திங்கள், 23 அக்டோபர், 2017

"திங்க"க்கிழமை 171023 :: வாழைக்காய் பிரட்டல் - அதிரா ரெஸிப்பி



வாழைக்காய்ப் பிரட்டல்..  

து அதிரா வீட்டுச் செய்முறையாக்கும்.. எங்கே வெந்தயத்தைக் காணல்லயே:).. கடுகு போடத் தேவையில்லையா:).. எண்டெல்லாம் ஆரும் குரொஸ் குவெஷன் கேட்டால், தேம்ஸ்ல தள்ளிடுவேன்:) ஜாக்ர்ர்ர்ர்ர்ர்தை:).. . ஒழுங்கா கிளவி மட்டும்.. ஹையோ ஆரம்பமே டங்கு ஸ்லிப் ஆகுதே:).. கேள்வி மட்டும் கேய்க்கத் தெரியுது... ஆராவது ஒரு குறிப்பாவது செய்து பார்த்ததா சரித்திரம் இல்லை:),{முக்கிய அறிவித்தல்: நான் நெல்லைத்தமிழனின் புளி மிளகாயும், இட்லிப் பொடியும் மட்டுமாவது செய்தேனாக்கும்:)) என்பதனை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்:)}.

சரி விசயத்துக்கு வருவோம்.. எனக்குப் பாருங்கோ அலட்டுவது பிடிக்காது:).. ஹா ஹா ஹா.

[ஒரு கல்லில் பல மாங்காய்கள்.. சொல்றேன் கேளுங்கோ.. இங்கு சொல்லியிருக்கும்..இதேமுறையிலேயே, கொஞ்சமும் மாற்றமில்லாமல்.. கருணைக்கிழங்கைப் பொரிச்சு பிரட்டல் கறி, மற்றும் உருளைக் கிழங்கை அவிச்சு, பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிப் பிரட்டல் கறி செய்யுங்கோ.. அனைத்தும் சூப்பர், முக்கியமா அனைத்துக்கும் முடிவில் தேசிக்காய் பிழிந்து விட மறந்திடக்கூடாது].

இந்த ரெசிப்பி, என் ஜம் ஜம் ஜாம்:) ஐ விட ஈசி:).. இண்டைக்கே செய்து பார்த்து.. ஒன்லைன் ஓடர்களையும் திரட்டித் தாங்கோ.... ஓடர் பிடிச்சுத் தருபவருக்கு ஒரு டிஸ் இலவசம்:).
===============================buy 1 - get 1 free:)===========================
இது என் வல்லாரைச் சட்னி:), வல்லாரையை, அடிக்காம்பை [முத்தின பகுதியை] மட்டும் வெட்டி விட்டு, நன்கு கழுவிய பின், குட்டியாக வெட்டிப்போட்டு, பச்சை மிளகாய், தேங்காய்ப்பூ, உப்பு,  சேர்த்து அரைத்து, இறக்கியதும் கொஞ்சம் தேசிக்காய்ப்பிழி சேர்த்தேன்..  பலர் வல்லாரை இலையை மட்டும் எடுக்கிறார்கள்..  அது தப்பு, காம்பையும் சேர்த்து எடுத்து குட்டியாக வெட்டினால் நன்கு அரைபடும்.  [இது தெரியாதோர் இருக்க மாட்டீங்க, இருப்பினும் அஞ்சு போன்றோருக்கு உதவுமே எனச் சொன்னேன்:),  ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)]


இந்த ஹண்டில் ஹோல்டர், எங்கள் மகன் ஸ்கூலில் செய்தது, ஹை ஸ்கூலில், ஆரம்பம் இரு வருடங்களுக்கு, ரெக்னிகல் எனும் பாடம் கட்டாயமாக எடுக்க வேண்டும்.. அதில் இப்படி நிறைய மர வேலைகள் செய்வார்கள்.  [ அடடே... ஆச்சர்யக்குறி! ]
========================================================================
நல்ல மொந்தன் வாழைக்காய் வாங்கி சதுரத்துண்டுகளாக வெட்டி, கலகலவெனப் பொரிச்செடுங்கோ. 



பின்னர் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் செத்தல் மிளகாய் போட்டு. விரும்பினால் உள்ளி சேர்க்கலாம் சேர்க்காமலும் விடலாம்...கொஞ்சம் பொரிந்த நிறம் வரும்வரை வதக்கவும்.  [ ஹிஹிஹி.. உள்ளின்னா பூண்டுதானே?! ]


வதங்கியதும், கறிப்பவுடர் போட்டு வதக்கவும்..(உறைப்புக் கறிகளுக்கு என்ன என்ன தூள் பாவிப்பீங்களோ அதைப் போடவும்.. , இலங்கைக் கறிப்பவுடர் எனில்.. அதில் அத்தனை ஸ்பைஸசும் சேர்த்து வறுத்து அரைத்த கலவை) சிலர் சாம்பார் தூளும் சேர்ப்பார்கள்..



தூளைப் பிரட்டியவுடன், உங்கள் வாழைக்காய்ப் பொரியலுக்கு ஏற்ப, சுடுதண்ணீர் விடவும், வாழைக்காய் தண்ணியை உறிஞ்சும், அதனால கொஞ்சம் வாழைக்காய் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும், நான் அதனோடு சிறுது பாலும் சேர்த்தேன்[கட்டாயமில்லை], உப்புப் போட்டுக் கொள்ளவும்.

சூடானதும், வாழைக்காய்ப் பொரியலைக் கொட்டி, கறிவேப்பிலையும் சேர்த்து மூடி அவிய விடவும்.  கொஞ்ச நேரத்திலேயே தண்ணி வற்றி விடும், கரம் மசாலா கொஞ்சம் சேர்த்துப் பிரட்டி இறக்கவும்..



மறக்காமல் தேசிக்காய் பிழிந்து விடவும். ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆ என்னா சுசி தெரியுமோ?:)


ஊசிக்குறிப்பு:
ப்போதாவது புரியுதோ?:) நாங்களெல்லாம் பிறக்கும்போதே மெமெரிப் பவர் அதிகம்:).. ஒரு தவறு செய்தால், உங்களுக்கு ஞாபகசக்தி இல்லாத காரணத்தால், நாம் அதை அடிக்கடி சொல்லிக் காட்டுவதன் மூலம்:) அத்தவறை நீங்க எல்லோரும் திரும்பவும் செய்திடாமல் காப்பாற்றுகிறோமாக்கும்:) .. ஹா ஹா ஹா..இப்படிப் பொஸிடிவ்வா எடுப்பதை விட்டுப்போட்டுக், குறை சொல்லிக்கொண்டு கர்ர்ர்ர்:))
[நான் இதை எங்கேயும் களவெடுக்கவில்லை என்பதனை, ட்றுத்தின் காரின் வலதுபக்கக் கண்ணாடிமேல் ஓங்கி:) அடித்துச் சத்தியம் செய்கிறேன்:)]


ஊசி இணைப்பு:
முக்கிய அறிவித்தல்:- இந்த ஊசிக்குறிப்புக்கும்... ஊசி இணைப்புக்கும் எதுவித சம்பந்தமே இல்லை... என்பதனை, தேம்ஸ் கரையில் இருக்கும் அந்தப் பபபச்சைக்கிளியின் சிவப்புச் சொண்டின் மீது அடித்துச் சத்தியம் செய்கிறேன்:)..



ஹையோ ஹையோ வழிவிடுங்கோ.. வழி விடுங்கோ.. விரதக் களையால ஸ்பீட்டா ஓடக்கூட முடியல்லியே:)











[கண்டிப்பாக ஒரு முறை செய்து பார்க்கிறேன்.  ஆனா எப்போன்னு கேக்கக் கூடாது! ]



86 கருத்துகள்:

  1. இளங்காலைப் பொழுது..
    எல்லா மகிழ்ச்சியும் பெருகட்டும்..

    பதிலளிநீக்கு
  2. தேசிக்காய் ... ந்டால் இங்ஙந உள்ளவங்களுக்கு வெளங்குமோ????..

    எலுமிச்சங்காய்..ந்டு சொன்னாலும் லெமன்..ந்டு சொன்னாத்தான் நல்லம்..

    பதிலளிநீக்கு
  3. கொடுத்து வெச்ச பூஸார்... வாழக்காய் புரட்டலுக்கு தப்பிச்சுடுத்து!?!?!?..

    பதிலளிநீக்கு
  4. நல்ல குறிப்புகளை (!?) செய்து பார்க்கிறது தான்.. ஆனாலும் நமக்கு ஆரு அடுக்களையில எடம் தாராக!?!?...

    பதிலளிநீக்கு
  5. என்ன இருந்தாலும் கலாவோட நாத்தனார்.. கல்யாணத்துல .. கோளாறு சொல்லிடக் கூடாது... ரெண்டு கமெண்டு கூடுதலா போட்டு வைப்போம்..

    பதிலளிநீக்கு
  6. என்னது அதிரா ரிசிப்பியா கடவுளே எங்களை காப்பாற்றப்பா என்று சொல்லி பதிவை படிக்க ஆரம்பிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. வாழைக்காய்ப் பிரட்டல்.. படிக்கும் வேகத்தில் வாய் பிரட்டது என்று படித்துவிட்டேன்(அதிராவீட்டில் விஷேசமா? )

    பதிலளிநீக்கு
  8. படித்தேன் கொலைதெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு இன்று மதிய உணவுக்கு வீட்டில் செய்யச் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  9. ஹலோ யாராவது எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்... ''ரெக்னிகல் எனும் பாடம்'' ஆமாம் ரெக்னிகல் 'நா என்ன?

    பதிலளிநீக்கு
  10. என்னது தேசிக்காயன்னா எலுமிச்சைங்காயா துரைராஜ் மொழி பெயர்ப்புக்கு நன்றிங்க

    பதிலளிநீக்கு
  11. அதிரா நாங்க் செய்த தவறையே திரும்ப திரும்ப செய்யமாட்டோம் ஒவ்வொரு தடவையும் புதிய புதிய தவறாகத்தான் செய்வோம். அப்படி செய்ய காரணம் பெண்களின் மெம்மரி பவரை அதிகரிக்கச் செய்யதான் என்பதை கூறிக் கொண்டு அடி வாங்கும் முன் ஒடிப் போகிறேன்

    பதிலளிநீக்கு
  12. இந்த முறையில் செய்த வாழைக்காய்க் கறியைக் கோவையில் சாப்பிட்டிருக்கேன். பூண்டு தான் கொஞ்சம் இடிக்குது. மற்றபடி பூண்டு இல்லாமலும் செய்து பார்க்கலாம். மலையாளத்திலே உள்ளின்னா வெங்காயம். :) தமிழிலே உள்ளின்னா பூண்டு! ஹிஹிஹி, அதனால் எப்படி வேணா எடுத்துக்கலாம்!

    பதிலளிநீக்கு
  13. ரெசிப்பி அதிராவோடது ...ன்னதும்
    வலைத்தளமே அதிருது...ல்லா!....

    அதுசரி..
    பூஸார் திரும்பி வந்தாச்சா!..

    பதிலளிநீக்கு

  14. அதிரா கொஞ்சம் "வெயிட்டான" ஆள் என்பதால் கொஞ்சம் அதிரத்தான் செய்யும்...

    பதிலளிநீக்கு
  15. அதிரா ஆழ்ந்த கனவில் இப்ப இருப்பாங்க. அவங்களின் நேரம் காலை 3 மணி அதனால அவங்க் எழுவதற்கு முன்னால் நல்லா கிண்டல் பண்ணிட்டு ஒடி ஒளிஞ்சுக்குவோம்

    பதிலளிநீக்கு
  16. இருந்தாலும் - விடாது கருப்பு...ந்னு பூரி கட்டையோட தொரத்திக்கிட்டு வருவாங்களே...

    பதிலளிநீக்கு
  17. வாழக்காயை தோலோடு வெட்டிக் கொள்ளணுமா?
    //கலகலவெனப் பொரிச்செடுங்கோ// சிரிச்சுட்டே பொரிக்கணுமா? :-)) அப்படின்னா டீப் ஃப்ரை? ஆர் ஷாலோ ப்ரை?
    மறுபடியும் அவிய விட்டால் அது குழை வாழைக்காய் ஆகி விடாதா? விளக்கத்துக்கு பின் சமைத்துப் பார்க்கிறேன்...
    உள்ளி கேரளா சைடில் வெங்காயமாக்கும்! :-))
    ரசித்தேன்!!

    பதிலளிநீக்கு
  18. வாழைக்காய் பிரட்டல் - பூண்டு சேர்க்காம செய்துபார்க்கிறேன். முதலிலேயே ஏன் வாழைக்காயை பொரித்தெடுக்கணும்?

    முதல்லயே கறிப் பௌடர் போட்டும், பிறகு கரம் மசாலாவும் சேர்க்கச் சொல்லியிருக்கீங்க. கேள்விலாம் கேட்கக்கூடாதுன்னு சொன்னதுனால அப்படியே செய்துபார்த்தவிட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  19. அதிராவின் சமையல் குறிப்புகள் நன்றாக இருக்கிறது.
    வல்லாரை சட்னி அழகாய் இருக்கிறது பார்க்க பச்சைபசேல் என்று.
    வாழைக்காய் பிரட்டல் நல்ல காரமாய் இருக்குமோ?
    செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. ரெஸிப்பிகள் .. பலவிதம்
    அதிராவோடதும் .. ஒருவிதம்.. !

    பதிலளிநீக்கு
  21. ஹண்டில் ஹோல்டர்..ரொம்ப அழகாக இருக்கு அப்பாவி....

    இன்னும் கூட நீங்க கொஞ்சம் decorate செய்யலாம்...ஹோல்டேரை...

    முடியலைன ..நான் செஞ்சு தாரேன் ..

    பதிலளிநீக்கு
  22. நெ.த வந்த சந்தேகம் எனக்கும்...

    வாழைக்காயை ...ஒன்னும் பொரிக்கணும்..இல்ல அவிக்கணும்..நீங்க ஏன் இரண்டும் செய்றீங்க...

    எனக்கு வறுவல் தான் இஷ்டம்...சோ செஞ்சு பார்க்கிறது கஷ்டம் தான்...

    பதிலளிநீக்கு
  23. நானும் புளி மிளகாய்,லவேரியா எல்லாம் சமைச்சு போட்டாவை போட்டு இருக்கேன்...

    பதிலளிநீக்கு

  24. @ அப்பாவி Athira:

    //.. எனக்குப் பாருங்கோ அலட்டுவது பிடிக்காது.. ஹா ஹா ஹா...//

    ’பிடிக்காது’-க்கப்புறம் ரெண்டு போதும். மூணாவது ‘ஹா’ அலட்டலானது.

    பதிலளிநீக்கு
  25. கண்ணுக்கும் பச்சென்று நன்றாக இருக்கிறது வல்லாரை சட்னி. புளித்தண்ணீரில் வேகவைத்து எடுத்து பொடிகளெல்லாம் சேர்த்து கறி செய்வோம் வாழைக்காயில்.தினப்படி கறியாகில் சில பேர் ஸாம்பார் பொடி தூவியே செய்து விடுவார்கள். பொரித்தெடுத்துச் செய்வதால், பிறகு வெந்தாலும். ருசி வித்தியாஸப்படுமென்று நினைக்கிறேன். வெங்காயம், பூண்டெல்லாம் வாழைக்காயுடன். வழக்கமில்லை. இந்த மாதிரியும் செய்து பார்க்கணும். புதுமாதிரி கறி. குறை எதுவும் சொல்லவில்லை. ஸரிதானே. நன்றாக உள்ளது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  26. உள்ளின்னா வெங்காயம்ப்பா....

    பதிலளிநீக்கு
  27. விரதக் களையால ஸ்பீட்டா ஓடக்கூட முடியல்லியே:) - படத்தைப் பார்த்தால் விரதமிருந்த பூனை மாதிரி தெரியவில்லை. ஒரு நாளைக்கு 40 வேளைக்கு சாப்பிட்ட பூனை மாதிரின்னா தெரியுது. பொருத்தமான படத்தைப் போட்டிருக்கலாம்.

    கடைசியாகப் போட்டிருக்கும் உணவுப் படம், எனக்கு மட்டும்தான், வாழைக்காய் பிரட்டல் மாதிரித் தெரியாமல், சோயா பிரட்டல் மாதிரித் தெரியுதா இல்லை மற்றவங்களுக்கும் அப்படித்தானா?

    பதிலளிநீக்கு
  28. @காமாட்சியம்மா - வெங்காயம், பூண்டெல்லாம் வாழைக்காயுடன். வழக்கமில்லை. - முழு வாழைக்காய் தளிகை செய்து, தோலை நீக்கி, வாழைக்காயைத் துருவி, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு அப்புறம் பொடிப் பொடி வெங்காயம், கருவேப்பிலை வதக்கி, அத்துடன் துருவினதை ஒரு பிரட்டு பிரட்டி, தேவையான உப்பு சேர்த்தால் வாழைக்காய் பொடிமாஸ் நல்லா இருக்கும். வெங்காயம் சேர்க்காமலும் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  29. வாயுபிடிப்பால்வாழைகிடையாதுஇருந்தாலும்நன்று

    பதிலளிநீக்கு
  30. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வந்திடுச்சா... வந்திடுச்சோ என் வாழைக்காய் ரெசிப்பீஈஈஈ... நவராத்திரி விரத நேரம் அனுப்பியதென நினைக்கிறேன் கந்தசஷ்டிக்கு வந்திருக்கு... அப்போ யோசிச்சுப் பாருங்கோ மீ இப்போ இன்னும் 2 கிலோ கூடிட்டேன்ன்ன்ன் ஹையோ எதுக்கு இப்போ டங்கு ஸ்லிப் ஆகுதூஊஊஉ... குறைஞ்சிட்டேன்ன்ன்ன் எனச் சொல்ல வந்தேன்ன்ன்ன்:)..

    ஆங்ங்ங் மகுடம் கிடைச்சிடுச்சா.... நில்லுங்கோ கில்லர்ஜியை மிரட்டியாவது பறிக்கப் பார்க்கிறேன்ன்ன் :).. ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  31. வாங்கோ திரை அண்ணன் முதலாவதா வந்திருக்கிறீங்க.... உங்களுக்கு ஏதாவது தரோணுமே எனும் ஆசையில் இங்கின தேடுறேன்.... ஆங்ங்ங் ஆபத்துக்குப் பாவமில்லை..:) இதை வச்சிருங்கோ.. புயுப்:) போன்:)... ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியில் இருந்துது எடுத்து வந்தேன்ன்ன்:)...

    தேசிக்காய் அது பேச்டு வழக்கிலே வந்திட்டுதூ... சரி எல்லோருக்கும் என் பாசையைப் பழக்கிட்டால் நல்லதுதானே என சொன்னேன் ஹா ஹா ஹா:)...

    அடுக்களையில் இடம்.... இருங்கோ கலாஅண்ணியிடம் சொல்லி இடம் அரேஞ் பண்றேன்... அடுக்களையில் சமைக்க:)...

    பதிலளிநீக்கு
  32. ஹையோ மொபைல் கொமெண்ட் போடுறேன் எழுத்துப்பிழை வருது .. துரை என்பது எப்பவுமே திரை ஆகிடுது துரை அண்ணன் மன்னிச்சுக்கோங்ங்ங்ங்:)...

    /////துரை செல்வராஜூOctober 23, 2017 at 6:17 AM
    என்ன இருந்தாலும் கலாவோட நாத்தனார்.. கல்யாணத்துல .. கோளாறு சொல்லிடக் கூடாது... ரெண்டு கமெண்டு கூடுதலா போட்டு வைப்போம்../////

    ஹா ஹா ஹா இந்தப் பயம் எப்பவும் இருக்கட்டும்:)...
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  33. ////[கண்டிப்பாக ஒரு முறை செய்து பார்க்கிறேன். ஆனா எப்போன்னு கேக்கக் கூடாது! ]
    ////
    ஹா ஹா ஹா ஸ்ரீராம் என் அடுத்த குறிப்பு வருமுன் செய்து பார்த்திடுங்கோ:)... அதுவும் எப்போ வரும் எனக் கேய்க்கக்கூடா:)... ஹையோ 2,3 குறிப்புக்கள் அழகழகா படமெடுது ஜூன் மாதம் தொடங்கி உங்களுக்கு அனுப்பவென வச்டிருந்தேன்... என்னாச்சோ தெரியல்ல என் கொம் ... கார்ட் டிஸ்க் டவுன் ஆகி போட்டோஸ் எல்லாம் போயிந்தி:(...
    அப்பாடா தப்பிச்சோம் என சிலர் சொல்லுவது கேக்குது :) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    பதிலளிநீக்கு
  34. >>> கார்ட் டிஸ்க் டவுன் ஆகி போட்டோஸ் எல்லாம் போயிந்தி: <<<
    (...அப்பாடா தப்பிச்சோம் என சிலர் சொல்லுவது கேக்குது :)

    காக்க.. காக்க.. கனகவேல் காக்க!..

    பதிலளிநீக்கு
  35. வாங்கோ ட்றுத் .... ஹா ஹா ஹா பார்த்தீங்களோ டெலிபதியை:).. கரெக்ட்டாஆஆ நேற்று போஸ்ட் போட்டிருக்கிறீங்க:)..

    ////
    Avargal UnmaigalOctober 23, 2017 at 6:25 AM
    என்னது அதிரா ரிசிப்பியா கடவுளே எங்களை காப்பாற்றப்பா என்று சொல்லி பதிவை படிக்க ஆரம்பிக்கிறேன்

    Reply/////
    ஆவ்வ்வ் கால் வச்சிட்டீங்களெல்லோ இனி உங்களை மோடி அங்கிளாலகூடக் ... ஹையோ வாணாம் வாணாம் ...ட்றம்ப் அங்கிளாலகூடக் காப்பாத்த முடியாதூஊஊஉ...
    ஸ்ஸ்ஸ்ஸ் என் வாய்தேன் எப்பவும் நேக்கு எதிரி:)..

    பதிலளிநீக்கு
  36. ////காக்க.. காக்க.. கனகவேல் காக்க!.////
    ஹா ஹா ஹா துரை அண்ணனுக்கு எம்புட்டுப் பாசம் கலா அணனியின் நாத்தனார் மேல:)...

    ஹா ஹா ஹா இது சந்தோசம் பொயிங்குதே:) எனும் தொனியா ?:) இல்ல காப்பாற்றித் தரும்படி முருகனைக் கேய்க்கிறாரா துரை அண்ணன்:)... அஞ்சூஊஊஊஊஊ பீஈஈஈஈஈஸ் விளக்கவும் விம் போடாமல்:)...

    பதிலளிநீக்கு
  37. //இது தெரியாதோர் இருக்க மாட்டீங்க, இருப்பினும் அஞ்சு போன்றோருக்கு உதவுமே எனச் சொன்னேன்:), ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)]//
    ஹலோவ் மியாவ் நான் சாம்பாருக்கு போடும்போது இலை மட்டும் போடுவேன் ஆனா ஸ்மூத்திக்கு தண்டு சேர்ப்பேனாம்

    பதிலளிநீக்கு
  38. ஹா ஹா ப்ளோக் திறக்கிறேன் சும்மா அதிருது என்னடா பார்த்தா அதிரா ரெசிபி அதிரா செய்து தாரேன்.... உங்களுக்கும் அனுப்பிவைக்கிறேன் விரதம் முடிந்தவுடன் (தப்பிக்கவே முடியாது நீங்க மட்டுமே கையெழுத்து போட்டு வாங்கணும் பர்சனல் குறிப்பு வச்சு அனுப்புறேன்வங்க வீட்டில் இல்லைனா தேம்ஸ் நதி கிட்ட ஒளிச்சிருப்பாங்கனும் சொல்லி அனுப்பிவைக்கிறேன் ) கடைசியில சோதனை கூடத்தில் இருந்து தப்பிக்கும் எலிகளை காண்பிக்காம பூனை துரத்துவதை மட்டும் காண்பிச்சு சோகத்தில் ஆழ்த்திடிங்களே

    பதிலளிநீக்கு
  39. "அதிரா //துரை அண்ணா கடவுளுக்கு ப்ரே பன்றார் :) முருகா ப்ளீஸ் ஸேவ் மீ னு

    பதிலளிநீக்கு
  40. எங்களுக்கு ஸ்கூல் லீவ் :) இப்போதான் துயிலெழுந்தது குயில் :)
    மசாலா தோசை தேங்கா சட்னி நெல்லை தமிழனின் இட்லி பொடி செஞ்சிட்டு வரேன் மீண்டும்

    பதிலளிநீக்கு
  41. @அதிரா காண்டில் ஹோல்டர் செம அழகு .மகனுக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க வார்னிஷ் அடிங்க ..இல்லைனா இன்னும் அழகு படுத்த உங்களுக்கு பிடித்த வர்ணம் பிங்க் decoupage செய்யலாம்

    பதிலளிநீக்கு
  42. @ஸ்ரீராம் //அதில் இப்படி நிறைய மர வேலைகள் செய்வார்கள். [ அடடே... ஆச்சர்யக்குறி! ]//
    வெளிநாடுகளில் இப்படித்தான் எல்லாம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் ..
    என் பொண்ணு 7த் இல் குக்கெரி செஞ்சா 8 ஆம் வகுப்பில் தையல் .

    பதிலளிநீக்கு
  43. @நெல்லைத்தமிழன் என் கண்ணுக்கு பன்னீர் மஞ்சூரியன் மாதிரி தெரிஞ்சு :) ஹஆஹாஆஹாஆஆ ஹை 5

    பதிலளிநீக்கு
  44. பார்க்கா ருசியா இருக்கும் போலிருக்கு அதிரா ..ஆனா நான் தேங்காய் போட்டே எல்லாத்தையும் சமைப்பேன் இம்முறையில் செஞ்சி பார்க்கிறேன் .தயிர் சாதம் சேர்த்து சாப்பிட நல்ல இருக்கும்னு நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  45. அந்த வல்லாரை சட்னி ஒரு கிண்ணம் ப்ளீஸ் :)

    பதிலளிநீக்கு
  46. மற்றதுக்கு தோசை சுட்டுட்டு வரேன்

    பதிலளிநீக்கு
  47. ஆஹா இந்த மாதிரி ஒரு ரெசிப்பி இதுவரை செய்து சாப்பிட்டது கிடையாது

    பதிலளிநீக்கு
  48. //ட்றுத்தின் காரின் வலதுபக்கக் கண்ணாடிமேல் ஓங்கி:) அடித்துச் சத்தியம் செய்கிறேன்:)]//

    ஹாஹா :) தைரியம் இருந்தா அவர் தலையில் அடிங்க பார்க்கலாம் :)

    பதிலளிநீக்கு
  49. ஞாபக சக்தி :) நாங்க எல்லாத்தையும் நினைவில் வச்சிருந்தா எப்படி இவங்க சந்தோஷமா இருப்பாங்க :) க்ளியர் my doubt :)

    பதிலளிநீக்கு
  50. வல்லாரை சட்னி,வாழைக்காய் பிரட்டல் அருமையா இருக்கு. இந்தமுறையில் தேங்காய்,மிளகாய்,பெ.சீரகம் அரைத்த மசாலா சேர்ப்பது.
    அழகான ஹோல்டர். வாழ்த்துக்கள் மகனுக்கு.அஞ்சு சொன்ன மாதிரி வார்னிஷ் அல்லது ,பெயிண்டிங் செய்யுங்க.

    பதிலளிநீக்கு
  51. வாங்கோ கில்லர்ஜி...
    /////KILLERGEE DevakottaiOctober 23, 2017 at 6:31 AM
    படித்தேன் கொலைதெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு இன்று மதிய உணவுக்கு வீட்டில் செய்யச் சொன்னேன்.////

    கடவுளே முருகா இது என்ன சோதனை:)... இருக்கிற பிரச்சனை போதாதென இது வேறையோ... கடவுளே யாராவது கில்லர்ஜி க்கு ஒரு போன் கோல் போட்டுக் கன்போம் பண்ணுங்கோ:) இல்லை எனில் எனக்குக் கைக்கு சங்கிலி வரப்போகுதே:)...

    ஹா ஹா ஹா நன்றி கில்லர்ஜி... பகவான் ஜீ க்கும் வோட் போட்டமைக்கு நன்றி சொல்லிவிடுங்கோ பிளீஸ்...

    பதிலளிநீக்கு
  52. கண்பட்டதோ நெஞ்சம் புண்பட்டதோ:).. இன்று ஒண்ணுமே உடனுக்குடன் பண்ண முடியாமல் போச்சே...

    எங்கின விட்டேன்ன்ன் ஜாமீஈஈஈஈ... ஆங் பிடிச்சிட்டேன்ன்ன்...

    ///Avargal UnmaigalOctober 23, 2017 at 6:42 AM
    அதிரா நாங்க் செய்த தவறையே திரும்ப திரும்ப செய்யமாட்டோம் ஒவ்வொரு தடவையும் புதிய புதிய தவறாகத்தான் செய்வோம். /////
    ஹலோ ட்றுத்:)... நாங்களும் அப்படித்தான்:) எப்பவும் ஒரேமாதிரியே திட்டிக்கொண்டு இருக்க மாட்டோம்:).. அப்பப்ப ஸ்டைலை மாத்தி மாத்தியே திட்டுவோம்:)... பின்ன எங்களுக்கு போறிங்காகிடாது:)..

    தேசிக்காய் = எலுமிச்சம்பயம்:)... இனி மறக்காதீங்கோ..:).
    உங்களுக்கு இன்று நல்லகாலம்... அதனால எனக்கு உடனே பதில் தர முடியாமையால்... வெயிட் பற்றிய கொமெண்ட்டுக்கெல்லாம் காக்கா போயிடுறேன்..தப்பிச்சிட்டீங்க . ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்.

    பதிலளிநீக்கு
  53. வாங்கோ கீதாக்கா... ஓ இக்கறி சாப்பிட்டதுண்டோ? இது சூப்பராக இருக்கும் சுவை.. வாழைக்காயில் செய்ததென சொல்ல முடியாமல் இருக்கும்.
    பூண்டு கட்டாயமில்லை... வாழைக்காயில் வாய்வு என்பதனாலும்... பொதுவாவே எல்லாக் கறிகளுக்கும் உடம்புக்கு நல்லதென பூண்டு சேர்ப்பேன் அது உங்கள் விருப்பம்... இதுக்குப் பதில் கொஞ்சம் வெந்தயம் சேர்க்கலாமோ தெரியல்ல.

    ஓ கேரளாவில் உள்ளி எனில் வெங்காயமோ?... இலங்கை கிட்டத்தட்ட கேரளாவோடு ஒத்துப்போவதால் அங்கிருந்து வந்து பூண்டாக மாறியிருக்கலாம் ஹா ஹா ஹா மிக்க நன்றி கீதாக்கா.

    பதிலளிநீக்கு
  54. ///கரந்தை ஜெயக்குமார்October 23, 2017 at 7:06 AM
    நன்றி நண்பரே////
    வாங்கோ மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  55. வாங்கோ மிகி மாதவி...
    ///middleclassmadhaviOctober 23, 2017 at 7:51 AM
    வாழக்காயை தோலோடு வெட்டிக் கொள்ளணுமா?///

    வாழைக்காய் தோலிலும் அதிக சத்திருக்கு, தோலை எறியாமல் புறிம்பாக எடுத்துப் பட்சடி போடுவார்கள்... அதனால் இது பொரித்துத்தானே எடுக்கப் போகிறோம் என்பதாலும்... சும்மா மேலே இருந்து கீழே நார் எடுப்பதைப்போல சீவி விட்டேன், முழுத் தோலையும் வெட்டி வீசவில்லை, ஆனா நீங்க விரும்பினால் நன்கு தோலை நீக்கிவிட்டுச் செய்யுங்கோ... ஊரில் அப்படித்தான் செய்வார்கள்....

    //கலகலவெனப் பொரிச்செடுங்கோ// சிரிச்சுட்டே பொரிக்கணுமா? :-)) அப்படின்னா டீப் ஃப்ரை? ஆர் ஷாலோ ப்ரை?///

    ஹா ஹா ஹா நன்கு முறுகப் பொரித்தால் மட்டும்தானே கலகல எனச் சத்தம் வரும் .. இல்லை எனில் ஸ்சூஉ ஸ்சூஊ என்றெல்லோ சத்தம் வரும்:)... டீப் பிரை தேஏன்ன்ன்ன்:)...

    ///மறுபடியும் அவிய விட்டால் அது குழை வாழைக்காய் ஆகி விடாதா? விளக்கத்துக்கு பின் சமைத்துப் பார்க்கிறேன்...////
    எதுவும் குழைந்திடாது, குழம்பில் போட்டு பிரட்டி விட்டால் டக்கென குழம்பைக் குடிச்சிடும்:).. ஐ மீன் உறிஞ்சிடும்... பின்பு மூடாமல் பிரட்டிப் பிரட்டி இறக்கி மறக்காமல் தேசிக்காய் விடுங்கோ.

    ///உள்ளி கேரளா சைடில் வெங்காயமாக்கும்! :-))
    ரசித்தேன்!!///
    மிக்க நன்றி.. நாங்கள் பூண்டு எனச் சொல்வது மிகக் குறைவே:).

    பதிலளிநீக்கு
  56. ////துரை செல்வராஜூOctober 23, 2017 at 7:32 AM
    ரெசிப்பி அதிராவோடது ...ன்னதும்
    வலைத்தளமே அதிருது...ல்லா!....

    அதுசரி..
    பூஸார் திரும்பி வந்தாச்சா!..////
    ஹா ஹா ஹா இன்று என்னால அதிர முடியாமல் போச்சே என ஒரே பீலிங்ஸ்சா இருக்கு:)...
    அஞ்டூஊஊஊ ரிஸூ பிளீஸ்.. பிங்கலரிலதான் வேணும்.. இது கண் துடைக்கவாக்கும்:).

    பதிலளிநீக்கு
  57. வாங்கோ நெல்லைத் தமிழன்...
    ///வாழைக்காய் பிரட்டல் - பூண்டு சேர்க்காம செய்துபார்க்கிறேன். முதலிலேயே ஏன் வாழைக்காயை பொரித்தெடுக்கணும்?////

    பூண்டு சேர்க்காமல் செய்யுங்கோ. புரியல்ல... வாழைக்காயைப் பொரிச்செடுத்து வைத்து விட்டுத்தான் குழம்பைக் கூட்ட வேணும்.
    இதில் இன்னொரு ஐடியாச் சொல்லட்டோ.. தனியே இருக்கும் உங்களைப் போன்றோருக்குப் பயன்படும்... வாழைக்காய் கிடைத்ததும் வாங்கி வந்து பொரித்தெடுத்துப் பிரீசரில் போட்டு விடுங்கோ.. அவசரத்துக்கு 5 நிமிடத்தில் குழம்பைக் கொதிக்க விட்டு, டக்கென எடுத்துக் கொட்டிப் பிரட்ட வேண்டியதுதான்.

    முதல்லயேவாழைக்காய் பிரட்டல் - பூண்டு சேர்க்காம செய்துபார்க்கிறேன். முதலிலேயே ஏன் வாழைக்காயை பொரித்தெடுக்கணும்?

    ////முதல்லயே கறிப் பௌடர் போட்டும், பிறகு கரம் மசாலாவும் சேர்க்கச் சொல்லியிருக்கீங்க.////

    கறிப்பவுடர் உறைப்புக்காகப் போடுவது.. அது தாளித எண்ணெயோடு போடும்போது கறி கறுத்து அழகா வரும்... கரம் மசாலா வாசத்துக்குப் போடுவதுதானே அதில் உறைப்பு பெரிதா இல்லையே...

    ////கேள்விலாம் கேட்கக்கூடாதுன்னு சொன்னதுனால அப்படியே செய்துபார்த்தவிட வேண்டியதுதான்.////
    ஹா ஹா ஹா கடவுள் என்னைக் காப்பாற்றிட்டார்ர்... செய்து பாருங்கோ நல்லா இருக்கும்... வாழைத்தண்டையும் இதே முறையில் செய்யும்போது சூப்பராக வந்துதே.
    மிக்க நன்றி நெ.தமிழன்.

    பதிலளிநீக்கு
  58. வாங்கோ கோமதி அக்கா... இதில் காரம் பெரிதாக இல்லையே.. கறித்தூளையும் சேர்த்து வதக்குவதால் கறி கறுப்பாக வரும்... அதுதான் பார்க்கக் காரம்போல தெரியுது...
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  59. ///ஏகாந்தன் Aekaanthan !October 23, 2017 at 9:47 AM
    ரெஸிப்பிகள் .. பலவிதம்
    அதிராவோடதும் .. ஒருவிதம்.. !////

    வாங்கோ வாங்கோ ஆவ்வ்வ்வ்வ் கவித கவித:)... நல்லவேளை இதை நெ தமிழன் பார்க்கேல்லை:) பார்த்திருந்தால்... இது பறவைகள் பலவிதம் எனும் பாடல் எனப் பொய் சொல்லியிருப்பார்:) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  60. அனுவுக்கு 2 தரம் பெர்சா கொமெண்ட் போட்டேன் இரண்டும் காணாமல் போயிட்டுது.. விக்ரமாதித்தனைப்போல சளைக்காமல் இது 3 ம் தரம் ரைப் பண்றேன்...

    வாங்கோ அனு.. மிக்க நன்றி... சின்னவர் செய்ததும் இருக்கு அடுத்த ரெசிப்பியோடு இணைக்கிறேன்... ஹையோ ஏன் ஓடுறீங்க...
    டெகெரேட் பண்ணுவது நல்ல ஐடியா.. எனக்கு இந்த யோசனை தோணவில்லையே.... ஆனா ஒன்று அனு... அவர்கள் செய்ததைப்போலவே வச்சிருந்தாத்தானே நல்லது.

    ஏன் பொரித்து விட்டு நீங்க கறி எதுவும் வைப்பதில்லையோ? ஸ்பெசலி கத்தரிக்காய்???

    ///நானும் புளி மிளகாய்,லவேரியா எல்லாம் சமைச்சு போட்டாவை போட்டு இருக்கேன்...///
    இது என்ன எனப் புரியல்ல முதலில் இப்போ பிரிஞ்சுபோச்ச்ச்:)... ஓம் என்ன அஞ்சுட லவேரியா( ஹையோ இதெல்லாம் என்ன உணவுப்பெயரோ கர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா).. செய்திருந்தீங்க பார்த்தேன்... இங்கு யாரும் சொல்லாமையால் நினைவில்லை. நன்றி அனு...

    பதிலளிநீக்கு
  61. ////ஏகாந்தன் Aekaanthan !October 23, 2017 at 10:23 AM

    @ அப்பாவி Athira:

    //.. எனக்குப் பாருங்கோ அலட்டுவது பிடிக்காது.. ஹா ஹா ஹா...//

    ’பிடிக்காது’-க்கப்புறம் ரெண்டு போதும். மூணாவது ‘ஹா’ அலட்டலானது.////

    ஹா ஹா ஹா ஓஓஓஓ.. அப்படியெனில் நோட் பண்ணி வைக்கிறேன்:) இனி இப்பிழை விட மாட்டனே:) ஒரு ஹா உடன் நிறுத்திடுறேன்:) அதிராவோ கொக்கோ? :) மியாவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  62. வாங்கோ காமாட்ஷி அம்மா.. இது எங்கள் ஊர் முறை... இங்கே நான் மட்டும்தானே இலங்கை என்பதனால் என் குறிப்புக்கள் வித்தியாசமாகத்தான் இருக்கும் உங்களுக்கு.. முடிஞ்சால் செய்து பாருங்கோ பிடிக்கும் உங்களுக்கு... சே சே இதிலென்ன குறை இருக்கு.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  63. ///ராஜிOctober 23, 2017 at 11:08 AM
    உள்ளின்னா வெங்காயம்ப்பா....///
    வாங்கோ ராஜி... ஹா ஹா ஹா கர்ர்ர் அது மலையாளத்திலயாம்... நாங்க டமில் பீப்பிள் எல்லோ:)..

    அதிசரி வாழைக்காய் பற்றிச் சொல்லாமல் போகலாமோ?:)... ஹா ஹா ஹா சரி விடுங்கோ .. :) மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  64. ///கடைசியாகப் போட்டிருக்கும் உணவுப் படம், எனக்கு மட்டும்தான், வாழைக்காய் பிரட்டல் மாதிரித் தெரியாமல், சோயா பிரட்டல் மாதிரித் தெரியுதா இல்லை மற்றவங்களுக்கும் அப்படித்தானா?///

    கர்ர்ர்ர்ர் நெல்லைத் தமிழன்:)... நீங்க எதை நினைச்சுக்கொண்டு பார்க்கிறீங்களோ அதுவாத் தெரியும் இக்கறி:)... மனோரஞ்சிதக் கறியாக்கும் ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  65. ///Asokan KuppusamyOctober 23, 2017 at 12:03 PM
    வாயுபிடிப்பால்வாழைகிடையாதுஇருந்தாலும்நன்று///

    வாங்கோ .. உண்மைதான் வாய்வுக்குணம் இருக்குதென நானும் கேள்விப்பட்டேன் ஆனா பெரிய தாக்கமா இல்லை என்றே நினைக்கிறேன்.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  66. ///AngelinOctober 23, 2017 at 12:41 PM
    Truth.. Its technical:)///
    வாங்கோ அஞ்சு டாங்ஸ்:)... நான் இது புரியாமல் அவர் தமி விளக்கம் கேட்கிறார் என விளக்க வந்தேன் ஹா ஹா ஹா:).

    தண்டுடன் ஸ்மூத்தி செய்வதை ஆதாரத்துடன் விளக்கவும்:)
    ஏன் அஞ்சு... சாம்பாறுக்கும் தண்டை அரிஞ்சு சேருங்கோ...

    பதிலளிநீக்கு
  67. வாங்கோ பூவிழி...
    ////pooviziOctober 23, 2017 at 1:48 PM
    ஹா ஹா ப்ளோக் திறக்கிறேன் சும்மா அதிருது என்னடா பார்த்தா அதிரா ரெசிபி /////
    ஹா ஹா ஹா .. அதிராவின் ரெசிப்பி என்றவுடன் எல்லோரும் அலேர்ட் ஆகிடுவினம்:) அதனாலேயே அதிரும்:)...

    ///அதிரா செய்து தாரேன்.... உங்களுக்கும் அனுப்பிவைக்கிறேன் விரதம் முடிந்தவுடன் (தப்பிக்கவே முடியாது நீங்க மட்டுமே கையெழுத்து போட்டு வாங்கணும் பர்சனல் குறிப்பு வச்சு அனுப்புறேன்வங்க வீட்டில் இல்லைனா தேம்ஸ் நதி கிட்ட ஒளிச்சிருப்பாங்கனும் சொல்லி அனுப்பிவைக்கிறேன் ) /////

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:).. இதென்ன பிரித்தானியாவுக்கு வந்திருக்கும் ஓதனை:)... முதலில் கொஞ்சம் அஞ்சுவுக்கு அனுப்பி:) 5 மணிநேரத்தின் பின்பு அதிராவுக்கு அனுப்பவும் பிளீஸ்:)...

    ///கடைசியில சோதனை கூடத்தில் இருந்து தப்பிக்கும் எலிகளை காண்பிக்காம பூனை துரத்துவதை மட்டும் காண்பிச்சு சோகத்தில் ஆழ்த்திடிங்களே ///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)... தின்னாமல் ஓடினால் விட்டிடுவமோ எலியாரை:)

    மிக்க நன்றி பூவிழி...

    பதிலளிநீக்கு
  68. /// "அதிரா //துரை அண்ணா கடவுளுக்கு ப்ரே பன்றார் :) முருகா ப்ளீஸ் ஸேவ் மீ னு///
    அப்பூடியா சொல்றீங்க அஞ்சு:)... இது தெரியாம, அவர் ஏதோ எனக்காகத்தான் பிரே பண்றார் என நினைச்சு:)... அவரின் கோரிக்கையை நிறைவேத்திடுங்கோ முருகா என வேண்டிட்டனே கர்ர்ர்ர்ர்ர்:)...

    காண்டில் கோல்டர் வாழ்த்துக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  69. ////
    AngelinOctober 23, 2017 at 2:15 PM
    @நெல்லைத்தமிழன் என் கண்ணுக்கு பன்னீர் மஞ்சூரியன் மாதிரி தெரிஞ்சு :) ஹஆஹாஆஹாஆஆ ஹை 5
    ////
    இல்லயே அஞ்சுட கண்ணுக்கு வேறு என்னமோ மாதிரி எல்லோ தெரிஞ்சதாக் கேய்விப்பட்டேனே:)... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).

    பதிலளிநீக்கு
  70. ////
    AngelinOctober 23, 2017 at 2:19 PM
    பார்க்கா ருசியா இருக்கும் போலிருக்கு அதிரா ///

    இம்முறை கொமெண்ட் பொசிடிவ்வா வந்திருக்கே:) யாரிடமோ வசமாத் திட்டு வாங்கிட்டு வந்த மாதிரி இருக்கே:) ஹா ஹா ஹா:).

    ..///ஆனா நான் தேங்காய் போட்டே எல்லாத்தையும் சமைப்பேன் இம்முறையில் செஞ்சி பார்க்கிறேன் .தயிர் சாதம் சேர்த்து சாப்பிட நல்ல இருக்கும்னு நினைக்கிறேன்///

    நான் பெரும்பாலும் உறைப்பான தூள் கறிகளுக்கு பால் தேங்காய் சேர்ப்பதில்லை அஞ்சு.. விரும்பினால் செய்து பாருங்கோ வித்தியாசமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  71. ஜி எம் பி ஐயா வாங்கோ...
    ///G.M BalasubramaniamOctober 23, 2017 at 3:58 PM
    ஆஹா இந்த மாதிரி ஒரு ரெசிப்பி இதுவரை செய்து சாப்பிட்டது கிடையாது////

    நீங்க யாழ்ப்பாணம் வந்திருந்தா சாப்பிட்டிருப்பீங்க:) இது இந்தியாவில எப்படிக் கிடைச்சிருக்கும்:) ஹா ஹா ஹா மிக்க நன்றி... நம் இருவருக்கும் நம்பர் பொருத்தம் இல்லை என நினைக்கிறேன் ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  72. //இல்லயே அஞ்சுட கண்ணுக்கு வேறு என்னமோ மாதிரி எல்லோ தெரிஞ்சதாக் கேய்விப்பட்டேனே:)... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).//ஹீ ஹீ :) அது மை பெட்டர் half கண்ணுக்கு தெரிஞ்சதை சொன்னார்



    பதிலளிநீக்கு
  73. @அஞ்சு/// ஹாஹா :) தைரியம் இருந்தா அவர் தலையில் அடிங்க பார்க்கலாம் :)

    //// ஹா ஹா ஹா அதுக்குத்தான் மாமியிடம் பூரிக்கட்டை இருக்கே:) அந்த வேலை எனக்கெதுக்கு:)...

    உங்க டவுட் 100 வீதம் நியாயமானதுதான் அஞ்சு:)... நாங்க பலதை மறந்து மன்னிச்சு விடுவதனாலதான்:) எதிர்ப்பாலார் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கிறாங்க:) ஹா ஹா ஹா மியாவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  74. ////ஹீ ஹீ :) அது மை பெட்டர் half கண்ணுக்கு தெரிஞ்சதை சொன்னார் ///
    ஹா ஹா ஹா அவர் என்ன சொன்னார் எனச் சொல்லவே இல்லையே நீங்க????? டெல் மீ பீஸ்:)....
    ஹா ஹா ஹா அஞ்டு சூப்பர் மாட்டி:)..

    பதிலளிநீக்கு
  75. ///priyasakiOctober 23, 2017 at 10:35 PM
    வல்லாரை சட்னி,வாழைக்காய் பிரட்டல் அருமையா இருக்கு. இந்தமுறையில் தேங்காய்,மிளகாய்,பெ.சீரகம் அரைத்த மசாலா சேர்ப்பது. ////

    வாங்கோ அம்முலு... ஓ உங்கட முறை கொஞ்சம் வேலை அதிகம் போல:)... வாழைக்காயில் பல முறைகள் இருக்கெல்லோ அம்முலு.. இனி ஒண்ணொண்னா எடுத்துவிடப் போறேன்:)... ஹா ஹா ஹா எல்லோரும் " பிச்சை வேண்டாம் நாயைப் பிடிங்கோ" என ஓடப்போகினம்:)..

    யேஸ் வாணிஸ் பண்ணி விடலாம்தான். மிக்க நன்றி அம்முலு தேடி வந்தமைக்கு... அடுத்தமுறை இளமதியையும் கையோடு கூட்டி வாங்கோ:).

    பதிலளிநீக்கு
  76. இருங்க உங்க புகழ் எவ்ளோ தூரம் பரவி இருக்கு பாருங்க :)
    இந்த படத்தை மட்டும் காட்டி இது என்ன டிஷ் னு கேட்டேன் ..அவர் சொன்னார் ------- னு அப்புறம் நன் சொல்லாமலே அதிரா சமையலானு கேட்டார் பாருங்க :) அப்டியே ஷாக் ஆகிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  77. வாழை காய் பிரட்டல்... இது போன்று எங்கியோ சாப்பிட்டதுண்டு...குறித்துக் கொண்டேன்... கணினி வேலை செய்யல...கிராஷ்ட்..மொபைலில் இருந்து.. அதனால பெரிய கமெண்ட் அதிராவுக் கு போட முடியல னு ரொம்ப பீலிங்...அதுவும் கலாய்க்க நிறைய இருக்கு...ஹூம்... வைரவா கணினி சரியாகி அதிராவை கலாய்க்க அருள் புரிவாயப்பானு வேண்டிட்டு...இப்ப போறேன்...சரியானதும் வாரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  78. நேற்று விட்டுவிட்டேன்; இதோ:

    Candle holder செய்த இளங்கலைஞருக்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  79. வைரவா கணினி சரியாகி அதிராவை கலாய்க்க அருள் புரிவாயப்பானு வேண்டிட்டு.. - ரெசிப்பி எழுதறவங்களுக்கும் கணிணி பிரச்சனை. படிக்கறவங்களுக்கும் கணிணி பிரச்சனை - இது இந்த வார ரெசிப்பினால இருக்குமா? ஒருவேளை பூசை அறையில் வைப்பதற்குப் பதில், 'கணிணி' முன்னால் இந்த 'பிரட்ட்டலை' வச்சுட்டாங்களா?

    பதிலளிநீக்கு
  80. ////இது என்ன டிஷ் னு கேட்டேன் ..அவர் சொன்னார் ------- னு அப்புறம் நன் சொல்லாமலே அதிரா சமையலானு கேட்டார் பாருங்க :) அப்டியே ஷாக் ஆகிட்டேன் :)////

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) அவ்ளோ பேமஸ்சாவா இருக்கேன்ன்:)... இருங்கோ இந்த வேகத்திலயே இன்னும் 2,3 குறிப்புக்கள் செய்து ஸ்ரீராமுக்கு அனுப்பி எல்லோரையும் திக்கு முக்காடப் பண்ணிடுறேன்ன்ன்:)...

    ஹா ஹா ஹா அஞ்சு ஓடாதீங்கோ:)

    பதிலளிநீக்கு
  81. ஹா ஹா ஹா வாங்கோ கீதா... நினைச்சேன் காணாதபோதே ஏதோ நெட் பிரச்சனை என:)... அதனால மீ தப்பிச்சேன்ன்ன்ன்:) கோட் இஸ் கிரேட் ஜாஆஆஆ:)...
    ஹா ஹா ஹா மிக்க நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  82. ///ஏகாந்தன் Aekaanthan !October 24, 2017 at 8:54 AM
    நேற்று விட்டுவிட்டேன்; இதோ:

    Candle holder செய்த இளங்கலைஞருக்கு வாழ்த்துக்கள் !
    ////
    அச்சச்சோ அதனால் என்ன.... வாழ்த்துக்கு மிக்க சந்தோசம் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  83. ///நெல்லைத் தமிழன்October 24, 2017 at 12:06 PM
    வைரவா கணினி சரியாகி அதிராவை கலாய்க்க அருள் புரிவாயப்பானு வேண்டிட்டு..////

    ஹா ஹா ஹா எல்லாத்துக்கும் காரணம் நான் வள்ளிக்கு தருவேன் என நேர்ந்த வைர நெக்லெஸ் உம் வைர மூக்குத்தியும் இன்னும் கொடுக்காததனால்கூட இருக்கலாம்:)... யாராவது மீக்கு ஜெல்ப் பண்ணி என் நேர்த்திக்கடனை நிறைவேத்தக்கூடாதோ:)?...

    மொபைல்லயே மின்னி முழக்கிக்கொண்டிருக்கிறேன், ஏனையோரின் லப்டொப்பை தொட விருப்பமில்லை:) வைரஸ் கொடுத்திடுவேனோ என:).

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!