வியாழன், 5 அக்டோபர், 2017

விகடன் சிறுகதையும் கல்கி கவிதையும்

​​
​​
     ஒரு சிறுகதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நம் மனம் சில முந்திரிக்கொட்டை வேலைகள் செய்யும், கவனித்திருக்கிறீர்களா?   அது அறிவாளி "அதான் எனக்குத் தெரியுமே" ரகம்.  

     இம்மாதிரி வாசகர்களை ஏமாற்றுவதில் இருக்கிறது படைப்பாளியின் சாமர்த்தியம்.  சில பெரிய எழுத்தாளர்களின் கதைகளை படிக்கும்போது 'என்ன இருக்கிறது இதில்?' என்று சில சமயம் தோன்றும்.  வெளியில் சொன்னால் 'உனக்குத்தான் புரியவில்லை.  பெரிய தத்துவம் அதில் மறைபொருளாக விளக்கப் பட்டிருக்கிறது' என்று சொல்வோரும் உண்டு.  (அதனால் இப்படிப்பட்ட கருத்துகளை வெளியில் சொல்வதில்லை!!) 

     ஆனாலும் கண்கள் படிப்பதை நம் மனம் முந்திச் செல்வதை நிறுத்துவதில்லை.  இந்த வகையில் ஒரு புது முயற்சியாக சமீபத்தில் ஆனந்த விகடனில் வந்த ஜெயமோகன் சிறுகதை படித்தபோது மனதுடன் ஏற்பட்ட அனுபவத்தைக் கீழே தருகிறேன்.  படிக்கப் படிக்க மனதில் தோன்றிய எண்ணங்கள்.

-----------------------------------




பழைய குமாஸ்தா தன்  'உயர் உயர்' அதிகாரிக்கு ஒரு சடங்கு விஷயத்தில் உதவி செய்ய இருக்கிறார்.    அந்த பழைய குமாஸ்தாவிடம்  இன்னும் அந்தப் பழைய அடிமைத்தனம் போகவில்லை.  இவர் உதவியோடு காரியம் பண்ண வந்திருக்கும் அந்த உ உ அதிகாரி இவரை (இப்பொழுதும்) மதிக்கவேயில்லை.

சிறுகதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது இதுதான் கதையின் மையக் கருத்து என்கிற எண்ணம் வருகிறது.  கடைசிவரை இவர் ஏமாற்றம் நிற்கப்போகிறது என்று தோன்றுகிறது.  அல்லது அந்த 'உஉஅ' இந்த விஷயத்தில்  ஒரு பாடம் புகட்டப்படப் போகிறார் என்று மனதில் படுகிறது.

அவர் உறவினர்கள் பெரிய பெரிய கார்களில் வந்திறங்க, ஒவ்வொரு காரின் அருகேயும் ஓடி கதவைத் திறந்து விட்டு பணிந்து நிற்கிறார் - ஒரு நன்றியுள்ள நாய் ஒவ்வொரு எஜமானன் முன்னும் சென்று வாலாட்டுவதைப்போல.  எல்லோரும் அதே அலட்சியத்தை இவருக்கு பதிலாக்குகிறார்கள்.  ஒய்வு பெற்று பல வருடங்களாகியும்,  இன்னமும் ஏன் இவ்வளவு பணிகிறார் என்ற எண்ணம் வருகிறது.  சிலருக்கு ரத்தத்தில் ஊறிவிடும் போலும்! 



ஆடம்பரக் கார்களில் வந்து இறங்கியவர்களில் ஒரு இளைஞன்.   எம் பி ஏ படித்தவன்.  உறவினன்.   இவன்,  இவர்களிடையேயான உரையாடலில்  இவரிடம் மரியாதை காட்டுகிறான்.  சடங்குகள் பற்றி கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்கிறான்.  படிக்கும் நமக்கு கதையின் போக்கு 'இளைய சமுதாயம் பரவாயில்லை, மதிக்கிறது.  இவன் மூலம் அந்தப் பாடம் புகட்டப்படலாம்'  என்ற வகையில் கதை தொடரப்போகிறது என்று தோன்றும் கட்டம்.

ஆனால்  கதை இங்கு ஒரு திருப்பம் பார்க்கிறது.  பிராயச்சித்த பூஜை செய்யும் இடம் அது.  யார் என்ன பாவம் செய்தார்கள், எதற்கு பிராயச்சித்தம் என்று அறிய அலைகிறார் அந்த அடிமை .  அந்த முயற்சியில் இறந்தவரின் பெண்ணிடம் வாய் கொடுத்து செமையாக வாங்கி கட்டிக்கொள்கிறார்.  

வாய் பேச முடியாத ஊமை, மூளை வளர்ச்சி இல்லாதவர்தான் பரிகாரம் செய்பவர் என்று அறிந்ததும் ஆர்வம் வருகிறது அவருக்கு.  

நமக்கும்! 

யாரிடம் விஷயம் பெயரும் என்று கணக்குப்போட்டு,  வயதான டிரைவரிடம் சென்று அவர் மூக்குப்பொடி போடுபவர் என்று தெரிந்து கொக்கி போடுகிறார். 

"கொஞ்சம் மூக்குப்பொடி கொடுங்க..."  

ட்ரிக் வேலை செய்கிறது.  விஷயம் கசியத் தொடங்குகிறது.  நடந்த சம்பவம் தெளிவாக விளக்கப்படுகிறது.  விஷயங்கள் அறிந்துகொண்ட ஆசுவாசம் அடிமையிடம்.

கதை முடிவு?




மூளை வளர்ச்சி அடையாதவனின் கைரேகையோ, சம்மதமோ சட்டப்படி செல்லுமா?   ஓய்வு பெற்ற நீதிபதிக்குத் தெரியாத சட்ட நுணுக்கமா?  ஆனால் தர்மத்துக்கு அவர் மனதில் பயம் இருக்கிறது.   சுயநல பயம்.  முடிவில் வரும் அந்த சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கிறதா?  எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆமாம்,  தலைப்பு என்ன சொல்கிறது?  ஜீவி ஸார் அலசிச் சொல்லக் கூடும்.


======================================================================


     2013 இல் அடக்கி வைக்கப்படும் பெண்கள் பற்றிய ஏதோ ஒரு செய்தித்தாள் செய்தியைப் படித்து விட்டு முக நூலில்  முயற்சித்தது! 




======================================================================================


     'இப்படி கவிதை எழுதலாமா?' என்று ஒரு நண்பர் சமீபத்தில் கேட்டிருந்தார்.  எனக்கு ஈரோடு தமிழன்பன் கவிதைகள் பிடிக்கும்.  வைரமுத்துவுக்கு இணையாக பேசப்பட்டிருக்க வேண்டியவர்.  ஏனோ அந்த அளவு பேசப்படாமல் போனார்.  


     அவருடைய கவிதை ஒன்று கல்கியில்.  நான் மேலே கதை அலசலில் சொன்ன மாதிரி சாதாரண கவிதைதான்.  வார்த்தைகள் மாறி விழும் லாவகமும், கவிதை சொல்லும் பொருளும்,  'வனங்கள் தூங்க முடியாது, தச்சுத் தொழில் தற்கொலை செய்து கொள்ளும்' போன்ற  வரிகள் கவிதை அந்தஸ்த்தைப் பெறுகின்றன..  சமயங்களில், வரிசையாக சாதாரணமாக அமைய வேண்டிய வரிகளை ஜுனூன் தமிழ் போல அமைக்கவேண்டும்.  பெரிய உதாரணம் இல்லைதான்.  ஆனாலும்.....







படிக்க முடிகிறதா?



அவர் கவிதைகளில் சில...


காம்புக்கு வேறென்ன
கவுரவம் வேண்டும்
தாங்கிக் கொண்டிருக்க
ஒரு ரோஜாப்பூ இருந்தால் போதாதா?



மங்கல

மலர்களில் மகரந்தம் தூவிப்
பொதுவுடமைப்
பொன் கனாக்கனிய
நம் பங்கினை அளிப்போம் வா




என் 
தமிழனுக்குத் 
திருவிழாத் தேதிகள் நினைவிருக்கும் 
திதிநாள் பிறந்தநாள் நினைவிருக்கும் 
திரும்பாத கடன்கள் 
நிச்சயம் நினைவிருக்கும் 
தாய்மொழி தமிழ்மட்டும்தான் 
தவறியும் 
நினைவில் இருப்பதில்லை




     அவர் ஒரு கவிதை எழுதி இருப்பார்.  எழுத்தாளர் அல்லது கவிஞர் தனது படைப்பை எழுத ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கும்போது மனைவி அழைத்து Gas  தீர்ந்து விட்டது என்பார்.  அதை ஒட்டி நான் எழுத முயற்சித்த கவிதை ஒன்று கீழே...




======================================================



92 கருத்துகள்:

  1. இனிய காலைப் பொழுது..

    கதைப் பகுதி அருமை...
    யாராயினும் தர்மத்திற்கு பயந்தே ஆக வேண்டும்...

    கதை - விதை - கவிதை...

    அழகு.. அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜு ஸார். சமீப காலமாக முதல் ஆளாக வந்மு கருத்துரை இட்டு விடுகிறீர்கள். நன்றி.

      நீக்கு
  2. கவிதை ஒன்று கீழே...

    ஆனால் ஒன்றையும் காணோமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை இணைக்கவில்லையா? ஓ... இனி இணைப்கதில் அர்த்தம் இருக்காது. அடுத்த வாரத்துக்கு வைத்துக் கொள்ள வேண்டியதுதான். நன்றி துரை செல்வராஜு ஸார்.

      நீக்கு
  3. ஈரோடு தமிழன்பன் கவிதைகளை மிகவும் ரசித்தேன் நண்பரே
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
  4. கடைசியில் உங்கள் கவிதை ஆரம்பமாவதற்கு முன்பே Gas தீர்ந்துவிட்டதா? மற்றவற்றை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..... ஹா.... ஹா... நெல்லை. அப்படியெல்லாம் இல்லை. கவிதையை இணைத்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இனி இணைப்பதில் அர்த்தமில்லை! அடுத்த வாரம் பார்க்கலாம்.

      நீக்கு
  5. உங்கள் பதிவைப் படித்த போது எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்:
    சிறுகதையை முழுதாகப் படிக்காமல் கருத்துச் சொல்ல இஷ்டமில்லை; ஜெயமோகன் பிடித்ததுமில்லை. //வெளியில் சொன்னால் 'உனக்குத்தான் புரியவில்லை. பெரிய தத்துவம் அதில் மறைபொருளாக விளக்கப் பட்டிருக்கிறது' என்று சொல்வோரும் உண்டு. (அதனால் இப்படிப்பட்ட கருத்துகளை வெளியில் சொல்வதில்லை!!) // இந்த கருத்து ரொம்பப் பிடித்தது!!
    2013 உங்கள் கவிதையை முன்பே படித்த ஞாபகம்! முன்னரே பகிரப்பட்டதோ?
    ஈரோடு தமிழன்பன் கவிதைகள் பிடிக்கும். ஏனோ புகழ் ஏணியில் வேகமாக ஏறவில்லை!!
    //எழுத்தாளர் அல்லது கவிஞர் தனது படைப்பை எழுத ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கும்போது மனைவி அழைத்து Gas தீர்ந்து விட்டது என்பார்// லதா மங்கேஷ்கரா பருப்புப் பொடி அரைச்சுத் தருவார்? என்ற சிந்து பைரவி வசனம் ஞாபகம் வந்தது!!
    உங்கள் கவிதையை கீழே தேடினேன் - தோன்றியது :- சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி மிடில்கிளாஸ்மாதவி. கதைச் சுருக்கம் சொல்லி விட்டேன்.. போதாதற்கு கடைசிப் பக்கத்தையும் இணைத்திருக்கிறேனே...

      "சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை". ஹா.... ஹா... ஹா... அப்படி எல்லாம் தப்பிக்க முடியாது. அடுத்த வாரம் போட்டுடுவேனே...

      நீக்கு
  6. திரு.தமிழன்பன் அவர்களின் கவிதை அருமை.
    கீழே ஒன்றுமில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி. அடுத்த வியாழன் வெளியிடுகிறேன்.

      நீக்கு
  7. வோட் போட்டிட்டேன்.. மெதுவாகப் படிச்சால்தான் கவிதை புரியும்.. மீண்டும் வருகிறேன்..

    பதிலளிநீக்கு
  8. திரு .ஈ .த வுடைய எல்லா கவிதையும் அருமை நன்றி பகிர்வுக்கு. ஆமாம் உங்கள் கவிதை சொல்லறீங்க எங்கே?
    முதலில்வருவது புரியும் புரியாத நிலை.. எப்போதும் அவர் கதை அப்படித்தான் எனக்கு முடிவில் என் விருப்பப்படி அர்த்தம் படுத்தி கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பூவிழி... அவர் கதை, இவர் கதை என்று பிரித்துப் பார்க்கவே வேண்டாம். எவர் படைப்பாயினும் அது செல்லும் வழி பற்றி யூகிப்போமே... அந்த வகை இது.

      நீக்கு
  9. ஹே! நானும் ஓட்டு போட தெரிந்து கொண்டேன். (என்னது இவ்வளவு நாள் அப்ப தெரியாதா ?ஆமாம் பா ஆமாம்) இந்த திரெட்டி பற்றியெல்லாம் எனக்கு கொஞ்சம் புரியலை என் பிளாக்கிலேயே இருக்கா என்று எனக்கு தெரியாது 1 st ....இப்பதான் இதையே கண்டு பிடித்தேன் .இன்று தான் முதல் முதலில் போடுகிறேன் நிறைய டவ்ட் இப்பதான் சரி செய்ய கற்று கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நன்றி பூவிழி.. நீங்கள் கற்றுக்கொண்டு போட்ட முதல் வோட் எங்களுக்கா? நன்றி.

      நீக்கு
  10. ஈரோடு தமிழனபன் சிறந்த கவிஞர்!அவர் தன்னை விளம்பரப் படித்துக் கொள்ள சிலரைப்போல முனையவில்லை! த ம 8

    பதிலளிநீக்கு
  11. //ஆமாம், தலைப்பு என்ன சொல்கிறது? ஜீவி ஸார் அலசிச் சொல்லக் கூடும்.//

    வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. ஜெமோ சமாச்சாரம் என்றாலே ஒரு தனிப் பதிவாகப் போட்டால் தான் அதற்குரிய மரியாதையைத் தந்த மாதிரி இருக்கும்.
    ஆக, 'பூவனம்' தளத்தில் தனிப் பதிவாகப் போடுகிறேன் எந்த தேதியிட்ட விகடன் என்பதை மட்டும் தெரிவித்தால் தேவலை.

    பதிலளிநீக்கு
  12. // அதை ஒட்டி நான் எழுத முயற்சித்த கவிதை ஒன்று கீழே...//

    அதான் சொல்லிட்டீங்க, அடுத்த வாரத்துக்கு இதை வைச்சே ஒப்பேத்திடறேன்! அப்படினு! ஹிஹிஹி! ஓகே, ஓகே! நடத்துங்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி.... ஹி.... ஹி... கீதாக்கா! ஆனால் அது அறியாமல் செய்த பிழை!

      நீக்கு
  13. //எனக்கு ஈரோடு தமிழன்பன் கவிதைகள் பிடிக்கும். வைரமுத்துவுக்கு இணையாக பேசப்பட்டிருக்க வேண்டியவர். ஏனோ அந்த அளவு பேசப்படாமல் போனார். //

    தமிழன்பன் தன்னைக் காம்பாகவே நினைத்துக் கொண்டிருக்க, வை.முத்துவோ
    தன்னை ஒரு ரோஜாவாகக் கற்பிதம் கொண்டிருக்கிறார் போலிருக்கு.

    வை.முத்துக்கு நிறைய ரோஜாக்களும் காம்புகளாக மாறிப் போனார்கள் என்பது வரலாறு. இவரும் எல்லா நதிகளிலும் ஓடும் ஓடமாகத் தன்னை வரித்துக் கொள்கிற திறமையும் பெற்றிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி ஸார்... ஈரோடு தமிழன்பன், வைரமுத்து பற்றி அவர் கவிதை வரிகள் வழியாகவே கருத்துரைத்திருப்பது சிறப்பு. அதுசரி, புதிய முயற்சி பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...

      நீக்கு
  14. ம்ம்ம்ம் ஜெயமோகன் கதை! முழுசாப் படிச்சால் தான் கருத்துச் சொல்ல முடியும்! இந்தக் கதை அவ்வளவு பிரபலம்னா யாரானும் பகிர்ந்துப்பாங்க! அப்போப் பார்த்துக்கலாம். இதுக்காக விகடனை எல்லாம் வாங்கி வீட்டில் குப்பை சேர்க்க முடியுமா? இப்போ விகடன் இருக்கும் நிலையில் படிக்காமல் இருப்பதே நன்மை! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா... கதையை யார் பகிர்ந்து கொள்வார்கள்? ஆனால் கதைச்சுருக்கமும், கதை முடிவும் இங்கேயே இருக்கிறதே...

      நீக்கு
  15. பிர்மாண்டங்களுக்கிடையே இடுக்கில் காணப்பட்ட அந்தக் கவிதை அற்புதம்.

    எந்த காம்பு இந்த ரோஜாவுக்குக் கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை..

    "பாண்டவர்களும் கெளரவர்களும்
    பாதிப்பாதியாய்க்
    கலந்து விட்ட உலகில்.."

    இதைவிட எப்படிச் சிறப்பாக இன்றைய உலகிலிருந்து பெறப்பட்ட ஞானத்தைச் சொல்லியிருக்க முடியும் என்று தெரியவில்லை.

    மனம் உவக்கும் வாழ்த்துக்கள், ஸ்ரீராம்!






    பதிலளிநீக்கு
  16. //ஈரோடு தமிழன்பன், வைரமுத்து பற்றி அவர் கவிதை வரிகள் வழியாகவே கருத்துரைத்திருப்பது சிறப்பு...
    -- ஸ்ரீராம் //

    'எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்' என்பது வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பு ஒன்றிற்கான தலைப்பும் கூட.

    பதிலளிநீக்கு
  17. // புதிய முயற்சி பற்றி ஒன்றும் சொல்லவே இல்லையே.//

    ஓ.. விட்டுப் போய் விட்டது. தமிழ் பத்திரிகைகள் கூட செய்யாத அரிய முயற்சி. அருமையான தொடக்கம்.

    வாசகர்களையும் எழுதச் சொல்லுங்கள். சொல்லி விட்டால் நெல்லைத் தமிழன் இப்பொழுதே ரெடியாகி விடுவார்!.. நானும் எழுதுகிறேன்.

    'கமலி காத்திருக்கிறாள்' பற்றி யாராவது எழுதினாலும் எனக்கு சந்தோஷம் தான். :))
    (இன்னும் இந்தக் கதையே யாருக்கும் புரிபடவில்லை என்பது தான் ஆதார விஷயம்!..அந்த நம்பிக்கையில் சொல்கிறேன்..)

    பதிலளிநீக்கு
  18. ///ஒரு சிறுகதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நம் மனம் சில முந்திரிக்கொட்டை வேலைகள் செய்யும், கவனித்திருக்கிறீர்களா? அது அறிவாளி "அதான் எனக்குத் தெரியுமே" ரகம். ///

    ஹா ஹா ஹா கரீட்டு... அரைச்ச மாவையே அரைப்பதுபோல இருக்கும் பல கதைகளில் பல வசனங்கள் ஒரேமாதிரி:).. அதனால தாவிப்படி தாவிப்படி என மனம் சொல்லும்:).. புத்திக்கு யார் முன்னுரிமை கொடுக்கிறோம்?:) மனதுக்குத்தானே முன்னுரிமை:).

    //'உனக்குத்தான் புரியவில்லை. பெரிய தத்துவம் அதில் மறைபொருளாக விளக்கப் பட்டிருக்கிறது' என்று சொல்வோரும் உண்டு.///
    ஹா ஹா ஹா 100 வீதம் கரீட்டு:).. இது பெரும்பாலும் பெரியவர்களே இப்படிச் சொல்வதுண்டு:)..

    //ஆமாம், தலைப்பு என்ன சொல்கிறது? ஜீவி ஸார் அலசிச் சொல்லக் கூடும்.///

    அவரே சொல்லட்டும் மீயும் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. // 2013 இல் அடக்கி வைக்கப்படும் பெண்கள் பற்றிய//

    உங்கள் கவிதை அழகு.. நன்றாகத்தானே இருக்கிறது? அதில் என்ன தவறு இருக்கிறதாம்??:)..

    வைரமுத்து அவர்கள் ஒருநாள் சொன்ன வசனம்... கவிதை என்பது.. நம் மனதுக்கு என்ன தோணுகிறதோ அதை அப்படியே எழுதுவது.. இதில் சரிபிழை நீதி ஞாயம் எனக் கேட்கக்கூடாது:).. அதைக் கேட்டதிலிருந்துதானே மீயும் பிரபல மகா கவிஞர் ஆனேன்:))

    கதிரைக் கவிதை சூப்பர்.. ஜடப்பொருளுக்கு பேசும் சக்தி கிடைச்சால் இப்படித்தான் பேசும்.. நமக்கு எல்லாம் இருக்கிறதே என்றுதானே.. மூக்கை அதில் துடைக்கிறோம்.. கண்ணீரை அதில் வடிய விடுறெஓம்.. கோபம் வந்தால் எட்டி உதைப்பார்கள் ... அதுக்கு மட்டும் திடீரென சக்தி கிடைச்சால்ல்.. திருப்பி ஒரு அடி விடும் பாஅருங்கோ:) ஹா ஹா ஹா:)..

    முதல் படத்திலேயே கிளியராக இருக்கிறது, 2ம் படம் தேவையில்லை நீக்கிடலாம்.

    பதிலளிநீக்கு
  20. /// காம்புக்கு வேறென்ன
    கவுரவம் வேண்டும்
    தாங்கிக் கொண்டிருக்க
    ஒரு ரோஜாப்பூ இருந்தால் போதாதா?///

    போதும்தான் - ஆனால்
    எல்லாக் காம்புகளுக்கும்
    ரோஜாப்பூக்
    கிடைப்பதில்லை:).. ஹா ஹா ஹா..

    ஆஹா சூப்பர் இப்பூடிக் கவிதைகள்தான் என் மனதைக் கொள்ளை கொள்ளும்... இப்படித்தான் எழுதும்படி நான் கேட்பது.. செந்தமிழ் வேண்டாமே:).. ஹையோ கலைக்கினமே:)..

    ஹையோ ரோபோ வெளியே வந்துவிட்டதே கர்ர்:).

    பதிலளிநீக்கு
  21. ///எழுத்தாளர் அல்லது கவிஞர் தனது படைப்பை எழுத ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கும்போது மனைவி அழைத்து Gas தீர்ந்து விட்டது என்பார். அதை ஒட்டி நான் எழுத முயற்சித்த கவிதை ஒன்று கீழே...///

    இதுக்குத்தான் ஐன்ஸ்டைன் போல தனி ரூம் கட்டி அதில் இருந்து எழுதோணும்.. உள்ளே பூனை மட்டும் வரும்படி ஒரு குட்டி துவாரம் வைத்தால் போதும்:).. அக்கதை தெரியும்தானே ஸ்ரீராம்?:)

    கீழே யா கவிதையா ...ங்ங்ங்ங்ங்ங்ங்ஙேஙேஙே?:).. கீழே துரை அண்ணந்தேன்ன்ன்ன் இருக்கிறார்:)..

    மனிசருக்கு இருக்கும் நேர அவசரத்தில், இந்த ரோபோவை அப்படியே தூக்கி நடுத்தேம்ஸ்ல தலைகீழாக போடத்தான் மனம் வருதூஊஊ கர்ர்ர்ர்:).

    பதிலளிநீக்கு
  22. ஆவாரம் பூவு ஆறேழு நாளா...பாடல் செம ஹிட் ஆனது ,அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கு பின் ஈரோடு தமிழன்பன் வேறெந்த படத்திலும் பாடல் எழுதவில்லை ,அவர் தவிர்த்தாரா,வாய்ப்பு வரவில்லையா என்று தெரியவில்லை :)

    பதிலளிநீக்கு
  23. இந்தக் கதையை ஜெமோ-வின் தளத்திலேயே சில நாட்களுக்கு முன் படித்தேன். ஜெமோ-வின் அறம், மன்மதன், நாக்கு முதலிய கதைகளைப் படித்திருக்கிறேன். அவருடைய கதைகள் வழக்கமான காதல், குடும்பம், குழப்பம், சுபம் சார்ந்த வகையல்ல. அந்த ஃபார்முலாவின் துணையோடு ஜெமோ-விற்குள் நுழையும் சராசரி வாசகனுக்கு ஏமாற்றமே ஏற்படும். நீங்கள் அப்படியில்லை எனினும் உங்களுக்கு சட்டச் சிக்கல்! இப்படி நடந்திருக்கமுடியுமா என்று. அது ஒருபுறமிருக்க,

    என் பார்வையில், இந்தக்கதை மனிதமனத்தின் அவல நிலையைக் கோடிட்டுச்செல்கிறது. எத்தனைப் பணம், புகழடைந்தும் தீராத ஆசை, கர்மா, ப்ராயச்சித்தம் எனும் மதம் சார்ந்த நம்பிக்கைகள் ஏற்படுத்தும் பீதி, குற்றத்தின் உச்சமான பாவம் எனும் நிலையிலும் ‘அது நானில்லை! தோ, அவந்தான் !’ என ஒன்னும் தெரியாத அப்பாவியை மாட்டிவிட்டுத் தப்பிக்க நினைக்கும் கீழ்மை - என வெளிச்சம் பாய்ச்ச முனையும் புனைவு ..

    ஈரோடு தமிழன்பனைப்படித்ததில்லை. வைமு-வைப்பற்றி the less said, the better ! கண்ணதாசன் அரசு, இவர் பேரரசு! தமிழ்நாட்டில்தான் நிகழும் இத்தகைய இலக்கிய அபத்தமெல்லாம்.

    முகநூலில் முகம் காட்டிய உங்கள் கவிதை ஏதோ சொல்லப்பார்க்கிறது..!

    பதிலளிநீக்கு
  24. உங்கள் கவிதை எங்கே ஸ்ரீராம்! முகநூலில் நீங்கள் பகிர்ந்த கவிதை நன்றாக இருக்கிறது! ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் செம...நாற்காலி...மற்றும் ரோஜாவைத் தாங்கும் அந்தக் காம்பு என்று சூப்பர்..

    ----இருவரின் கருத்தும்...


    கீதா: "நாற்காலி - நான் காலி" என்று ஒரு கதை எழுதி பாதியில் நிற்கிறது ஜெ ஜெ இருந்த போது அப்போது ஏதோ தோன்ற எழுதியது...அரசியல் எல்லாம் இல்லை..பொதுவானதுதான்..நாற்காலி ஆசை என்பதைக் கொண்டு குடும்பத்திலிருந்து ஆட்சி வரை என்று..... அதில் ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய நாற்காலி கவிதையின் அர்த்தம் சில இருக்கும்.... ..அப்படியே பாதியில் இருக்கு அதை முடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது...பார்ப்போம்...

    தமிழன்பனின் கவிதை சிறப்பாக இருக்கும் ஸ்ரீராம் உங்கள் கருத்துடன் நானும்...வை மு வுக்குக் கிடைத்தது தமிழன்பனுக்கு ஏனோ கிடைக்கலை...இப்படித்தான் பலர் காம்பாகத் தாங்கி இருக்கிறார்கள் ஒரு சிலர் ரோஜாவாக இருக்கிறார்கள்...காம்புடன் ரோஜா பறிக்கப்பட்டாலும் காம்பு வெளியில் தெரியாமல் போய்விடுவதைப் போல என்றும் கொள்ளலாமோ...அந்தக் கவிதை ரொம்பவே மனதைத் தொட்டது...

    பதிலளிநீக்கு
  25. ஸ்ரீராம் உங்கள் முதல் இரு பத்தியும் டிட்டோ செய்கிறேன்...!!! எனக்கும் அப்படி எல்லாம் தோன்றும்..திருமணத்திற்கு முன் வாசித்ததுதான்..அப்போ இப்படித்தான்... அதன் பின்..பல வருடங்களாக வாசிப்பு குறைந்துவிட்டது என்பதை விட சுத்தமாக இல்லை எனலாம். எப்போதேனும் பயணத்தில் வாங்கும் இதழ்களில் வாசித்தவைதான் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும். தனியாகப் பயணிக்கும் போதுதான் அதுவும்.... அதனால்தான் நெல்லையின் புதிருக்குக் கூடப் பதில் சொல்ல முடியவில்லை. வாசிக்க வேண்டும் என்று பல பல பல லிஸ்டில் இருக்கிறது...கணினியில் இருக்கிறது.....முன்பெல்லாம் ஏதேனும் இதழ்களின் பேப்பரில் பொட்டலம் கட்டித் தருவார்கள் இல்லையா அப்படி வரும் பேப்பர்களைக் கூட வீட்டிற்கு வந்ததும் வாசிப்பது வழக்கம். துணுக்குகள். இப்போது ஜெமோவின் கதையை வாசிக்க வேண்டும்...நீங்கள் கொடுத்திருப்பதை வாசிக்கக் கொஞ்சம் கடினமாக இருக்கிறது...அவரது தளத்தில் இருக்குமா பார்க்கணும்...நீங்க கொடுத்திருப்பதை என் கணினியில் சேவ் செய்து வாசிக்க முயற்சி செய்கிறேன்...வாசித்துவிட்டு வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  26. //எழுத்தாளர் அல்லது கவிஞர் தனது படைப்பை எழுத ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கும்போது மனைவி அழைத்து Gas தீர்ந்து விட்டது என்பார்// சிந்துபைரவி படத்தின் காட்சிகள் வந்தது மனதில்....

    கீதா: மட்டுமல்ல இது கணவன்களுக்கு மட்டுமல்ல... எழுதும் மனைவிகளுக்கும் இது போன்றவை ஆனால் வேறு விதத்தில்...(காஸ் தீர்ந்துவிட்டது என்று இல்லை...) ஏற்படும்....ஹிஹிஹிஹிஹி...

    துளசி: அந்த வரிகள் மிகவும் சரியே! ஒவ்வொரு விதமாக வரும்...

    பதிலளிநீக்கு
  27. இங்கு கொடுத்திருக்கும் பகுதிகளை டவுன்லோட் செய்து வாசித்தேன் ஸ்ரீராம்...முழுவதும் வாசிக்க வேண்டுமோ....கடைசி எனக்குத்தான்புரியவில்லை போலும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  28. /ஒரு சிறுகதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நம் மனம் சில முந்திரிக்கொட்டை வேலைகள் செய்யும், கவனித்திருக்கிறீர்களா? அது அறிவாளி "அதான் எனக்குத் தெரியுமே" ரகம். ///

    ஹாஹா நான் கொஞ்சம் அதிகம் :) என் மனம் பல முந்திரிக்கொட்டை வேலைகள் செய்யும்

    பதிலளிநீக்கு
  29. @ துளசிதரன், கீதா:

    ஆழமற்ற நதி - சிறுகதைக்கான ஜெயமோகன் தளத்தின் லிங்க்:

    http://www.jeyamohan.in/102252#.WdY00o-CzIU

    பதிலளிநீக்கு
  30. உங்க கவிதை அருமை

    இயல்பாய் இருக்க சொல்லி ஒரு பெண்மணியிடம் சொல்லுவேன் அவர் இப்போ இல்லை காலமுழுதும் ஊராரை நினைத்தே பயப்படுவார்
    //அந்த நாலு பேர் என்ன சொல்வாங்க // இப்படித்தான் இருந்தது அவர் இருக்கும் வரை
    என்னை பொறுத்தவரை தங்களுக்கு தடைகளை போட்டுக்கொள்வதே பெண்கள்தானோ //

    பதிலளிநீக்கு
  31. ஜீவி ஸார். கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி. எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள் என்பது வைரமுத்து புத்தகமா? கேள்விப்பட்டதில்லை. என் உருவினார் ஒருவர் வைரமுத்துவின் 1000 திரையிசைப் பாடல்கள் என்கிற புத்தகத்தை எனக்குப் பரிசளித்திருக்கிறார்!

    பதிலளிநீக்கு
  32. புதிய முயற்சியைப் பாராட்டியதற்கும் நன்றிகள் ஜீவி ஸார். மிரட்டி கேட்டு வாங்கியிருக்கிறேனோ என்கிற சந்தேகமும் வருகிறது! (இதில் சந்தேகம் வேறயா? என்று கேட்கும் குரல்கள் காதில் விழுகிறது!) கமலி காத்திருக்கிறாள் பற்றி நெல்லைத்தமிழன் எழுத்தாக கூடும்!

    பதிலளிநீக்கு
  33. ஈரோடு தமிழன்பன் ..எனது பள்ளிக்கூட நாட்களில் டொன்போஸ்க்கோ ஸ்கூலுக்கு ஒரு மேடைப்பேச்சு போட்டிக்கு சென்றபோது பார்த்திருக்கேன் ...என் தோழி காட்டினா அப்போ தூர்தர்ஷனிலும் தமிழ் செய்தி இவர் தான் வாசிப்பார் .கம்பீரக்குரல் .
    இவரது கவிதைகள் எளிதில் மனதில் நுழைந்துவிடும் இயல்பானவை

    பதிலளிநீக்கு
  34. //புத்திக்கு யார் முன்னுரிமை கொடுக்கிறோம்?:) மனதுக்குத்தானே முன்னுரிமை:).//

    வாங்க அதிரா... ரெண்டும் ஒண்ணு இல்லையா?!!

    பதிலளிநீக்கு
  35. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  36. வாங்க அதிரா...

    //அதில் என்ன தவறு இருக்கிறதாம்?//

    நான் தவறு என்று சொல்லவில்லையே....

    //கதிரைக் கவிதை சூப்பர்.. //

    ஈரோடு தமிழன்பன் கவிதைகள் கேட்டிருக்கிறீர்களா? படித்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  37. //முதல் படத்திலேயே கிளியராக இருக்கிறது, 2ம் படம் தேவையில்லை நீக்கிடலாம்.//

    வச்சது வச்சிட்டோம். அப்படியே இருந்துட்டு போகட்டும் போங்க...!!


    //ஹையோ ரோபோ வெளியே வந்துவிட்டதே கர்ர்:).//

    அப்படீன்னா என்ன? நெல்லையோ, ஏஞ்சலினோ பொழிப்புரை தரவேண்டும்!

    பதிலளிநீக்கு
  38. /அக்கதை தெரியும்தானே ஸ்ரீராம்?:)//

    தெரியாதே அதிரா!

    //கீழே யா கவிதையா //

    அடுத்த வாரம்..... அடுத்த வாரம்!

    பதிலளிநீக்கு
  39. வாங்க பகவான் ஜி. அந்தப் பாடல் அவர் எழுதியது என்பது நீங்கள் சொன்னதும்தான் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  40. வாங்க ஏகாந்தன் ஸார்... விகடனில் வருமுன்பே அவர் தளத்தில் கதை இருந்ததா? அதை எப்படி விகடன் அனுமதித்தது? எனக்கு சட்டச்சிக்கல் மட்டும் இல்லை, அப்படி குறைபாடுள்ள ஒருவன் திடீரென உணர்வுகளுக்குளாக முடியுமா என்று!

    பதிலளிநீக்கு
  41. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  42. வாங்க கீதா... என் கவிதையை காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சுனு நினைக்கறேன். அடுத்த வாரம் கொண்டு வந்து போடும்! நாற்காலி - நான் காலி பற்றி முன்னர் ஒருதரம் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைவு.

    வாசிப்பு அனுபவத்தை நிறுத்திக் கொண்டால் ஏதோ தப்பு செய்வது போல இருக்கிறது எனக்கு. பரீட்சைக்கு படிக்காத மாணவன் போல உணர்வேன்! எனவே அவ்வப்போதாவது கொஞ்சம் கொஞ்சமாக வாசியுங்கள்.

    பதிலளிநீக்கு
  43. /இங்கு கொடுத்திருக்கும் பகுதிகளை டவுன்லோட் செய்து வாசித்தேன் ஸ்ரீராம்//

    கீதா... ஏகாந்தன் ஸார் லிங்க் தந்திருக்கிறார் பாருங்கள். அங்கு சென்று படியுங்கள்.

    பதிலளிநீக்கு
  44. வாங்க ஏஞ்சலின். படிக்கும்போது கதையைக் கற்பனை செய்யும் அந்த மனத்தின் போக்கைத்தான் எழுத்தாக்க முயற்சித்தேன்.

    கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி ஏஞ்சலின்.

    பதிலளிநீக்கு
  45. //அப்போ தூர்தர்ஷனிலும் தமிழ் செய்தி இவர் தான் வாசிப்பார் .கம்பீரக்குரல் .//

    ஆமாம். கவியரங்கங்களில்தான் இவரது கவிகளை முதலில் கேட்டேன். நன்றி ஏஞ்சலின்.

    பதிலளிநீக்கு
  46. @ ஸ்ரீராம் : //.. விகடனில் வருமுன்பே அவர் தளத்தில் கதை இருந்ததா? அதை எப்படி விகடன் அனுமதித்தது? //

    பதறவேண்டாம்! இந்தக் கதை விகடன் செப்.20 -ஆம் தேதியிட்ட இதழில் வந்தது என்கிறது ஜெமோ கொடுத்திருக்கும் குறிப்பு. விகடனில்தான் முதலில் வெளிவந்தது. அதற்குப்பின் செப். 25-ல் ஜெமோ தன் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    நீங்கள்தான் கதை வெளிவந்த விகடன் இதழ் தேதியில் ஏதோ தில்லுமுல்லு செய்துள்ளதாகத் தெரிகிறது. வாசகர்கள் என்ன நினைப்பார்கள் !?

    பதிலளிநீக்கு
  47. ஏகாந்தன் ஸார்...

    //பதறவேண்டாம்!//

    ஹா.... ஹா..... ஹா...

    //செப்.20 -ஆம் தேதியிட்ட இதழில் வந்தது என்கிறது//

    //நீங்கள்தான் கதை வெளிவந்த விகடன் இதழ் தேதியில் ஏதோ தில்லுமுல்லு செய்துள்ளதாகத் தெரிகிறது//

    ஆம். இன்று வந்திருக்கும் விகடனுக்கு முந்தைய விகடன் என்று நினைத்து விட்டேன். மன்னிக்கவும்! யானே கள்வன்!

    பதிலளிநீக்கு
  48. @ஸ்ரீராம்: //இன்று வந்திருக்கும் விகடனுக்கு முந்தைய விகடன் என்று நினைத்து விட்டேன்..//

    நல்லவேளை! இதற்குள் எB வாசகர்கள் யாராவது போன வார விகடன் கிடைக்குமா என்று விஜாரிக்கப் பொட்டிக்கடைப்பக்கம் போயிருக்கபோகிறார்கள் ..

    பதிலளிநீக்கு
  49. \\இதற்குள் எB வாசகர்கள் யாராவது போன வார விகடன் கிடைக்குமா என்று விஜாரிக்கப் பொட்டிக்கடைப்பக்கம் போயிருக்கபோகிறார்கள் ..//

    அவர்களைத்தான் நிறுத்தி நீங்கள் லிங்க் கொடுத்து திருப்பி விட்டு விட்டீர்களே!!!

    :))

    பதிலளிநீக்கு
  50. @sriram
    மேடம் CAPTCHA வை சொல்றாங்கா :) prove you're not a robot
    நம்மால் ரோட் கார் சிக்னல் எல்லாத்தையும் காட்ட முடியும் ரோபோட் ஆல் சொல்ல முடியாதே :)
    தொடர்ந்து கமெண்ட்ஸ் போடும்போது பிளாக் இப்படி கேக்குது

    பதிலளிநீக்கு
  51. //மேடம் CAPTCHA வை சொல்றாங்கா :) prove you're not a robot //

    ஓ.... ஓகே ஓகே... இது எல்லா ப்ளாக்கிலும் இருப்பதுதான்!

    :))

    பதிலளிநீக்கு
  52. ஜெ மோவின் கதையை வாசித்தேன்! நெட்டில் தேடினேன் அவரது தளத்திலேயே கிடைத்தது. மனதை என்னவோ செய்தது. ச்சே மனிதர்கள் பணம் படைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் ஆனால் எப்படித் தாங்கள் பாவமே செய்யவில்லை என்று ந்னைக்கிறார்கள்..அப்பாவியான கதிரைப் பாவம் செய்தவன் என்று பரிகாரம் பண்ண வைப்பது...ம்ம்ம்ம இந்த பாப புண்ணிய கர்மா, ஏற்படுத்தும் பயம்...தான் செய்யும் தவறைக் கண்டு பயம் இல்லை சட்டம் படித்த நீதிபதிக்கே! ஆனால் பாவ புண்ணிய கர்மா எல்லாம் பயம் ஏற்படுத்துகிறது ம்தான்...அங்கிருந்த அத்தனை மனிதர்களின் கீழ்த்தரமான மனதையும் சொல்லியது. நல்ல ஆத்மாவான கதிரேசன் ...பாவம்! ஸ்ரீராம் எனக்கும் உங்கள் இறுதிக் கேள்வி வருகிறது...ஆனால் நல்ல கதை

    கீதா

    பதிலளிநீக்கு
  53. ஏகாந்தன் சகோ உங்கள் லிங்கைப் பார்க்காமல் விட்டுவிட்டேன். ஆனால் சும்மா நெட்டில் தேடுவோமே என்று தேடினேன் கிடைத்துவிட்டது அவரது தளத்திலேயே...நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க் அதுதான் இல்லையா...வாசித்துவிட்டேன்..துளசிக்கு அனுப்பியிருக்கேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  54. @Thulasidharan V Thillaiakathu கீதா:

    //..நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க் அதுதான் இல்லையா...வாசித்துவிட்டேன்..துளசிக்கு அனுப்பியிருக்கேன்...//

    அதே லிங்க்தான். எப்படியும் படித்துவிட்டீர்கள். சந்தோஷம். நானும் மேற்கொண்டு நெட்டைக் குடைந்து ஜெமோ-வின் ‘அறம்’ சிறுகதையை (ஏழை எழுத்தாளன் பற்றியது) சற்றுமுன் தான் படித்தேன்.

    நான் மேலே பின்னூட்டத்தில் படித்ததாகக் குறிப்பிட்டிருந்தது ‘அறம்’ சிறுகதையல்ல. ‘அறம்’ என்கிற அவருடைய சிறுகதைத் தொகுப்பிலிருந்த வேறொரு கதை-பெயர் நினைவிலில்லை. அவருடைய ‘நாக்கு’ சிறுகதையும் அவருடைய தளத்தில்தான் படித்தேன்.

    ஜெமோ சமகால எழுத்தாளர்களில் சிறந்தவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

    பதிலளிநீக்கு
  55. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  56. நல்ல அலசல்.
    உங்கள் முகநூல் கவிதை அருமை.
    கீழே கவிதையை தேடினேன்.
    அடுத்தவாரம் படித்து விடுகிறேன், போட்டால்.

    பதிலளிநீக்கு
  57. 'இப்படி கவிதை எழுதலாமா?' என்று ஒரு நண்பர் சமீபத்தில் கேட்டிருந்தார்./////


    ////ஸ்ரீராம். said...
    வாங்க அதிரா...

    //அதில் என்ன தவறு இருக்கிறதாம்?//

    நான் தவறு என்று சொல்லவில்லையே....///

    மேலே இருக்கும் வசனம், பேஸ்புக்கில் உங்கள் கவிதையைப் பார்த்துவிட்டுத்தானே, ஒரு நண்பர் இப்படி எழுதலாமா எனக் கேட்டதாக சொல்லியிருக்கிறீங்க?.. அதுக்குத்தான் உங்கள் கவிதையில் தவறு இல்லையே.. நல்லாத்தானே இருக்குது.. அவர் எதுக்கு தவறு எனக் கேட்டார் எனக் கேட்டேன்ன்ன்.. ஹையோ ராமாஆஆஆஆஆஆஆஆ முடியல்ல:)

    பதிலளிநீக்கு
  58. ஸ்ரீராம் கவிதை , படித்திருந்தாலும், மீண்டும் படிப்பது இனிமையே. ஜெமோ கதை வாசித்த பிறகு சொல்கிறேன். அடுத்தகவிதை அடுத்த வியாழனா.

    பதிலளிநீக்கு
  59. வாங்க கீதா ரெங்கன்.. ஏகாந்தன் ஸார் உதவி இல்லாமலேயே படித்துவிட்டேன் என்கிறீர்கள் இல்லையா? ( நாராயண... நாராயண...)

    பதிலளிநீக்கு
  60. ஏகாந்தன் ஸார்.. அறம் சிறுகதைத் தொகுப்பு நான் வாங்கி வைத்திருக்கிறேன். படித்திருக்கிறேன். தலைப்புக்கான சிறுகதை, யானை டாக்டர் போன்ற கதைகள் மிக அருமையாய் இருக்கும்.

    விஷ்ணுபுராணம் வாங்கி வைத்து வருடங்கள் ஆகிறது. இன்னும் பிரிக்கக்கூட இல்லை.

    பதிலளிநீக்கு
  61. கமெண்ட் போட்டு டெலீட் செய்துவிட்டீர்கள் மிகிமா... அகழ்வாராய்ச்சி செய்து சொன்னதற்கு நன்றி. எனக்கே நினைவில்லை!

    பதிலளிநீக்கு
  62. நன்றி கோமதி அரசு மேடம்...

    // அடுத்தவாரம் படித்து விடுகிறேன், போட்டால். //

    ஹா... ஹா... ஹா... ஏன் இந்த அவநம்பிக்கை!

    பதிலளிநீக்கு
  63. வாங்க அதிரா...

    // மேலே இருக்கும் வசனம், பேஸ்புக்கில் உங்கள் கவிதையைப் பார்த்துவிட்டுத்தானே, ஒரு நண்பர் இப்படி எழுதலாமா எனக் கேட்டதாக சொல்லியிருக்கிறீங்க?.. //

    ஹிஹிஹிஹி.... இல்லை. அது வேற... இது வேற!

    பதிலளிநீக்கு
  64. வாங்க வல்லிம்மா... அடுத்த வாரம் "கவிதை" கட்டாயம் போட்டு விடுகிறேன்!!!

    பதிலளிநீக்கு
  65. @ஸ்ரீராம்:

    //விஷ்ணுபுராணம் வாங்கி வைத்து வருடங்கள் ஆகிறது. இன்னும் பிரிக்கக்கூட இல்லை.//

    அதுசரி, மேலே ஜெமோ புராணமல்லவா ஓடிக்கொண்டிருக்கிறது? விஷ்ணுபுராணம் எங்கிருந்து வந்தது? விஷ்ணுபுரத்தைச் சொல்கிறீர்களோ!

    பதிலளிநீக்கு
  66. ஆமாம் ஸார்..... ஆமாம்! விஷ்ணுபுரம் விஷ்ணுபுராணம் ஆகிவிட்டது!

    :))))

    பதிலளிநீக்கு
  67. //கமலி காத்திருக்கிறாள் பற்றி நெல்லைத்தமிழன் எழுத்தாக கூடும்!//

    கதை முடிந்தால் தான் ஒரு கதையையே வாசிக்க முடியும் என்பது அவரது நிலை. அதில் அவருக்குப் பழாக்கமான இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. பல நேரங்களில் ஒரு கதையைப் படிக்க ஆரம்பிக்கும் முன்பே அந்தக் கதையின் முடிவைப் படித்து விடுவேன் என்றும் சொல்கிறார். ஒரு கதையைப் படிக்கும் பொழுதே அவ்வப்போது நம் மனசில் தோன்றுவதை நேரேட் பண்ணுகிற வித்தை அல்லவா நீங்கள் இப்பொழுது முயற்சித்திருப்பது?.. நெல்லைக்கு சரிப்பட்டு வருமா?.. (எப்படியெல்லாம் உசுப்பேத்த வேண்டியிருக்கிறது, பாருங்கள்!)

    பதிலளிநீக்கு
  68. ஆழமற்ற நதி - ஆழமான மனித மனங்கள்? கதையை இப்போது தான் படித்தேன். (நீங்கள் அளித்திருந்த கட்டிங்க்ஸ் மற்றும் கதைச் சுருக்கம் என் போன்ற சாதாரணருக்கு புரியவில்லை!!) கதை போக்கில் உங்கள் விளக்கங்களையும் பொருத்திப் பார்த்தேன். முந்திரிக் கொட்டை கற்பனைகள் சரி தான்!! பல புதிய கதைகளுக்கான கரு? :-)) புதிய கே.வா.போ. கதைக்கான ஒன் லைனர்?
    முடிவு குறித்த உங்கள் கேள்வி சரி தான் - எனக்கு என்னவோ தெய்வத் திருமகள் படத்தில் கடைசியில் கிருஷ்ணா காரக்டர் குழந்தை எதிர்காலம் குறித்து விளக்கமளித்தது தான் ஞாபகம் வந்தது!!

    பதிலளிநீக்கு
  69. வாங்க ஜீவி ஸார்...

    //ஒரு கதையைப் படிக்கும் பொழுதே அவ்வப்போது நம் மனசில் தோன்றுவதை நேரேட் பண்ணுகிற வித்தை அல்லவா நீங்கள் இப்பொழுது முயற்சித்திருப்பது?.//

    ஆம். அப்படி படிக்கும்போது பல புதிய சிந்தனைகளும் நமக்குத் தோன்றும். மி கி மா சொல்லியிருப்பது போல புதிய கதைகளுக்கும் ஐடியா.

    // (எப்படியெல்லாம் உசுப்பேத்த வேண்டியிருக்கிறது, பாருங்கள்!) //

    ஹா.... ஹா.... ஹா.... ஆனால் முடிவு தெரியாத ஒரு கதையைப்பற்றி எவ்வளவு எழுதிவிட முடியும்? அப்படி எழுதினால் அது அந்தக் கதையைப் படைப்பவரைப் பார்த்து வீசப்படும் கேள்விகளாகத்தான் அமையும்!

    பதிலளிநீக்கு
  70. வாங்க மிடில்க்ளாஸ்மாதவி

    மீள் வருகைக்கு நன்றி.

    // என் போன்ற சாதாரணருக்கு புரியவில்லை!!) //

    உங்கள் நிலையில் நான் இருந்திருந்தால் எனக்கும் புரிந்திருக்காதுதான். நீங்கள் சாதாரனர் எல்லாம் இல்லை என்பது கதையைத் தேடிப்படித்துவிட்டு வந்து அளித்திருக்கும் பதிலில் தெரிகிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல நாம் வாசிக்க வாசிக்கத்தான் நமக்கு எழுதப் புதிய கருக்களும், உற்சவங்களும் கிடைக்கின்றன. மிகுந்த திருதியைக் கொடுத்த பின்னூட்டம்.

    பதிலளிநீக்கு
  71. Jeyamohan's story is in jeyamohan.in

    பதிலளிநீக்கு
  72. கதையைப் பகிர்ந்த விதம் அருமை. விகடன் தளத்தில் வாசிக்கிறேன்.

    2013 கவிதை அருமை. கல்கி கவிதையும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!