சனி, 24 அக்டோபர், 2020

இ வா நே ம செ :: T T T a DM

 

ஸ்ரீநகர்: பயங்கரவாதியை சுற்றி வளைத்த நமது ராணுவ வீரர்கள், அவரிடம் அன்பாக பேசி சரணடைய செய்து, அவருக்கு தண்ணீர் வழங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. வீரர்களின் மனிதநேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். பயங்கரவாதியின் தந்தை வீரர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது 31 வயதான ஜஹாங்கிர் என்னும் பயங்கரவாதி தனியாக ராணுவ வீரர்களிடம் சிக்கினான். அவனிடம் நமது ராணுவ வீரர்கள் அன்பாக பேசி, துப்பாக்கிச்சூடு நடத்த மாட்டோம் என உறுதியளித்தனர். இதனையடுத்து, உறுதிமொழியை ஏற்ற ஜஹாங்கிர், சரணடைந்தான். அவருக்கு வீரர்கள் தண்ணீர் கொடுத்து உதவினர். இந்நிலையில், பயங்கரவாதி ஜஹாங்கிரின் தந்தை, ராணுவ வீரர்களின் காலில் விழுந்து, மகனை கொல்லாமல் சரணடைய செய்ததற்காக கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.


latest tamil news

பிடிப்பட்ட பயங்கரவாதியிடம் அன்பாக பேசி, சரணடைய செய்து, அவருக்கு தண்ணீர் கொடுத்த ராணுவ வீரர்களின் மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ராணுவ வீரர்கள் பேசுகையில், ‛ஜஹாங்கிர், உங்கள் ஆயுதங்களை கைவிட்டு எங்களிடம் சரணடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் மறைந்திருக்கும் இந்த இடத்தை நாங்கள் சுற்றி வளைத்துள்ளோம். உங்களுக்கு எதுவும் நடக்காது, உங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படமாட்டாது. என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். 

latest tamil news
====

பஞ்சாபில், பிறந்து, அயர்லாந்தில் வசித்து வரும் முதியவர் ஒருவர், உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சியை மேற்கொண்டார். அவ்வகையில் இதுவரை பூமியின் சுற்றளவுக்கு நடந்து சாதனை படைத்துள்ள அவர், இதனை பதிவு செய்ய வேண்டும் என கின்னஸ் அமைப்பிற்கு விண்ணப்பித்துள்ளார்.

பஞ்சாபில் பிறந்தவர் வினோத் பஜாஜ். தற்போது அவருக்கு 70 வயதாகிறது. சென்னையில் பணியாற்றிய அவர், 1975ம் ஆண்டு ஸ்காட்லாண்டில் குடியேறினார். தற்போது அயர்லாந்தின் லிமெரிக் நகரில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர், ஓய்வு பெற்ற பொறியாளர் மற்றும் வணிக ஆலோசகர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் எடையை குறைப்பதற்காக நடைப்பயிற்சி மேற்கொண்டார்.உடல் எடையை குறைத்ததுடன், பூமியின் சுற்றளவுக்கு நடந்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளதாக கூறுகிறார்.


latest tamil news

ஆக்டிவிட்டி டிராக்கர் செயலி


இது தொடர்பாக அவர் கூறுகையில், 
நடைப்பயிற்சி துவங்கியதும், முதல் மூன்று மாதத்தில் 8 கிலோ எடை குறைந்தது. அடுத்த 6 மாதங்களில் 12 கிலோ எடை குறைத்தேன். நடைப்பயிற்சியின் மூலமே எனது எடையை குறைத்தேன். அதற்காக உணவு கட்டுப்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லை. நடைப்பயிற்சியின் போது, நடையை பதிவு செய்ய பேசர் ஆக்டிவிட்டி டிராக்கர் செயலியை பயன்படுத்தினேன். முதல் ஆண்டு முடிவில் 7,600 கி.மீ., தூரம் நடந்தேன். இது இந்தியாவில் இருந்து அயர்லாந்திற்கு நடந்து செல்லும் தூரம் ஆகும். தொடர்ந்து இரண்டாம் ஆண்டு முடிவில் 15,200 கி.மீ., தூரம் நடந்திருந்தேன்.

இது நிலவின் சுற்றளவை(10,921) விட அதிகம் ஆகும். இது எனக்கு அளித்த உற்சாகம் காரணமாக தொடர்ந்து நடக்க உற்சாகம் அளித்தது. இதன்படி கடந்த செப்.,21 அன்று, 1,496 நாட்களில் பூமியின் சுற்றளவான 40,075 கி.மீ., தூரம் நடந்தேன் . ஆனால் ஒரு முறை கூட நகரை விட்டு வெளியே சென்றதில்லை எனக்கூறினார்.

இதனை பதிவு செய்ய கின்னஸ் சாதனை அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளார். அதனை அந்த அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.


==== ====

நாக்பூர்:மஹாராஷ்டிராவில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று, ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வரும், 87 வயதான டாக்டரின் சேவை, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


மஹாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில், ராம்சந்திர தாண்டேக்கர், என்ற, 87 வயதான டாக்டர் வசித்து வருகிறார். இவர், 60 ஆண்டுகளாக, 10 கி.மீ., சுற்றளவில் உள்ள குக்கிராமங்களுக்கு தினமும் சென்று, அங்குள்ள ஏழை மக்களுக்கு, இலவச மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகிறார்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வயதானோர், வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

latest tamil news

ஆனால், எதையும் பொருட்படுத்தாத தாண்டேக்கர், இந்த தொண்டு சேவையை தொடர்ந்து செய்து வருகிறார்.இதுகுறித்து, தண்டேக்கர் கூறுகையில்,“கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு, இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதே என் ஒரே எண்ணம். அதை முன்பும் செய்தேன். அதை நிறுத்தாமல், தொடர்ந்து செய்வேன்,” என்றார்.

==== 

மதுரை : மதுரையைச் சேர்ந்த, மூன்றாம் வகுப்பு சிறுமி, 'தினமலர்' வாரமலர் இதழில் வெளியான எட்டு வித்தியாசங்கள் போட்டியில் வென்ற பணத்தில், ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவளித்து சேவை செய்துள்ளார்.

மதுரை, செல்லுாரைச் சேர்ந்த தம்பதி சங்கரபாண்டியன் - தமிழரசியின் மகள் உஷா, 8; அங்குள்ள பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.தம்பதி கூறியதாவது:கொரோனா ஊரடங்கில், பள்ளி செல்லாததால்,வீட்டில் இருக்கும் நேரத்தை பயனுள்ளதாக்க, உஷாவுக்கு கற்று கொடுக்கிறோம். பல ஆண்டுகளாக நாங்கள், 'தினமலர்' வாசகர்கள். சிறுவர் மலர், வாரமலர் இணைப்புகள் உட்பட தினமும் நாளிதழ் படிக்க, மகளை பழக்கி வருகிறோம்.மகளும், வாரமலர் குறுக்கெழுத்து, எட்டு வித்தியாசங்கள் போட்டிகளில் பங்கேற்பது வழக்கம். இம்முறை எட்டு வித்தியாசம் போட்டியில், 200 ரூபாய் பரிசு கிடைத்தது.

இதையும், மகள் சேமித்து வைத்திருந்த, 400 ரூபாய் மற்றும் கூடுதல் பணம் சேர்த்து, ஆதரவற்ற முதியோர்களுக்கு நேற்று மதிய உணவு வாங்கிக் கொடுத்தோம். நாங்களும் சமூகப் பணிகள் செய்வதால், மகளையும் சமூகப் பணிகளில் இப்போதே ஈடுபடுத்துகிறோம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, அனைவருக்கும் பொது அறிவு பெட்டகமாகத் திகழும், 'தினமலர்' நாளிதழ் மற்றும் மகள் படிக்கும் அரசு உதவி பெறும் மனோகரா நடுநிலைப் பள்ளிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.==== 

வாட்ஸ் ஆப் மூலம் கிடைத்த தகவல் : 


படத்தில், வேஷ்டி சட்டையுடன், நம் பாரம்பரியத்தைக் காட்டும் அழகான கிராமக் கட்டிடத்துக்கு எதிரில் நின்று கொண்டிருக்கும் “நவயுக டாடா” யார் தெரியுமா?


இவர் தான் ஸ்ரீதர் வேம்பு! உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான “ஸோஹோ கார்ப்பரேஷனின் (Zoho Corporation ) ”, தலைமை நிர்வாக அதிகாரி ( C E O) !

ஏதோ, இந்த மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் இப்போது இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்! அங்கு தான் இருந்தது. 


அதன் தலைமையகத்தை,  போன ஆண்டு அக்டோபரில், தென்காசிக்குப் பக்கம் இருக்கும் “மத்தளம்பாறை” என்னும் தன் கிராமத்துக்குக் கொண்டு வந்து விட்டார் இந்த மஹாமனிதர்! இப்போது, ஒரே வருஷத்தில்,  இந்த நிறுவனம், சுமார் 3410 கோடி டாலர் லாபம் அடைந்ததைக் கண்டு, தொழில் நுட்ப வல்லுநர்கள்,  வியந்து போய் இருக்கிறார்கள்!


மிகப் பெரிய தொழில் ஸ்தாபனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஸ்ரீதர் வேம்பு போவது சைக்கிளில் தான். சாப்பிடுவதும், டீ அருந்துவதும், கிரிக்கெட் விளையாடுவதும் கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளுடன் தான். கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளைத் திரட்டி, 4 ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு நவீன கணினிப் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார்.


 நவீன மருத்துவமனை, சாக்கடைகள், குடிநீர்வசதி, நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றை அக்கறையுடன் மத்தளம்பாறைக்குக் கொண்டு வந்துள்ளார். இந்தியாவின் கிராமங்களில் உள்ள 8000 இளைஞர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சி கொடுத்து , வேலை வாய்ப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் இந்த உண்மையான தமிழன்!


மோடி எதிர்பார்த்திருக்கும் ஆதர்ஷ இந்தியர் ஸ்ரீதர் வேம்பு தான். இவர் மாதிரி மாநிலத்துக்கு 10 வழிகாட்டிகள் இருந்தால், நம் நாடு பத்தே ஆண்டுகளில் , அமெரிக்கா, சைனா ஆகிய நாடுகளை எளிதில் முன்னேறிச் சென்று விடும் என்பதில் ஐயம் இல்லை!====

face book  ல படித்ததை இங்கே உங்களுக்காக பகிர்கிறேன் :  


பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் பத்திரிக்கையில் வெளிவந்த நாள் அன்று! கர்நாடக மாநில அளவில் 8வது இடத்தைப் பிடித்த ஒரு மாணவனின் படம் ஒன்றை காண்கிறார் சுதா மூர்த்தி.
ஒல்லியாகவும், வெளிறிப் போயும் இருந்த அந்த சாதாரண மாணவனின் பெயர் ஹனுமந்தப்பா. அவன் கண்களில் ஒரு பிரகாசம் இருந்ததை கவனிக்கிறார் சுதா மூர்த்தி.
அடுத்த நாள் அதே பையனின் பேட்டி அன்றைய செய்தித்தாளில் வந்திருந்தது. அந்த ஹனுமந்தப்பா ஒரு கூலித் தொழிலாளியின் மகன் என்றும், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன் என்றும் அவன் தந்தை ஒரு நாளைக்கு வெறும் நாற்பது ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார் என்றும் அதனால் மேற்கொண்டு படிக்க வாய்ப்பில்லை என்றும் செய்தி வந்திருந்தது.
உடன் அவனது முகவரியைக் கண்ட சுதா மூர்த்தி அவனை பெங்களூரு வரவழைக்க கடிதம் எழுதி உடன் பயணச்செலவும், ஒரு ஆடை வாங்க கூடுதல் பணமும் ஏற்றுக் கொள்வதாக தகவல் அனுப்பியிருக்கிறார்.
அந்தப் பையன் குறிப்பிட்ட நாளில் சுதாவின் அலுவலகம் நுழைகிறான். பெங்களூருக்கு வருவது அதுவே முதல் முறை.
சுதா அவனை வரவேற்று "உன்னுடைய மதிப்பெண்கள் குறித்து மகிழ்ச்சி. நீ விரும்பினால் மேற்படிப்புக்கான செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எந்த மேற்படிப்பாக இருந்தாலும் நாங்களே மொத்த செலவுகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறுகிறார்.
ஹனுமந்தப்பா முதலில் திகைத்து பின்னர் தனது கிராமத்துக்கு அருகில் உள்ள பெல்லாரியில் *ஆசிரியர்* பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு தன் விருப்பத்தை தெரிவித்தான். எந்தவொரு படிப்பென்றாலும் செலவை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியும் ஹனுமந்தப்பாவின் தேர்வு ஆசிரியராக வேண்டும் என்பதாகவே இருந்திருக்கிறது.
சுதா மூர்த்தி ஒப்புக்கொண்டு மாதாமாதம் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க சரியான தகவல்களை தெரிந்து தொடர்பு கொள்வதாக கூறி அவன் ஊர் திரும்பி விட்டான்.
பிறகு ஒரு அஞ்சல் அட்டையில் தனக்கு மாதாமாதம் 300 ரூபாய் தேவைப்படும் என்றும், தனது நண்பருடன் ஓர் அறை எடுத்து தங்கி மேலும் செலவை குறைக்க தாங்களே சமையல் செய்து கொள்ளப் போவதாகவும் அழகான கையெழுத்தில் கடிதம் வந்திருக்கிறது.
ஆறு மாத செலவுக்கு உடனே 1800 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார் சுதா.
நாட்கள் ஓடின. அடுத்த 6 மாத காலத்துக்கு மீண்டும் 1800 ரூபாய் சுதா மூர்த்தி அனுப்பி வைக்க, ஹனுமந்தப்பாவிடமிருந்து ஒரு கடிதமும் 300 ரூபாய் பணமும் கவரில் வைத்து சுதாவிற்கு திரும்பி வந்துள்ளது.
கடிதத்தில் கடந்த இரண்டு மாதங்கள் கல்லூரி விடுமுறை என்றும் அதனால் வீட்டில் இருந்ததாகவும் 300 ரூபாய் மட்டுமே செலவானது என்றும் மீதம் 300 ரூபாய் தங்களுக்கு திருப்பி அனுப்புகிறேன் என்றும் எழுதியிருக்கிறது. தயவுசெய்து இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் வேண்டி எழுதப்பட்டிருந்தது.
சுதா மூர்த்தி இப்படி எழுதுகிறார்.
*நான் ஆடிப் போய் விட்டேன்*.
*அவ்வளவு ஏழ்மையிலும் எவ்வளவு நேர்மை*?
மாதாமாதம் என்ன செலவானது என்பது குறித்த கணக்கை நான் எதிர்பார்க்கவில்லை. இதை ஹனுமந்தப்பா அறிந்திருந்த போதும் மீதி பணத்தை திருப்பி அனுப்பி வைத்த நேர்மையை என்னால் நம்பவே முடியவில்லை என்கிறார்.
*நேர்மை என்பது குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்ததோ அல்லது ஒருவருடைய கல்வித்தகுதி அல்லது நிதிநிலைமையைப் பொறுத்தோ அல்ல என்பதை அந்த அனுபவம் எனக்கு உணர்த்தியது*.
*இந்த நேர்மையை எந்தக் கல்லூரியாலும் கற்றுக் கொடுக்க முடியாது*.
*பெரும்பாலான மக்களுக்கு நேர்மை நேரடியாக இதயத்திலிருந்து மலருகிறது*
விதைக்க வேண்டும்.
ஹனுமந்தப்பா
*ஓர் முன்மாதிரி மனிதன்*.

*வாழ்க்கைக்கு ஓர் வீர வணக்கம்*- என்ற நூலிலிருந்து.
*எழுதியவர்*- *சுதா மூர்த்தி*
(இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் துணைவியார்)
====41 கருத்துகள்:

 1. தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. நேர்மறைச் செய்திகளும் ஹனுமந்தப்பாவின் நேர்மையும்....

  அருமை.. அருமை...

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  பாசிடிவ் செய்திகளுக்கு மிக மிக நன்றி கௌதமன் ஜி.

  பதிலளிநீக்கு
 4. அன்பு ஸ்ரீராம், துரை இன்னும் எல்லோருக்கும் இந்த
  நாள் நல்ல நாளாக மனம் நிறைந்த
  பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 5. ஹனுமந்தப்பா... அப்பா என்ன நேர்மை.
  நீடு , நன்மை பெற்று வாழ வாழ்த்துகள்.

  நம் இராணுவ வீரர்களின் கருணையும்
  தார்மீகமும் எவ்வளவு இனிமை.
  மனம் சிலிர்க்கிறது.

  ஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு அவர்களின் தொண்டுள்ளம்
  மிக மிக சிறப்பு அளவிட முடியாத நன்மை.

  பதிலளிநீக்கு
 6. செல்வி உஷாவின் கொடை சொல்லிற்கடங்காதது.
  நன்றி. நல்ல குழந்தையை வளர்க்கும்
  பெற்றோருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. 87 வயது டாக்டர் சைக்கிளில் வெறுங்காலோடு
  சென்று செய்யும் சேவை எவ்வளவு உன்னதம்.
  இன்று எல்லா செய்திகளும் மனதைத் தொடுகின்றன. நன்றி ஜி.

  பதிலளிநீக்கு
 8. ஆடு மேய்த்து சாதனை புரிந்திருக்கும் மாணவனின் காணொளி
  அருமை. நன்றாக முன்னேற வேண்டும்.

  பதிலளிநீக்கு
 9. வியக்க வைக்கும் மனிதர்களாக இருக்கிறார்கள்.

  திரு. மோடிக்கு ஓய்வு கொடுத்து விட்டு திரு. ஸ்ரீதர் வேம்பு அவர்களை பிரதமர் ஆக்கலாம். ஆனால் மக்கள் ஏற்க மாட்டார்களே...

  பதிலளிநீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. சிறு வயதிலேயே ஈகை குணமுடன் இருக்கும் சிறுமி உஷாவின் பெருந்தன்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அவருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.

  சாதாரண உடையில் எளிமையாக இருக்கும் பெரிய தொழில் தலைமை அதிகாரி திரு ஸ்ரீதர் வேம்பு அவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை. அவர் நேர்மை பற்றிய சுதாமூர்த்தி அவர்களின் கடிதமும் கண்களை கலங்க வைத்தது. உதவிபெற்று முன்னுக்கு வந்த அவருக்கும் உதவி தந்த சுதா மூர்த்தி அவர்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு. போற்றுவோம்.

  பதிலளிநீக்கு
 13. மதுரை உஷா தவிர்த்து மற்றவை ஏற்கெனவே தெரிந்தவை! இஃகி,இஃகி,இஃகி! அதிலும் ஸ்ரீதர் வேம்பு பற்றிய செய்தி கடந்த ஒரு மாதமாகவே சுற்றுகிறது. அதற்கும் முன்னர் தென்காசிக்காரர் ஒருத்தர் சொல்லித் தெரிந்து கொண்டேன். :)))) மற்றச் செய்திகளில் இடம் பெற்றவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த வாரமும் ரமா ஶ்ரீநிவாசனின் கட்டுரை (நவராத்திரி என்பதால் பிசியோ) இடம் பெறவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் மத்தியமர் தளத்தில் பிஸி !!

   நீக்கு
  2. ஆமாம், நானும் பார்க்கிறேன். பானுமதியும் அங்கே மும்முரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

   நீக்கு
 14. நம்மைச் சுற்றி பல நல்ல நிகழ்வுகள் நடக்கின்றன அவற்றை வெளிச்சம் போட்டு காட்டுவ தற்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  சகோதரி கோமதி அரசு அவர்களை இரண்டு நாட்களாக எந்தப் பதிவிலும் காணவில்லையே? நவராத்திரி பணிகளா? இல்லை ஏதேனும் விஷேடத்திற்காக வெளியூர் பயணமா? தங்களுக்கு அவர்கள் தெரிவித்திருந்தால் நானும் தெரிந்து கொள்ளுவேன்.நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 16. எப்போலேருந்து என்னை மாதிரிக் குழந்தைங்களுக்குக் கதை சொல்ல ஆரம்பிச்சீங்க? நல்லாவே இருக்கு! அது சரி! மைசூர்ப் பயணம் முடிச்சுட்டு வேறே எங்கேயும் போகலையா? பக்கத்திலேயே உள்ள சாமுண்டி மலை, பசவங்குடி எல்லாம் போகலையா? பசவங்குடி கொஞ்சம் தள்ளி இருக்கோனு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 17. அருமையான நேர்மறை செய்திகள். வயதான மருத்துவர் சேவையில் வியக்க வைக்கிறார், அவருக்கு வணக்கங்கள். ஹனுமந்தப்பா
  *ஓர் முன்மாதிரி மனிதன்*. என்பது அவரைப்பற்றி படித்தவுடன் இத்தனை நேர்மையான மனிதன் எல்லோருக்கும் முன்மாதிரி என்பதை உறுதி செய்து விட்டது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!