திங்கள், 16 டிசம்பர், 2019

"திங்க"க்கிழமை :  கல்கண்டு பாத் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி


கல்கண்டு பாத்

தேவையான பொருள்கள்:

பச்சரிசி  - 1 ஆழாக்கு 
டயமண்ட் கல்கண்டு  -  ஒன்றரை கப்
பால்   - தேவையென்றால் 1/4 கப் 
கேசரி பவுடர் தேவையென்றால் - 1/4 டீ ஸ்பூன் 
ஏலக்காய் பொடி  -  சிறிதளவு 
முந்திரி மற்றும் திராட்சை - 6-8
நெய்   -  இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் 

செய்முறை: 



அரிசியை கழுவி குக்கரில் வைத்து, ஐந்து விசில் விடவும். குக்கரை திறந்து சற்று குழைவாக வெந்திருந்த சாதத்தில் கல்கண்டு, கேசரிப் பவுடர் சேர்த்து, அடுப்பை தாழ்வாக எரியவிட்டு அடி பிடிக்காமல் கிளறவும். கல்கண்டு கரைந்து சாதத்தோடு கலந்தவுடன் நெய் சேர்த்து கிளறி விட்டு, முந்திரி, திராட்சை, இவைகளை நெய்யில் வருத்தப் போட்டு, ஏலக்காய் பொடியும் சேர்த்தால் சுவையான கல்கண்டு பாத் தயார். 



பால் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பால் சேர்த்தும் செய்யலாம். பால் சேர்க்காமல் செய்யும் பொழுது நீண்ட நேரம் வெளியில் வைத்துக் கொள்ள முடியும். அக்காரவடிசல், சர்க்கரை பொங்கல் போன்றவைகளுக்கு சேர்க்கும் அளவிற்கு நெய் சேர்க்கத் தேவையில்லை.  வித்யாசமான சுவையில் சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு இது. 


56 கருத்துகள்:

  1. அனைவருக்கும் நல்வரவு, காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்அத்தானும் நல்லவை கேட்க அனைத்து அத்தானுக்கும்
      ஆன்ற பெருமை தரும்
      வாழ்க வளமுடன்

      நீக்கு
    2. நினைத்தானும் நெஞ்சினில்
      நின்று நிலைத்தானும் காதலில்
      கனிந்து இதழை நனைத்தானும்
      அன்பினில் நிறைந்த அகத்தானே!..

      நீக்கு
    3. அகத்தான் என்ற சொல்லே
      அத்தான் என்று ஆகியது..
      என்றார் தவத்திரு குண்றக்குடி அடிகளார்..

      அகம் = உள்ளம், இல்லம்...

      நீக்கு
    4. //என்அத்தானும் நல்லவை கேட்க அனைத்து அத்தானுக்கும்
      ஆன்ற பெருமை தரும்//


      :))))

      நீக்கு
  3. நேரடியாக வைத்துப் பண்ணுவேன். பாலும் சேர்ப்பேன். காலம்பர வரேன்.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நாளாக அமையவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் கல்கண்டு பாத் செய்முறை படங்களுடன் அருமையாக உள்ளது. விளக்கமாக விவரித்தது நன்று. நானும் இப்படித்தான் செய்வேன்.இன்று சுவையான இனிப்பை காலையிலேயே சாப்பிட்ட திருப்தி வந்தது.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது.. நீங்களும் கேசரிப் பவுடர் போடுவீங்களா?

      நீக்கு
    2. இல்லை.. நான் கேசரி பவுடரை தவிர்த்து ஏலம் முந்திரி பால் சேர்ப்பேன். ஆனால் சகோதரி கூறுவது போல் பால் சேர்த்த உணவு நிறைய நேரம் வெளியில் வைத்திருக்க முடியாது.

      நீக்கு
    3. @Kamala Hariharan, சிதம்பரம் நடராஜா கோயிலில் கல்கண்டு சாதம் பிரசாதம் போட்டு ஒரு பெரிய டப்பா நிறையக் கொடுப்பார்கள். வீட்டுக்கு எடுத்து வந்து அக்கம்பக்கம் எல்லாம் விநியோகம் செய்தும் மிஞ்சும். குறைந்தது 4 நாட்களாவது வைத்திருப்போம்.

      நீக்கு
    4. //ஒரு பெரிய டப்பா நிறையக் கொடுப்பார்கள்.// - ஆனால் தினம் தினம் இணையத்தில் சந்திக்கும் உங்களிடம் அதைப் பற்றி மூச்சு விடமாட்டேன். - இப்படி நினைக்காமல் அடுத்த முறையாவது கோவில் பிரசாதம் நிறைய வரப்போகுதுன்னா ஒரு இண்டிகேஷன் இணையத்துல கொடுங்க.

      உங்களை நம்பி சிதம்பரம் நடராசர் கோவிலுக்குச் சென்றால், அலைபேசியைக் கையில் தூக்கினாலே, போட்டோ எடுக்கக்கூடாது என்று ஆங்காங்கு உட்கார்ந்திருக்கும் அர்ச்சகர்கள் சொல்கிறார்கள். (ஆனாலும் அந்தக் கோவிலில் பழமையின் பெருமை தெரிகிறது. சின்னச் சின்ன மாடங்களை (அறைகளை) பார்க்கும்போது, இதுவும் வரலாற்றில் இடம் பெற்ற அறையாக இருக்கும், சமயக் குரவர்களோ இல்லை அரசர்களோ வந்திருக்கும் இடமாயிருக்கும் என்று தோன்றும்.

      நீக்கு
    5. நீங்க சிதம்பரம் போறச்சே எங்க கிட்டே சொல்லிட்டுப் போயிருந்தால் எங்க கட்டளை தீக்ஷிதர் விலாசம் கொடுத்திருப்பேன். ஆனால் பிரசாதம் எல்லாம் வேணும்னா நாம அபிஷேஹம் ஏதானும் ஏற்பாடு பண்ணி இருந்தால் தான் போடுவாங்க. சில சமயம் பிரசாதம் இந்தக் குறிப்பிட்டது வேண்டும் எனச் சொல்லி வைத்தால் முன் கூட்டியே எடுத்து வைச்சுக் கொடுப்பாங்க. எல்லாவற்றிற்கும் தேவை தீக்ஷிதர்களுடன் ஆன அறிமுகம். மற்றபடி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதிக்குத் தனி மடப்பள்ளி இருக்கு! அங்கே போய்க் காசு கொடுத்து வாங்கிக்கலாம் என்பார்கள். நாங்க போனதில்லை. ஒரு சமயம் திருவாதிரை தரிசனத்துக்குப் போனப்போக் களி கிடைத்தது. தீக்ஷிதர் வீட்டுக்கு வரும் பங்கிலிருந்து கொடுத்தார்கள்.

      நீக்கு
  6. கல்கண்டு பாத்தைவிட சிறிது நீர்க்க கல்கண்டு பாயசம் கோடகநல்லூர் கோவிலில் சாப்பிட்ட நினைவு வந்துவிட்டது. அருமையாக இருக்கும்.

    நல்ல கல்கண்டுபாத் செய்முறையைப் படித்துவிட்டு, கடைசிப் படத்தைப் பார்க்க, பெண்பார்க்கும் படலம் நினைவுக்கு வருவது எனக்கு மட்டும்தானா?

    எதற்கு இங்கு கேசரி படம் போட்டிருக்கிறார் பா.வெ மேடம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருமுறை என் நண்பர் சுகுமார் என் அலுவலகத்துக்கு அருமையாய்  கல்கண்டு சாதம் செய்து கொடுத்திருந்தார். அனைவரும் பாராட்டினார்கள்!  பானு அக்கா இதை அனுப்பியதுமே எனக்கு அது நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    2. கேசரியா? கர்ர்ர்ர்! சாதம் தெரிகிறது பாருங்கள். 

      நீக்கு
    3. @நெ.த.: நீங்களும் இருக்கிறீர்களே.. கில்லர்ஜியிடம் கற்றுக் கொள்ளுங்கள் எப்படி பாராட்டுவது என்று. 

      நீக்கு
    4. ஓஹோ! உங்களுக்கு பெண் பார்த்த நிமிடம் நினைவுக்கு வந்ததால் கல்கண்டு பாத் கேசரியாக மாறிவிட்டதா? இருந்தாலும் கொஞ்சம் ஓவர். 

      நீக்கு
    5. எவ்வளவு நேரம்தான் காலையில் காத்திருப்பது, கில்லர்ஜி வருவார்.. அவர் பின்னூட்டம் இடுவார் என்று. இனி அவர் பின்னூட்டத்திற்குப் பிறகு வந்து, 'நெல்லைத் தமிழனிடம் கற்றுக்கொள்ளும்படி' பாராட்டித் தள்ளுகிறேன். அடுத்த ரெசிப்பி உங்களுடையதா?

      நீக்கு
    6. //பானு அக்கா இதை அனுப்பியதுமே எனக்கு அது நினைவுக்கு வந்தது.// - சில சமயங்களில் தமிழ் வாக்கியங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பொருளைக் கொடுக்கும் தன்மை உடையது. இந்த வரியைப் படித்தவுடன் எனக்குத் தோன்றிய பொருள் 'ம்ஹ்ம். அலுவலக நண்பர் நம் மீது அன்பு கொண்டு கல்கண்டு பாத் கொண்டுவந்து தந்தார். இந்த பா.வெ. மேடம், மெயில்ல செய்முறை மட்டும் அனுப்பியிருக்காங்களே. டேஸ்டுக்கு ஒரு ஸ்பூன் கல்கண்டு பாத் கூட கொண்டுவந்து தரவில்லையே ம்ஹ்ம்'. ஸ்ரீராம் என்ன பொருளில் இதனை எழுதியிருப்பார்?

      நீக்கு
    7. அலுவலகத்தில் சுமார் இருபது பேர்களுக்கு நாங்கள் (சுகுமார் செய்துகொடுத்து) கொடுத்தோம் கல்கண்டு சாதம்.  கலர் போடாத கல்கண்டு சாதம்.  இது நடந்து பதினைந்து வருடங்களுக்கு மேலிருக்கும்!

      நீக்கு
    8. திருப்புல்லாணி கோயிலில் பாயசம் பிரசாதம். அலுவலகத்தில் அதுக்கான பணம் கட்டிடணும். அப்புறமா நாம பாத்திரம் எடுத்துப் போனால் அதில் விட்டுக் கொடுப்பாங்க. இல்லைனாலும் அவங்க கிட்டே கிண்ணங்கள், தம்பளர்கள் உள்ளன. அதில் தராங்க! சுடச் சுடப் பாயசம் அருமையோ அருமை! தென் தமிழகத்தின் பிரபலமான தேங்காய்ப் பாயசம் தான்! ரொம்பவே நன்றாக இருக்கும். பாட்டில், தூக்குப் போன்றவை எடுத்துச் சென்றால் வீட்டுக்கும் கொண்டு வரலாம். ஆனால் இது ஒரு நாள் தான் இருக்கும். ஐயப்பனுக்குச் செய்யும் அரவணையை மாசக் கணக்கா வைச்சுக்கலாம்.

      நீக்கு
    9. திருப்புல்லாணி தரிசனம் இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கலாம். ஆனால் குழுவுடன் செல்வதால், பாயசத்துக்கு எங்கே சொல்வது? ஹா ஹா. கொஞ்சம் ஐடியா கொடுங்களேன்.

      நீக்கு
    10. குழுவுடன் போவதற்கும் பாயசம் பிரசாதம் கேட்பதற்கும் என்ன சம்பந்தம்? காலை நேரம் தான் கிடைக்கும். சுமார் பனிரண்டு மணிக்குள்ளாக. அதுக்குள்ளே போயிட்டால் அங்கே அலுவலகத்தில் கேட்டுக் குழுவில் பொறுப்பான யாரேனும் பாயசம் வாங்கப் பணம் கட்டிடலாம். நிறையப் பேர் என்றால் அதற்கு ஏற்றாற்போல் சொல்லிடணும். கட்டாயமாய்க் கிடைக்கும்.

      நீக்கு
  7. அழகிய ரெசிப்பியாகவும் இருக்கிறதே வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். நாளைக்குத்தான் மார்கழி மாதம் பிறக்கிறது, நான் இன்றைக்கே பொங்கல் கொடுத்து  விட்டேன். பந்தி போடுவதில் முந்திக் கொண்டு விட்டேன். 

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. //நாளைக்குத்தான் மார்கழி மாதம் பிறக்கிறது, நான் இன்றைக்கே பொங்கல் கொடுத்து விட்டேன். பந்தி போடுவதில் முந்திக் கொண்டு விட்டேன்.//

    மார்கழி மாதம் கட்டியம் கூற வந்த கல்கண்டு பொங்கல் அருமை



    செய்முறை விளக்கமும் படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
  11. நாளைக்குப் பிறக்கும் மார்கழிக்கு இன்றைக்கே கட்டியம் சொன்ன பானுவுக்கு வாழ்த்துகள். இனிய காலை வணக்கம். கல்கண்டு சாதம் பிரமாதமாக வந்திருக்கிறது. நான் கட்டிக கல்கண்டு வைத்து செயவேன் கொஞ்சம் நாழியாகும். வாழ்ததுகள் பானுமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டைமன்ட் கல்கண்டு நானும் பயன்படுத்த மாட்டேன். நிவேதனத்துக்கு மட்டும் எப்போவானும். கல்கண்டு சாதம் என்றால் கட்டிக் கல்கண்டு தான்.

      நீக்கு
  12. அன்பு துரையின் அத்தான் விளக்கம் பலே ஜோர்.அகத்தில் இருப்பவர் என்றும் விலகார்.

    பதிலளிநீக்கு
  13. அது என்ன பாத்?.. கல்கண்டு சாதம் என்று சொல்லக் கூடாதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லலாம். பெயரில் என்ன இருக்கிறது? A sweet is a sweet is a sweet!

      நீக்கு
    2. என்னாது... கல்கண்டு சாதமா? கல்கண்டு பொங்கல் இல்லைனா கல்கண்டு பாயசம் என்பதுதானே சரியாக இருக்கும் (இங்கு கல்கண்டு பொங்கல்). சிலவற்றிர்க்கு 'சாதம்' 'சிலவற்றிர்க்கு பொங்கல்'. தயிர் சாதம், புளி சாதம், எள்ளுஞ் சாதம், வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கல்கண்டுப் பொங்கல்....

      ஆனாலும் பகாளா பாத் என்று சொன்னால் ஒரு கெத்து வருதோ (தயிர் சாதத்திற்கு)

      நீக்கு
  14. மிக அருமையான பொங்கல், ஊரில் அப்பாவின் நண்பர் குடும்பம் கற்கண்டுப் பொங்கல் செய்வார்கள் தைப்பொங்கலுக்கு... நமக்கு நிட்சயம் தருவார்கள், அந்தப் பொங்கலுக்காக காத்திருப்போம்.
    அது தனிப் பாலில் பொங்கி கற்கண்டு சேர்ப்பினம். வெள்ளையாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் ஊரைவிட்டு வந்தபிறகு தியாகம் செய்துவிட்டீர்கள் போலிருக்கு. அதனால்தான் 'தியாகத் திலக'மோ?

      நீக்கு
    2. வாங்க அதிரா. கலர் சேர்ப்பது ஒரு கவர்ச்சிக்கு.

      நீக்கு
  15. வெள்ளையாத்தானே இருக்கும். ஏன் மஞ்சளாச்சு ? அரிசிக்குத் தண்ணீர் எவ்வளவு ஊத்தணும்னு போடலையே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!