வெள்ளி, 6 அக்டோபர், 2017

வெள்ளி வீடியோ 171006 "புன்னகையாலே எனை மாற்று ; பொன்னழகே நீ பூங்காற்று..."


இளையராஜா என் முக நூல் பகிர்வு

ஒரு அவதானிப்பு:

உதிரிப் பூக்கள் படம் ஏதோ ஒரு சேனலில் இப்போதுதான் முடிந்தது. அதன் தீம் மியூசிக்கை இளையராஜா பின்னர் 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படத்தில் அதே டியூனில் 'கண்ணே நவமணியே' என்று பாடலாகப் பாடியிருக்கிறார் என்று தெரிந்தது.

இன்னொரு பின்னணி இசையைக் கேட்டபோது ஆனந்தக்கும்மி படத்தின் 'திண்டாடுதே ரெண்டு கிளியே' பாடல் (குறிப்பாக சரணம்) நினைவுக்கு வந்தது. இந்த இரண்டு பாடல்களும் இளையராஜா தானே சொந்தக் குரலில் பாடியது. கூடவே கற்பூரமுல்லை படத்தில் வரும் 'பூங்காவியம்' பாடலும் நினைவுக்கு வந்தது.எனவே இளையராஜா தன் பழைய படங்களின் பின்னணி இசையிலிருந்து கூட பின்னர் பாடல்கள் புனைந்திருக்கிறார் என்பதே அந்த அவதானிப்பு!

அவதானிப்பு என்று சொல்லும்போது சீனு நினைவுக்கு வருகிறார்! அவர்தான் இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பார்.

============================================
இளையராஜாவின் பேட்டி கடைசியாய் வந்த பதிவில் இப்படி முடித்திருந்தேன்.

எங்கள் கிராமத்துப் பக்கம் யாருக்காவது கல்யாணம் என்றால், "ஓரடி,  ஈரடி, ஒசத்தக் கல்லடி, மாணிக்க மத்தார் சீமைக்குச் சித்தா, பாப்பாரப் பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்" என்று கிண்டலாகச் சொல்வதுண்டு.  இதற்கு ஏதும் டியூன் கிடையாது.  வெறும் வார்த்தைகள்தான்.  எக்ஸ்பிரஷன் மட்டுமே.  இதை அடிப்படையாக வைத்துதான் நெல்லு குத்த கூவியழைப்பது போல அமைத்தேன். 


பின்னால் இந்த வரிகளுக்கு - வெறும் எக்ஸ்பிரஷனாய் மட்டும் அமைந்த வரிகளுக்கு - டியூன் போட்டுப் பார்த்தால் என்ன என்று  தோன்றியது.  விளைவு மூன்று பிரபலத் திரைப்படப் பாடல்கள்.  நான் லேசாகக் கோடிட்டுக் காட்டினால் உங்களுக்கு நினைவு வரும் என்று நினைக்கிறேன்.                                                                                                                                    
                                                                                                                                                     (தொடரும்)


இப்போது அதைத் தொடர்கிறேன்.  அதற்கு நெல்லைத்தமிழன், ஏஞ்சலின், அதிரா ஆகியோர் பதில் சொல்ல முயற்சித்திருந்தார்கள்.  சில சரியான விடைகளும் இருந்தன...   பேட்டியின் தொடர்ச்சி கீழே...  உங்கள் விடைகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


============================================================


"குலைகுலையா முந்திரிக்கா.. நரியே நரியே சுத்தி வா...  கொள்ளையடித்தவன் எங்கிருக்கான்.... கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி.."


"பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே... கிளியே.. இளங் கிளியே கிளியே..."


"பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி... போக்கிரிப்பொண்ணுக்குப் பங்குனி மாசங் கல்யாணம்..."

இந்தப் பாடல்களை முணுமுணுத்துப் பாருங்கள்.  எல்லாவற்றுக்கும் ஒரே Base தான்.


இதையெல்லாம் படித்து விட்டு "ஓகோ... இந்த இளையராஜா இவ்வளவுதானா?  தனது முந்தைய பாட்டுகள் ஒவ்வொன்றையும் எடுத்து, சில லைன்ஸை டெவெலப் பண்ணி ஒரு மூன்று பாட்டு பண்ணி விடுவான் போலிருக்கிறதே..." என்று அவசரப்பட்டு முடிவு செய்து எந்தப் பாட்டின் அடிப்படையில் இந்தப் பாட்டைப் போட்டிருப்பான் என்று எனது ஒவ்வொரு பாடலையும் வைத்துக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வீணாக மூளையைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்.  (மேலே நான் தந்திருக்கும் என் முக நூல் பகிர்வுக்கு இளையராஜா முன்னரே பதில் அளித்து விட்டிருக்கிறார்!)


நான் ஒவ்வொரு பாட்டையும் வித்தியாசமாகத்தான் செய்து வருகிறேன்.  சில பாடல்கள் எப்படி மற்றவற்றுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைகின்றன என்பது உங்களுக்குத் தெரியட்டும் என்றுதான் இதை உங்களுக்கு 'ரகசியமாக' சொல்லி வைத்தேன்.


3)  "ஒரு பாட்டு லவ்டூயட்டாகப் பாடப்படும்போது ஹாப்பி அண்ட் கேயாக இருக்கவேண்டும்.  அதே பாட்டு கிளைமேக்சில் ரிப்பீட் ஆகும்போது திரில்லாகவும், இதயத்தை அழுத்தும்படியும் அமைய வேண்டும்" 

 இப்படியொரு சவாலை "உறவாடும் நெஞ்சம்" படத்தின் மூலம் எனக்குத் தந்தார்கள் தேவராஜும் மோகனும்.  ஏற்றுக்கொண்டேன்.  மண்டையைப் போட்டு உடைத்தும் கொண்டேன்.  நான் அதிக நேரம் எடுத்துக்கொண்டு கம்போஸ் செய்த முதல் பாடல் "ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்"  என்ற பாடல் தான்.  படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்தப் பாடல் இடம்பெறும் காட்சி நினைவிருக்கும்.  சந்தோஷமான மன நிலையில் இருக்கும்போது பாடப்படும் பாடலை டேப் பண்ணி அதை கிளைமேக்சில் திரும்பவும் "ப்ளே" பண்ணும்போது அது மாறிய சூழ்நிலைக்கு ஏற்றதாக அமையும் வண்ணம் ஆர்செஸ்டிரேஷன் தந்திருக்கிறேன்.


வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்பதில் விருப்பமுள்ளவன் நான்.  "காற்றினிலே வரும் கீதம்" படத்தில் ஒரு புது டெக்னீக்கைக் கையாண்டிருக்கிறேன்.  'சூப்பர் இம்போல் என்பதை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.  ஒலியில் இந்த ஐடியாவை யாரும் கொண்டு வராததால் நான் முயன்றேன்.  ஒரு வரியைப் பாடச் சொல்லி அந்த வாய்ஸ் சஸ்டெயின் ஆகும்போதே அதே குரலில் அதே வரியை மீண்டும் பாட வைத்து ஓவர்லாப் ஆகும்படி செய்வது.  


'காற்றினிலே வரும் கீதம் என்ற டைட்டில் ஸாங்கை நான் அப்படித்தான் சூப்பர் இம்போஸில் அமைத்தேன்.


"இசையமைப்பில் மற்றவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?"


நான் என் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன்.  ஒரு காட்சி எனக்கு விவரிக்கப்படும்போது அது என்னுள் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறதோ அதுதான் இசையாகிறது.  அந்தச் சமயத்தில் நான் ராகத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.  


என் உணர்ச்சிகள் எந்த ராகத்த்திலும் வந்து விழலாம்.அல்லது அவை இந்தக் குறிப்பிட்ட ராகத்துடனும் தன்னை அடையாளங் காட்டிக்கொள்ள முடியாமல் தனித்து நின்று விட்டாலும் எனக்குக் கவலை இல்லை.  நவரசங்களுக்கு இது இது ராகம் என்று சார்ட் போட்டு வைத்துக் கொண்டு அதற்குள் சுற்றி வந்து குண்டுசட்டித்தனம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.  என்னிடம் ஒரு டைரக்டர் வந்து  பசி,பட்டினி அல்லது வறுமை பற்றிய ஒரு காட்சியை விவரித்தால், அதை நானே உணர்ந்து அவற்றைப் புரிந்து கொள்கிறேனே அதுதான் எனக்கு ராகம்.  இதைத்தவிர வேறு ராகம் எனக்குத் தெரியாது.  அப்படி தெரியாது என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு வெட்கமும் இல்லை.


(தொடரும்)51 கருத்துகள்:

 1. காற்றினிலே வரும் கீதம்..

  இனிய இளங்காலைப் பொழுது..
  வாக நலம்..

  பதிலளிநீக்கு
 2. வாழ்க நலம்..
  இசையோடு தென்றலாக என்றென்றும் வாழ்க..

  பதிலளிநீக்கு
 3. ஒரு நாள் , நல்ல ஞாபகம் இருக்கிறது.
  மிக ரசித்த பாட்டு. நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 4. ஒருநாள் உன்னோடு ஒருநாள் அனைவரும் ரசித்த பாடலே... தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. ஓர் ஆய்வுக்கட்டுரையின் நறுக்கைப் படித்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது பதிவு.

  பதிலளிநீக்கு
 6. வாங்க துரை செல்வராஜூ ஸார்... மீண்டும் முதல் கமெண்ட்! நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வாங்க வல்லிம்மா... நன்றி. நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வாங்க கில்லர்ஜி... நன்றி.

  காற்றினிலே வரும் கீதம் கூட நல்ல பாடல்தான்.

  பதிலளிநீக்கு
 9. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. நன்றி.

  பதிலளிநீக்கு
 10. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 11. கண்டேன் எங்கும்... பாடலை கேட்டேன் ஒரு முறை, இருமுறை. ( இடையிடையே அக்கம்பக்கத்தில் பக்கவாத்தியம்..)
  பிடித்தமான பாடல். ஆடியோ ஏனோ எழும்பவில்லை சரியாக. ஜானகியின் குரலில் தமிழ் வார்த்தைகள் பாதி காணாமல் போய்விடும். மியூஸிக் மட்டும்தான் நமக்கு என்றாகிவிடும்.

  ஆதலால் யார் எழுதியது, என்னதான் எழுதியிருக்கிறார் என நெட்டில் தேடிக்கண்டுபிடித்தேன். லிரிக்ஸையும் படித்துக் கேட்டேன். நல்ல பாடல். இதமான இசை. ஏதோ ஒரு காலத்திற்குள் எட்டிப்பார்க்கமுடிந்தது. நன்றி.

  By the way, எழுதிய அப்பாவி பஞ்சு அருணாச்சலம். அப்பாவி என ஏன் சொன்னேன் எனில், எழுதுபவனைப்பற்றி எவர் கவலைப்படுவார் இப்பேருலகில்? நடிக, நடிகைகள், மியூஸிக் டைரக்டர், பாடுபவர் மட்டுமே முக்கியம் ரசிகனுக்கு. வார்த்தைகள் எங்கிருந்தாவது வந்து விழுந்திருக்கும் - இதெல்லாம் ஒரு விஷயமா பேச..

  பதிலளிநீக்கு
 12. வாங்க ஏகாந்தன் ஸார்...

  இதே படத்தில் ஜெயச்சந்திரன் குரலில் "ஒரு வானவில் போலெ.." என்கிற அற்புதமான பாடலும் உண்டு. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

  //எழுதுபவனைப்பற்றி எவர் கவலைப்படுவார் இப்பேருலகில்?//

  என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? பாடல் வரிகளுக்காகவே ரசிக்கப்படும் பாடல்கள் பல உண்டே.. கண்ணதாசன், வாலி, வைரமுத்து...

  சரி, "ஒரு நாள்... உன்னோடு ஒருநாள்.." பாடல் கேட்கவில்லையா?

  பதிலளிநீக்கு
 13. 80களுக்குள் கொண்டுசென்றுவிட்டீர்கள். நான் ஹாஸ்டலில் இருந்திருக்கவில்லையென்றால் நிறைய வெரைடியான பாடல்களும் ஒலிச்சித்திரங்களும் கேட்டிருக்க முடியாது. அங்கு மாணவர்கள் சிலர் சேர்ந்து தங்களுக்குப் பிடித்த இசைத்தட்டை வாங்கி பிரசன்ட் பண்ணலாம் ஹாஸ்டலுக்கு. அதனால் அனேகமாக எல்லா படங்களின் பாடல்களும் வளாகத்தில் அந்த அந்த சமயங்களில் ஒலிபரப்பாகும்.

  ஏ.ஆர்.ஆர் வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால் இளையராஜா திறமை மிக அதிகம் (வித்யா கர்வமும்தான்)

  பதிலளிநீக்கு
 14. @ஸ்ரீராம்: // "ஒரு நாள்... உன்னோடு ஒருநாள்.." பாடல் கேட்கவில்லையா?//

  கேட்டேன். எனக்கென்னவோ ‘கண்டேன் எங்கும்..’-தான் படுசுகமாக இருந்தது!

  பதிலளிநீக்கு
 15. ஸ்ரீராம் நான் அதிரா போல நதிக்கரைல போராட்டம் நடத்த மாட்டேன்...நாறும் ஸோ மெரினாவுல...மாபெரும் போராட்டம்!!!!..ஹாஹாஹாஹா பின்ன என்னவாம் நான் குலை குலையா முந்திரிக்கா பாடலைச் சொல்லியிருந்தேனாக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 16. இரு பாடல்களும் அருமையான பாடல் ஸ்ரீராம். கல்லூரிக்காலத்தில் கேட்டு ரசித்தவை. அப்புறம் நான் எங்கள் மாநிலத்திற்கே போய்விட்டதால் தமிழ்ப்பாடல்கள் கேட்க முடியாமல் ஆகிவிட்டது. மீண்டும் இப்போது உங்கள் தளம் வழியாகக் கேட்டு ரசித்து மீண்டும் தமிழ்நாட்டில் நான் மகிழ்வாக வாழ்ந்த நாட்களுக்கு அழைத்துச் சென்றது...நிறைய சினிமா பார்ப்பேன் அப்போது. இப்போதும் பாலக்காட்டில் இருந்தால் தமிழ் சினிமாவந்துவிட்டால் பார்த்துவிடுவேன். ஆனால் இப்போதைய பாடல்களும் சரி சினிமாவும் சரி அப்போது போல் மனதில் பதிய மறுக்கிறது. குறிப்பாகப் பாடல்கள். நீங்கள் பகிரும் பாடல்கள் எல்லாம் இப்போதும் நினைவில் இருக்கிறது...ரசிக்க முடிகிறது! ஒரு வேளை வயதானதன் காரணமாக இருக்குமோ!

  பதிலளிநீக்கு
 17. ஸ்ரீராம் செம பாடல் ரெண்டுமே...கல்லூரிக் காலத்தில் எவ்வளவு கேட்டுருப்பேன். எங்க க்ளாஸ்ல ஒரு பெண் நல்ல பணக்காரப் பெண் அவள் கல்லூரிக்கு ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ கொண்டு வருவாள். நாங்கள் மதியம் லஞ்ச் சாப்பிடும் நேரம் கல்லூரில் வகுப்புக்கு எதிரிலேயே முந்திரித் தோட்டம் உண்டு அங்கு சென்று உட்கார்ந்து கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே சாப்பிட்ட் என்று ஜாலியாக இருக்கும். பொன்னான காலம்....

  இளையராஜாவின் பாடல்கள் ஒரு சில கேட்கும் போதே அவருடைய சில பாடல்களை நினைவுக்குக் கொண்டு வரும்....அதே போல இருக்கே என்று. அப்படி மெட்லி கூடச் செய்ய முடியும்...அவரது பாடல்களை வைத்துக் கொண்டே...

  கீதா

  பதிலளிநீக்கு
 18. இதே படத்தில் ஜெயச்சந்திரன் குரலில் "ஒரு வானவில் போலெ.." என்கிற அற்புதமான பாடலும் உண்டு. எனக்கு ரொம்பப் பிடிக்கும். // ஸ்ரீராம் ஹைஃபைவ். படம் எல்லாம் தெரியாது ஆனால் இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன் ரொம்பப் பிடிக்கும்...இந்தப் பாடலைக் கேட்டு (இந்தப் பாடல் மட்டுமல்ல நாங்கள் கேட்கும் பாடல்கள் எல்லாவற்றிற்கும் ) நாங்கள் அபிநயம் எல்லாம் பிடித்து ஒரு சில பாடல்களைக் கிண்டல் செய்ய்யும் அபிநயம் குறிப்பாக எம் ஜி ஆர் பாடல்கள்..சிவாஜி பாடல்கள் என்று கோல்டன் டேய்ஸ்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 19. நல்லா அலசி இருக்கும் பதிவு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 20. ஆழ்ந்த இசைரசனை இருக்கறவங்களாலேதான் கண்பிடிக்கமுடியும், ஒன்று போல் தோன்றலாம் ஆனால் எல்லாம் பசுமையும் அழகு என்பது போலவே இருக்கும் ...எல்லாமும், அவர் பசுமைராஜா

  பதிலளிநீக்கு
 21. ///ஸ்ரீராம் நான் அதிரா போல நதிக்கரைல போராட்டம் நடத்த மாட்டேன்...நாறும் ஸோ மெரினாவுல...மாபெரும் போராட்டம்!!!!.///

  கரீட்டுக் கீதா விடாதீங்கோ:).. நமக்குத் தேவை ..நீதி நியாயம் கடமை நேர்மை எருமை:))..

  எனக்கு ரைம் மனேஜ்மெண்ட் சுத்தமா முடியல்ல:) ச்சோஓ புத்தி சொல்லிச்சுது எங்கேயும் போகாதே, உன் தொழிலைக் கவனி என:).. மனம் கேய்க்கவே மாட்டுதாம்ம்.. ஸ்ரீராமின் பாடல்கள் பார்த்து என் நினைவுச் சங்கிலியைத் தட்டிவிட்டது மனசு:).. அதனால களம் இறங்கிட்டேன்:)..

  பதிலளிநீக்கு
 22. இளையராஜா சரி, எங்க காலத்து எம்.எஸ்.வி?..

  பதிலளிநீக்கு
 23. 7ம் வோட் பண்ணி டமில்மணத்தில் ஏத்திட்டேன்ன்.. ஆனா ஸ்ரீராமிடமிருந்து மகுடத்தைப் பறிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. ஹா ஹா ஹா அது போகட்டும்....

  என் யொந்தக் கதை யோகக் கதை கேட்க வாங்கோ:)... படிக்கும்போது எனக்கு கதைப்புத்தகங்கள் வாசிக்கும் பைத்தியம்.. எல்லாக் கதையும் பிடிக்காது, மனதைப் பிசையும் கதைகளாவே கேட்டுக் கேட்டு தேடி எடுத்துப் படிப்பேன்.

  ஒரு வயதில் மூத்த அண்ணா, நல்ல நண்பர்.. அவரின் அப்பா ஒரு குட்டி லைபிரரியே வச்சிருக்கிறாராம் வீட்டில் எனக் கூறி.. எனக்கு புத்தகங்கள் தருவார், நானும் படித்திட்டுக் கொடுப்பேன்... அந்த அண்ணா சொல்வார் உங்களைப் பார்த்தால் பழைய நடிகை சோபாவின் நினைவுதான் எனக்கு வருகிறதென...
  சோபாவா? அதாரது என்றேன்...
  அவ விஜயனோடு படங்கள் நடிச்சிருக்கிறாவே என்றார்...
  விஜயனா? அது யார்??...
  உதிரிப் பூக்கள் படம் பாருங்கோ.. அதன் ஹீரோ தான் என்றார்... பின்னர்தான் அனைத்தையும் தேடினேன்... உதிரிப்பூக்கள் 4,5 தடவைகள் பார்த்திட்டேன்.....

  என்னில் ஒரு பழக்கம்.. ஒரு பாட்டுக் கேட்டால், அதில் சிலவரிகள் மனதில் ஆளமாக பதித்திடுவேன்.. ஆனா பாடலை மறந்திடுவேன்...

  அப்படித்தான்.. உதிரிப்பூக்களில் ஒரு நகைச்சுவைப் பாடல் இடையில் வரும்.. ஒரு வயதான பாட்டி பாடுவா.. அதில் சிலவரிகள்.. அதுக்காகவே அப்படமும் பாடலும் திரும்ப பார்க்க தோணும்...
  “ஒண்ணா கூடி இருந்து.. நாங்க ஒம்பது பிள்ளையைப் பெத்தோம்...
  பத்தாவது பிள்ளையத்தான், பெற்றுக்கொள்ள தாய் வீடு... நான் போனப்போ.. என்பிரிவைத் தாங்காம செத்தாரையா எம் புருஷன்.... இப்போ அவர் இருந்திருந்தா.. இந்த ஊரு பூராஆஆஆஆ நாம் பெத்த பிள்ளையாவே இருந்திருக்கும்... “.. ஹா ஹா ஹா..

  ஊசிக்குறிப்பு: பாலுமகேந்திரா அவர்களின் உண்மைத்தொடர் என.. ஒரு தொடர் பெயர் “சோபாவும் நானும்”... என ஒரு மகசினில் தொடர்ச்சியா வெளிவந்ததாம்.. அதை யாரோ எடுத்துப் புத்தகமாகக் கட்டி வைத்திருந்தார்கள்.. அதைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.. என்னா ஒரு சோகமான தொடர்... அது இப்போ எங்காவது கிடைக்குமோ என தேடிக்கொண்டிருக்கிறேன்ன்.. யாருக்காவது தெரிஞ்சால் டெல் மீ பீஸ்ஸ்ஸ்:))..

  பதிலளிநீக்கு
 24. இந்த ஒருநாள் உன்னோடு ஒருநாள்... பாடல் நான் சொல்லும், என் மாமியிடமிருந்து எடுத்து வந்த சிடி யில் இருக்கு... அதில் எனக்கு மிகவும் பிடித்த வரி.... “காவியம்போலே வாழ்ந்திடுவோம்.. ஆயிரம் நிலவுகள் பார்த்திருப்போம்..”...

  இதில பாருங்கோ பெண் பாடுவா.. அது எவ்வளவு சிந்திச்சுக் கரீட்டாக் கடவுளுக்கு வைக்கிறா ஆப்பூஊஊஊ:).. ஏன் தெரியுமோ? கடவுளிடம் வரம் கேட்கும்போது கண்டபடி கேட்டிடக்கூடாதாம்:) மனிசன் பொல்லாத விளையாட்டுக்காரராம்:).. இதோ நீ கேட்டாய் நான் தந்தேன் எனத் தந்திடுவாராம்.. அப்பூடித்தான் ஒருவர் கேட்டாராம்ம்.. “கடவுளே நான் தொட்டதெல்லாம் பொன்னாகோணும் என”.. ஓகே எடுத்துக்கொள் தருகிறேன் என்றிட்டாராம்:) கடவுள்).. பிறகு பார்த்தால் அவர் உணவைத்தொட்டால் அது பொன்னாச்சுதாம்.. மனைவியைத் தொட்டால் அவ பொன்னாயிட்டாவாம்ம்.. எதுவும் பண்ண முடியல்லியாம்:)) முடிவில கெஞ்சி மன்றாடி வரத்தை வாபஸ் வாங்கினாராம்:)...

  ஸ்ஸ்ஸ்ஸ் இதனாலபாருங்கோ நான் வலு கவனமா டெயிலர் எல்லாம் நடத்திப்பார்த்துத்தான் வரம் கேட்பேன்:)..

  அப்பூடித்தான் இதில வருகுது வசனம்.. அழகாக ஆப்பு வைக்கிறா கடவுளுக்கு...
  “மங்கள நாண் வேண்டும்.... மகனுடன் மகள் வேண்டும்... என்றும் காவல் நீயாக”... எவ்வளவு தெக்கினிக்கா:) யோசிச்சு கேட்கிறா எனப் பார்த்து மீ வியக்கேன்ன்:).. ஹா ஹா ஹா.

  அந்த சிடியில் ஒரு பாடல் பல தடவைகள் கேட்டிட்டேன், என் புளொக்கில் மேலே போடலாமே எனத் தேடுறேன் கிடைக்குதே இல்லை...

  யூ ரியூப்பில் கிடைச்சால் சொல்லுங்கோ... இதுதான் பாடல்...
  “ஒரே ஸ்வரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....
  ஒரே லயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... காதல் கீர்த்தனம்ம்ம்ம்ம்ம்ம்.. இதுவாகும்.....”

  இருகுரல் பாடல்.. சூப்பரா இருக்கு கேட்க.. ஆனா கிடைக்குதில்லை. யூ ரியூப்பில் ஏதோ தெலுங்கில் ஒரு பாடல் வருது.. ஒரே ஸ்வரம்... ஒரே நிறம் என...

  பதிலளிநீக்கு
 25. முதல் காணொளி பாடல் எனக்கு பிடிச்ச பாட்டு.

  பதிலளிநீக்கு
 26. த ம பெட்டி இல்லை....லிங்கும் இல்லையே ஸ்ரீராம்..

  அதிரா நீங்களும் எங்கூட மெரினாவுக்கு வரீங்க தானே வாங்கோ!! ஹாஹாஅஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 27. @athiraaaav

  /சோபாவும் நானும்”... என ஒரு மகசினில் தொடர்ச்சியா வெளிவந்ததாம்.. அதை யாரோ எடுத்துப் புத்தகமாகக் கட்டி வைத்திருந்தார்கள்.. அதைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.. என்னா ஒரு சோகமான தொடர்... அது இப்போ எங்காவது கிடைக்குமோ என தேடிக்கொண்டிருக்கிறேன்ன்.. யாருக்காவது தெரிஞ்சால் டெல் மீ பீஸ்ஸ்ஸ்//

  கர்ர்ர்ர் !"$$^%&((_))^ஏ"$)^£!$^**(()))"!(£("4_)(*&^%£!£^& *((0898643345789

  ஒண்ணுமில்ல சும்மா கொஞ்சம் திட்டினேன் தட்ஸால் :)
  எதுக்குன்னு சொல்ல மாட்டேன்

  பதிலளிநீக்கு
 28. ஒரு நாள் பாட்டு ரொம்ப பிடிக்கும் ஜானகி அம்மாவின் குரல் தேனாய் குழையும் இழையும் செம்ம
  காற்றினிலே வரும் கீதம் பாட்டில் இங்கே தான் கேட்கிறேன் அந்த காற்றினிலே ரிப்பீட்டா ஒலிப்பது அழகும் இனிமையும் அட்டகாசம் ..

  பதிலளிநீக்கு
 29. #வறுமை பற்றிய ஒரு காட்சியை விவரித்தால், அதை நானே உணர்ந்து அவற்றைப் புரிந்து கொள்கிறேனே அதுதான் எனக்கு ராகம்#
  இளையராஜா பாடல்களில் உயிரோட்டம் உள்ளதற்கு இதுவே காரணம் :)

  பதிலளிநீக்கு
 30. வாங்க நெல்லைத் தமிழன்.. ஏ ஆர் ஆர் - இளையராஜா பற்றி நீங்கள் சொல்லியிருப்பதில் எனக்கும் உடன்பாடு.

  பதிலளிநீக்கு
 31. வாங்க கீதா ரெங்கன். மெரீனாவுக்குள் போக யாருக்குமே அனுமதி இல்லையாம்! ஸோ நோ போராட்ட சான்ஸ்! நீங்களும் சொல்லியிருந்தீர்கள். ஒப்புக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 32. கீதா.. இப்போதைய பாடல்களில் சில நல்ல பாடல்கள் உண்டுதான். ஆனாலும் நிறைய பாடல்கள் இரைச்சல்தான். அந்தக் காலத்தில் டிரான்சிஸ்டர் கேட்டதில் இருந்த சுவாரஸ்யம் இன்றைய சிடிக்களிலும், யூ டியூப்களிலும் கிடைக்கிறதா என்ன! "ஒரு வானவில் போலே.." பாடல் ஜெயச்சந்திரன் ஹிட்ஸ்ஸில் என் முதல் சாய்ஸ்!

  பதிலளிநீக்கு
 33. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

  பதிலளிநீக்கு
 34. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூவிழி.

  பதிலளிநீக்கு
 35. வாங்க அதிரா...

  //நீதி நியாயம் கடமை நேர்மை எருமை:)).. //

  ஹா... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 36. வாங்க ஜீவி ஸார்...

  எம் எஸ் வி எம் எஸ் வி தான்.

  பதிலளிநீக்கு
 37. வாங்க அதிரா...

  // ஸ்ரீராமிடமிருந்து மகுடத்தைப் பறிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் //

  அப்படியா? மகிழ்ச்சி.

  சோபாவா? ஷோபாவா? ஷோபாவும் நானும் பி டி எஃபாக கிடைக்கலாம். ஒரு நாள் பாடலில் நீங்கள் சொல்லும் வரிகள் அனைத்தும் எனக்கும் பிடிக்கும். நீங்கள் சொல்லும் பாடல் பற்றி இணையத்திலும் யாருக்கும் தெரியவில்லை!

  http://myspb.blogspot.in/2007/12/583.html

  பதிலளிநீக்கு
 38. வாங்க கீதா... // த ம பெட்டி இல்லை //

  ஆமாம்!

  பதிலளிநீக்கு
 39. வாங்க ஏஞ்சலின்.. உங்கள் கோபத்துக்குக் காரணம் நாற்காலிதானே?!! இரண்டு பாடல்கள் பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி. பகவான் ஜி தவிர வேறு யாருமே இளையராஜா பேட்டி பற்றி ஒன்றும் சொல்லவில்லை!!!

  பதிலளிநீக்கு
 40. வாங்க பகவான் ஜி. உணர்வுகளை மிஞ்சிய ராகம் ஏது?

  பதிலளிநீக்கு
 41. அருமை அண்ணா...
  எதையும் உணர்ந்து செய்யும் போது அதன் பிரதிபலிப்பு அதிகமாகத்தான் இருக்கும்...

  பதிலளிநீக்கு
 42. Hi அதிரா
  I hope this is the song you are looking for.
  https://soundcloud.com/aravinthan-tb/h03qnsaowcay

  பதிலளிநீக்கு
 43. மிக்க நன்றி அரவிந்தன்... இதே இதே... தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 44. அனானியின் பெயர் அரவிந்தன் என்றுஎப்படி கண்டு பிடித்தீர்கள் அதிரா?!!

  பதிலளிநீக்கு
 45. ஹா ஹா ஹா இது என்ன சிதம்பர ரகசியம்:) SoundCloud இல் அவர் படத்துக்கு மேலே பெயர் போட்டிருக்கிறாரே... அதுதானே அவர் பெயராக இருக்கும் ... லிங் லயும் பெயர் வருதே:)... ஸ்ரீராம் என்னைக் குழப்புறார் கர்ர்ர்ர்:)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!