புதன், 19 அக்டோபர், 2016

புதன் 161019

சென்ற ஐந்தாம் தேதி புதிருக்கான விடைகளை எழுத, பன்னிரெண்டாம் தேதி கணினி முன்பு உட்கார்ந்தேன்.  

அப்போ  ஒரு  மொபைல் அழைப்பு. 

"சார்! சென்ற வாரப் புதிருக்கான விடைகளை வெளியிடப் போகிறீர்களா? "

"ஆமாம்" 

"இருங்க சார்.  இரண்டாம் கேள்விக்கு மட்டும் பதில் யோசித்துக் கொண்டிருக்கேன். இப்போ பதில் சொல்லிடுவேன். கொஞ்சம் கழித்து, பதில் வெளியிடுங்கள் சார். "

ஓ கே என்று சொல்லி எழுந்து சி எல் சி ரோடு, ஜி எஸ் டி ரோடு, நியூ காலனி என்று சுற்றிவிட்டு, ஒருமணி நேரம் கழித்து வந்து, கணினி முன்பு உட்கார்ந்தவுடன், அதே கால், அதே விண்ணப்பம். 

இந்தத் தடவை வீட்டுக்குள்ளேயே சில சுற்றுகள் சுற்றி வந்து, பல் துலக்கி, பாத்திரம் தேய்த்து .... என்றெல்லாம் பொழுதைக் கழித்துவிட்டு, வந்து , க மு அ ........   அ கா -----  அ வி. 

காபி நேரம். 

அ கா  அ  வி. 

சாப்பாட்டு நேரம். 

க மு உ . அ கா அ வி! 

மாலை. 

பக்கத்தில் உள்ள சுந்தரவல்லி ஸ்கூலில் தேசிய  கீதம் பாடுகிறார்கள். மரியாதையாக நிற்கிறேன். 

"........  ஜெயஹி  .....   ஜெயஹி .......   ஜெயஹி ..........    ஜெய ஜெய ஜெய ஹி!"  

அவங்க சரியா பாடி, எனக்குதான் அப்படி கேட்குதா - அல்லது  அதுதான்  சரியான உச்சரிப்பா என்று குழம்பிக் கொண்டிருக்கும் பொழுது, மீண்டும் அழைப்பு.

"சார் கண்டுபிடிச்சுட்டேன், கண்டுபிடிச்சுட்டேன். "

"வெரி  குட்! என்ன விடை?"

"நாந்தான் சார். " 

"யோவ்! என்ன கிண்டலா?"

"சார் இன்றைக்கு நான் போன் செய்த போதெல்லாம் என்ன செய்தீர்கள்? 

" கணினி முன்பு உட்கார்ந்த  நான், எழுந்து போய் சில சில வேலைகளை செய்துவிட்டு வந்தேன்." 

" என் தம்பி பேரு சிங்காரம். அவனை எல்லோரும் செல்லமா சிங்கு ன்னு கூப்பிடுவோம். அவனுடைய நண்பர்கள் எல்லோரும் என்னை சிங்கண்ணா என்றுதான் கூப்பிடுவார்கள். நான் எங்கள் ஊரில் இரண்டாவது வட்டத்தில் வசிக்கிறேன். எனவே, நாந்தான் 'வட்ட வட்ட சிங்கண்ணா' --- போன் செய்து அப்பப்ப உங்களை கணினி முன்பு உட்காரவிடாமல் எழுப்பிக்கொண்டே இருந்தேன். "

பல்லைக்கடித்துக் கொண்டு, பதிவு எதுவும்  போடாமல்  விட்டுவிட்டேன். 

இப்போ  சொல்லிடறேன். இரண்டாவது  கேள்வி, ஒரு விடுகதை. அதற்கு விடை, "மூட்டைப்பூச்சி."  

ஆளை விடுங்கப்பா! அலாரம் கடிகாரம் எல்லாம் 'வந்து' எழுப்பாது. சும்மா கூவும் அம்புட்டுதான்!  

What comes .......... !  

Watch the exclamatory symbol at end. So, answer is not a question word. 

Any answer which is like "What comes, Goes!" etc are right answers. 

மூன்றாவது கேள்விக்கான சரியான விடை எண் இரண்டு. சிக்கலான பதிலாக இருக்குமோ என்று எல்லோரையும் குழப்ப, சுலப கேள்வி. 

==========================================

இந்த வாரப் புதிருக்கு,  எங்கள் வாசகர்கள்   கேள்விகள் (மட்டும்) எழுதுங்கள். எங்கள் ஆசிரியர்களுக்கு விடை தெரியாத கேள்வி கேட்பவருக்கு சிறப்புப் பரிசு உண்டு. 
(கேட்பவருக்கு, விடை தெரிந்திருக்கவேண்டும் -- ஜாக்கிரதை!)   

மீண்டும் சந்திப்போம்.  

===================================================



13 கருத்துகள்:

  1. நாங்கல்லாம், நக்கீரனோட ஆப்போசிட். கேள்விக்கு பதில் சொல்லித்தான் பழக்கம். கேள்வி கேக்கத் தெரியாது..

    பதிலளிநீக்கு
  2. அச்சச்சோ! மூட்டை பூச்சி என்பதை யூகித்தேன், ஆனால் எழுதாமல் விட்டு விட்டேனே..சே!சே!சே!

    பதிலளிநீக்கு
  3. அச்சச்சோ! மூட்டை பூச்சி என்பதை யூகித்தேன், ஆனால் எழுதாமல் விட்டு விட்டேனே..சே!சே!சே!

    பதிலளிநீக்கு
  4. அது மூட்டைப் பூச்சியா? கஷ்டம், கடிகாரம்னு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
  5. கேள்வி - ஒரு நாடகத்தைப் படமாக எடுத்தபோது நாடகத்தில் ஆண் நடித்த பாத்திரத்தில், பெண் நடித்தார். ஒரே கதையை இரண்டாம் முறை படமாக எடுத்தபோது, முதல் படத்தில் ஆண் நடித்த பாத்திரத்தில் பெண் நடித்தார். யார் யார், என்ன படங்கள்?

    பதிலளிநீக்கு
  6. நெல்லைத் தமிழன்!
    யோசிக்கிறோம்.
    கேள்விக்கு நன்றி.
    எங்கள் ஆசிரியர்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு வாரம் அவகாசம் கொடுங்க!

    பதிலளிநீக்கு
  7. எம்.எஸ். நாரதராக நடித்த சாவித்திரியா? அடுத்த படம் உத்தமபுத்திரனோ? பி.யு.சின்னப்பா நடிச்சு முதலிலும் பின்னர் ஜிவாஜி நடிச்சு இரண்டாம் முறையும் வந்ததுனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. கீதா மேடம் இப்போ எங்கள் ஆசிரியர் குழுவில் சேர்ந்தாச்சா? (கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்). (வடிவேலு வாய்சில்) சொல்லவேயில்ல....

    நீங்க ஒரு கேள்வி கேளுங்க மேடம்.. நாம (படிக்கிறவங்க) ஆசிரியர் குழுவைக் கேள்வி கேட்கணும். சேம் சைட் Goal அடிக்கப் பார்க்கிறீங்களே....

    பதிலளிநீக்கு
  10. ஹிஹிஹி, அப்போ நான் சொன்ன விடையெல்லாம் சரியா? ஓகே, ஓகே!:)))))

    பதிலளிநீக்கு
  11. ம்ம்ம்.... அடுத்த புதிரே/புதனே வந்த பிறகு படிக்கிறேன்! :)

    பதிலளிநீக்கு
  12. நான் ஆசிரியனாக இருந்தாலும், கேள்விகள் கேட்டே பழகியிருந்தாலும், இங்கே கேள்வி கேட்கத் தெரியலையே.ஹிஹிஹி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!