வெள்ளி வீடியோவில் என்ன பகிர்வது என்று ஏகாந்தன் ஸாரின் மெயில் பார்க்கும் வரை ஐடியா எதுவும் இல்லை. அவர் மெயில் கண்டவுடன் தோன்றிய பாடல்...
முதற்கண் ஏகாந்தன் ஸாருக்கு நன்றிகள். தலைப்பைப் பாராட்டியமைக்கு. அப்புறம் எசப்பாட்டுக்கும்!
அன்பு ஸ்ரீராம்,
பச்சமொளகா பாவக்கா
படுத்தி எடுக்கறா பாரக்கா
என்றெல்லாம் rhymical தலைப்பு வைத்தால், அது என்னைப் படாதபாடு படுத்தினால், என் செய்வேன் நான்? மனசில் வந்ததை வேகவேகமாக ஸ்க்ரீனில் கொட்டினேன். இதோ உங்களுக்கே அனுப்பியும்விடுகிறேன். ஆரம்பப்புள்ளியல்லவா நீங்கள்.
போட நினைத்தால் போடலாம்
இடமா இல்லை எங்கள்ப்ளாகினில்..!
உங்களிடமே விட்டுவிடுகிறேன்.. ( ஹா... ஹா... ஹா... போட்டுவிட்டேன் ஸார்! )
-ஏகாந்தன் 12-10-17
பின் வரும் கவிதைக்கான பின்னணி:
அப்பாவி அம்மா. கஷ்டப்பட்டு வளர்த்த ஒரே மகளுக்குக் கல்யாண நாள் நெருங்குகிறது. போகிற இடத்தில் பெண் நன்றாக வாழவேண்டுமே என மனமெலாம் கவலை. மகளோ மாறிவரும் காலத்தின் மஹாபிரதிநிதி. விளையாட்டும் அலட்சியமுமாய்த் திரிகிறாள். மண நாள் நெருங்குகிறதே, ஏதோ கொஞ்சமாவது பெண்ணுக்கு சமைக்கக் கற்றுக்கொடுத்துவிடுவோம் என்கிற அம்மாவின் அயராத முயற்சி. தங்கமகளின் தப்புத்தாளங்கள். பக்கத்துவீட்டுக்கார அக்காவிடம் முறையிடாமல் அம்மாவுந்தான் வேறென் செய்வாள்:
எப்படிக் கரை சேர்ப்பேனோ.. என்னப்பா…
பச்சமொளகா பாகக்கா
படுத்தி எடுக்கறா பாரக்கா
அடுப்பங்கரப்பக்கம் வாடீன்னா
கடுப்பாகத்தான் எப்பவும் பேசறாக்கா
கத்திரிக்கா புடலங்காக் கூட்டு செய்யக்
காய்கறியக் கையிலக் குடுத்தாக்க
பத்திரிக்க இன்னும் அடிக்கலயான்னு
பாதிச்சிரிப்புச் சிரிச்சுக்கறா
வாய்க்கு ருசியா சமைச்சாத்தான்
வாழ்க்கை ருசிக்கும்னு சொன்னாக்க
வாழக்காய வெட்டின கையோட
வாயில போட்டுத் தின்னுப்புட்டா
வாழக்காக்கறி என்னாகும்
வாயத் தொறந்து நீயும் சொல்லக்கா
இஷ்டம்போல உப்பயும் போட்டுப்புட்டு என்னை
இடிச்சு இடிச்சுப் பாக்கறாக்கா
கொத்தமல்லிக் கொஞ்சம் போடச்சொல்லி
கொழம்பக் காட்டினேன் கேளக்கா
மொத்தக் கட்டையும் உள்ளே தள்ளி
மொறச்சுப் பாக்கறா பாரக்கா
பொத்திப் பொத்தி இப்புடி வளத்துப்புட்டா
போற எடத்துல கதை என்னாகும்
கத்துக்குடுக்கத்தான் பாக்கறேன் நானும்
ஒத்துக்கமாட்டேங்குறா கேளக்கா
சிட்டுப்போலப் பாடித்திரியற பொண்ணு
சட்டுப்புட்டுன்னு ஏதோ சமைச்சிருப்பான்னு
தட்டோட புருஷன் வந்து உக்கார்ந்தா
பட்டுனு எதயும் பண்ணத் தெரியாதவ
விட்டத்தப் பாப்போளோ
புட்டத் தேய்ப்பாளோ
கட்டத்த என் சொல்வேன் சொல்லக்கா - நான்
பட்டபாடு இன்னும் தீரலயேக்கா . .
இளையராஜா இசை அமைத்த இந்தப் பாடல் கே பாலச்சந்தரின் தம்பி படத்தில் இடம் பெற்றாலும், ஒரிஜினல் பாடல் கனகாலம் முன்னரே மணிப்பூர் மாமியார் படத்திற்காக உருவாகி விட்டது.
கேபியிடம் இளையராஜா இந்தப் பாடல் பற்றி பிரஸ்தாபித்திருக்கக் கூடும்.பாடல் களம் பிடித்துப்போய் கேபியும் படத்தில் பாடலை இணைத்திருக்க வேண்டும். படத்தில் பாடல் வலிந்து திணிக்கப்பட்ட காட்சியாகவே இருக்கும்.
தமிழ்மணத்தில் வாக்கு.....
நன்று.. நன்று..
பதிலளிநீக்குவழக்கம்போல முந்திக்கொண்டு முதல் வருகை. நன்றி துரை செல்வராஜு ஸார்.
நீக்குநான் காயை எல்லாம் வெச்சு கல்லாங்காய் பாட்டு கட்டுனேன்..
பதிலளிநீக்குஇங்கே அடுப்பங்கரைப் பாட்டு அருமை..
எல்லாப் புகழும் ஏகாந்தன் ஸாருக்கே...
நீக்குநன்றி துரை செல்வராஜு ஸார்.
Textஆ படிக்கும்போது பாடல் நினைவுக்கு வரலை. முதலில் "உன்னால் முடியும் தம்பி" படப் பாடலைச் சொல்றீங்களோன்னுதான் படிக்க ஆரம்பித்தேன். என்ன சமையலோ பாடல் கேட்க நல்லா இருந்தாலும் படத்தில் ஒட்டாதமாதிரிதான் தோன்றியது. 90-91ல் கேட்டது, பார்த்தது. எவ்வளவு வருஷம் ஆகிடுத்து.
பதிலளிநீக்குபயணத்தின் இடையேயும் பாடல் பகிர்வில் பங்கு கொண்ட நெல்லைத் தமிழனுக்கு நன்றிகள். ஏகாந்தன் ஸார் கவிதை எப்படி?
நீக்குஅம்மாவின் புலம்பல் கவிதை அருமை.
பதிலளிநீக்குஏகாந்தன் அவர்கள் கவிதையா?
நன்றாக இருக்கிறது.
பாடல் பகிர்வு அருமை. பாடல் செய்தி புது செய்தி எனக்கு.
ஏகாந்தன் ஸாரின் எசப்பாட்டையும், இளையராசாவின் இசைப்பாட்டையும் ரசித்த கோமதி அரசு மேடத்துக்கு நன்றிகள்.
நீக்கு//இந்தப் பாடல் கே பாலச்சந்தரின் தம்பி படத்தில் இடம் பெற்றாலும்// 'உன்னால் முடியும்' காணோம் :-)). எனக்கு மிகவும் பிடித்த பாடல். நன்றி!!
பதிலளிநீக்குவெள்ளியில் புதன் எங்களையும் அறியாமல புகுந்து விட்டது போல... சுட்டிக் காட்டி, 'பிடித்த பாடல்தான் எனக்கும்' என்ற தகவலையும் சொன்ன மி கி மா வுக்கு நன்றிகள்.
நீக்குஏகாந்தன் கவிதை அருமை! இளையராஜாவின் இந்தப் பாடலைக் கேட்டிருக்கேன். (அதிசயமா)
பதிலளிநீக்குஇணையம் ரொம்பப் படுத்தல்! கருத்துச் சொன்னால் போகலை! :(
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா...ஏகாந்தன் ஸாரின் கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி.அட, இந்தப் பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா? ஒரிஜினலையா?பின்னால் வந்ததையா?
பதிலளிநீக்குஇணையம் எனக்கும் படுத்தல்தான். சில தளங்கள் திறக்கவே மாட்டேன் என்கின்றன.எழுத்துகள் டைப் செய்தால் பாதி எழுத்துகள்தான் வருகின்றன.
"புட்டத் தேய்ப்பாளோ"-"புட்டத்தைத் தேய்ப்பாளோ" என்று வந்திருக்கணுமோ? இந்தக் காலத்தில் வயதுக்கு வந்த பெண்ணைப் பெத்தவள் மனசைச் சொல்லிவிட்டீர்கள். அருமை ஏகாந்தன் சார்.
பதிலளிநீக்குகவிதை மிக அருமை!
பதிலளிநீக்குஉன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் இந்த பாடலும் காட்சி அமைப்பும் மிகவும் ரசனைக்குரியதாக அமைந்திருக்கும்!
>>> "புட்டத் தேய்ப்பாளோ"-"புட்டத்தைத் தேய்ப்பாளோ" என்று வந்திருக்கணுமோ?..<<<
பதிலளிநீக்குநானும் இதைத் தான் நினைத்தேன்.. சொல்லுதற்கு என்னவோ போலிருந்தது..
நயம்.. நயம்.. கவி நயம்!..
@ நெல்லைத்தமிழன் , ஸ்ரீராம்:
பதிலளிநீக்கு//..புட்டத்தைத் தேய்ப்பாளோ என்று வந்திருக்கணுமோ..//
ஆம். ‘விட்டத்தப் பாப்பாளோ, புட்டத்தைத் தேய்ப்பாளோ..’ என்பதுதான் சரி. அப்படித்தான் இங்கே எழுதியிருக்கிறேன். அனுப்புகையில் டைப்போ! குறிப்பிட்டதற்கு நன்றி நெல்லைத்தமிழன். சாரி ஸ்ரீராம். வாசகர்கள் கவனிச்சுப் படிங்கோ!
எதையும் ரெண்டு, மூணுதடவை படிச்சுப்பாத்துத்தான் அனுப்புவது வழக்கம். இருந்தும் ஏதாவது ரகளையாகிவிடுகிறது. என்ன செய்ய!
காலத்திற்கேற்ற பாடல்கள்
பதிலளிநீக்கு@ஶ்ரீராம், ஒரிஜினல் தெரியாது. பின்னால் வந்தது தான் கேட்டிருக்கேன். :)
பதிலளிநீக்குஅம்மாவின் கவலைகளை கவிதையாய் கொண்டு வந்தாயிற்று அருமை
பதிலளிநீக்கு'உன்னால் முடியும் தம்பி ' இந்த பாடல்எனக்கும் மிகவும் பிடிக்கும்
பச்சைமொளகா பாவக்கா படுத்தி எடுத்த பொண்ணுங்க நிறைய தான் இருந்தாங்க :)
பதிலளிநீக்குஅம்மாவின் புலம்பல் அழகாய் கவிப்படைத்த ஏகாந்தன் சாருக்கு வாழ்த்துக்கள்:)
கொஞ்சம் முந்திக்காலத்தில் என்னையும் பார்த்த மாதிரி இருக்கு :)
இதென்ன பிரமாதம் இப்பவும் நீங்க அப்டித்தான்னு சொல்ற நெல்லைத்தமிழனின் மைண்ட் வாய்ஸ் லண்டன் வரைக்கும் கேக்குது :))
அம்மாவின் புலம்பல் எவ்வளவு தூரம் போகிறது. உண்மையில் இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிரார்கள்.நாட்டுப்புற பாடல்போல அருமை. அன்புடன்
பதிலளிநீக்குகவிதை சூப்பர். இலையை போடடி பாட்டு செம
பதிலளிநீக்கு///
பதிலளிநீக்குஎன்றெல்லாம் rhymical தலைப்பு வைத்தால், அது என்னைப் படாதபாடு படுத்தினால், என் செய்வேன் நான்? ////
அய்யய்யோ இப்போ என் செய்வோம் நாங்கள் எனும் நிலைக்கு ஆளாக்கிட்டீங்கள் நம்மை...:).
அழகாக பல உண்மைகளை விளக்கிவிட்டீங்கள் கவிதை எனும் பெயரில்:)... பல அம்மாக்கள் செய்யும் தவறுதான் இது... தலையை விட்டுப்போட்டு வாலைப்பிடித்து ஆட்டுவதுபோல:)... திருமணம்வரை பேசாமல் இருந்துபோட்டு, நாள் வச்சபின்னர்தான் பதறி அடிச்சு சமையல் சொல்லிக் கொடுப்பது.
சில அம்மாக்கள் நினைக்கிறார்கள்... செல்லமாக வளர்ப்பதெனில் எந்த வேலையும் செய்விக்காமல் வளர்ப்பது என... இதனால் பின்னாளில் கஸ்டப்படப்போவது பிள்ளைகள்தானே...
பள்ளி செல்லும் காலத்தில் என் துடிப்படக்கிப் பள்ளிக்கு அனுப்பிலனே என் தந்தையாகிய பாதகனே.... இது சிட்டுவேஷன் தகவலாம் பூஸ் ரேடியோவில் போகுது...
இன்றைய பாடல்கள் ஓ. கே:).
கவிதை வரிகளை இரசித்தேன் ஏகாந்தன் ஸார்.
பதிலளிநீக்குகாணொளி கணினியில் காணவேண்டும்.
பாடலும் அருமை. கவிதையும் அசத்தல்.
பதிலளிநீக்குஅம்மாவின் ஏக்கம் அலுப்பு,பெண்ணின் அடாவடி
அத்தனையும் கண்முன் நிறுத்திவிட்டார் ஏகாந்தன்.
அன்பு வாழ்த்துகள்.
ஏகாந்தனின் பல முகங்களில் இதுவும் ஒன்றா ரசிக்க வைத்தது
பதிலளிநீக்கு@ அ அ ...//சில அம்மாக்கள் நினைக்கிறார்கள்... செல்லமாக வளர்ப்பதெனில் எந்த வேலையும் செய்விக்காமல் வளர்ப்பது என... இதனால் பின்னாளில் கஸ்டப்படப்போவது பிள்ளைகள்தானே...//
பதிலளிநீக்குஎன்னைய சொல்லலைத்தானே :)
குறு அப்டிலாம் காலை வார மாட்டாங்க
வெளிநாட்டில் ஸ்கூலிலேயே கற்று கொடுக்கறாங்க :)
அதோடில்லாம இப்போத்தான் ரெசிப்பீஸ் எல்லாமே கம்பியூட்டரை தட்டினா கிடைக்குதே
இப்படிக்கு
அன்பானவள் அஞ்சாதவள் அசராதவள்
அ அ அ ,....அஞ்சு :)
ஸ்ரீராம் இந்த உன்னால் முடியும் தம்பி பாட்டில் இலை விரித்து சமையல் பரிமாறும் காட்சியில் நிஜ சாப்பாடு இருந்ததா :) எதுக்கு கேக்கிறேன்னா அப்போ ஒரு வார இதழில் அப்படியே இலை சாப்பாடு வரைஞ்சு ஒருவர் பற்றியும் அந்த படங்களையும் போட்டிருந்தாங்க வெறும் படத்தை மட்டும் படத்தில் காட்டியிருப்பாங்களோ !!
பதிலளிநீக்கு@ Sriram: மணிப்பூர் மாமியார், உன்னால் முடியும் தம்பி பட சமையல் பாடல்களைத் தேர்ந்தெடுக்கும்போது திருச்சி லோகநாதன் பாடிய, தஞ்சை ராமையா தாஸின் பாடலான ‘கல்யாண சமையல் சாதம்..காய்கறிகளும் ப்ரமாதம்..’ ஞாபகத்தில் வராமல் போனதெப்படி ?
பதிலளிநீக்குஇங்கு திருச்சி, தஞ்சைக்காரர்கள் யாருமில்லையா !
@ துரை செல்வராஜூ :
பதிலளிநீக்குகவிதையை ரசித்தமைக்கு நன்றி நண்பரே.
@ கோமதி அரசு :
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி
@ Geetha Sambasivam :
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி
@ நெல்லைத் தமிழன் :
பதிலளிநீக்குகருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
@ மனோ சாமிநாதன் :
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி
@ poovizi :
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி
@ Angelin :
பதிலளிநீக்குகருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
@ காமாட்சி :
பதிலளிநீக்குகருத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி அம்மா.
@ ராஜி said...
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி
@ அப்பாவி athira :
பதிலளிநீக்கு//..எனும் நிலைக்கு ஆளாக்கிட்டீங்கள் நம்மை...:).
ரொம்பக்கஷ்டப்பட்டுட்டீங்க, தெரியுது!
கருத்துக்கு நன்றி.
@ KILLERGEE Devakottai :
பதிலளிநீக்குரசனைக்கு நன்றி நண்பரே
@ வல்லிசிம்ஹன் :
பதிலளிநீக்குபாராட்டு, வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்
@ G.M Balasubramaniam:
பதிலளிநீக்குகருத்திற்கும், ரசனைக்கும் நன்றி
ஸ்ரீராமுக்கு: அடுத்த வியாழக்கிழமை ஒருவேளை கவிதை வெளியிடப்படலாம் என எண்ணியிருந்தேன். இவ்வளவு விரைவில் எங்கள் ப்ளாகில் போட்டு என்னையே திணற அடித்துவிட்டீர்கள்! நன்றிகள் பல.
பதிலளிநீக்குஏகாந்தன் சாரின் கவிதை தத்ரூபம். கைவலிக்கக் கைத்தட்டலாம்.
பதிலளிநீக்குகடலைப் பருப்புக்கும் துவரம் பருப்புக்கும்
வித்தியாசம் தெரியாம வளர்த்துட்டேன்
காலேஜூ படிக்கப் போன பொண்ணுக்கு
கல்யாண காலம் நெருங்கி வந்தாச்சு
பாவம் அவ புருஷன்னுக்குத் தான்
சமையலறை சாம்ராஜ்யமோ?
'சோறு ஆக்கிப் போடவா கல்யாணம்? அந்த
சோம்பேறிக்கு அதை விட என்ன வேலை'யினு
கேட்டாளும் கேட்பாள் இவள்; அப்படிக்
கேட்டவள் வளர்த்த மகள் தானே
சொல்லுங்கய்யா நியாயம்...
@ ஜீவி :
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி.
உங்களது முயற்சியும் சுவாரஸ்யமானது. இந்தக் கடலப்பருப்பு துவரம்பருப்பு ப்ரச்சினை கரைதாண்டியும் தீண்டிப்புடுது. (என்.ஆர்.ஐ. மாட்டுப்பெண்களைச் சொல்கிறேன்)
ஏகாந்தன் சகோ பச்ச மொளகா ரொம்பவே சரி!! நானெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி புதுசு புதுசா சமையல்லா ஏதாவது செஞ்சு பார்த்து திட்டெல்லாம் வாங்கினாலும், தினப்படி சமையல் செய்ததே இல்லை..அப்பல்லாம் துவரம் பருப்பு கடலைப்பருப்புக்குவித்தியாசம் தெரியாது...உடைச்ச உளுத்தம்பருபுக்கும், பாசிப்பருப்புக்கும் வித்தியாசம் தெரியாது...அரிசி பார்த்து வாங்கத் தெரியாது...எங்க பாட்டி என்னை நினைச்சு வருத்தப்பட்டது இந்த அம்மா ரொம்பவே அழ்கா பாடிபுட்டாங்க...செம ரொம்ப ரசித்தேன்...
பதிலளிநீக்குகீதா
விட்டத்தப் பார்ப்பாளொ
பதிலளிநீக்குபுட்டத்? தேய்ப்பாளோ //.....இந்த வரிதான்....விட்டம் புட்டம்..ஸோ விட்டத்தப் - புட்டத்த? டைப்படிக்க விட்டுப் போனது போல இருக்கு.. அடுத்ததும் கட்ட என்று ரைமிங்க்...
கீதா
ரெண்டு பாடலும் அப்படியே...உன்னால் முடியும் தம்பி பாடல் ரொம்பப் பிடிக்கும். இப்போதான் ஒரிஜினல் மணிப்பூர் மாமியார் பாடலைக் கேட்கிறேன்...
பதிலளிநீக்குகீதா
உன்னால் முடியும் தம்பியின் 'என்ன சமையலோ' பாடலின் ஒரிஜினல் வெர்ஷன் இப்பொதுதான் முதன் முதலில் கேட்கிறேன் அண்ணா.
பதிலளிநீக்குகவிதையும் வீடியோ பாடல்களும் அருமை அண்ணா.
பதிலளிநீக்கு@ Thulasidharan V Thillaiakathu கீதா:
எங்க ஆளயே காணோமேன்னு பார்த்தேன்! ரசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
பெரும்பாலான பெண்களுக்கு கல்யாணத்துக்குப் பின்தான் on the job training நடக்கிறது. Grace மார்க்கெல்லாம்போட்டு கணவனோ, மாமியாரோ பாஸாக்கிவிடுவார்கள் என்று தோன்றுகிறது. குடும்பத்துக்குக் குடும்பம் வித்தியாசங்கள் இருக்கும். என் உறவுப்பெண் ஒருத்திக்கு கல்யாணமாகிப் பத்துவருடமாகிவிட்டது(இரண்டு குழந்தைகள்வேறு). வீட்டில் விழுந்துவிழுந்து சமைப்பது அவள்தான். ஆனால் மாமியார்க்காரியின் நொட்டு நொள்ளை இன்னும் போகவில்லை. எங்கே போய் முட்டிக்கொள்வது?
// இந்த வரிதான்....விட்டம் புட்டம்..ஸோ விட்டத்தப் - புட்டத்த?..//
இதை நெல்லை முதலில் கண்டுகூற, நானும் உடனே மேலே typing error-தான் என விளக்கியிருக்கிறேனே! ’விட்டத்தப் பாப்பாளோ..புட்டத்தத் தேய்ப்பாளோ..’ என்பதே சரி. ஒரிஜினலில் நான் அப்படி எழுதி, ஸ்ரீராமுக்கான காப்பியில் வழிந்துவிட்டேன். என்ன செய்வது?
@ பரிவை சே.குமார் :
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி.