திங்கள், 17 அக்டோபர், 2016

"திங்க" க்கிழமை 16117 :: பீட்ஸா தோசை


பாஸுக்கு உடல் நலமில்லை. 


அவசரத்துக்கு ஒரு காலை டிஃபன் செய்ய வேண்டியிருந்த ஒரு சனிக்கிழமை காலைப் பொழுது.

பாஸுக்கு தோசையில் இந்த நகாசு வேலை செய்ய எல்லாம் பொறுமை கிடையாது.  நித்தியப்படி சமயலிலேயே நொந்து போயிருப்பவர்.  காலை ஐந்து மணிக்கு ஒருநாளைப்போல எழுந்து, வேலைக்குச் செல்லும் மகன்களுக்கு தினசரி மதிய உணவு, தண்ணீர் வரை கட்டிக் கொடுக்கும் அலுப்பு உண்டு.
திருமணம் செய்துவைத்து விட்டால் சரியாகி விடும், உனக்கும் ரெஸ்ட் கிடைக்கும் என்பேன்.  "பொண்ணு சுலபத்துல கிடைக்கணுமே,  அப்படிக் கிடைச்சாலும் அவளுக்கும் சேர்த்து நான்தான் சமைத்து அனுப்ப வேண்டியிருக்கும்" என்பார்.

 எனவே அவரை எதிர்பார்ப்பதில்லை.மகன்களுக்கு தோசை சுவையாகச் செய்ய இந்த வாரம் நான் செய்த மிகப் பழைய முறை தோசை ஒன்று இங்கே...

வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், நறுக்கிக் கொண்டு  தோசையை சற்றே - சற்றுதான் - தடிமனாக வார்த்துக்கொண்டு, அதன்மேல் இவற்றை அலங்காரமாகத் தூவிக் கொண்டு, அதன்மேலே தோசை மிளகாய்ப்பொடியையும் தூவிக்கொண்டு, தோசைத் திருப்பியால் லேசாக அமுக்கிவிட்டு, அடுப்பை சிம்மில் வைத்திருந்து, (தேவைப்பட்டால் மேலே ஒரு தட்டைப் போட்டுக் கூட மூடலாம்) புரட்டிப் போடாமல், தோசையை அப்படியே எடுத்து மடித்துத் தட்டில் போட்டு விடலாம்!    (நடுவில் மட்டும் கறுப்பாகப் போகாமலிருக்க, தோசைத் திருப்பியைக் கொஞ்ச நேரத்துக்குப்பிறகு தோசைக்கு கீழே நடுவில் வைத்து எடுப்பது வழக்கம்).

Image result for curry masala images


என் பெரியவன் அதில் மசாலாப் பொடியும் இரண்டு சிட்டிகை தூவச் சொல்லிச் சாப்பிடுவான்.


 Image result for carrot, potato images         
கேரட், உருளைக்கிழங்கு என்று கையில் கிடைத்ததை எல்லாம் போடுவதும் உண்டு.

இதிலேயே தேங்காய்த் துருவல் தூவி, இறக்கும் சமயம் சர்க்கரை தூவியும் இறக்குவதுண்டு!  அது ஸ்வீட் தோசை! 
இரண்டு படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்....

51 கருத்துகள்:

 1. கற்பனைக் குதிரையைக் கட்டவிழ்த்து ஓடவிட்டால் பலவகை புதுப்புது சுவைகளைக் கண்டு ருசிக்கலாம்.....!!! ஆனால் ஒன்று... அடிப்படை நளபாக ஞானம் தேவை...!! அப்புறம் என்ன...??? புகுந்து விளையாடுங்க....!!!!!

  பதிலளிநீக்கு
 2. கற்பனைக் குதிரையைக் கட்டவிழ்த்து ஓடவிட்டால் பலவகை புதுப்புது சுவைகளைக் கண்டு ருசிக்கலாம்.....!!! ஆனால் ஒன்று... அடிப்படை நளபாக ஞானம் தேவை...!! அப்புறம் என்ன...??? புகுந்து விளையாடுங்க....!!!!!

  பதிலளிநீக்கு
 3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெஜ் ஊத்தப்பம் உங்களுக்குப் பிட்சா தோசையா? :P :P :P :P :P காய்களைக் கொஞ்சம் blanching or frying முறையில் செய்து தோசை மாவில் கலந்தே செய்து பாருங்கள். இன்னும் சேர்ந்து கொண்டு நன்றாக இருக்கும். இட்லியைக் கூட இம்மாதிரிக் காய்கறிக்கலவையைச் சேர்த்துச் செய்யலாம். ஒரு கரண்டி இட்லி மாவு விடணும் எனில் அரைக்கரண்டி விட்டுவிட்டுப் பின்னர் காய்கறிக்கலவையைப் போட்டு அதன் மேல் இன்னொரு அரைக்கரண்டி இட்லிமாவு விடணும். பின்னர் இட்லியை நான்கு துண்டுகளாக்கிக் கொண்டு நல்லெண்ணெயில் மிளகாய்ப் பொடிதூவி அதில் பிரட்டலாம். அல்லது கடுகு, ஜீரகம், சோம்பு தாளித்துக் கொண்டு அதில் மி.பொடி, உப்பு லேசாகச் சேர்த்துப் பிரட்டிக் கொண்டு எலுமிச்சை, சர்க்கரை கலந்த சாறை மேலே விட்டுக் கொண்டு சாப்பிடலாம். டோக்ளா மாதிரி நினைச்சுக்கலாம். :)))))

  பதிலளிநீக்கு
 4. ஹா ஹா.... காக்கா முட்டை ஞாபகம் வந்துவிட்டது... :)

  பதிலளிநீக்கு
 5. இதன்மேல் கொஞ்சம் சீஸூம் தூவி விட்டிருந்தால் அசல் பிட்சா தோசைதான். :) சூப்பர் நளபாகம்.. நானும் கீதா மேடம் சொல்வது போல் மாவோடு காய்கறிகளைக் கலந்து சுடுவேன். பயமில்லாமல் திருப்பிப்போட்டு எடுக்கமுடியும்.

  பதிலளிநீக்கு
 6. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெஜ் ஊத்தப்பம் உங்களுக்குப் பிட்சா தோசையா? பதிவை படித்த பின் நான் போட நினைத்த கருத்தை அப்படியே கீதா அவர்கள் சொல்லி சென்று இருக்கிறார்கள் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 7. அருமையாக இருக்கு. பீட்ஸா வான்னு சந்தேகமா இருக்கு:) இருந்தாலும் பாஸ் உடல் நலம் பாருங்கோ. பாவம். கல்யாணம் தானா நடக்கும். தனிக்குடித்தனம் வைத்து விடங்கள. ஓயவா ஜாலியா வெளியூர் போகலாம்:)

  பதிலளிநீக்கு
 8. இது நல்லது !ஒரிஜினல் பீட்சாவுக்கு சேர்க்கையே சரியில்லையே :)

  பதிலளிநீக்கு
 9. இந்தமாதிரி தோசை பண்ணினால் அருமையாக இருக்கும். ஒண்ணோ ரெண்டோ போதும். வெறும் வெங்காய ஊத்தப்பத்தைவிட குடமிளகாய், மெல்லிசா சீவின கேரட் போட்டால், நல்ல நிறத்துடன் தோசை இருக்கும். அதுல மசாலாப் பொடியா? இட்லி மிளகாய்ப்பொடி நல்லா இருக்கும். மசாலாப்பொடி.. எனக்குப் பிடிக்காது.

  இதுல, தேங்காய், ஜீனி போட்டு ஸ்வீட் தோசையா? அது எப்படி நல்லா இருக்கும்? கீதா சாம்பசிவம் மேடமும் ஒண்ணும் சொல்லலை? இதுலவேற அவங்க, டோக்ளா மாதிரி நினைச்சுக்கறதுக்கு ஒரு செய்முறை கொடுத்திருக்காங்க.. இதெல்லாம் நல்லா இருக்குமா? இல்லை எங்களை எல்லாம் சோதனை எலி என்று நினைத்து இந்த வெரைட்டிலாம் எழுதுறீங்களா?

  பதிலளிநீக்கு
 10. மாவை மெல்லிசாகப் பரத்திக்கொண்டு நடுவில் கொஞ்சம் தேங்காய்ப்பூவையும் பரத்த வேண்டும். பரத்திய தேங்காப்பூவின் மேல் இன்னும் கொஞ்சம் மாவை அளவாக ஊற்றி மூட வேண்டும். சற்றே நெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கப்படும் தேங்காய்த்தோசை நாஞ்சில் நாட்டில் மிகவும் பிரபலம்.

  பதிலளிநீக்கு
 11. நெல்லைத் தமிழன், நான் அடிக்கடி தித்திப்பு தோசை செய்கிறேன். சர்க்கரை சேர்ப்பதில்லை. தேங்காய்த் துருவலும், வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து. ஆகவே தான் எதுவும் சொல்லலை! இட்லியில் நான் செய்யச் சொன்ன மாதிரியில் நிறையப் பேர் செய்து பார்த்துவிட்டு நல்லா இருக்குனு சொல்லி இருக்காங்க. இது மட்டுமில்லாமல் காஞ்சீபுரம் இட்லிக்கு அரைக்கிற மாவில் வெறும் மிளகு, ஜீரகம், சுக்கு மட்டும் போடாமல் தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறிச் சேர்த்து, வேர்க்கடலை, பட்டாணி போட்டு காரட் துருவிப் போட்டுச் செய்வேன். அதுவும் போணியாகும்! :) என்ன ஒரு விஷயம்னா தொட்டுக்க வகையா வக்கணையா இருக்கணும். வெறும் பாசிப்பருப்பை கால் கிலோ எடுத்துக் கொண்டு ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு அரைத்து அதில் மேலே சொன்னாப்போல் காய்கறிகள் கலந்து இஞ்சி பச்சை மிளகாய், கருகப்பிலை கொத்துமல்லி சேர்த்து தோசையாகவோ, இட்லியாகவே வார்த்து எடுக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்லதொரு ஆகாரம். நம்ம கிட்ட இந்த மாதிரி நிறையக் கருத்துகள் கொட்டிக் கிடக்கு! கதை எழுதக் கற்பனை வளமே இல்லை! ஆனால் சமையலில் புதுசு புதுசாக் கண்டுபிடிப்பேன். :) பன் வீட்டிலேயே செய்த காலமும் ஒன்று உண்டு! :) பிட்சா பேஸ் வீட்டிலேயே செய்து பிட்சாவும் செய்திருக்கேன். கடைகளில் விற்கும் பிட்சா பேஸிலும் செய்து பார்த்திருக்கேன். :)

  பதிலளிநீக்கு
 12. சாந்தி மாரியப்பன் சொன்ன மாதிரி தோசையை மதுரையில் ரோட்டோரக் கடைகளில் செய்து கொடுப்பாங்க. பார்க்கலாம். அமைதிச் சாரல் சொன்னாப்போலயும் செய்வாங்க. ஆப்பச்சட்டியில் ஆப்பம் மாதிரி ஊற்றி விட்டு அதன் மேலே தேங்காய்ப் பூவைத் தூவியும் கொடுப்பாங்க! சாப்பிட்டதில்லை! பார்த்திருக்கேன். நாங்க இருந்த வீட்டு வாசலிலேயே ஒரு பாட்டியோட கடை இருந்தது! :)

  பதிலளிநீக்கு
 13. தோசை அருமை. எப்படி செய்தாலும் ருசித்து சாப்பிட ஆட்கள் இருந்தால் போதும் நளபாகம் தானே வரும் வாழக்கை துணையின் கஷ்டத்தில் கை கொடுக்கும் உங்கள் குணத்தை பாராட்டியே ஆக வேண்டும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 14. கீதா மேடம்.. என் கேள்வி தோசை மாவுல, தேங்காய், ஜீனி அல்லது வெல்லம் சேர்த்து திதிப்பு தோசை பண்ணுகிறீர்களா என்று.. நான் மைதா அல்லது கோதுமை மாவில், கொஞ்சம் ரவை, அரிசி மாவு சேர்த்து, ஏலக்காய், சுட வைத்த வெல்ல ஜலம் கலந்து திதிப்பு தோசை பண்ணுவேன். (அது பண்ணினா, பேலன்ஸ் பண்ண உப்பு தோசையும், அதாவது மைதா/கோதுமை மாவு தோசையும் பண்ணுவேன்). தோசைமாவுலயும் செய்ய முடியும் என்றால், எனக்கு அது நியூஸ். ஆம் என்றால் செய்துபார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. காய்களைப் பொடியாக நறுக்கி 2நிமிஷங்கள் மைக்ரோவேவில் சூடு செய்து விட்டு தோசையைச் சிறிது திக்கானதாகப் பரப்பிவிட்டு அதன்மேல் சீஸ் துருவலுடன் காய்களைப் பரப்பி,
  மிளகுப்பொடி,உரிகானோ முதலியவைகளையும் தூவி சுற்றிலும் அதிகமாக எண்ணெய் விட்டு நிதான தீயில் மூடி ஒன்றினால் மூடி வார்த்தால்
  தோசை பிட்ஸாமாதிரி இருக்கும். இற்று நீர் வடியும் ஓசையின்போது மூடியைத் திறந்து விடலாம். கரகரப்பாக மேலே மிருதுவாக, கலர்அழகாக இருக்கும். இருக்கவே இருக்கிறது மிளகாய்ப்பொடி. சீஸ் இல்லாவிட்டால் பிட்ஸா எப்படி பெயர் வரும். காய்கறி மஸாலா ஊத்தப்பம்தான். இந்த நவராத்ரியில் வந்தவர்களுக்கு காஞ்சீபுரம் இட்லியில் காரட் துருவிப் போட்ட இட்லிதான் ,விசேஷமெனு. வடை,ஜெவ்வரிசிக் கிச்சடி,சுண்டல்,லட்டு,மைசூர்பாகு என ஸ்வீட்டுகள்,ஸாம்பார்,சட்னி என அயல் நாட்டு நவராத்திரி குடும்பங்களுடன். ஸம்பந்தமில்லாத ஸமாசாரமா? கீதாவின் இட்லி நவராத்ரியில் இங்கு சாப்பிட்டுவிட்டோம் என்பதற்கான அறிமுக உரை. நான் மட்டும் ஏதாவது எழுதாமலிருக்க முடியுமா? உங்களின் தோசையும் ஆஹா அருமை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 16. கீதா அவர்களுக்கு நீங்கள் சமையலில் அடிக்கடி புதுமையாக ஏதாவது செய்து பார்ப்பீர்கள் என சொல்லி இருக்கிறீர்கள் அதை சாப்பிடும் உங்கள் வீட்டில் உள்ளவர்களக்கு ஏதாவது ஸ்பெஷலாக ஹெல்த் இன்சூரண்ஸ் எடுத்து இருக்கிறீர்களா அல்லது உங்கள் வீட்டில் உங்களை தவிர மற்ற எல்லோரும் என்னை போல அப்பாவிகளா?

  பதிலளிநீக்கு
 17. புகைப்படம் நல்லாத்தான் இருக்கு சாப்பிடத்தான் இயவில்லை

  பதிலளிநீக்கு
 18. @அவர்கள் உண்மைகள், ஹிஹிஹி,பண்ணி முடிக்கும் வரை வாயே திறக்கமாட்டோமுல்ல! அப்புறமா வீட்டிலிருந்து எல்லோரும் சொல்லிக்காமல் ஹோட்டலுக்குப் போயிட்டாங்கன்னா? நம்ம சமையல் போணி ஆகவேண்டாமா? :)))))))

  பதிலளிநீக்கு
 19. ஜோக்கைத் தவிர்த்து உண்மையாக, என்ன நடக்கும் எனில் முதலிலேயே குழந்தைகளுக்குச் சொல்லி வைப்பேன். அவங்க அப்பாவிடம் சொல்லுவாங்க, அம்மா புதுசாச் செய்யப் போறாங்கனு! பயந்து கொண்டே தான் சாப்பிட வருவார்கள். பல சமயங்களிலும் தேர்வில் பாஸாகி விடுவேன். பல சமயங்களில் டிஸ்டிங்க்‌ஷன் கூடக் கிடைத்திருக்கிறது. பின்னர் அவங்களுக்கே பழகி விட்டது! :))))

  பதிலளிநீக்கு
 20. //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெஜ் ஊத்தப்பம் உங்களுக்குப் பிட்சா தோசையா?//

  கீதாக்கா... பழைய பெயரிலேயே சொன்னால் சுவாரஸ்யம் இருக்காது. புதிதாக ஒரு பெயர் சொன்னால் சுவாரஸ்யம் கூடும். மார்க்கெட்டிங் தந்திரம்!! அன்று இதைச் செய்ததும் பார்க்க பீட்ஸா போல இருக்கிறது என்று கமெண்ட் வந்ததும், அதையே தலைப்பாக்கி விட்டேன்! சீஸ் எல்லாம் நான் உபயோகித்ததே இல்லை! இட்லி மாவில் செய்வதும் பரிசீலனையில் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 21. வாங்க கார்த்திக் சரவணன்... என் சின்னவன் இதைத்தான் சொன்னான்! (காக்கா முட்டை ஞாபகம் வருகிறது)

  பதிலளிநீக்கு
 22. வாங்க கீத மஞ்சரி. நான் சீஸ்லாம் உபயோகித்ததே இல்லை! மாவோடு காய்களைக் கலந்து செய்வது வேறு ருசி. இப்படித் தூவுவது அதைவிட நன்றாக இருக்கிறதாக எங்கள் அனுபவம் சொல்கிறது!

  பதிலளிநீக்கு
 23. வாங்க மதுரைத் தமிழன். மேலே கீதாக்காவுக்கு சொல்லியிருக்கற பதில்தான் உங்களுக்கும்!!!

  பதிலளிநீக்கு
 24. வாங்க வல்லிம்மா.. நீங்களும் கோமதி அரசு மேடமும் மட்டும்தான் நான் சொல்லி இருப்பதில் பாஸ் உடல்நிலை பற்றிய கவலை வெளியிட்டிருக்கிறீர்கள்!! நன்றிம்மா...

  பதிலளிநீக்கு
 25. வாங்க பகவான்ஜி... மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க!!

  பதிலளிநீக்கு
 26. வாங்க நெல்லைத்தமிழன். விதம் விதமா காம்பினேஷன் நம்ம கற்பனைக்கேத்தபடி சேர்த்துக்கலாம். மசாலா ரசிப்பவர்களுக்கு அதையும் சேர்க்கலாம். இல்லை என்றால் வேண்டாம் என்று விட்டு விடலாம்.

  பதிலளிநீக்கு
 27. நெல்லைத்தமிழன். ஆமாம்.. ஸ்வீட் தோசைதான்! ஆனால் மாவில் கலப்பது அல்ல. கீதாக்கா பழைய மாடல்! இது புதுசாக்கும்! (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லக்கூடாது கீதாக்கா) இதில் தேங்காயத் துருவல் தூவி, எண்ணெய்க்கு பதிலாக நெய் சுற்றி ஊற்றி, இறக்கும் சமயம் சர்க்கரை தூவி இறக்கிச் சாப்பிட்டுதான் பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 28. வாங்க சாந்தி மாரியப்பன். தேங்காயத் தூவல் மேல் மறுபடி மாவு எல்லாம் ஊற்றுவதில்லை நான். ஆனால் அப்படியும் ஒருமுறை செய்து விடுவோம்!

  பதிலளிநீக்கு
 29. வாங்க கீதாக்கா... பாசிப்பருப்பு தோசை ஒருதரம் செய்து பார்க்கிறேன். ஆனால் மாவிலேயே வெங்காயம், காய் சேர்ப்பதில் எனக்கு பாதி உடன்பாடுதான்!

  பதிலளிநீக்கு
 30. கீதாக்கா... மதுரைக்காரர்கள் எப்பவுமே, எல்லாத்துலயுமே செம ரசனைக்காரர்கள். ரோட்டோரம் அமர்ந்து ஆவி பறக்க இட்லியை அவர்கள் இறக்கும் அழகைப் பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றும். இட்லியாகட்டும், கல்தோசை ஆகட்டும்.. நான்கு இட்லிகளுக்கு மிளகாய்ச் சட்னி, வெங்காயப் சட்னி, தேங்காய்ச சட்னி, மிளகாய்ப்பொடி என்று விதம் விதமாக ஸைட் டிஷ் வைத்து நம்மை இன்னும் இன்னும் சாப்பிடாத தூண்டுவார்கள்.

  கோரிப்பாளையத்தில் ரோட்டோரம் கடை வைத்திருந்த பாட்டி இன்னும் கடை வைக்கிறாரா என்று பகவான்ஜிதான் சொல்ல வேண்டும்!

  பதிலளிநீக்கு
 31. வாங்க கோமதி அரசு மேடம். பாராட்டுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 32. வாங்க நெல்லைத்தமிழன். என்ன நம்ப மாட்டேன் என்கிறீர்கள்!!

  செய்து பார்த்துச் சாப்பிட்டுவிட்டுதான் நான் சொல்கிறேன். நாங்கள் அடிக்கடி செய்வோம். வெறும் தோசை வார்த்தால் "மொட்டை தோசை" என்று கிண்டல் செய்யுமளவு வந்து விட்டது எங்கள் வீட்டில். நாங்கள் கோதுமை மாவில் கார தோசை, வெல்ல தோசை இரண்டுமே செய்வோம். ஆனால் இது மாவில் கலக்கும் பிஸினஸ் இல்லை!

  பதிலளிநீக்கு
 33. காமாட்சிம்மா... வாங்க! 'சீஸ்'லாம் நான் யூஸ் பண்ணினதில்லை!! நீங்க ஊத்தப்பம்னு சொன்னா அவ்வளவா லட்சியம் செய்ய மாட்டாங்க.. இது மாதிரி பெயர் வைத்தால் லைக்ஸ் குவிகிறது! நிற, சுவை காம்பினேஷன் மாற்றி மாற்றி செய்வோம். மேலே பொடி தூவிய பிறகு இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் மேலே ஊற்றுவேன்!

  பதிலளிநீக்கு
 34. மதுரைத்தமிழன்.. புதிதாக எது செய்தாலும் அதன் வாசனையும், தோற்றமும் நன்றாக இருந்தாலே முக்கால் பாஸ்! நம்ம வீட்டில் பயப்பட மாட்டார்கள். ஆவலுடன் காத்திருப்பார்கள்!

  பதிலளிநீக்கு
 35. வாங்க கில்லர்ஜி.. அங்கே செய்து சாப்பிட்டால்தான் உண்டு!

  பதிலளிநீக்கு
 36. ஸ்ரீராம் ஸாரி தாமதமாகிவிட்டது உங்கள் கிச்சனுக்கு வருவதற்கு. சரி தென்னிந்திய பிசா. அதனால் ஊசிப்போயிருக்காது!!!!! இதில் கொஞ்சம் சீசும், வெள்ளை மிளகுப்பொடியும் தூவி தக்காளி சாசும் போட்டால் தென்னிந்தியப் பிசா. உங்களைப் போல் மிளகாய்ப்பொடியும் தூவிச் செய்வதுண்டு வெரும் வெங்காயம் போட்டு மிளகாய்ப்பொடி தூவியும் செய்வதுண்டு. மாவுடன் காய்களை எல்லாம் கலக்கிச் செய்வதும் உண்டு. ஒரு பாதியில் பட்டரும், மறு பாதியில் ஜாமும் தடவி சிறுகுழந்தைகளுக்குக் கொடுத்ததுண்டு. அதிலும் தேங்காய் தூவி - தேங்காய் பன் போல...கொடுத்ததுண்டு. அப்புற, குட்டி தோசை செய்து வெஜிட்டபிள் சான்ட் விச் போல, ப்ரெட் பட்டர் ஜாம் போல செய்யலாம். சீஸ் சான்ட் விச் போல செய்யலாம்.....புதினா சட்னி அல்லதுகொத்தமல்லிச் சட்னி ஒரு தோசையில் தடவி, மற்றொன்றில் உருளைக் கறி (இதை எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்..) வைத்து ஸ்டஃப் செய்து சாப்பிடலாம்...இப்படி மனதில் தோன்றுவது எல்லாம்...ஹிஹிஹி.

  கீதா

  பதிலளிநீக்கு
 37. //அவளுக்கும் சேர்த்து நான்தான் சமைத்து அனுப்ப வேண்டியிருக்கும்//

  இந்தக் காலத்துல இதென்னவோ நெசந்தான்!! எனக்கும் வரப்போறவங்களை நெனச்சா பக்பக்னு இருக்கு!! கல்யாணம் ஆன கையோட் தனிக்குடித்தனம் வச்சிடறதுதான் ஒரே தீர்வு போல...

  (எல்லாரும் தோசையா, பீட்ஸாவான்னு பட்டிமன்றம் நடத்துறாங்க... நான் எதையோ பேசிகிட்டிருக்கேன்.... அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு!! ஹூம்....)

  பதிலளிநீக்கு
 38. தொடரட்டும் பரிசோதனைகள்! :) தோசையில் தான் எத்தனை வகை. வடக்கே தோசையை பாடாய் படுத்துகிறார்கள் - ஐஸ்க்ரீம் தோசை கூட விற்கிறது!

  பதிலளிநீக்கு
 39. நானும் உங்களைப் போல ஊத்தப்பத்தை பிஸ்சா தோசை என்று சொல்லித்தான் என் குழந்தைகளுக்கு அவர்கள் குழந்தைகளாய் இருந்த பொழுது கொடுக்க ஆரம்பித்தேன், பிறகு அந்தப் பெயரே நிலைத்து விட்டது.

  உங்கள் மனைவியின் கணிப்பு சரிதான். வரப்போகும் மருமகள்களுக்கும் அவர்தான் சமைக்க வேண்டி இருக்கும்.

  பதிலளிநீக்கு
 40. நான் போட்ட காமென்ட் conflicting error என்று வந்து காணாமல் போய்விட்டதே! உங்களுக்கு வந்ததா?

  பதிலளிநீக்கு
 41. மறுபடியும் எழுத வேண்டும் போலிருக்கிறது.

  பாஸிற்கு நீங்கள் உதவுவது ரொம்பவும் பிடித்திருக்கிறது. எங்கள் வீட்டிலும் செய்வார் ஆனால் எல்லாவற்றையும் தயார் செய்து கொடுத்தால்!
  உங்கள் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் மிகவும் சுவாரஸ்யம்!
  உங்கள் பாஸ் சொன்னதை இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன்!
  சமையல் செய்துவிடுவேன். புதிதாக பரிசோதனைகள் மாட்டுப்பெண் தான் செய்வாள். அந்த வழிக்கு நான் போவதில்லை. செய்து செய்து அலுத்துப் போய்விட்டது என்றும் சொல்லலாம்!

  பதிலளிநீக்கு
 42. தாமதமானால் என்ன? வருகைக்கு நன்றி கீதா ரெங்கன். நாமதான் ஆராய்ச்சி செய்து தள்ளிடுவோமே...!!

  பதிலளிநீக்கு
 43. வாங்க ஹுஸைனம்மா... நீங்கள் சொல்லியிருப்பதும் சரிதான். பீட்ஸா தோசை பற்றித்தான் பேச வேண்டுமா என்ன? உரையாடல் சுவாரஸ்யமாக நடந்தால் சரிதான்! இதுவும் இதே பதிவிற்கு சம்பந்தப்பட்டதுதானே!

  பதிலளிநீக்கு
 44. வாங்க வெங்கட்! ஐஸ்க்ரீம் தோசை... கொடுமை! அதை பற்றி நீங்கள் சொல்லியிருந்ததை படித்த நினைவு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 45. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன்.. ஆனால் இது ஊத்தப்பம் இல்லை, இல்லை, இல்லை! மெலிதான தோசைதான்! சற்றேதான் தடிமன்! மனைவியின் கணிப்பு சரிதான் என்று சொல்லியிருப்பதிலிருந்து அங்கும் ஏதோ அனுபவம்......?!!!

  பதிலளிநீக்கு
 46. வாங்க ரஞ்சனி மேடம்...

  //நான் போட்ட காமென்ட் conflicting error என்று வந்து காணாமல் போய்விட்டதே! உங்களுக்கு வந்ததா? //

  இல்லை.

  பதிலளிநீக்கு
 47. மறுபடியும் வாங்க ரஞ்சனி மேடம்.. பாஸ் சொல்வது போல என்றால் மருமகளுக்கும் சேர்த்து சமைக்கிறீர்கள்... சரிதானே?

  // செய்து செய்து அலுத்துப் போய்விட்டது என்றும் சொல்லலாம்! //

  நீங்கள் எல்லாம் அனுபவசத்தார்கள். பெரியவர்கள். நான் சின்னப்ப பையன். அதுதான்! இல்லையா!

  //உங்கள் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் மிகவும் சுவாரஸ்யம்!//

  நன்றி.. எல்லாப்பெருமையும் உங்களுக்கே (வாசகர்களுக்கே)

  பதிலளிநீக்கு
 48. ஆமாம் ஸ்ரீ. நீங்களும் அதில் நம்ம கட்சிதானே!! எல்லாம் ஒரு ஆர்வம்தான்...மொனோடொனி இல்லாமல் சுவாரஸ்யமாக...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!