திங்கள், 2 அக்டோபர், 2017

"திங்க"க்கிழமை 171002 : கலவைக் காய்கறி மஞ்சூரியன் - காமாட்சி அம்மா ரெஸிப்பி.



கலவைக் காய்கறி மஞ்சூரியன்  




அன்புள்ள ஸ்ரீராமிற்கு அனேக ஆசிகள். 

நீங்கள் எப்போதோ திங்கக் கிழமைக்கு , ப்ளாகில் போடாதது ஏதாவது எழுதுங்கள் என்று கேட்டீர்கள்.  இது முன்பே எழுத ஆரம்பித்து இப்போது முடித்தது.   சற்று புதுமையாக இருக்க உத்தேசம்.  பாருங்கள் மஹாளயபக்ஷம் அதுவுமாக வெங்காய புராணமா?  ( அம்மா..  மன்னிக்கவும்.  இது மஹாளயபக்ஷம் முடிந்துதான் வெளியிட முடிந்தது! - ஸ்ரீராம் )

நான்   வயோதிகத்தின் பிடியில் இருப்பதால் சிலது தொடர்கதைகளாக இருக்கிறது உடல்நலம்.
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆசிகள். ( நன்றி.  உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா.. - ஸ்ரீராம் )

அன்புடன் காமாட்சி


===========================================================================


ஒன்றுமே செய்ய முடியாதபோது ஏதாவது செய்து எங்கள் பிளாகிற்கு
அனுப்பத் தோன்றினால் பாட்டி உனக்கு என்ன ஒத்தாசை வேண்டும் நான்
செய்கிறேன்! என்று ஆதரவுக்குரல் இரண்டு மூன்று முறை பேத்தி
என்னிடம் சொல்லியாயிற்று.


ஏன் என்ன தயக்கம்? போடமாட்டார்களா என்ன யோசனை என்று வேறு
கேட்க ஆரம்பிக்கவே நாம் தொடர்ந்து எழுத நினைத்தால் வரும் உதவிகளை ஏற்கத்தான் வேண்டும் என்று தீர்மானித்தேனே தவிர செயலிலிறங்க யோசனைதான். சொன்னது என் பேத்தி விலாஸினி. லுஸானில் கெமிகல் இன்ஜினீயரிங் படிக்கிராள். சனி ஞாயிறுகளில் வந்துவிட்டுப் போவாள்.

அவள் ஒருநாள் செய்த கலவை மஞ்சூரியனை மனது தேர்ந்தெடுத்தது.


ஸாதாரணமாக மஞ்சூரியனென்றால் காலிஃப்ளவர்தானே ஞாபகம் வரும்.
இது அதைச் சேர்க்காமலேயே செய்தது.


அதற்கு வேண்டிய காய்கறிகள் ஒரு தாம்பாளத்தில் சும்மா மாதிரிக்குதான்.

தட்டில் காய்கறி


வெங்காயம்,முட்டகோஸ்,காரட், காப்ஸிகம் சிகப்பு,பச்சை
வேண்டியவைகள் பொடியாக நறுக்கிய காரட்-- -1 கப்.அதேமாதிரி துருவலாக செய்து கொண்டாலும் ஸரி.  கோஸ்-- -ஒருகப். பெரிய வெங்காயம் தறுக்கியது ஒருகப்.  யாவும் மிஷின் இருந்து நறுக்கினால் சிறியதாக நறுக்கவரும்.

காய்கறி மிஷினில் கட்செய்தால்


இல்லாவிடின் கொப்பரைத் துருவலில் துருவிக் கொள்வதுதான் ஸரி.

காரட்,கோஸ் 


காரட்—ஒருகப், துருவல்தான்.


கேப்ஸிகம் சிகப்பு,பச்சை இவை இரண்டையும் நறுக்கியது ஒரு கப்
எடுத்துக் கொள்ளவும். இதைத் துருவினால் பாயஸமாக ஆகிவிடும்.

வெங்காயம்,கோஸ்,நறுக்கிய கேப்ஸிகம்,கேரட்,மிளகுப்பொடியுடன்


வெங்காயம் துருவியது-- -1கப்


மிளகுப்பொடி-- -- 1 டேபிள்ஸ்பூன்.


மைதா-- -- 6 டேபிள்ஸ்பூன்


கார்ன்ஃப்ளோர்—2 டேபிள்ஸ்பூன்


சாஸ் தயாரிக்க வேண்டிய பொருள்கள்


செய்வது மிகச்சுலபம்.  என்ன ஒன்று...   காய்கறிகள் ஓகே.  அந்த சாஸ்
வகைசெய்ய நான் எழுதுவதுதான் எல்லோர் வீட்டிலும் எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் மாற்றாக எதையாவது உபோகிக்கத் தெரிந்தவர்கள்தானே நீங்கள் யாவரும்!

ஸோயா சாஸ்-- -மூன்று டேபிள்ஸ்பூன்

சில்லிசாஸ்-- -- நான்கு டேபிள்ஸ்பூன்

டொமேடோ பியூரி-- -அரைகப்

வினிகர்-- -2 டீஸ்பூன்

பெரிய வெங்காயம்-- -- 3 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டு இதழ்-- -4. பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ருசிக்கு உப்பு

பச்சைமிளகாய்-- -2 பொடியாக நறுக்கியது

மிளகுப்பொடி-- -1 டேபிள்ஸ்பூன்.

பொரிக்க ,வதக்க என்று எல்லாவற்றிற்கும் வேண்டிய எண்ணெய்.



செய்முறை பார்க்கலாம் வாருங்கள்.

மிஷினில் கட்செய்தால் எப்படி பாருங்கள்.



எல்லாவற்றையும் அகலமான பாத்திரத்தில் போடவும்.
காரட்கோஸ் துண்டுகளுடன்.

எல்லாத் துண்டுகளுடன் மிளகுப் பொடி.

மைதாபோடுகிறேன்.



கார்ன் அதான் சோள மாவுடன்.




எல்லாம் சேர்த்துக் கலந்து சிறிது அழுத்தம் கொடுத்துப் பிசைந்து, ஒரு
டீ ஸ்பூன்உப்பு போட்டுக் கலக்கவும்.  அதிகம் போட்டால் நீர்க்கும். அழுத்திப் பிசையவும். தண்ணீர் அவசியமில்லை.  


காய்கறித்துருவலினுடைய சாற்றின் ஈரமே போதும். மாவு தண்ணீரை உறிந்து கொண்டு பதமான ஒரு கலவை தயார்.



திட்டமான உருண்டைகளாக உருட்டவும். தாம்பாளத்தில் உருண்டைகள்.


பொரிப்பதற்கு முன் 


பொரித்தபின் 




வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். உருட்டியவைகளை மிதமான
சூட்டில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். வேகும்போது லேசாக
அழுத்தம் கொடுக்காமல் திருப்பி விடவும்.  காய்கறிகள் அதனால் அதிகம்
கவனம் தேவை.  பொரித்தெடுத்தவைகள்.  எண்ணெய் ஸரியாகக்
காயாவிட்டாலும் உருண்டைகள் அதிகம் எண்ணெய் குடிக்கும் .




இப்போது மஞ்சூரியன் முக்கால்வாசி தயார்.  அடுத்து சாஸ் தயாரித்து
அதில் பிரட்ட வேண்டியது பாக்கி.



சற்று அகன்ற ஃபேனில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக்
காயவைத்து பூண்டை சற்று வதக்கவும். 

                                   

வெங்காயம்,பச்சைமிளகாய்சேர்த்து வதக்கவும்.  மிளகுப்பொடி சேர்க்கவும். வதங்கியதும், ஸோயா,சில்லிசாஸ், டொமேடோ பியூரி சேர்க்கவும்.




திரும்பவும் சாஸின் பதம் வரும்வரை கிளறவும். உப்பு சேர்த்து ருசி
பார்க்கவும். நிதானமாக பொரித்து வைத்திருக்கும் மஞ்சூரினைச் சேர்த்துப்
பிரட்டவும்.  gகாஸை அணைத்து விடவும்.  நிதானமாக எல்லா பாகமும்
சாஸில் நினையும்படி பிரட்டவும்.  ஸ்பிரிங் ஆனியன் தாள்களை நறுக்கி
அலங்கரிக்கவும்.  தட்டில் போட்டுக் கொடுக்கும் போது அரைஸ்பூன்
வினிகரைத் தெளித்துக் கொடுக்கவும்.  காரஸாரமான மஞ்சூரியன் ரெடி.







வாருங்கள் சாப்பிடலாம்.  இது அப்படியே சாப்பிடும்படியாக தயாரித்தது.
கிரேவியுடன் தயாரித்தால் மற்றவைகளுடனும் ஜோடிசேரும்.   பாருங்கள்
ருசி எப்படி என்று.!!!!!!!!!!!!!!

     



(அம்மா...  சுவையானரெஸிப்பி.  ஒருமுறை செய்து பார்க்கவேண்டும்.  முடிந்தவரை படங்களை அதனதன் இடத்தில் இணைத்திருக்கிறேன்! - ஸ்ரீராம் )


57 கருத்துகள்:

  1. ஆகா... அருமை...
    அந்த வினிகர் மட்டும் பிடிப்பதில்லை..
    மற்றபடிக்கு செய்து பார்க்க விருப்பமாகின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. துரை சொல்வது போல் வினிகர் பிடிக்காது. அதோடு தயாரிப்பு வகை சாஸ்களும் வீட்டில் வைச்சுக்கறதில்லை. சோயா சாஸுக்குப் பதிலாக என்ன போடுவதுனு யோசிக்கணும். காலிஃப்ளவரில் சோயா சாஸ் இல்லாமலேயே பண்ணுவேன். மிளகாயை ஊற வைத்து அரைத்துத் தக்காளி ப்யூரியுடன் கலந்து செய்வதுண்டு. உடல்நிலையாலும், வயிறு தகராறு செய்வதாலும் இப்போல்லாம் காரம் போட யோசிக்க வேண்டி இருக்கு. பக்கோடா மாதிரிப் போட்டுச் சாப்பிட வேண்டியது தான்! :)))) அருமையான புதுமையான சமையல் குறிப்பு!

    பதிலளிநீக்கு
  3. கமென்டே ஏத்துக்கலை. ரொம்பக் கஷ்டப்பட வேண்டி இருந்தது! ஏன்னு தெரியலை! :(

    பதிலளிநீக்கு
  4. TM 3 காலிப்பளவர் இல்லாமல் இப்படி செய்வதை வெஜிடபுள் மஞ்சுரியன் என்ரு சொல்லுவார்கள் இதை பிடிக்காது என்று சொல்லுபவர்கள் யாரும் இருக்க முடியாது...மஞ்சுரியனை செய்தது மட்டுமல்லாமல் அதனை அழகாக படம் எடுத்து வெளியிட்டது பாராட்டுகுரியது வாழ்த்துக்கள் காமாட்சி அம்மாவிற்கு ...வாழ்க வளமுடன். பேத்திகளுக்கு மட்டுமல்ல கொள்ளு பேத்திகளுக்கும் இதை செஞ்சு கொடுத்து மகிழ்விக்க வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  5. புகைப்படமே ஆசையை தூண்டுகிறது அருமை.

    பதிலளிநீக்கு
  6. காமாட்சியம்மா இந்த வயதிலும் நீங்கள் இவ்வளவு ஆர்வமாகச் செய்து படங்கள் எல்லாம் எடுத்து அழகாகப் பகிர்வதற்கு முதலில் எங்கள் வணக்கங்கள்! பாராட்டுகள்! பேத்திகளும் தங்களுக்கு உதவ ஆர்வமுடன் இருப்பது என்பது தங்களின் அன்பையும் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் சொல்லுகிறது மிக்க மிக்க மகிழ்ச்சி அம்மா. ஏனென்றால் இது எல்லாருக்கும் கிடைக்காது. இந்த பாக்கியம்!! இறைவனின் பரிபூரண அருள்!!! அன்பு வெல்லும் என்பதைச் சொல்லுகிறது! மனம் நெகிழ்ந்துவிட்டது காமாட்சி அம்மா! அசத்தல் ரெசிப்பி!!! மகன் இருந்த போது செய்வதுண்டு. இப்போது அதிகம் செய்வதில்லை. மீண்டும் செய்யும் ஆவலைத் தூண்டி விட்டுவிட்டது!

    காலிஃபளவர் மஞ்ஞ்சூரியன், பனீர் மஞ்சூரியன், காளான் மஞ்சூரியன் (நான் காளானில் செய்திருக்கிறேனே தவிர நான் சாப்பிடுவதில்லை...) மிக்ஸட் வெஜிட்டபிள் மஞ்சூரியன் என்று செய்திருக்கிறேன் காமாட்சியம்மா. ஆனால் வினிகர் மட்ட்டும் சேர்ப்பதில்லை. இறுதியில் மிக்ஸ் செய்யும் போது வெங்காயம் பூண்டு கொஞ்சம் வதக்கி, மீதியை பச்சையாக மேலே தூவி வைப்பதுண்டு. ஆமாம் துருவல் மெஷினில் நன்றாகத் துருவும். நான் பொடிப்பொடியாகக் கட் செய்து செய்திருக்கிறேன். துருவியும் செய்து விடுகிறேன்.

    உங்கள் குறிப்புகளையும் குறித்துக் கொண்டேன் அம்மா. உங்கள் மெத்தடிலும் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி அம்மா...

    தங்களின் அன்பிற்கு பல கோடிநமஸ்காரங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. காமாட்சி அம்மா... மிக்க மகிழ்ச்சியாக இருந்தது உங்கள் ரெசிப்பியைப் பார்க்க. காப்சிகம் அளவில் கோஸ். படங்களும் செய்முறையும் அட்டஹாசம். இரண்டு வாரங்களாக தொடர்ந்து, "முதல் முறை இந்தத் தளத்தில் திங்கக்கிழமையை அலங்கரிப்பவர்கள்". சமீபத்தைய உடல்நிலைப் பிரச்சனைகளுக்குப் பிறகு நீங்கள் அனுப்பியுள்ள ரெசிப்பி. மிகுந்த பாராட்டுகள்.

    என்னிடம் சோயாசாஸ் இல்லை. வினிகர் பிடிக்காது. பொதுவா ஆபீஸ் நண்பர்களை ஹோட்டலுக்கு அழைத்துச்செல்லும்போது கண்டிப்பாக மஞ்சூரியன்தான் ஸ்டார்டர். இதுவரை வீட்டில் என் ஹஸ்பண்ட் செய்ததில்லை. (னு நினைக்கிறேன். நான் நிச்சயமாய் அவள் செய்து சாப்பிட்டதில்லை). இந்த வாரத்தில் செய்யச் சொல்லுகிறேன்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. கோபி மஞ்சூரியன் ரெஸ்ட்டாரண்ட்டுகளில் ஸ்டார்ட்டராக ஒரு வெட்டு வெட்டியிருக்கிறேன். காரமாக இருந்தால் விறுவிறு என உள்ளே போகும். நீங்கள் செய்திருப்பது நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. உருண்டை, உருண்டையாகத் தட்டில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் நைஸாக ரெண்டை எடுத்து உள்ளே தள்ளலாம் போலிருக்கிறது! கலர்ஃபுல் ப்ரெஸெண்ட்டேஷன். பாராட்டுக்கள். நன்றி.

    பேத்தி பாட்டிக்கருகில் ஒத்தாசையாக இருப்பது, அன்பாகப் பேசுவது, புழங்குவது என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படிப்பட்ட பேத்தி கிடைத்தவர் பாக்யஸாலி. (கீதா ரெங்கனிடமிருந்து வார்த்தைகளைத் திருடிக்கொண்டேன்!)

    பதிலளிநீக்கு
  9. @ கீதா ரெங்கன்:

    //..நான் காளானில் செய்திருக்கிறேனே தவிர நான் சாப்பிடுவதில்லை...//

    Superbly health conscious; கூடவே அதிஜாக்ரதையுணர்வும் தென்படுகிறது.

    பதிலளிநீக்கு
  10. பார்க்க பார்க்க சாப்பிட தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
  11. வாவ் !!காமாட்சியம்மா !! அந்த உருண்டைகளை அப்படியே பொரிச்சதுமே சாப்பிடலாம் போலிருக்கு நான் மைதாவுக்கு பதில் வேற க்ளுட்டன் இல்லா மாவு சேர்த்து இதை செஞ்சி பார்த்து சொல்றேன் ..ரொம்ப ஈஸியா இருக்கு அழகான படங்களுடன் எங்களுக்கு விருந்து படைத்ததற்கு நன்றி அம்மா
    .

    பதிலளிநீக்கு
  12. வித விதமாய் சமையல் செய்த கை எப்போது தயாருடனே இருக்கும் திறமையை காட்ட மஞ்சுரியனுக்கு எடுக்கப்பட படங்களும் அருமை குறிப்பும் அருமை

    பதிலளிநீக்கு
  13. நான் இப்போ கில்லர்ஜிக்கு வோட் போட்டு சொப்பனாவை:) அவரின் தலையில் ஏத்தியிருக்கிறேன்.. அதனால 5 நிமிடம் வெயிட் பண்ணி இங்கு வோட் போட்டால்:) மீண்டும் ஸ்ரீராம் சொப்பனசுந்தரியைப் பறிச்சு தலையில் சூடிடுவார்:).. 5 நிமிடங்களாவது கில்லர்ஜி வச்சிருப்பாருக்கும் எனும் நல்லெண்ணம்தான்.

    பதிலளிநீக்கு
  14. காமாட்ஷி அம்மா மிக அருமையான ரெசிப்பி.. கொஞ்சம் பொறுமை தேவை இது செய்ய. சத்தானதும்கூட.. உருண்டைகள் பார்க்க மிக அழகாக இருக்கு.

    நான் வாழைப்பூக் கோல உருண்டைகள் ஒரு தடவை செய்திருக்கிறேன்... சோஸ் தொட்டுச் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    இதே முறையில் வெஜிடபிள்ஸ் கட் பண்ணி, கீரையும் ஒரு பிடி சேர்த்து, சோள மாவுக்குப் பதில் கோதுமை மாச்சேர்த்து.. ரொட்டி சுடுவேன் அடிக்கடி. அந்த ரொட்டிக்கு நான் வைத்த பெயர்.. “ச்த்துணவு ஒட்டீஈஈஈஇ”.. சொறி ரொட்டி.

    சோஸ் செய்தவிதம் அருமை.. இதில் வினிகரை விரும்பாதோர் கொஞ்சம் தேசிக்காய் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

    ஸ்ரீராம் கஸ்டப்பட்ட்ட்டுப் படங்களை மாத்திப் போட்டிருக்கிறாரோ?:)..

    பதிலளிநீக்கு
  15. காமாட்ஷி அம்மா, நீங்க ரொம்ப அழகா, செந்தழிப்பா இருக்கிறீங்க.. நீடூழி வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  16. செயல்முறை விளக்கம் உடனடியாக சமைக்கும் ஆவலை தூண்டுகிறது...

    காமாட்சி அம்மாள் சகல ஆரோக்யங்களும் பெற வேண்டுகிறேன்.

    நன்றியுடன்
    சாமானியன்

    எனது புதிய பதிவு " ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
    https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அன்பு காமாக்ஷி அம்மா. பொறுமையாக விளக்கம் சொல்லி,படம் எடுத்து மன்சூரியனுக்கு வரவு சொல்லிவிட்டீர்கள். பேத்தியின் உதவி கிடைத்தது நல்ல பாக்கியம்.
    பார்க்கவே மிக சுவை.வினீகர்,சாஸ் பக்கம் போவதில்லை.

    மற்ற எல்லாம் சேர்த்து செய்து பார்க்கிறேன்.
    உடல் நலமாக இருக்கிறது என்று நம்புகிறேன்.
    ரெகிப்பிக்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  18. காலைல பார்த்ததைவிட புதுப் படங்கள்லாம் சேர்த்திருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  19. நெல்லை நீங்க ரொம்பவே ஷார்ப்! எப்படிக் கண்டு பிடிச்சீங்க? காமாட்சி அம்மா சொல்லி, விட்டுப்போன இரண்டு படம் சேர்த்தேன்.

    பதிலளிநீக்கு
  20. ///athira said...

    காமாட்ஷி அம்மா, நீங்க ரொம்ப அழகா, செந்தழிப்பா இருக்கிறீங்க///


    ச்சே ச்சே ஒருத்தர் கண்ணுக்கு பார்க்க அழகாக தெரிஞ்ச்டப்படாதே.....இப்படியெல்லாம் திருஷ்டி போடப்படாது..... காமட்சி அம்மா யாரைவது வச்சி உங்களுக்கு திருஷ்டி சுற்றி போடஸ் சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  21. ///athira said...

    செந்தழிப்பா இருக்கிறீங்க///

    பல வருடங்கள் கழித்து இந்த வார்த்தையை இப்பதான் மீண்டும்கேட்கிறேன்

    பதிலளிநீக்கு
  22. Avargal Unmaigal said...///ச்சே ச்சே ஒருத்தர் கண்ணுக்கு பார்க்க அழகாக தெரிஞ்ச்டப்படாதே.....இப்படியெல்லாம் திருஷ்டி போடப்படாது..... காமட்சி அம்மா யாரைவது வச்சி உங்களுக்கு திருஷ்டி சுற்றி போடஸ் சொல்லுங்க///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    ///பல வருடங்கள் கழித்து இந்த வார்த்தையை இப்பதான் மீண்டும்கேட்கிறேன்// ஹா ஹா ஹா ஏன்.. இதுக்கு முன் எப்போ எந்நேரத்தில் கேட்டீங்க ட்றுத்?:)..

    பதிலளிநீக்கு
  23. காமாட்சி அக்கா வாழ்க வளமுடன்.
    உங்கள் சமையல் குறிப்பு சூப்பர். பொறுமை வேண்டும். பொறுமையாக படங்கள் குறிப்புகள் கொடுத்து அசத்தி விட்டீர்கள். பேத்தியின் அன்பான உதவி கிடைக்க பெற்ற நீங்கள் பாக்கியசாலி. பேத்திக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. ஈவினிங் டிஃபனுக்காச்சு

    பகிர்வுக்கு நன்றி சகோ...
    கமலாம்மாவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  25. துரை செல்வராஜு. வினிகர் வேண்டாமே. எலுமிச்சைசாறு சேர்த்தால் போகிறது. முதல்பதில். போணியாகி விட்டது. நன்றி.பாராட்டியதற்கு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  26. கீதா இந்த சைனீஸ்,பாஸ்தாமற்றும் பலதிற்கும் இந்த சாஸ்கள் அவசியமாகிறது. நமக்கெல்லாம் ஏதாவதொன்று இல்லாவிட்டாலும் சமாளிப்பதற்கு வழி தெரியும். இப்போது யாவும் சிறிய பாக்கெட்டுகளிலும் கிடைக்கிறது போலிருக்கு. நம்முடையவெளிநாட்டுக் குடுமபங்களில் இல்லாத வஸ்துக்கள் கிடையாது. அதன் தாக்கம் இது. பாராட்டுதலுக்கு மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  27. கீதா இப்போதுஸரியாகி விட்டதா? அன்புடன்

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் புலவர் அவர்களே. வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  29. மாதவி எங்கு இருக்கிராய். படித்ததும்,பசித்ததும் இதை செய்து கொடுத்தால் போகிறது. என்ன பிரமாதம். நன்றி அன்புடன்

    பதிலளிநீக்கு
  30. அவர்கள் உண்மைகள்என்றபெயருக்கேற்பபாராட்டுகளும், வாழ்த்துகளும் அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி. பேத்தியிடமிருந்து தெரிந்து கொண்ட ரெஸிப்பியே இது.அவளும் வேறு யாரிடமிருந்தோ தெரிந்து கொண்டிருப்பாள்.நீங்களும் மற்றவர்களுக்குச் சொல்லலாம். மகிழ்ச்சி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  31. வாங்கோ கில்லர்ஜீ. அப்படியா. மிகவும் நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  32. தில்லையகத்து கீதா நிறைய ஆசிகளும் அன்பும். மனம் கொண்ட அளவு பாராட்டுகளும்,மகிழ்ச்சியையும்தெரிவித்திருக்கிராய். மிக்க நன்றி. பேத்திக்கு பாட்டியிடம் வளர்த்த பாசம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  33. வாங்கோ ராமலக்ஷ்மி. செய்தும் பாருங்கள். மிக்க நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  34. வாங்கோ நெல்லைததமிழன்.உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க ஸந்தோஷம்.சாப்பிட ருசியானதுதான் இந்த மஞ்சூரியனும். உங்கள் ஹஸ்பெண்ட் திறமையானவர். இவ்வளவுதானே, என்ன பிரமாதம்,போண்டாமாதிரி பொரித்து சாஸில் பிரட்டி எடுத்தா ஆச்சு என்று சொல்லி விடுவார் பாருங்கள்! எல்லா வகையிலும் நன்றி உங்களுக்கு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  35. பகவான்ஜீ. வாங்கோ. சுவைத்தும் பாருங்கள்.என்ன பிரமாதம்.நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  36. வாங்கோ. கலர்ஃபுல் பிரஸன்டேஷன், டேஸ்ட்ஃபுல்லாகவும் இருக்கும். பாட்டி பேத்தி உறவு மனதிற்கு இதம்தரும் ஒரு உறவு. உங்கள் பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  37. அசோகன் வாங்கோ. சாப்பிட்டுவிட்டு ஓஹோ நன்றாக இருக்கிறதென்று நினைத்துக் கொள்ளுங்கள். நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  38. அதிரா வாங்கோ.தேசிக்காய்--எலுமிச்சை. சோஸ்--சாஸ் ஸரிதானா. இப்பதான் உங்க தமிழ் பழகுகிறேன் ச்த்துணவு ரொட்டி நன்றாக உள்ளது. நன்றி அன்புடன்

    பதிலளிநீக்கு
  39. அதிரா வாவா.நீடூழி வாழ்க என்று நான் உங்களையெல்லாம் வாழ்த்த வேண்டும். வாழ்த்துகிறேன். அழகா, எண்பத்தாறு வயதில் ராஜா மெச்சினால் ரம்பைதான். ஆஹா,ஓஹோ தான்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  40. வாங்கோ சாமானியன்ஸாம். ஒருதரம் சமைத்துப் பார்த்து விடுங்கள். ஆரோக்கியங்களும் பெற வாழ்த்தியுள்ளீர்கள். எனக்கு வேண்டிய வாழ்த்து. உங்கள் பிளாகிற்கும் வருகிறேன்.நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  41. வாங்கோ வல்லிம்மா எப்படி இருககிங்கோ.உங்களைப் படித்து ரஸித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு வேறு எந்த வேலைகளும் செய்ய முடிவதில்லை. எழுதணும் என்ற ஆசை. மருமகள்கள் எல்லாம் பதியவைகள் செய்தது போக,பேத்திகளும் செய்வதால் எல்லாம் கற்றுக்கொள்ள முடிகிறது. அதுதான் எப்போதாவது எழுதுகிறேன். உங்களுக்கு மனதிற்கு எது பிடித்தமானதோ அதைச் சேர்த்துச் செய்யுங்கள். புதிய யோசனைகள் உதயமாகும். புதிய ருசிகளும் கிடைக்கும். வயதாவதால் நலமாகிக்கொண்டுதான் வருகிறேன். இந்தியா போக உத்தேசம். குளிர் அதிகமாகுமுன். உங்கள் அன்பான பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  42. நெல்லைத்தமிழன் வாங்கோ. நான் எப்படிச் சேர்க்க முடியும். நான் அனுப்பியதில் அவ்விடம் விட்டுப்போனதைக் குறிப்பிட்டு ஸ்ரீராமிற்கு எழுதினேன். அவர் சேர்த்து விட்டார்.அவ்வளவுதான். இரண்டு படம் எடுக்காமலேயே விட்டு விட்டேன். எண்ணெயில் வேகும் படமும், சாஸில் கலக்கும் படமும். நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  43. வாங்க ஸ்ரீராம். கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பார்கள் என்று சொல்வார்களே வசனம். அது இதுதான் போலும். ஸகலகலா வல்லவர். உங்களுக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  44. அவர்கள் உண்மைகள் வாங்கோ. ஆமாம் எனக்குச் சுற்றிப்போட ஏதாவது ஒருவயதுக் குழந்தையைக் கூப்பிடவேணும். செந்தழிப்பா என்றால் என்ன அர்த்தம்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  45. அதிரா நீங்க சொல்லுங்க செந்தழிப்பா என்றால் என்ன அர்த்தம். எனக்குத் தெரியலியே. அன்புடன்

    பதிலளிநீக்கு
  46. வாங்கோ கோமதி அரசு. அடேடே சூப்பர் என்று சொல்லியுள்ளீர்கள். பேத்தியியையும் பாராட்டி எழுதியுள்ளீர்கள். எல்லோரும் பாராட்டுவதுகூட என்னவோ பாமாலை சூட்டுவதுபோல் உள்ளது. என்னவென்று சொல்வது. உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி. நீங்களும் அயல்நாடு வந்துள்ளீர்கள்.கொலுவைக் கண்டு களித்தேன். நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  47. ராஜீ வாவா. டிபன் சாப்டியா. எப்படி இருந்தது. காமாட்சிம்மா நான். மிக்க ஸந்தோஷம் நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  48. ஏகாந்தன் அவர்களை வாங்கோ என்று சொல்லும்போது பெயர் போடவில்லை. அதான் இந்தக் குறிப்பு. நன்றி ஏகாந்தன். அன்புடன்.

    பதிலளிநீக்கு
  49. ஒருமுறை செய்து பார்த்துவிட வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  50. வாங்கோ வாங்கோ.பாலசுப்ரமண்யம்.
    எல்லோருக்கும் பிடித்திருக்கிறது இந்தக் குறிப்பு. கட்டாயம் ஒரு முறை செய்து பார்த்துவிடவேண்டியதுதான் என்பது நல்ல முடிவு. உங்களுக்குதான் உங்கள் பின்னூட்டதிற்குக் கீழேயே பதிலெழுத முடிந்தது. அதில் ஒரு ஸந்தோஷம். மிக்க நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  51. attakasam arumai Kamatchi mam ! ore jolssssssssss. thanks Sriram for sharing

    பதிலளிநீக்கு
  52. தேனம்மை வாங்கோ. உங்கள் முதல்வரவு. முதல்நாள் வந்த பின்னூட்டத்துடன் முடிந்து விட்டது என்று நினைத்தேன். முடிவாக உங்கள் பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி. இன்னும் ஒரு பின்னூட்டம் பாக்கி என்று நினைத்தேன். அதை மெய்ப்பி நன்றிக்க உங்கள் பின்னூட்டம், அதுவும் ஸந்தோஷமாக.நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!