செவ்வாய், 3 அக்டோபர், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : என் புருஷன் எனக்கு மட்டும்தான் - கில்லர்ஜி - சீதை 21

என் புருஷன் எனக்கு மட்டும்தான்
கில்லர்ஜி

பேருந்து தேவகோட்டையை விட்டு புறப்பட்டு மதுரையை நோக்கி சென்று கொண்டு இருந்தது... அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம் வெகு லாவகமாக பெண்டிர்களை மட்டும் இடித்துக் கொண்டு பயணச்சீட்டை கொடுத்து அரசுக்கு வருமானத்தை பெருக்கி கொண்டு கடமையே கண்ணாக நடந்து கொண்டு இருந்தார் நடத்துனர்.

இக்கதையின் நாயகிக்கு மையப் பகுதியில் இருக்கை கிடைத்தது உட்கார்ந்து இருந்தாள் எந்த விதமான இடையூறும் இல்லாமல் பயணம் செய்து கொண்டு இருந்தாள் சற்றே கவலையுடன். காரணம் தனது கணவன் (இக்கதையின் நாயகன்இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டு வருகிறான். இருவரும் மதுரை மீனாம்பாள்புரத்தில் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்கின்றார்கள். கணவனும் பக்கத்தில் உட்கார்ந்து வந்தால் கடலை போடலாம். பக்கத்தில் உட்கார்ந்து இருந்த பாட்டியை கேட்டு வைத்தாள்.

பாட்டி எந்த ஊர் போறீங்க ?  

பேத்தியை பாக்கத்தான் மருதைக்கு போறேன் மாட்டுத் தாவணியில எறங்குனா.... மயேன் வந்து கூட்டிட்டு போயிறுவான்.

//க்கும் மதுரையா.... ? உன் கதை யாருக்கு வேணும் ஆத்தா// என்று நினைத்தாள் இருப்பினும் காரைக்குடி சென்றதும் கூட்டம் குறைந்து விடும். வேறு இருக்கை பிடித்து கணவனை பக்கத்தில் உட்காரச் சொல்லலாம் என்று நம்பினாள். நம்பிக்கைதானே வாழ்க்கை.

காரைக்குடி வந்ததும் எதிர் பாராத கூட்டம் வந்து மேலும் ஏறியது இன்று முகூர்த்தநாள் வேறு கணவனுக்கு இடம் கிடைக்கவில்லை திருப்பத்தூர் வந்ததும் மேலும் கூட்டம் இப்பொழுது கணவனுக்கு இரண்டு புறமும் இரண்டு இளம் பெண்கள் அதில் கணவனுக்கு முன்புறமாக நிற்பவளுக்கு பார்வையே வேறு ரீதியில் இருந்தது அவளது பார்வையே அப்படித்தானா... அல்லது கணவனை உரசிக்கொண்டு நிற்பதால் அப்படி இவளுக்கு தோன்றுகிறதா ? என்று இக்கதையின் ஆசிரியருக்கு தீர்மானமாய் சொல்ல இயலவில்லை காரணம் அவரும் பக்கத்தில் நின்று அவளை ஜொள்ளு விட்டுக் கொண்டு.... மேலூரில் இருக்கும் கொழுந்தியாள் மேகலா வீட்டுக்கு இந்தப் பேருந்தில்தானே வருகிறார்.

தனது கணவனை அவள் உரசிக் கொண்டுதான் வருகிறாள் இவளுக்கு இரத்தம் கொதித்தது எழுந்து ஒரு அறை விடுவோமாமுடியாதே.. கையை வீசுவதற்குகூட இடமில்லையே.... சரி அவள்தான் வெட்கம் கெட்டுப்போய் உரசுகிறாள் என்றால் தனது கணவனும் பேசாமல் நின்றால் அர்த்தமென்ன ? திருமணமாகி மூன்று வருடத்துக்கு குழந்தை வேண்டாம் என்று இருவரும் சேர்ந்தே... தீர்மானித்துதானே வாழ்கிறோம் தாம்பத்யத்தில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கையில் இடையில் இவள் ஏன் ? இல்லை உடன் குழந்தைக்கான வேலையில் இறங்கினால்தான் சரியாகும். கணவனை கூர்ந்து பார்த்தாள் அவன் ஏதோ சிந்தனையில் இருந்தான் சிந்தனையா ? அல்லது அவள் உரசுவதை காணாதது போல் பாவனையா ? நம் கணவனா இப்படி ? அதுவும் நம் கண்ணெதிரே.... சின்னவீடு திரைப்படத்தில் இளையராஜா பாடினாரே... //பொதுவா மனுசன் உத்தம புத்திரன்க சமயம் கிடைச்சா சங்கதியில் மன்னனுங்க// என்று உண்மைதானோ. திருப்பத்தூரில் தொடங்கிய உரசல் மேலூர் நெருங்கும்வரை... தொடர்ந்தது இவளுக்கு அழுகை வரும்போல் இருந்தது வீட்டுக்கு போனதும் இவருக்கு வைத்துக் கொள்வோம் கச்சேரி.

பேருந்து கீழவளவு வந்ததும் அவள் கீழே இறங்கி போய் விட்டாள் கணவனை ஏறெடுத்து பார்ப்பதை தவிர்த்தாள் காரணம் அவளால் பொறுக்க முடியாமல் பொது இடத்தில் வைத்து கேட்டு விடுவோமோ... என்ற பயம் வீட்டுக்கு போய் வைத்துக் கொள்வோம் இதை மன்னிக்கவே முடியாது இவருக்கு நான் என்ன குறை வைத்தேன் ச்சே இவ்வளவு கீழ்த்தனமானவரா.... நம் கணவர். மாட்டுத் தாவணியில் இறங்கியதும் கால் டாக்ஸி பிடித்து திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள் மணமக்களோடு புகைப்படம் எடுக்கையில் கணவன்மீது இருந்த கோபத்தால் வலுக்கட்டாயமாக சிரித்தாள் மதியம் விருந்து முடிந்து மீண்டும் தேவகோட்டை புறப்பட்டனர் பேருந்தில் ஏறியதும் கணவனுடன் பேசாமல் வந்தவள் மன உளைச்சலில் உறங்கி விட்டாள் பேரூந்து நல்ல வேகத்தில் போய்க்கொண்டு இருந்தது யானைமலை ஒத்தக்கடை கடந்து பிரதான சாலையில் வளைந்தபோது...

‘’டொம்’’

படக்கென்று எழுந்தாள் சீதா  ச்சே கனவா ? எங்கே என் கணவர் .

‘’க்ளுக்’’ என்ற சிரிப்பு சத்தம் கேட்டு மாமியார் மரகதவள்ளி எட்டிப்பார்த்து கேட்டாள் என்னத்தா... வயித்துல இருக்கிற பேரன் கனவுல வந்தானா ?

வெளியே மாமியார், மாமனாரிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள் என்னங்க உங்க மருமக சீதா கனவு கண்ருக்கும்போல சிரிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்கு...

யாரு ராமன் பொண்டாட்டியா ? ஹா... ஹா... ஹா...

பின்னே நானா ? அவதானே இப்ப முழுகாம இருக்கா... காலையிலதான் ஆசுபத்ரிக்கு கூட்டிட்டு போனேன் மசக்கையா இருக்குல அதான் கட்டில்ல கெடக்க சொன்னேன் அதுக்குள்ளே பகக்கனவுல பேரன் வந்துட்டான் போல.

வெளியே மாமனார்-மாமியார் சிரிப்பின் பேச்சொலி கேட்டு அடக்க முடியாமல் மௌனமாக சிரித்துக் கொண்டு இருந்தாள் சீதா. அதானே.... தன் கணவர் அப்படிப்பட்டவர் இல்லையே.... மனதுக்குள் //எம் புருசன்தான் எனக்கு மட்டும்தான் சொந்தம்தான் பந்தந்தான்// என்று பாடியபடியே... அலுவலகத்துக்கு சென்ற தனது கணவன் ராமனின் வரவை எதிர் நோக்கினாள் அவன் வாங்கி வரும் மல்லிகைப்பூவையும்...

ஆம்


சீதை இராமனை மன்னித்து விட்டாள்.
[ நண்பர் ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு கில்லர்ஜியின் வணக்கம் எனக்கு தெரிந்த
அளவில் மன்னிப்பை குழப்பி இருக்கிறேன் என்னையும் பதிவராக அங்கீகாரம்
கொடுத்து கதை கேட்டமைக்கு நன்றி இதைப்படிக்கும் பதிவர்கள் மன்னிப்பை
குழப்பிய என்னை மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு – தேவகோட்டை கில்லர்ஜி ]தமிழ்மணத்தில் வாக்களிக்க நீங்கள் க்ளிக் செய்யவேண்டியது இங்கே...

80 கருத்துகள்:

 1. ஒரு கிராமத்து அத்தியாயம்.. களத்து மேட்டுக் குயில்..

  கதை அருமை.. அருமை..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களது முதல் கருத்தை முத்தாய்ப்பாய் வைத்தமைக்கு நன்றி

   நீக்கு
 2. இனிய "பாஞ்ச்"(5)பாண்டவர்களுக்கு எனது கதையையும் அங்கீகரித்து வெளியிட்டமைக்கு மனம் நிறைந்த நன்றி - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 3. கிராம வாடை மணக்குது. கனவாக எழுதியிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மாறுபட்ட கோணத்தில் நினைத்துப்பார்த்தேன் காரணம் நகைப்புக்காக...

   நீக்கு
 4. ஒரு வேளை 'சீதை ராமனை மன்னித்தாள்' என்பதே கனவு தானோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிப்பு கனவென்றால் தவறும் கனவுதானே.. ஆகவே இருவர் மீதும் குற்றமில்ஸை நண்பரே

   நீக்கு
 5. நல்ல சுவாரசியாமாத்தான் எழுதி இருக்கீங்க . வாழ்த்துகள் கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 6. நல்ல கனவு தான். கடைசியில் சிரிக்க வைச்சுட்டீங்களே கில்லர்ஜி! :))))))

  பதிலளிநீக்கு
 7. வட்டார மொழி வழக்கு இயல்பாகவே வருது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் பெரிய கதைகள் எழுத முடியும் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே முழு நாவலாக மட்டும் இரண்டு எழுதி வைத்து இருக்கிறேன்.

   என்றாவது ஒருநாள் மக்களிடம் பிரபலம் ஆவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது அன்று நிச்சயம் நூல்களை வெளியிடுவேன்.
   கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 8. எதிர்பாரா முடிவு. கதை அருமை. பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இந்த வார்த்தையைத்தான் நான் எதிர் பார்த்து இப்படி எழுதினேன் பாராட்டுகளுக்கு நன்றி

   நீக்கு
 9. பஸ் பிராயணம் இயல்பாக எழுதியிருக்கீங்க. நாமே கசகசவென்ற பேருந்தில் பிரயாணம் செய்ததுபோல். ராமனை மன்னிப்பதற்காக சீதையைக் கனவு காண வைத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. கில்லர்ஜி கதை நன்றாக இருக்கிறது உங்கள் ஸ்டைலில்....வாழ்த்துகள். பாராட்டுகள்!

  கீதா: ஜி! எல்லாம் மிகவும் இயல்பாக வந்திருக்கிறது. பஸ் பயணம் அப்படியே நாம் பிரயாணிப்பது போல...ரொம்பவே யதார்த்தமாக இருக்கிறது. ஆனால் சீதை கனவு காணாமல் அதை அப்படியே நேரடி நிகழ்வாகவே கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது ஜி. கனவு என்பது கனவுதானே!! கனவில் வந்த நிகழ்வுகள் அருமை அதை அப்படியே அவர்கள் இறங்கியதும் நிகழ்வில் கலந்து கொண்ட போதும் சீதை ஏன் இப்படி உம் மென்று இருக்கிறாள் என்று ராமன் நினைத்து அதைச் சப்போர்ட் செய்யும் விதத்தில் இரண்டு மூன்று நிகழ்வுகள் சீதையின் கோபத்தைக் காட்டும் விதத்தில் சொல்லி அப்புறம் மீண்டும் ஊர் திரும்பும் போது அவர்கள் இருவரும் கொஞ்சம் மன ஆதங்கத்தைவெளியிட்டு அப்புறம் சமாதானம் மன்னிப்பு என்று போயிருக்கலாமோ என்று தோன்றியது. ஏனென்றால் பேருந்துப் பிரயாணம் வரை அட்டகாசம்!!!! கனவு கலையும் போதுதான் கதையும் கொஞ்சம் புஸ் என்று ஆனது போல இருந்தது. அதுவரை நல்ல காரம். ரொம்ப நல்லா இருந்தது!!! எழுதிய விதமும் அருமை. உங்கள் ஸ்டைல் மொழி எல்லாம்!!!..கில்லர்ஜி!! வாழ்த்துகள்!!! பாராட்டுகள் ஜி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக விரிவாக எழுதியமைக்கு நன்றி
   நான் செல்லில் மறுமொழி தருவதால் சுறுக்கம் மன்னிக்கவும்.

   நீக்கு
 11. கில்லர்ஜி கதையை வாசிக்கும் போது இடையே சிரிக்கவும் செய்தேன்....ஒரு சில இடங்கள் சிரிப்பை வரவழைத்துவிட்டது...! சீதை காரமாக இருந்தாலும்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிரித்த இடம் கதையாசிரியர் பேருந்தில் ஜொள்ளு விட்டதா ?

   நீக்கு
 12. பொதுவாக ஒரு கிராமத்துப் பெண் (கிராமத்துப் பெண் என்றில்லை எல்லா பெண்களுக்குமே என்றாலும், கிராமத்து வழக்கங்கள், எண்னங்கள் கொஞ்சம் வித்தியாசப்படும் என்பதால்எ)... தன் கணவன் அருகில் வேறொரு பெண் வந்து நின்று பேசினால் அதுவும் கொஞ்சம் சிரித்துப் பேசினால்..தெரியாமல் உரசினாலும்.... மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுமோ அதை அப்படியே சொல்லியது அருமை ஜி!!! கிராமீய சினிமா காட்சி போன்று மனதில் விரிந்தது என்று சொன்னால் மிகையல்ல...

  கொஞ்சம் சண்டையெல்லாம் எதிர்பார்த்து வந்தா...அதுவும் உங்க ஸ்டைல்ல!!! உங்க வட்டார மொழியில..சத்தியமா எதிர்பார்த்தேன். போச்சுடா ராமனுக்கு இருக்கு ஆப்பு என்று நினைத்தேன்...நினைத்து வாசிச்சுட்டே வந்தா...ஹும்...எதிர்பாராம கனவுனு முடிச்சுட்டீங்களே ஜி! நு தோணிச்சு! ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இக்கதையில் வசனங்கள் மிகவும் குறைவு வர்ணனைகள் மட்டுமே வைத்து கதையை நகர்த்தினேன்.

   நீக்கு
 13. அதைத் தான் நானும் சொல்கிறேன்.. இன்று ராமனுக்குக் கச்சேரி என்று நினைத்தால் புஸ்வாணம் ஆகி விட்டது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   அவதாரப் புருஷர்களை வைத்து கதையை எழுதும் பொழுது வார்த்தைகள் கில்லர்ஜி பாணியில் வராமல் கவனமாக இருந்தேன்.

   நீக்கு
 14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 15. எல்லாம் நல்லபடியாக இருக்கட்டும்.. அங்கே நம்ம ஏரியாவில் வசுமதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது..தாத்தா சுவாமி நாதனின் மகிழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேணும்..

  பதிலளிநீக்கு
 16. வட்டார வழக்கில் கதை நன்றாக இருந்தது. கனவு என்று முடித்திருக்க வேண்டாமோ?. எனிவே, பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முடிவு பிறர் நினைக்காத விடயமாக இருக்கட்டும் என்று நினைத்தேன்.

   நீக்கு
 17. இவ்வளவு மன்னிப்புகள் தேவையா? கதையை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே இக்கதையின் சாரம்சமே மன்னிப்பை முன்னிறுத்திதானே...

   நீக்கு
 18. துரை செல்வராஜு சகோ!! ஆமாம் நானும் அப்படித்தான் நினைத்து ஏமாந்து புஸ்வானமாய் ஹும்!! இந்தக் கில்லர்ஜி இப்படி ஏமாற்றிவிட்டாரே!! ஹாஹாஹாஹாஹா..

  கீதா

  பதிலளிநீக்கு
 19. கில்லர்ஜி!! யெஸ் யெஸ் ஆசிரியரும் பேருந்தில் ஜொள்ளுவிட்டுக் கொண்டே ஹாஹாஹாஹா...நல்ல காலம் நீங்க தள்ளி நின்னுருக்கீங்க... இல்லைனா அந்த சீதை உங்களையும் ஒரு காய்ச்சு காய்சிருப்பா...ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் இனிய கதாசிரியர் சீதையை பார்த்ததே இல்லை இராமனை உரசிக்கொண்டு வந்தவளை பார்த்து இருக்கலாம்.
   மேபி ஆர் மே நாட் பி

   நீக்கு
 20. ஹையோ கில்லர்ஜி நீங்க கதைல அப்படியும் அதாவது மேற் சொன்ன கருத்துப்படி ஒரு சீன் கொண்டு வந்திருக்கலாமோ??!!!பாரு சீதை எந்தப் பொண்ணுக்கு அநீதி நடந்தாலும் சீறுகிறாள் அப்ப தன் கணவன் ஜொள்ளு விட்டா ஏற்றுக் கொள்வாளா அப்படினு மீசைக்கார ஆசிரியர் அந்தக் காய்ச்சை வாங்கியிருந்தா நாங்க ரொம்பவே ரசிச்சிருப்போம்ல...ஹிஹிஹிஹிஹி...

  அதிரா ஏஞ்சல் எங்க போனீங்கப்பா....வாங்க சீக்கிரம்...கதாசிரியரும் ஜொள்ளு விட்டதை அந்த கதாநாயகி ஒன்னுமே சொல்லலை நாம தட்டிக் கேட்போம்....ஹிஹிஹிஹி....

  கீதா  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுசரி கதைக்காக அப்பாவியான என்னை அசிங்கப்படுத்தி எழுதணுமா ?

   அதிரா வந்தால் அதிரடி கேள்விகள் வருமே... ? ஐயய்யோ....

   நீக்கு
 21. ஆகா.. தங்களது சங்கப் பலகையில் எனக்கும் ஓர் இடம்!..
  அன்பின் நன்றி - தங்களுக்கெல்லாம்!..

  பதிலளிநீக்கு
 22. மிகவும் அருமை நண்பர் கில்லர்ஜிகலக்கல்கதை

  பதிலளிநீக்கு
 23. ஜீ கற்பனைக்குள் கற்பனையா.... கடைசி வரை ராமனை காட்டாமல் முடிச்சாச்சு.. அதுல நீங்க வேற என்ட்ரி, பாக்கிராஜ் பாட்டு வேற பார்த்து.. வீட்டுல உங்க கதையை படிச்சா பிறகு இப்படி வேற ஆசையான்னு 'எஞ்ச சோகக்கதையை கேளு தாய்குலமே ' பாடவேண்டியதா போயிட போகுது ;):D ஆனா சூப்பர் கற்பனை கதை வட்டார மொழியும் சூப்பர் :):) வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கதாசிரியர் சும்மா மேலூருக்கு போனவர் பாவம் அவரை வம்புல மாட்டி விடாதீங்கோ...

   நீக்கு
 24. ///அதிரா ஏஞ்சல் எங்க போனீங்கப்பா....வாங்க சீக்கிரம்.///

  ஆஆஆஆஆஆஆஆ தோஓஓஓஓஓஓஓ வந்திட்டேன் கீதாஆஆஆஆ... சே..சே.. சத்தம் கேட்டதும் பாய்ஞ்சு குதிச்சேனா கட்டிலால விழுந்திட்டேன்ன்:).. முழங்கையில சுளுக்கிட்டுதூஊஊஊஊஊ:).. இருப்பினும் விடமாட்டேன்ன் ஒரு கையாலயே கொமெண்ட் போடுவேன்ன்ன்...

  என்னாது இன்று உகண்டாப்புகழ் கில்லர்ஜி கதையா?:).. பிளேன் கதை சொல்வார் என நினைச்சேன் பஸ் கதையோ...:).

  இருப்பினும் கில்லர்ஜியின் படத்துக்கு மேலே ஒட்டினாப்போல .... அப்படி எழுதிய ஸ்ரீராமுக்கு எவ்ளோ தெகிறியம்:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே நீங்க சொன்னதும்தான் எனக்கும் புரியுது எனது படத்துக்கு மேலே அந்த வார்த்தையை எழுதி ஸ்ரீராம்ஜி பிரச்சனையை உண்டு பண்ணிட்டாரே...

   நீக்கு
 25. ///சீதை இராமனை மன்னித்து விட்டாள்.//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதில் ராமன் என்ன தப்புப் பண்ணினார்?:) இவ மன்னிப்பதுக்கு கர்ர்ர்ர்ர்ர்:).. தானே கனவு காண்பாவாம் தானே மன்னிப்பாவாம்?:).. இது எந்த வகையில நியாயம்?:).. கதாசிரியரைக் கூட்டி வாங்கோ.. ராமனை நல்லவராகக் காட்டி, மறைமுகமா சீதையைத்தான் கூடாத ஆளாகக் காட்டியிருக்கிறார்ர்:) இதுக்கு என் வன்மையான கண்டனங்கள்:)... ராமன் தப்புப் பண்ணினால்தானே.. சீதை ஒருபடி மேலே போய்.. ஆங்ங்ங்ங் இருக்கட்டும் இருக்கட்டும் என மன்னிக்க முடியும்:)... எனக்கு தேவை நீதி நியாயம் கடமை நேர்மை எருமை....:)

  இருப்பினும் விடமாட்டேன்ன்ன் பூஸோ கொக்கோ... இதில் வரும் சீதைக்கு விசயமே புரியல்ல.. அதாவது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கனவில் காணும் விசயங்களை கண்டதும் கோபபட்டு நீங்கள் எழுந்த பிறகு ச்சே கனவா ? என்று சிரித்து விட்டு போனதில்லையா ?

   சீதைக்கும் இப்படியொரு நிலை அவ்வளவுதான்.

   நீக்கு
 26. ///இதில் வரும் சீதைக்கு விசயமே புரியல்ல.. அதாவது.... பகல் கனவு பலிக்குமாமே:).. கனவு என்பது கடவுள் அனுப்பும் தூதுவராம்(சொல்வது மீதேன்ன்:))... இன்று சீதை ராமனை விடக்கூடாது.. ஏன் எனக்கு அப்படிக் கனவு வந்தது?:) நீங்க ஏதோ தப்புப் பண்ணியிருக்கிறீங்க.. அதனாலதான் கடவுள் கனவா எனக்குக் காட்டியிருக்கிறார்ர்... ஜொள்ளுங்கோ.. உண்மையை ஜொள்ளுங்கோ என இன்று ராமனைப் போடுப் புரட்டி எடுக்க வைக்கிறேன் சீதையை.... கொஞ்சம் சீதையின் மெயில் ஐடியை அனுப்பி விடுங்கோ கில்லர்ஜி:)..

  இதை எல்லாம் முளையிலேயே கிள்ளிடோணும் என சீதைக்கு நல்லபுத்தி சொல்லிடப்போறேன்ன்ன்:).. பகல்கனவென்பது ச்ச்ச்ச்சும்மா சாதாரண விசயமோ?:)... போனமாதம் அஞ்சு பகல்கனவு கண்டு கேட்டா.. அதிரா கே எஃப் சி பக்கம் போனனீங்களோ என:).. நான் அப்போ சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்:).. இப்போ புரியுதோ பகல்கனவு பலிக்கும் என:)..
  [ஹா ஹா ஹா சார்லிசப்ளின் படம் நினைவுக்கு வருது:)].

  கதையில் வரும் உரையாடல்களை மிக ரசித்தேன்... கொஞ்சம் கனவைப் பற்றிக் கேட்டு சண்டைப்பிடிக்கப்பண்ணி மன்னிச்சிருக்கலாம்:).. டொம் என குண்டைப்போட்டுக் கதையை முடிச்சிட்டீங்க:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லா இருக்கிற இராமன்-சீதா குடும்பத்துல பிரச்சனையை வளர்க்க மெயில் ஐ.டி. கேட்கிறீங்க... எனக்கு வம்பு எதற்கு இதோ...

   seettttthai@topetta.com

   நீக்கு
 27. அதிரா வாங்க!! முழங்கையில அடி பட்டாலும் ஒத்தைக்கையால் கமென்ட் போடும் பூஸாரே!!! ராமன் ரொம்ப ஒண்ணும் தப்பு பண்ணலை...அதுவும் சீதை கனவுதான் கண்டிருக்கா பாருங்க...அதுக்கே இப்படினா...ஹாஹாஹாஹாஹா... வேற ஓன்னுமில்லை ஆசிரியரும் ஜொள்ளு விட்டாரில்லையா அப்போ கதாநாயகனையும் கொஞ்சமேனும் அப்படிச் சொல்லனூமில்லையா...இல்லைனா கதாநாயகனுக்குக் கோபம் வந்துருமே!! கதை எழுதற நீர் மட்டும் ஜொள்ளு விடலாம்...நான் கொஞ்சம் அப்படிப் பார்த்தா தப்பா எழுதிடுவீரோனு எனக்கும் என் மனைவிக்கும் சண்டைய மூட்டி விட்டுருவீர் போலருக்கேனு ராமனுக்கு ஒரே கோபமாம்....

  கில்லர்ஜி சொல்லுறார்...ராமா அதானே என் வேலையே...ஸ்ரீராம் அபப்டித்தானே கண்டிஷன் போட்டுருக்கார்!! நீ ரொம்ப நல்லவன்...ஆனா தப்பு பண்ணனும்.. இல்லைனா உன் மனைவி எப்படி உன்னை மன்னிப்பா? அதனால இந்தச் சின்னத் தப்பை சொல்லிக்கறேன் ராமா..அதுவும் கனவுதானே பொருத்துக்க..அதுவும் இல்லாம என்னையும் கூடச் சேத்துக்கிட்டேன் இப்ப இங்க பாரு இந்த அதிரா, கீதா எல்லாம் என்னம்மா போட்டுத் தாக்குறாங்க பாரு... என்று...

  சரியா கில்லர்ஜி!!!??

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நான் ஜொள்ள ஸேண்டியதை நீங்களே சொல்லிட்டீங்க நன்றி.

   நீக்கு
 28. சீதைக்குத்தான் சீட்டு. புரியுது. அப்பாவி ராமன் நிக்க வேண்டியதுதான். ஆம்பிளைக்கு ஏது காலம்? ராமனுக்குப் பக்கத்தில ரம்பை ஒருத்திய நிக்கவெச்சிருக்கீங்க. பொழுதுபோகும்னு பாத்தா கீழவளவுலேயே அவளை இறக்கிவிட்டுட்டீங்க. சரி, வீட்டுக்கு வந்தபின் இருக்கு கச்சேரின்னு நினைத்தால் ‘டொம்’னு கதையை முடிச்சுட்டீங்க. என்ன அவசரம்னு புரியலையே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே அந்த ரம்பையை கீழவளவில் நான் இறக்கி விடவில்லை அவளது நாத்தனார் மகள் சடங்குக்கு போகவேண்டியவள் இறங்கி விட்டாள்.
   இதற்கு நான் ஜவாப்தாரி அல்ல!

   நீக்கு
 29. @athirrraa :)
  //எனக்கு தேவை நீதி நியாயம் கடமை நேர்மை எருமை....:)

  //
  அப்போ பொறுமை கருமை இதெல்லாம் யாருக்காம் :)

  அப்புறம் அசதியில்படுத்து தூங்கறதை விட்டு என்ன கனவு அதுவும் நேர்மையான இராமனை பற்றி வில்லங்கமான கனவு வரலாமா கர்ர்ர் :)

  பதிலளிநீக்கு
 30. @ கீதா இதோ வந்திட்டேன் :) காலமைலருந்து பிஸி இப்போதான் வந்தேன்

  பதிலளிநீக்கு
 31. //மருதைக்கு போறேன்//மயேன் ..ஆஹா மதுரத்தமிழ் ..எங்க பாட்டி பேசுவது ஞாபகத்துக்கு வருது


  ஆவ் !!!பேருந்து நிறுத்தம்லாம் சொல்லி அழகா வர்ணனையுடன் எடுத்து சென்றீங்க
  கடைசியில் கனவா :) கதை அருமை ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 32. யாரது பகற்கனவு பலிக்கும்னு இங்கே புருடா விட்டது :)
  பூனை கண்ணை மூடிட்டா வெர்ல்ட் டார்க் ஆயிரும்னு நினைச்ச அதிராமியாவைத்தான் இருக்கும் :)

  அதிகாலை கனவுகள் தான் பெரும்பாலும் பலிக்கும் :)

  பதிலளிநீக்கு
 33. இப்ப்டித்தா எழுத வேண்டும் என்றால் சீத ராமனை மன்னித்தே ஆகவேண்டும் அல்லவா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா கதையின் கரு மன்னிப்பு ஆகவே இவ்வழியை தேர்ந்தெடுத்தேன்.

   நீக்கு
 34. எம் புருசன் எனக்குமட்டும் சொந்தம்தான்---பந்தம்தான். கண்டகனவு மறந்துபோய் பாடல் இசைவாக ஒன்றுகிறது. கதை ரஸித்தேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
 35. கன்னா பின்னா என்று அர்த்தமில்லாத கனவுகள் வரும் காலம்
  கருத்தரிக்கும் காலம். அழகாகச் சொல்லிவிட்டீர்கள் கில்லர்ஜி.
  தனக்கு இருக்கும் இயலாமையால் கணவன் மேல் சந்தேகம் வரும்
  காலம் கூட,.
  பஸ் பிரயாணம் மிக அருமை. எத்தனை கூர்ந்து கவனித்து அதையும் இதையும் இணைத்துவிட்டீர்கள்.
  மிக அழகான வடிவமைப்பு. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 36. காமாட்சி அம்மா அவர்களின் ரசிப்புக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 37. சகோ வல்லிசிம்ஹன் அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 38. மதுரைக்கு வரும்போது பஸ்ஸில் கனவு காண ஆரம்பித்த சீதாவுக்கு,போகும்போதுதான் கனவு கலைகிறது ,மதுரை மீனாம்பாள்புரத்தில் நடந்த திருமணம்கூட கனவாகத்தான் இருக்கணும் ...நான் வசிக்கும் மீனாம்பாள்புரத்தில் எனக்குத் தெரியாமல் யாரும் வந்து போக முடியாதே ஜி :)

  பதிலளிநீக்கு
 39. அப்படீனாக்கா நீங்கள் அவர்களை கல்யாணத்தில் பார்க்கவில்லையா ஜி ?

  பதிலளிநீக்கு
 40. சீதை கனவு கண்டதால் ராமன் தப்பித்தார்.
  கதை அருமை.
  கனவில் நடந்ததோ கல்யாணம் பாடல் நினைவுக்கு வந்தது.
  கனவில் கணவருடன் கல்யாணம் சென்று வந்து விட்டாளே சீதை.

  பதிலளிநீக்கு
 41. ஸ்ரீராம்ஜி செல்லின் வழியே அனைவருக்கும் நேருக்கு நேர் மறுமொழி கொடுத்தேன்
  இங்கு கணினியில் குண்டக்க, மண்டக்க இருக்கிறதே...

  பதிலளிநீக்கு
 42. ///KILLERGEE Devakottai said...
  ஸ்ரீராம்ஜி செல்லின் வழியே அனைவருக்கும் நேருக்கு நேர் மறுமொழி கொடுத்தேன்
  இங்கு கணினியில் குண்டக்க, மண்டக்க இருக்கிறதே...//

  இதை நான் ஏற்கனவே ஸ்ரீராமுக்கு சொல்லியிருக்கிறேன், கொமெண்ட் செட்டிங்கை மாத்தி விடச்சொல்லி.. ஆனால் அவர் பெரிசா எதையும் கண்டு கொள்வதில்லை:(..

  இன்று காலை பார்த்தவுடன் தெரிந்துவிட்டது, மொபைலில் இருந்தே பதில் போடுறீங்க என, சொல்ல நினைச்சேன், சரி எதுக்கு என விட்டு விட்டேன்... மொபைலில் கரெக்ட்டாக் காட்டுது.. இங்கு அப்படியில்லை... அதனாலேயே நான் மொபைல் மூலம் கொமெண்ட் போட்டாலும் பெயர் குறிப்பிட்டுக் குடுப்பது வழக்கம்:).

  பதிலளிநீக்கு
 43. ///KILLERGEE Devakottai said...
  ஸ்ரீராம்ஜி செல்லின் வழியே அனைவருக்கும் நேருக்கு நேர் மறுமொழி கொடுத்தேன்
  இங்கு கணினியில் குண்டக்க, மண்டக்க இருக்கிறதே...//

  இதை நான் ஏற்கனவே ஸ்ரீராமுக்கு சொல்லியிருக்கிறேன், கொமெண்ட் செட்டிங்கை மாத்தி விடச்சொல்லி.. ஆனால் அவர் பெரிசா எதையும் கண்டு கொள்வதில்லை:(..

  @அதிரா, கில்லர்ஜி...

  கண்டு கொள்ளாமல் எல்லாம் இல்லை. அதற்கான செட்டிங்ஸஸில்தான் கமெண்ட் பாக்ஸ் இருக்கிறது. அதனால்தான் மொபைல் வழி வரும்போது ரிப்ளை ஆப்ஷன் தெரிகிறது. ஆனால் கணினியில் ஏன் அப்படித் தெரியவில்லை என்று கேட்டபோது டிடி சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்றார். சென்னை வரும்போது இதையும் வேறு சில உதவிகளும் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 44. கில்லர்ஜிக்கு பாராட்டுகள்
  சிறந்த படைப்பு

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!