புதன், 5 அக்டோபர், 2016

புதன் 161005

                   
சென்ற வாரப் புதிர்க் கேள்விகளுக்கு, 
முதல் கேள்விக்கு, முதலாவது சரியான பதில் அளித்தவர் மாதவன். கோல்டன் ரேஷியோ என்பது சரியான விடை. விடுபட்டுப்போன எண் ஒன்று என்று சொன்ன எல்லோருக்கும் பாராட்டுகள். 

இரண்டாவது கேள்வி, உண்மையான டாக்டர் பற்றி நான் கேட்ட போது, எனக்கு  நினைவுக்கு வந்தவர்கள் இரண்டு பேர். ராஜசேகர் மற்றும் மாத்ருபூதம். 

கௌதமி டாக்டர் இல்லை. 

பவர் ஸ்டார் போஸ்டல் டாக்டர் என்று நினைக்கின்றேன். சைனா ஸ்தாபனம் ஏதோ ஒன்றில், அக்குபன்ச்சர்  படிப்புப் படித்தவர் என்று விக்கிபீடியா சொல்கிறது. ஏதோ ஒருவகையில் டாக்டர் என்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்! 

மேலும் புதிய, பெயர்  தெரியாத   டாக்டர்களை  தில்லையகத்து  கீதா கூறியுள்ளார்.  

தேன்மழை படத்தில், உண்மையான (!) டாக்டர், போலி டாக்டர் 'சோ' வைப் பார்த்து, " நீங்க ஒரு டாக்டரா? என்ன படிச்சிருக்கீங்க? " என்று கேட்பார். சோ அதற்கு, "இதுவே தெரியலை (டாக்டர் ஆவதற்கு என்ன படிப்பார்கள் என்பது) நீங்க ஒரு டாக்டரா ?"  என்று கேட்பார். 

நான் ஒரு டாக்டர் இல்லை; பேஷண்ட். எனவே ..... சர்ஜரியை இங்கே நிறுத்திவிடுவோம். சமீப காலத்தில், வாசன் ஐ கேர், சங்கரா ஐ ஹாஸ்பிடல்  (பம்மல்) என்று கடந்த நான்கு ஐந்து நாட்களாக பல இடங்களுக்குச் சென்று, கண் டாக்டர்களை கன்சல்ட்  செய்துவருகின்றேன். ஏதாவது  தப்பா எழுதினா அவர்கள் என் முழியைத் தோண்டி எடுத்துவிடுவார்கள்!   

மூன்றாவது கேள்விக்கு, இதுவரை பதில் அளித்த யாருமே சரியான பதிலைக் கூறவில்லை. ஆரம்பத்தில் ஓரளவு சரியான பதிலை (54) கூறிய மாதவன் கூட பிறகு குழம்பிப் போய், தவறான பதில்களைக் கூறியுள்ளார். 

ஒவ்வொரு சீட்டிலும் எண் இரண்டு இடங்களில் இருக்கும் என்பது க்ளூ. 

==============

இந்த வாரத்துக் கேள்விகளைப் பார்ப்போம். 

ஒன்று : 

WHAT COMES _______________ ! 

இரண்டு : 

வட்ட வட்டச் சிங்கண்ணா ,
என்னை வந்து எழுப்பண்ணா ...  

யாரு அவரு? 

மூன்று. 

விட்டுப் போன   எண்  எது?  

                               7        1            7
                               4        7            4
                               6        #            7
                     

14 கருத்துகள்:

 1. 2. அலாரம் கடிகாரம்? 3. 2. எல்லா வரிசை கூட்டுத்தொகை 15

  பதிலளிநீக்கு
 2. //மூன்றாவது கேள்விக்கு, இதுவரை பதில் அளித்த யாருமே சரியான பதிலைக் கூறவில்லை. ஆரம்பத்தில் ஓரளவு சரியான பதிலை (54) கூறிய மாதவன் கூட பிறகு குழம்பிப் போய், தவறான பதில்களைக் கூறியுள்ளார். //

  Yes, I got confused even after reaching 54 (Confusion was made as 'Jack-J' and number '10' got mixed in my mind). Also, I completely forgot that the number is written twice in each card.

  Yes the answer must be 108, then.

  பதிலளிநீக்கு
 3. 1)
  (a) What comes 'Next'
  (b) 'What' comes first, while questioning/asking for something.

  2) Answered by our friend, 'நெல்லைத் தமிழன்'

  பதிலளிநீக்கு
 4. 1. அது கேள்வியாக இருந்தால் .அதுக்கு விடை நெக்ஸ்ட், ஃபர்ஸ்ட் செகன்ட் அப்படியும் கேட்கலாம்...

  2. அலாரம் கடிகாரம்

  3 2 கூட்டுத் தொகை ரோ என்று பார்க்கும் பொது 15...அப்படித்தான் அனுமானம் ஆனால் இது இல்லையோ என்றும் தோன்றுகிறது. அவ்வளவு ஈசியாகவா தந்துடப் போறீங்க..அதான்..

  கீதா

  பதிலளிநீக்கு
 5. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்.

  சென்ற புதிரின் விடைகளைப் பார்த்தேன். புதிரினை முன்னிடுகையில் போய்ப்பார்க்கிறேன்.

  பின்னூட்டங்கள் வழி விடைகளைப் பொருத்திப் பார்க்கவும் சாத்தியம் இருக்கிறது.

  பல்சுவைபதிவுகள் உங்கள் தளத்தை மேலுயர்த்துகின்றன.

  வாழ்த்துகள்.

  த ம 3

  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. மன்னிக்க .. வாக்குப் பட்டையைக் காணவில்லை :(

  பதிலளிநீக்கு
 8. சுவாரஸ்யமான புதிர்கள்! விடை 1. next 2. அலாரம் கடிகாரம், 3. 2

  பதிலளிநீக்கு
 9. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  புதிருக்கு நாமளும் டிரை செய்யலாமே...

  1. நெக்ஸ்ட்... (ஆனா இவ்வளவு சுலபமாவா இருக்கும்...???)
  2. அலாரம் (இது கன்பார்ம்... ஆனா இப்ப யாரும் கடிகாரம் வச்சிக்கிறதில்லை... மொபைல்தான்...)
  3. வரிசைப்படி பார்த்தால் கூட்டுத் தொகை 15 வருவதால் 2 விடையாக இருக்கலாம். (இப்படி பட்டுன்னு சொல்லுற மாதிரி இருக்காதே...)

  இதுவரைக்கும் உங்க போட்டிகளின் பார்வையாளனாய் இருந்தேன்... இன்னைக்கு சும்மா ஒரு டிரை....

  பதிலளிநீக்கு
 10. மூன்று)

  The simplest answer, I can see is '2'.

  4 times 7 (hence 4 and 7 are members)
  1 # of 6 and 1 (hence 6,1 are also members)
  4 appears twice. Hence
  2 # of 4. Thus 7,4,6,1,2
  This also satisfies
  1 # of 2

  If you don't understand, I shouldn't be blamed.

  பதிலளிநீக்கு
 11. எல்லோரும் பதில் சொல்லி இருக்கிறதைப்படிச்சுட்டுப் போய்க்கிறேன் இப்போ பங்கெடுக்க முடியலை! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!