சில சமயம் கல்யாண வீடுகளில் எடுக்கப்படும் படங்களில் திரும்பத்திரும்ப பார்த்த முகங்களே வேறு வேறு ஆடைகளிலும் வெவ்வேறு நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் இருக்கும்போது எடுக்கப்பட்டவற்றை மீண்டும் மீண்டும் பார்த்த ஆல்பப்பக்கங்களையே பார்க்கும் எண்ணம் தோன்றும்.
இங்கு காணும் சங்மா ஏரி சீன எல்லைக்கு வெகு அருகில் இருக்கும் முக்கியமான மூன்று ஏரிகளில் ஒன்று. இணையத்தில் தேடித் பாருங்கள் மிக அழகான வண்ணங்களுடன் எவ்வளவு நன்றாக எடுத்திருக்கிறார்கள்? ஒவ்வொரு தட்ப வெப்ப நிலைக்கும் ஒரு
மாதிரியாக மாறிக்கொண்டே இருக்குமாம். நாங்கள் அங்கிருந்த 30 நிமிடங்களில் காற்றடித்தது வெயில் வந்தது மேலை மேகம் கவிந்தது மழை பொழிந்தது. ஏரி என்னவோ மாறிய மாதிரியே தெரியவில்லை. ஒருக்கால் அரை மணிக்குள் பூக்கள் செடிகள் மரங்கள் பனி எல்லாம் மாறுவதில்லை என்பதால் இருக்கலாம்.
தமிழ்மணம்.
குளுகுளு.. படங்களுடன்
பதிலளிநீக்குகுதுகல ஞாயிறு...
வாழ்க நலம்..
இன்பம் தருவது இயற்கையின் இயல்பு.அதை ரசித்து மகிழ்வது. நல்ல மனம் உள்ளவர்களின் பண்பு.அதை சிதைப்பது அரக்க மனம் கொண்ட அறிவிலிகள் செய்யும் தீங்கு.
பதிலளிநீக்குஇயற்கையின் அழகில் ஏரி மிக அருமையாக உள்ளது.
பதிலளிநீக்குஇரசித்தேன் ஜி இயக்கையை...
பதிலளிநீக்குஅதிரா தேம்ஸ் நதியில் குதிக்கவில்லை என்பதற்காக இந்த ஏரியை படம் எடுத்து போட்டு இங்காவது குதிப்பாரா என்று சோதிக்கவே நீங்கள் இந்த படத்தை எடுத்து பொட்டு இருப்பதாக நான் கருதுகிறேன் ஸ்ரீராம்
பதிலளிநீக்குஅழகிய காட்சிகள். ஆறாவது படத்தில் நம் ஊர் பூம்பூம் மாடு போல் அல்லவா அழைத்துச் செல்கிறார்கள் (யாக்) காட்டெருமையை!
பதிலளிநீக்குபடங்கள்அழகு
பதிலளிநீக்குதம +1
ஏரியை மூட வரும் மேகங்கள் அருமை.
பதிலளிநீக்குஇயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் அழகு
பதிலளிநீக்குஏரியும், மலைகளும் இயற்கையும் எப்போதுமே அழகுதான்.....எத்தனை முறை ஒரே படத்தைப் பார்த்தாலும் அலுக்காது!!!
பதிலளிநீக்குமலை மீது கவிழும் மேகம் அருமை!!! அரைமணி நேரத்தில் கலர் எல்லாம் மாறாது!!ஹிஹிஹி...(உங்கள் நகைச்சுவை தெரிகிறது!!) சீசனல்!! சீசன் மாறும் போது மாறுமாக இருக்கலாம்...
கீதா
அதிராவுக்குப் போராட மிக மிக நல்ல அமைதியான இடம் கிடைத்துவிட்டது. இனி போராட்டம் என்று சங்கமாவில் சங்கமித்துவிடுவார்!!! பெர்மனென்டாக டென்ட் அடித்து!! ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
அழகான படங்கள். ஏரியின் வண்ணம் சீசனுக்குத் தகுந்தால் மாறும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஇயற்கை அழகுடன் படங்கள் நன்று
பதிலளிநீக்குமானசரோவர் போகும் வழியில் எல்லாம் இப்படி மேகங்கள் ஓடி வருவதையும் ஏரியின் விதவிதமான வண்ணச்சேர்க்கையுடன் கூடிய நீரையும் பார்க்கலாம். சும்மா நின்று கொண்டிருக்கும்போதே மேகங்கள் ஓடி வந்து கவிழ்ந்து கொள்ளப் பூத்தூவலாகப் பனி மழை பொழியும். சில சமயம் சேமியா மாதிரியே பெய்யும். சாப்பாடு சாப்பிட டென்டை விட்டு வெளியே வந்தால் சாப்பாடில் எல்லாம் பனிமழை! ஜவ்வரிசி மாதிரி! நெல்லிக்காய் அளவில்! பூமழை மாதிரி! நேரில் அனுபவிச்சால் தான் தெரியும். கௌரிகுண்ட் ஏரி பச்சை நிறத்தில் இருப்பதும் ஆச்சரியம் தரும். மானசரோவர் ஏரி ஒவ்வொரு கரையிலிருந்து பார்க்கையிலும் ஒவ்வொரு மாதிரித் தெரியும்.
பதிலளிநீக்குபடங்கள் அழகாகவும் கலைக்கண்களோடும் எடுக்கப்பட்டிருக்கின்றன. )ஃபோட்டோகிராஃபிக் கண்?) ஏரியை மூட வரும் மேகங்கள் அருமை!
பதிலளிநீக்கு//எல்லாம் இப்படி மேகங்கள் ஓடி வருவதையும் ஏரியின் // "வழியிலுள்ள ஏரிகளின்" என்று படிக்கவும்.
பதிலளிநீக்கு////நாங்கள் அங்கிருந்த 30 நிமிடங்களில் காற்றடித்தது வெயில் வந்தது மேலை மேகம் கவிந்தது மழை பொழிந்தது. ஏரி என்னவோ மாறிய மாதிரியே தெரியவில்லை. ஒருக்கால் அரை மணிக்குள் பூக்கள் செடிகள் மரங்கள் பனி எல்லாம் மாறுவதில்லை என்பதால் இருக்கலாம்.////
பதிலளிநீக்குஏதாவது புரியுதோ?:) நேக்கு ஒண்ணும் புரியல்லே:)... ஹா ஹா ஹா... இங்கு ஸ்கொட்டிஸ் வெதரை all seasons in one day என்பார்கள்.. அப்படிப்போலதான் இருக்குமோ அங்கும்:)..
எங்களுக்கு நைட் , நேரம் மாத்தியாச்சு... பின்னாலே போயிருக்கு.. இன்னும் ஒரு மணி நேரம் நல்லா நித்திரை கொள்ளலாம்:)...
ட்றுத் நான் தேம்ஸ்லயே குதிக்கிறதா முடிவெடுத்திட்டேன்:)...
பதிலளிநீக்குநோ நோஒ கீதா சங்கமால எல்லாம் சங்கமிக்க மாட்டேன்:) ஏன் தெரியுமோ? காதைக் கிட்டக் கொண்டு வாங்கோ.. இங்கின சிலருக்குப் பாம்புக்காதூஊஊ:)... சங்கமால குதிச்சால் பயர் எஞ்சினும் வராது:) காப்பாத்தவும் ஆட்கள் இருக்கமாட்டினம்போல இருக்கு:) மீ இதில வலு உசாராக்கும்:).
இந்த மாதிரி இடங்கள் சுற்றுப்பயணங்களுக்குத் தான் லாயக்கு. நிரந்தர குடியிறுப்பு என்றால் வெறுத்து போய் விடும். நான் உதகையில் 4 வருடங்களுக்கு மேல் வசித்துப் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.
பதிலளிநீக்குஎப்பொழுதுடா பிளைன்ஸ் (சமதரை) ஏரியாவுக்கு இறங்கி வந்து மக்களோடு மக்களாகக் கலந்து பழக்கப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்புவோம் என்று ஏக்கமாக இருக்கும். மலைப்பகுதிகளில் ஏறும் பொழுது உடலின் முழு பாரத்தையும் கால்களுக்குத் தராமல் முன்பக்கம் சற்று சாய்ந்து நடந்து நடந்து அதுவே பழக்கமாகி முதுகு வலி வந்தது தான் மிச்சம். சமதரை வாழ்க்கைக்கு வந்ததும் அதுவே கால்வலியாக மாறி மீண்டு வந்தது பெரிய கதை. இயற்கைக் காட்சிகள் எதுவும் புதுசாக அனுபவமாகையில் ரசிக்கும் படியான பிரமிப்பு தரும். பழக்கப்படும் போது 'அட,சரித்தான்..' என்று மனசைத் தொடாமலே போய் விடும். இந்த மாதிரி இடங்களில் வீட்டுச்சாப்பாடும் குடும்பத்தோடும் இருந்தால் அவ்வளவு வெறுமை தெரியாது. ஹோட்டல் சாப்பாடு, தனித்த வாழ்க்கை என்றால் அதை விடக் கொடுமை வேறு இல்லை..
நீலமும் வெள்ளையுமாய் மேகங்களும்
பதிலளிநீக்குஏரியும் படத்தின் அழகைச் சேர்க்கின்றன.
உங்களுக்கு மிகவும் பிடித்த பயணமாய் இது அமைந்திருக்க வேண்டும். இன்னும் அந்தப் பயணத்தின் ஆக்கிரமிப்பு உங்களிடம் இருக்கிறது.
இயற்கையின் அழகு அந்த மேகக் கூட்டத்தின் இடமாறுதல்களே போதுமே. ரஸித்துப் பார்த்து அரைமணியிலேயே இவ்வளவு படங்கள். வர்ணனைகளும். அந்த வீடுகளைப் பார்த்தால்தான் கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. நல்ல வீடுகளும் கொஞ்சம். அருமையாக படமெடுத்துப் போடுகிறீர்கள். அன்புடன்
பதிலளிநீக்குஇயற்கை எப்போது, எப்படி பார்த்தாலும் அழகு
பதிலளிநீக்குஇன்னும் யாரும் சமைச்சு அனுப்பலையா? :)
பதிலளிநீக்குஅழகான படங்கள். இயற்கை எப்போதும் அழகு. ஒவ்வொரு காலங்களில் மாறுவது இன்னும் அழகை தரும்.
பதிலளிநீக்குஸ்ரீராம் என்ன லீவிலா இருக்கிறார்?..
பதிலளிநீக்கு