திங்கள், 30 அக்டோபர், 2017

"திங்க"க்கிழமை 171030 : ஸ்வீட் ரெசிப்பி - கீதா ரெங்கன்


ஆண்கள் தங்கள் ஸ்வீட் மனைவியை அசத்த ஒர் எளிதான ஸ்வீட்!   



வணக்கம் நண்பர்களே! ஸாரி வரதுக்கு லேட்டாகிப் போச்சு! நீங்க எல்லாம் வெய்ட் பண்ணிட்டிருப்பீங்கனு தெரியும். (அதாங்க ஏஞ்சல், அதிரா, ஸ்ரீராம், நெல்லை, மதுரை, கில்லர்ஜி, எல்லாரும் வெயிட்டிங் அடுத்த ரெசிப்பி செய்ய). அதை ஏன் கேக்கறீங்க இந்த நவராத்திரி ரவுன்ட்ஸ் சென்னை ரோட்ல சுத்திச் சுத்தி 'ஹப்பா'னு ஆயிடுச்சு. அதான் கொஞ்சம் லேட்.


இப்ப நான் சொல்லப் போற ரெசிப்பிய கேட்டு பாய்ஸ் எல்லாம் ஹே ஹூ நு சொல்லுவீங்க! பாருங்க! தீபாவளி தாண்டி விட்டது.  அவங்கவங்க பாஸ் செய்த ஸ்வீட் சாப்பிட்டிருப்பாங்க மக்கள்ஸ்..  ஸோ ஏஞ்சல், அதிரா, இப்ப நாம பாய்ஸ்க்கு அடுப்புல வைச்சு வேர்க்க வேர்க்க கிளறாம செய்யற ரொம்ப எளிதான இந்த ஸ்வீட்ட செஞ்சு அவங்க மனைவியை அசத்த, சொல்லிக் கொடுத்துருவோம் ஓகேயா!


அதுக்கு முன்னாடி  நம்ம எங்கள் ப்ளாக் கிச்சனுக்கு, குடும்ப கிச்சன் கில்லாடிகள் காமாட்சியம்மா, கீதாக்கா, வல்லிம்மா, உணவகமும் நடத்தும் கில்லாடிகள் மனோஅக்கா, நிஷா! இவங்களை விருந்தினரா அழைச்சுருக்கோம். இந்த ஸ்வீட் போணியாகுமா ஆகாதானு சுவைத்துச் சொல்ல வந்திருக்காங்க. ரெஸ்டாரன்ட்ல வைச்சா போணியாகுமானும் சொல்லுவாங்க. ஸோ வாங்க, வாங்கனு சொல்லிக்கறோம்!


சரி பாய்ஸ் எல்லாரும் ரெடியா? நோட் பண்ணிக்குங்க. அதிரா உங்களுக்கும்தான் இது. தீஞ்சு போகாம செய்து (முன்னாடி நெ.த ரெசிப்பி புளி மிளகாய கருப்பாக்கினீங்களே! ஹிஹிஹி) உங்க கணவர், பிள்ளைகளை அசத்தலாம் சத்துள்ள ரெசிப்பியும் கூட! ஏஞ்சல் பூஸாற் மேல ஒரு கண் வைச்சுக்கங்க!









பொட்டுக் கடலை – 2 கப் (இது நாங்கள்
படத்தில் காட்டியுள்ள கப் அளவு. கேக் எல்லாம் செய்ய மெஷரிங்க் கப் பயன்படுத்துவோம் இல்லையா அது. கொஞ்சம் உள்ள இருக்கற மாதிரி இருக்கும். அது சிந்தாம இருக்க. கப் விளிம்பு வரை எடுத்துக்கலாம்.)
சர்க்கரை – ¾ கப் (படத்தில் ஒரு அரை கப் + கால் கப் மெஷர்மென்ட் கப்பில்)



பாதாம் : கப்பில் காட்டியுள்ள அளவு



முந்திரிப் பருப்பு : கப்பில் காட்டியுள்ள அளவு இந்த இரண்டும் கூடுதல் வேணும்னாலும் போட்டுக்கலாம்.



நெல்லை இதை எல்லாம் சேர்த்து மிக்சில போட்டு நல்லா நைசா திரிச்சுக்கணும். ஓகேயா.

மதுரை நீங்க செய்ய வேண்டியது..

ஒரு ஃபுல் கப் தூக்கலாக மில்க் பௌடர் அளந்து ஒரு பெரிய பேஸின்ல போட்டுக்கங்க. (படத்தில் கப்பில் கொஞ்சம் உள்ளே இருக்கும். மில்க்பௌடர் வெளியில் சிந்தி விடக் கூடாது என்று அப்படி வைத்துப் படம் எடுத்ததால்)



அப்படியே படத்துல காட்டியிருக்கற அளவு உலர்ந்த திராட்சைப்பழம் எடுத்து மில்க் பௌடர்ல போட்டுக்கங்க. (உதிப இல்லாமலும் செய்யலாம். இது போட்டால் பீஸ் போடுவது கொஞ்சம் ஸ்மூத்தாக வராது என்பதால் தவிர்த்தாலும் பிரச்சனை இல்லை உங்கள் விருப்பம்.)



ஏலக்காய்ப் பொடி – ஒரு டீஸ்பூன் எடுத்து மில்க் பௌடர்ல போட்டுக்கங்க. இப்ப நெ த திரிச்சு வைச்சுருக்கற பௌடரையும் போட்டு மிக்ஸ் பண்ணுங்க.

ஸ்ரீராம் நீங்க அந்த மித்தாயி மேட் கண்டென்ஸ்ட் மில்க் – 200 கி எடுத்து அதைத் திறந்து முழுசையும் இந்த பேசின்ல இருக்கற கலவைல விடுங்க. அடில ஒட்டி இருக்கறத கலக்கி எடுக்க கால் கப் பால் எடுத்து மில்க் மெய்ட் டப்பாக்குள்ள விட்டு ஒரு ஸ்பூனால கலக்கி எடுத்து கலவைல விடுங்க. அப்புறம் நெய் – 150 ml எடுத்து ஒரு கிண்ணத்துல விட்டு அடுப்புல வைச்சு நல்லா சூடு பண்ணி கலவைல கொட்டிட்டு, சூடா இருக்கும் போதே மெதுவா கலந்துக்கங்க. கைல உணவு கலக்கும் க்ளௌ போட்டுக்கலாம். வெறுங்கையாலயும் கலக்கலாம். சப்பாத்திக்குக் கலப்பது போல, பிசிறு இல்லாம ஸ்மூத்தா இருக்கற மாதிரி கலந்துட்டு. கெட்டியா இருக்காது... ஒரு வேளை இருந்தா கொஞ்சம் பால் தெளித்துக்கலாம்.  (ஸ்ஸ்....  ஆ.... மில்க் மெய்ட்டா? நான் அப்படியே சாப்பிடுவேனே....! )

கில்லர்ஜி இந்தக் கலவை கொள்ளற மாதிரி ஒரு ப்ளேட் எடுத்து அதுல கொஞ்சம் நெய் தடவுங்க….  ஸ்ரீராம் இப்ப நீங்க கலந்ததை அந்த நெய் தடவின ப்ளேட்ல போட்டு கையாலேயே நல்லா சமமா தட்டி பரப்புங்க. அப்படியே கொஞ்ச நேரம் விட்டுருங்க.  ( கில்லர்ஜியே பிளேட்ல போட்டு கலந்துட்டார் கீதா...)



அவ்வளவுதான். கில்லர்ஜி உங்க கோடரிய கீழ போட்டுட்டு ஒரு நல்ல ஸ்பாட்டுலா எடுத்துட்டு வாங்க இல்லைனா வெண்ணைக் கத்தி எடுத்துட்டு வாங்க. ஓகே பாய்ஸ் எல்லாரும் சேர்ந்து கட் பண்ணுங்க! உங்க மனைவிக்குக் குழந்தைகளுக்குக் கொடுத்து அசத்துங்க! என்ன ஈசிதானே! உங்க வீட்டுல செஞ்சு அசத்திரலாம்தானே?!! ஜி எம் பி ஸார் உங்களுக்கும் இது ஈசிதான் ஸார். ஆண்டிக்குச் செஞ்சு கொடுங்க! ஸ்வீட் செய்யுங்க! தீபாவளி கொண்டாடுங்க!  (பார்க்க நல்லாயிருக்கு... சாப்பிட பயமாயிருக்கு! )




சரி நம்ம சீஃப் கெஸ்ட் எல்லாரும் என்ன சொல்லறாங்கனு பார்ப்போம்!


*****************************************


என் மகனுக்கு மில்க் ஸ்வீட் என்றால் மிகவும் பிடிக்கும்.. எனவே நான் பல ஸ்வீட்களில் மில்க் பௌடர்/கண்டென்ஸ்ட் மில்க்/பால் கலந்து செய்து பார்ப்பது வழக்கம். கடலை மாவும் மில்க் பௌடரும் கலந்து ஸ்வீட், மைதா மாவில் மில்க்பௌடர், வெனிலா, சாக்கோ கலந்து டபுள் டெக்கர் ஸ்வீட், ரவா லாடுவில் மில்க் பௌடர் கலந்து என்று செய்திருக்கிறேன். அவனுக்கு மாலாடும் மிகவும் பிடிக்கும். பல வருடங்களுக்கு முன் அப்படிக் கலந்து செய்து பார்த்த ரெசிப்பிதான் இது. இப்போது திங்க பதிவுக்கு.


(ஸ்வீட் செய்து கொண்டிருந்த போது அமெரிக்காவிலிருந்து வாட்சப் கால்கள் வந்துகொண்டே இருந்தது. அதனால் பெர்ஃபெக்டாகக் கலக்க முடியலை....அதன் படமும் எடுக்க மிஸ் ஆகிப் போனது. அதனால் ஸ்வீட் ப்ளேட்டில் தட்டிப் பரப்பியதும் கொஞ்சம் பிசிறு இருக்கிறது...நன்றாக நைசாகப் பொடித்து ஸ்மூத்தாகக் கலந்தால் பிசிறு இல்லாமல் வரும்)


எங்கள் ப்ளாகிற்கு மிக்க நன்றி!


90 கருத்துகள்:

  1. தித்திக்கும் திங்கள்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. நம்மை யாரும் ஒத்தாசைக்குக் கூப்பிடலை...

    அதனால....

    பதிலளிநீக்கு
  3. ஏ.. சாமீய்..

    வயசான காலத்தில முந்திரி பாதாம் எல்லாம் கேக்குதா?..

    இரு.. இரு.. அத்தாச்சி..கிட்ட சொல்றேன்..

    பதிலளிநீக்கு
  4. தமிழ மணத்தில் இணைத்து முதல் வோட்டும் போட்டுட்டேன்

    பதிலளிநீக்கு
  5. எத்தனை தரம் வந்து பார்த்து ஏமாந்துட்டேன்

    பதிலளிநீக்கு
  6. ஹலோ அது என்ன மதுரைக்கு வேலை தரும் போது ஃபுல் ஒரு கப் ந்னு சொல்லுறீங்க அவர் பாட்டுல பழக்க தோஷத்தில கையில் இருக்கிற கப்பில் இருந்து எதையாவது போட்டு மது ரம் ஸ்வீட் செஞ்சுடப் போறார்

    பதிலளிநீக்கு
  7. ஸ்வீட் மனைவிக்கு நான் எங்க போறது ஹும்ம் ஸ்விட்டான மனைவி தேவைன்னு ஒரு விளம்பரம் தரனும் ஹும்ம் இந்த ஸ்வீட் பண்ண ஒரு புது மனைவியை தேட வேண்டிய நிலமையாகி போச்சே இப்ப நான் என்ன பண்ணுவேன் ஏது பண்ணுவேன் ஒன்னுமே புரியலையே

    பதிலளிநீக்கு
  8. /நம்மை யாரும் ஒத்தாசைக்குக் கூப்பிடலை....///

    ஸ்வீட் பண்ணியதே உங்களுக்குதானே துரைசெல்வராஜ்

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் சொன்ன கத்தியை எடுக்காமல் நம்ம கோடரியை வச்சு போட்டதாலதான் கட்டிங் ஸ்மூத்தாக வந்துருக்கு பாருங்க...

    ஜோதியில் எம்மையும் ஐக்கியமாக்கியமைக்கு நன்றி.

    படங்கள் தெளிவு & அழகு.

    பதிலளிநீக்கு

  10. வீட்டுல கோடாரி இல்லாதவங்க இந்த ஸ்வீட்டை பண்ண முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  11. வூட்டுகாரரை சந்தோஷப்படுத்த யாரவது முயற்சி எடுத்து இந்த ஸ்வீட்டை செய்து கொடுத்து அதை சாப்பிட்ட வூட்டுகாரர் தேம்ஸ் நதியில் போய்விழாமல் இருந்தா சரி அப்படி ஆசையாய் செய்து கொடுக்கப்போகும் அந்த பெண்மணி யாருன்னு யாருக்காவது தெரியுமா? தெரியலைன்ன் ஒரு சின்ன க்ளு அவங்களுக்க்கு வயது இப்ப 61 ஆனால் அதை மாற்றி எப்போதுமே ஸ்வீட் 16 ந்னு சொல்லிகிட்டு இருப்பாங்க

    பதிலளிநீக்கு
  12. ஸ்வீட் 16 இப்ப கனவு கண்டு கொண்டு இருக்கும் நேரம் தேம்ஸ் நதிக்கரை நேரம் இரவு 2.15 அதனால அவங்க வரதுக்கு முன்னால் நல்லா எல்லோரும் கலாய்க்கலாம்

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. துரை சகோ வாங்க மிக்க நன்றி. உண்மையா சொல்லணும்னா உங்கள் மிக மிக அழகான விளக்கமான ஆன்மீகப் பதிவுகளும், நல்ல தமிழும, மேன்மையான கருத்துகளும்் உங்கள் மீது மதிப்பும் மரியாதையையும் வரவழைத்து ஒரு குருவைப் போன்று பார்த்ததால் உங்களையும் சேர்த்து கலாய்க்க மனம் வரலை. ஆனால் சமீபத்திய உங்கள் கலாய்க்கும் பாணி பின்னூட்டங்கள் கண்டு உங்களையும் என் அடுத்த திங்க வில் சேர்த்துள்ளேன்...பதிவு ரெடி ஆனால் அதை செய்து புகைப்படம் எடுக்க முடியலை... கேமரா சர்வீஸ் சென்டரில் இருப்பதால் .... சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று நினைத்தேன்....இப்ப நீங்க ரகசியத்தை உடைக்க வைச்சுட்டீங்களே!!!!!...ஹாஹாஹா.....
    என் கணினி சரியாக இல்லை..அது வேலை செய்யும் போது கருத்துகள் கொடுக்கிறேன்...இதை வாட்ஸாப்பில் அடித்து கட் பேஸ்ட் செயறேன்.... கணினியை இயக்க முயற்சி செயகிறேன்..

    மிக்க நன்றி துரை சகோ...

    கருத்தில் காப்பி செய்யும் போது ஒரு போன் நம்பரும் வந்துவிட்டதால் நீக்கி மீண்டும் இடுகிறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  15. தங்களது அன்பான பதிலுரைக்கு மனமார்ந்த நன்றி..

    குருவானாலும் சீடன் ஆனாலும் நகைச்சுவை உணர்வைக் கடந்து விட முடியுமா!?..

    நகைச்சுவையும் நலம் கொடுக்குமே..

    கீதா அவர்களுக்கு மீண்டும் நன்றி..

    பதிலளிநீக்கு
  16. @ Avargal Unmaigal said...
    //நம்மை யாரும் ஒத்தாசைக்குக் கூப்பிடலை....///

    ஸ்வீட் பண்ணியதே உங்களுக்குதானே துரைசெல்வராஜ்..

    தங்களுக்கு நன்றி..

    இதையே அவங்க மனசார சொல்லிட்டதால -
    இதோ ஒன்னுக்கு ரெண்டா எடுத்துக்கிட்டேன்..
    அப்புறமா குறையுதே..ன்னு தேடாதீங்க!.. சொல்லிட்டேன்!..

    பதிலளிநீக்கு
  17. புது வெர்ஷன் ஸ்வீட்! எவ்வளவு நாட்களுக்கு கெடாமல் இருக்கும்?!

    பதிலளிநீக்கு
  18. அடுப்புல ஜீனிபாகு கூட வைக்கவேண்டாமா? மில்க் மெய்டு உபயொகப்படுத்தியுள்ளதால் ரொம்ப இனிப்பா இருக்குமே? எதுவும் பிராசஸ் செய்யாதது என்பதுவேறு மனதில் தோன்றுகிறது. நேரமிருப்பின் சகய்துபார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. மிகிமா... பால் விடறது, process பண்ணாத்து காரணமா 2 நாள் நல்லாருக்கும்.. குளிர்சாதனப் பெட்டியில் வைத்தா ஒரு வாரம் தாங்கலாம்.

    பதிலளிநீக்கு
  20. பார்க்க அழகாக இருக்கிறது.
    திராட்சை தவிர்த்து செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. //புது வெர்ஷன் ஸ்வீட்! எவ்வளவு நாட்களுக்கு கெடாமல் இருக்கும்?!

    என்? சாப்பிட மாட்டீங்களா? எல்லாம் ரெண்டே நாள்ல காலியாயிடும் பாருங்க.

    பதிலளிநீக்கு
  22. //துரை சகோ வாங்க மிக்க நன்றி. உண்மையா சொல்லணும்னா உங்கள் மிக மிக அழகான விளக்கமான ஆன்மீகப் பதிவுகளும்..

    பயந்தே போனேன்..

    பதிலளிநீக்கு
  23. //வீட்டுல கோடாரி இல்லாதவங்க இந்த ஸ்வீட்டை பண்ண முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

    😊😊

    பதிலளிநீக்கு
  24. இந்த மாதிரிப் பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி சேர்த்து வறுத்துப் பொடித்து வெல்லம் சேர்த்து உருண்டை பிடிச்சிருக்கேன்! ஏலக்காய், மு.ப. உண்டு! நோ உ.தி.ப. ஆனால் மில்க் மெயிட் சேர்த்துச் செய்ததில்லை. வட மாநிலங்களில் வசித்தபோது அதிகம் மில்க்மெயிட் ஸ்வீட்! தில்லையகத்து கீதா சொன்னது போல் எல்லாத்திலேயும் மில்க் மெயிட் உண்டு! இப்போ மில்க்மெயிடே வாங்கறதில்லை! :) சூடாக நெய்யைச் சேர்ப்பதால் இதை உருண்டையாகவும் பிடிக்கலாம். இம்மாதிரி வில்லைகளாகவும் போடலாம்.

    பதிலளிநீக்கு
  25. காலைலேருந்து வந்து வந்து பார்த்துட்டுக் கடைசியிலே ப்ளாகே திறக்காமல் இப்போ முகநூல் சகோதரர் பெரியவர் வரகூர் நாராயணன் அவர்கள் கொடுத்த லிங்கின் மூலம் இங்கே ஒருவழியா வந்து சேர்ந்தேன். :) இந்த ஸ்வீட் சாப்பிட இத்தனை பாடு! :)))))))

    பதிலளிநீக்கு
  26. எல்லாமே வீட்டில் இருக்கு. இன்னிக்கே செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  27. துரை செல்வராஜு சகோ! முந்திரி, பாதாம் உலர்ந்த திராட்சை இல்லாமலும் செய்யலாம்...குங்குமப் பூ கூடப் போட்டு செய்யலாம். பதிவில் சொல்ல விட்டுப் போன இரண்டில் ஒன்று உங்களுக்கு மற்றொன்றுன் நெ த கேட்டிருக்கார் அவருக்கு....

    மிக்க நன்றி துரை செல்வராஜு சகோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  28. மதுரை எனது பங்கையும் சேர்த்து இன்று ஏஞ்சல் மற்றும் அதிரா வந்து கலாய்ப்பார்கள்.

    கருத்து மட்டும் இடுகிறேன்.

    மதுர.....மதுரம் என்றாலே ஸ்வீட்தானே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. ராஜி செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க. நல்லாருக்கும்.
    மிக்க நன்றி கருத்திற்கு
    கீதா

    பதிலளிநீக்கு
  30. கீதாக்கா நீங்கள் இது போன்று உங்கள் செய்முறையும் டிப்ஸும் சொல்லுவீர்கள் என்பதால்தான் நான் வெல்லம்/நாட்டுச்சர்க்கரை சேர்த்துச் செய்தது பதிவி குறிப்பிடலை. உருண்டையும் பிடிக்கலாம். அதற்கு ஏற்றாற் போல் மாவைக் கலக்கணும்.

    மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  31. ஹ(அ)ப்பா துரை சகோ உங்களை அல்ல! துரை செல்வராஜு என்று சொல்ல விடுபட்டுவிட்டது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. அப்பா துரை சகோ திராட்சை தவிர்த்தும் செய்யலாம் ஈஸிதான் செய்து பாருங்க நல்லாருக்கும்...சொல்லுங்க அப்புறம்..பிடிச்சுதானு

    கீதா

    பதிலளிநீக்கு
  33. நெ த ப்ராஸஸ் லட்டுவிற்கும் செய்வதில்லையே...ரவாலாடு, மாலாடு அது போலத்தான்.

    சர்க்கரை இது இனிப்புப் பிரியர்கள் வீட்டில் அதிகம் இருப்பதால் சேர்த்தது. மகனுக்குச் செய்வதென்றால் அரை கப் சர்க்கரை தான் சேர்த்துக் கொள்வேன். (பதிவில் ப்ராக்கெட்டில் குறிப்பிட மறந்து போனேன். அப்புறம் அதைச் சேரு இதைச்க சேரு என்று ஸ்ரீராமை டிஸ்டர்ப் செய்ய வெண்டாம்னு விட்டுட்டேன்.. நன்றாகவே வரும். குங்குமப்பூ வும் வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம். அது தனி டேஸ்ட். ஹல்டிராம் போல இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  34. மிகிமா ப்ராஸஸ் செய்யலைனாலும் 4 நாள் வரை கெடாமல் இருந்தது தீபாவளி சமயத்தில் முன்பு செய்தப்ப. மழை சமயமாக இருந்ததால் இருக்கலாம். நெத சொல்லியிருப்பது போல் ஃப்ரிட்ஜில் இருந்தால் ....இருந்தால் (எங்கள் வீட்டில் வைக்கும் நிலைமை இல்லை என்பதால் வைத்துப் பார்த்ததில்லை) ஒருவாரம் இருக்கலாம்...

    மிக்க நன்றி மிகிமா

    பதிலளிநீக்கு
  35. நெ த மாலாடு ப்ராஸஸ் தான்...ஸோ ஜீனிப் பாகு எதுவும் வேண்டாம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  36. துரை செல்வராஜு சகோ!! எடுத்துக்கோங்க பயப்படாம. ஒன்னும் ஆகாது! இன்னுமே எடுத்துக்கோங்க...
    மிக்க நன்றி...

    கீதா

    பதிலளிநீக்கு
  37. முதலில் நானும் முன்பு என்னுடைய பிளாகில் கொடுத்த மாலாடு போல இருக்கும்போல இருக்கிரதே என்று நினைத்துக்கொண்டே படித்தேன். சுடவைக்க,கிளற என்று கூட வேலை இல்லை போல என்று நினைக்கையில், அப்பாடா நெய்யை சுடவைத்து இருக்கிறீர்கள். நிஜமா,பொரிமாவு,விளக்குமாவு தவிர அப்படியேகலப்பது அவல் இருக்கு அவ்வளவுதான். நான் யோசனை செய்த வரையில் இப்போது. அந்த பருப்பு வகைகளை வறுத்துப் போட்டு அரைத்திருக்கலாமோ. gகாஸ் எப்படியும் நெய்யைச் சுடவைத்தது.நான் gகாஸ் உபயோகிக்காததோ என்று முதலில் நினைத்தேன். மொத்தத்தில் சூப்பர் ஐடியா. அரைப்பதில் சர்க்கரை குறைவாகச் சேர்த்து, மில்க்மெய்ட்,பால்ப்பவுடரினால் அதிகரித்தது,நன்றாக மாவு பிசைவதுபோல அழுத்திப் பிசைந்து, கலவைகளை ஒன்று சேர்த்து, தட்டில் கொட்டி வில்லை போடுவதுவரை வேலைவாங்கி, அழகாக எழுதியிருப்பது, யாவற்றிற்கும் என் பாராட்டுகள்.அரைத்த கலவை ஈரத்தை உறிஞ்சி பதமாக செயல் படுகிறது. நான் மாலாடுவில் முந்திரி வகைகளை அரைத்துதான் சேர்ப்பேன். உருண்டை நல்ல ஷேப்பில் வருவதுடன் ருசியைக் கூட்டும்.
    இந்தஸ்வீட்டை
    சாப்பாட்டுடன் ஸ்வீட் ஒரு ஐட்டமாக முதலில் கொடுத்து, என்ன ஸ்வீட் இது என்று கேட்க வைத்து விட்டால், பிறகு தானாகவே பாப்புலராகி விடும். ரொம்ப நேரம் வரை பார்க்கவே முடியவில்லை பிளாகை. இப்போது நான் கில்லாடி எல்லாம் இல்லை. தள்ளாடிதான். மெதுவாகவே வருகிறேன். வாயில் போட்டால் கரையும் இனிப்பா. ஸாமான்கள் இருந்தால் ஒன்றன் பின் ஒன்றாக சுலபமாகச் செய்யலாம். இப்படியெல்லாம் கூட யோசிக்கணும். எங்கள் பிளாக் புதுசு புதுசா போடறது.என்னைக் கூப்பிட்டதற்கு மிகவும் நன்றி. எங்கள் பிளாகிற்கும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  38. இதுவரை வந்ததில் பரபரப்பு, பதைபதைப்பு, சலசலப்பு எல்லாம் அனாயாசமாக ஒரே ஷாட்டில் ஏற்படுத்திய ஒரே ரெஸிப்பி இதுதான். காரணம் பின்வருமாறு:

    1) ’ஸ்வீட் மனைவி’யை அசத்த-ன்னு சர்ச்சைக்குரிய வகையில் அறிமுகப்படுத்தியதால் ஸ்வீட்டை விட்டுப்புட்டு, சில ஆண்கள் ஜன்னலுக்கு வெளியே ’ஸ்வீட்டானவள்’ வருகிறாளா என நோட்டம்விட்டுக்கொண்டிருப்பதாய் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

    2) ஸ்வீட்டைக் கூறுபோட பயங்கர ஆயுதம் உபயோகப்படுத்தப்பட்டதாக பிரபல பதிவர் ஒருவர் கூறியிருப்பது, ஸ்வீட்டை ஆசையாக உள்ளே தள்ளுபவர்களையெல்லாம் மெர்ஸலாக்கிவிட்டது. சிலர், கைககள் நடுங்குவதை வெளியில் காட்டாது மறைக்க, பேண்ட் பாக்கிட்டிற்குள் கைகளை விட்டுக்கொண்டு, ஸ்வீட்டை உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன.

    3) திங்கள் ரெஸிப்பிகளிலேயே முதன்முறையாக - இதைப் பண்ணும்போதுதான், தாங்கமுடியாமல் அமெரிக்கா குறுக்கிட்டது – ஏகப்பட்ட வாட்ஸப் கால்களை அனுப்பி. இதனால், சர்வதேச சதிக்கான தடயம் தெளிவாகிறது என்கிறார்கள் நிபுணர்கள்..

    பதிலளிநீக்கு
  39. ஹூம், மறுபடி முகநூல் வழியாத் தான் உள்ளே வர முடிஞ்சிருக்கு! இந்தத் தில்லையகத்து கீதா எல்லோரையும் வேலை வாங்கிட்டுக் கடைசியில் க்ரெடிட் அவர் எடுத்துக்கறாரே! யாருமே பார்க்கலையா? அதிரா, இதைக் கொஞ்சம் என்னனு கவனிங்க! நீங்க வந்து சொல்லணும்னே இந்தக் கருத்தை இப்போத் தாமதமாச் சொல்றேன். :)))) சீக்கிரமா வாங்க, வாங்க ஓடி ஓடி வாங்க! :)))))

    பதிலளிநீக்கு
  40. எல்லோருக்கும் வேலையைப் பிரிச்சுக் கொடுப்பதில் கில்லாடி கீதா நீங்க! இனிமே கி.கீ தான் உங்க பேருனு வைச்சுக்கலாமா? :) எனக்கும் காமாட்சி அம்மா சொல்றாப்போல் ப்ளாக் ரொம்ப நாழித் திறக்கவே இல்லை! அப்புறமா எப்படியோ வந்தது!

    பதிலளிநீக்கு
  41. நான் வந்துட்டேன்ன் கீதாஆஆஆஆஆஅ... என்னாதூ சுவீட்டா? இருங்கோ இண்டைக்கே செய்து கொடுத்து, நாளைக்கே புயுக்:) கொம்பியூட்டர் வர வைக்கிறேன்ன்ன்... பூஸோ கொக்கோ?:)...

    பதிலளிநீக்கு
  42. ennaஇவ்ளோ நகைச்சுவை உணர்வோடிருக்கும் துரை அண்ணனை.. சாமியாராக்கி வச்சிருந்தமைக்கு என் வன்மையான கண்டனங்கள் கீதா:)... இதை அறிஞ்சா கலா அண்ணி என்ன நினைப்பா?:)..
    -----------------------------------------------

    எனக்கும் இப்படித்தான் சிலரோடு பேசப் பயம், என்ன நினைப்பினமோ.. பதில் சொல்லுவினமோ சொல்ல மாட்டினமோ... நான் ஏதும் நகைச்சுவையாக எழுதப்போய் அதைத் தப்பாகப் புரிஞ்சிடுவினமோ என்றெல்லாம் யோசித்துத்தான், நானாகப் போய் யாரோடும் பேசப் பயப்படுவேன்...

    அப்படித்தான் ஆரம்பம் துரை அண்ணனை அஞ்சுவின் பக்கம் பார்த்திருக்கிறேன், சீரியஸ் ஆனவர்போல இருக்கே என நினைச்சிருந்தேனே அவ்வ்வ்வ்:)..

    ----------------------------------------------
    இதேபோலத்தான் ஏகாந்தன் அண்ணனைப் பார்த்தும் பயந்து கொண்டிருந்தேன், ஹா ஹா ஹா:)... ஒவ்வொருவருக்குள்ளிருக்கும் நகைச்சுவை உணர்வு வெளிப்படும்போதுதான் பயம் போகுது எனக்கு:)...

    அப்போ இப்ப பயமில்லையா அதிரா எண்டெல்லாம் கேய்க்கப்பூடாது கர்ர்ர்:).

    பதிலளிநீக்கு
  43. ///Avargal Unmaigal said...
    ஸ்வீட் மனைவிக்கு நான் எங்க போறது ஹும்ம் ஸ்விட்டான மனைவி தேவைன்னு ஒரு விளம்பரம் தரனும் ஹும்ம் ///

    ஹலோ ட்றுத், ஸ்வீட் மனைவி எண்டதும் ஓவராத் துள்ளி... திருதராஸ்டிரன் ரேஞ்சுக்குப் போக முயற்சிக்கபூடாது கர்ர்ர்ர்:)... இங்கு கீதா சொல்லியிருக்கும் சுவீட்டான மனைவி எண்டால்.. சுகர் பேஷண்டைக் குறிக்குமாக்கும் ஹையோ ஹையோ:)..

    இருங்கொ சிரிச்சிட்டு வாறேன்ன்.. ஹாஅ ஹா ஹா... என் பக்கத்தில் பாவக்காய் ரெசிப்பி போட்டபோது.. இந்த சுவீட் பேசன் எனில் யார் என்பதை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவரே எங்கட டிடி தான்ன்:).. ஹா ஹா ஹா:)..

    ///தெரியலைன்ன் ஒரு சின்ன க்ளு அவங்களுக்க்கு வயது இப்ப 61 ஆனால் அதை மாற்றி எப்போதுமே ஸ்வீட் 16 ந்னு சொல்லிகிட்டு இருப்பாங்க ///

    haa haa haa karrrrrrrrrr:) ட்றம் அங்கிள் மட்டும் இதைப் பார்த்தாரோ.. ட்றுத்தை நாடு கடத்திடுவார்ர்..

    ஜாக்க்க்க்க்ர்தை(ஹையோ இது நேக்குச் சொன்னேன்ன்:))...

    என் அயகு:) பார்த்து அமெரிக்காவுக்குப் பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராமை:).... வழி விடுங்கோ வழி விடுங்கோ கட்டிலுக்குக் கீழயே இருந்து மிகுதியை ரைப்பூ பண்ணுவதுதான் பெட்டர்:)

    பதிலளிநீக்கு
  44. ///3) திங்கள் ரெஸிப்பிகளிலேயே முதன்முறையாக - இதைப் பண்ணும்போதுதான், தாங்கமுடியாமல் அமெரிக்கா குறுக்கிட்டது – ஏகப்பட்ட வாட்ஸப் கால்களை அனுப்பி. இதனால், சர்வதேச சதிக்கான தடயம் தெளிவாகிறது என்கிறார்கள் நிபுணர்கள்..///

    ஹா ஹா ஹா இப்போதானே மீ உஷாரானேன்ன்.. நானில்ல நானில்ல அந்த சீனிப்பாகை எரிக்காமல் காச்சிக் கொடுத்தது நானில்லை:) மீ ஒரு அப்பாவீஈஈஈஈ:)....

    அப்பாடா இனித்தான் கீதாவின் ரெசிப்பிக்குள் நுழையப்போறேன்

    ஈசியான அருமையான சுவையான சுவிட் போலத்தான் தெரியுது கீதா, இன்றே செய்து பார்த்திடலாம் ஆனா கொன்டென்ஸ்ட் மில்க் மட்டும் வீட்டில் இல்லை.. நிடோ மில்க் பவுடர் ஓகேதானே?,,,

    விரைவில் ட்றை பண்ணுவேன். இப்போ விரதம் முடிஞ்சுதெல்லோ ச்ச்ச்சோஓ மீ ரொம்ப உஷாராக இருக்கிறேனாக்கும்:)..

    பதிலளிநீக்கு
  45. ///Geetha Sambasivam said...
    ஹூம், மறுபடி முகநூல் வழியாத் தான் உள்ளே வர முடிஞ்சிருக்கு! இந்தத் தில்லையகத்து கீதா எல்லோரையும் வேலை வாங்கிட்டுக் கடைசியில் க்ரெடிட் அவர் எடுத்துக்கறாரே! யாருமே பார்க்கலையா? அதிரா, இதைக் கொஞ்சம் என்னனு கவனிங்க! நீங்க வந்து சொல்லணும்னே இந்தக் கருத்தை இப்போத் தாமதமாச் சொல்றேன். :)))) சீக்கிரமா வாங்க, வாங்க ஓடி ஓடி வாங்க! //

    த்த்தோஓஓஓஒ வந்துட்டேன்ன் கீதாக்கா... எங்க எங்க எங்க வைக்கோணும் வெடி?:).. சொல்லுங்கோ பட்டினைத் தட்டிடுறேன்ன்:) haa haa haa..

    https://i.ytimg.com/vi/1DF93e8GBqw/hqdefault.jpg

    ஹா ஹா ஹா அது வந்து கீதாக்கா.. யூ ரியூப்பைப் பார்த்துப் பார்த்துச் சமைக்கேலாதெல்லோ:).. அதனாலதான்.. அவ அங்கின பார்த்துப் பார்த்து ஒவ்வொருத்தராக் கூப்பிட்டுக் கூப்பிட்டுச் செய்யச் சொல்றா:).... இதால பாருங்கோ கீதா குண்டாகிட்டா கொம்பியூட்டர் முன் இருந்தே..:).. மீ ஓடி ஓடி வேலை செய்தே ரொம்ப வயக்கெட்டுப் போயிட்டேன் கீதாக்கா:).

    ////அதிரா உங்களுக்கும்தான் இது. தீஞ்சு போகாம செய்து (முன்னாடி நெ.த ரெசிப்பி புளி மிளகாய கருப்பாக்கினீங்களே! ஹிஹிஹி) உங்க கணவர், பிள்ளைகளை அசத்தலாம் சத்துள்ள ரெசிப்பியும் கூட! ஏஞ்சல் பூஸாற் மேல ஒரு கண் வைச்சுக்கங்க!///

    ஹா ஹா ஹா என்னாதூஊ கண்ணை வைக்கிறதொ?:).. கண் பற்றிப் பேசினாலே அஞ்சு பொயிங்கப்போறா இப்போ:) ஏற்கனவே கண்ணை என்மேல போட்டதாலதன் இன்னும் வலிக்குதாம் ஹா ஹா ஹா அந்தச் திருச்செந்தூர் முருகந்தேன் என்னைக் காப்பாத்தோணும் ஜாமீஈஈ:)..

    பார்த்தீங்களோ கீதாக்கா அஞ்சுவுக்கு நோகாமல் நொங்கெடுக்கும் வேலை:) மீக்கு மட்டும் நெருப்புக்குப் பக்கத்தில நிண்டு காய்ச்சும் வேலை:) இதில இருந்து தெரியுதோ?:) அப்பாவியை எல்லோரும் வேலை வாங்கீனம்:) ஹா ஹா ஹா.... மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)

    பதிலளிநீக்கு
  46. கரந்தை சகோ மிக்க நன்றி கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  47. காமாட்சி அம்மா இப்படியான ஒரு ஷோவுக்கு, கரெக்டா ஒரு சிறப்பு விருந்தினர் என்ன சொல்லனுமோ அதை ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க காமாட்சிம்மா....ரொம்ப நன்றி ம்மா...இது ரொம்ப ஈசியான ஒன்று...நீங்கள் சொல்லிருப்பது போல் அவல், எல்லாம் செய்யலாம் அடுப்பில் வைக்காமல் ஆம்...ரொம்ப நன்றிம்மா விரிவான கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  48. ஏகாந்தன் சகோ உங்கள் கமென்ரை மிகவும் ரசித்தேன்.... இன்று கும்மி அடிக்கும் மன நிலையில்
    இல்லாததால்...உங்களை விட்டுவிட்டேன்!!! நன்றி சகோ!

    கீதா

    பதிலளிநீக்கு
  49. கீதாக்கா ரெசிப்பிஸ் க்ரெடிட் எல்லாம் எங்கள் குழுவிற்கே!!! அதுவும் ஸ்ரீராம் க்கு முதலில் கேட்டு வாங்கிப் போடும் கதை போல இங்கு எல்லாரும் எழுத இடம் அளிக்கும் அவருக்கும் கௌதம் அண்ணாவுக்கும் மற்ற ஆசிரியய்ர்களுக்கும்தான் முதலில் க்ரெடிட்!!! கி கீ !!! ரசித்தேன் அக்கா!!

    கீதா

    பதிலளிநீக்கு
  50. அதிரா உங்கள் கமென்ட் எல்லாம் மிகவும் ரசித்தேன்....விரிவாக எழுதி கலாய்க்க முடியவில்லை. மனமும் இல்லை....கணினியும் மீண்டும் எப்போ நிக்கும்னு தெரியலை. ஸோ அது வேலை செய்யற நேரத்துல சீக்கிரமா கமென்ட் கொடுக்கணும்னு சின்ன சின்னதா அடிச்சுட்டுப் போறேன்....உங்க பதிவும் இன்னும் பாக்க்லை...பாக்கனும்...கணினி க்ரோம் எல்லாம் நிக்கறாதுக்குள்ள..ஸோ இப்ப மீ போறேன். எனக்குப் பதிலா ஏஞ்சல் என் பங்கையும் சேர்த்து ஏஞ்சல் வருவாங்க..!!!!.

    கீதா

    பதிலளிநீக்கு
  51. ஸ்ரீராம் அடுத்து கணினி கோச்சுக்க்றதுக்கு முன்னாடி உங்களுக்கு பெரிய நன்றி சொல்லிடறேன்...

    மக்கள்ஸ் தீபாவளிக்கு முன்பே எழுதியதால் இதில் தீபாவளிக்கு பாய்ஸ் எல்லாம் செய்து கொடுப்பது போல் சொல்லிருந்தேன். எங்கள் ப்ளாக் கிச்சன் ஸ்லாட் ஃப்ரீயாக இல்லை. இன்றைய தேதிக்கு ஏற்றார் போல் ஸ்ரீராம் மாற்றி இருப்பதாகவும் சொல்லியிருந்தார். மாற்றியதற்கு மிக்க நன்றி...... இன்று வரும் என்று ஸ்ரீராம் சொல்லியிருந்தது போலும் மறந்தே போனேன். இன்று மொபைலில் மெயில் பாக்ஸில் சீக்கிரமே வந்துவிட்டது சத்தம் கேட்டு பார்த்தால் இந்தப் பதிவு...

    ஸ்ரீராம் இறுதியில் வரும் தீபாவளி அடுத்த வருட தீபாவளிதானே!!...ஸ்ரீராம் பயப்படாமல் சாப்பிடலாம் இந்த ஸ்வீட் நன்றாகவே இருக்கும். கில்லர்ஜியெ கொட்டி பரப்பியதற்கும் நன்றி!!! உங்களுக்கு எல்லாம் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுக்க்கும் மும்முரத்தில் இருந்ததால் நான் கவனிக்கவில்லை போலும்!!

    மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம்...எல்லாவற்றிற்கும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  52. மாற்றியமைத்திருப்பதும் மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க ஸ்ரீராம்....இப்படி எங்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுப்பதற்கும் எத்தனை நன்றி வேணாலும் சொல்லலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  53. என் செல்லம் மகள் ப்ரௌனி நேற்று எங்களவிட்டுப் பிரிந்துவிட்டாள். இன்று அவளை விசாரித்து குடும்பம், நட்பு, என் மகனின் நட்பு வட்டத்தில் அனிமல்ஸ் ப்ரியர்கள் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் கணினி வேலை செய்யும் கொஞ்ச நேரத்திலும் பதில் போட முடியாமல்..தாமதமாகிடுது...கருத்துகளை ரசித்தாலும், மனம் இயல்பாக வேலைகளைச் செய்தாலும், இருந்தாலும் ஒரு நிலையில் இல்லை....ரொம்ப சமத்துப் பெண் ப்ரௌனி....வெரி கோப்பரேட்டிவ், மனிதக் குழந்தை போல நாம் சொல்லுவதைப் புரிந்து கொண்டு நம் கண்ணோடு கண் பார்த்து கவனிப்பவள். ..அப்படியே புரிந்து கொண்டு உடன் அதைச் செயல்படுத்துபவள். அவளுடைய லாஸ்ட் மொமென்ட்ஸ் இன்னும் என் கண்ணில்..நல்ல காலம் அவள் உயிர் பிரிவதைப் பார்க்கலை...கடைசி நிமிடங்களில் கூட ...நான் அழைக்க அழைக்க.என்னை தலையைத் தூக்கிப் பார்த்தது மட்டுமே நினைவில்... அப்புறம் பிரிந்து புதைத்து கேண்டில் ஏற்றி வைத்தது...

    கீதா

    பதிலளிநீக்கு
  54. கீதாரங்கன் - உங்கள் வருத்தத்தைப் புரிந்துகொள்கிறேன். அந்த மனநிலையிலும் பின்னூட்டங்கள் எழுதியிருக்கீங்க. நானும்ஏன் மனசு சரியில்லைனு சொல்லியிருக்காங்கன்னு நினைத்துக்கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  55. கம்ப்யூட்டர் க்ராஷ் -ஆ இப்படி அப்செட் செய்திருக்கிறது என்று நானும் குழம்பினேன் முதலில்.

    ப்ரௌனி போகும்போது அருகிருந்தீர்கள் என்பது நல்லது. அதற்கும் புரிந்திருக்கும் உங்களை விட்டு இறுதியாகப்போகிறோம் என்று - என நினைக்கிறேன். சிரமப்பட்டுக் கடைசியாக அது உங்களைப்பார்த்திருக்கலாம்.

    வேறொன்றும் செய்வதற்கில்லை. சொல்வதற்கில்லை. இருந்தும் மனது அலைக்கழிவது நிறுத்தமுடியாதது - சில நாட்களாவது.

    பதிலளிநீக்கு
  56. கீதா, இனிப்பான எளிதான பலகாரம் எல்லோரையும் செய்ய வைத்தது அருமை.

    சிறப்பு விருந்தினர் கருத்து அருமை.

    அனைவரின் பதில்கள் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  57. ப்ரெளனியின் இழப்பு கேட்டு வருத்தம் அடைந்தேன். உங்கள் மனநிலை புரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
  58. ப்ரௌனி கண் முன் வந்து நிற்கும் என்று உணர்கிறேன். அதற்கு என் இரங்கல்கள். மகளாக இருந்தது உங்கள் உணர்வில் புரிகிறது. அனுதாபங்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  59. அஆவ் !! கீதா ரெசிப்பியா இன்னிக்கு ..கொஞ்சம் லேட்டா வந்திட்டேன் ..
    ஆமா நாங்க வெயிட்டிங் தான் புது ரெசிப்பீஸ் செய்து பார்ப்பது தனி ஆசை .

    //அடுப்புல வைச்சு வேர்க்க வேர்க்க கிளறாம செய்யற//

    ஹாஹா அப்போ எங்க வீட்ல அப்படியே இதை செய்ய சொல்லிடறேன் :)

    ஆமா பூசார் மேலே ரெண்டு கண்ணையும் வைக்கிறேன் :) கியூரியாசிட்டியில் தொட்டு பார்ப்பாங்க :)

    பதிலளிநீக்கு
  60. loss of a beloved pet is unbearable geetha :(.i know she meant a lot to you .these 4 legged creatures have become part of our families .
    brownie will always hold a special place in your heart..take care

    பதிலளிநீக்கு
  61. சீக்கிரம் செய்ய சொல்றேன் கீதா :) விரைவில் வரும் இந்த ஸ்வீட் படம் என் பக்கம் .

    பதிலளிநீக்கு
  62. அப்பாவி athira said...
    நான் வந்துட்டேன்ன் கீதாஆஆஆஆஆஅ... என்னாதூ சுவீட்டா? //



    என்னை ஸ்வீட் கேர்ள்னு கீதா சொன்னதும் உருண்டு பிரண்டு பூனை வந்தாச்சு
    //

    பதிலளிநீக்கு
  63. கீதா சிஸ் புது ஸ்வீட் நல்ல இருக்கே எல்லா பின்னுட்டங்களுடன் கலக்கல்

    பதிலளிநீக்கு
  64. உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன் கீதாசிஸ் சிலவற்றை மாற்ற மறக்க இயலாது

    பதிலளிநீக்கு
  65. நேற்று என் பதிவில் 2 கீதா சிஸ் வருவதில் ஒன்னு மிஸ் ஆகிவிட்டது அவர் கீதாசிவம் உங்களை விட்டுவிட்டேனே என்று நினைக்காதீர்கள் சிஸ் இன்று சேர்த்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
  66. சகோ துரை செல்வராஜ் , சகோ கரந்தை ஜெயக்குமார் இவர்கள் பெயர்களும் விட்டுபட்டு போயிற்று மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  67. வாவ். சுவையான ரெசிப்பி.... நன்றி கீதா ஜி!

    Sorry to know about Brownie.

    பதிலளிநீக்கு
  68. நல்ல வேளை,உதவிக்கு என்னை அழைக்கலே...நான் ரொம்ப பிஸி:)

    பதிலளிநீக்கு
  69. ஓஓ கீதா பிறவுனியின் மறைவுக்கு வருந்துகிறேன்.... நம் குடும்பத்தில் ஒருவராகவே வளர்த்து விடுகிறோம், பின்பு பிரிவென வரும்போது தாங்க முடியாது... விரைவில் இன்னொரு பேபி பிரவுனியை வாங்கிடுங்கோ.

    இப்போஸ்ட்டை அடுத்த திங்களுக்கு மாத்தச் சொல்லியிருக்கலாம்.. பறவாயில்லை.

    பதிலளிநீக்கு
  70. பிரமாதமா செய்முறை. அனைவருக்கும் பிடிக்கும் ப்ரோட்டின் சத்து. ம்ம்ம்ம்ம்ம்மில்க்
    மெயிட்......இத்தனை சேர்த்தால் அமிர்தம் தான். என்னையும் பார்வையாளராக வைத்தது உங்கள் அன்பைக் காட்டுகிறது.

    எனக்கு வாட்ஸ் அப்பில் இண்டியா கால் தான் வரும், அதனால் நீங்கள் சொன்னவர் நானில்லை ஹாஹா. மிக மிக அருமை. நான் சாப்பிடாவிட்டாலும் குழந்தைகளுக்குச் செய்து கொடுக்கிறேன். நன்றி மா கீதா.

    பதிலளிநீக்கு
  71. //என் செல்லம் மகள் ப்ரௌனி நேற்று எங்களவிட்டுப் பிரிந்துவிட்டாள்
    வருந்துகிறேன்

    பதிலளிநீக்கு
  72. தில்லையகத்து கீதா, உங்கள் ப்ரௌனி உங்களை விட்டுப் பிரிந்ததன் துயரத்தின் ஆழத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. விரைவில் நீங்கள் இந்த துக்கத்திலிருந்து மீண்டு வரப் பிரார்த்திக்கிறேன். என்ன ஆச்சு? நீங்கள் எழுதி இருப்பதைப் படிக்கையில் எங்கள் மோதியின் கடைசி நிமிடங்கள் என் நினைவில் வந்தன. காலங்கார்த்தாலே இப்படித் தான் திடீரென எங்களை விட்டுப் பிரிந்தான். ஏதோ சொல்ல வேண்டும்போல் முகபாவம்! உயிருக்குப் போராடிய அந்த நிலையிலும் எங்களைப் பார்த்து வாலாட்டிக் கொண்டே உயிர் பிரிந்தது.

    பதிலளிநீக்கு
  73. அன்பின் கீதா அவர்களுக்கு.. ஆத்மார்த்தமான உறவுகளை விட்டுப் பிரிந்தது ப்ரௌனி..

    தாங்கிக் கொள்ள முடியாது தான்..
    இறை நிழலில் நல்ல கதியடையட்டும்..

    பதிலளிநீக்கு
  74. வெங்கட்ஜி, பூவிழி பகவான் ஜி அனைவருக்கும் ஸ்வீட் பற்றிய கருத்திற்கு மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
  75. வல்லிம்மா மிக்க நன்றி அம்மா. குழந்தைகளுக்குச் செய்து கொடுங்கள் அம்மா..
    கீதா

    பதிலளிநீக்கு
  76. ப்ரௌனியின் பிரிவின் வேதனையை என்னுடன் பங்கு கொண்டு பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  77. கீதாக்கா என்னாச்சு என்று கேட்டிருப்பதால்.Hemangiosarcoma ப்ளட் செல் லைனிங்க் கேன்சர்.. எழுத நினைத்தேன் முடியவில்லை. கொஞ்சம் சரியானதும் எழுதுகிறேன். மனதை டைவேர்ட் செய்யணும்னு ப்ளாக் கொஞ்சம் கொஞ்சம் வாசிக்கிறேன்...மொபைலில் வாசித்து ..கருத்தும் கணினி வேலை செய்யும் போது வேர்ட்ல எழுதி வைத்து க்ரோம் வேலை செய்யும் போது போட்டுக் கொண்டு வருகிறேன்...எப்படியும் மனதைத் தேற்றிக் கொண்டுதானே ஆகணும்..செல்லங்கள் இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்கு. பிரிந்தால் வலி அதிகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  78. வேலையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பதைப் படித்ததும் டூ மெனி குக்ஸ் ஸ்பாய்ல் என்று தோன்றியது அப்பாதுரை அவர்து செல்லத்தைப்பிரிந்ததில் எத்தனை வருத்தப் பட்டிருப்பார் என்பது புரிகிறது

    பதிலளிநீக்கு
  79. என்ன மில்க் பௌடர் சேர்த்தீர்கள்?

    அடுப்பில் வைத்து நெய்யைத்தவிர வேறு எதையும் காய்ச்ச தேவையில்லையா?

    பதிலளிநீக்கு
  80. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  81. மில்க்மெய்ட்டில் செய்யும் எல்லா ஸ்வீட்டும் எனக்கு நிரம்ப பிடிக்கும். கட்டாயம் ஒரு தடவை செய்து பார்த்து விடுகின்றேன். நட்ஸ் சேர்க்காமல் பால் பவுடர் மில்க் மெய்ட் காய்ச்சி கலந்து ரொபி போல் ஸ்வீட் செய்து ஊரிலிருந்து அனுப்புவார்கள். மிகவும் சுவையாக இருக்கும், புகைப்படங்களுடன் எல்லோரையும் அழைத்து வேலைகளை சொல்லி சிறப்பு விருந்தினரை உட்கார வைச்சு வேடிக்கை பார்க்க சொல்லி சூப்பர் பதிவு போட்டிருக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  82. ப்ரௌனிக்காக எனது வருத்தங்களும் கீதாக்கா...

    என்ன செய்வது அக்கா....நம்மால் மாற்ற இயலாதது அல்லவா...

    பதிலளிநீக்கு
  83. ரொம்ப ஈசியான ரெசிப்பி கா...

    ஆன இதுவரை நான் கண்டென்ஸ்ட் மில்க் வாங்கியது இல்லை...

    பதிலளிநீக்கு
  84. கில்லர்ஜி, ஸ்ரீராம், கீதாரங்கன் கூட்டு முயற்சியில் உருவான இனிப்புப் பண்டத்திற்கு வாழ்த்துக்கள்! (2) பிரௌனியின் மறைவு எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நேரில் வந்து துக்கம் விசாரித்திருக்கலாம். தவறி விட்டது.

    - இராய செல்லப்பா சென்னையில் இருந்து

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!