சனி, 10 அக்டோபர், 2020

நே ம செய்திகள்

 

2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் ‛கிட்' டினை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவும் சூழலில் பரவலை கட்டுப்படுத்த கொரோனா பரிசோதனைகள் அவசியமாகிறது. மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. தற்போது COVID-19 RT-PCR கி்ட்டுகள் வாயிலாக நடத்தப்படும் இத்தகைய பரிசோதனைகளின் முடிவுகளை அறிய 24 மணி நேரம் வரை ஆகிறது.

ஆனால், ரிலையன்ஸ் துணை நிறுவனமான ரிலையன்ஸ் லைப் சயன்ஸ் நிறுவனம் புது வகையான கிட் ஒன்றினை வடிவமைத்துள்ளது. கொரோனா வைரஸின் 100க்கும் மேற்பட்ட மரபுக் கூறுகளை ஆராய்ந்து தனித்துவம் வாய்ந்த தொழில் நுட்ப உதவியுடன் உள்நாட்டிலேயே இந்த கிட் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் லைப் சயன்ஸ், இதற்கு ‛ஆர்-கிரீன் கிட்' என்று பெயரிட்டுள்ளது. இந்த கிட் கொரோனா வைரஸின் இ-ஜீன், ஆர்-ஜீன், ஆர்டி ஆர்பி ஜீன்களை கண்டறிந்து செயல்படக் கூடியவை. இச் சோதனை கிட்டிற்கு ஐ.சி.எம்.ஆர்., இன்னும் சான்று அளிக்கவில்லை. இருப்பினும் இதை கையாள்வது மிகவும் எளிது. 98.8 சதவீதம் துல்லியமான முடிவுகளை இதன் மூலம் அறியலாம் என்று ரிலையன்ஸ் துணை நிறுவனம் தெரிவித்துள்ளது.

===

மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் 285 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சத்து 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். அனைத்து மரக்கன்றுகளையும் அவர்கள் ஒரு வாரத்திற்குள் தங்கள் நிலங்களில் நடவு செய்ய உள்ளனர்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு சத்குரு மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு பிறகு தமிழக விவசாயிகள் மத்தியில் மரம் வளர்க்கும் ஆர்வம் பெருமளவு அதிகரித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், அரியலூர், கடலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை, வேலூர் உட்பட 23 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கிவிட்டன.


latest tamil news

காந்தி ஜெயந்தி தினமான இன்று நடந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, சேலத்தில் சேலம் தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சக்திவேல், அரியலூர் மாவட்டத்தில் திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ., துரை சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதேபோல், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் பங்கேற்றார்.

பல்வேறு இடங்களில் ஈஷா தன்னார்வலர்களும், விவசாயிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மகோகனி போன்ற விலை மதிப்புமிக்க மரங்களை விவசாயிகள் தேர்வு செய்துள்ளனர். குறைந்தபட்சம் 400 மரங்கள் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் மரங்கள் வரை விவசாயிகள் நட உள்ளனர்.

இதேபோல், கடந்த மாதம் மரம் தங்கசாமி நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 26 ஆயிரம் மரங்களை விவசாயிகள் நடவு செய்தது குறிப்பிடத்தக்கது.


====


ஹிமாச்சலப் பிரதேசத்தில், மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை சுரங்கச் சாலையை, பிரதமர் நரேந்திர மோடி, திறந்து வைத்தார்.


அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் பயணம் செல்லும் வகையில், இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கசாலையின் நீளம் 9.02 கி.மீ.,.கடல் மட்டத்தில் இருந்து, 10 ஆயிரம் அடி உயரத்தில் இந்த நெடுஞ்சாலைசுரங்கம் அமைந்துள்ளது.


உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மிகவும் நீளமான சுரங்கமாக இது விளங்குகிறது. மொத்தம், 30 அடி அகலத்துடன், 17 அடி உயரத்துடன், இரண்டு வழிப் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த சுரங்கத்தால், மணாலி மற்றும் லே இடையேயான பயண துாரம், 46 கி.மீ., குறைகிறது. பயண நேரமும், ஐந்து மணி நேரம் குறையும்.
அவசர காலத்தில், எல்லைக்கு நம் ராணுவம் செல்வதற்கும் இந்த சுரங்கம் மிகுந்த உதவியாக இருக்கும்.


====


பிரிட்டனில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இன்னும் மூன்று மாதத்துக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரவில்லை. ரஷ்யா மட்டுமே தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து பிரிட்டனில் இன்னும் மூன்று மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வரும் என அந்நாட்டு அரசு டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து 3 மாதத்திலும் பெரியவர்களுக்கான தடுப்பு மருந்து 6 மாதத்துக்குள்ளும் செயல்பாட்டுக்கு வரலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாக அந்நாளிதழ் செய்தி வெளியிடுள்ளது.


====

2021ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: 2021ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 20 முதல் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 400 - 500 மில்லியன் டோஸ் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதற்கு மனித வளத்தை கட்டமைக்கவும், பயிற்சி, கண்காணிப்பு ஆகியவற்றை அளிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.


தடுப்பூசி தயாரானதும், அதனை நேர்மையாகவும், சமமாகவும் விநியோகிப்பதை உறுதி செய்ய மத்திய அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதே மத்திய அரசின் முன்னுரிமையாகும். கொரோனாவிற்கு எதிராக முன்களப்பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


====

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.,05) அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படுகிறது. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்களை அறிவித்தார்.


2020ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபடைடிஸ் சி வைரசை அடையாளம் காண இவர்களின் ஆய்வு வழிவகுத்துள்ளது. ஹெபடைடிஸ் சி வைரஸ் மட்டுமே ஹெபடைடிசை ஏற்படுத்தும் என்ற ஆய்வுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது



2020ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு குழுவினர், கருந்துளை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் மையத்தில் அதிசயத்தக்க பொருளை கண்டுபிடித்ததற்காக ரின்ஹெர்ட் கென்செல், ஆன்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.


latest tamil news

====


வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பெண் பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக பரிசுக்குழுவினர் கூறுகையில், இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகியோருக்கு, இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. மரபணு செல்களை துண்டித்து மீண்டும் சேர்ப்பது குறித்த கண்டுபிடிப்புக்காக பரிசு வழங்கப்பட உள்ளது. இவர்களின் கண்டுபிடிப்புதான் புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது என தெரிவித்தனர்.



=====

இந்த ஆண்டு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்த, 5ம் தேதி, மருத்துவத்துறைக்கும், நேற்று முன்தினம், இயற்பியல் துறைக்கும், நேற்று வேதியியல் துறைக்குமான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.


latest tamil news


இந்நிலையில், இந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1943ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த அவர், கேம்ப்ரிட்ஜ் நகரில் வசித்து வருகிறார். கவிஞரான இவர், யேல் பல்கலையில் ஆங்கில துறை பேராசிரியராகவும் உள்ளார்.


===== 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, 35; மனைவி செல்வி, 32. இவர், முதுநிலை இயற்பியல் மற்றும் பி.எட்., ஆசிரியர் பட்டம் பெற்றுள்ளார்.

இவரது கணவர் சிவா நடத்தி வரும் மழலையர் பள்ளியில், முதல்வராக பணிபுரிந்து வருகிறார். மார்ச், 24 முதல், ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இதனால், வேலை இழந்த இவர், பள்ளிக்கு எதிரே வண்ணாத்திகுட்டை பஸ் ஸ்டாப் அருகில், ஆவின் பாலகம் பெட்டிக் கடையில், டீ விற்பனை செய்து வருகிறார்.

செல்வி கூறியதாவது:என் கணவர் நடத்தி வரும், அக் ஷய வித்யாலயா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில், முதல்வராக பணியாற்றி வருகிறேன். ஊரடங்கால் பள்ளி மூடி இருப்பதால், போதிய வருவாய் இல்லை.கிராமப்புற மாணவ - மாணவியரின் பெற்றோரால், பள்ளி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அவர்களை தொந்தரவு செய்யவும் விரும்பவில்லை.குடும்ப வருவாய்க்காக, என் மாமனார் நடத்தி வரும் பெட்டிக் கடையில் தினமும், டீ விற்பனை செய்து வருகிறேன். ஏராளமான தனியார் பள்ளி ஆசிரியர் - -ஆசிரியைகள் வருவாய் இன்றி, வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால், அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.



====

புதுடில்லி: பன்னாட்டு கார் நிறுவனமான மெர்சிடெஸ் பென்ஸ் முதல் மின்சார காரான ‛இக்யூசி' ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

முதல் கட்டமாக இந்தியாவின் ஆறு நகரங்களில் மட்டுமே இது அறிமுகம் ஆகிறது. சென்னை, டில்லி, பெங்களூரு, மும்பை, புனே மற்றும் ஐ தராபாத் நகரங்களில் உள்ள ஷோ ரூம்களில் மொத்தம் 50 கார்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இதன் அறிமுக விலை 99.3 லட்சம் ரூபாயாக உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதலாவது மின்சார எஸ்யுவி யான இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 350 கி.மீ., வரை செல்லும் எனவும் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வாரண்டி உண்டு என்றும் தெரியவருகிறது.

அதிகபட்ச வேகம் 180 கி.மீ., 5.1 விநாடிகளில் 100 கி.மீ., வேகத்தினை எட்டும் திறன் கொண்டது. சாதாரண சார்ஜர் மூலம் 10 மணி நேரத்திலும் டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் 90 நிமிடங்களிலும் பேட்டரியில் சார்ஜ் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.


latest tamil news
====

தமிழகத்திற்கு மீண்டும் பெருமை சேர்க்கும் மங்கை, பிரபினா 


ரமா ஸ்ரீநிவாசன் 

“பெண்கள் நாட்டின் கண்கள்” என்பதை உண்மையாக்கும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்த்த நமது தமிழ் நாட்டின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியிலிருந்து குடிமைப் பணித் தேர்வின் மூலம் ஐபிஎஸ் பணியை எட்டிப் பிடித்திருக்கின்றார் பி.பிரபினா.

யூபிஎஸ்சி தேர்வு மூலம் குமரி மாவட்டத்திலிருந்து முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கான தேர்வில் வெற்றி வாகை சூடியிருக்கின்றார் பி.பிரவீணா. 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த ஆற்றூர் மங்களநடையை சேர்ந்தவர் பிரேமசந்திரன். இவர் காவல்துறையில் ஓய்வுபெறற உதவி ஆய்வாளர்.

இவரது மனைவி ரெஜினாள் ஓய்வு பெற்ற ஆசிரியை. பி.பிரபினா இவர்களது இரண்டாவது மகள்.

 பிரபினா (27) ஆசிரியர்களின் உந்துதலால் 5ம் வகுப்பு படிக்கும்போதே ஐ.ஏ.எஸ. ஆகவேண்டும் என்ற லட்சியத்தில் இருந்தார். சிறு வயது முதலே பிரபினாவிற்கு குடிமைப் பணி தேர்வு எழுதி, ஐஏஎஸ் ஆக வேண்டுமென்பது கனவாக இருந்துள்ளது. பிளஸ் 2 வில் நல்ல மதிப்பெண் பெற்ற இவர் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார்.  ஆனால் அந்த துறை சார்ந்த வேலையைத் தேடாமல் தன் கனவை எட்டிப் பிடிக்கும் இலக்குடன் கோவையிலுள்ள ஒரு சிவில் சர்வீஸ் பயிற்சி அகாதெமியில் சேர்ந்து பயின்று வந்தார்.  5 முறை யூபிஎஸ்சி.க்கு முயற்சி செய்து 3 முறை தோல்வி அடைந்தார்.

இதனிடையே 4-ஆவது முறையாக தேர்வு எழுதிய போது அவருக்கு ஐஆர்டிஎஸ் எனப்படும் இந்திய ரயில்வே டிராபிக் சர்வீஸ் பணி கிடைத்தது.

அப்பணியில் பயிற்சியில் இருந்து கொண்டே மறுபடியும் 5-ஆவது முறையாக தேர்வு எழுதினார்.  இப்போது அவர் அகில இந்திய அளவில் 445-ஆவது இடத்தைப் பிடித்து ஐபிஎஸ் அதிகாரி பணியிடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்.

இதில் மேலும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இவர்தான் கன்னியாகுமரி மாவட்ட்த்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொள்வது தவறான முடிவு. விடா முயற்சியால் வெற்றி கிடைக்கும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பிரவீணா கூறுகையில் : “5 வருட கடின உழைப்பிற்குக் கிடைத்த பலன் இது. 3 முறை தோல்வி அடைந்தபோது, நாள் ஒன்றிற்கு 10 மணி நேரம் படிப்பு, 2 மணி நேரம் பயிற்சி என எடுத்த நிலையிலும் வெற்றி கிடைக்கவில்லையே என வருத்தம் ஏற்பட்டது.

அப்பா காவல்துறையில் பணியாற்றியதால் அவர் மூலம் தன்னம்பிக்கையும், உத்வேகமும் கிடைத்தது. இதனால் மேலும் கடின உழைப்புடன் பயிற்சி எடுத்தேன். பலன் கிடைத்தது. 

நீட் உட்பட பல தேர்வுகள் கடினமாக இருக்கும் என நினைத்து தேர்வு எழுதச் செல்லும் முன்பே மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொள்வது வேதனைக்குரியது.

பல தோல்விகளால் நாம் வீழ்ந்தாலும் அடுத்த முறை வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். தேர்வு மட்டும் வாழ்க்கை கிடையாது. எனவே நீட் தேர்வெழுதும் மாணவர்கள் தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்றார்.

அதே போல் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மிகக் கடினமானவைதான்.  ஆனால் சரியாகத் திட்டமிட்டு படிப்பதுடன் விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும் கூறினார்.  

பணம் இருப்பவர்கள் மட்டும்தான் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்றும், கிராமங்களை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்றும் பலர் நினைக்கிறார்கள்.  பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்குக் கூட பல வாய்ப்புகள் கணினி/இணையம் மூலமும் கிடைக்கின்றன.  பாடப் புத்தகங்களை கூட இணைய வழியில் இலவசமாகப் பெறும் வசதி இந்நாட்களில் உள்ளது.

அரசு தரப்புகளிலிருந்து நிறைய உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் இப்போது அதிகரித்திருக்கின்றன.  மாநில அரசுகளின் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கலாம்.  

இவையல்லாது தொண்டு நிறுவனங்கள் மற்றும் டிரஸ்டுகள் போன்றவை சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதுவோருக்கு பல உதவிகள் செய்யத் தயாராக உள்ளன.  

அதே சமயம் புத்தகங்களை மட்டும் புரட்டிக் கொண்டிருந்தால் போதாது.  நமக்குள் ஒரு தீராத தேடல் இருக்க வேண்டும்.  இதற்கு மேல் தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.  ஒன்று அல்லது இரண்டு முறைகள் தோல்வியடைந்தாலே சமூக அழுத்தங்கள் நம்மீது விழுந்து விடும்.  அந்நேரத்தில் சோர்ந்து உட்காரக் கூடாது.  “துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே” என்னும் பழமொழிக்கேற்ப நாமும் வெற்றி பெறுவோம் என்று திடமாக நம்பினால் நம் பெற்றோர் நமது நம்பிக்கை தூண்களாக நிற்பார்கள்.

முடிவாக பி. பிரபினா கூறியதாவது : “பெண்களுக்கு மன உறுதி மிக அவசியம்.  குமரி மாவட்டத்திலிருந்து முதல் பெண் ஐபிஎஸ் ஆக வந்திருப்பது குறித்து மகிழ்ச்சிதான்.  ஆனால் ஒரு பெண் ஐபிஎஸ் ஆக வந்துள்ளார் என்று சிறப்புப் படுத்தி சொல்லும் நிலை இல்லாமல் இயல்பாக எடுத்துக் கொள்ளும் வகையில் நிறையப் பெண்கள் இது போன்ற பணிகளை எட்டிப் பிடித்து சாதிக்க வேண்டும்” என்பதுதான்.

“மனமிருந்தால் மார்கமுண்டு” என்னும் மொழியை உண்மையாக்கிய நமது தமிழகத்தைச் சேர்ந்த பிரபினாவிற்கு நமது மகிழ்ச்சியும் பெருமையும் சேர்ந்த வாழ்த்துகள் சென்றடையட்டும்! 

====

58 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அனைவரும் நலமுடன் இருக்க இறைவன் கருணை
    மிகுந்து இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் பிரார்த்தனைகளாலும் தொடரும் தடுப்பூசி முயற்சிகளாலும் உலக மக்கள் நல்வாழ்வு, ஆரோக்கியமாக வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. பல செய்திகளும் தெரிந்தவையே! மின்சாரக் கார், தேநீர் விற்கும் ஆசிரியை, ஐபிஎஸ்ஸில் வெற்றி பெற்ற பிரபினா ஆகியோர் குறித்த செய்திகள் புதிது. மரம் நடுவது என்பது முன்னே நான் பள்ளியில் படிக்கையிலேயே இருந்தது. வருஷத்தில் ஓர் நாள் மரம் நடும் விழா என ஐநா அறிவித்திருந்த நினைவு. அந்நாளில் எல்லாப் பள்ளி மாணவர்களும் இந்த மரம் நடும் விழாவில் ஈடுபடுவோம். அந்த மரங்களெல்லாம் என்ன ஆச்சோ தெரியலை. இப்போது இது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டாற்போல் சொல்லப் படுகிறது.. எப்படியானாலும் பலன் தெரிந்தால் நல்லது/நன்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல செயல்.   நன்றி கீதா அக்கா.

      நீக்கு
    2. @ கீதா அக்கா: ஈஷா ஃபவுண்டேஷன்காரர்கள் வெறுமனே மரக்கன்றுகளை தருவதோடு நிற்காமல் அவை நடப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று கண்காணிக்கிறார்கள்.  

      நீக்கு
    3. ஆமாம், பானுமதி, எங்கள் பள்ளியில் இரு மாணவிகள் ஒரு மரத்துக்கு என நியமிக்கப்பட்டு மரத்தைக் கண்காணிக்க வேண்டும். எல்லாம் செய்வோம் தான். ஆனால் திடீர்த் தலைவர்கள் வருகை, அது, இதுனு கார்ப்பரேஷனில் (அப்போ நகராட்சி) வந்து பந்தல் போடத் தூண் நட என மரத்தை வெட்டி விடுவார்கள்! என்ன செய்ய முடியும்? நெடுஞ்சாலைகளில் நடப்படும் மரங்களும் அந்த அந்த டோல் கேட்டைச் சேர்ந்தவர்களால் பராமரிக்கப்பட வேண்டும்! எங்கே! :( வன மஹோத்சவம் என்றெல்லாம் அப்போது குடிமைப் பயிற்சியில் உண்டு. வனவிலங்கு வாரம் என ஒரு வாரம் முழுவதும், புலி, சிங்கங்கள், யானை, கரடி, நரி ஆகியன பற்றிப் படிப்பதோடு மிருகக்காட்சி சாலைக்கும் கூட்டிச் செல்வார்கள். வன மஹோத்சவத்தில் பக்கத்தில் உள்ள ஏதேனும் சின்னக் காடு அல்லது தோப்புக்கு உல்லாசப் பயணமாகச் செல்வோம். இதற்கெல்லாம் செலவு இல்லை. ஆகவே குடிமைப் பயிற்சியில் எல்லாமும் நடக்கும். தெருவில் நடக்கும் முறை, போக்குவரத்து விதிகள் ஆகியனவற்றைப் பாடமாக மட்டுமில்லாமல் நாடகமாகவும் நடத்துவோம். எங்கள் பள்ளி இருக்கும் தெருவில் அதைக் கடைப்பிடித்துப் பயிற்சி பெறுவோம். ஆனால் அப்போதெல்லாம் ஆசிரியப் பெருமக்களும் மாணாக்கர்களுக்காக உழைத்தனர்! பாகுபாடெல்லாம் இருந்ததில்லை.

      நீக்கு
    4. சாரணர் பயிற்சியும் இருந்தது. அதை விட்டுட்டேன். இதெல்லாம் ஒன்பதாம் வகுப்பு வரை! அதன் பின்னர் ஏ.சி.சி. என்.சி.சி.யில் சேரலாம். ஆனால் கண்டிப்பாகப் பெற்றோர்சம்மதம் வேண்டும். இங்கே தான் எனக்குச் சறுக்கிவிட்டது. என்னை என்.சி.சி.க்குத் தேர்வு செய்திருந்தும் அப்பா சம்மதம் இல்லாததால் இடம் பெறவில்லை. ஆனால் வருஷா வருஷம் சுதந்திர நாள், குடியரசு நாளில், வரும் முக்கிய விருந்தாளிக்கு சல்யூட் வைக்கும் காப்டனாகச் சென்றிருக்கிறேன். அதுவும் ஒன்பது வகுப்பு வரை! பத்து, பதினொன்று பாடங்களே அதிகம். சிறப்பு வகுப்புகள் அதிகம். ஆகவே எந்தவிதமான களியாட்டமும் இல்லை.

      நீக்கு
    5. கல்லூரியில் என்.எஸ்.எஸ். உண்டு.என் தம்பியெல்லாம் சேர்ந்திருந்தான்.

      நீக்கு
  4. நோபல் பரிசுகள் பற்றிய விவரங்கள் மிக அருமை.
    பெயர்களை அறிந்திருந்தாலும்
    இந்த இந்தத் துறை என்று தமிழில் அறியக் கிடைப்பது
    மகிழ்ச்சியாக இருக்கிறது.
    அதுவும் பெண்களுக்குக் கிடைத்திருப்பது மிக உயர்வு.
    ப்ளாக் ஹோல் ஒரு அதிசயம். அதிலும் இவ்வளவு நுணுக்கமாக
    ஆராய்ச்சிகள் நடந்து இப்படி பரிசுவாங்கும் இவர்கள்
    உலகமே தனிதான். மிக நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  5. வார இறுதி மனோபாவம் வந்துடுத்து போல! ஒருத்தரையுமே காணோமே! :)))) ஸ்ரீராம், கௌதமன் இருவருமே இன்னும் எழுந்துக்கலைனு நினைக்கிறேன். :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாமா, எனக்கு எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருக்கிறது.
      நல்ல வேளை, தேதிக் காலண்டர்
      கொண்டு வருவதால் நட்சத்திரம்
      எல்லாம் தேதி கிழிக்கும் போதாவது
      பார்த்து வைத்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    2. ஆமாம் அம்மா.   இன்று அலுவலகம் செல்ல வேண்டியதில்லை.  அரை செடிரிசின் போட்டதில் அரைமயக்கம்!!

      நீக்கு
  6. அன்பு கீதா சொல்வது போல தடுப்பூசியும்,
    நல்ல மருந்தும் நோய் வாய்ப் பட்டவர்களுக்கும்,
    மற்ற எல்லோரையும் சென்றடைய வேண்டும்.
    போட்டி இல்லாமல் அதிகப்
    பணத்திற்கு ஆசைப்படாமல்
    சமூக சேவையாக மக்களை அடைய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தடுப்பூசியை பாதுகாத்து வைப்பதற்கு நம் நாட்டில் குளிர்சாதன வசதி போதாது என்று ஐ சி எம் ஆர் சொல்லி இருப்பதாகப் படித்தேன்.  பொறுப்பில்லாமல் அனுப்பப்படும் மருந்துகளையே இதுவரை பார்த்திருக்கிறேன்.  இதுவும் அதுபோல விநியோகம் செய்யப்பட்டால் என்ன பிரயோஜனம் இருக்கக் கூடும்?  அந்த விஷயத்தில் எனக்கு கொஞ்சம் கவலை உண்டு!

      நீக்கு
  7. வழக்கம் போல் ரமா ஸ்ரீ யின் அறிமுகம்
    நல்ல இணைப்பாக வந்திருக்கிறது.
    வாழ்த்துகள் ரமா.

    பதிலளிநீக்கு
  8. மரம் நடுவது நன்றாகவே நடந்து வருகிறது.
    பள்ளிகளில் எங்களுக்கெல்லாம்
    செடி வளர்க்கவும், மரங்கள் பாதுகாப்பிற்காகவும் இயற்கை,
    அதைப் பற்றி அறிதல் தனிப்பாடமாகவே நடத்தப்பட்டது.
    இனி வருங்காலமும் இந்தத் தெளிவு பெறுமாறு
    இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரம் வளர்க்க எங்களுக்கு எங்கள் பள்ளியில்  சொல்லிக் கொடுக்கவில்லை.  நாங்கள் வளர்வதைப் பார்த்து சும்மா இருந்து விட்டார்கள் போல!

      நீக்கு
  9. மின் கார், அப்பாடி இத்தனை விலையா!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வல்லி அக்கா: இதய மெர்சிடஸ் கார் என்பதால் இத்தனை விலை. இதை உதயநிதி சுடாலின் போன்றவர்கள் வாங்கட்டும். நாமெல்லாம் நம் ஊர் டாடா நெக்சான்  மின்சார கார் வாங்கிக் கொள்ளலாம். 14 லட்சம் ஒன்லி!:)) 

      நீக்கு
  10. போற்றப்படத் தக்கவர்களைப் பற்றிய வழக்கமான, அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம். நேர்மறை செய்திகளில் சில ஏற்கனவே படித்தவை, சில புதியவை. கொரோனாவிற்கு தடுப்பூசி விரைவில் வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. இன்றைய தகவல்கள் அனைத்துமே சிறப்பு. தடுப்பூசி - விரைவில் வர வேண்டும் - சோதனைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. அனைவருக்கும் தடுப்பூசி - இது மிகப் பெரிய திட்டம் - அதுவும் இந்தியாவின் மக்கள் தொகை அப்படி!

    கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் ஐ.பி.எஸ்! ஆஹா அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். கட்டுரையாளருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அனைவருக்கும் தடுப்பூசி - இது மிகப் பெரிய திட்டம் - அதுவும் இந்தியாவின் மக்கள் தொகை அப்படி!//

      அதைவிட கடினம், அதை உரிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது.  நன்றி வெங்கட்.

      நீக்கு
  14. அருமையான செய்திகளுடன் இன்றைய பதிவு....

    பதிலளிநீக்கு
  15. ரமா ஸ்ரீயின் கட்டுரை நன்றாக இருக்கிறது. குடிமைப் பணித்தேர்வு போன்ற கடினமான பதங்களை தவிர்க்கலாம். அடுத்த வரியிலேயே யூ.பி.எஸ்.ஸி. தேர்வு என்று சொல்லியிருக்கிறீர்கள்.அப்படியே குறிப்பிட்டு விடலாமே. 
    பிரபினாவின் சாதனை போற்றுதலுக்குரியதுதான் ஆனாலும் யூ.பி.எஸ்.சி. தேர்வையும் நீட் தேர்வையும் ஒன்றாக கருத முடியாது. அடிப்படை கல்வியை முடித்து விட்டு ஐ.ஏ.எஸ். எழுத வருவார்கள். அடிப்படை கல்வி பெறவே நீட் தேர்வில் தேற  வேண்டும். இதனால் நான் நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொள்பவர்களை ஆதரிக்கிறேன் என்று பொருள் கிடையாது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னெல்லாம் குடிமைப் பயிற்சி என ஒரு பாடமே தினம் தினம் கடைசி வகுப்பில் இருக்கும். சி.கே.தேவகி., கே.ஸுமுகி என்னும் இருவர் எழுதிய பாடத்திட்டம். அதோடு த.நா.குமாரசாமி., த.நா. சேனாபதி எழுதின புத்தகங்களும் இருக்கும். சுவாரசியமான வகுப்பு அது தான்! த.நா. சகோதரர்கள் இருவரும் வங்கமொழி வல்லுநர்கள். நிறைய வங்க மொழி நாவல்களைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றனர். பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வாசித்திருக்கேன். அதெல்லாம் ஒரு கனாக்காலம்!

      நீக்கு
    2. //அடிப்படைக் கல்வி பெறவே நீட் தேர்வில் தேற வேண்டும்!// எனக்கு இது புரியலையே! மருத்துவக் கல்விக்கு அல்லவோ நீட் தேர்வு தேவை. அதிலும் பதினொன்றாம், பனிரண்டாம் வகுப்புப் பாடங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகளே முக்கியமானவை. இதிலே அடிப்படைக் கல்வி கற்க என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை நீட் தேர்வுக்குப் பயப்படுபவர்கள் மருத்துவத்தில் தேர்வில்லாமல் சேர்ந்தால் மட்டும் எப்படிப் படிப்பார்கள். முதல் வருட அனாடமி வகுப்பிலேயே கத்தியைத் தூக்கி எறிந்து விட்டு வரலாம். அல்லது தேர்வை எதிர்கொள்ள முடியாமல் போகலாம். தேர்வில் தேர்ச்சி பெறாமலும் போகலாம். மற்றப் படிப்புகளுக்கு இருக்கும் அரியர்ஸ் மாதிரி இங்கெல்லாம் அரியர்ஸ் வைத்துவிட்டு இரண்டாம் ஆண்டுக்குச் செல்ல முடியாது.

      நீக்கு
    3. மருத்துவம் படித்துவிட்டு இந்தக் குடிமைப் பயிற்சித் தேர்வு எழுதி ஐஏ எஸ், ஐபிஎஸ் ஆனவர்கள் உண்டு. பீலா ராஜேஷும், திரு ராதாகிருஷ்ணனும் முறைப்படி படித்த மருத்துவர்கள் என நினைக்கிறேன். அதே போல் பொறியியல் படித்துவிட்டும் குடிமைப் பயிற்சித் தேர்வு எழுதுகிறார்கள். தில்லி முதல்மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் ஐஐடியில் படிச்சுட்டு குடிமைப் பயிற்சித் தேர்வு எழுதினவர். ஆக எல்லாத் தேர்வுகளுமே கடினமானவை தான்!

      நீக்கு
  16. பல செய்திகளை தந்தது பதிவு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  17. தகவல்கள் அனைத்தும் அருமை...

    பி.பிரவீணா அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  18. //2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் ‛கிட்' டினை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.//

    நல்ல தகவல்.

    //தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 26 ஆயிரம் மரங்களை விவசாயிகள் நடவு செய்தது குறிப்பிடத்தக்கது//

    அவை அனைத்தும் வளர்ந்து நலம் விளையட்டும். நல்ல செய்தி.

    //தமிழகத்திற்கு மீண்டும் பெருமை சேர்க்கும் மங்கை, பிரபினா//

    அவரின் தன்னப்பிக்கை, விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள்.




    பதிலளிநீக்கு
  19. //“மனமிருந்தால் மார்கமுண்டு” என்னும் மொழியை உண்மையாக்கிய நமது தமிழகத்தைச் சேர்ந்த பிரபினாவிற்கு நமது மகிழ்ச்சியும் பெருமையும் சேர்ந்த வாழ்த்துகள் சென்றடையட்டும்! //

    எங்கள் வாழ்த்துக்களும் பிரபினாவிற்கு.
    ரமா உங்கள் கட்டுரை அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    /2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் ‛கிட்' டினை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.//

    நல்ல தகவல். விரைவில் இந்த தொற்றுக்கு மருந்து கண்டு பிடித்து பயன் பாட்டுக்கு வந்து உலகம் முழுவதும் நலம் பெற வேண்டும்.

    மரங்கள் நடுவது சுற்றுச்சூழலுக்கு செழிப்பான விஷயம். பயனுறும் செயலை செய்த அத்தனை விவசாயிகளுக்கும் வாழ்த்துக்கள்.

    சகோதரியின் கோர்வையான பயனுள்ள கட்டுரை அருமை.

    /நமது தமிழ் நாட்டின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியிலிருந்து குடிமைப் பணித் தேர்வின் மூலம் ஐபிஎஸ் பணியை எட்டிப் பிடித்திருக்கின்றார் பி.பிரவீணா. /

    மகிழ்ச்சி. அவரின் சாதனை போற்றத்தக்கது. அவர் இடைவிடாத முயற்சியில், தேர்வில் வெற்றியடைந்து அகில இந்திய அளவில் 445-ஆவது இடத்தைப் பிடித்து ஐபிஎஸ் அதிகாரி பணியிடத்தை எட்டிப் பிடித்திருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    காலையிலிருந்து இங்கு கரண்ட், நெட் பிரச்சனை. அதனால்தான் தாமதம். பொறுத்துக் கொள்ளவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. பாராட்டப்பட வேண்டியவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
    தடுப்பூசி விரைவில் வந்தால் நலமே.

    பதிலளிநீக்கு
  22. சிறப்பான செய்தி தொகுப்புகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!