சனி, 7 அக்டோபர், 2017

மொஹரம் ஊர்வலம் வேண்டாம். ...
1)  அண்ணாதுரை எனும் ஆட்டோ டிரைவர்...  

2)  "தாய் மடி" அமைப்பின் அற்புதச் சேவை.
3)  சூடான பாலும், வாழைப்பழமும்தான் லஞ்சம்!  டேராடூன் குடிசைப்பகுதியில் ஒருவேளைச் சோற்றுக்குக் கூட கஷ்டப்படும் குடும்பங்களில் உள்ள குந்தைகளைக் கூட்டி கல்வி புகட்டும் HOPE.  காரணம் ஷைலா பிரிஜ்நாத்.


4)  துப்புரவு பணி செய்து, பட்டப்படிப்பு படித்து வரும் ரேகா.  "10 ஆண்டு இடைவெளிக்கு பின் படித்தாலும், ஆர்வம் அப்படியே தான் இருந்தது. என் பிள்ளைகளும், 'அம்மா படிச்சிட்டு வரட்டும்; அப்புறமா சோறு கேட்போம்' என, எனக்காக காத்திருப்பர்.

அடுத்ததாக, தொலைதுாரக் கல்வியில், பட்டம் படித்து வருகிறேன்...."


5)  காரியாபட்டி, குண்டாற்றில் வீணாக சென்ற தண்ணீரை தடுத்து கண்மாய்க்கு கொண்டு சென்று இளைஞர்கள் சபாஷ் பெற்றுள்ளனர். இருபது ஆண்டுகளுக்கு பின் கண்மாய்க்கு நீர் வரத்தை கண்ட இளைஞர்களின் முகத்தில் புன்சிரிப்பு ஏற்பட்டது. விவசாயிகள் சபாஷ் என பாராட்டினர்.


6)  "மொஹரம் ஊர்வலம் வேண்டாம்.  அந்தப் பணத்தில் எங்கள் அருகாமை வீட்டுக்கார இந்து நண்பரின் உயிரைக் காப்பாற்றுவோம்.."  மேற்கு வங்காளம் காரக்பூர் முஸ்லீம்களின் பெருஞ்செயல்.

14 கருத்துகள்:

 1. இவர்களைப் போன்ற நல்ல மனங்களால் தான் மண் பயனுறுகின்றது.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. துப்புரவுத் தொழிலாளி படிச்சது குறித்த செய்தியை நானும் படித்தேன். மற்றவை புதிது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. மேற்கு வங்காளம் சிலிர்க்க வைத்தது மனிதம் இன்னும் வாழ்கிறது.

  பதிலளிநீக்கு
 4. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்
  தமம+1

  பதிலளிநீக்கு
 5. அனைத்தையும் ரசித்தேன். பாராட்டப்படவேண்டியவர்கள். மொகரம் ஊர்வலம் வேண்டாம் என்ற செய்தியினை நாளிதழில் படித்தேன்.மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்பதை உணரமுடிந்தது.

  பதிலளிநீக்கு
 6. 'நல்லனவற்றைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். செய்தவர்களுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. tha.ma.6 - வழக்கம்போல உங்களது நல்லதொரு தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 8. அனைத்துச் செய்திகளும் வழக்கம் போல் அருமை! ஷைலா ப்ரிஜினாத்திற்குப் பாராட்டுகள். ஆட்டோ அண்ணா ஹைடெக்காக இருக்கிறார். வியக்க வைக்கின்றனர்.

  கீதா: ஆட்டோ அண்ணா பற்றி இங்கு முன்பே வந்திருக்கிறது! சென்ற வருடம் கூட அவர் ஸ்வைப்பிங்க் மெஷின் அறிமுகப்படுத்தியது பற்றி பாஸிட்டிவில் வந்த நினைவு. அது போல மாத தினசரிகள்...வைத்திருப்பது பற்றியும்...

  ஆட்டோ அண்ணா சவாரி இருப்பது எங்கள் ஏரியா...சமீபத்தில் அவ்வளவாகக் காணவில்லையே என்று நினைத்தேன்..இப்போது தெரிந்து கொண்டேன் அவர் பிஸி என்று...பாராட்டுகள், வாழ்த்துகள் அவருக்கு! அது போல ரேகா பற்றியும் முன்பு இங்கு வந்த நினைவு! இல்லையோ?

  மொஹரம் ஊர்வலம் வேண்டாம் எனும் செய்தி சொல்லுவது ....மக்களிடையே மத நல்லிணக்கம் இருக்கிறது அரசியல்வியாதிகள்தான் அந்த நல்லிணக்கத்திற்கு விஷம் தூவுவது.. காரணம் என்று...

  பதிலளிநீக்கு
 9. குண்டாறு நீர் பொங்கி வருவதைப் பார்த்தால் நமக்கே சந்தோசமாய் இருக்கிறதே :)

  பதிலளிநீக்கு
 10. நல்ல மனங்கள் வாழ்க நாடு போற்ற வாழ்க
  மிகவும் அருமையான பகிர்வு மிக நன்றி

  பதிலளிநீக்கு
 11. பல்வகை சுவைமிகு செய்திகள் அருமை!த ம10

  பதிலளிநீக்கு
 12. பாஸிட்டிவ் செய்திகளைத் தொகுத்தளிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள் !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!