திங்கள், 16 அக்டோபர், 2017

"திங்க"க்கிழமை 171016 : பாதுஷா - நெல்லைத்தமிழன் ரெசிப்பி


இந்தத் தடவை எங்க அம்மா பண்ணற முறைல பாதுஷா எப்படிச் செய்யறதுன்னு சொல்றேன். பொதுவா, வட நாட்டுல, பாதுஷான்னா, ஏகப்பட்ட எண்ணெய், சமையல் சோடால்லாம் சேர்ப்பாங்க. எனக்கு அது உடம்புக்கு ஒத்துக்காது. பாதுஷாவைத் தொட்டா ஜீனி ஒட்டிக்கலாமே தவிர, எண்ணெய் (நெய்) ஒட்டினா எனக்குப் பிடிக்காது. சுலபமான பாதுஷா இதோ.

தேவையானது

மைதா மாவு 2 கப்
வெண்ணெய் 2 மேசைக் கரண்டி போதும். நான் நெய் சேர்த்தேன்.
மிக்சில பொடியாக்கிய ஜீனி 2 மேசைக் கரண்டி

ஜீரா பாகு வைக்க – ½ கப் ஜீனி.  கொஞ்சம் ஏலப்பொடி. தேவைனா கேசரி பவுடர் ஒரு சிட்டிகை

எப்படிச் செய்யறது?மைதா மாவு, நெய், மாவாக்கிய ஜீனி இவைகளை கொஞ்சம் பால் விட்டு, நன்றாக சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையணும்.  அப்புறம் அதை கொஞ்சம் கனமா (1/2-3/4 சென்டிமீட்டர்) இட்டு, ஒரு மூடியை வைத்து வட்ட வட்டமா அழுத்திக்கோங்க. அப்போ, மீதி மாவை தனியா பிரித்து எடுத்துவிடலாம். 
மேசைல, வட்ட வட்டமா பாதுஷா மாதிரி வந்துவிடும். இல்லைனா, ஒண்ணொண்னா இட்டால் ரொம்ப நேரம் எடுக்கும். நான், மேசைமேல் பிளாஸ்டிக் கவர் விரித்து தடிமனா இட்டு, ஜூஸ் பாட்டிலின் மூடியால வட்ட வட்டமா அழுத்தினேன். எங்க அம்மா அரையாழாக்கை உபயோகப்படுத்துவார்கள். 

இப்போ ஃபோர்க்கால பாதுஷா மாவுமேல் துளைகள் இடவும். சும்மா அழுத்தினாலே போதும். இப்படிப் பண்ணலைனா, பொரிக்கும்போது பிஸ்கட் மாதிரி வட்டமா இருக்கறது பிளந்துகொள்ளும். இதுமாதிரி எல்லா மாவையும் பாதுஷாவாப் பண்ணிக்கோங்க.  இப்போ பாதுஷா Base தயாராகிடுத்தா?ஒரு வாணலில ½ கப் ஜீனி, அது மூழ்கறமாதிரி தண்ணீர் விட்டு கெட்டியா பாகு பதத்துக்குக் கொண்டுவரவும். ஒரு கம்பிப்பாகுக்கும் கூடிய பதம்.  அப்புறம் அடுப்பை அணைத்துவிட்டு, ஏலக்காய் பொடி சேர்த்துக் கலக்கவும். தேவைனா துளி கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கலாம். (கொதிக்கற சமயம்). இந்த ஜீனிபாகு ரெடியாடுத்தா?  நான் இதில் எசென்ஸ் சேர்த்தேன்.இப்போ அடுப்பில் வாணலில தேவையான எண்ணெய் விட்டு, கொதித்தவுடன், பாதுஷாக்களைப் போட்டு பொரிக்கவேண்டும். ரெண்டு பக்கமும் நல்லா ஆகியிருக்கணும். இதை ஜீனிப் பாகுல போட்டு நன்றாகப் பிரட்டியபின் தனியே எடுத்து அடுக்கவும். இப்படியே எல்லா பாதுஷாக்களையும் பொரித்து, ஜீனிப் பாகில் பிரட்டி அடுக்கிவைக்கவும்.
பார்க்கவே yummy யா இருக்கா? சாப்பிடும்போதும் எனக்கு நல்லா இருந்தது. கடைல பண்ணற மாதிரி பாதுஷா வேணும்னா, அதுக்கு சமையல் சோடாவும் கொஞ்சம் அதிகமா வெண்ணெயும் சேர்க்கணும். அப்புறம், தேங்காய் துருவல் கலர் கலராக தயார் பண்ணி, இல்லை ரொம்ப கிராண்டா வேணும்னா குங்குமப் பூவை, ஜீரால போட்டு எடுத்த பாதுஷா மேல ஒட்டவேண்டியதுதான். நான் கடைல விற்பனை பண்ணப்போறதில்லை என்பதால், எளிமையாகப் பண்ணிவிட்டேன்.என் ஹஸ்பண்ட், 5 ஸ்பூன் மைதாமாவு வச்சுப் பண்ணுங்க, இல்லைனா இத்தனையையும் சாப்பிட்டா உடம்புக்கு ஆகுமா என்று கேட்டாள். எந்த ஹஸ்பண்டுக்குத்தான் மனைவி சொல்லே மந்திரம்னு கேட்கிற வழக்கம் இருக்கு? எல்லாத்தையும் பண்ணி, ரெண்டு நாள்ல சாப்பிட்டுமுடித்துட்டேன். நீங்களும் செய்துபாருங்க.  [ எதைச்செய்து பார்க்கணும்?  நிறையச் செய்து இரண்டே நாளில் சாப்பிடும் வித்தையையா?!! ]

அன்புடன்,

நெல்லைத்தமிழன்.


[ எனக்கு பாதுஷா ரொம்பப் பிடிக்கும்.  ஆனால் எஸென்ஸ் சேர்த்தால் பிடிக்காது!  படத்தைப் பார்த்தால் பாதுஷா போலல்லாமல் அதிரசம் போலிருப்பது எனக்கு மட்டும்தானா?!! ]


62 கருத்துகள்:

 1. பாதுஷா - அதி ரசம்... அதிரசம்.
  சற்று தூரத்தில் இருந்து பார்க்கும்போது அதுவே தான்..

  இனிய காலைப் பொழுது இனிப்புடன் மலர்கின்றது...

  பதிலளிநீக்கு
 2. வாங்க துரை செல்வராஜூ ஸார்.. பதிவு வெளியிட்டு,தமிழ்மணத்தில் வெளியிட்டு ப்ளஸ்ஸில், முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். தினமும் காலை பதிவுகளை வெளியிட்டு தமிழ்மணம் இணைக்கும்போதே எனக்குள் துரை செல்வராஜூ ஸார் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறஉணர்வு வருகிறது! நன்றி.

  பதிலளிநீக்கு
 3. இங்கே 3.30 ஆகும்போது எனக்குள் பரவசம் ஆகிவிடும்.. நீங்கள் குறிப்பாக இந்த நேரத்தில் வெளியிடுகின்றீர்கள் என்பதால் குழப்பமில்லை..

  தமிழுக்கு முதல் ஆரத்தி செய்வதில் மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு


 4. இதை பாதுஷா என்று சொல்லுறதா அல்லது அதிரசம் என்று சொல்லுவது ஒரே குழப்பம் அதனால இதை பாதுரஷம் என்று சொல்லுவோமா.. இந்த ஸ்வீட் அதிரசம போல இருந்தாலும் பாதுஷாவின் டேஸ்ட் நிச்சயம் இருக்கும் காரணம் பாதுஷன் இன்கிரிடியன்ஸ் இருப்பதால்

  பதிலளிநீக்கு
 5. எல்லாம் சரி பார்ப்பதற்கு அதிரசம் போலவே இருக்கிறதே...

  பதிலளிநீக்கு
 6. மைதா ஈஸி அதிரசம் அருமை! ட்ரை செய்து பார்க்கிறேன்....

  பதிலளிநீக்கு
 7. புது விதமான பாதுஷா....எனக்கு பாதுஷா ரொம்ப பிடிக்கும் . ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் எந்த பிளேவரும் இல்லாமல்....பார்க்க பாதுஷா போல் இல்லாமல் ஒரு ஸ்வீட் பெயர் மறந்து போச்சு....ஆனால் முக்கோண ஷேப்பில் சமோசா போல் மடிக்கப்பட்டு நுனி சேர கிராம்பு வைத்து குத்தி...மெத்தெடு இதுதான்...நான் ஜீரா பிஸ்கட் என்பேன்....

  நான் பஹதூர்ஷா செய்ய...ஹாஹாஹா.. நான் அப்படிப் சொல்வது வழக்கம்..ஒரே.ஒரு சிட்டிகை சோடா வெண்ணெய் சேர்த்து நன்றாக நுரைக்க பீட் செய்து அப்புறம் மைதா கலந்து...உருட்டி...லேசா விரலால் அழுத்தி..என்று..

  உங்கள் மெத்தட் ஜீறா பிஸ்கட்...என்பேன்...செய்தது உண்டு அதாவது பாதுர்ஷா சரியா வராதப்ப.சோடா எதுவும் சேர்க்காமல் வெண்ணெய் குறைவாகப் போட்டு முயற்சி செய்தப்ப.ஹிஹிஹி..அப்படி ஒரு புது ஸ்வீட்ன்னு.. ஜீரா பிஸ்கட்ன்னு பேர் வைத்து என் பையன சமாளிச்சேன்....இப்ப உங்க மெத்தட் சிம்பிளா நல்லாருக்கு...அதுவும் கட்டிங் சூப்பர்...ஸோ குறித்துக் கொண்டுள்ளேன்...செய்தும் பார்க்கிறேன்...இன்றே....கொஞ்சமாக...எல்லா பொருளும் இருக்கு...உறவுகளுக்கு.கொடுப்பதற்கும் உதவும்...
  படங்கள் செம நெல்லை.....செஞ்சுட்டு இன்று இரவுக்குள் இங்கு கமெண்ட் போடறேன்

  கீதா


  பதிலளிநீக்கு
 8. ரொம்ப எளிமையா தான் இருக்கு...
  பார்ப்போம் நேரம் கிடைத்தால் இந்த தீபாவளிக்கே செய்து விடலாம்...

  பதிலளிநீக்கு
 9. எப்படியானாலும் வயதுக்குள் போயிடுச்சி..... பாதுஷாதான் செய்முறை ஆனால் பார்ப்பதற்கு அதிரசம் புதுமை தானே..... ஒன்று ஒன்றாய் செய்வதை வீட இந்த டெக்னிக் நல்ல இருக்கு மொத்தமா தட்டிட்டு மூடி வைத்து ஒரே அளவாய் எல்லாத்தையும் எடுப்பது.

  பதிலளிநீக்கு
 10. பாதுஷா எனக்கு ரொம்ப [இடிக்கும். ரெண்டு முறை செய்து சரியா வரல. உங்களை நம்பி செய்ய்லாமா?!

  பதிலளிநீக்கு
 11. வெளியிட்டமைக்கு நன்றி எங்கள் பிளாக், ஶ்ரீராம். காலை நான் எழுந்தபோது இடுகையைக் காணோம். அப்புறம் ஹஸ்பண்ட்தான் சொன்னாள் தி.பதிவு வந்திருப்பதை. இப்பவே அதிரசம் டாபிக் வந்துடுத்து, பிறகு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. ஜீரா பூத்து வெண்மையாக வருவதற்குள் நெல்லைத்தமிழன் போட்டோ எடுத்து விட்டார் என்று நினைக்கிறேன். வெள்ளையாக தெரிந்து இருந்தால் பாதுஷா என்று சொல்லி இருப்பீர்கள்.எளிமையாக இருக்கிறது.
  நான் இரண்டு மூன்று முறை செய்து இருக்கிறேன்.
  மிதமான தீயில் வேக விட வேண்டும். அப்போது தான் உள்புறம் வேகும்.
  மாவை உருண்டையாக உருட்டி கட்டைவிரலால் கொஞ்சம் அழுத்தி எண்ணெயில் போட்டால் நல்லது.

  பதிலளிநீக்கு
 13. என் மகனுக்கு மிகவும் பிடிக்கும் பாதூஷா செய்து கொடுக்க வேண்டும் நாளை.
  நெல்லை தமிழனுக்கும், ஸ்ரீராமுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 15. எனக்கு பாதுஷா அவ்வளவாகப் பிடிக்காது ஐந்துஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடப் போகும் நெல்லைத் தமிழனுக்கு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 16. நெல்லை உங்கள் ரெசிப்பி செஞ்சாச்சு!!!! கட் பண்ணுவது மிகவும் எளிதாக இருந்தது....வெண்ணை போட்டுப் பிசைந்தேன். நான் செய்யும் ஜீரா பிஸ்கட்டில் மாவில் சர்க்கரை இவ்வளவு போட மாட்டேன். ஜஸ்ட் சும்மா உப்பும் ஒரு பிஞ்ச் சேர்த்துக் கொள்வேன். இன்று உங்கள் அளவு சர்க்கரை சேர்த்து மாவில் பிசைந்தேன்.....முதலில் வெண்ணையையும் சர்க்கரையையும் நன்றாகக் கலந்து தேய்த்துத் தேய்த்து செய்து விட்டு அப்புறம் மாவு கலந்து செய்தேன்....சூப்பர்!!! மிக்க நன்றி நெல்லை....நன்றாக வந்துள்ளது...

  கீதா

  பதிலளிநீக்கு
 17. தீபாவளி இனிப்பா!நான் விரும்பும் ஒன்று!

  பதிலளிநீக்கு
 18. பாதுஷாவா இது? போகட்டும் விடுங்க! நாம நல்ல பாதுஷாவாப் பண்ணிச் சாப்பிடலாம். சோடாவெல்லாம் சேர்க்காமலேயே! நெல்லைக்கு அவசரம்!

  பதிலளிநீக்கு
 19. ஆஆவ் !!! வாவ் பாதுஷா இவ்ளோ ஈஸியா ..நல்லா இருக்கு ..
  உங்க ஹஸ்பண்ட் சொன்னமாதிரி 5 ஸ்பூனில் செஞ்சி பார்க்கறேன்

  பதிலளிநீக்கு
 20. எனக்கு அந்த கொய்யா கனிகளும் வேணும் :) 4 பாதுஷாவும் வேணும்

  பதிலளிநீக்கு
 21. இனிப்பால் இனிக்க வைத்தமைக்கு பாராட்டுகள் த.ம.வுடன்

  பதிலளிநீக்கு
 22. எங்கள் வீட்டில் மற்றவர்கள் பாதூஷாவெல்லாம் ஒரு ஸ்வீட்டா? என்றாலும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை செய்திருக்கிறேன், நன்றாக வந்தது. ஆனால் என் அம்மா பாதூஷாவை இரண்டு விதமான பாகுகளில் முழுக வைக்க வேண்டும் என்றார். முதல் பாகு நீங்கள் செய்திருப்பது, இரண்டாவது பாகு நன்கு பூக்க கூடியது. Anyway good attempt.!

  இந்த முறை எங்களுக்கு தீபாவளி கிடையாது. மகன்,மகள் இருவரும் அருகில் இல்லை, கணவருக்கோ சர்க்கரை..:((( இருந்தாலும் எதுவும் செய்யாமல் இருக்க மனம் வரவில்லை, சர்க்கரை குறைவாக போட்டால் போதும் என்னும் பாதூஷாவை பண்ணி விடலாம். Thank you. Happy Deepavali!

  பதிலளிநீக்கு
 23. பாதுஷா புடிக்கும். பாதுஷா என்றால் அதற்கென்று ஒரு நிறமுண்டு. பனிமூடிய மலைச்சிகரம்போல் சர்க்கரை பூத்த பாதுஷா எங்கே? எங்கே?

  பதிலளிநீக்கு
 24. ஒரு காலத்தில் எனக்கு பாதுஷான்னா ரொம்ப பிடிக்கும்! இப்போதைய பாதுஷாக்கள் பிடிப்பதில்லை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 25. இனிப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது பாதுஷா!! பிய்த்து எடுத்தால் பரல் பரலா இருக்கணும்.. போன வருடத்துக்கு முந்தைய தீபாவளிக்கு பாதுஷா தான் செய்தேன்.. முதலில் ஒரு சின்ன கப் மாவு போட்டதில் 7, அப்புறம் இன்னொரு கப்பில் 8...:)

  பதிலளிநீக்கு
 26. குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடப்போகும் ஸந்தோஷத்தில் எல்லோருக்கும் சுலபமுறை பாதுஷா.
  நானும் இந்தியாவின் தலைநகரிலிருந்து பாதுஷாவை ரஸித்து வாழ்த்துகள் சொல்லுகிறேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
 27. குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடப் போகும் உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துகளும்,ஆசிகளும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 28. வாங்க துரை செல்வராஜு சார்... நீங்கதான் 'அதிரசம்' என்று ஆரம்பித்துவைத்தீர்களா? வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 29. வருக அவர்கள் உண்மைகள் துரை. நிறம் சிவந்திருப்பதால் பாதுஷாவை அதிரசம்னு சொல்றீங்களே. அதிரசத்தில் கிட்டத்தட்ட மாவு எண்ணெயோடு பொரியும். பாதுஷால அப்படி இல்லை. இந்தத் தடவை போட்டோ நிறத்தை மாற்றிவிட்டதா? கருத்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 30. வருகைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.

  பதிலளிநீக்கு
 31. கில்லர்ஜி கருத்துக்கு நன்றி. ஆமாம்... தீபாவளிக்கு அதிரசம் செய்வார்களா?

  பதிலளிநீக்கு
 32. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் சார்... கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 33. நன்றி மிடில்கிளாஸ் மாதவி. ரொம்பவே சுலபம். ஆனால் நிறைய துளைகள் போட மறக்கக்கூடாது. நல்லா வரும்.

  பதிலளிநீக்கு
 34. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். சோடா சேர்த்தால் எண்ணெய் குடிக்கும் என்பதால் அதனைச் சேர்ப்பதில்லை. நிறைய வெண்ணெயும் சேர்க்கலாம், ஆனால் நான் சேர்க்கவில்லை. நீங்கள் இன்றே செய்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 35. நன்றி அனுராதா ப்ரேம்குமார். சுலபம். செய்துவிடுங்கள்.

  மீள்வருகைக்கு நன்றி மிடில் கிளாஸ் மாதவி

  பதிலளிநீக்கு
 36. நன்றி ராஜி.. நீங்கள் போட்டிருந்த் குழக்கட்டைப் படங்கள் ரொம்ப அட்டஹாசமா இருந்தது. நம்பி பாதுஷாவைச் செய்துபாருங்கள். நம்பினோர் கெடுவதில்லை... நான்கு மறை தீர்ப்பு.

  பதிலளிநீக்கு
 37. வருகைக்கு நன்றி கோமதி அரசும் மேடம். ஒவ்வொன்றாகச் செய்வது மிகவும் கடினம் (என்னைப் போன்றவர்களுக்கு). மூடியை வைத்து வேகமாக ரெடி பண்ணுவது சுலபம். நான் ஜீரா பூக்கும்வரை காத்திருக்கவில்லை. (போட்டோ எடுப்பதற்கு). உங்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 38. நன்றி ஜி.எம்.பி சார். அட... இதுவும் உங்களுக்குப் பிடிக்காதா? இனி நேரடியாக உங்கள் துணைவியாரிடம் கேட்டு உங்களுக்குப் பிடித்தமாதிரி ஒன்றைச் செய்து எங்கள் பிளாக்குக்குக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 39. மீள் வருகைக்கு நன்றி கீதா ரங்கன். பார்த்தால் நிறைய இனிப்புகளைச் செய்வதைப்போல் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 40. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... நான் செய்ததைவிட எங்க அம்மா இதே முறையில் அருமையாகச் செய்வார்கள். சரி... உங்கள் ரெசிப்பியையும் படங்களோட போடுங்க.

  பதிலளிநீக்கு
 41. வருகைக்கு நன்றி ஏஞ்சலின். நான் துபாய் சென்றிருந்தபோது இந்த 'தாய்வான் கொய்யாக்கள்' விற்பனை செய்வதைப் பார்த்து நிறைய வாங்கிவந்தேன். பெரிய சைஸ், ஆனால் இனிப்பு அவ்வளவு இல்லை. (தாய்வானிலும் சாப்பிட்டிருக்கிறேன். அங்க உள்ள திராட்சையும், லிச்சியும் எங்கயுமே நான் சாப்பிட்டதில்லை. பன்னீர் திராட்சை மணம் ஆனால் பெரிய சைஸ். லிச்சி நிறைய சதைப்பற்று). உங்களுக்காகவே ஒரு தடவை பாயசம் செய்முறை எழுதணும்னு நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 42. வாழ்த்துகள். செய்து ருசிக்கப் போகும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் .
  பானுமதி சொல்லி இருப்பது போல் , எனக்கு சர்க்கரை ஆகாது. தீபாவளியும் இல்லை.
  ஆனால் பாதுஷா ரொம்பப் பிடிக்கும். அருமையான செய்முறை நெல்லைத்தமிழன். இரண்டு பாகு வைத்து அம்மா செய்வார். குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் உங்களுக்கு அருமை வாழ்த்துகள் மா.

  பதிலளிநீக்கு
 43. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். நாங்கள் இரண்டு பாகு செய்வதில்லை. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து வெண்மை பூத்தபின்பு இன்னுமொரு படம் எடுத்துப்போட்டிருக்கலாம். இருந்தாலும் பெண்கள் செய்வதுபோல் வராதில்லையா?

  சர்க்கரை நோய்க்கு இனிப்பு சாப்பிடக்கூடாது என்பது ஓரளவு மித் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. கொஞ்சம் சாப்பிடலாம். உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 44. வாங்க ஏகாந்தன். பனிமூடிய பாதுஷா-அருமையான விவரிப்பு. நன்றி.

  பதிலளிநீக்கு
 45. நன்றி தளிர் சுரேஷ். ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கிறேன். நலமா?

  பதிலளிநீக்கு
 46. வருக ஆதி வெங்கட். பரல் பரலா வர, கொஞ்சம் அதிகமா வெண்ணெய் சேர்த்தால் வரும். வெங்கட் நலமா? இடுகை போட்டு ரொம்ப நாளாகிவிட்டதே. கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 47. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காமாட்சி அம்மா. உங்கள் ஆசிகளுக்கு நன்றி.

  தலை நகரில் இருக்கிறீர்களா? வருக வருக... தீபாவளிக்கு நாம் இருவரும் ஒரே தேசத்தில் இருக்கிறோம். நலமே நாடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 48. வாங்க வல்லிசிம்ஹன் அம்மா.... இதை இன்னொருமுறை செய்வேன். சுலபமானது. ஆனால், மைதா என்று என் ஹஸ்பண்ட் பயமுறுத்துகிறார். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 49. அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். அடுத்தவருக்கு தலைவலி வராமல் குறைந்த அளவு வெடிகளுடன் சிறப்பான தீபாவளி அமையட்டும்.

  எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் (சொல்லியாச்சு.. அட்ரஸ் கேட்டீங்கனா, நீங்க ஸ்வீட்ஸ் அனுப்ப வசதியாக அட்ரசைக் கொடுத்துவிடுவேன்.)

  பதிலளிநீக்கு
 50. ஸ்ரீராம்.... உங்கள் கமென்ட்ஸ்ஸைப் பார்த்தேன். எனக்கு ஸ்வீட்ஸ் பண்ணியாச்சுன்னா, அதுவும் நல்லா வந்திருக்கும் என்று தோணிடுத்துன்னா, எனக்கு ரொம்ப நேரம் காத்திருக்க முடியாது. அதனால் இரண்டு நாட்களில் காலி. இதுனாலத்தான் என் ஹஸ்பண்ட் 5 ஸ்பூன் மாவு போதும்னு சொன்னா.

  இந்தத் தீபாவளிக்கு கல்லிடைக்குறிச்சிலேர்ந்து அதிரசம், மனோகரம் உள்பட சில பல பக்ஷணங்களை கொரியரில் வரவழைத்தேன். அவங்க பண்ணற அதிரசம் அப்படியே பாரம்பரிய அதிரசம்போல் இருக்கும்.

  இந்தத் தடவை, கடைகளில் அதிரசம் மாவு (வெல்லம் சேர்த்து மாவு பதத்தில், அதை ஓபன் பண்ணி நேரடியாக எண்ணெயில் அதிரசம் பண்ணவேண்டியதுதான்), முருக்கு மாவு-இது ஈரம் இல்லாதது, விற்பனை செய்வதைப் பார்த்தேன். எனக்கு ஒரு பாக்கெட் இரண்டிலும் வாங்கிக்கொண்டுள்ளேன்.

  எவ்வளவு ஸ்வீட்ஸ் கடைகள்-தெருவுக்கு நாலு, எவ்வளவு இனிப்பு வகைகள், ஒவ்வொருவரும் எவ்வளவு அளவு வாங்குகிறார்கள் சென்னையில் - ரொம்பவும் மலைப்பாக இருக்கிறது. எல்லோரும் டாக்டர்கள், மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 51. எவ்வளவு ஸ்வீட்ஸ் கடைகள்-தெருவுக்கு நாலு, எவ்வளவு இனிப்பு வகைகள், ஒவ்வொருவரும் எவ்வளவு அளவு வாங்குகிறார்கள் சென்னையில் - ரொம்பவும் மலைப்பாக இருக்கிறது. எல்லோரும் டாக்டர்கள், மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.// உண்மைதான் நெல்லை. நானும் அசந்து போயிருக்கிறேன்.

  நான் ஸ்வீட் செய்தது மெயினா மகன் வேலை செய்த க்ளினிக்கிற்கு அங்கு வேலை செய்யும் பையன்கள் நேபாலில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கும், மற்ற டாக்டர்களுக்கும் கொடுக்க....ஒக்கோரை மட்டும் வீட்டிற்கு....

  கீதா

  பதிலளிநீக்கு
 52. இங்கு பஹதுர்ஷா ரசிகர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் போல!!!

  ஏகாந்தன் சகோ உங்கள் வர்ணனை செம...ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 53. @ நெல்லைத்தமிழன்

  //..ஒவ்வொருவரும் எவ்வளவு அளவு வாங்குகிறார்கள் சென்னையில் - ரொம்பவும் மலைப்பாக இருக்கிறது..//

  இந்த டாக்டர்களையும் நியூட்ரிஷனிஸ்ட்டுகளையும் ஒரேயடியாக நம்பி பித்துப்பிடித்துத் திரிவதைவிட பண்டிகை நாட்களில் பாரம்பர்ய உணவு, ஸ்வீட்டுகளை வாங்கி சாப்பிடட்டும். யாருக்கு சாப்பிடமுடிகிறதோ அவர்கள் வாங்கி உள்ளே தள்ளுகிறார்கள். கூந்தல் உள்ளவள்தானே அள்ளி முடிய முடியும்!

  சில நாடுகளைப் பார்க்கும்போது நம் நாடு தேவலை. கொன்று திரிவதை விட, தின்று திரிவது நல்லது..

  பதிலளிநீக்கு
 54. @ கீதா:

  //..இங்கு பஹதுர்ஷா ரசிகர்கள் நிறையபேர்..//

  நீங்கள் பஹதுர்ஷா எனக் குறிப்பிட்டதும் மனம் பாதுஷாவிலிருந்து டெல்லியிலிருக்கும் பஹதுர் ஷா ஜஃபர் மார்க் (Bahadur Shah Zafar Marg) - சாலைக்குத் தவ்வி விட்டது. பஹதுர் ஷா ஜஃபர் மொகலாயப் பேரரசின் கடைசி மன்னன்! டெல்லியில் சாலைகள் இருமருங்கிலும் உயர்ந்த மரங்களோடு பெரிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மொகலாய அரசர்கள், சுதந்திரப்போராட்ட வீரர்கள், மதிப்பிற்குரிய அரசியல் தலைவர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. நமது சரித்திரம், கலாச்சாரம் சொல்பவை.

  பெங்களூரில் உட்கார்ந்துகொண்டு இப்படி டெல்லியை சிந்திப்பது வழக்கம்!

  பதிலளிநீக்கு
 55. //டெல்லியில் சாலைகள் இருமருங்கிலும் உயர்ந்த மரங்களோடு பெரிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல்// கடந்த ஐந்து வருடங்களுக்குள்ளாக தில்லியைப் பார்த்திருக்கீங்களா? :)

  பதிலளிநீக்கு
 56. @நெல்லைத்தமிழன் :) நான் தினமும் ஒரு கொய்யாக்காய் செங்காயாக சாப்பிடறேன் இங்கே ரெண்டு மூணு வெரைட்டி கிடைக்குது எனக்கு பழத்தை விட செங்காய் வெட்டி உப்பு மிளகாய்த்தூள் லேசா பிரட்டி சாப்பிட பிடிக்கும் :)
  உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!