வியாழன், 19 அக்டோபர், 2017

ஜெயமோகனின் அறம் - ரசித்த வரிகள்

     படித்துக் கொண்டே வரும்போது சில வரிகள் மீண்டும் படிக்கத் தூண்டும்.   சில சமயம் அவைதான் அந்தக் கதையின் ஜீவநாடியாய் இருக்கும்.  ஆனால் அப்படியும் அவசியமில்லை.  நடுவே வரும் சில வரிகள், சில வர்ணனைகள் மனதுக்குள் ஒரு 'அட'  போடவைக்கும்.  அப்படிச் சில வரிகளை இங்கு பகிர்கிறேன்.


     முதலில் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து...


     ஏமாற்றப்பட்ட புகழ்பெற்ற (பழைய) எழுத்தாளர் ஒருவர் அனுபவம்... "...கொஞ்சநேரம் பிரமை புடிச்சாப்ல உக்காந்திருந்தேன்.  என்னமோ ஒரு நெனைப்பு வந்து நேரா விறுவிறுன்னு நடந்தேன்.  செட்டியார் வீட்டுக்குப் போய்ட்டேன்.  காலம்பற பத்து மணி இருக்கும்.  பெரிய ஆச்சி, அதான் பெரியவரோட சம்சாரம் திண்ணையில உக்காந்து யாரோ பக்கத்து வீட்டுக் கொழந்தைக்கு இட்லி ஊட்டிக்கிட்டிருக்கா.  நேராய் போய் கை கூப்பிட்டு நின்னேன்.  "என்ன புலவரே" ன்னா.  அவளுக்குப் பெரிசா ஒண்ணும் தெரியாது.  எழுத்துக் கூட்டத் தெரியும்.  அவ்வளவுதான்.  நான் கைகூப்பிட்டு இந்தமாதிரின்னு சொன்னேன்.  அவகிட்டச் சொல்லி செட்டியார்கிட்ட சொல்ல வைக்கணும்னுதான் போனேன்.  ஆனா சொல்லச்ச்சொல்ல எங்கேருந்தோ ஒரு வேகம் வந்திச்சு.  உடம்பே தீயா எரியறது மாதிரி கைகால்லாம் அப்படியே தழலா நெளியறா மாதிரி.... 'நான் சரஸ்வதி கடாட்சம் உள்ளவன்'னு சொன்னப்ப அப்படியே சன்னதம் வந்திடுத்து.  என் குரல் மேலே போயிடுத்து.அதுக்கு மேலே நான் செஞ்சதெல்லாம் எப்டி செஞ்சேன்னு இன்னிக்கும் எனக்கு ஆச்சரியம்தான்.  'என் வயத்திலே அடிச்சா நீயும் உன் பிள்ளகுட்டிகளும் வாழ்ந்திடுமா?.... வாழ்ந்தா சரஸ்வதி தேவடியான்னு அர்த்தம்' னு சொல்லிட்டே சட்டுன்னு பேனாவ எடுத்து ஒரு வெண்பாவை எழுதி அவ தட்டிலே இருந்த இட்டிலிய எடுத்துக் பூசி அவ வீட்டுக் கதையிலே ஒட்டிட்டு வந்திட்டேன்."

....................................................................................................................................
....................................................................................................................................
...................................................................................................................................

     "அது என்ன வெண்பா?"  என்றேன்.  நன் ஊகித்திருந்தேன்.  'அறம்தான்... அப்டி ஒரு வழக்கம் இருக்கே.  சத்தியமா அதைப்பத்தி எங்கியோ கேட்டதோட சரி.  கரிச்சான்குஞ்சுவும் நானும் யாப்பு பத்தி கொஞ்சம் பேசியிருக்கோம். மத்தபடி எனக்கு முறையா தமிழே தெரியாது.  நான் எழுதின முதல் செய்யுளும் அதுதான்.  கடைசிச் செய்யுளும் அதுதான்.  பாட்டு நினைவில் இல்ல.  அதை மறக்கணும்னுதான் இருபத்தைஞ்சு வருஷமா முயற்சி செய்றேன்.  ஆனாலும், கடைசி ரெண்டு வரியும் ஞாபகத்துல இருக்கு.  'செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுகவென்றறம்'. 

========================================================     உணர்ச்சிகரமாக இந்த வரிகளை விவரிக்கும்  எழுத்தாளர்.  


     இதன்பின் நடப்பதும் (கதையின் முடிவு)  மனத்தைக் கலக்கிவிடும்.     அதே புத்தகத்திலிருந்து வெவ்வேறு இடங்களிலிருந்து சில பகுதிகள்...  சொல்லியிருப்பவர்கள் வெவ்வேறு பிரபலங்கள்...


==================================================================
"....  சாயங்காலமா ஆத்தாண்டை போவோம்.  மணல்ல உக்காந்துண்டு பாட்டு, நடுநடுவே இலக்கியம்.  என்னத்தை இலக்கியம், எல்லாம் வம்புப் பேச்சுதான். நெறைய நாள் மௌனி வந்திருக்கார்.  அவர மாதிரி வம்பு பேச இனிமே ஒரு எழுத்தாளன் பொறந்து வந்தாத்தான் உண்டு......................................................


.................................................................................'அந்தக்கால கும்மோணம் வேற மாதிரி ஊரு.  சங்கீதமும் இலக்கியமும் பெருக்கெடுத்தோடின ஊரு.  பெரியவா பலபேரு இந்தப்பக்கம்தான் தெரியும்ல?'  நான் புன்னகை செய்தேன். 
​ ​
 "...கூடவே இருக்கு, முடிச்சவுக்கித்தனம், மொள்ளமாரித்தனம் எல்லாம் வாய்ல வெத்தலய வச்சுண்டு, கோணலா உதட்ட இழுத்துண்டு, புரளி பேசினான்னு வை, சிவபெருமான் உமைய தள்ளி வச்சிருவாருன்னா பாத்துக்குங்க."


==============================================================

"எனக்கு ஆறிப்போய்க் குடிச்சாதான் (காபி) நல்லாருக்கு.  சூடா குடிச்சா சூடு மட்டும்தான் தெரியுது.  இனிப்பும் மமும் இல்லாம ஆயிடுது...  பாய்ஞ்சு ஓடிட்டிருக்கற 
​பொண்ணை​ப் பாத்து ரசிக்க முடியுமா? 
​ ​
என்ன சொல்றேள்?"  
​ ​
நான் சிரித்து, "குதிரையை ஓடறப்ப மட்டும்தானே ரசிக்க முடியும்?" என்றேன்.


==================================================================

சந்தைக்கு வாழைக்குலை சுமந்து சென்றிருந்தபோது நெஞ்சு வலிக்கிறது என்று கருப்பட்டிக்கடைத் திண்ணையில் படுத்து கண்மூடி தென்றலை அனுபவிப்பவன் போன்ற முகத்துடன் செத்துப் போனாள்.


==============================================================
அவரை மனக்கண்ணில் மிகத் துல்லியமாகப் பார்த்து விட்டிருந்தேன்.  ஆனால் நேரில் சந்தித்தபோது என் பிரக்ஞை உதிர்ந்து விட்டது.  புத்தகத்தில் இருக்கும் படம் சட்டென்று நம்மை நோக்கிப் புன்னகை புரிந்தது போன்ற அதிர்ச்சி.


====================================================================

நானும் அந்த சொல்லில் பனி உலுக்கப்பட்ட மரக்கிளை போல கலைந்து எடையிழந்து சிரித்து விட்டு அவருடன் கிளம்பினேன்.


==============================================================

நான் மெல்ல 'வலி எப்டி இருக்கு?' என்றேன்.  "முந்தாநாள் ஞானி வந்திருந்தார்.  இதையேதான் கேட்டார்.  
​ ​
அந்தக் கதவைத் திறந்து இடுக்கிலே கட்டை விரலை வை.  அப்டியே கதவை இருக்க மூடி அழுத்தமாய் புடிச்சுக்கோ.  அப்டியே நாளெல்லாம் வச்சுக்கோ.  அப்டி இருக்குன்னேன்.  பாவம், முகம் வெளுத்துப் போச்சு...' என்று கோணலாகச் சிரித்து....

================================================================ 


     அடுத்த வாரம்...  இல்லை, இல்லை அடுத்த முறை வேறு சில எழுத்தாளர்களின் வரிகளுடன் வருகிறேன்.

தமிழ்மணம்.

49 கருத்துகள்:

 1. இந்த அறம் கூடிய பாடல்கள் அதிகம்..
  நந்திக் கலம்பகம் அப்படிப்பட்டது..

  கவி காளமேகம் அறம் பாடுவதில் வல்லவர்..

  கவியரசு கண்ணதாசன் கூட அறம் பாடியிருக்கிறார்...

  நானும் ஒருசமயம் இதைப் போல எழுதி விட்டு மனம் வருந்தியிருக்கிறேன்..

  பத்து வருடங்களுக்கு முன் ஒரு மாற்றத்துக்கு அறம் எழுதிய போது இதெல்லாம் காலத்தின் கட்டாயம் என்று பதில் வந்தது..

  பதிலளிநீக்கு


 2. வாங்க துரை செல்வராஜூ ஸார்..


  //நானும் ஒருசமயம் இதைப் போல எழுதி விட்டு மனம் வருந்தியிருக்கிறேன்..

  பத்து வருடங்களுக்கு முன் ஒரு மாற்றத்துக்கு அறம் எழுதிய போது இதெல்லாம் காலத்தின் கட்டாயம் என்று பதில் வந்தது..//

  அது என்ன சம்பவம் என்று சொல்லுங்களேன்....

  பதிலளிநீக்கு
 3. "அறம்" அனுபவங்களின் தொகுப்பா அல்லது சிறுகதைத் தொகுப்பா? வரிகள் அனைத்தும் ரசிக்க வைத்தன. அனுபவங்களின் தொகுப்பென்றால் இந்தமுறை புத்தகம் வாங்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் நெல்லை. பழைய எழுத்தாளர்கள் பற்றிய சம்பவங்கள் கதை போல விரியும். நான் சொல்லியிருக்கும் அறம் எம் வி வி பற்றியது. யானை டாக்டர் போல அழகான சிறுகதைகளும் உண்டு. வாங்க வேண்டும் என்று இல்லை, எப்போது வந்தாலும் படித்துவிட்டுத் தருவீர்கள் என்றால் நான் கொடுக்கத் தயார்!

  பதிலளிநீக்கு
 5. ஶ்ரீராம், இதை ஒரு புதிராக ஆக்காமல் ரசனையோட போட்டிருக்கீங்க! அறம் கதை "சொல்வனம்" பக்கம் கிடைக்குதுனு நினைக்கிறேன். மற்றக் கதைகளும் படிச்சதுனு தான் நினைக்கிறேன். எதுக்கும் புத்தகத்தை அனுப்பி வைங்க! பார்க்கலாம்! திரும்பக் கொடுக்கறதா வேண்டாமா என! :))))

  பதிலளிநீக்கு
 6. ஸ்ரீராம் பல வரிகள் ரசிக்கும்படி இருக்கின்றனவே. ஜெயமோகனின் தளத்தில் அவரது கதைகளை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். இத்தொகுப்பும் இணையத்தில் இருக்குமா என்று பார்க்க வேண்டும்.

  மனதிற்குள் புதைந்து கிடந்த ஏக்கம் இப்போது அன்று உங்களின் வார்த்தையான வாசியுங்கள் தொடங்குகள் என்பதும் ஏகாந்தன் சகோவின் வார்த்தைகளும், ஜீவி அண்ணாவின் வார்த்தைகளும் அதை ஊக்கப்படுத்தி மேலெழுப்புவிட்டது. நீங்கள் அனுப்பி நான் சேமித்திருப்பதும், மீராசெல்வகுமார் அனுப்பி சேமித்து வைத்திருப்பதையும் தகுந்த நேரம் வாய்க்கும் போது வாசிக்கத் தொடங்கிவிட்டேன் ஸ்ரீராம். மிக்க நன்றி

  கீதா

  பதிலளிநீக்கு
 7. துரை செல்வராஜு சகோ ஸ்ரீராமின் வேண்டுகோளுடன் எங்கள் வேண்டுகோளையும் ஏற்று உங்கள் அனுபவத்தை எழுதுங்களேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 8. ஸ்ரீராம், ஜெ மோ கதைகள் அவர் தளத்தில் வந்த 12ன் தொகுப்பு என்று விக்கி சொல்கிறது..அதுதானே? நீங்கள் சொல்லியிருப்பது. அத்தொகுப்பில் அறம் உள்ளது. அறம்
  சோற்றுக்கணக்கு
  மத்துறு தயிர்
  வணங்கான்
  மயில்கழுத்து
  யானைடாக்டர்
  நூறுநாற்காலிகள்
  தாயார்பாதம்
  பெருவலி
  ஓலைச்சிலுவை
  கோட்டி
  உலகம் யாவையும்

  இவையா? தளத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன் பார்க்கணும்

  கீதா

  பதிலளிநீக்கு
 9. கிடைத்துவிட்டது!!! ஸ்ரீராம்....மிக்க நன்றி இங்கு பகிர்ந்தமைக்கு. நான் அவருடைய கதை பிரிவில் மேலிருந்து தொடங்கியுள்ளேன்...கீழே இது இருக்கிறது பார்த்துவிட்டேன்...மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 10. http://www.jeyamohan.in/11976#.WegZiI-CzIU

  லிங்க் கொடுப்பதற்குள் மௌஸ் ப்ரெஸ் ஆகி கமென்ட் பப்ளிஷ் ஆகிவிட்டது....

  கீதா

  பதிலளிநீக்கு
 11. @ ஸ்ரீராம். said...

  >>> நானும் ஒருசமயம் இதைப் போல எழுதி விட்டு மனம் வருந்தியிருக்கிறேன்..
  பத்து வருடங்களுக்கு முன் ஒரு மாற்றத்துக்கு அறம் எழுதிய போது இதெல்லாம் காலத்தின் கட்டாயம் என்று பதில் வந்தது..<<<

  அது என்ன சம்பவம் என்று சொல்லுங்களேன்..

  @ Thulasidharan V Thillaiakathu said...
  >>> துரை செல்வராஜு சகோ ஸ்ரீராமின் வேண்டுகோளுடன் எங்கள் வேண்டுகோளையும் ஏற்று உங்கள் அனுபவத்தை எழுதுங்களேன்... <<<

  அவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட நான் விரும்புவதில்லை..
  ஆயினும் - அவற்றைப் பற்றி எழுதுகின்றேன்..

  சில நாட்கள் அவகாசம் தருக..

  பதிலளிநீக்கு
 12. ’ஆழமற்ற நதி’யை நீங்கள் இரண்டுவாரமுன்பு அறிமுகப்படுத்தியபோது நான் நினைத்தேன் – விட்டுவிடாமல் நீங்கள் தொடரவேண்டுமே என்று. நல்லகாரியம் பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்.

  முதலில் படிக்க ஆரம்பித்தபோது இது கட்டுரையோ என நினைத்தேன். ஜெயமோகனே ஒரு பழைய எழுத்தாளரை சந்திப்பதுபோல் ஆரம்பித்து நகரும் கதை. சிறுகதையின் காத்திரமான பகுதி நீங்கள் தந்திருப்பது. ஆழமற்ற நதிக்குப்பின்தான் ‘அறம்’ சிறுகதையை வாசித்தேன் ஜெமோ-வின் தளத்தில். (அந்த தொகுப்பின் வேறுசில கதைகளை உறவினர் ஒருவர் ஓசியாகக்கொடுத்த அறம் தொகுப்பில் ஏற்கனவே வாசித்திருந்தேன்). இன்னும் சில கதைகள் அந்தத் தொகுப்பில் ஒன்றை ஒன்று மிஞ்சும்விதமாய். எங்கள் ப்ளாக் வாசகர்கள் தேடிப் படிக்கவேண்டிய கதைகள். கீதா வாசிக்க ஆரம்பித்துவிட்டார் என்று தெரிகிறது ; மற்றவர்களும் முனைவார்கள்.

  இந்தத் தொகுப்பு வெளிவந்தபோது ஒரு நிகழ்வில் கமல்ஹாசன் இதை ஒவ்வொரு தமிழனிமும் அவசியம் இருக்கவேண்டிய நூல் எனச்சொல்லி பிரகாஷ் ராஜுக்குப் பரிசளித்ததாகப் படித்தேன். (அது வேறொரு எழுத்தாளருக்கு எரிச்சலையூட்டியது என்றெல்லாம் சொல்லி இங்கு கதை வளர்க்காது விட்டுவிடுகிறேன்!)

  பதிலளிநீக்கு
 13. அன்பின் ஜி குவைத் மன்னர் இதனைக் குறித்து தனது அனுபவத்தை தருவார் ஆவலுடன் நானும்...

  பதிலளிநீக்கு
 14. இப்போது தான் திரு ஜயமோகன் அவர்களின் கதையைப் படித்து விட்டு வருகின்றேன்..

  நாம் அறத்தை விடாது இருக்கும்போது அறமும் நம்மை விடாது இருக்கும்..

  பதிலளிநீக்கு
 15. >>> கடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது..<<<

  இந்தத் தலைப்புக்குள் நமது கதை எப்போது வருவது என்று - பார்த்துக் கொண்டேயிருப்பேன்..

  ஆகா.. இன்று ராமனைத் தேடிய சீதை வந்து விட்டாள்.. மகிழ்ச்சி..

  வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 16. ஆஹா...
  ரசிக்க வைக்கும் வரிகளின் தொகுப்பு
  அருமை அண்ணா.

  பதிலளிநீக்கு
 17. துரை செல்வராஜு சகோ மிக்க நன்றி எழுதுவதாகச்சொல்லியமைக்கு....தங்களுக்கு நேரம் வாய்க்கும் போது பதிவிடுங்கள் சகோ....

  கீதா

  பதிலளிநீக்கு
 18. மல்ஹாசன் இதை ஒவ்வொரு தமிழனிமும் அவசியம் இருக்கவேண்டிய நூல் எனச்சொல்லி பிரகாஷ் ராஜுக்குப் பரிசளித்ததாகப் படித்தேன். (அது வேறொரு எழுத்தாளருக்கு எரிச்சலையூட்டியது என்றெல்லாம் சொல்லி இங்கு கதை வளர்க்காது விட்டுவிடுகிறேன்!)//

  ஹாஹாஹா அந்த அடைப்புக் குறிக்குள் இருக்குதே இப்படி நைசா சொல்லி ஒரு க்யூரியாசிட்டியை ஏற்படுத்திவிடுறீங்களே..நியாயமா இது ஹாஹாஹா..நெல்லையும் இப்படித்தான் செய்வார் சில சமயம்..

  ஆமாம் ஏகாந்தன் சகோ வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்...ஜெ மோ மட்டுமல்ல..இன்னும் சில...ஆனால்...

  கீதா

  பதிலளிநீக்கு
 19. மேற்கோள் காட்டிய வரிகள் ரசித்தேன்! புத்தகத்தை எனக்கும் தருவீர்களா?, கட்டாயம் திருப்பிக் கொடுத்து விடுவேன்...

  அறம் பாடுதல்/எழுதுதல் குறித்து துரை செல்வராஜு சார் இவ்வளவு காலம் கழிந்த பின்னரும் வருத்தப்படுவது நெகிழ வைக்கிறது. மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது போலும்! எழுதும்போது படிக்க ஆவலாய் உள்ளேன்...

  பதிலளிநீக்கு
 20. ஶ்ரீராம்.... புத்தகம் படிக்கத் தருகிறேன் என்றதற்கு நன்றி. சமஸ்கிருதப் பழமொழியின் ஒரு பகுதி, இரவல் கொடுக்கும் புத்தகம் இரவல் வாங்குபவரின் உடைமையாகிவிடும்.

  நான், உங்களுக்கு (நிஜமா) நான் படித்துவிட்ட சில புத்தகங்களை உங்களுக்குப் படிக்கத்தரவேண்டும் என்று நினைத்திருந்தேன்.. இந்தத் தடவை கொண்டுவரவில்லை.

  பதிலளிநீக்கு
 21. நன்றி ஜேகே அண்ணா! :) நான் சும்மா ஶ்ரீராமை வம்புக்கு இழுத்தேன். நெ.த.விடம் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தால் கொடுப்பதாகச் சொல்லி இருந்தார்! அதுக்காகச் சொன்னேன். :))))

  பதிலளிநீக்கு
 22. ஸ்ரீராம்! நான் நினைத்தது கொஞ்சம் கொஞ்சமாக செயல்படத் துவங்குவதில் மகிழ்ச்சி.

  'அறம்' வெளிவந்த பொழுது ஜெமோக்கும் எனக்குமான கடிதத் தொடர்பு-- அறத்தின் அடிப்படையிலான எனது சீற்றமும் அதற்கான அவர் பதிலும்-- நினைவுக்கு வருகிறது. அது பற்றி உங்களுக்கும் தெரியும் என்பதால் பொது வெளியில் வேண்டாம். அறத்தை வாசிக்கும் யாருக்கும் நெருடலான அந்தத் துடுக்கு வார்த்தை நெருடவேயில்லை, பார்த்தீர்களா?.. ஏன் எனக்கு மட்டும் அந்த ஆத்திரம்?.. அமரர் எம்.வி.வி.யுடன் பழகி அவரின் சுபாவத்தை அறிந்திருந்தவன் என்பதினால் இருக்கும்.. போகட்டும், இதற்கு மேல் அதைப் பற்றிப் பேசுவதற்கும் நினைத்துப் பார்க்கவுமே ஆயாசமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 23. போனவாரம்தான் கம்பவாரிதி ஜெயராஜ் அங்கிள் அறத்துக்கு ஒரு வைவிலக்கணம் சொன்னார் கேட்டேன், குறித்து வைக்க மறந்திட்டேன்... இன்று அறம்பற்றிப் பேச்சு நடக்கிறது இங்கு...

  இன்று போஸ்ட் சற்று வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கு... அனைத்தையும் படிக்க.. அக்கதையை முழுக்க படிக்கோணும் எனும் எண்ணம் வருது....

  /////சந்தைக்கு வாழைக்குலை சுமந்து சென்றிருந்தபோது நெஞ்சு வலிக்கிறது என்று கருப்பட்டிக்கடைத் திண்ணையில் படுத்து கண்மூடி தென்றலை அனுபவிப்பவன் போன்ற முகத்துடன் செத்துப் போனாள்.////

  இதில் இறந்தது பெண்ணோ? ஆணோ???:).

  பதிலளிநீக்கு
 24. இங்கு கொடுத்ததை பார்த்ததும் அங்கே போயாச்சு அங்கே போனால் எங்கேயும் வரமுடியாது ஒருவழி பாதை போல் தோன்றுகிறது எனக்கு அகத்தில் அறையும் யாதார்தங்கள்

  பதிலளிநீக்கு
 25. நானும் சுட்டிக்குள் போகிறேன் :)

  பதிலளிநீக்கு
 26. //நானும் அந்த சொல்லில் பனி உலுக்கப்பட்ட மரக்கிளை போல கலைந்து எடையிழந்து சிரித்து விட்டு அவருடன் கிளம்பினேன்.//


  wow !! fantastic

  பதிலளிநீக்கு
 27. ஆற்றாமையால் வெளிப்படும் கடுஞ்சொற்கள் அறம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் ஒரு வேளை அக்காலத்திய சாபமோ

  பதிலளிநீக்கு
 28. இயல்பான் நடையில் ஒர் இனிமை உண்டு!

  பதிலளிநீக்கு
 29. ஜெ மோ பக்கம் நுழைந்துவிட்டால் வெளிவருவது சுலபமில்லை. அவரது
  மஹாபாரதத் தொடரில் மூழ்கியவர்கள் வெளியே வருவது அவ்வளவு சாத்தியம் இல்லை. வந்தாலும் அதைப் பற்றியே பேசுவார்கள். அறம் முன்பு வாசித்தது. ஜீவி சாரின்
  எண்ணம் எனக்கும் தோன்றி இருக்கிறது. நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 30. @ கீதா:

  //.. அந்த அடைப்புக் குறிக்குள் இருக்குதே இப்படி நைசா சொல்லி ஒரு க்யூரியாசிட்டியை ஏற்படுத்திவிடுறீங்களே..நியாயமா..//

  பின்னூட்டம் சிலசமயங்களில் பதிவுபோலாகிவிடுகிறதே என்கிற தயக்கமும் கூடவே. யார் அந்த எழுத்தாளர்? ஆரம்பத்தில் (சில வருடங்களாக) தன் வலைத்தளத்தில் தினம்தினம் ஜெமோ-வையும் அவரது எழுத்தையும் திட்டித்தீர்த்தவர். ஒருவர் பிரபலமாகிக்கொண்டிருக்கையில் இன்னொருவர் அவரைக் கடுமையாக விமர்சித்துவந்தால் அவரும் கவனிக்கப்படுவாரில்லையா? அந்தமாதிரி சீன் இது என்று தோன்றியது. கடந்த இரண்டு வருடங்களாக ஒரு patch up நிகழ்ந்துவிட்டதோ. இப்போது ஜெமோ-வை வசைபாடுவது நின்றிருக்கிறது. அவ்வப்போது பாராட்டுவதோடு அவர் பங்குபெரும் நிகழ்வுகளிலும் கலந்தும்கொள்வதும் நிகழ்கிறது. இது எத்தனை நாளைக்கோ தெரியாது. அந்த எழுத்தாளர் இப்போது கமல் ஹாசனை (குறிப்பாக அவரது பிக் பாஸ், அரசியல் சம்பந்தமாக) தன் தளத்தில் கடுமையாக விமரிசித்து வருகிறார். ஜெமோ-வின் அறம் தொகுதி இந்த எழுத்தாளரைப் பாடாய்ப்படுத்திவிட்டதோ எனத் தோன்றுகிறது. கமல்ஹாசன் அதனை மேற்கண்டவாறு சொல்லி பிராபல்யப்படுத்தியபோது எரிச்சலில் மேலும் ஏதேதோ. குணம் போய்விடுமா? ‘அறம்’ எனும் தலைப்பிலேயே, கமல்ஹாசனைக் கடுமையாக சாடி எழுதியிருக்கிறார் தன் தளத்தில். அதிலும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு ஜெமோ-வின் அறம் சிறுகதைத் தொகுதியை அறிமுகம் செய்த கமல்ஹாசன் இப்படி நடந்துகொள்ளலாமா என்றும் ஒரே புலம்பல். பார்த்தீர்களா, எப்படியெல்லாம் நீளுகிறது..சரி , யார் அந்தப் பெரிசு? சாரு நிவேதிதா. இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் இவ்வளவு விளக்கியிருக்கவேண்டாமோ !

  பதிலளிநீக்கு
 31. @ கீதா:

  //.. வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்...ஜெ மோ மட்டுமல்ல..இன்னும் சில...ஆனால்..//

  –இது என்ன ஒரு கொக்கி இங்கே?

  பதிலளிநீக்கு
 32. @ ஜீவி :

  //..அறத்தை வாசிக்கும் யாருக்கும் நெருடலான அந்தத் துடுக்கு வார்த்தை நெருடவேயில்லை, பார்த்தீர்களா?..அமரர் எம்.வி.வி.யுடன்..//

  துடுக்கு வார்த்தையல்ல. அபத்த வார்த்தை. அங்கிருக்கவேண்டியதில்லை அது. நெருடியது. ஆனால் குறிப்பிடவில்லை.

  எழுத்தாளரைக் கேட்டால் அது எழுத்தாளனின் வார்த்தைத் தேர்வு - writer’s prerogative எனலாம். அப்படி அவர் சொன்னால், வாசகன் அங்கு ஏதும் சொல்வதற்கில்லை.

  @ ஸ்ரீராம்: இது எம்.வி.வி. பற்றியது என ஏற்கனவே தெரியாது.

  பதிலளிநீக்கு
 33. ஓட்டு மட்டும் போட்டுட்டு போறேன். அப்பாலிக்கா வாரேன்

  பதிலளிநீக்கு
 34. அலுவலகத்தில் மனஉளைச்சலை ஏற்படுத்திய அலுவலருக்கு நானும் ஒரு அறம் பாடி வைத்தேன். பலித்த தா என்று பார்ப்பதற்குள் அவர் இடமாற்றலில் பறந்து விட்டார் புதிய விவரங்கள் அளித்தமைக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 35. //துடுக்கு வார்த்தையல்ல. அபத்த வார்த்தை. அங்கிருக்கவேண்டியதில்லை அது. நெருடியது. ஆனால் குறிப்பிடவில்லை..//

  நான் ஜெமோவுக்கு அது குறித்து எழுதி அவரிடமிருந்து பதிலும் வாங்கியிருக்கிறேன். அவருக்கான நியாயத்தை கற்பித்து பதிலில் சொல்லியிருந்தார். அந்த நேரத்தில் அவர் இருந்த வறுமை நிலையைச் சொல்ல ஆப்ட்டாக வந்து விழுந்த வார்த்தை அது என்றார். நிஜத்தில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையில் நிஜமாகவே நடந்ததை கற்பனைக் கதை போல வார்த்தெடுத்த கதை 'அறம்'.
  பதில் எதுவாயிருப்பினும் பதில் சொன்ன கணத்திலேயே என்னில் அவர் உயர்வாகிப் போனார். ஜெமோ அவரளவில் உயர்வான மனிதர்! சந்தேகமேயில்லை.

  இதெல்லாம் விஷயமே இல்லை! என் ஆதங்கம் ரொம்பவும் பர்சலனாது.

  நமக்கு மனசு ஒன்று இருக்கிறதே, ஐயா! அது கிடந்து தவிக்கிற தவிப்புக்கு என்ன பதில் சொல்ல?..

  //writer’s prerogative எனலாம். அப்படி அவர் சொன்னால், வாசகன் அங்கு ஏதும் சொல்வதற்கில்லை.//

  வாசகர்-- எழுத்தாளர் எல்லாம் நாமே உருவாக்கிக் கொள்கிற பிம்பம் தான். இதெல்லாம் தாண்டி உண்மை என்ற நிலை என்பது ரொம்பவும் முக்கியமானது.

  ஒரு உதாரணம்:

  பத்து பைசா கிடைப்பதாயின் என்னுள் உள்ள சுதந்திர வேட்கையை சுட்டுச் சாம்பலாக்கி விடுவேன் என்று பாரதி சொல்வதாக ஒரு நாடக வசனம் இருந்தால் நீங்கள் எப்படி ஃபீல் பண்ணுவீர்கள்?.. என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை.

  'எப்படி எழுதக் கூடாது?' என்று சுஜாதாவின் தொடர் ஒன்றை குமுதத்தில் பிரசுரித்து வருகிறார்கள்.
  அதில் இந்த மாதிரி எல்லா விஷயங்களையும் தொட்டுச் செல்கிறார்.

  எழுத ஆசைப்படும் அனைவரும் படிக்க வேண்டிய தொடர் அது.

  பதிலளிநீக்கு
 36. பதிவு மட்டுமல்ல பின்னூட்டங்களும் அருமை. நானும் சுட்டிக்கு நன்றி. நானும் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 37. @ ஜீவி:

  //..வாசகர்-- எழுத்தாளர் எல்லாம் நாமே உருவாக்கிக் கொள்கிற பிம்பம் தான்..//

  இங்கே ஜெயமோகன் எழுத்தாளர், படைப்பாளி. நீங்கள் வாசகர். இது உண்மை. பிம்பமல்ல. வாசகர் என்கிற நிலையில்தான், நீங்கள் பதற்றமடைந்து எழுத்தாளருக்குக் கடிதம் எழுதியிருக்கிறீர்கள். இது எப்படி பிம்பமாகும் ஐயா? நீங்களும் அவரும் ஒன்றுதான் எனில் கடிதம் எங்கிருந்து முளைத்தது – யார் யாருக்கு எழுதினார்கள் அதை ?

  //..நமக்கு மனசு ஒன்று இருக்கிறதே, ஐயா! அது கிடந்து தவிக்கிற தவிப்புக்கு என்ன பதில் சொல்ல?..//

  நீங்கள் சொல்வதுபோல் எல்லாமே பிம்பம்தான் என்றால் மனதிடம் இப்படிச் சொல்லலாமே: ‘நீயும் பொம்மை..நானும் பொம்மை.. நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை..!’ தத்துவார்த்தமாகக் கடந்துவிடவேண்டியதுதானே. Then, from where did the individual arrive here?

  //..என்று பாரதி சொல்வதாக ஒரு நாடக வசனம் இருந்தால் நீங்கள் எப்படி ஃபீல் பண்ணுவீர்கள்?.. என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை..//

  உதாரணமே சரியில்லை என்கிறேன். இங்கே, ஜெயமோகனால் எம்.வி.வி. சொல்வதாக எதுவும் சொல்லப்படவில்லை. இது எம்.வி.வி.-யின் சுயசரிதமல்ல.

  நீங்களே சொல்லியிருப்பது: //..நிஜத்தில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையில் நிஜமாகவே நடந்ததை கற்பனைக் கதை போல வார்த்தெடுத்த கதை 'அறம்'..//

  ’..வார்த்தெடுத்த கதை அறம்.’ எனவே இதனைக் ’கதை’ என்றேதான் நீங்கள் பார்க்கவேண்டும். You have no choice. கதையின் கரு உண்மை வாழ்வெனினும், கதையாக எழுதப்பட்டிருப்பதால் சில கற்பனை நிகழ்வுகள், சம்பாஷணைகளுக்கும் இடமுண்டு அல்லவா?

  பதிலளிநீக்கு
 38. ஏகாந்தன் சகோ நீங்கள் சொல்லி வரும்போதே தெரிந்துவிட்டது அது சாநி என்று. இறுதியில் ஊர்ஜிதமாக்கிடிவீட்டீர்கள். அவர் அவ்வப்போது சேம் சைட் கோல் போடுவார்.உளறுவார்...நித்தி விஷயம் உட்பட...

  எப்போதும் தரமற்ற சொற்கள். யாரையேனும் வசைபாடுதல். நேரடியாகவே புத்தகத் திருவிழாவில் அவரது பொதுவெளி பிஹேவியரைப் பார்த்த விளைவு ஏற்கனவே இருந்த அவரைப் பற்றிய எதிர்மறை எண்ணம் மேலும் வலுவாகிவிட்டது...

  கீதா

  பதிலளிநீக்கு
 39. –இது என்ன ஒரு கொக்கி இங்கே?//

  ஏதோ எழுத வந்து வேண்டாம் என விட்டதில் டெல் செய்ததில் இந்த 'ஆனால்' விடுபட்டு கொக்கியாய்...ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 40. ஸ்ரீராமின் பகிர்வு அருமை, பின்னூட்டங்க்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 41. @ கீதா:

  //..எப்போதும் தரமற்ற சொற்கள். யாரையேனும் வசைபாடுதல். நேரடியாகவே புத்தகத் திருவிழாவில் அவரது பொதுவெளி பிஹேவியரைப் பார்த்த விளைவு ஏற்கனவே இருந்த அவரைப் பற்றிய எதிர்மறை எண்ணம் மேலும் வலுவாகிவிட்டது...//

  நேரடியாகவேறு பார்த்திருக்கிறீர்களா, கஷ்டம்! க்யூபாவில் இருந்தபோது, 2008-ல் நான் வலையில் உலவ ஆரம்பித்த புதுசு. சுஜாதாவின் மறைவு சம்பந்தமாய் படித்துக்கொண்டிருந்தேன். நேரில் சென்று அஞ்சலி செலுத்திய உண்மைத்தமிழன் அருமையான ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அப்போது தான் சாநி-யின் அஞ்சலிக் கட்டுரையைப் படிக்க அவரது தளத்துக்கு வந்தேன். நன்றாகவே எழுதியிருந்தார். படித்தேன். மின்னஞ்சல் அனுப்பினேன். அவரிடமிருந்து பதில் வந்தது. தொடர்ந்து சில மின்னஞ்சல் பரிமாற்றங்கள். தனக்கு க்யூபாவிலும் ஒரு வாசகர் எனப் பெருமிதப்பட்டிருந்தார்! அவர் பெருமை அவருக்கு.

  பிறகுதான் ஜெமோ பற்றி அவர் மனதிலுள்ள வன்மம் பிடிபட ஆரம்பித்தது. பொதுவாகவே ஒன்றுக்குப்பின் முரணான கருத்துக்கள். அபத்தமான, சிலசமயங்களில் அருவருப்பான மொழி. நான் மேலும் படித்தேன்..அவ்வபோது படிக்கிறேன் எனினும் அவரது உளவியல் எனக்குப் புரிகிறது. உருப்படாத கேஸ்!

  பதிலளிநீக்கு
 42. டைப் செய்து ஓரிரு நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதிருக்கிறது திரையில் டைப் செய்யப்ட்ட எழுத்துகள் தோன்றுவதற்கு.
  பொறுமை போகிறது. அதனால் இந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களுக்கு பதிலுக்கு பதில் சொல்ல விழைந்தாலும் செயல் படுத்த முடியவில்லை. நண்பர்கள் மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 43. @ ஸ்ரீராம்:

  கம்ப்யூட்டர் வேறு பிரச்னை ஏற்படுத்துகிறதா? கஷ்டந்தான். விரைவில் அதற்கு ஏதாவது செய்யுங்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!