புதன், 28 அக்டோபர், 2020

செல்ஃபோனால் நன்மையா, தீமையா?

 


அதிரா : 

1. எப்படியும் வாழலாம் எனச் சிலரும், இப்படித்தான் வாழவேண்டும் எனச் சிலரும் வாழ்கின்றனரே... இதில் எது நல்லதென நினைக்கிறீங்க?

 # எப்படியும் வாழலாம் என்பவர்  எந்தக் கவலையும் இல்லாதவராகவும், மற்றவர் சிரமப் படுகிறவராகவும் இருந்தால் முடிவு தலைகீழாக இருக்கும்.

& 'வாழ நினைத்தால்' வாழலாம் - என்று அன்றே சொல்லிவிட்டாரே கவிஞர். அதாவது, எல்லோரும் இனிதே வாழ(வேண்டும் என்று) நினைத்தால்,  நினைப்பவர்கள், அவர்களின் சந்ததியினர் எல்லோரும் நன்றாக வாழ்வார்கள். மற்றவர்கள் ? தனக்கென வாழ்ந்தால் அவருடைய சந்ததியினர் தலையெடுப்பது கடினம். 

2. ஒருவர் நமக்கு நன்மை செய்து கொண்டிருக்கும்வரை, அவரை நல்லவர் வல்லவர் என, உச்சியில் தூக்கிப் பிடிக்கும் சமுதாயம், பின்னாளில் அவரால் இனி நமக்கு நன்மை இல்லை எனும் ஒரு நிலை வரும்போது, பழைசை எல்லாம் மறந்துவிடுகின்றதே... ஏன் மனிதருக்கு இப்படி ஒரு மனநிலை?

 # மன்னித்தல் மனித குணமோ இல்லையோ நிச்சயம் மறத்தல் மனித குணம்தான்.

& யாரைச் சொல்கிறீர்கள்? நான் பார்த்த வரை அப்படி யாரும் இல்லையே! 

3. இன்று ஒருவர் தன் குடும்பத்தைப் பாதியில் விட்டுவிட்டு, குடி, அல்லது வேறு பாதையில் போனால், அவரைக் கெட்டவர் எனத் திட்டுகின்றனர், ஆனால் அந்நாளில் ஞானி துறவி, நாட்டுக்குத் தியாகம் செய்தோர் என, இன்று நம்மால் போற்றப்படும் பலரும், பாதியில், சிவனே என தம் குடும்பத்தைத் தவிக்கவிட்டுவிட்டுப் போனோர்தானே? ஆனா அவர்களைப் போற்றுகிறோமே? இதுவும் ஒருவித சுயநலம்தானே?

# எத்தனை ஞானிகள் குடும்பத்தைத் தவிக்க விட்டுவிட்டு ஞானத்தைத் தேடினார்கள் ? 

எவரது குடும்பம் சிரமத்தை அனுபவித்தது ? 

மேலும் பொறுப்பின்றி அலைவது வேறு, மாயை என்றுணர்ந்து ஆன்மஞானம் தேடிச் செல்வது வேறு.  டாக்டர் கொலைகாரர் இல்லை.

& பாவம்! ஏதோ தெரியாமல் செய்துவிட்டார்கள். மன்னித்துவிடுங்கள். (ஆமாம் - ஒன்று கேட்கிறேன், சொல்லுங்க. சுற்றிலும் நாலைந்து மனைவிகள், மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் புடை சூழ ஒருவர், 'நான் ஞானி ஆகிவிட்டேன். நீங்களும் என் வழியில் நின்று ஆத்ம ஞானம் பெறுங்கள்' என்று சொன்னால் ---- நீங்க என்ன செய்வீர்கள்? )

கீதா சாம்பசிவம் : 

1. இப்போதைய குழந்தைகளுக்கு அறிமுகமே செல்ஃபோனில் பாட்டுக் கேட்பது, பார்ப்பது, கார்ட்டூன்கள் பார்ப்பது இவை தான்! எனக்குத் தெரிந்து 3, 6 மாசக் குழந்தைகளே பார்க்கின்றன. மோகன் ஜி கூட இதைப் பத்தி எழுதி இருந்தார். இது நல்லதல்ல என்று என் கருத்து! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

 # செல் ஃபோன் ஆதிக்கம் மிக அதிகம்தான். அது நல்லதில்லைதான்.  தவறு "பெரியவர்கள்" தரப்பில். 

& இன்னும் இரண்டு வருடங்களுக்கு, பள்ளிப்பாடங்கள் முழுவதும் செல் ஃபோன் மூலமாகத்தான் என்று ஆகிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு நாளும் செல் ஃபோனை ஐந்து மணி நேரம் பார்த்தே வகுப்பு அட்டென்ட் செய்த மாணவர்கள் எல்லோரும் அப்புறம் செல்லைப் பார்த்தாலே வெளியே ஓட ஆரம்பித்துவிடுவார்கள்! 

2. குழந்தைகள், பெரியவர்கள், அப்பா, அம்மா எல்லோருமே செல்ஃபோனில் மூழ்கி இருப்பது போல் ஒரு வீடியோ வாட்சப்பில் உலா வருகிறது. அவரவர் பிறரைப் பற்றிய நினைவே இல்லாமல் மூழ்கி இருப்பார்கள், சின்னக் குழந்தை உட்பட. அவங்களுக்கெல்லாம் பசி, தாகம்னு வந்தால் என்ன செய்வாங்க?

# செல் ஃபோனில் பீட்ஸா கோக்  ஆர்டர் செய்யலாம் !!

3. செல்ஃபோனால் நன்மையா, தீமையா? பட்டியல் கொடுங்க.

# செல்ஃபோன் பிரச்சினைகள் குறித்து இவ்வளவு விவரமாக  கேள்வி கேட்டபின் பட்டியல் கேட்பது நியாயமில்லை. 

& தீபத்தை வைத்துக்கொண்டு திருக்குறளும் படிக்கலாம், வீட்டையும் எரிக்கலாம். உபயோகிப்பவர் சரியாக இருந்தால் எல்லாம் நன்மையே. 

4. யாரைப் பார்த்தாலும் கையில் செல்ஃபோன் இல்லாமல் இருப்பதில்லை. பலரும் மணிக்கணக்காய்ப் பேசவும் செய்கிறார்கள். எனக்கெல்லாம் அப்படி யாரும் பண்ணுவதே இல்லை. நானும் யாருடனும் பேசுவது இல்லை! தப்பு என் மீதா? அல்லது இது சரியானதா?

# செல் இருக்கிறது. பேச பணம் கட்டியாகிவிட்டது. நெருக்கமானவர்களுடன் நிறையப் பேசலாமே. அவர்களும் நம்மை அழைக்கலாம்தான்.  தவறு இரு பக்கமும்.

& நானும் செல் போனில் நீண்ட நேரம் பேசுவது இல்லை. ஆனால், செல் ஃபோன் - voice typing மூலம் Blog கமெண்ட் செய்வது உண்டு. வாட்ஸ் அப், facebook பார்ப்பது, கமெண்ட் செய்வது உண்டு. amazon மூலம் பொருட்கள் ஆர்டர் செய்வது உண்டு. email பார்ப்பது கூட செல் ஃபோன் வழியில்தான் பெரும்பாலும். wordweb டிக்ஷனரி ஆப் மூலம் ஆங்கில அகராதி அடிக்கடி பார்த்து சில வார்த்தைகளின் அர்த்தங்கள் தெரிந்துகொள்வேன். மொபைல் banking, ஸ்டாக் மார்க்கெட் நிலவரம், ரேடியோ கேட்பது, கால்குலேட்டர் எல்லாமே மொபைல் மூலமே! loneliness போக்குவதற்கு சிறந்த சாதனம் மொபைல் ஃபோன் மட்டுமே! 


நெல்லைத் தமிழன்: 


இந்த மாதிரி படங்கள் பார்த்திருக்கேன். அசுரர்கள்னா அழகில்லாத குரூரமானவர்கள், நல்லவங்கன்னா அழகுடையவர்கள் என்ற பொதுப் புத்தி எப்படி உருவாகிறது?

# சினிமா தாக்கம் தான். 

அரக்கி மாதிரியான நெகடிவ் கேரக்டர்களை அழகான நடிகர் நடிகை செய்தால் ஆடியன்ஸ் சிம்பதி அவர்கள் பக்கம் சாயும் என்ற கோட்பாடு இருக்கிறது.

& அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதால்தான் இப்படி சித்தரித்தார்களோ? 

நகரத்தார் உணவு வகை, பிராமணர்கள் உணவு, சௌராஷ்டிரர்கள்-பட்டுநூல் காரங்க உணவு என்பதுபோல சமூக்க் குழுவிற்கான செய்முறை, உணவுகள் எப்படி உருவாகியிருக்கும்?

# சிறு குழுக்களாகத்தானே ஆரம்ப கால சமூகம் இருந்தது, எனவே பொருள், தட்பவெப்பம் சார்ந்து சமையல் கலை பரிணமித்திருக்கும்.

நம் ரசனை பிறருக்கு இல்லை என்பதால் அவர்கள் ரசிப்பவற்றை எள்ளல் நல்ல குணமா?

# நல்ல ஒன்றை நான் ரசித்தேன்.  நீங்களும் அதை ரசிக்க அழைக்கிறேன்.  அதன்றி உன் ரசனை மட்டம் என்று ஒருவர் சொல்வாராயின் இணக்கம் மறைந்து பிணக்கு உருவாகிறது.

& எள்ளல் நல்ல குணமே இல்லை! நீங்க ரசிங்க சார்!! (இப்போ நீங்க ரசிப்பது, லேடஸ்ட் யாரு என்று மட்டும் எனக்கு காதோடு சொல்லிடுங்க.) 

ரசனை ஏன் ஒவ்வொருவருக்கும் மாறுகிறது?

# லோகோ பின்ன ருசி என்பது மகா சத்யம். அதுதான் வாழ்க்கையில் சுவாரசியத்தை தாங்கி நிறுத்துகிறது.

& எல்லோருக்கும் ஒரே மாதிரி ரசனை என்று ஆகிவிட்டால் போரடிக்கும் சார். ரசனைகள் வெவ்வேறாக இருப்பதுதான் நல்லது. 

( காதலிக்க நேரமில்லை ஜோக் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. 

சச்சுவின் அப்பா - நாகேஷிடம்  : " தம்பி, நீ சினிமாப் படம் எடுக்கிறேன்னு சொல்லிக்கிட்டு சுத்திகிட்டு இருக்கியே, இது வரைக்கும், என் பொண்ணு மீனலோசனியை, மீனாவை, ஒரு போட்டோ எடுத்திருக்கியா நீ?" 

நாகேஷ் : " என்னது? போட்டோவா - அட போய்யா நீயும் உன் ரசனையும்! " ) 

====================

உங்கள் கவனத்திற்கு ! 

இந்தப் பதிவின் பின்னூட்டப் பகுதியில் நீங்கள் எங்களைக் கேட்கும் கேள்விகளும், அதற்கு நாங்கள் சொல்லும் பதில்களும் நவம்பர் 4 புதன் பதிவில் வெளியாக உள்ளன. 

அந்தக் கேள்விகளும், பதில்களும் மின்நிலா நவம்பர் 9 அன்று வெளியாகின்ற தீபாவளி சிறப்பிதழிலும் இடம் பெறும். 

ஆகவே, மின்நிலா தீபாவளி சிறப்பிதழில் உங்கள் பெயரும் இடம்பெற வேண்டும் என்றால், எல்லோரும் இங்கே நிறைய கேள்விகளை இந்த வாரம் பதிவு செய்யுங்கள். 

இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! 

இணையத்தில் உங்கள் பெயர் இனி எதிர்காலம் முழுவதும் காணக்கிடைக்கும். பொன்னான வாய்ப்பு! 

(உங்கள் பெயரை நீங்க google search window வில் கொடுத்து, இணைய உலகில் அது எவ்வளவு இடங்களில் அது பதிவாகியுள்ளது என்று பார்த்தது உண்டா?)  

தற்சமயம், மின்நிலா வார இதழ், doctroid, google drive, facebook  தளங்களில் வெளியடப்பட்டு வருகின்றது. twitter, whatsapp குழுக்கள் மூலமாகவும் பகிரப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் நூறு வாசகர்கள் மட்டும் படித்த இந்த இதழ், தற்போது ஐநூறு வாசகர்களுக்கும் மேலாக எண்ணிக்கையைப் பெற்றுள்ளது. 

தீபாவளி சிறப்பிதழ், குறைந்தபட்சம் ஆயிரம் வாசகர்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கிறோம். 

வாசகர்களின் நீடித்த ஆதரவுக்கு எங்கள் நன்றி. 

==========

130 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். குறைந்து வரும் அசுர வியாதி தொடர்ந்து குறையவும் அடியோடு இல்லாமல் போகவும் அம்பிகையைப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  3. அட? நான் கேள்விகள் கேட்டிருந்தேனா? நினைவில் இல்லையே! பதில்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கேஜிஜி அவர்கள் மின் நிலாவுக்காக உழைக்கிறார். விளம்பரங்கள் எல்லாம் கொடுக்கிறார். நல்லா இருக்கு. மின் நிலாவில் வர மாதிரி என்ன கேள்வி கேட்கலாம்? இதையே ஒரு கேள்வியா வைச்சுக்கலாமா?

    பதிலளிநீக்கு
  4. //எத்தனை ஞானிகள் குடும்பத்தைத் தவிக்க விட்டுவிட்டு ஞானத்தைத் தேடினார்கள் ?
    எவரது குடும்பம் சிரமத்தை அனுபவித்தது ? // ஸ்ரீராமாநுஜர் மனைவியைத் தவிக்க விட்டுவிட்டுத் துறவறம் மேற்கொண்டார். ராகவேந்திரரும் அப்படியே. குடும்பங்கள் சிரமப்பட்டதோ என்னமோ மனைவியருக்கு சிரமமாகத் தான் இருந்திருக்கிறது. இன்னும் இருக்கும். பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராவுக்கு அதிரடி சப்போர்ட்!

      நீக்கு
    2. ஆஆஆ காலையில் வர முடியல்லியே என்னால.. கீசாக்கா கர்ரெக்ட்டாச் சொல்லிட்டீங்க... இப்படியானோரை மனதில் வைத்தேதான் கேள்வி கேட்டேன்....
      அவர்கள் நாட்டுக்காகப் போனாலும் குடும்பத்தினரின் நிலை கவலைதானே... அப்படி எனில் திருமணம் முடிக்காமல் போயிருக்கலாமே....

      நீக்கு
    3. திருமணம் ஆனதால்தான் மனசு வெறுத்துப் போய் ஞானம் தேடக் கிளம்பினார்கள்!

      நீக்கு
    4. @கௌதமன், அப்படி எல்லாம் இல்லை. இவர்கள் மட்டுமில்லாமல், காந்தி உட்பட எல்லாருமே மனைவியைக் கஷ்டப்படுத்தி இருக்காங்க! அதிலும் காந்தி! வீட்டை விட்டு வெளியே தள்ளிக் கதவைச் சார்த்தி இருக்கார்! :(

      நீக்கு
    5. சத்தியமாக் காந்தித்தாத்தா மனைவியைப் படுத்திய தொல்லைகளையும் விட்டுவிட்டுப் போனதையும் மனதில் நினைத்தேன் ஆனா கீசாக்கா அவரின் படுபயங்கர ரசிலை என்பதால சொல்லாமல் விட்டேன் ஹா ஹா ஹா

      நீக்கு
    6. @அல்லிராணி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  5. //(உங்கள் பெயரை நீங்க google search window வில் கொடுத்து, இணைய உலகில் அது எவ்வளவு இடங்களில் அது பதிவாகியுள்ளது என்று பார்த்தது உண்டா?) // Yessssssu

    பதிலளிநீக்கு
  6. நான் வரலைனா என்னைத் தேடுவாங்க. நான் வந்தால் வர மாட்டாங்க! இஃகி,இஃகி,இஃகி, எங்கே ஸ்ரீராம் உள்பட எல்லோரும் ஒளிஞ்சுண்டு இருக்காங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றிலிருந்து ஐந்து நாட்கள் பிஸி. ஆனா நீங்க ஆஜர் ஆனதைப் பார்த்தாச்சு. என்ன கேள்விகள் கேட்பது எனத் திகைத்ததையும் நோட் பண்ணியாச்சு.

      நீக்கு
    2. அதானே! நெல்லைக் தமிழன் பார்க்காது இருப்பாரா!

      நீக்கு
    3. நெ.த. மெதுவா வாங்க எல்லாத்தையும் முடிச்சுட்டு! அவசரமே இல்லை. இதான் முக்கியம்.

      நீக்கு
  7. அதிராவின் கேள்வி சிந்திக்க வைத்தது. ஒரு செயலுக்கு நோக்கம் என்ன, அதை எப்படி அடைந்தார் என்பதைப் பொருத்துத்தான் செயல் நல்லதா கெட்டதா என்று தீர்மானம் செய்ய முடியும்.

    நாலு பேருக்கு நல்லது கிடைக்கும்னா எது செஞ்சாலும் தப்பில்லை என்று உலக்கை வசனம் பேசியிருக்கிறாரே

    பதிலளிநீக்கு
  8. ஓய்வு காலத்தில் வாழ்க்கையை அசைபோடும்போது, இப்படித்தான் வாழ வேணும் என நினைத்து வாழ்பவருக்கு வாழ்ந்ததன் அர்த்தமும் திருப்தியும் கிட்டும். எப்படியும் வாழலாம் என வாழ்ந்தவர், வாழ்க்கையை வீணாக்கிவிட்டேனே என வருந்தும் சந்தர்ப்பம் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஒவ்வொருவரும் கடைசி காலத்தில் கஷ்டப்படவில்லை என்றால், தான் வாழ்ந்த முறைதான் சரி என்று நினைப்பார்கள்.

      நீக்கு
    2. ..கடைசி காலத்தில் கஷ்டப்படவில்லை என்றால், தான் வாழ்ந்த முறைதான் சரி என்று நினைப்பார்கள்.//

      அப்போது, தான் ’வாழ்ந்த முறை’பற்றி யோசித்துக்கொண்டிருக்கமாட்டார்கள். ’ஜாங்கிரி சாப்ட்டு எவ்வளவு நாளாச்சு. இந்த வீட்லேர்ந்து அது வரும்னு தோணலை. வெளிலபோயி வாங்கிச் சாப்ட்றவேண்டியதுதான்..’ என்று நினைப்பார்கள்..

      நீக்கு
    3. //ஒவ்வொருவரும் கடைசி காலத்தில் கஷ்டப்படவில்லை என்றால்,// - அப்படி இல்லை. பெரும்பாலானவர்கள் கஷ்டப்படுவதில்லை. வாழ்க்கையில் தவறு செய்யாதவர்களும் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

      அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்ற காலத்தில் யோசிக்கும்போது தாங்கள் செய்த தவறுகள் நல்லனவைகள் மனதுக்குள் வரும்.

      ஏகாந்தன் சார்... தான் மட்டும் சாப்பிடுவது என்ற எண்ணமே நல்லாத் தெரியலையே.

      நீக்கு
    4. எனக்கென்னமோ.. எப்படியும் வாழலாம் என, அடுத்தவர் பற்றிச் சிந்திக்காமல் மனம் போன போக்கில் வாழ்வோர்தான் இக்காலத்தில் நல்லாயிருக்கினமோ எனும் சந்தேகம் எழுந்தது.. அதனாலதான் கொஸ்ஸன்:) மலர்ந்தது:))

      நீக்கு
    5. அல்லிராணியின் சந்தேகம் எனக்குள்ளும். அடுத்தவருக்கு துரோகம் செய்பவர்கள் தான் சமூகத்தில் நல்லவர்களாகத் தெரிகின்றனர். பணத்தாசை பிடிச்சவங்க தான் நல்லவங்களாத் தெரியறாங்க!

      நீக்கு
    6. சேம் பின்ச் :)  கீதாக்கா உங்களை கிள்ளினா வலிக்கும் அதனால் உங்களுக்கும் சேர்த்து அதிரடியை நல்ல்லா சேம் பின்ச்சுக்கு கிள்ளிக்கறேன் :)

      நீக்கு
    7. என் மனதில் இந்த ஆதங்கம் இப்போல்லாம் அதிகமா தோணுது .

      நீக்கு
    8. ஏதோ சில சமீபத்து நிகழ்வுகளை மட்டும் வைத்து, அவசர முடிவுகள் எடுக்கவேண்டாம் என்று தோன்றுகிறது.

      நீக்கு
    9. அவசர முடிவெல்லாம் இல்லை. அவங்க காலம் முழுவதும் எல்லாம் நன்றாக அனுபவித்துவிட்டுத் தான் போகிறார்கள். கஷ்டம் அனுபவிப்பவர்கள் கடைசி வரை கஷ்டம் அனுபவித்துக் கொண்டே இருக்காங்க.

      நீக்கு
  9. புது கேஸ் அடுப்பு இருக்கிறது என்பதற்காக 24 மணி நேரமும் கீசா மேடம் சமைத்துக்கொண்டே இருக்கிறார்களா? இல்லை மடிக்கணிணி வந்துவிட்டது என்று அம்போன்னு விட்ட திருவரங்க உலாவை எழுதி முடிக்கிறாரா?

    செல் என்பது அவசியத்துக்குத்தான். அதற்கு அடிமையாவதற்கு அல்ல. அவசியம் வரும்போது எதுவும் அதிகமாக உபயோகிக்கப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புது கேஸ் அடுப்பு இருக்கிறது என்பதற்காக//
      ஓ நான் இல்லாத காலத்தில இப்பூடி எல்லாம் வாங்கியிருக்கிறாவோ கீசாக்கா.. அப்போ கடையில இனி வாங்க மாட்டா:))

      நீக்கு
    2. அல்லி ராணி, நான் காஸ் அடுப்பெல்லாம் வாங்கலை! போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓன வருஷம் ஒரு இன்டக்‌ஷன் ஸ்டவ் வாங்கினோம். அதைக் கொஞ்ச நாட்கள் தான் பயன்படுத்தினோம். பின்னர் விருந்தாளிகள் அதிகம் வராங்க என்பதால் பழசையே எடுத்து வைச்சுட்டேன். அதன் பின்னர் மாத்தவே இல்லை. ஏனெனில் விருந்தாளிகள் எல்லோருக்கும் அந்த இன்டக்‌ஷன் ஸ்டவ் பழசோ/புதுசோ பயன்படுத்தத் தெரியலை. பாலைப் பொங்க விடுவாங்க! இல்லைனா சின்ன டபராவில் (காஃபி ஆற்றுவது) பாலை
      வைச்சுட்டு வந்து பேச உட்கார்ந்துடுவாங்க. ஒருதரம் ஒரு முக்கிய விருந்தாளி
      அது மாதிரிப் பண்ணச் சமையலறையில் புகை மண்டலம். பயந்துட்டோம். பாத்திரமே எரிய ஆரம்பிச்சிருந்தது. அவங்களை எல்லாம் நீங்க செய்ய
      வேண்டாம்னாலும் கேட்க மாட்டாங்க! எனக்கு உதவுவதாக எண்ணிக்
      கொள்வார்கள். :)))))) தாட்சண்யம் பார்க்க வேண்டி இருக்கு!

      நீக்கு
    3. மடிக்கணினி பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கு நெ.த. இப்போப் புதுசா எதுவும் வாங்கலை.

      நீக்கு
  10. இன்றைய அனைத்து கேள்வி பதில்களும் சிறப்பு முதல் கேள்வி வெகு சிறப்பூ...

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் நன்றாக உள்ளது.

    இப்படித்தான் வாழ வேண்டும் என நினைக்கும் போது அதில் அவரின் சுயநலன்களுக்கு மற்றவர்கள் பலியாவதை அவர்கள் சிந்திப்பதில்லை. ஆனால்,அந்த சிந்திக்காத அந்த எண்ணந்தான் அவர்களுக்கு பலம்.

    சகோதரி கீதா சாம்பசிவம் சொல்வது போல் இப்போது அனைவரிடமும் செல்ஃபோன் பழக்கம் மற்றொரு கையாக முளைத்துள்ளது. அவரின் முதல் கேள்வியும், அதற்குரிய பதிலும் உண்மைதான். "பருகப்பருக பாலும் புளிக்கும்." என்பது போல், ஃபோனும் போதுமென்ற எண்ணம் வந்து விடும். ஆனால், பாலாக தந்தால்தானே புளிக்கும்...இன்றுள்ள விஞ்ஞான முன்னேற்றத்தில், பாலினால் விதவிதமாக பண்டங்கள் என்ற கணக்கில் இது போன்ற உபயோக சேவைகள் நிறைய வந்து விட்டதே..!

    சகோதரர் நெல்லைத் தமிழரின் கேள்வியில், அந்தப்படம் பார்க்கும் போது நினைவுக்கு வருகிறது. சினிமாவில் அரக்கிகளாக நடிக்க வில்லி பாத்திரத்தில் வரும் நடிகைகளை தேர்ந்தெடுப்பார்கள். உருட்டும் விழிகள் அவர்களுக்கு உதவியாக இருக்கும். தங்கள் பதிலும் உண்மைதான்.

    ரசனைக்கு "காதலிக்க நேரமில்லை" ஜோக் மறக்காமல் சொன்னது நன்றாக உள்ளது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதில் அவரின் சுயநலன்களுக்கு மற்றவர்கள் பலியாவதை அவர்கள் சிந்திப்பதில்லை.// - அது எப்படி கமலா ஹரிஹரன் மேடம்? 'இப்படித்தான் வாழவேண்டும்' என்பதே உயர்ந்த கொள்கைகளால்தானே வரும். அப்படி உயர்ந்த கொள்கைகள் இருப்பது சுயநலம் என்று எப்படிச் சொல்ல முடியும்? தாய், தன் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழணும் என்ற சுயநலம், அவர்களுக்கு வேளா வேளைக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க அவரைத் தூண்டியதுனுலாம் சொல்லமுடியுமா?

      பிரின்ஸிபிள் உடன் (தான் நம்புகின்ற உயர்ந்த நோக்குகள்) ஒருவர் வாழ்ந்தால், அவரைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும். ஆனால் அதை அவர் செய்வது உயர்ந்த நோக்கில்தான். லஞ்சம் வாங்குவதில்லை என்று ஒருவர் இருந்தால், அவரால், அவரது அலுவலக சகாக்கள், பயனாளிகள், அவரது வீட்டார் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஒரு நாள் உலகத்தை விட்டுப் போகும்போது, அவர்கள் அனைவரும் குறைவான பாவமே செய்திருப்பர். இது போதாதா?

      நீக்கு
    2. நெல்லைத்தமிழர் சொல்வது போல் உயர்ந்த கொள்கைகள் இருப்பவர் மட்டும் இப்படி வாழணும்னு நினைப்பதில்லை. மாறாக நினைப்பவர்களும் உண்டு! இதான் எனக்குப் பிடிச்சிருக்கு! நான் இப்படித்தான் இருப்பேன் என்பவர்கள் உண்டு.

      நீக்கு
    3. //இதான் எனக்குப் பிடிச்சிருக்கு! நான் இப்படித்தான்// - நீங்க சொன்ன பிறகுதான் எனக்கு இது தோணுது. அப்படியும் சிலர் இருக்காங்க. நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. நான் இப்படித்தான் இருப்பேன் என்று அடுத்தவங்களைப் படுத்துவது. இதெல்லாம் அவரவர் மனைவிட்ட கேட்டா கரெக்டா கேரக்டரைச் சொல்லிடுவாங்க. நானும் இப்படியோன்னு அப்போ அப்போ தோணுது.ஹாஹா

      நீக்கு
    4. ஆண் மட்டுமில்லை நெல்லையாரே, பெண்களிலும் இப்படித்தான் இருப்பேன், உன்னால் முடிஞ்சதைப் பண்ணிக்கோனு சொல்பவர்கள் அதிலும் கணவனிடம் சொல்பவர்கள் உண்டு.

      நீக்கு
    5. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      நான் சிலதை நினைத்து எழுதியதை சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் ஆமோதித்து விட்டார். நானும் அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். உயர்ந்த நோக்கில் அப்படிபட்ட குணங்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால், ஒரு உறவினர் வீட்டுக்கு சில நாட்கள் தங்கச் செல்லும் போதும், இல்லை பல உறவுகள் நம் வீட்டில் விஷேடத்திற்காக, இல்லை வேறு சூழ்நிலையில் தங்க வந்தாலும், "எங்கள் பழக்கம் இப்படித்தான் வாழுவோம்..! யாருக்காகவும் விட்டுத் தந்து மாற்றிக் கொள்ள மாட்டோம்.." என்று இருப்பதைதான் குறிப்பிட்டேன். வேறு ஒன்றுமில்லை.நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. கமலா ஹரிஹரன் குறிப்பிட்டிருக்கும் விஷயத்தில் எனக்கும் அதே போல் தான் நடந்திருக்கிறது. உதாரணமாக நான் எச்சில், பத்து பார்ப்பேன். வீட்டிற்கு வருபவர்கள் பார்க்கலைனா, "எங்க வீட்டில் பார்க்க மாட்டோம். இங்கே மட்டும் பார்க்க முடியுமா?" என்று கேட்பார்கள். எல்லாவற்றையும் கலப்பார்கள். மனசே நொந்து போயிடும்.

      நீக்கு
  12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  13. // ஆயிரம் வாசகர்களை..//

    அதற்கு மேலும் சென்றடைய வேண்டும்..

    வளர்க மின்நிலா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் ஆதரவும், அன்புமே, எங்கள் வளர்ச்சிக்கு உதவி. நன்றி.

      நீக்கு
  14. வழக்க்ம் போல இன்றைய பதிவும் அருமை..

    பதிலளிநீக்கு
  15. இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!//

    ஆஹா! குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் என ஒவ்வொன்றாய் ஞாபகத்துக்கு வருதே ..

    பதிலளிநீக்கு
  16. ..தீபாவளி சிறப்பிதழ், குறைந்தபட்சம் ஆயிரம் வாசகர்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கிறோம்.//

    வெற்றி மீது வெற்றி வந்து உம்மைச் சேரும்ம்..
    அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் எம்மைச் சேரும்..!

    பதிலளிநீக்கு
  17. அதிரா பட்டிமன்ற தலைவி ஆக இருந்திருப்பாரோ? அல்லது ரீச்சர் என்பதால் இயல்பாகவே கேள்விகள் கேட்க முடிகிறதோ? கேள்வியும் நன்று பதிலும் நின்று.
     
    கேள்வி பிறந்தது அன்று. நல்ல பதிலும் கிடைத்தது இன்று. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  18. மேலே உள்விழுந்து பேசி வந்ததால இங்கின வர லேட்டாகிட்டுது:)).. கொமெண்ட்டுகளுக்குப் பதில் போட்டு வந்ததைச் சொன்னேன்:)).. ஸ்கூல் நாட்களில் எட்டிப் பார்க்காமல் இருந்த என்னை.. இன்று சிக்க வச்சிட்டீங்க..:))

    அனைத்துக் கேள்விகளும் பதில்களும் அழகு.. ஆனாலும் காதைக் கொஞ்சம் சனரைசர் போட்டுத் துடைச்சுப்போட்டுக் கிட்டக் கொண்டு வாங்கோ கெள அண்ணன்:)) ரகசியம் ஜொள்ளப்போறேன்:)).. என் கேள்விக்கான உங்களின் பதில்கள் எதுவும் புரியல்லேஏஏஏஏஏஏஏஏஏஏஎ ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
  19. // # மன்னித்தல் மனித குணமோ இல்லையோ நிச்சயம் மறத்தல் மனித குணம்தான்.///

    மனித குணம்தான் எனினும்.. ஒருவர் செய்த நல்ல விசயங்களை மறத்தல் சரியோ என்பதுதானே என் கிளவி சே..சே கேள்வி:)).. சரி சரி போகட்டும்...

    //(ஆமாம் - ஒன்று கேட்கிறேன், சொல்லுங்க. சுற்றிலும் நாலைந்து மனைவிகள், மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் புடை சூழ ஒருவர், 'நான் ஞானி ஆகிவிட்டேன். நீங்களும் என் வழியில் நின்று ஆத்ம ஞானம் பெறுங்கள்' என்று சொன்னால் ---- நீங்க என்ன செய்வீர்கள்? )///

    இது ஆரைச் சொல்றீங்க? எங்கட கண்ணதாசன் அங்கிளையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... எனக்கு எப்பவும் மனிதரைக் கும்பிடுவதோ.. ஞானம் பெறுவதோ பிடிக்காதாக்கும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லி ராணி, உங்கட கண்ணதாசன் அங்கிள் இல்லை! :)))) அது சரி ஒருத்தர் திரும்பத் திரும்பத்தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தால் அவங்களை மன்னிக்க முடியுமா? (அடுத்த வாரத்துக்கான கேள்வி)

      நீக்கு
    2. ..////சுற்றிலும் நாலைந்து மனைவிகள், மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் புடை சூழ ஒருவர், ///

      ஹாஆஆஹாஆஆ ஹையோஓஓ நான் ஒன்னும் சொல்லல ஆந்திராவை கட்டையால்  அடிச்சு கேட்டாலும்  என் வாய்லருந்து எதுவும் வராது 

      நீக்கு
    3. ///ஆந்திராவை/// its alli athiraaa :)))))))))))

      நீக்கு
    4. இதுல என்னவோ உள்குத்து இருக்கோ? தெரியலையே வைரவா!

      நீக்கு
    5. //இதுல என்னவோ உள்குத்து இருக்கோ? தெரியலையே வைரவா!//

      ஹா ஹா ஹா கெள அண்ணன்.. அதிராவைக் கட்டையால அடிப்பேன் என்றதை அந்த வைரவர் பொறுக்காமல் ஆந்திரா ஆக்கிட்டார்:))

      நீக்கு
  20. செல்ஃபோன் பற்றி ஏற்கனவேயும் “ஆராட்சி அம்புஜம்” கேட்டு நிறையப் பதில்கள் பறிமாறியுள்ளோம் என நினைக்கிறேன்.

    செல்போனால நன்மைதானே தவிர தீமை குறைவு... கணவர்..மனவி..பிள்ளைகள் வெளியே போயிட்டால், செல்போன் கையில் இல்லை எனில் வீடு திரும்பும்வரை திக்குத்திக்கென இருக்கும்... இதுவே நமக்கு கிடைத்த பெரிய நன்மைதானே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அல்லி ராணி, ஒரு முறை மாயவரம் போனப்போக் கும்பகோணத்துக்குப் பேருந்துக்குக் காத்திருந்தோம். பேருந்து வந்தது, வரும்போதே உள்ளே பயணிகளுடன். நாங்க முண்டி அடிச்சு ஏற வேண்டி இருந்தது. நான் ஏறிட்டேன். அப்போல்லாம் துள்ளிக் குதித்து ஏறுவோமே! அவரால் ஏற முடியலை, கூட்டத்தில் பின் தங்கிட்டார், ஆனால் "கீதா, கீதா" எனக் கூப்பிட்டுக் கொண்டு பேருந்தைச் சுற்றி வந்தார், நான் இங்கே இருக்கேன், இருக்கேன் என்று கூப்பிடுகிறேன், கவனிக்கவே இல்லை. அப்புறமா யாரோ பார்த்துட்டு அவரிடம் சொல்லப் பேருந்துக்கு வந்தார். அன்னிக்குத் தோணியது இருவர் கையிலும் அலைபேசி இருக்கணும்னு. அதுவரைக்கும் வாங்கவே இல்லை. அதன் பின்னர் வாங்கிக் கொண்டோம்.

      நீக்கு
    2. ///அப்போல்லாம் துள்ளிக் குதித்து ஏறுவோமே! அவரால் ஏற முடியலை, ///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா என்னா ஒரு பெருமை:)).. எனக்கும் இப்பூடி அப்பப்ப பெருமை வரும் இங்கயும் ஹா ஹா ஹா:))

      நீக்கு
    3. ஹாஹாஹா அல்லி ராணி, அந்த அர்த்தம் வருதா? ஆனால் உண்மையில் நடந்தது, பெண்கள் முண்டி அடித்துக் கொண்டிருந்த காரணத்தால் அவரால் ஏற முடியலை. ஆனால் நான் எங்கேயாவது கூட்டத்தில் நசுங்கி மூச்சுத் திணறிக் கொண்டு இருப்பேனோனு பயந்துட்டார். :)))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு கூட்டம். :( அது ஆச்சு 20 வருஷம். இப்போல்லாம் பேருந்திலே ஏறுவதையே விட்டுட்டோம்.

      நீக்கு
  21. ///இந்த மாதிரி படங்கள் பார்த்திருக்கேன். அசுரர்கள்னா அழகில்லாத குரூரமானவர்கள், நல்லவங்கன்னா அழகுடையவர்கள் என்ற பொதுப் புத்தி எப்படி உருவாகிறது?//

    ஆஆஆஆஆஆஆஆ இந்த விரத காலத்தில போய்.. நம் கடவுள்களை ஜந்தேகப்படுறார் நெல்லைத்தமிழன்:)).. ஆரோ எப்பவோ ஆரம்பித்து வைத்தார்கள்.. அதை நாம் தொடர்கிறோம்...

    அழகானவற்றைப் பார்த்தால் மகிழ்ச்சி ஏற்படுகிறது.. அதனால்கூட இருக்கலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசுரர்களில் மஹாபலியை அழகானவராகவே காட்டுவார்கள். ராவணனையும் கூட! ஆனால் உம்மாச்சிங்களிலே பயங்கரமான தோற்றத்தோடு சரபர், நரசிம்ஹர், ப்ரத்யங்கிரா தேவி ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். காளி கூடக் கொஞ்சம் பயங்கரமாகவே காட்சி கொடுப்பாள். ஆனால் நமக்கு பயம் வரதில்லை. உம்மாச்சினு தெரிஞ்சதாலேயா? அப்படித்தான் இருக்கும்.

      நீக்கு
    2. அப்படியும் இருக்கலாம்!

      நீக்கு
    3. ..அசுரர்களில் மஹாபலியை அழகானவராகவே காட்டுவார்கள். ராவணனையும் கூட!//

      பத்திருபது தலய வச்சிண்டு அழகென்ன வேண்டியிருக்கு.. அழகு..!

      நீக்கு
    4. @ஏகாந்தன், ராவணனுக்குப் பத்து தலை என்பது உண்மையிலேயே இல்லை. அதன் தாத்பரியமே வேறே. பின்னர் விபரமாகச் சொல்கிறேன். :))))

      நீக்கு
  22. //நம் ரசனை பிறருக்கு இல்லை என்பதால் அவர்கள் ரசிப்பவற்றை எள்ளல் நல்ல குணமா?//
    ஆஆஆஆஆஆஆஆஅ கனியிருப்பக் காய் கவர்ந்திட்டார் நெ தமிழன்:)).. அதாவது ஈசித்தமிழ் இருக்க:), அதிராவுக்குப் புரியாத தமிழ் தேடிப் போட்டிட்டார்ர்.. கர்:))..

    //“எள்ளல்”//.. வசனத்துடன் சொன்னமையால்.. நகைத்தல் எனப் புரிகிறது .. நேக்கு டமில்ல டி ஆக்கும்..:))..

    இது ரசனையில் மட்டுமில்லை நெ தமிழன், நான் எப்பவும் பலரோடு சண்டைப்பிடித்த விசயம்.. உணவில்...
    அதாவது.. சிலர் இறைச்சியை ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவார்கள், ஆனா எங்காவது கருவாட்டு வாசம் வந்தால்.. மூக்கைச் சுழிப்பார்கள்.. சே..சே.. இதை எப்படிச் சாப்பிடுகினமோ என்று...

    இப்படியானவற்றுக்கே நான் சண்டைப்பிடிப்பேன், நமக்குப் பழகிவிட்ட ஒன்று நமக்கு இனிமையாக இருக்கிறது, ஆனா இன்னொருவருக்கு அது அருவருப்பாக இருக்கும்.. அதுக்காக அடுத்தவரை பழிக்கக்கூடாதெல்லோ..

    சைனீஸ் பாம்பு சாப்பிடுகிறார்கள் என நகைப்போருக்கு நான் சொல்வது.. நீங்கள் மீன் சாப்பிடுவதைப் பார்த்து இப்படித்தான் , சாப்பிடாதோர் நகைப்பார்கள், அதனால அடுத்தவரைக் குறை சொல்லுவது தப்பு என...

    ஒவரா அலட்டிட்டனோ:)).. ஹையோ நேரமாச்சுதே எனக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சைனீஸ் பாம்பு சாப்பிடுகிறார்கள் என நகைப்போருக்கு நான் சொல்வது.. நீங்கள் மீன் சாப்பிடுவதைப் பார்த்து இப்படித்தான் , சாப்பிடாதோர் நகைப்பார்கள், அதனால அடுத்தவரைக் குறை சொல்லுவது தப்பு என...//

      ஓகே ஓகே :)  இனிமே உங்க அடுத்த டேபிளில் நீங்க டின்னர் போகும்போது எல்லாம் வெர்ர்ர்ர்ற்றரைடீ சைனீஸ் டிஷஸ் பரத்தி வைக்க சொல்லிடறேன் .மூக்கு கண்ணு சுழிசீங்களோ அவ்ளோதான் சொல்லிட்டேன் .பக்கத்துக்கு டேபிளில் இருக்கறதை பார்த்துகிட்டே உங்க தட்டில் இருக்கும் முறுகல் தோசையை சாப்பிடணும் :))))))

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆ என்னடா எங்கள்புளொக் இந்த ஆட்டம் ஆடுதே அப்பூடி ஆர் வெயிட்டான ஆட்கள் உள் ருழைகினம் என ஓசிச்சனா.. அட நம்ம அஞ்சு ஹா ஹா ஹா....

      நீங்க வேற அஞ்சு... அசைவம் சாப்பிடுவோர் விரும்பிச் சாப்பிடும் உணவில் றாலும் ஒன்றெல்லோ.. ஆனா எங்கட ஒரு மாமி, இராலைப் பார்த்தாலே புளு புளு எனக் கத்துவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ஒரு சித்தப்பா அசைவம் சாப்பிடுகிறவர்தான், ஆனா இப்போ எல்லோரும் அரிசியை குறைச்சு வரகு சாமை கொள்ளு கினோவா என மேல் நோக்கிப் போயிருப்பதால: ஆன்ரியும் சித்தப்பாவுக்கு வெள்ளைக் கினோவா செய்து கொடுத்தாவாம் அரிசிக்குப் பதில்.. அவர் அதைப் பார்த்திட்டுச் சொன்னாராம் ஹையோ இது என்ன இது வெள்ளைக் கறையானைப் புற்றோடு எடுத்து வந்த மாதிரி இருக்கு எனக்கு அருவருக்குது வேண்டாம் என ஹா ஹா ஹா ஒருவகைக் கினோவா... வெள்ளையாக ஆனா குட்டிக் கறுப்பு ருனியோடிருக்குமெல்லோ அது ஹையோ ஹையோ...

      நீக்கு
    3. கினோவா என்றால் என்ன? உப்புமாவா ?

      நீக்கு
    4. நம்ம ஊர்த் தினை மாதிரி மேல்நாடுகளில் கினோவா! நாங்க அதை வறுத்து உப்புமா, கஞ்சி எனச் சாப்பிடுவோம்/அங்கே இருக்கையில். இப்போல்லாம் நம்ம ஊர் வரகு, சாமை, தினை, குதிரைவாலி,எல்லாமும் கிடைக்கிறது. ஆனால் இந்தியன் ஸ்டோர்ஸில் மட்டும். கினோவா எல்லாக் கடைகளிலும் (வால்மார்ட், டார்கெட், HEB, Sams Club) எல்லாவற்றிலும் கிடைக்கும்.

      நீக்கு
  23. //ரசனை ஏன் ஒவ்வொருவருக்கும் மாறுகிறது?//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மனிசர் எல்லோரும் ஒரேமாதிரி அச்சிலிட்டதுபோல இருப்பின் ரசனையும் ஒரேமாதிரி இருக்க வாய்பிருக்கு.. இப்படிக்கு சயன்ரிஸ்ட் அதிரா:))

    பதிலளிநீக்கு
  24. ///இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

    இணையத்தில் உங்கள் பெயர் இனி எதிர்காலம் முழுவதும் காணக்கிடைக்கும். பொன்னான வாய்ப்பு! //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது ரொம்ம்ம்ம்ம்ப ஓவரு ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:))..

    ஒரு வைர நெக்லெஸ், வைர மூக்குத்தி, வைர ஒட்டியாணம் கிடைக்கும்.. அந்த வாய்ப்பை நழுவ விட்டிடாதையுங்கோ எண்டால்.. நாம் விட்டிடுவமோ?:) இல்ல கீசாக்காதான் விட்டிடுவாவோ:)) ஹையோ மீ எஸ்கேப்பூஊஊஊஊஊஊஊஊஊஉ..

    அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  25. மீ விரதம் இப்போ.. தொட மாட்டனாக்கும்:)).. இனிக் கந்தசஷ்டி எல்லாம் முடிச்சுத்தான்..:))

    https://steemit.com/funny/@nice.man/funny-cat-photos-with-quote-about-say-no-thanks-you

    பதிலளிநீக்கு
  26. கூட்டத்தில் காணாமல் போன அனுபவம் உண்டா?

    வெளியூர் போய்ச் செல்ல வேண்டிய இடத்துக்குப் போக வழி தெரியாமல் விழித்ததுண்டா? (இப்போல்லாம் கூகிள் படம்/வழிகாட்டினு இருக்கு. நான் கேட்பது பழைய அனுபவம்) எனக்கு உண்டு. பதிவா எழுதி இருக்கேன்.

    ஆற்றில் படகில் செல்கையில் நடுவழியில் படகு கிளம்பாமல் மாட்டிக் கொண்டு தவித்திருக்கிறீர்களா? உங்க படகு மாட்டிக் கொண்டிருக்கும் இடம் ஓர் முதலை மடுவாக இருக்கலாம்/இருந்தது. அப்போ என்ன செய்வீங்க?

    பயணங்கள் பிடிக்குமா? வீட்டில் இருக்கப் பிடிக்குமா?

    ஊரெல்லாம் சுற்றிவிட்டுக் கடைசியில் வீட்டுக்கு வந்து நம்ம படுக்கையில் "அப்பாடா"னு படுக்கும் அனுபவத்தை அனுபவிச்சிருக்கீங்களா?

    பேருந்து, ரயில் பயணங்களில் வெள்ளம், ரயில் நிறுத்தம் போன்றவற்றால் அவதிப் பட்டிருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையான மதச் சார்பின்மை என்றால் என்ன? அது இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறதா?
      கோயில்களுக்கு தினம் போகிறவர்கள் தான் பக்தி உள்ளவர்கள் என்னும் கூற்று சரியானதா?

      நீக்கு
  27. நமக்கு ஒருத்தர் செய்த கெடுதல் அவர்களை நாம் மனதார மன்னிப்பதால் மறந்துவிடும் எனச் சிலர் சொல்வது உண்மையா? உங்களுக்கு அந்த அனுபவம் உண்டா? (நான் அப்புறம் அவர்களோடு தொடர்பே வைச்சுக்காமல் விலகிடுவேன்.) மன்னிச்சேன்னு சொல்ல முடியாது. அவ்வளவு உயர்ந்த உள்ளம் இல்லையோ? தெரியலை! ஆனால் பின்னர் திரும்பிக் கூடப்பார்க்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் பின்னர் திரும்பிக் கூடப்பார்க்க மாட்டேன்.// - அப்போ..அப்படிப்பட்டவங்க உங்களைவிட வேகமாக நடந்து உங்க முன்னால் போனால்தான் பார்ப்பீங்களோ?

      நீக்கு
    2. நெல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    மின்நிலா வார இதழ் சகோதரர் கெளதமன் கைவண்ணத்தில் வாராவாரம் புதுமைகள் படைத்து பூரண நிலாவாக ஒளி வீசி வருகிறது. இந்த தீபாவளி திருநாளிலிருந்து பல்லாயிரம் வாசகர்களின் பார்வையையும், பாராட்டையும் பெற்று என்றும் பரிபூரண நித்ய ஒளியுடன் பிரகாசிக்க வேண்டுமாய் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  29. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

    எல்லோரும் அவர் அவர் கருத்தை சொன்னதும் நன்றாக இருக்கிறது.

    மின் நிலாவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நலமா? உங்களை நான்கைந்து பதிவு களாக காணவில்லையே எனத் தேடிக் கொண்டிருந்தேன். எ. பியிலும் விசாரித்தேன்.வீட்டு வேலைகள் அதிகமா? இல்லை, எங்காவது வெளியூர் பயணமா? இன்று உங்களை இங்கு கண்ட பின்னர்தான் மகிழ்வாக உள்ளது.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. // மின் நிலாவுக்கு வாழ்த்துக்கள்.// நன்றி.

      நீக்கு
    3. வணக்கம் கமலா ஹரிஹரன், என்னை விசாரித்தது அறிந்து மகிழ்ச்சி.
      நான் கொலு வேலையால் ஒரு வாரம் இங்கு வர முடியவில்லை. காலை பேரன் அவங்க வீட்டு கொலுவை காட்டி பாடுவான், அப்புறம் மற்ற உறவினர்கள் காணொளியில் கொலு பார்ப்பார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரம் வருவார்கள் அதனால் வலைத்தளம் வர முடியவில்லை.

      வேலை அதிகமானதால் உடல் நலமும் கொஞ்சம் பாதிக்கபட்டு இப்போது நலம்.

      நீக்கு
  30. மிக சுவாரஸ்யமான கேள்விகள். அதை
    இன்னும் சுவையாகக் கையாண்ட பதில்கள். அதிரா
    போல , அந்த கோபம் எனக்கு உண்டு,.

    வீட்டுக்கு நலம் செய்துவிட்டு அல்லவா வெளியே
    போக வேண்டும்.
    புத்தர் இன்னும் பின் வந்த அனைத்து சன்னியாசிகளும்

    இதை ஏன் கவனிக்கவில்லை.
    திருமணத்துக்கு முன்பே துறவி ஆகி இருக்கலாமே.

    இதையே ஒரு பெண் வீட்டை விட்டுக்
    கிளம்பினால் உலகம் ஒத்துக் கொள்ளுமா.
    நல்லதொரு புதன் கிழமைக்கு மிக நன்றி கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஔவையார் திருமணம் வேண்டாம் என்று கிளம்பியவர் தானே!...

      அப்படிக் கிளம்பியவர் தானே -
      இல்லறம் அல்லது நல்லறம் அன்று!.. - என்று புகழ்ந்துரைத்தார்...

      இல்லறம் நல்லறம் ஆவதால் அல்லவா
      முன்னறி தெய்வங்கள் ஆகின்றனர் அன்னையும் பிதாவும்!..

      நீக்கு
    2. கையில் கிடைத்த மாம்பழத்தைக் கண்டு கணவன் அஞ்சி நடுங்கி இல்லறம் துறந்து போனான்..

      புனிதவதியார் - காரைக்கால் அம்மையார் என்றாக வில்லையா!...

      இறிவன் அவரை " அம்மா!.." என்று அழைத்துப் பெருமைப் படுத்தவில்லையா!.

      நாம் அவர்களை கையெடுத்து வணங்கி நிற்கின்றோமே!...

      இதெல்லாம் யாருக்கு வாய்க்கும்!...

      நீக்கு
    3. ஆமா, இல்ல? புத்தரை எப்படி மறந்தேன்? அதுவும் யசோதரா காவியமெல்லாம் படிச்சுட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (எனக்கு நானே சொல்லிக்கிறேன்.)

      @துரை, ஔவையார் முதலிலேயே கல்யாணம் வேண்டாம்னு இருந்துட்டார். திலகவதியார் கதையே வேறே. கணவன் அவருடைய தெய்விகத் தன்மையைக் கண்டு பயந்து (தாழ்வு மனப்பான்மை?) ஒதுக்கினான். அவரோ கணவனோடு வாழப் பல முயற்சிகள் செய்து பின்னர் கணவன் வேறே கல்யாணம் செய்து கொண்டதையும், குழந்தை, குட்டிகள் பெற்றுக் கொண்டதையும் பார்த்து விட்டே மனம் வெறுத்துத் துறவறம் மேற்கொண்டார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டே இறை பக்தியும் செலுத்திய பெண்கள் பலர் உண்டே!

      நீக்கு
    4. அட! இங்கே ஒரு பட்டிமன்றமே நடந்துகிட்டு இருக்கு! துறவிகளில் சிறந்தவர் ஆண் துறவியா , பெண் துறவியா !!

      நீக்கு
    5. ஒருத்தருக்கு பற்று முழுமையாக இல்லை என்றால் அவர் துறவி. இது சரிதானே.

      ஒரு துறவி தனக்கு ஒரு மகனை வைத்துக்கொண்டு (அல்லது சிஷ்யர்கள்) அவர்களுக்கு வித்தை எல்லாம் சொல்லிக்கொடுக்கிறார். அப்போது அவர்களது நல்லது கெட்டதுகளுக்கும் அவரே காப்பாளராகிறார். அந்தப் பற்று இருக்கும்போது அவர் எப்படி முற்றும் துறந்தவராவார்?

      அடுத்த கேள்வி, எல்லா ஆண் துறவிகளுக்கும் சிஷ்யர்கள் உண்டு. சிஷ்யர்கள் உள்ள பெண் துறவி யாரையாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

      இப்போ நீங்களே சொல்லுங்கள், துறவிகளில் சிறந்தவர் ஆண் துறவியா இல்லை பெண் துறவியா?

      நீக்கு
    6. நெல்லைத் தமிழரே, மாதா அமிர்தானந்த மயிக்கு எத்தனை ஆண் சீடர்கள்னு தெரியுமா? எங்க வீட்டிலேயே நாத்தனார் மாப்பிள்ளை அதி தீவிரச் சீடர்/ அவங்களைப் பல விதங்களிலும் தொடருபவர். இதைப் போல் பல பெண் துறவிகள் உண்டு. சக்கரத்தம்மாள், ஆவுடையக்காள் எனத் தமிழ்நாட்டிலே! வடக்கேயும் இம்மாதிரி யோகினிகள்/பெண் துறவிகள் உண்டு.

      நீக்கு
  31. மின் நிலாவுக்கு வாழ்த்துகள்.
    என் கேள்வி.
    அரசியல்வாதிகள் சொல்வதை நிறைவேற்றுகிறார்களா.
    இங்கே நடக்கும் தேர்தல் களத்தை மனதில் வைத்து
    கேட்கிறேன்.?

    2,
    கொள்கைப் பிடிப்பும் நேர்மையானவர்கள் மட்டுமே
    அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்காலத்தில்
    நம்பலாமா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!