திங்கள், 20 பிப்ரவரி, 2017

"திங்க"க்கிழமை 170220 :: ஆலு பனீர் கிரேவி


கிச்சன் பக்கம் சென்று நாளாகி விட்டது.  ஆயிரத்தில் ஒருவன் எம் ஜி ஆர் மாதிரி நேற்று என் பாஸிடம் "பூங்கொடி.. இரு..  சற்று விளையாடி விட்டு வருகிறேன்" என்று கிச்சனைப் பார்க்கக் கிளம்பியதும் பாஸ் என் பக்கம் திரும்பி புன்னகைக்கு பதில் பீதிப்பார்வை பார்த்தார்.



கத்தரிக்காய் - முருங்கைக்காய்  -  இதை என் மாமியார் ஏனோ "முருங்கிக்காய்" என்பார்! -  வெந்தயக்குழம்பு செய்து (ப்பூ....  இதெல்லாம் ஜுஜுபி!  ஆனால் அதை பற்றி நாம் கதைக்கப் போவதில்லை சகோதரி அதிரா..) ) ஓரமாக வைத்து விட்டு...  கறிக்கு (கரமது, பொரியல் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்) என்ன செய்யலாம் என்று பார்த்தேன்.  சேனைக்கிழங்கு கண்ணில் பட்டது.  வேண்டாம்.  ஒரே ஒரு கத்தரிக்காய் (மீதி) இருந்தது.  வேண்டாம்.  கண்ணில் பட்ட முட்டைக்கோஸையும் பன்னீர்செல்வத்தை ஒதுக்கிய 122 எம் எல் ஏக்கள் போல விலக்கினேன். 


உருளைக்கிழங்கை வைத்து விளையாட முடிவு செய்தேன்!  ஆம், விளையாட்டுத்தான்.  கைக்கு கிடைத்ததை எல்லாம் எடுத்து ஒரு குழந்தை விளையாடுமே..  அது போல அடுத்த கொஞ்ச நேரத்துக்கு நானும் ஒரு குழந்தையாகிப் போனேன்.


அரசியலில்தான் பன்னீரைக் கொண்டு வர முடியவில்லை.  சமையலில் பனீரைக் கொண்டு வருவோம் என்று முடிவு செய்தேன்.




நடுத்தர அளவில் ஐந்து உருளைக் கிழங்கை வேகவைத்து எடுத்துத் தோலுரித்துக்கொண்டு..






குடைமிளகாயை நறுக்கி எடுத்துக்கொண்டு,







நான்காக வெட்டிய பெரிய வெங்காயத்தைப் பிரித்து -  ஆம், பிரித்து -  இதழ்களை பிரித்து எடுத்துக்கொண்டு...






பனீரை நறுக்கி எடுத்துக்கொண்டு..




இரண்டு தக்காளி, நான்கு பச்சைமிளகாயை அரை ஸ்பூன் பெருஞ்சீரகம், கொஞ்சூண்டு பட்டையுடன் வதக்கி எடுத்துக் கொண்டு,துருவிய அரைமூடித்  (சிறிய மூடி!) தேங்காயுடன் கொஞ்சம் கொத்துமல்லி சேர்த்து  மிக்சியில் அரைத்துத் தனியாக வைத்துக்கொண்டு.....


தோல் நீக்கிய உருளையில் உப்பு, காரப்பொடி, பெருங்காயம், தூவிக் கொண்டு,





குடை மிளகாயையும், வெங்காயத்தையும் தனித்தனியாக உப்பு கொஞ்சம் சேர்த்து வதக்கி எடுத்துக் கொண்டு.. (தனித்தனியாக உப்பு சேர்ப்பதால் மொத்தமாக எவ்வளவு போடுவது என்று வேண்டாமே என்று இந்தமுறை இப்படி)


காரத்தில் ஊறிய உருளையை வாணலியிலிட்டுத் திருப்பி,





குடைமிளகாய் சேர்த்து...




வெங்காயம் சேர்த்து...  இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்து..

             


அரைத்த கலவையைச் சேர்த்து...


பனீரைப் போட்டுத் திருப்பி..   செஷ்வான் பொடியை  தூவி, திருப்பி...



வெளியில் வந்தால் மேஜையில் பாஸ் காலை வாங்கி வைத்திருந்த ப்ரெட்!  விடலாமா?   எடுத்தேன்.  வாணலியில் இட்டு புரட்டினேன்.   




இறக்கி வைத்து விட்டு வெளியில் வந்தால் கண்ணில் பட்ட கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கி அதன்மேல் தூவி..



வறுத்த ப்ரெட் துண்டங்களை போட்டுப் புரட்டி..




சாப்பிடலாம்.  ரெடி!  





"இதைச் செய்த நேரத்துக்கு நான் ஒரு ஃபுல் சமையலே செய்திருப்பேன்" என்று பாஸ் இடது தாவாங்கட்டையையையும் இடது தோள்பட்டையையும்  இணைத்துக் கொண்டதை நான் இங்கு சொல்லப்போவதில்லை.  


பெரியவன் கருத்து  :  "குடைமிளகாயை இன்னும் சிறிதாக நறுக்கி, இன்னும் கொஞ்சம் வதக்கி இருக்கலாம்!"   சற்றுப் பெரிய அளவில் இருந்ததால் அது வதங்கவில்லை  என்னும் முடிவுக்கு வந்துவிட்டான் போல! இருக்கலாம்.  திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


சிறியவன் கருத்து  :  "ஓக்க்க்க்கே....  ஆனால் ஒன்று சொல்லணும்... இது மாதிரி சாப்பிட்டதில்லை.  பனீர் செமையாய் சேர்ந்திருக்கு!"


அண்ணன் மகன் கருத்து  :  "நல்லாயிருக்கு.  இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாம். "  ஆமாம்....  தக்காளியும், தேங்காய்த்துருவலும் காரத்தைக் குறைத்திருக்கும். 


கணினியை வைத்தியம்  இளைஞரின் கருத்து :  "இதுவரை இதுமாதிரி சாப்பிட்டதில்லை ஸார்.  நன்றாக இருக்கு"  செய்முறையைச் சொல்லியிருந்தால் தெறித்து ஓடியிருப்பார்.  அப்புறம் என் கணினி எப்படிச் சரியாகும்!  எனவே நன்றி கூறிப் புன்னகைத்து விட்டு மௌனமானேன்.


நன்றி...  மீண்டும் ஒரு திங்கறகிழமையில் உங்களைச் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடை பெறுவது..  உங்கள்...





40 கருத்துகள்:

  1. ஹய்ய்யா நாந்தான் இன்று முதலில் இதை பார்த்தவன் ஹீஹீ

    பதிலளிநீக்கு
  2. சரி சரி பதிவை படிச்சுட்டுவந்துடுறேன் ஹீஹீ

    பதிலளிநீக்கு
  3. அரசியலில் கொண்டுவரஇயலா விட்டாலும்
    சமையலில் பன்னீரை கொண்டுவந்து வெற்றி பெற வைத்துவிட்டீர்கள்
    வாழ்த்துக்கள் நண்பரே
    தம 1

    பதிலளிநீக்கு
  4. உங்களின் செய்முறையை சொன்ன விதம் மிகவும் கவர்ந்தது... ஒவ்வொரு நிலையிலும் படம் எடுத்து, அதை பதிவாக போடுவதும்... உங்கள் ரசனைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. பனீருக்கு வெற்றி! :)))) ஆனால் எனக்கென்னமோ இந்தக் கலவைக்கு, குடைமிளகாய் சேர்ப்பது அவ்வளவாப் பிடிக்காது. மற்றபடி போனால் போறதுனு ஓகே சொல்லிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. இந்தக் கலவை நல்லாத்தான் இருக்கும் போலிருக்கு. நீங்கள் சாப்பிட்டீர்களா? பண்ணுவதற்கு எவ்வளவு நேரமாகியது?

    பதிலளிநீக்கு
  7. குடைமிளகாய் கிழங்கு நல்ல காம்பினேஷன் ஆனால் குடமிளகாய் அதிகம் வேக கூடாது

    பதிலளிநீக்கு
  8. அருமையான சமையல் குறிப்பு. வறுபடாத பிரட் துண்டங்கள் பபோல் உள்ளதே என்று நினைக்கும் போதே பின்னால் வந்த
    வறுத்த ப்ரெட் துண்டங்களை போட்டுப் புரட்டி. என்பதை படித்து விட்டேன். குடுமத்தினரின் கருத்துக்கள் தான் எத்தனைவிதம்!

    கணினியை வைத்தியம் இளைஞரின் கருத்து : "இதுவரை இதுமாதிரி சாப்பிட்டதில்லை ஸார். நன்றாக இருக்கு"
    உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்து இருக்குமே புது முயற்சி வெற்றி பெற்றதற்கு.

    பதிலளிநீக்கு
  9. முதலில் இத்தனை அழகான ஒரு ரெசிப்பியை (படத்தைப் பார்த்துத்தான்) க்ரேவி என்று தலைப்பிட்டதற்குக் கண்டனம் தெரிவிக்க வந்தால் வந்தால் ஹிஹி நல்ல காலம் கறி என்று அடைப்புக்குள் சொல்லித் தப்பித்தீர்கள்!!

    குடைமிளகாய் முழுவதும் வேகாமல் இருப்பதுதான் ரெசிப்பிக்குச் சிறப்பே சுவையும் கூட!. செஃப் எல்லாம் அப்படித்தான் செய்வது எனவே நீங்கள் ??!!!யெஸ் அதே!! குடையின் கீழ் உருளை என்றால் நல்ல சுவை. அதே போல் குடையின் கீழ் பன்னீர் என்றால் சாரி சாரி பனீர் என்றால் அதுவும் நல்ல சுவை..எனவே இந்த மூன்றும் இணைந்த கலவை சூப்பர். தேங்காய் அரைத்துக் க்ரேவியாகவும் கறியாகவும் நான் செய்வதை நீங்கள் செய்து அதில் நான் இதுவரை சேர்க்காத ப்ரெட்டை வறுத்துச் சேர்த்து ஆஹா!!! செய்துடணும்!!! உங்கள் பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷன் சூப்பர்!!! நானும் கிச்சனில் ஆராய வேண்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. Rasithu padithen!! Romba naal kazithu sirikka vachathukku thanks!! Ellarudaiya commentsaiyum potta ungal nermaiyai paarattugiren!
    Seriously, thanks!!

    பதிலளிநீக்கு
  11. அந்த இதழ் பிரித்த வெங்காயம் மற்றும் அளவா நறுக்கின காய்கள் அழகா இருக்கு :)மிக ரசித்து ரசித்து சமைச்சிருக்கீங்க :)
    அந்த செஷ்வான் அன்ட் ப்ரெட் இல்லாம செய்து பார்க்கிறேன் நானும் ..இந்த குடை மிளகா பாதி வெந்திருந்ததான் சுவை ..அதிகம் வெந்தால் ஸ்லைட்டா கசக்கும் ..
    ஒரு சமையலுக்கு எத்தனை feedback :) உங்க வீட்ல
    இவங்க குட்டீஸ் கிட்ட சர்டிபிகேட் வாங்கறது பெரிய விஷயம் :)

    பதிலளிநீக்கு
  12. இன்று என்ன சமையலோ எனும் ஆசையில்ல்ல்ல்ல் ஓடிவந்தேன்ன்ன்... குறிப்புப் பார்த்து பல்லு விறைச்சுப் போயிட்டேன்ன்ன்ன்:)...

    தலைப்பு ///ஆலு பன்னீர் கிரேவி////
    ஆனா முடிவு உப்புமா:).. நோஓஓஓஓஓஒ இது தலைப்பை மாத்தோணும் இல்லையெனில் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பேன்ன்ன். நம்மை யாரும் பேய்க்காட்ட முடியாதூஊ:)

    பதிலளிநீக்கு
  13. ///சிறியவன் கருத்து : "ஓக்க்க்க்கே.... ஆனால் ஒன்று சொல்லணும்... இது மாதிரி சாப்பிட்டதில்லை. பனீர் செமையாய் சேர்ந்திருக்கு!"///

    ஹா ஹா ஹா இதுதான் ரொப் கொமெண்ட்:).. என் 3டி ஓவியம் போல:)... இதுவரை யாரும் சமைச்சதில்ல இப்படி.

    சுவை பற்றி நேக்குத் தெரியல்ல, ஆனா கண்ணுக்கு சூப்பரா இருக்கு.. இதுக்குத்தான் சொல்வாங்க.. அழகைக் கண்டு மயங்கிடக்கூடா என.., ஆனா தெரியல்ல இது அழகாகவும் சுவையாகவும் இருந்ததோ என:).

    பதிலளிநீக்கு
  14. ///எடுத்துக் கொண்டு..///
    சமைக்க ஆரம்பிச்ச நேரம் தொடங்கி.. முடிவுவரை எத்தனையோ பேரைக் கொண்ட குற்றத்துக்காகவும்... :) முக்கியமா எங்கட பன்னீரைக்:) [ஐ மீன் [tofu:)] கொண்ட குற்றத்துக்காகவும், திங்கட் கிழமை சமையல் குறிப்பு ஓனர்.. பிரபல செஃப் சகோதரர் ஸ்ரீராமை உடனடியாகப் பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜராகும்படி.. எங்கட குயின் அம்மம்மா அழைப்பு விட்டிருக்கிறா:)..

    அதுசரி கடேஎசிவரைக்கும் உங்க பாஸ்:) இதைச் சாப்பிட்டுப் பார்க்கவே இல்லப்போல:) பாவம் அப்பாவி ஆண்கொயந்தைகள் மட்டுமேதான் லாபெலிகள்:)) ஹா ஹா ஹா:))...

    ஊசிக்குறிப்பு:-
    உங்கட மாமியும் என் கட்சியாக இருப்பதை அறிந்து மிக்க சந்தோசம்:))

    பதிலளிநீக்கு
  15. //அரைத்த கலவையைச் சேர்த்து...


    பனீரைப் போட்டுத் திருப்பி.. செஷ்வான் பொடியை தூவி, திருப்பி...//

    பாவம் :) மசாலலாம் போட்டு திருப்பிட்டீங்க :)

    பதிலளிநீக்கு
  16. Bread சேர்த்து செய்திருப்பது புதுமை. உருளையைக் காரத்தில் ஊற வைக்கும் முன் படமெடுக்க மறந்து விட்டீர்கள் போலும், ஒரே படம் இரண்டு தடவை ரிபீட் ஆகியுள்ளது :)! படிப்படியான படங்களுடன் குறிப்பு சூப்பர். சுவைத்தவர்களும் சூப்பர் என சொல்லி விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  17. மதுரைத்தமிழன்.... முதல் வருகைக்கு நன்றி. பதிவை இன்னுமா படித்து முடிக்கவில்லை?

    பதிலளிநீக்கு
  18. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். பன்னீர் கேட்டால் சந்தோஷப்படுவார்!

    பதிலளிநீக்கு
  19. நன்றி டிடி. பாராட்டுகள் மனத்தைக் குளிர்விக்கின்றன!

    பதிலளிநீக்கு
  20. வாங்க கீதாக்கா.. அப்படியெல்லாம் சொல்லப்படாது.. குடைமிளகாய்தான் இதில் ஸ்பெஷலாக்கும்! நிறத்திலும் சரி, சுவையிலும் சரி!

    பதிலளிநீக்கு
  21. வாங்க நெல்லை.. காய்களை நறுக்கும் நேரம், அதை வாணலியில் இட்டுப் புரட்டும் நேரம்! அவ்வளவுதான். நன்றாக இருந்தது என்று என் வாயாலேயே சொல்லிக்கொள்ள கூச்சமாக இருக்கிறது. நான் தன்னடக்கக் காரனாக்கும்.

    பதிலளிநீக்கு
  22. நன்றி மதுரைத்தமிழன். அது தெரிந்துதான் குடைமிளகாயை கம்மியாய் வேகவைத்தேன். மீள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க கோமதி அரசு மேடம்.. வறுத்த ப்ரெட் துண்டங்களை படமெடுக்க மறந்து விட்டேன். முதலில் எடுத்ததுதான் இருந்தது. அதைச் சேர்த்து விட்டேன். எல்லாம் தயாரான நிலையில் இருக்கும் கடைசிப் படத்தில் வறுபட்ட ப்ரெட் துண்டங்கள் தெரியும்! கணினி மருத்துவர் எங்களுக்குப் பழக்கமானவர்தான். முன்னரே என் சோதனைகளுக்கு அவர் ஆட்பட்டிருக்கிறார். சொல்லப்போனால் இந்தமுறை எனக்கு தஞ்சாவூர் குடைமிளகாய் வாங்கி வந்து தந்தவர் அவர்தான்!

    பதிலளிநீக்கு
  24. வாங்க கீதா ரெங்கன். தேங்காய் சேர்த்து அரைத்து விட்டதால் கிரேவி என்று சொன்னேன். ஆனால் அது கடைசியில் கெட்டியாகத்தான் இருந்தது. அதுவும் எவ்வளவு பொருட்களைத்தான் தாங்கும்! நன்றி பாராட்டுகளுக்கு!

    பதிலளிநீக்கு
  25. பதிவின் மெல்லிய நகைச்சுவையை ரசித்துச் சிரித்தமைக்கு மிக்க நன்றி மிடில்க்ளாஸ்மாதவி.

    பதிலளிநீக்கு
  26. நன்றி ஏஞ்சலின். காய் நறுக்குவதில் நானும் ஸ்பெஷலிஸ்ட்டாக்கும் கேட்டேளா! நான் சமைக்கும்போது யாராவது வந்து நறுக்கி, அரைத்துக் கொடுத்தால் பிடிக்காது. எல்லா வேலைகளையும் நானேதான் செய்து கொள்வேனாக்கும். குட்டீஸா? ரெண்டும், இலை, இல்லை, மூன்றும் படாஸ்!

    பதிலளிநீக்கு
  27. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  28. வாங்க அதிரா... பல்லு விறைக்குமளவுக்கு என்ன ஆச்சு? இதை உப்புமா என்று சொன்னதற்கு என் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூவம் நதிக்கரையினில் உண்ணாவிரதம் தொடங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. ஹலோ அதிரா.. பார்க்க மட்டும் இல்லை, சாப்பிடவும் நன்றாயிருந்ததாய் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  30. அப்புறம் அதிரா.. எங்கட பாஸும் அதைச் சுவை பார்த்தார்கள். என்ன, அவங்களுக்கு உருளைக்கிழங்கு உடம்புக்கு ஆகாது! அவ்வளவே!

    பதிலளிநீக்கு
  31. வாங்க ஏஞ்சலின்.. திரும்பி வந்திருக்கீங்க.. புரட்டிப் போட்டேன் என்று சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  32. வாங்க ராமலக்ஷ்மி.. உண்மைதான். காரம் போடுமுன் உருளையைப் படமெடுக்க மறந்து விட்டேன். தெரிந்தேதான் ரெண்டுமுறை ஒரே படத்தைப் போட்டு சமாளித்தேன். பெரியவன் டி எஸ் எல் ஆரில் படங்கள் எடுத்தான். ஆனால் டவுன்லோட் செய்ய தாமதமாக்கியதால் இதில் நான்கு படங்கள் மட்டும் அதிலிருந்து! எல்லாப் படங்களையும் அதிலிருந்து போட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  33. படங்கள் பிரமாதம்! சுவையும் அப்படித்தான் என்பது படங்களைப் பார்க்கும் பொழுதே தெரிகிறது. சமைத்து வைத்தால் பார்ப்பதற்கே நன்றாக இருக்க வேண்டும் என்பர் என் பாட்டி. பட்டாணியும் சேர்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  34. இளைய தலைமுறைக்குதான் இது ஜீரணிக்கும் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  35. இதனால் இங்கு வரும் பதிவர்களுக்கு தெரிவிப்பது என்றால் சண்டே ஸ்ரீராம் வீட்டிற்கு தீடீர் விஜயம் செய்தால் இப்படி பட்ட உணவை டேஸ்ட் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான்

    பதிலளிநீக்கு
  36. நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன். பட்டாணி கண்ணில் பட்டிருந்தால் அதையும் சேர்த்திருப்பேன். எனக்கும் சாப்பிட்டபின் 'அடடா பட்டாணியை மிஸ் பண்ணிவிட்டோமே' என்று தோன்றியதுதான்!

    பதிலளிநீக்கு
  37. நன்றி பகவான்ஜி. எல்லோருக்குமே ஜீரணம் ஆகும். கவலையில்லை.

    பதிலளிநீக்கு
  38. வாங்க மதுரைத்தமிழன்.... யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!