வியாழன், 12 அக்டோபர், 2017

பச்ச மொளகா பாவக்கா படுத்தி எடுக்கறா பாருக்கா...

     "எழுத்தாளர் அல்லது கவிஞர் தனது படைப்பை எழுத ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கும்போது மனைவி அழைத்து Gas  தீர்ந்து விட்டது என்பார்.  அதை ஒட்டி நான் எழுத முயற்சித்த கவிதை ஒன்று கீழே..."  என்று சொல்லி   சென்ற வாரம் வெளியிட மறந்த என் "கவிதை"! கவிதையும் காய்கறியும் 


மேகச்சாலையில் 
மோகப்பயணம் 

நட்சத்திரப் பூமழை 

வான் மாளிகை வாசலில் 
வரவேற்ற நிலவு 
என் காதலிக்கு 
ஒரு மாற்று குறைவுதான்..காதலிக்கு என்பதற்கு பதிலாக 
கண்மணிக்கு என்று போடலாமா 
என 

அடுத்த வரிக்காக 
அகண்ட வானில் 
அல்லாடிக் கொண்டிருந்தேன் 
உயர்ந்த கவிதை என்றால் 
உயரமான பொருள் 
பற்றி எழுதுவது என்கிற நினைப்போடு 

இறக்கி இழுத்தது 
இல்லாளின் இனிய குரல் 

"காய் வாங்கி வந்த லட்சணம் 
பச்ச மொளகாயும் இல்ல 
கொத்துமல்லியும் இல்ல 
எப்படி சமைக்க?
படக்குனு போயி வாங்கி வாங்க"

இறங்கி நடக்கிறேன் 
கூடையோடு..

பாகற்காயையும் 
பச்சை மொளகாயையும் வைத்து 
எழுதவேண்டும் 
ஒரு கவிதை 
இணைக்க வேண்டும் 
இல்லாளை அதோடு...===============================================================================


     சில கேள்விகள்.  வாரம் ஒவ்வொன்றாய்க் கேட்கலாமா என்று யோசித்து,  இல்லை, ஒரேயடியாய் கேட்டு விடுவோம் என தீர்மானித்து கேட்டு விட்டேன்.  எங்கோ பார்த்ததுதான்.  பதில் சொல்லும்போது எண்ணைக் குறிப்பிட்டு பதில் சொல்லலாம்...   வெளிப்படையாய்ச் சொல்ல முடியாத பெயர்களை "கிசுகிசு"பாணியில் கூடச் சொல்லலாம்..  (ஹி.. ஹி... ஹி... ஹி..)1)  யாரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்கள்?

2)  யாரைத் தவிர்க்க விரும்புகிறீர்கள்?

3)  யாரிடம் கோபப்பட விரும்புகிறீர்கள்?

4)  யாரைப் பார்த்து சிரிக்க விரும்புகிறீர்கள்?

5)  யாரை நீங்கள் பார்க்க(வே) விரும்பவில்லை?

6)  யாரிடம் நட்பு பாராட்ட விரும்புகிறீர்கள்?===================================================================ஊசிக்குறிப்பு  ( நன்றி  அ அ ) இன்றைய பதிவில் படம் எதுவும் காட்டவில்லை... மன்னிக்கவும்...  இணைக்கவில்லை.===============================================================


22 கருத்துகள்:

 1. ஓஹோ.. கவிதை அப்படிப் போகின்றதா!... அந்த ஆறுக்கும் அப்புறமாக வருகிறேன்..

  இளங்காலை இனியதாக இருக்கட்டும்..

  பதிலளிநீக்கு
 2. கவிதை சுவையாக இருந்தது.
  காய்கறி இருக்கே.

  பதிலளிநீக்கு
 3. கவிதை ஸூப்பர் ஜி

  1. என் மனைவியின் ஆன்மாவிடம் வாழும் காலத்தில் நாமிருவருமே விட்டுக் கொடுக்கவில்லையே...

  2. எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களை...

  3. இந்தியாவை நல்வழிபடுத்த அதிகாரமிருந்தும் காலத்தை கை விட்ட தலைவர்கள் மீது...

  4. என்னை கண்ணாடியில் பார்த்து காலம் கைகூட மறுக்கிறது...

  5. போலிச்சாமியார் என்று உலகறிந்தும் அவர்கள் காலில் விழும் அடிமுட்டாள்களை... (இரண்டாவது கேள்வி போலுள்ளதே)

  6. சிறிய வயதில் பெரிய செயல் செய்யும் மனிதரை ஜாதி, மதம், மொழி கடந்து பாராட்ட...

  மனிதநேயத்துடன்...
  கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 4. கவிதை அருமை! இப்போ உங்க கேள்விகள்.

  பதிலளிநீக்கு
 5. 1.அறிந்தும் அறியாமலும் பலரிடம் மரியாதைக்குறைவாகவோ, அல்லது மனம் புண்படும்படியோ பேசி இருந்தால் அவங்களிடம் எல்லாம் மன்னிப்புக் கேட்டுக்கறேன்.

  2.முதுகில் குத்துபவர்களை! நிறையப் பட்டாச்சு! ஆனாலும் திரும்பத் திரும்ப அவ்ங்க தான்! :(

  3. ஹிஹிஹி, கஷ்டமான கேள்வி! நான் ரங்க்ஸ் கிட்டேயும் ரங்க்ஸ் என் கிட்டேயும் தான் கோபம், காதல், பாசம், அன்பு, நேசம் எல்லாமும் வைச்சுக்கலாம். வேறே யார் கிட்டேயும் இந்தக் காலத்தில் எதிர்பார்க்க முடியாது. யார் கிட்டேயும் கோபப் பட முடியாது. கோபம் வந்தாலும் காட்டிக்க முடியாது!

  4.நல்ல நல்ல ஹாஸ்யத் திரைப்படங்களைப் பார்த்துச் சிரிக்கணும். மற்றபடி நெருங்கிய தோழர்கள், தோழிகளைப் பார்த்துச் சிரிக்கணும். கேலியாய் யாராவது சிரிப்பது எனக்குப் பிடிக்காது என்பதால் நான் அந்தத் தவறைச் செய்யமாட்டேன். :)

  5. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில,பல சந்திப்புகள் நிகழ்ந்தே தீரும்.

  6. எல்லோரிடமுமே நட்பாக இருப்பதே நன்மை தரும்! வீண் பகைமை ஏதுக்கு? கோபம் வந்தாலும் உடனே மனதைச் சமாதானம் செய்துக்கணும். அதற்குத் தான் முயற்சிகள் செய்து கொண்டிருக்கேன். முடியறதில்லை. சொல்வது சுலபம். செய்வது கடினம்.:(

  பதிலளிநீக்கு
 6. பச்சை மிளகாய் காரத்தால் சிக்கல் வந்துவிடக்கூடாது

  பதிலளிநீக்கு
 7. யாராவது ஸ்ரீராமைப் பிடிச்சுத் தாங்கோ நான் தேம்ஸ்ல தள்ளோணும்... :).. தன் மனதில் நினைச்சதைச் சொல்லி... அது கவித என முடிச்சிட்டார் கர்ர்ர்ர்ர்:).

  பதிலளிநீக்கு
 8. பதில்களை... வலையுலகிற்குள்.... எனக் கேட்டிருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்... இது பதில் சொல்லுவோர் எதிர்வீட்டு விமலா பின்வீட்டுக் கார்த்திகா என்றால் நமக்கென்ன புரியவா போகுது..:).

  1.)- தப்பெனில் உடனுக்குடன் கேட்டிடுவேன் அதனால மனதில் வச்சு மன்னிப்புக் கேட்குமளவுக்கு யாரும் நினைவிலில்லை.

  2.)-அகப்பட்டுவிட்டால் தப்பி ஓடவே விடாமல் தொடர்ச்சியாக அலட்டும் நபர்களை... அப்படிப்பட்ட போன் கோல்களை ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
 9. 3.):- கர்ர்ர்ர்ர்ர் கோபம் என்ன பொருளோ ? சொல்லி வச்சுக் கோபப்பட?.. உரிமை இருக்கும் இடத்தில் அப்பப்ப கோபமும் வந்து போகும்... ஆனா நான் யாரோடும் எப்பவும் கோபப்பட விரும்புவதில்லை.... என் மொழி நோ வெய்க்கம் நோ ரோஷம்:)... முடிந்தவரை தாழ்ந்துபோய் கோபம் வராமல் பார்ப்பேன்... நீதி நியாயம் கடமை நேர்மை எருமையை:) மீறும்போது கோபித்திருக்கிறேன்.... இருக்கட்டும் இருக்கட்டும் கை தட்டாதீங்கோ:) எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது:)

  பதிலளிநீக்கு
 10. 4.):- இதுக்குப் பதில் "கிசுகிசு" .... ( ஹா ஹா ஹா கிசு கிசு எண்டும் பதில் சொல்லலாம் என ஸ்ரீராம் சொல்லியிருக்கிறார்:))

  5.):- அனுஷ்காவையும் தமனாவையும்:).... ஹையோ இப்போ எதுக்கு ஸீராமும் நெல்லத் தமிழனும் இப்பூடி ஓடீனம்:)

  6.):- எங்கட ட்றம்ப் அங்கிளோடுதேன்:)... எங்கள் நட்பு நீடூழி வாழோணும் என வாழ்த்துங்கோ:).

  பதிலளிநீக்கு
 11. 1. அம்மா , அப்பாவிடம்.. இன்னும் நல்ல மகளாய் இருந்திருக்கலாம்ன்னு இப்ப தோணுது..

  2. தவிர்க்க விரும்புபவர்கள்ன்னு யாருமில்ல..

  3. மாமாக்கிட்டதான்... அந்தாளு மட்டும்தான் இளிச்சவாயன்.. எத்தனை அடிச்சாலும் தாங்குவார்.

  4. பார்க்க விரும்பாதவங்கன்னும் யாருமில்ல.

  5. இதும் மாமந்தான்

  பதிலளிநீக்கு
 12. //உயர்ந்த கவிதை என்றால்


  உயரமான //


  ஹாஹாஆ :) அனுஷ் தானே :)

  கவிதை நல்லாருக்கு :)

  பதிலளிநீக்கு
 13. 1,/1) யாரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்கள்?//

  நானெல்லாம் தவறு என தோணுனா உடனே மன்னிப்பு கேட்டிடுவேன் ..

  ஆனால் இப்பெல்லாம் உலகில் வாழும் எல்லா ஐந்தறிவு ஜீவராசிகளிடமும் மன்னிப்பு கேட்க விரும்பறேன் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வரும் ..மனித சமுதாயம் சார்பாக ..

  2, யாரைத் தவிர்க்க விரும்புகிறீர்கள்?

  சுயநல துரோகிகளை யாருக்கு துரோகம் இழைத்தாலும் அப்படிப்பட்ட வர்களை நினைவில் கூட ஏற்க மாட்டேன்

  3) யாரிடம் கோபப்பட விரும்புகிறீர்கள்?

  வேற யாருகிட்ட தைரியமா கோபப்படவும் திட்டவும் கெஞ்சவும் முடியும் எல்லாம் அந்த இறைவன் கிட்டேதான்

  4) யாரைப் பார்த்து சிரிக்க விரும்புகிறீர்கள்?

  இந்த சிரிப்பில் பல வகை இருக்கே :)
  அன்பு சிரிப்பு பூனைகள் பப்பி dogs rats birds வண்ணத்திப்பூச்சிஸ் செடி கொடி மரம் வாத்து கோழி அப்புறம் எல்லா animals யும் பார்த்து அன்பா சிரிப்பேன்
  ஏளன சிரிப்பு :) சுயநல மனுஷங்களைப்பார்த்து
  ஆறுதல் சிரிப்பு கஷ்டப்படறவங்களை பார்த்து வயசானவங்களை பார்த்து
  குறுஞ்சிரிப்பு :) என் கணவரைப்பார்த்து
  அரவணைக்கும் சிரிப்பு என் செல்ல மகளை பார்த்து

  5) யாரை நீங்கள் பார்க்க(வே) விரும்பவில்லை?

  பொறாமை கோபம் வெறுப்பு புறம் கூறும், தான் வாழ பிறரை அழிக்க நினைக்கும் மனிதர்களை பார்க்கவோ நினைக்கவோ விருப்பமில்லை

  6) யாரிடம் நட்பு பாராட்ட விரும்புகிறீர்கள்?

  எல்லோர்கிட்டையும் தான் :)


  பதிலளிநீக்கு
 14. படக்குனு போய் வாங்கி வந்தீங்களா -இல்லை
  காய்கறிக்காரியோடு சிரிச்சிக்கிட்டு நிக்கிறீங்களா
  நிலைமை அதுவோ இன்னும் மோசமோவெனில்
  இல்லாளின் குரல் இனிமையாக இருக்காது
  நில்லாது ஓடிவிடுங்கள் ஹோட்டலுக்கு சாப்பிட

  6 பதில்கள்:

  1) மன்னிப்பு கேட்கவிரும்புவது அம்மாவிடமும், மனைவியிடமும். இவர்களிடத்தில் சிலசமயங்களில், ஆத்திரமாகப் பேசிப் எனக்கு அவ்வப்போது புத்திமட்டு என நிரூபித்துள்ளேன். சில நொடிகளில் எனது வார்த்தைகளும், த்வனியும் சரியில்லை என்று நானே உணர்ந்திருக்கிறேன். மானசீகமாக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

  2) தவிர்க்க விரும்புவது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் திரிவாரை. (ஆனால் இதில் ஒரு ப்ரச்சினை: இப்படித் தவிர்த்தால் 99 %-க்கும் மேலே விலக நேரிடும். மீதி உள்ள சொற்ப ஆட்கள் நம்மைத் தவிர்க்காமலிருக்கவேண்டுமே..ஆண்டவா, இப்படியெல்லாமா சோதிப்பாய்?)

  3) கோபப்பட விரும்புவதா? கோபமல்லவா என்னை அடிக்கடி விரும்பிவிடுகிறது. வம்பில் மாட்டிவிட்டுவிடுகிறது..

  4) எதிரே வரும் குழந்தையைப் பார்த்து சிரிக்கவிரும்புகிறேன். பதிலுக்கு அது சிரிக்குமா என்று தெரியாது. ஒருவேளை குழந்தை சிரித்தால், அது நிச்சயம் போலியாக இருக்காது.

  5) எளியோரையும், பெண்களையும் திட்டமிட்டு அழித்து வாழ்வோரை நான் பார்க்க விரும்பவில்லை.

  6) என்னைவிட தலைச்சூடு அதிகமுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் –உடன் நட்பு பாராட்டவிரும்புவேன்.
  (இப்படி கொஞ்சம் ரிலாக்ஸ்டா உட்காருமய்யா! என்ன கோபம் உமக்கு? இந்த ட்ரம்ப் இருக்கே.. அது ஒரு சைக்கிள் பம்ப் ! இதுக்குப்போயா இத்தனை அலட்டிக்கணும். ஸ்காட்ச்சா, ரம்மா, ப்ராந்தியா, இல்லை ஃப்ரென்ச் ஒயினில் ஓட்டுவோமா பொழுதை ?)

  பதிலளிநீக்கு
 15. @anjelin

  4) யாரைப் பார்த்து சிரிக்க விரும்புகிறீர்கள்?

  இந்த சிரிப்பில் பல வகை இருக்கே :)
  அன்பு சிரிப்பு பூனைகள் பப்பி dogs rats birds வண்ணத்திப்பூச்சிஸ் செடி கொடி மரம் வாத்து கோழி அப்புறம் எல்லா animals யும் பார்த்து அன்பா சிரிப்பேன்
  ஏளன சிரிப்பு :) /////

  நான் சந்தேகப்பட்டது சரியாப்போச்ச்ச்ச்:)

  பதிலளிநீக்கு
 16. ////இந்த ட்ரம்ப் இருக்கே.. அது ஒரு சைக்கிள் பம்ப் ! ////

  விடுங்கோ விடுங்கோ என்னை விடுங்கோ ஆரும் தடுக்காதீங்கோ.... மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்:)... ட்றம்ப் அங்கிளுக்கு இப்பூடி ஒரு ஓதனையா?... இனிக் குண்டு விழப்போவது இந்தியாவிலதேன்ன்ன்:) ( ஊர் மறந்திட்டேன்.. நெல்லைத்தமிழன் சொன்னார் அப்பவும் மறந்திட்டேன்:)).. இதோ அமெரிக்கா வெள்ளை மாளிகையில் இருந்து குண்டு ஒன்று புறப்படுதூஊஉ:) ஹையோ மாறிக்கீறி ஸ்கொட்லாந்தில விழுத்திடாதீங்கோ பீஸ்ச்ச்ச்:)... நான் இன்னும் எவ்வளவோ அனுபவிக்க இருக்கூஊ... வேணுமெண்டால் இங்கிலாந்தில விழுத்துங்கோ ....
  நா ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)...

  பதிலளிநீக்கு
 17. எல்லோர் வீட்டிலும் நடப்பதை கவிதையாக்கி விட்டிர்கள் பாராட்டுகள் த.ம. உடன்

  பதிலளிநீக்கு
 18. கசந்தாலும் காரமானாலும்
  காத்திருக்க போவது
  இவள்தானே
  உயரமாய் நின்றதில்
  தெரியவில்லை
  கவிஞ்சனே உங்களுக்கு

  1-மன்னிப்பா யாரெல்லாம் கேட்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு கொடுத்து விடுவேன். 2யின்1 ans என்னத்த வாரிக்கிட்டு போபோறோம்
  2-இந்த மாதிரி மன்னிப்பு கேட்க வரவங்களை தான்
  3-இதுக்கும் இதேதான் பதில்
  4-சிரிப்பு என்னை பார்த்துதான் உள்ளுக்குள் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா விஷயங்களிலும் வித விதமாய்
  5-கடவுளை ....எல்லாருக்கும் கொடுக்க முடிந்த மன்னிப்பு அவனுக்கு கொடுக்க மனதில்லை இன்று
  6-நட்பு ஆராய்ந்து வரணுமா ஆராயமலும் இருக்கட்டுமா, பார்த்து வரணுமா பார்க்காமலும் இருக்கட்டுமா வச்சவங்க மேலதான் வரணுமா வைக்காதவங்க மேலயும் இருக்கணுமா... இதுக்கு மட்டும் பல குழப்பம் இருக்கு தடுமாறி போகிறேன் என்னிடம் நானே

  பதிலளிநீக்கு
 19. கவிதை புரியலை, மனதைச் செலுத்திப் படிக்காத்தால் இருக்கலாம். கேள்விகளின் நாயகனே... அதற்கு அப்புறம் வரேன்.

  பதிலளிநீக்கு
 20. உயர்ந்த கவிதை என்றால்
  உயரமான பொருள்
  பற்றி எழுதுவது என்கிற நினைப்போடு//


  கற்பனையில் உயரத்தில் பறந்தவரை கீழே டமால் என்று இறக்கி விட்டாரே மனைவி
  இதுதான் நிஜம்.

  பாகற்காயையும்
  பச்சை மொளகாயையும் வைத்து
  எழுதவேண்டும்
  ஒரு கவிதை
  இணைக்க வேண்டும்
  இல்லாளை அதோடு...//

  காதலி என்றால் சிரிப்பு, இல்லாள் என்றால் கசப்பும், காரமுமா?

  கேள்விகள் அருமை.
  பதில் கீதா சாம்பசிவம் சொன்னது போல் தான்.
  குழந்தைகளின் சிரிப்பு பிடிக்கும்.
  கோபத்தை உரிமையுடைவர் மேல் மட்டும் தான் காட்ட முடியும்.கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடம் மட்டும் தான்.


  பதிலளிநீக்கு
 21. @ அப்பாவி athira ://விடுங்கோ..விடுங்கோ..மீ தேம்ஸுக்கு..//

  ட்ரம்ப் அன்க்ளுக்காகத் தேம்ஸுக்கு ஓடும் முதல் நபர் நீங்கதானோ.. ட்ரம்ப்பே ரொம்ப சந்தோஷப்படுவாரில்லோ !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!