சனி, 15 அக்டோபர், 2016

மாற்றுச்சாவி செய்து தருபவரின் நிபந்தனைகள்..1)  காட்டாற்று வெள்ளத்தை அணைபோட்டுத் திருப்பி உபயோகமாக உபயோகிக்கத் தெரியவேண்டும்.  பிச்சை எடுத்துத் திருடிக்கொண்டிருந்த சிறுவன் இன்று விஞ்ஞானி!  ரயில்வே க்ளெர்க் "டாடி" யின் சாதனை.
 
 2)  பெண் கல்வியின் முக்கியத்துவம்.  தான் கற்காவிட்டாலும், தங்கையைக் கல்வி கற்கவைக்கும் ஸாரா ஃபாத்திமா.
 
 3)  "இதுதாண்டா பொதுச்சேவை" என்று ஊருக்காக உழைக்கும் 'என்விரான்மென்டலிஸ்ட் பவுண்டேஷன் ஆப் இந்தியா' அமைப்பு நிறுவனர் அருண் கிருஷ்ண மூர்த்தி.
 4)  சிறிது பிசகினாலும் தவறான தொழில் ஆகிவிடக் கூடிய விஷயம்.  "வாகனங்களைப் பொறுத்தவரை, என்னை நாடி வரும் வாகன உரிமையாளரிடம், உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே, மாற்றுச் சாவி செய்து கொடுப்பேன். சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும், அருகில் உள்ள போலீஸாரிடம் தகவல் தெரிவித்துவிடுவேன். இதேபோல, வீட்டின் பூட்டைக் கொண்டுவருபவர்களிடமும், ரேஷன் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்ற பின்னரே, மாற்றுச் சாவி செய்து தருகிறேன். இந்தத் தொழிலில் நேர்மை இல்லாவிட்டால், குற்றவாளியாகிவிடுவதற்கான சாத்தியங்கள் அதிகம்....: என்கிறார் கடந்த 32 ஆண்டுகளாக மாற்றுச் சாவி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள அப்துல் அஜீஸ்(42). 

5)  மாதிரி உள்ளாட்சி.   குப்பையிலிருந்து கொட்டும் பணம்.  எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை எதிர்பார்த்து, அரசைக் குறை கூறாமல் புத்திசாலித்தனமாக செயல்படும் குருடம்பாளையம் உள்ளாட்சி.


6)  இந்த சேவை.. இனி மேலும் அதிகம் தேவை.  கல்லூரி பேராசிரியர் முதல் கட்டிடத் தொழிலாளர்கள் வரை இணைந்து, நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான பணிகளில் வாரத்தில் ஒருநாள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு களப்பணியாற்றி வருகின்றனர். மேலும், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தும் வருகின்றனர். 

7)   பஸ் ஊழியர்கள் கூறுகையில், 'எங்களது சம்பளத்தின் ஒரு தொகை மற்றும் ஊக்கத்தொகையை சேர்த்து, அதிகாரிகளின் அனுமதியோடு, பஸ்சை அழகுபடுத்தி உள்ளோம். தினமும், பஸ் ஸ்டாண்டில் பஸ்சை நிறுத்தியவுடன், சுத்தம் செய்கிறோம்; இவ்வாறு செய்வதால், வேலையில் ஒரு திருப்தி கிடைக்கிறது' என்றனர்.


அரசு பஸ், 'பளபள'வென காட்சியளிப்பதால், பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது; இந்த பஸ்சின் வருகைக்காக காத்திருப்போர் ஏராளம். அரசு பஸ்களை, பயணிகள் புறக்கணித்து வந்த நிலையில், ஓட்டுனர், நடத்துனர்களின் செயல்பாடு பாராட்டும் வகையில் இருக்கிறது. 
8)  இதில் வெளிப்படையானது தெரிகிற பாசிட்டிவ் செய்தி இந்த இளைஞனுக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்திருப்பது.  Sriram நோட் பண்ணிக்கோங்க! (என்று தகவல் தந்திருக்கும் மதுரை கிருஷ்ணமூர்த்தி ஸாருக்கு நன்றி.  கீழேயும் அவர் வரிகள்தான்)வெளிப்படையாக இல்லாவிட்டாலும் இன்னொரு பாசிட்டிவ் செய்தியும் இதில் இருக்கிறது.


சாராய வியாபாரி, ஜெபஊழியம் செய்கிறவன், அரசியல்வியாதி எல்லாம் கல்வித்தந்தைகளாகி பல்கலைக்கழகங்களும் நடத்திவருகிற தமிழ்நாட்டில் ஒரு முன்னாள் அரசியல்வாதி நடத்தி வருகிற இந்தக் கல்வி நிறுவனத்தில் மெய்யாலுமே இப்படி ஆராய்ச்சிகள் மேற்கொள்கின்ற அளவுக்குத் தரமான ஆய்வுக்கூடம், வழிகாட்ட ஆசிரியர்கள் என்றிருக்கிற கல்விக்கூடம் இருப்பது தான் அந்தப் பாசிட்டிவான செய்தி.

17 கருத்துகள்:

 1. அனைத்தும் அருமையான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. அனைவருமே வாழ்த்துக்குரியவர்கள்!
  மாற்றுச் சாவி என் அனுபவம் ...பிரபலமான கம்பெனி பூட்டுக்கு அடிசனல் சாவி தேவைப் பட்டது ,ஒரிஜினல் சாவியைக் கொடுத்து,போன்பேசி முடிப்பதற்குள் சாவி ரெடியாகி விட்டது !தொழில்நுட்பம் கண்டு வியந்தேன் :)

  பதிலளிநீக்கு
 3. years back these people who were engaged in giving ALTERNATE KEYS LOCKS were subjected to police torture when anti social elements had used these lock experts and got new ones..
  so as a precaution these people obtain credentials before their jibs...

  பதிலளிநீக்கு
 4. அபுதாபியில் மாற்றுச்சாவி செய்வது சாதாரண விடயம் காரணம் பேச்சலர் ப்ளாட்டில் வசிப்பவர்களுக்கு நிறைய தேவைப்படும்

  கார்ச்சாவி செய்வதற்கு கார்க் கம்பெனிகளை நாட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. அனைத்து செய்திகளும் மிக நல்ல செய்திகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  உங்களுக்கும் பாராட்டுக்கள் கண்ணில் பட்ட நல்ல செய்திகளை எடுத்து வழங்கியதற்கு.

  பதிலளிநீக்கு
 6. அனைத்து செய்திகளும் மிக நல்ல செய்திகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  உங்களுக்கும் பாராட்டுக்கள் கண்ணில் பட்ட நல்ல செய்திகளை எடுத்து வழங்கியதற்கு.

  பதிலளிநீக்கு
 7. இந்தச் செய்திகளை எல்லாம் படிக்கும் போது சத்தமில்லாமல் உழைக்கும் இவர்களில் பலரை நாம் கண்டுகொள்வதே இல்லை. எதற்கு எதிர்மறையாகவே எண்ணுகிறோம்

  பதிலளிநீக்கு
 8. நம்பிக்கை தரும் அருமையான செய்திகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. நீர்நிலைகளைச் சுத்தம் செய்து களப்பணியாற்றும் தமிழன் பசுமைக்கரங்கள் பணி போற்றுதற்குரியது. எந்தத் தொழில் செய்தாலும் அதில் நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கும் மாற்றுச்சாவி கடை அப்துல் அஜீஸ் என்னைக் கவர்ந்த பாசிட்டிவ் செய்தி. நன்றி ஸ்ரீராம்!

  பதிலளிநீக்கு
 10. மாற்று சாவி செய்பவர்களுக்கு அரசாங்கமே இந்த நிபந்தனையை விதிக்க வேண்டும்.
  அதே போல ரப்பர் ஸ்டாம்ப் செய்வதிலும் சில நடைமுறைகள் உள்ளது.

  பதிலளிநீக்கு
 11. மாற்று சாவி செய்பவர்களுக்கு அரசாங்கமே இந்த நிபந்தனையை விதிக்க வேண்டும்.
  அதே போல ரப்பர் ஸ்டாம்ப் செய்வதிலும் சில நடைமுறைகள் உள்ளது.

  பதிலளிநீக்கு
 12. எல்லாம் அருமையான செய்திகள்...
  பேருந்து எங்கூரு.... இந்த விவரம் முன்னரே அறிந்திருந்தேன்....

  பதிலளிநீக்கு
 13. முன்மாதிரி முன்னோடிகளை
  பின்பற்றினால் பின்நாள் நம்மவர்கள்
  நன்மை அடைவார்களே!

  பதிலளிநீக்கு
 14. மாற்றுச்சாவி நல்ல முறை!இது போன்று அரசாங்கமே நிபந்தனைகள் விதிக்க வேண்டும். நாங்கள் மாற்றுச் சாவி பல செய்து வாங்கியுள்ளோம்.

  ப்ரசாந்த் மற்றும் வி ஐ டி அருமை!! மனமார்ந்த வாழ்த்துகள்!

  பேருந்து பற்றிய செய்தி வெங்கட்ஜி தளத்திலும் வாசித்தோம்..

  அனைத்துமே அருமையான செய்திகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!