் எங்கிருக்கு என்று கேட்டபோது அவர்களுக்குப் புரியவில்லை. உடனே வரைந்து காண்பித்தார் என்று எழுதியிருந்தார். ரொம்ப டேலன்டட் பெர்சன்.

    பதிலளிநீக்கு
  10. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  11. டீ ஷர்ட்டும் இல்லாமல் என்றால் ,இழப்பதற்க்கு ஒன்றுமில்லை என்று தலைப்பு வைத்திருக்கலாம் :)

    பதிலளிநீக்கு
  12. காலம்பர வந்துட்டுப் போயிட்டேனேனு திரும்பி வந்து பார்த்தா! யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா! எம்புட்டுக் கதைங்க! எம்புட்டுக் கருத்துங்க! புட்டி நீர், புட்டி நீர்ங்கறாங்களே என்ன விஷயம்னு ஒண்ணுமே பிரியலையா? அப்புறமாப் பார்த்தாக்கச் சுட்டி கொடுத்திருக்கார். அங்கே போய்ப் பார்த்துட்டு பயந்து ஓடியே வந்துட்டேன்! :(

    பதிலளிநீக்கு
  13. அந்த தம்பி என்ன செய்யுறாப்ல

    பதிலளிநீக்கு
  14. தமிழ்மணத்துல ஓட்டு போடலாம்ன்னு போனேன். நீங்க ஏற்கனவே ஓட்டு போட்டுட்டீங்க. நான் பார்த்தேன்னு பிக்பாஸ் ஜூலி மாதிரி பொய் சொல்லுது. இப்ப நான் ஓவியா மாதிரி வெளில போய்ட்டு அப்பாலிக்கா வரேன்

    பதிலளிநீக்கு
  15. நெல்லை செம..கதைகள்.....நான் ஸ்ரீராம் கிட்ட அந்தப் ப்படத்தைப் போட்டு கதை எழுதச் சொல்லுங்கன்னு... சொல்லலாம்னு நினைச்சு....நான் கதை யோசிச்சும் வைச்சேன்...ஒருவேளை....அவர் சொன்னால் என்று....அதில் கிட்டத்தட்ட உங்கள் முதல் கதைக் கரு தான் என்னுடையதும்....அதில் ஒருபபார்ட்டாக மூன்றாவதும்.....

    ரொம்ப நல்லாருக்கு நெல்லை....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாவது என்று தவராகச் சொல்லிட்டேன்.முதலுடன் இரண்டாவது கரு ஒரு பார்ட்டாக உட்படுத்தி...

      கீதா

      நீக்கு
  16. இரட்டையர் கதை மிகவும் ரசித்தேன் வாசகர்களின் கற்பனைத் திறன் அறிந்தேன் உணர்வுகள் மூலம்

    பதிலளிநீக்கு
  17. Mark Twain-இன் கருக்களை வைத்துக்கொண்டு நிறைய எழுதலாம்; அவர் அப்பேற்பட்ட படைப்பாளிதான்.

    அது சரி, சிறுகதைப்போட்டி சம்பந்தமான விளம்பரம் எதில் வந்தது? நீங்கள் போட்டிருக்கும் படத்தில் /விளம்பரத்தில், கதை அனுப்பவேண்டிய முகவரி வெட்டப்பட்டுவிட்டதே! ’எங்கள் Blog-ற்கே அனுப்பிவிடவேண்டியதுதானா ?

    பதிலளிநீக்கு
  18. 1) தண்ணீரில் மூழ்கி - எந்தத் தண்ணீரில்?
    2) மனைவி மைண்ட் வாய்ஸ் - பேப்பர் மட்டும் படிக்கத் தெரியுது, ஆடித் தள்ளுபடியில சாரி வாங்கிக் கொடுக்கணும்னு தெரியுதா?
    3) இந்த கமேன்ட்டைச் சொன்னவர் நம்ம பாலகணேஷ் ஐயாவைப் போலவே இருக்காரே? ;)
    4) ஊஞ்சல் மாதிரிதான் தெரியுது.
    5) சிறுகதைப் போட்டி பார்த்தேன். எழுதனும்னு ஆசையா இருக்கு.ஆனா (பேக் கிரவுண்டில் சிப்பி இருக்கு பாடல் ஒலிக்கிறது) :)

    பதிலளிநீக்கு
  19. வாங்க கீதாக்கா.. அப்புறமா நீங்க வந்து சொன்னதுக்கு அப்புறமா பதில் சொல்றேன்!

    பதிலளிநீக்கு
  20. சொல்லமறந்த கதையா கீதாக்கா!

    பதிலளிநீக்கு
  21. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  22. வாங்க துரை செல்வராஜு ஸார்.. ஹா... ஹா... ஹா... கிழமா? மனதுக்கு என்றும் வயதாவதில்லை ஸார்!

    பதிலளிநீக்கு
  23. வாங்க துளசி - கீதா... போட்டுத் தாக்கிட்டீங்க. முதல் ஆளா எல்லாவற்றுக்கும் பதில் சொல்லியிருக்கீங்க. உங்க கிட்ட ஆச்சர்யம் என்னன்னா இத்தனையையும் நீங்க துளஸிஜிக்கு போன்ல படிச்சுக் காட்டணும் இல்லே? அவர் என்ன செய்கிறார் (செய்தார்) என்று லாஸ்ட்ல சொல்றேன் என்ன?!! ஜெ ஓவியத்துக்கு சீதை நினைவே வரக்கூடாது என்று குறிப்பு எழுதியிருக்கலாமோ....!!

    சிறுகதைப் போட்டி.. உங்களுக்கெல்லாம் எங்கள் பிளாக் வெற்றி பெற வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறது. மூட் இல்லாமல் இருந்திருக்கக் கூடியவர்களை சிறுகதை எழுதவைத்து ' எழுதும் மூடு'க்குக் கொண்டு வந்திருக்கிறோம்!!!

    சுத்தமான குடிநீர் என்பதே மாயைதானோ!

    பதிலளிநீக்கு
  24. வாங்க நெல்லை. அவர் என்ன செய்தார்னு கடேசில சொல்றேன் இன்னா? ஜெ ஓவியம் உங்களுக்குத் பிடிக்கும் என்று முன்னர் சொல்லியிருப்பது நினைவில் இருந்தது. பதிவில் இதைச் சேர்க்கும்போது உங்களை நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  25. வாங்க கில்லர்ஜி.. எப்போதாவது ஓரிருமுறைதான் உங்களிடமிருந்து கொஞ்ச விளக்கமான பதில் கிடைக்கும். இன்று அந்தத் திருநாள்! தன்யனானேன்.

    கவிதை பற்றிய பாராட்டுக்கு நன்றி. ஜெ படம் பற்றிய உங்கள் கருத்து 100 சதவிகிதம் சரி. அவள் கண்களில் கண்ணீர் தெரியும்!

    டி ஷர்ட் இல்லாமல்... என்ன வில்லத்தனம் என்கிற வரிக்கு அந்தப்படத்தை வெளியிடவில்லை என்று சொல்கிறீர்களா என்று அபுரி!

    அவர்களென்ன செய்கிறார்களென்று கடைசியில் சொல்கிறேன் என்ன?

    பதிலளிநீக்கு
  26. வாங்க ராமலக்ஷ்மி. குழப்ப சீதை! ஹா... ஹா... ஹா... அந்தப் புதிரில்லாத புதிருக்கு விடை... கடோசில சொல்றேனே...

    பதிலளிநீக்கு
  27. மீள் வருகைக்கு நன்றி நெல்லை. கதை எழுத சட் சட்டென கரு நிறைய உண்டாக்கி விடுவீர்கள் போலேருக்கே! ஸூப்பர். எல்லாமே அருமை. படம் சொல்லும் ஒரு பொதுவான உணர்வைத் சொன்னாலே கூடப் போதும். நீங்கள் நிறைய விளக்கமாகவே சொல்லியிருக்கிறீர்கள். தொப்பியைக் கழற்றுகிறேன்! உங்களுக்கோர் செய்தி. ஜெ வின் பழைய படங்கள் அவ்வப்போது வெளிவரும் - உங்களுக்காகவே!

    பதிலளிநீக்கு
  28. நன்றி பகவான் ஜி. இப்போதெல்லாம் உங்களிடமிருந்து தம வோட்டு வருவதில்லை போல!!!!!

    பதிலளிநீக்கு
  29. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாக்கா.

    பதிலளிநீக்கு
  30. வாங்க கீதா ரெங்கன். படத்துக்கு கதை எழுதச் சொல்லி நான் இங்கு கேட்கவில்லை. ஆனால் நீங்கள் விருப்பப்பட்டு எழுதி அனுப்பினால் 'நம்ம ஏரியா'ல வெளியிடத் தயார்! தினமணி போட்டிக்கும் ஒரு பயிற்சியாக இருக்கும்!!!

    பதிலளிநீக்கு
  31. வாங்க ஜி எம் பி ஸார்.. சில வாசகர்கள் வருகைப்பதிவை மட்டும் அறிவித்துச் செல்கிறார்கள். சில வாசகர்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொள்கிறார்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வாங்க ஏகாந்தன் ஸார்... உங்களிடமிருந்து இன்னும் ஓரிரு வரிகள் எதிர்பார்த்தேன்!! ஓகே, ஓகே!! நீனால் சொன்னபிறகுதான் முகவரி படத்தில் இடம் பெறவில்லை என்பதை பார்த்தேன். இதோ... இப்போது முகவரியை தனியாகவே இணைத்து விட்டேன் - உங்களுக்கு நன்றியுடன்.

    பதிலளிநீக்கு
  33. வாங்க ஆவி...

    எந்தத் தண்ணீரில்? சீ.. குறும்பு... சாதா குளிக்கிற தண்ணிதான்! குடிக்கிற தண்ணி இல்லே!!

    பேப்பர் மட்டும் படிக்கத் தெரியுது... இதுவரைக்கும் ஓகே... இரண்டாவது வரி தேவையில்லை!

    பாலகணேஷ் சொன்ன கமெண்ட்டா அது?

    ஊஞ்சல் இல்லை. அது என்னவென்றால்...

    எல்லோரும் கவனியுங்கள்... பதில் சொல்லப் போறேன்... பதில் சொல்லப் போறேன்... சொல்லப் போறேன்...

    மனிதர்களுக்கு ஈ சி ஜி பார்ப்பது போல முப்பது வருடங்களுக்கு மேல் வயதான கட்டடங்களுக்கு (கட்டடமா, கட்டிடமா நெல்லை, கீதா ரெங்கன்?) அதன் உறுதியை செக் செய்யும் சோதனை. முப்பதுக்குக் கீழே ரீடிங் காண்பிக்கக் கூடாதாம்! இங்கு 35 இருந்தது.

    சிறுகதைப் போட்டியில் கலந்துக்கோங்க ஆவி.

    பதிலளிநீக்கு
  34. ஆஹா... சுவையான கதம்பம். நிறைய விஷயங்கள். ஓவியம் அழகு.....

    பதிலளிநீக்கு
  35. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  36. ஜெயராஜ் டி-ஷர்ட்டில் எழுதிய பல வாசகங்கள் ஞாபகமிருக்கின்றன. ஆனால், ‘எங்கள் பிளாக்’கில் எழுதினால், பெரிய பிரச்சினை வரும். :-)

    ஒரு முறை இது பெரிய சர்ச்சையாகி, ‘என்ன கொழுப்பு ‘ஜெ’-க்கு?’ என்று சில வாரங்கள் பஞ்சாயத்து நடந்ததாக ஞாபகம்.

    ஆனால், ஜெயராஜின் படங்களுக்காகவே, தொடர்கதைகள் படித்ததுண்டு என்பது மட்டும் உண்மை. :-)

    பதிலளிநீக்கு
  37. அழகான கதம்பம்! ஜெயராஜ் ஜோக்கும் கவிதையும் டாப் கிளாஸ்!

    பதிலளிநீக்கு
  38. #உங்களிடமிருந்து தம வோட்டு வருவதில்லை போல!!!!!#
    இது மூன்றாவது குழப்பமா ?செக் செய்யுங்கோ :)

    பதிலளிநீக்கு
  39. வாங்க சேட்டை... சர்ச்சை எனக்கும் லேசுபாசா நினைவிருக்கு! எனக்குக்கிடைத்த ஜெ டிஷர்ட் படங்கள் எடுத்துப்போட லாயக்கில்லாமல் இருந்தன! பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  40. நான் மிகவும் தாமதம். நிறைய பேர் அருமையான கதையை, கருத்தை சொல்லி விட்டார்கள்.
    கதை எழுதுவதாய் இப்போது சிந்தனை இல்லை, நிறைய எழுத்தாளர்கள் ஏமாந்து போய்விடுவார்களே ! (என்ற தங்கவேலு ஜோக் நினைவுக்கு வருது.)
    பதிவில் இடம்பெற்ற அனைத்தும் அருமை. கருத்திட்டவர்கள் பதில்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  41. /வாங்க ஜி எம் பி ஸார்.. சில வாசகர்கள் வருகைப்பதிவை மட்டும் அறிவித்துச் செல்கிறார்கள். சில வாசகர்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொள்கிறார்கள். நன்றி./ இதில் என்னை எதில் சேர்க்கிறீர்கள் ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  42. ஓவியர் ஜெயராஜ் பற்றி குமுதம் இணைப்புல கொஞ்ச நாள் முந்தி ஒரு கட்டுரை படிச்சேன், intersting note here as well. அதே அட்ரஸ் இல்லாத போட்டாவ பேஸ்புக்ல பாத்துட்டு "வட போச்சே"னு நினைச்சேன்,thanks for sharing address here

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!