வியாழன், 28 மார்ச், 2019

அவர்கள் உங்களுக்குள்தான் இருக்கிறார்கள்...


பூமராங் 

முத்துக்குமார் அலுவலகத்துக்குச் செல்ல வெளியே வந்தபோது மணி காலை ஆறரைதான்.

இன்னும் வெளிச்சம் சரியாக வராத வானத்தில் திடீரென ஒரு ஒளிவெள்ளம்.   தங்க நிறத்தில் தொடங்கிய ஒளி, வெண்மை நிறமாக மாறி நெருங்கி வர, முத்து ஒரு கவர்ச்சியினால் ஆளப்பட்டு அதைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

நெருங்கி வந்த ஒளி குறுகி அதிவிரைவாக அவனை நெருங்கி அவன் இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் நொடியில் வெட்டி விட்டு மறைந்தது.

இப்படித் தொடங்கும் கதையை எப்படி முடிக்கலாம்?  பெரும்பாலும் 

''விழித்தெழுந்த முத்து வியர்த்திருந்தான்.  பீதியுடன் தனது கைகால்களைத் தொட்டுப்பார்த்து இருப்பதை உறுதி செய்து கொண்டான்'' என்றுதான் முடிக்கலாம்.

அல்லது,

எழுந்து 'ஃபிரிஜ்'ஜைத் திறந்தவன் ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு வந்தான்.  மெல்லக் குடித்தான்.  கண்ட கனவு மனதிலோடியது.  என்ன பயங்கரமான கனவு...  இப்படியெல்லாம் நடக்குமா?  நல்லவேளை விழித்துக்கொண்டோம் என்று நினைத்துக் கொண்டே மணியைப் பார்த்தான்.  காலை ஐந்தரை மணி.

இன்னும் வெளிச்சம் சரியாக வராத வானத்தில் திடீரென ஒரு ஒளிவெள்ளம்.  தங்க நிறத்தில் தொடங்கிய ஒளி, வெண்மை நிறமாக மாறி நெருங்கி வர, முத்து ஒரு கவர்ச்சியினால் ஆளப்பட்டு அதைப் பார்த்துக்கொண்டே இருந்தான்......

இப்படி புதிராக முடிக்கலாம்!  நம்ப முடியாத சம்பவங்களை எப்படிதான் முடிப்பது!  கதை சொல்பவரின் திறமையினால் நடக்க சாத்தியமில்லாத ஒன்றும் கூட நடக்குமோ என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கும், அல்லது அதைப்பற்றியே நினைக்க வைக்காமல், எழுத்தின் நடையில் மனம் சென்றுவிடும்!

எல்லாம் எழுதுபவர்கள் திறமை.  உதாரணம் சுஜாதா.



கதைகளில் எவர்க்ரீன் சப்ஜெக்ட் காதல்.  திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் அவர்கள் கதை எழுதுவதில் கில்லாடி.  அவரின் 'மௌனகீதங்கள்' ஆகட்டும், 'அந்த 7 நாட்கள்' ஆகட்டும்...   

'கைதியின் டைரி' படத்துக்கு இவர் வைத்த கிளைமேக்ஸை பாரதிராஜா மாற்றிவிட்ட காரணத்தினால், ஹிந்தியில் 'ஆக்ரீ ராஸ்தா'வாக அதை எடுத்தபோது தன் இஷ்டப்படி எடுத்தாராம்.  அதுவும் நன்றாகவே இருந்தது.



இவ்வளவு கதையும் எதற்கு என்றால்  இங்கு ஆரம்பிக்கப்பட இருக்கும் தொடர்கதைக்காகத்தான்.

இன்று தொடங்குகிறது.   ஆனால் எப்போது முடியும் என்று கதைக்கே தெரியுமோ என்னவோ...  எழுதுபவர்களுக்கே வெளிச்சம்! 

எழுதுபவர்களா?  

ஆம்.  தொடர்கதையின் ஆசிரியர் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்!  கதையின் போக்கை எப்படித் தீர்மானித்தார்களோ?  இல்லை அவரவர் எழுத எழுத அவ்வப்போது மாற்றிக்கொண்டார்களோ..    கதை தானே எழுதிக் கொண்டதோ...!

எப்படியோ தொடர்கதை இதோ தொடங்குகிறது.  

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நம் நண்பர்களின் எழுத்தைப் படித்துவரும் நண்பர்கள் எழுதியிருப்பவர்கள் பெயர்களைக் கண்டு பிடிக்கிறார்களா என்று பார்க்கவேண்டும்.  கண்டுபிடித்து விடுவார்கள்.  ஆனால் விடை உடனே கிடைக்காது.  கதை முடிந்தபிறகே தெரியும்.


=======================================================================================================

இந்த வார வேடிக்கையா? வேதனையா?  எனக்கு வாட்ஸாப்பில் வந்தது!






=====================================================================================================





நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஷ்ரவண் :


என்னை காலை ஒளிபத்திரிகை ஆசிரியரிடம் அறிமுகப்படுத்தி, “இவர்தான் சார், நான் சொன்னேனே அந்த க்ரிடிக்என்றார் கே.ஆர். அங்கிள் அந்தப் பத்திரிகை ஆசிரியரிடம்.

என்னது?” என்று அதிர்ச்சியாகக் கேட்டவர், அவர் கையிலிருந்த என் இசை விமர்சனத்தை மீண்டும் ஒரு நோட்டம் விட்டு விட்டு, “நெஜமாத்தான் சொல்றீங்களா? இவரா இதை எழுதினார்?” என்றார்.

ஆமாம் சார்

ரொம்பச் சின்னவராக இருக்காரே?”

சின்னவன்தான், ஆனால், அது அவன் தப்பு கிடையாதே?”

கே.ஆர். அங்கிள் எனக்குப் பரிந்து பேசியதும், நான், “ரொம்பச் சின்ன வயசுல நன்னா பாடறவங்க இருக்கும் போது, சின்ன வயசுல விமர்சனம் எழுதக் கூடாதா?” என்றேன்.

பத்திரிகை ஆசிரியர் சிரித்துக்கொண்டே, “தாராளமா இருக்கலாம், ஆனால் நம்ம மக்களுக்குச் சில கன்விக்க்ஷன்ஸ் உண்டு, விமர்சனம் செய்கிறவர்கள் வயதானவராக இருக்க வேண்டும் என்பார்கள். பொக்கை வாயோடும், மொட்டைத் தலையோடும் ஒருத்தர் விமர்சன உலகைக் கலக்கி விட்டுப் போய் விட்டதால் வந்த கோளாறு. வாசகர்களை விடுங்கள், வித்வான்கள்..? என்ன தெரியும் இவனுக்கு? அவன் வயது என் அனுபவம் என்பார்களே..?”

அந்தப் பத்திரிகை ஆசிரியர் இப்படிப் பேசியதும் எனக்குக் கொஞ்சம் எரிச்சல் வந்தது. உண்மையில் எனக்கு என் இசை அறிவை விமர்சனம் எழுதி ப்ரகடனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. குடும்ப நண்பரான கே.ஆர். அங்கிள் அன்று வீட்டுக்கு வந்திருந்தார். டிசம்பர் சீசனானதால் கச்சேரிகளைப் பற்றி நான் பேசியதைக் கேட்டு விட்டு,

உனக்கு இவ்வளவு விஷயம் தெரியுமா? எங்க மாகசினில் கச்சேரி விமர்சனம் எழுதுகிறாயா?” என்றார்.

"அங்கிள் விளையாடுகிறீர்களா?" என்றதும்"இல்லப்பா, சீரியசாகத்தான் சொல்கிறேன், எங்கள் பத்திரிகையில் இசை விமர்சனம் போடலாம் என்று ஒரு ஐடியா இருக்கு, ஆனால் யாரை விமர்சனம் எழுத வைப்பது என்று தெரியவில்லை. நீ எழுதிக் கொடு, நான் எடிட்டர் கிட்ட பேசி அப்ரூவல் வாங்கித் தருகிறேன்என்றதால், எழுதிக் கொடுத்தேன். 

அதை எடிட்டர் அப்ரூவ் பண்ணி விட்டார் என்று சந்தோஷமாக எனக்குத் தெரிவித்தவர், என்னை எடிட்டரிடம் அறிமுகப்படுத்தி வைப்பதாக கூறி அழைத்து வந்தார். இங்கே வந்தால், நான் இளைஞனாக இருக்கிறேனாம், யோசிக்கிறார் என்னத்தைச் சொல்ல..?


அறையில் கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது, “த மேட்டர் இஸ் குட்! இ டோண்ட் வான்ட் டு லீவ் ஹிம்.என்று மேஜையை விரலால் தட்டியபடி யோசித்தவர், “இவரை வயதானவராக்கிவிடலாம்.என்றார்.


நான் புரியாமல் கே.ஆர். அங்கிளைப் பார்த்தேன். அவர் சிரித்துக்கொண்டே, “கொஞ்சம் ஓல்டாக தெரிவது போல ஒரு புனைப்பெயர் கொடுத்து விடலாம்என்றதும், பத்திரிகை ஆசிரியர் ஆமோதிப்பாகத் தலையசைத்தார்.

கே.ஆர். அங்கிள் என்னிடம், “உன் சன் சைன் என்ன?” என்றார்

லிப்ரா, அந்தப் பெயரிலேயே எழுதட்டுமா?”

இங்கிலீஷ் வேண்டாம், அதையே தமிழ்ப்படுத்தினால் துலாம்.. துலாம் வேண்டாம், “துலாஎன்னும் பெயரில் வெளியிடலாம், துலா என்றால் தராசுனு அர்த்தம். அன் பயாஸ்ட். ரொம்பப் பொருத்தமான பெயர்தான். ஆல் த பெஸ்ட்!என்று எனக்குக் கை குலுக்கி விட்டு, “இதை பிரசுரத்திற்குக் கொடுத்து விடுங்கள்”. என்று என் விமர்சனத்தை கே.ஆர். அங்கிளிடம் கொடுத்தார்.



நன்றி : இணையம்.


எடிட்டரின் அறையை விட்டு வெளியே வந்ததும் கே.ஆர். அங்கிளும் சந்தோஷமாகக் கை குலுக்கினார். எனக்கும் நான் யார் என்பதை வெளிக் காட்டாமல் செயல்பட்ட இந்தக் கண்ணமூச்சி விளையாட்டு பிடித்துதான் இருந்தது. இரண்டு இறக்கைகள் முளைத்தது போல உணர்ந்தேன்.

பொது இடங்களிலும், சபா காண்டீன்களிலும் நான்தான் துலா என்று தெரியாமல் எனக்கு எதிரிலேயே என்னைப் பற்றி, ”போன வாரம் துலாவின் விமர்சனம் படித்தீர்களா? விட்டு கிழித்து விட்டான் மனுஷன்என்றும்

மண்ணாங்கட்டி, என்ன தெரியும் அவனுக்கு? ஒரு மண்ணும் தெரியாது. சும்மா காண்டீனில் உட்கார்ந்து மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டு எழுதுகிறான். அவன் மட்டும் எனக்கு முன்னால் வந்தான்.. செருப்பால அடிப்பேன்என்று நான் அவருக்கு எதிரே நிற்கும்பொழுதே சிலர் பேசுவதைக் கேட்கும் பொழுது சிரிப்பு வரும்.

சில வித்வான்கள் கூட, 'யார் சார் அந்த துலா?' என்று கேட்டுப் பார்த்தார்களாம். இந்த சந்தோஷமெல்லாம் வளர்ந்து வரும் இளம் பாடகியான ஸ்ருதியை நான் திருமணம் செய்து கொள்ளும் வரைதான் நீடித்தது. 

ஆனால் ஸ்ருதியையும் கூட நான்தான் துலா என்று வெளிகாட்டி கொள்ளாமல்தான் முதலில் சந்தித்தேன்.


வள் பாடத்துவங்கியிருந்த நேரம். 

அவளுடைய முதல் மூன்று மணி கச்சேரி. வழக்கம்போல் நான் சென்றிருந்தேன். கச்சேரி அத்தனை மோசமில்லை. கச்சேரியின் நேரப்பங்கீடு கூடத் தேர்ந்த வித்வானைப்போல அமைந்திருந்தது.  

ஆனால், ராக  ஆலாபனைக்காக சுத்ததன்யாசி ராகத்தை எடுத்துக் கொண்டவள் ஒரு இடத்தில் கொஞ்சம் மாறி ஆபேரிக்குச் சென்று விட்டாள், பின்னர், திரும்பி சுத்ததன்யாசிக்கே வந்து விட்டாலும், நான் அதை என் விமர்சனத்தில் குறிப்பிட அதற்கு அவள் கொடுத்திருந்த பதிலுக்கு நான் பதில் எழுதிய பொழுது, என் அருகில் வந்து அமர்ந்த என் அம்மா, "ஸ்ருதியின் பதிலுக்குப் பதில் அனுப்ப போறயா?" என்றாள். 

சாதாரணமாக என் எழுத்து விஷயத்தில் தலையிடாத என் அம்மா இப்படிக் கேட்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 
  
"விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும், அதிலும் ஸ்ருதி வளர்ந்து வரும் ஆர்ட்டிஸ்ட். உன்னோட விமர்சனத்தால அவளோட க்ரோத் பாதிக்கக்கூடாது" என்றாள். அம்மா சொன்னது நியாயமாகப் பட்டதால் பதில் அளிக்காமல் நிறுத்திக் கொண்டேன்.

மேட்ரிமோனியல் சைட்டில் என் ப்ரோஃபைலுக்கு அவர்கள் வீட்டிலிருந்து பதில் வந்திருந்தது. ஜாதகப் பொருத்தம் இருந்தாலும், அவள் பாடகி, நான் க்ரிடிக் என்பது பொருந்துமா என்று என் வீட்டு பெரியவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இரு வீட்டு பெரியவர்களும் சந்தித்து, பேசி, எல்லாம் பிடித்துப் போக, நாங்கள் இருவரும் சந்திக்க வேண்டியதுதான் பாக்கி.

"நான்தான் அவளைப் பார்த்திருக்கிறேனே?"

"அவள் உன்னைப் பார்க்க வேண்டாமா?" என்றார்கள்.

சரி என்று அவளை அதே சபாவில்தான் சந்தித்தேன்.



-----ஸ்ருதி மீட்டல் தொடரும்

189 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா மற்றும் எல்லோருக்கும்

    சுஜாதா படம் கண்ணில் பட்டுவிட்டதே...இன்றைய வியாழன் வித்தியாசமாக இருக்கும் போல

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்வான காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      வித்தியாசம்? ஆம்... இன்று ஒரு தொடர் தொடங்குகிறது!

      நீக்கு
  2. நிஜமாகவே வித்தியாசமான வியாழன்...சுஜாதா பாக்கியராஜ் என்று சொல்லி கதை கூட. ஸ்வாரஸ்யமா இருக்கும் போல!!!

    காலை ஒளிப் பத்திரிகை!! அழகான பெயர்..

    பள்ளிக் கூடத்துலருந்து வரேன். இன்னும் ஆசிரியருக்குப் பதில் சொல்லலை!!!! இன்டெர்வெல் ப்ரேக்!!!

    வேலை அழைக்கிறது. பின்னர் வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தொடர்கதை மிகவும் ரசிக்கும் வகையில் செல்கிறது. எழுதுவதும் ஒரு கலை.

    கிரிடிக், துலா என்பது வீட்டிற்குத் தெரிந்திருக்கிறது. அதை "கலந்து பேசும்"போது சொல்லலையா? வேறு வேலை பார்ப்பதாக எழுதலையே. கிரிடிக்காக இருந்தால் பொரி உருண்டை வாங்குவதற்குமேல் பணம் கிடைக்காதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சங்கீதப் பாடகர் என்பதால் சொல்லி இருக்க மாட்டார்கள். மேலும் தன் மகனின் மனம் பெற்றோர் அறிய மாட்டார்களா என்ன? க்ரிட்டிக் என்பது உப தொழில்தானே?

      நீக்கு
    2. முதலில் செவ்வாய் ஸ்லாட்டில் சிறுகதைக்குப் பதில் தொடர்கதையோன்னு நினைத்தேன். ஆமாம் தொடர்கதை எழுதுவது ஆசிரியர் குழுவுக்குள்ளேயோ அல்லது மற்றவர்களும் உண்டா? ஓவர்ஆல் ஸ்ட்ரெக்சர் வைத,திருக்கிறீர்களா இல்லை மனம்போல் கதை பயணிக்குமா?

      நீக்கு
    3. நெல்லைக்குப் பதில் சொல்லாமல் தாண்டிப் போய் விட்டீர்களே?..

      'மற்றவர்களும் உண்டா?' உண்டு எனில் மற்றவர்களும் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கிற மாதிரி இது பற்றி ஒரு அறிவிப்பு செய்திருப்பீர்கள் தானே?..

      நீக்கு
    4. ஜீவி சார்... அப்புறம் யோசித்தேன்... அதில் சிக்கல் இருக்கு. உதாரணமா, இந்த வாரம் வெளியிட்ட உடனே, உங்களுக்குச் சொல்லி, அடுத்த வாரத்துக்கு 2-3 நாட்களுக்குள் வாங்கணும். நீங்க தருவதற்கு நேரமாயிடுத்துன்னா அவங்கள்ல ஒருத்தர் எழுதித் தொடரணும். அப்புறம் நீங்க எழுதினது வந்தா உபயோகப்படுத்த முடியாது. இதெல்லாம் சிக்கல்தான்.

      நீக்கு
    5. //ஓவர்ஆல் ஸ்ட்ரெக்சர் வைத,திருக்கிறீர்களா இல்லை மனம்போல் கதை பயணிக்குமா?//

      எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது.

      // ஆசிரியர் குழுவுக்குள்ளேயோ//


      இல்லை. ஆனால் என்னைக் கேட்டு விடுவார்களோ என்கிற பயம் (ஆர்வம்?) இருக்கிறது. முன்பென்றால் ஓகே. இப்போது யோசிக்கவே நேரமில்லை. ஆனாலும் ஒருவாரம்தான் என்று அவர்கள் சொன்னால் ஓகே சொல்லலாம்.

      நீக்கு
    6. // எனில் மற்றவர்களும் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கிற மாதிரி இது பற்றி ஒரு அறிவிப்பு செய்திருப்பீர்கள் தானே?..//

      போம்! ஜீவி ஸார்... தொடக்கம் எங்களிடமிருந்து இருந்திருந்தால் அப்படிச் செய்திருப்...!

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. பூமாரங் யார் தூக்கி எறிந்தார்களோ அவர்களிடமே திரும்பி வரும் என்பது தானே!
    கதையை ஆரம்பிக்கும் நபரே நிறைவும் செய்வரோ?

    பதிலளிநீக்கு
  6. எக்ஸ்ரே இந்திய மருத்துவர்களின் புகழ்பாடுது

    பதிலளிநீக்கு
  7. கதை தலைப்பு நன்றாக இருக்கிறது.
    //மொட்டைத் தலையோடும் ஒருத்தர் விமர்சன உலகைக் கலக்கி விட்டுப் போய் விட்டதால் வந்த கோளாறு//

    ரசித்தேன்.(விமர்சனம் செய்பவர் மனகண்ணில் வந்தார்)

    டிசம்பர் இசை விழா சமயம் வர வேண்டிய கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு நன்றாய் இருக்கிறது என்று நானும் நினைத்தேன்.

      விமர்சகர் என்றாலே 'அவர்" தானா?!!​

      நீக்கு
  8. //"விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும், அதிலும் ஸ்ருதி வளர்ந்து வரும் ஆர்ட்டிஸ்ட். உன்னோட விமர்சனத்தால அவளோட க்ரோத் பாதிக்கக்கூடாது" என்றாள். அம்மா சொன்னது நியாயமாகப் பட்டதால் பதில் அளிக்காமல் நிறுத்திக் கொண்டேன். //

    நல்ல அறிவுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனங்கள் வளர்ச்சியை பாதிக்குமா? வளர்க்குமா? அந்தக் கருத்து சரி என்கிறீர்களா?

      நீக்கு
    2. விமர்சனங்கள் தவறை சுட்டிக் காட்டலாம், ஆரம்ப பாடகர் போக போக சரியாகிவிடும் என்று தட்டி கொடுப்பது போல் இருக்க வேண்டும்.மனம் புண்பட பேசமால் ஊக்கம் தரும் விமர்சனம் கொடுத்தால் நல்லது.

      நீக்கு
    3. பாதிக்கவும் செய்யும், வளர்க்கவும் செய்யும் விமர்சனம்.
      விமர்சனம் செய்பவர்களை பொறுத்து இருக்கிறது எல்லாம்.

      நீக்கு
  9. ஸ்ருதி பேதம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
    யார் எழுதி இருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவள் பாடகி, நான் க்ரிடிக் என்பது பொருந்துமா என்று என் வீட்டு பெரியவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இரு வீட்டு பெரியவர்களும் சந்தித்து, பேசி, எல்லாம் பிடித்துப் போக, நாங்கள் இருவரும் சந்திக்க வேண்டியதுதான் பாக்கி.//

      அவர்கள் திருமணம் நடந்தால் ஸ்ருதி பேதம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று தான் சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
    2. எனக்கு அபூர்வ ராகங்கள் ரஜினி நினைவுக்கு வந்தார்!

      நீக்கு
  10. நேற்றைய புதிர் படுத்திய பாட்டிலிருந்து இப்போதுதான் வெளியே வந்திருக்கிறேன்,அதற்குள் இந்த தொடரை எழுதுபவர்கள் யார் யார் என்று யூகிக்க வேண்டுமா? நான் வரலை இந்த விளையாட்டிற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா! எனக்கு எதுக்குங்க திடீர் தர்ம அடி?

      நீக்கு
    2. புதியதல்லவே
      ​புதிர் விளையாட்டு ..
      புத்துணர்ச்சியுடன் கண்டுபிடியுங்கள்..

      நீக்கு
    3. KGG..

      நேற்றைய புதிர் அவர்களை இன்னும் யோசனையிலேயே வைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள்!!!

      நீக்கு
  11. எக்ஸ்ரே இந்திய மருத்துவர்களின் திறமையைச் சொல்கிறது. இதை யு.எஸ்ஸில் நன்றாக உணரலாம். என்ன இருந்தாலும் நம் மருத்துவர்களின் திறமை தனி தான்.

    கதை ஆரம்பமே நன்றாக இருக்கிறது. எழுதி இருப்பவர் யார் என ஒரு யூகம் செய்திருக்கேன். பார்ப்போம். சரியாக வருதா என! மிகவும் பாடுபட்டு உழைத்துப் பதிவுகளை முன்னணியில் வைத்து எங்கள் ப்ளாகின் தரத்தை உயர்த்தி வருவதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கூட, சில அடையாளங்களை வைத்து, ஒரு பெயரை யோசித்து வைத்திருக்கேன். பார்ப்போம்.

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா... இந்திய மருத்துவர்கள் திறமை வாழ்க... அவர்கள் புகழ் ஓங்கி ஒலிக்கிறது.

      கீதா அக்கா, KGG.... யூகிக்கும் முன் அவர்கள் வைக்கும் கண்ணியில் சிக்கி விடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்!!!

      நீக்கு
    3. கேஜிஜி சார்.... நீங்களும் ஸ்ரீராமும், அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி மாதிரி, எங்கள் பிளாக்குக்கு. எடப்பாடி/ஓபிஎஸ்ஸுக்குத் தெரியாம அதிமுக வேட்பாளராக முடியுமா இல்லை உங்களுக்குத் தெரியாம எபில யாரேனும் எழுத முடியுமா? சாவி உங்க ரெண்டுபேர் கைலதானே இருக்கு....

      இப்போ தெரிஞ்சதா யார் கதையை ஆரம்பித்திருப்பது என்று?

      நீக்கு
  12. இதே மாதிரி முன்னர் ஆனந்தவிகடனிலும் ஒரு தொடர் நாவல் வந்து கொண்டிருந்தது. நான் சொல்வது சுமார் 40 வருஷங்களுக்கு முந்தைய ஆனந்த விகடனில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பைன்டிங் என்னிடம் இருக்கா? அல்லது இருந்ததா? நினைவில் இல்லை! இன்னும் ஒரு வாரத்துக்குள் தேடிப் பார்த்துட்டுச் சொல்றேன். நிச்சயமாய் விகடன் ப்ரின்டிங் எழுத்துக்கள் தான் கண் முன்னே வருது! குமுதத்தில் "இருவர்" என்னும் தலைப்பிலோ என்னமோ சிவசங்கரியும், இந்துமதியும் (விகடனில்?இல்லைனு நினைக்கிறேன்.) எழுதின நினைவும் இருக்கு. இருவருக்கும் மற்றவர் இந்த நாவலைக் கையாண்ட விதத்தில் மனவேறுபாடும் வந்தது. விகடன் தான் என நினைக்கிறேன்.

      நீக்கு
    2. பார்த்துச் சொல்லுங்க... பகிர்ந்து கொள்ளுங்க!

      நீக்கு
    3. குமுதத்தில் தான் வந்தது.
      இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்,கீதாமா, நெல்லைத்தமிழன்,பானு மா ஜீவி சார் இன்னும் எல்லோருக்கும்.

      நீக்கு
  13. துலா! நல்ல பெயர். சிறப்பாகத் துவங்கி இருக்கிறது. தொடர்ந்து படிக்க ஆவலுடன்....

    எக்ஸ்ரே - படித்து வரும்போதே புரிந்து விட்டது - இப்படித்தான் இருக்க வேண்டுமென!

    சுஜாதா! வியக்க வைக்கும் திறமை.

    பதிலளிநீக்கு
  14. இருவரும் ஜாம்பவான்கள்...

    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  15. வாட்சப் விஷயம் நம் மருத்துவர்களைப் பற்றிய பெருமையான விஷயம்...
    அதனால்தானே பல நாடுகளில் இருந்தும் இந்தியாவிற்கு குறிப்பாக வெல்லூர் மற்றும் சென்னைக்கு வந்து மருத்துவம் பார்த்துக் கொள்கிறார்கள். கேரளாவும் உண்டு இந்த லிஸ்டில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதனால்தானே பல நாடுகளில் இருந்தும் இந்தியாவிற்கு குறிப்பாக வெல்லூர்//
      வேலூர் மட்டுமல்ல, பல கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக இந்தியா வருகின்றனர். மெடிக்கல் டூரிசம் என்பது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை.

      நீக்கு
    2. ஆம்... வேலூர் மட்டுமல்ல, சென்னையிலும் பல மருத்துவமனைகள்.

      நீக்கு
    3. ஆமாம் சென்னையும் சொல்லிருக்கேனே...மெடிக்கல் டூரிசம் யெஸ்!! அதேதான்...இது ஒரு கட்டுரையாகவே வந்தது..ஹிந்து என்று நினைவு...

      கீதா

      நீக்கு
  16. கோமதிக்கா ஹைஃபைவ்!

    எனக்கும் தோன்றியது. கூடவே தலைப்பு அருமை + பாசிட்டிவ் என்றும் தோன்றியது. வைரவா நல்லபடியாகப் போகனுமே என்று தோன்றியது.

    சங்கீத உலகில் சில நெகட்டிவாக முடிந்திருக்கிறதே!

    எந்த தொழிலிலும் சரி இருவரும் ஒரே தொழில் என்றால் அதில் சில நேர்மறையும் உண்டு. இருவரும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து ஊக்கப்படுத்திக் கொண்டு முன்னேறலாம். சில சமயம் ஈகோ க்ளாஷும் ஏற்பட வாய்ப்புண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாக பாடும் மனைவியை வீட்டில் முடக்கி வைத்தவர்கள் உண்டு கீதா.
      ஒரே குருகுலத்தில் படித்த போது தன்னைவிட திறமை அதிகமானவள் என்று தெரிந்து திருமணம் செய்து பாடவிடாமல் செய்த கொடுமை உண்டு.

      //இந்த சந்தோஷமெல்லாம் வளர்ந்து வரும் இளம் பாடகியான ஸ்ருதியை நான் திருமணம் செய்து கொள்ளும் வரைதான் நீடித்தது. //
      இப்படி வேறு சொன்னாரா அதனால் தான் ஸ்ருதி பேதம் இல்லாமல் இருந்தால் நல்லது என்றேன்.
      கதாசிரியர்கள் வேறு வேறு என்பதால் எப்படி கதையை நகர்த்தி கொண்டு போகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

      நீக்கு
    2. //பாசிட்டிவ்//

      கீதா....

      நிச்சயமாக பாசிட்டிவ் தானா என்பது இப்போதே முடிவு செய்ய முடியுமா தெரியவில்லை! ஒரே தொழிலில் இருவர் என்பது சங்கடமான விஷயமோ? இரண்டு மருத்துவர்கள், இரண்டு பொறியாளர்கள்.... ஆனால் இக்காலத்தில் எல்லாமே அவசரம் இளசுகளுக்கு!

      நீக்கு
    3. // கதாசிரியர்கள் வேறு வேறு என்பதால் எப்படி கதையை நகர்த்தி கொண்டு போகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம். //

      இரண்டாம் பாகம் வந்தால் உங்களுக்கு முன்னரே எனக்கும் தெரிந்து விடும்!

      நீக்கு
    4. மகாராஜபுரம் சந்தானம், டி.எம்.கிருஷ்ணா, இவங்களைத் தவிர வேறு யார் யார் கோமதி அரசு மேடம்... மனைவியை முடக்கிவைத்தவர்கள்?

      நீக்கு
    5. அப்படியா? எனக்கு இதுவே செய்தி!

      நீக்கு
    6. கோமதிக்கா நீங்கள் சொல்லியிருப்பது சில செய்திக்ள் தெரியும்தான். அப்படி முடக்கப்பட்டது இப்போதும் ஆங்காங்கே இருந்தாலும்....முன்பு இருந்ததுதான். அந்த அளவு இப்போது இல்லை ஏனென்றால் இக்காலத்தில் அப்படி வரும் போது டைவேர்ஸ் ஆகிவிடுகிறது.

      கீதா

      நீக்கு
    7. ஸ்ரீராம் ஒரே தொழில் உள்ளவர்கள் குடும்பங்களில் ஒரு சில கேஸ்களில்தான் அப்படி ஈகோ க்ளாஷ். டாக்டர்கள் பொறியியலாளர்கள் ஏன் இசையுலகில் கூட இருவரும் சேர்ந்தே பாடுபவர்களும் இருக்காங்களே...

      ஒரு சில இடங்களில் எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் குடும்பத்தில் இருவருமே ஒரே க்வாலிஃபிக்கேஹன் ஆனால் மனைவிக்குக் கூட்டம் அதிகம் கணவர் க்ளினிக்கில் குறைவு...முதலில் இருவரும் ஒரே இடத்தில் இவர் ஒரு ரூம் அவர் ஒரு ரூம் என்று...ஸோ அப்ப கணவருக்கு ஒரு காம்ப்ளெக்ஸ் க்ரியே ஆச்சு....வேறு இடம் அவர் மாற்றிக் கொண்டார். அப்பவும் அதே...அப்புறம் பிரிவு..இரு குழந்தைகள்.....

      கீதா

      நீக்கு
    8. டி.எம்.கிருஷ்ணா பற்றித் தெரியும். சந்தானம் பற்றிய தகவல் எனக்கும் புதிது! என் அருமைத் தம்பி தி.வாசுதேவன் (தி.வா.) மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர். அவர் மனைவி பெண்கள் நல சிறப்பு மருத்துவர். கொடிகட்டிப் பறக்கிறார் கடலூரில். அதே சமயம் கணவரின் எல்லா ஆன்மிகம், சாஸ்திர, சம்பிரதாயமான காரியங்களுக்கும் கை கொடுக்கிறார். தி.வா.வின் பெற்றோர், அதாவது அவர் மனைவி தன் மிக வயதான மாமியார், மாமனாரைக் கூடவே வைத்துப் பராமரிக்கிறார்கள் இருவரும். இவர்களைத் தவிர்த்தும் நான் பார்த்து ஆச்சரியப்பட்ட மருத்துவத் தம்பதிகள் 2,3 பேர் உண்டு. இப்போது அனைவருக்கும் தெரிந்தவர்களாக இவர்களைச் சொன்னேன்.

      நீக்கு
    9. அவரைத் தெரியும் (ஊடக மூலமாகத்தான்) மற்ற விவரங்கள் புதுசு. ஆச்சர்யம்.

      நீக்கு
    10. //அவரைத் தெரியும் (ஊடக மூலமாகத்தான்)// T.M.Krishna??????

      நீக்கு
    11. /T.M.Krishna??????//

      தி.வாசுதேவன் (தி.வா.) மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர்.

      நீக்கு
    12. நெல்லை, ஊரை சொன்னாலும், பேரை சொல்லக் கூடாது.
      நிறைய பேர் இருக்கிறார்கள் தன்னைவிட தன் மனைவி சிறந்து விளங்க்குவதை பொறுக்க முடியாதவர்கள்.

      நீக்கு
  17. துலா எனும் புனை பெயர் வித்தியாசமாக உள்ளது. ரசனையாகவும் இருக்கிறது.

    பொக்கை வாய், வழுக்கைத் தலை// ஹா ஹா ஹா ஹா! பாருங்க அவர் இன்னமும் பலரையும் ஆட்டிப்படைக்கிறார்!

    //இந்த சந்தோஷமெல்லாம் வளர்ந்து வரும் இளம் பாடகியான ஸ்ருதியை நான் திருமணம் செய்து கொள்ளும் வரைதான் நீடித்தது. //

    அப்ப ஏதோ மேட்டர் இருக்குது போல....ம்ம்ம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கீதக்கதை என்பதால் பெயர்கள் எல்லாமே இப்படி சிந்துபைரவி டைப்பில்தான் வைத்திருப்பார்களோ! கீதா... ஷ்ரவண் என்று ராகம் எதுவும் இல்லையே?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஸ்ரீராம் நானும் யோசித்தேன் தேடியும் பார்த்தேன் ஷ்ரவண் எனும் பெயரில் ராகம் இருக்கான்னு எதுவும் கிட்டவில்லை!!!

      கீதா

      நீக்கு
  18. கைதியின் டயரி படத்தின் க்ளைமேக்ஸ் மாற்றப்பட்டதா? பாக்யராஜ் தான் திரைக்கதை என்பதும் இப்பத்தான் தெரியும் ஸ்ரீராம். அந்த ஹிந்திப் படம் பார்க்கணுமே என்ன க்ளைமேக்ஸ் இருக்கும் என்று பார்க்கணும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைதியின் டைரி பார்த்திருக்கிறீர்கள் என்றால் யு டியூபில் ஆக்ரி ராஸ்தா கிளைமேக்ஸ் மட்டும் பார்க்கலாம்.

      நீக்கு
    2. ஹிந்திப் படம் பார்க்கிறேன் ஸ்ரீராம்....தமிழ்ப்படத்தில் க்ளைமேக்ஸ் மட்டும் தெரியும் !! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. ஆக்ரி ராஸ்தா பார்த்தால் "கைதியின் டயரி" பார்க்கப் பிடிக்காது! என் நல்ல நேரம் ஆக்ரி ராஸ்தாவைப் பார்த்துட்டேன். :)))))

      நீக்கு
    4. grrrrrrr.....நீங்க தமிழ் விரோதி கீதா அக்கா...!!!!!!!

      நீக்கு
    5. இஃகி,இஃகி,இஃகி, ஶ்ரீராம், கொஞ்சம் கவனிச்சு என்னோட பதிவுகள், கருத்துக்களைப் பார்த்தால் கூடியவரை ஆங்கிலச் சொற்களைத் தவிர்ப்பது புலப்படும். ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து என்றே சொல்லுவேன். இது போல் இன்ன பிற எளிதான சொற்களும்! :))))) ஆனால் நீங்க புதுசு இல்லை! முன்னாடி பலர் சொன்னது தான்! ஜாலியா இருக்கு!

      நீக்கு
    6. சரி... சரி... நானும் இயன்றவரை இனி முயற்சிக்கின்றேன்.

      நீக்கு
  19. இப்படி புதிராக முடிக்கலாம்! நம்ப முடியாத சம்பவங்களை எப்படிதான் முடிப்பது! கதை சொல்பவரின் திறமையினால் நடக்க சாத்தியமில்லாத ஒன்றும் கூட நடக்குமோ என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கும், அல்லது அதைப்பற்றியே நினைக்க வைக்காமல், எழுத்தின் நடையில் மனம் சென்றுவிடும்!

    எல்லாம் எழுதுபவர்கள் திறமை. உதாரணம் சுஜாதா.//

    நிச்சயமாக....எழுதுபவர்கள் திறமையேதான்.சுஜாதா பற்றி சொல்லணுமா!! எழுத்தாளுமை மிக்கவர்!

    கதையின் முடிவுகள் பற்றி சொன்னதும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி...

      நான் சொன்ன கதையில் வேறு முடிவு ஏதும் யோசிக்க முடிந்ததா என்று யாருமே சொல்லவில்லை!!!

      நீக்கு
    2. ஸ்ரீராம் முடிவு யோசித்தேன்....சொல்றேன் மாலைக்குள்....கொஞ்சம் பணி இருக்கிறது. முடிக்க வேண்டும்...அதான்...வரேன் மீண்டும்...

      கீதா

      நீக்கு
  20. எக்ஸ்ரேயில்..வாழும் கரப்பான் வண்டு. சிலிர்த்துவிட்டது படிக்கும்போது.

    பதிலளிநீக்கு
  21. நல்லதொரு தொடக்கம் வாழ்த்துகளுடன்...

    நானும் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  22. எனக்கும் கூட ஒரு யூகம் இருக்கிறது... பார்க்கலாம்.
    //இதே மாதிரி முன்னர் ஆனந்தவிகடனிலும் ஒரு தொடர் நாவல் வந்து கொண்டிருந்தது.// கீதா அக்கா நீங்கள் குறிப்பிடுவது லட்சுமி சுப்பிரமணியம் எழுதிய,'நாதம் என்னும் கோவிலிலே' தொடரையா? எனக்கு சரியாக நினைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு அக்கா... எனக்கு எதுவும் நினைவில் இல்லை.

      நீக்கு
    2. இல்லை,பானுமதி!அந்த பைன்டிங் இருக்கானு தேடறேன். கொஞ்சம் சீரியஸா ஆரம்பிச்சுப் பின்னாடி நகைச்சுவையாக முடிஞ்ச நினைவு.

      நீக்கு
  23. இந்திய மருத்துவர்களுக்கு உலகம் முழுவதும் நல்ல மரியாதை உண்டு. ஓமானில் இந்திய டாக்டர்களுக்கு தரும் மரியாதையை மற்ற நாட்டு டாக்டர்களுக்கு தர மாட்டார்கள். சுல்தான் காபூசின் பிரத்யேக டாக்டர் ஒரு இந்தியர்தான்.

    பதிலளிநீக்கு
  24. நம் பதிவுலகிலேயே மோஹன் ஜி ரிஷபன் மற்றும் ஆரண்ய நிவாஸ் ராம மூர்த்தி முதலியோர் சேர்ந்து கதைகள் எழுதிய நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் ஜி எம் பி ஸார்...

      நாங்களே கூட கேட்டு வாங்கிப் போடும் கதை ஆரம்பிக்கும் முன் இப்படி யோசித்ததுண்டு.

      நீக்கு
    2. ஆமாம்,மோகன் ஜியின் பதிவுகளிலும் அவரவர் பதிவுகளிலும்மாறி மாறி எழுதின நினைவு எனக்கும் இருக்கு!

      நீக்கு
    3. எனக்கு இன்னமும் நினைவுக்கு வரவில்லை!

      நீக்கு
    4. தலைப்புக் கூட வித்தியாசமா இருக்கும். தேடறேன்! :) மோகன் ஜியைக் கேட்டால் கொடுப்பார்.

      நீக்கு
    5. //ம் பதிவுலகிலேயே மோஹன் ஜி ரிஷபன் மற்றும் ஆரண்ய நிவாஸ் ராம மூர்த்தி முதலியோர் சேர்ந்து கதைகள் எழுதிய நினைவு..//

      உங்கள் நினைவு சரியே.
      அந்தக் கதையில் நான் நுழைந்து கதையின் 'டிராக்'கை மாற்றியதை ரிஷபன்ஜி மிகவும் ரசித்தார்.

      நீக்கு
  25. //“த மேட்டர் இஸ் குட்! இ டோண்ட் வான்ட் டு லீவ் ஹிம்.//

    இதை இந்த ஸ்டோரியின் இப்பகுதியை யார் எழுதினாங்கன்னு இங்கேயே சொல்லனுமா இப்போவே ?/
    எனக்கு தெரியும் தெரியும் தெர்யும்ம்ம்ம்ம் :)

    ஒவ்வொரு வீக் ஒவ்வொருவர் எழுதுவார்களா ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்...

      //ஒவ்வொரு வீக் ஒவ்வொருவர் எழுதுவார்களா ??//

      ஆமாம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் இன்னிக்கே சொல்லனுமா யார் இன்றைய பார்ட் எழுதினதுன்னு ??

      நீக்கு
    3. இன்றைக்கே சொல்லலாமா வேண்டாமா என்று எழுதியவர்களையே சொல்லக் சொல்லலாமா?

      ஹா... ஹா... ஹா...​

      இது ஒருவர் மட்டும் எழுதும் கதை இல்லையாம்...

      நீக்கு
  26. எக்ஸ் ரே :( வேதனையான விஷயம் ...இங்கே யூகேவில்னா உடனே காம்பென்செஷன் கிடைக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'ஹூம்.... நாமெல்லாம் வேற நாட்டுல பொறந்திருக்கலாம்' என்று சொல்ல மாட்டேனே....!!!!

      நீக்கு
  27. கைதியின் டைரி ரெண்டு மொழியிலும் பார்க்கல்லியே :))))))
    நல்ல படமா ??

    பதிலளிநீக்கு
  28. ///அவர்கள் உங்களுக்குள்தான் இருக்கிறார்கள்...//

    இது புதன்கிழமைப் புதிரை விடப்.. புதிரா இருக்கும்போல இருக்குதே கர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க.... அதிரா.... வாங்க....

      அவர்கள் உங்களுக்காகததான் காத்திருக்கிறார்கள்!!!

      நீக்கு
    2. //உங்களுக்காகததான்//
      ஆஆஆஆஆ என்னது ஸ்ரீராம் மேலே விட்ட பிழையை மீண்டும் விடுகிறார்ர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என் ஊகம் தப்பாகிடப்போகுதே வைரவா:))..

      நாங்கள் அவர்களுக்காகக்[எழுத்துக்காக] காத்திருக்கிறோம்:) - எனச் சொல்லிடுங்கோ ஸ்ரீராம்:).. இப்போ நீங்க எங்களுக்கு ராம தூதுவர்போல தெரிகிறீங்க:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. ப்போ நீங்க எங்களுக்கு ராம தூதுவர்போல தெரிகிறீங்க:))//

      ஹா ஹா ஹா அப்ப ஸ்ரீராமை உங்க குருவாக்கிட்டீங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. ///ஹா ஹா ஹா அப்ப ஸ்ரீராமை உங்க குருவாக்கிட்டீங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!///

      ஹா ஹா ஹா இது விட்டதிலிருந்து தொடரும் கேம் போல போகுதே:))

      நீக்கு
    5. //நாங்கள் அவர்களுக்காகக்[எழுத்துக்காக] காத்திருக்கிறோம்:) - எனச் சொல்லிடுங்கோ ஸ்ரீராம்:).. //

      சொல்லிடறேன்... எனக்கு ஒருவரிடமிருந்து மட்டும்தான் வருகிறது. மற்றவர்கள் அவருக்கு அனுப்பி விடுவார்கள்.

      நீக்கு
  29. ///மறைந்ததது.//

    //இருபப்தை//

    //இபப்டியெல்லாம்//

    //தொடர்கதைக்காகததான்//

    இவ்ளோ தடுமாற்றம் பார்க்கும்போது:) இதை ஆரம்பிச்சு எழுதியது கெள அண்ணனாக இருக்கும்போல தோணுது...:)

    நில்லுங்கோ கதை படிச்சபின் சத்து ஓசிக்கிறேன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. haaaahaa :))))) not him
      i :) i figured it out but sriram is not giving proper reply :) whether to reveal or not :))

      நீக்கு
    2. தலைப்புரை கொடுத்ததுக்கு சொன்னேன் அஞ்சு.. கதை படிக்க இன்னும் ஆரம்பமாகவில்லை:)) இருங்கோ கதை படிச்சிட்டு வாறேன்ன்...:)

      நீக்கு
    3. ஆமாம் அதிரா.... ரொம்ப எழுத்துப்பிழை. மன்னிக்கவும். பதிவில் திருத்தி விடலாம். பின்னூட்டங்களில் திருத்த முடியாதே... சிரமப்பட்டு சரியா படிச்சுக்கோங்க...

      நீக்கு
    4. // இவ்ளோ தடுமாற்றம் பார்க்கும்போது:) இதை ஆரம்பிச்சு எழுதியது கெள அண்ணனாக இருக்கும்போல தோணுது...:)//
      அடக்கடவுளே! இப்படி எல்லாம் நிதானம் இல்லாமல் எழுதினால் அது என் எழுத்தா! வைரவா! ஒருவேளை நான் கனவில் எழுதியதை எல்லாம் ஸ்ரீராம் படம் எடுத்துப் போட்டுவிட்டாரோ?

      நீக்கு
    5. அவர் பாட்டுக்கு அவர் வேலையைப் பார்த்துகிட்டு இருக்கார் - ரஜினி அங்கிள் போல... அவரை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்?

      :)))

      நீக்கு
  30. கதை முடிவு வரும்வரை நீங்க எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது ஏன் தெரியுமோ.. அடிஅடி என அடிக்க வேண்டிய இடத்தில தயங்காமல் அடிக்கவும்.. வாழ்த்த வேண்டிய இடத்தில கூச்சப்படாமல் வாழ்த்தவும் எங்களுக்கு வசதியாக இருக்குமெல்லோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ஆமா :) இந்த பூனை யார்னு தெரியாம அடிச்சி வாங்கி கட்டிக்கணும் அதை நானா பார்க்கணும் :)

      நீக்கு
    2. //இந்த பூனை யார்னு தெரியாம அடிச்சி வாங்கி கட்டிக்கணும் //

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தெரியாமல் செய்தால் அது தப்பில்லையாக்கும் தெரிஞ்சே அடிக்கும்போதுதான் டப்பாகிடும்:)).. ஒருவேளை அடி கொடுத்தபின் ஆளைத் தெரியவந்தால்ல்.. டக்கெனச் சரண்டராகிட வேண்டியதுதேன்ன்:)..

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா அதிரா பரவால்ல உங்க ஐடியா கூட நல்லாருக்கு!!! வடிவேலு ஜோக்கும் நினைவுக்கு வருது!!

      பரவால்ல அடிச்சீங்கனா சொல்லுங்க நானும் கூட வரேன் உங்களுக்குக் கை கொடுக்க!! ஆனா அடி வாங்கினீங்கனா மீ எஸ்கேப்பு!!! ஹிஹிஹிஹி....

      கீதா

      நீக்கு
    4. கீதா...

      அடிக்க வந்தால் உடனே அட்டாங்க நமஸ்காரம்தேன்ன்ன்ன் ஹா ஹா ஹா:))

      நீக்கு
    5. //அடிஅடி என அடிக்க வேண்டிய இடத்தில தயங்காமல் அடிக்கவும்.. வாழ்த்த வேண்டிய இடத்தில கூச்சப்படாமல் வாழ்த்தவும் எங்களுக்கு வசதியாக இருக்குமெல்லோ:)//

      உங்கள் கருத்து சரிதான் அதிரா...

      அதே சமயம்...

      நம் நண்பர்கள் யாவரும் எப்போதுமே மாற்றுக்கருத்துகளுக்கும் எப்போதுமே மதிப்புக்கு கொடுப்பவர்கள்தான் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்!!!

      நீக்கு
  31. //கைதியின் டைரி ரெண்டு மொழியிலும் பார்க்கல்லியே :))))))
    நல்ல படமா ??//
    என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் ஏஞ்சல்? நல்ல படம்தான். முதலில் தமிழில் கமல், ஹிந்தியில் அமிதாப். தமிழிலேயே பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கமல் அங்கிள் படமென்றாலே பார்க்க மாட்டேன் முன்பு.. இப்போ கொஞ்சம் பார்க்க தொடங்கியுள்ளேன்:)..

      நீக்கு
    2. ஆஆவ் !! அப்படியாக்கா தேங்க்ஸ் யூ டியூபில் தேடி பார்த்துடறேன் ..

      நீக்கு
    3. அஞ்சு.. பார்த்திட்டு எனக்குக் கதை ஜொள்ளோணும் ஜொள்ளிட்டேஎன்ன்ன்ன்:)) விடமாட்டனில்ல:) எங்கிட்டயேவா:)

      நீக்கு
    4. //ஆவ் !! அப்படியாக்கா தேங்க்ஸ் யூ டியூபில் தேடி பார்த்துடறேன் ..//

      நான் சொன்னா பார்க்க மாட்டீங்களாக்கும்... பானு அக்கா சொன்னாதான் பார்ப்பீர்களா? தமிழ் பார்த்தாலும், ஹிந்தியில் க்ளைமேக்ஸ் மட்டும் பார்க்கலாம்.

      நீக்கு
  32. //இந்த வார வேடிக்கையா? வேதனையா? எனக்கு வாட்ஸாப்பில் வந்தது!//

    ஹா ஹா ஹா இது நம்பும்படியாகவோ இருக்கு...

    பதிலளிநீக்கு
  33. //நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே//

    சே..சே.. இதுக்குக் கீழ ஒரு அனுக்கா இல்ல தமனாக்கா படத்தைப் போட்டிருந்தால் எவ்ளோ நல்லா இருந்திருக்கும்:) ஜஸ்ட்டூஊஊஊஊ மிஸ்ட்டூஊஊஊஊ ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியாவது ஸ்ரீராம் நெல்லைத்தமிழன் குடும்பத்தில் ஒளி ப்ராகாசமா எரியாம விடமாட்டீங்க

      நீக்கு
    2. இதைப் படிச்சால் நெல்லைத்தமிழன் ஒரு ரெண்டுகிலோவாவது மெலிஞ்சிடுவார்ர்:)) அந்தக் கிரடிட் எனக்கு வந்து சேரட்டும்:)) அதிராவுக்கு ஒரு கிரடிட் கிடைக்க விடமாட்டனென்கினமே கர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    3. ஏஞ்சல் எபில அனுஷ், தமனாக்கா மட்டுமா? பாவனா, கீர்த்தி எல்லோரும் வரணுமே!! மஞ்சுளா ஆண்டியை விட்டுட்டெனே!!!

      கீதா

      நீக்கு
    4. இல்ல கீதா.. கெள அண்ணன்.. பாவனாவை கிஃப்அப் பண்ணிட்டாராம் என பிபிசில ஜொன்னாங்கோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

      நீக்கு
    5. //இதுக்குக் கீழ ஒரு அனுக்கா இல்ல தமனாக்கா படத்தைப் போட்டிருந்தால் எவ்ளோ நல்லா இருந்திருக்கும்:)//

      ச்ச்ச்சே.... ஆமாம் இல்லே?

      ஆமாவா இல்லையா?

      ஆமாம்... ஆமாம்... ஆமாம்!

      நீக்கு
    6. ///ஆமாம்... ஆமாம்... ஆமாம்!///

      எதுக்காக என்னைத் தேடுறீங்க ஸ்ரீராம்....

      http://images6.fanpop.com/image/photos/36100000/Anushka-Shetty-image-anushka-shetty-36163960-500-619.png

      நீக்கு
    7. கிர்ர்ர்ர்ர்ர்.... நல்ல படமா கிடைக்கலையா அதிரா?

      நீக்கு
  34. ஆவ்வ்வ்வ்வ் கதை படிச்சிட்டேன்ன்ன்.. எனக்கு இதை எழுதியது “நம்பாலில்” ஒருவர் என ஜந்தேகம் வந்திருக்கு ஹா ஹா ஹா ..
    “குக்கு” வும் இடம்பெறுவார்.. கதை எழுதும் குரூப்பில் என்பதனையும் மனதில் கொள்ளோணுமாக்கும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனா இங்கே அந்த 'நம்பாலில்' தான் அதிகம் ஆட்கள் இருக்கிறார்கள்! ​

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹையோ ஸ்ரீராம் குழப்புறார்ர் .. மீ குயம்ப மாட்டேன்ன்ன்..

      இப்போ “நம்பாலார்” என்றால் என்ன பாலெனச் சந்தேகம் வருதே ஹையோஓஓ ஹையோஓ.. அம்ம..அம்ம... அம்ம்மம்மம்ம்ம்ம்ம்ம:))

      நீக்கு
    3. :))))

      குழப்பம் தொடர்கிறது. நிலைமையில் மாற்றம் எதுவுமில்லை! முதல் பகுதிக்கே இப்படி குழம்பினால் மற்ற பகுதிகளுக்கு?

      நீக்கு
  35. @ஏஞ்சல்: நாங்கள் எல்லோரும் யூகித்துக் கொண்டிருக்க, நீங்கள் கண்டுபிடித்து விட்டேன் என்று அடித்து சொல்கிறீர்களே, எனக்கு மட்டும் ரகசியமாக சொல்லுங்களேன், நம் இருவரின் எண்ண ஓட்டமும் ஒன்றாக இருக்கிறதா என்று பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க அக்கா :) அது அது . . :))) சொல்லிட்டேன்

      நீக்கு
    2. அஞ்சு நீங்க நினைப்பவரைத்தான் நானும் நினைக்கிறேன் என நினைக்கிறேன்ன்:)) பாலை:) ஆவது ஜொள்ளலாமே:) ஹா ஹா ஹா.. எழுத்தாளருக்கு ஹெட் சுழலப்போகுதூஊஊஊஉ:).

      நீக்கு
    3. ஆவ்வ்வ் அதுதான் மேலே சொன்னேன்ன்.. “நம்பாலில்” ஒருவர் என.. இருப்பினும் எப்படியும் டுவிஸ்ட்:) ஆகலாம் பார்க்கலாம்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    4. ஹையோ ஏஞ்சல் பானுக்காவுகு மட்டும் ரகசியமா...நோ நோ எனக்கும் சொல்லிடுங்க ப்ளீஸ்!!! நான் யார்கிட்டவும் சொல்ல மாட்டேன்!! பூஸார் குதிக்கவிருக்கும் தேம்ஸ் மேல ப்ராமிஸ்!!!

      கீதா

      நீக்கு
    5. ///பூஸார் குதிக்கவிருக்கும் தேம்ஸ் மேல ப்ராமிஸ்!!!///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தேம்ஸ் ரொம்பக் குளிருது:)) இப்போ மட்டின் ரோல் சாப்பிடுவதாகத்தான் கூக்குரல் போட்டுக்கொண்டிருக்கிறேன்:)..

      நீக்கு
    6. யாரும் இங்கே சொல்ல மாட்டீர்களாக்கும்? அந்தந்த வாரம் யார் யார் என்று யூகித்து கடைசியில் மொத்தமாக எண்களிட்டு சொல்வீர்களா?!!!

      நீக்கு
    7. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தேம்ஸ் ரொம்பக் குளிருது:))//

      அதுக்குத்தானே சொன்னதே!!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    8. //யாரும் இங்கே சொல்ல மாட்டீர்களாக்கும்? அந்தந்த வாரம் யார் யார் என்று யூகித்து கடைசியில் மொத்தமாக எண்களிட்டு சொல்வீர்களா?!!!//

      இது சரிவராது ஸ்ரீராம்.. ஒவ்வொருவாரமும் நமக்கு தோணுவதை சொல்லிடுவோம்ம்.. நீங்க இந்திய நேரம் ஒரு 5-6 மணியானதும் எழுதியவரைச் சொல்லிடுங்கோ அதுதான் நல்லதென நினைக்கிறேன்ன்.. இல்லை எனில் ஆறிய கஞ்சிபோலாகிடும்... என் மனதில் தோன்றியதைச் சொன்னேன்ன்..

      நீக்கு
    9. எழுதினது யார் என்று எனக்கும் தெரிந்து விட்டது.

      க்ளூ: அவர் பதிவர் அல்ல.

      நீக்கு
    10. ஒன்று செய்யலாம், எல்லோரும் அவரவர் யூகங்களை ஸ்ரீராமுக்கு வாட்ஸாப் அல்லது மெயிலில் அனுப்பி விடலாம். முதலில் சரியான விடையை சொன்னது யார் என்று கடைசியில் அவர் சொல்லட்டும்.

      நீக்கு
  36. ////ஆனால், ராக ஆலாபனைக்காக சுத்ததன்யாசி ராகத்தை ///

    ஆவ்வ்வ்வ்வ் இன்னும் கொன்ஃபோமாகுது எனக்கு:))

    பதிலளிநீக்கு
  37. //இப்படித் தொடங்கும் கதையை எப்படி முடிக்கலாம்? பெரும்பாலும் //

    ஒளி உடம்பில் பட்டதும்.. அப்படியே முத்துக்குமார் அந்த ஒளி தந்த மயக்கத்தில் மூழ்கி பழைய நினைவுக்குள் தள்ளப்பட்டார்ர்....

    தன் 5 வயதில் ஒருநாள்... மாலை நேரம் ஒரு அஞ்சு மணியிருக்கும்.. வானம் தன்வெப்பத்தைத்தணிக்க முகிலை இழுத்து முக்காடாகப் போஒர்த்திக் கொண்டிருந்தது... அப்போ அப்பாவின் கையைப் பிடிச்சுக் கொண்டு வயல் வரம்பால் நடந்து போய்க்கொண்டிருந்தபோது.. திடீரென......

    டொரரும்:)

    ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்போ அப்பாவின் கையைப் பிடிச்சுக் கொண்டு வயல் வரம்பால் நடந்து போய்க்கொண்டிருந்தபோது.. // - கதையை ஒழுங்கா எழுதுங்க அதிரா. இப்போ அதே கதையை நான் எழுதறேன்.

      ஒளி உடம்பில் பட்டதும்.. அப்படியே முத்துக்குமார் அந்த ஒளி தந்த மயக்கத்தில் மூழ்கி பழைய நினைவுக்குள் தள்ளப்பட்டார்ர்....

      தன் 5 வயதில் ஒருநாள்... மாலை நேரம் ஒரு அஞ்சு மணியிருக்கும்.. வானம் தன்வெப்பத்தைத்தணிக்க முகிலை இழுத்து முக்காடாகப் போஒர்த்திக் கொண்டிருந்தது... அப்போ அப்பாவின் கையைப் பிடிச்சுக் கொண்டு வயல் வரம்பால் நடந்து போய்க்கொண்டிருந்தபோது திடும் என்று பெரும் வெளிச்சம் வானத்தில் தோன்றியது. சிறுவன் முத்துக்குமார் அந்த ஒளியைப் பார்த்தான். அந்த ஒளி தந்த மயக்கத்தில் மூழ்கி பழைய நினைவு வர ஆரம்பித்தது...

      சரத்குமார் (சென்ற ஜென்மப் பெயர்) வெளியில் வயல் வெளியில் நடந்துகொண்டிருந்தான். அவன் மனைவி அவனுடன் வரவில்லை. மெதுவாக நடந்துகொண்டிருந்தபோது வானத்தில் மேகங்கள் விலகின. பளீரென்று சூரியன் வெளிச்சக் கதிரோடு வந்தான். அந்த ஒளி தந்த மயக்கத்தில்...........

      டார்ச்சர் தொடரும்...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஸ்ரீராம்ம் ஓடிக்கமோன்ன்:).. பாருங்கோ நெல்லைத்தமிழனை:).. என்னைக் கற்பனை பண்ண விடாமல் டிசுரேப்புப் பண்றார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா

      ///சரத்குமார் (சென்ற ஜென்மப் பெயர்)////

      ஹா ஹா ஹா முடியல்ல வைரவா..., எனக்கு 34 எலும்பும் கொழுவிடப்போகுதூஊஊஊ:))

      நீக்கு
    3. ஹா ஹா ஹா அதிராவின் கற்பனைக் குதிரையைத் தடுத்த நெல்லையை தேம்ஸ்கு கூட்டிட்டுப் போங்க....எதுக்குனு கேக்கப்படாது!! இல்லைனா கீதாக்கா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க!! எம்புட்டு அழகா பூஸார் ஜிந்த்திச்சு எழுதத் தொடங்கினார்!....

      அதிரா நீங்க தொடருங்க!! நெல்லையை ஒரு கை பாத்துக்கலாம்...

      கீதா

      நீக்கு
    4. //அதிரா நீங்க தொடருங்க!! நெல்லையை ஒரு கை பாத்துக்கலாம்...

      கீதா///

      என்னாதூஊஊஊஊஊஊ ஒரு கையோ?:) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கீதாவுக்கு மட்டரே தெரியாதுபோல:) கர் மறந்திட்டீங்க:)) நான் தான் விழிவதை எல்லாம் பொறுக்கி நெல்லைத்தமிழனைப் பாதி கீறிட்டேன்ன்.. இன்னும் மிச்சக் குளூ கிடைக்காமல் போகாது:).. கோபு அண்ணனும் கொஞ்சம் குளூத் தந்திருக்கிறாரெல்லோ:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
    5. நெல்லை தீர்க்கதரிசிக்கிட்டயே ..போன ஜென்மத்துப் பெயர்னு எல்லாம் வுடறீங்களே!! தீர்க்கதரிசிக்கு முக்காலமும் தெரியுமாக்கும் தீர்க்கதரிசியா கொக்கா?!!!!!!

      கீதா

      நீக்கு
    6. அதிராவின் கற்பனை இருக்கட்டும்...

      நெல்லை முத்துவின் கைகால்கள் வெட்டப்பட்டதை விட்டுவிட்டாரே.... அதை வைத்துதானே இது 'தொடரச் சிரமமாகும் கதை' ஆகிறது!

      அதிரா... நீங்கள் சும்மா இருக்காமல் தமன்னா படத்தைப் போட்டிருக்கலாம் என்று சொன்னதுதான் தவறாகிப் போச்சு!

      நீக்கு
  38. நெருங்கி வந்த ஒளி குறுகி அதிவிரைவாக அவனை நெருங்கி அவன் இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் நொடியில் வெட்டி விட்டு மறைந்ததது.//

    தான் பல வருடங்கள் கடந்து சென்றது போல தோன்றியது அவனுக்கு. டைம் மெஷின்? உலகம் வித்தியாசமாக இருந்தது. எல்லா மனிதர்களும் லில்லிபுட்டாகத் தெரிந்தார்கள். கட்டிடங்கள். செடி கொடிகள் எதுவுமே இல்லை. வெளிச்சமாகவே இருந்தது. இரவு உண்டோ? இரவு இல்லை என்றால் எப்படித் தூங்குவது?

    ஹையோ ஸ்ரீராம் இப்படி நிறையத் தோன்றியது....இங்கு எழுதினால் நீண்டு விடும்! முடிந்தால் கதையாக எழுதுகிறேன்...

    இப்ப ஷ்ரவண் அப்படின்ற ராகம் இருக்கானு தேடிட்டுருக்கேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சநாள் கழித்து அரபுநாட்டு அன்பர் ஒருவர் இந்தக் கதையை தொடர்ந்தெழுதி அனுப்பக்கூடும்!!!!!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா யரென்று புரிஞ்சு போச்சே!!! ஸ்ரீராம்!!! அதுவும் அவர் இப்படியான கதைகள் எல்லாம் சூப்பரா எழுதுவாரே!!! மேலுலகம்...கீழுலகம் என்றெல்லாம்..

      கீதா

      நீக்கு
    3. நான் சொல்லியிருப்பது நான் அரைகுறையாய் விட்ட கதையை அதிரா...​

      நீக்கு
  39. அதிரா நீங்கள் ஃப்ளேஷ் பேக் நான் டைம் மெஷின்ல போட்டுருக்கேன் முத்துக்குமாரை!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க இப்போ ரியூஸ்டேக் கிரகத்தில காணி வாங்கிக்கொண்டு இருக்கிறீங்க கீதா:))

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா இது தீர்க்கதரிசியின் வேலை!!!! அங்கிருந்து கொஞ்சம் 7.5காரர் சாட்டர்னையும் எட்டிப் பார்த்துட்டு வரேன்...!! அதிரா உங்களுக்கு ஏதாச்சும் தகவல் கொடுக்கனுமா!! சொல்லுங்க...

      கீதா

      நீக்கு
    3. ஹா ஹா ஹா அதிரா அவரை விசாரிக்கவே இல்லை என மட்டும் ஜொள்ளிடுங்கோ:) விசாரிச்சேன் எண்டால்ல்.. ஓடி வந்து ஒட்டி விடுவார்ர் ஹா ஹா ஹா இப்போதான் மீக்கு நடுக்கூறு :))

      நீக்கு
    4. ஹா ஹா ஹா அதிரா நோ நோ.....அவரை நல்லா விசாரிக்கணுமாக்கும்! தலைல ஐஸ் ஐஸா வைக்கனும்....ஃப்ரென்ட் ஆயிட்டார்னா நல்லதல்லோ?!!!!!

      கீதா

      நீக்கு
  40. மார்புக்குள் கரப்பான்பூச்சி?! ஐயோடா


    எங்க வீட்டில் கரப்பான் பூச்சி நடமாடுதே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி.... மண்டைக்குள் கரப்பான் பூச்சி இருந்தது பற்றி படித்திருக்கிறோமே...

      தொடர்கதை ப / பிடிக்கவில்லையா?

      நீக்கு
  41. இன்னும் வெளிச்சம் சரியாக வராத வானத்தில் திடீரென ஒரு ஒளிவெள்ளம். தங்க நிறத்தில் தொடங்கிய ஒளி, வெண்மை நிறமாக மாறி நெருங்கி வர, முத்து ஒரு கவர்ச்சியினால் ஆளப்பட்டு அதைப் பார்த்துக்கொண்டே இருந்தான்......//

    ஸ்ரீராம் நான் இதைத் தொடர்ந்துதான் டைம் மெஷின் என்று சும்மா எழுதி வைத்தேன்.

    அந்தக் கை கால் வெட்டி அதைத் தொடர்ந்து ஒரு மூன்று வரிகள் மட்டுமே எழுதி வைத்திருந்தேன்....வேர்டிலிருந்து இங்கு காப்பி பேஸ்ட் செய்யும்போது மாறி விட்டது!! கவனிக்காம விட்டுவிட்டேன்...

    இரண்டு முடிவுகள் நீங்க சொன்னதையும் காப்பி பேஸ்ட் செஞ்சு வைச்சுருக்கேன் ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  42. இதெல்லாம் எங்கேபோய் முடியுமோ.. குமுதம் ஃபார்முலா நல்லதற்கில்லை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​// இதெல்லாம் எங்கே போய் முடியுமோ //

      ஆரம்பிச்சது இங்கேதானே? இங்கேயேதான் முடிவும் வெளியாகும் ஏகாந்தன் ஸார்!

      :)))

      நீக்கு
  43. இன்றைய கதம்பம் அருமை ஸ்ரீராம்ஜி.

    அந்த வயலெட் கலர் எழுத்துகள் நீங்கள் தொடங்கியிருக்கும் கதையா? இரு முடிவுகளும் நன்றாக இருக்கிறது. இதுவும் கதை எழுத அழைப்போ?

    திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் அம்சமா திரைக்கதை படைப்பார். புதிய தகவல் க்ளைமேக்ஸ் தமிழில் மாற்றப்பட்டது.

    ஓ தொடர்கதை. அதற்கான ஒரு முன் குறிப்புதானோ மேலே சொன்னவை? அப்படித்தான் தெரிகிறது.

    கதையின் தொடக்கம் இப்பகுதி நல்ல ஃப்ளோ. கதை வேகமாக நகரும் போலத் தெரிகிறது. கதாசிரியர்கள் யாரென்று என்னால் எல்லாம் கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

    தொடர்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  44. நெருங்கி வந்த ஒளி குறுகி அதிவிரைவாக அவனை நெருங்கி அவன் இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் நொடியில் வெட்டி விட்டு மறைந்தது.//

    ஒளி வெள்ளம் கடந்து தான் போகும் வெட்டுமா? கதைக்கு கண் உண்டா, கால் உண்டா?


    //இன்னும் வெளிச்சம் சரியாக வராத வானத்தில் திடீரென ஒரு ஒளிவெள்ளம். தங்க நிறத்தில் தொடங்கிய ஒளி, வெண்மை நிறமாக மாறி நெருங்கி வர, முத்து ஒரு கவர்ச்சியினால் ஆளப்பட்டு அதைப்

    பார்த்துக்கொண்டே இருந்தான்......//


    வெண்மை நிற உடை அணிந்த தேவதை வந்தாள் , அதுதான் முத்துக்குமார் பார்த்து கொண்டே இருந்தான் . தேவதை வந்து தன் கண்ணால் அன்பு ஒளியை அவனை நோக்கி பாய்ச்சினாள், அவன் கை கால் வளர்ந்து விட்டது.
    அன்பு ஓளி பரவட்டும்! தேவதை வந்தாள் என் கை, கால் தந்தாள் என்று ஆனந்த கூத்தாடி பாடினான் முத்துக்குமார்.




    பதிலளிநீக்கு
  45. வணக்கம் சகோதரரே

    வியாழன் கதம்பம் வித்தியாசமாக மிக மிக அருமை. வியாழன் புதனுக்கு முந்தியதோ இல்லை, பிந்தியதோ என சற்று குழம்பி விடும் அளவுக்கு புதிர்களால் குழப்பி விட்டது. ஹா ஹா ஹா. நடுவில் கரப்பான் வேறு உட்புகுந்து நெஞ்சை பயமுறுத்தி துள்ளிக்குதிக்க வைத்து விட்டது.

    இரு தொடர்கதைகளும், மிக அருமை. சுஜாதாவின் எழுத்து திறமைகளை மற(று)க்க முடியுமா? இயக்குனர் பாக்கியராஜ் படங்களும் முடிவு வித்திசானமானதுதான். இருவரும் மிகப் பெரிய திறமைசாலிகள்.

    முதல் கதை இரண்டாவதுக்கு முன்னுரையா?இல்லை.. இரண்டும் வெவ்வேறு புத்தகங்களா.? இரண்டுமே திறமையான எழுத்தாளர்களால் எழுதப்பட்ட தொடர் கதைகள். மிகவும் ரசித்தேன். இன்று தொடங்கி, தொடர்ந்து தொடர்பவைகளை தொடர்கிறேன்.

    பதிவும், அதற்கு வந்த கருத்துரைகளும், படிக்க மிகவம் நன்றாக உள்ளது. உடனுக்குடன் வந்து கருத்துரைகள் எழுதி குவித்தவர்களுக்கு வாழ்த்துகள். எப்படித்தான் இப்படி? என வியக்க வைத்து விட்டார்கள். என் நேரக்குறைவினால் அனைவரின் நிறைய பதிவுகளை வாசிக்க இயலாமல் இருக்கிறேன். தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்துக்குமார் கதை அச்சு அசல் சுஜாதா பாணி. அதனால் அதை எழுதியவரையும் யூகிக்க முடிகிறது ஸ்ரீராம்.

      இசைக்கதை எழுதினது கீதா ரங்கனா இருக்குமோன்னு நினைத்தேன்., ஆனால் ஜீவி சார் பதிவர் இல்லைன்னு சொல்லிட்டாரே.

      கோமதி சொல்வது போல பல பாட்டுக்காரர்கள் குடும்பம் பல்விதமாகப்
      பாதிக்கப்பட்ட கதைகள் முன்பு தெரிய வரும்.
      சுப்புடு சாரை நினைவு படுத்தியதற்கு நன்றி.
      உங்களுக்கெல்லாம் வெள்ளி வந்திருக்கும்.
      கரப்பு எக்ஸ்ரே திகில்தான். இந்திய நருத்துவர்களுக்கு ஜே.

      நீக்கு
  46. தொடர்கதை - அதுவும் வெவ்வேறு எழுத்தாளர்களின் கைவண்ணத்திலா. அருமை. நானும் தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  47. அருமையான ஆரம்பம். வித்தியாசமான கதைக் களம். தொடர்கதை என்றாலே சஸ்பென்ஸுடன் முடியும். இத்தொடரில் கூடவே யார் எழுதியது என்கிற சஸ்பென்ஸும் சேர்ந்து கொள்ளப் போகிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!