இதுல நீங்க எப்படி?
எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை, ஒரு கையை காதுக்கு அருகில் தலைக்கடியில் வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம்! யோசித்துப் பார்த்தபோது முன்னர் அப்படி தூங்கியதில்லை என்று தெரிந்தது.
கொஞ்ச நேரத்தில் அந்த போஸ் அசௌகரியமாக இருப்பது போல உணர்ந்தாலும், மாற்றி படுத்தால் தூக்கம் வரவில்லை. ஆனால் தூங்கியபின் கொஞ்ச நேரம் கழித்து கை பொசிஷன் மாறி விடுகிறது என்று நினைக்கிறேன்.
கொரோனா காலத்தில் தொடங்கியதோ இந்தப் பழக்கம் என்று தோன்றுகிறது. மூச்சுத்திணறல் வராமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உணர்வில் நிமிர்ந்து படுப்பதைத் தவிர்த்திருப்பேனோ, என்னவோ!
தூங்கும் ஜோசியம் ஒன்று முன்னர் சுற்றி வந்தது. நிமிர்ந்து படுத்தால் இப்படி, இடதுபக்கம் படுத்துத் தூங்கினால் அப்படி என்று ஜோசியம் சொல்லியிருப்பார்கள். இதற்கு என்ன ஜோசியமோ!
முன்னர் எப்படிப் படுத்துத் தூங்குவேன் என்று யோசித்துப் பார்த்தேன். கையை நெஞ்சின் மேல் வைத்தபடியா, உடலோடு ஒட்டி நீளமாக வைத்தா என்று ஞாபகமில்லை. ஆனால் இப்போது இந்தப் பழக்கத்தை எப்படி மாற்ற முயன்றாலும் முடியவில்லை. என்னை அறியாமல் பத்து வினாடிகளில் கை அப்படி சென்று விடுகிறது. என்ன கஷ்டம்? கொஞ்ச நேரம் (என்று நான் நினைத்துக்கொள்வேன்) கழித்து கையை எடுக்கும்போது மரத்துப்போயிருக்கும்!
இத்தனைக்கும் தலைக்கு உயரம் தேவையாய் இருக்கிறதோ என்று யோசித்து தலையணை எண்ணிக்கையை அதிகரித்தும் பார்த்தேன். அப்படியும் கை அப்படிதான் போகிறது.
மற்றவர்களை கவனித்தேன். பாஸ் யாரிடமோ பல்வலி என்று சொன்னால் கையை எப்படி வைத்துக் காட்டுவாரோ அப்படி வைத்துத் தூங்கத் தொடங்கினார். மகன் கையை கன்னத்துக்குக் கீழே கொடுத்து 'அட... அப்படியா? பார்றா!" என்று ஆச்சர்யப்படும் பாவனையில் தூங்கத் தொடங்கினான். இளையவன் எப்படி வேண்டுமானாலும் தூங்கினான்.!
தன்னிச்சையாக நிகழும் செயல்களை நாம் கவனிக்கத் தொடங்கினால் இப்படி அனர்த்தம் விளைகிறதோ என்றும் தோன்றுகிறது. நாம் பேசும் சில வார்த்தைகள், நம் நடை, நமது ரெகுலர் மேனரிஸங்கள்... அனிச்சையாய் நாம் செய்யும் எந்த செயலையும் மறுபடி மறுபடி யோசித்து அல்லது கவனித்துப் பாருங்கள்... அந்த செயல்களில் ஒரு தடுமாற்றம் வரலாம், அல்லது செயற்கையாய் உணரலாம்.
தூக்கம் வந்தால் தூங்கிவிட வேண்டும். இதெல்லாம் வேண்டாத ஆராய்ச்சி. தூக்கம் வராத கொரோனா இரவுகளில்தான் இந்த ஆராய்ச்சி என்னிடம் வந்ததது!
கொரோனா காலத்தில் கிங் இன்ஸ்டிட்யூட்டில் அட்மிட் ஆகியிருந்தவர் சொன்னது, அங்கு கொரோனாத் தொற்றுக்காக அட்மிட் இருந்தவர்களை குப்புறப் படுத்துதான் தூங்கப் சொன்னார்களாம். நுரையீரல்கள் விரிவடையும், ஆக்சிஜன் பற்றாக்குறை வராது, மூச்சுத்திணறல் வராது என்றும் சொன்னார்களாம்.
இந்த அறிவுரையைக் கேட்டு நானும் அப்படிப் படுத்துப் பார்த்தேன். இருமலாய் வந்தது!
============================== ============================== ============================== ==
ஒரு ரூபாய்க்கு என்ன செலவு செய்யலாம் என்று ஓரிரு வாரங்கள் முன்பு பேச்சு வந்தபோது என் பிறந்த நாளுக்கு என் அப்பா ஒரு ரூபாய் கொடுத்து கேன்டீனில் சாப்பிட்டு வா என்று அனுப்பியது நினைவுக்கு வந்து சொல்லி இருந்தேன்.
அப்போது நாங்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி குடியிருப்பில் வசித்து வந்தோம். மருத்துவக்கல்லூரி அருகே ஒரு கேன்டீன் இருக்கும். அதில் இருக்கும் ஒரு விஷயம் என்னைக் கவரும். ஒரு டம்ளரில் முக்கால் அளவு பாலாடை போல எடுத்து வைத்திருப்பார்கள். அதைச் சாப்பிடவேண்டும் என்று ஆசை.
வீட்டில் பால் காய்ச்சப்படும்போது அதில் படரும் ஆடையை ஒரு ஸ்பூனில் எடுத்து சிறு தட்டில் போட்டு சாப்பிட்டு விடுவேன், சமயங்களில் லேசாக சர்க்கரை தூவிச் சாப்பிடுவேன். அம்மா திட்டமாட்டாள். என்னை அந்த விஷமம் செய்ய அனுமதிப்பாள்.
அப்பா ஒரு ரூபாய் கொடுத்த உடன் கேன்டீனுக்குச் செல்லும்போது இது நினைவுக்கு வந்து ஆர்வமாகச் சென்றால், அது மாலையில்தான் இருக்குமாம். இத்தனூண்டு பையன் தனியாய்ச் சாப்பிட வந்திருக்கிறானே என்று ஏதாவது சொல்வார்களோ என்று பார்த்தேன். அப்பாவுடன் என்னைப் பார்த்திருப்பதால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
பெரிய மனுஷனாய் அமர்ந்து இரண்டு இட்லி, ஒரு தோசை சாப்பிட்டேன். தங்கைக்கு ஒரு செட் பூரி பார்சல் சொல்லும்போதே ஒரு எண்ணம். கூடுதலாக ஒரு செட் பூரி பார்சல் வாங்கிக்கொண்டேன். மந்தார இலையில் வைத்துக் கட்டித்தரப்படும் அந்த பூரி அப்புறம் வீட்டில் சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும்!
இட்லி எட்டு பைசாவோ, பத்து பைசாவோ... தோசை 15 பைசா என்று ஞாபகம். பூரி 18 பைசா என்று ஞாபகம். எனவே மிச்சம் வேறு சில்லறை கொடுத்தார் கேன்டீன் காசாளர். கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்தேன்!
தங்கைக்கு நான் பார்சல் வாங்கியது குறித்து அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சந்தோஷம்!
============================== ============================== ============================== ===
ஒரு பழைய திகில் கவிதை!
=================================================================================================
கொரோனா காலம் கற்றுத் தந்த பாடம் குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா:
"இந்த கொரோனா காலம், நம் மக்களுக்கு பல உண்மைகளை புரிய வைத்துள்ளது. அதில் முக்கியமானது, உடலுக்கு நல்லது செய்யும், இயற்கையாக விளைந்த, நஞ்சில்லாத காய்கறிகள், பொருட்களை பயன்படுத்தத் துவங்கியுள்ளோம்.
நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கஷாயம், காய்ச்சப்படாத வீடுகளே இல்லை என்றாகி விட்டது. வீடுகளின் ஒரு ஓரத்தில், கற்பூரவல்லி, துளசி, ஆடாதொடா, துாதுவளை போன்ற மூலிகைச் செடிகளை வளர்க்கத் துவங்கி விட்டோம்.
அதுபோல, நல்ல கீரைகள், பழங்களை தேடிச் சென்று, வாங்கி பயன்படுத்துகிறோம். மேலும், எவ்வளவு சின்ன வீடாக இருந்தாலும், வீட்டுக்கு இரண்டு தொட்டிகளில், பிடித்தமான மூலிகை, பூச்செடிகளை மக்கள் வளர்க்கத் துவங்கியுள்ளனர்.
எனக்கும் செடி, கொடிகள் மீது எப்போதும் ஆர்வம் அதிகம். எங்கு சென்றாலும், அங்கிருந்து ஏதாவது ஒரு செடியை வாங்கி வந்து, வீட்டில் வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் செல்லும் வழியில் எங்களுக்கு ஒரு சிறிய தோட்டம் உள்ளது.
கடந்த, 1986ல் அதை வாங்கினோம். நேரம் கிடைக்கும் போது என்றில்லாமல், அடிக்கடி அந்த தோட்டத்திற்கு, குடும்பத்துடன் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்.அங்கு, எனக்கு பிடித்தமான பல செடி, கொடிகள், மரங்கள், மூலிகைகள், பழ மரங்களை வளர்க்கிறேன். அங்குள்ள செடி, கொடிகளை பார்ப்பதற்கு, அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.அந்தத் தோட்டத்தில், வீட்டுக்குத் தேவையான அனைத்து மூலிகைச் செடிகளையும் வைத்துள்ளேன்.
காய்கறிகளும், கொஞ்சம் போட்டுள்ளேன். சென்னையில் வீட்டு மாடியில் வைத்துள்ளது போல, அந்தத் தோட்டத்திலும், துளசி, கற்பூரவல்லி, முசுமுசுக்கை, முடக்கத்தான், துாதுவளை போன்றவை வளர்கின்றன.
துாதுவளை செடியைப் பார்த்தாலே, எங்க மாமா, கருணாநிதி ஞாபகம் தான் வரும். லேசாக சளி இருந்தாலும் போதும், துாதுவளை துவையல் செய்யச் சொல்லி, சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவாங்க; அப்படியே சளி குறைந்து விடும்.
கோபாலபுரம் வீட்டின் பின்புறம், சிறிய தொட்டியில், துாதுவளை செடிகளை, அத்தை வைத்துள்ளார். எப்போதெல்லாம் மாமா, துாதுவளை துவையல் கேட்பாரோ, அப்போதெல்லாம், அந்தச் செடியிலிருந்து, சில இலைகளை வெட்டி, துவையல் அரைத்து கொடுப்பார்.
இப்பவும், எங்கள் வீட்டில் அடிக்கடி துாதுவளை துவையல் உண்டு.அதுபோல, மலை நெல்லி மரம் தோட்டத்தில் உள்ளது. அதன் காய்களை பறித்து வந்து, கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை, மிளகு, சீரகம் கலந்து, மிக்சியில் அடித்து, நெல்லி மோர் அருந்துவது, எங்கள் வீட்டில் இப்போதும் வழக்கம்!
சொல்கிறார்கள் - 5-10-20 தினமலர்.
=========================================================================================
எழுத்து சீர்திருத்த முறை பற்றி பேசும்போது கீதா அக்கா பழைய முறையிலேயேதான் இன்னமும் எழுதுவதாகச் சொல்லி இருந்தார். பேனாவால் உங்களுக்கு அந்த நிமிடம் தோன்றும் சப்ஜெக்டில் எதையாவது ஒரு பாரா எழுதி அனுப்புங்களேன்...
அதாவது பேப்பரில் எழுதி அதைப் புகைப்படம் எடுத்து அனுப்பினால் வியாழனில் பிரசுரிக்கலாம். கையெழுத்து, எழுத்துமுறை, சப்ஜெக்டின் சுவாரஸ்யம் எல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்! ஒரு சுவாரஸ்யம்தான்!
=========================================================================================
எதையும் சோதித்துப் பார்த்து விடுவது நல்லது!
"படவா... மாட்டினியா?!"
"கண்டுபிடிச்சுட்டீங்களா?"
ஐடியா அய்யாசாமி!
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம்.
நீக்குஅன்பு ஸ்ரீராம், அன்பு கமலா மற்றும் எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.
நீக்குஎல்லோரும் என்றும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.
வாங்க வல்லிம்மா... காணோமேன்னு பார்த்தேன். வணக்கம்.
நீக்குஎட்டு பைசாவுக்கு இட்லி, இன்று ஒன்று பனிரெண்டு ரூபாய் ஆகி விட்டது ஜி.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான விடயங்கள்.
//காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் செல்லும் வழியில் எங்களுக்கு ஒரு சிறிய தோட்டம் உள்ளது//
உங்களுக்கு அங்கு மட்டுமா தோட்டம் உள்ளது ?
ஹா... ஹா... ஹா...
நீக்குநன்றி ஜி.
அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜு ஸார்... வாங்க...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதம்பம் அருமை. தூங்கும் போஸ்கள் நம்மில் பலருக்கு மாறுபடுகிறது என்னவோ வாஸ்வந்தான். பல தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள்.படுத்தவுடன் உறக்கம் வரும் யோகம் அனைவருக்கும் கிட்டாது. குப்புற படுத்து தூங்கினால் நெஞ்சு வலி வருமென சிலர் சொல்லுகிறார்கள். இந்த கொரானாவுக்கு அது பலனுள்ளது என்ற செய்தி இன்று தெரிந்து கொண்டேன். சளி தொந்தரவு இருக்கும் போது அப்படி படுத்தால் சௌகரியமாக தூக்கம் வருமென்பதை நான் பல வருடங்களாக உணர்ந்துள்ளேன். ஆனால் அதன் பலன் பற்களையும் பாதித்தது. (சளியினாலும் இதன் பாதிப்பு வந்திருக்கலாம்.)
உங்கள் தங்கை மீது நீங்கள் வைத்திருந்த அன்பை அன்று ஒரு ரூபாய் பேச்சு வரும் போதே நீங்கள் சொன்னதும் மனதாற பாராட்டிக் கொண்டேன். இயற்கையிலேயே இந்த அன்புகள் வர வேண்டும். பாராட்டுகள்.
கவிதை நன்றாக உள்ளது. இனி இரவில் படுக்கைக்கு செல்ல விளக்கு அணைக்கும் போதும், இந்தக் குரலும் இரண்டொரு நாள் எனக்குள் கேட்கும் என நினைக்கறேன்.:) பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
ஆமாம் கமலா அக்கா... குப்புறப் படுத்துத் தூங்கினால் அந்த ஆபத்தும் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம். சிலர் படுக்க முடியாமல் சாய்வு நாற்காலியில் அமர்ந்தே தூங்குவார்கள்.
நீக்குபாராட்டுகளுக்கு நன்றி.
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள். இன்று முதல் முதல் வந்திருக்கும் கமலா, பின்னர் வந்திருக்கும் துரை ஆகியோரோடு எப்போதும் வருகை தரும் ரேவதியைக் காணோமே என்னும் கவலையோடு இனி வரப்போகும் அனைவரையும் வரவேற்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் நல்லபடியாக அமையவும் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா..்். வணக்கம். நம் பிரார்த்தனைகள் யாவும் பலிக்கப் பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குநான் எப்போதுமே எழுந்தவுடன் முதலில் எ. பியை பார்ப்பதும், நட்புறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம் சொல்வதும் என சில வருடங்களுக்கும் மேலாக எனக்கு பிடித்தமான பழக்கமாகி விட்டது. நான் எத்தனையோ தடவை யாரும் முதலில் வந்து கருத்திடாமல் இருப்பதை பார்த்தும் கூட நான் முதலில் வர மாட்டேன். (என்னால், என் ராசியினால், எப்போதும் கருத்துக்கள் குவியும் எ. பிக்கு அன்றைய தினம் ஏதும் பங்கம் வந்து விடக்கூடாதே என்ற என்னுடைய தாழ்வு மனப்பான்மைதான் காரணம்.. ) துணிந்து சில சமயம் இது போல் என்றாவது ஆஜராகி விடுவேன். நேற்று என்னவோ எனக்கு பொழுதுக்கும் பாடுக்கும் சரியாக இருந்ததினால் எந்த பதிவுக்கும் வர இயலவில்லை நேற்றைய கேள்வி பதில்களையும் இனிதான வாசிக்க வேண்டும். உங்கள் பதிவுக்கும் பிறகு வருகிறேன். இந்த நட்புகள் நம்முள் என்று தொடர வேண்டுமாய் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
நட்புலாம் நல்லாவே தொடரும்... அந்த பிள்ளையார் கொழுக்கட்டை(களை) எனக்குத் தர மறந்துடாதீங்க கமலா ஹரிஹரன் மேடம்..
நீக்குஹா ஹா ஹா.
நீக்குதாழ்வு மனப்பான்மையே வரக்கூடாது. அதிலும் இதில் எல்லாம் கண்டிப்பாக வரக்கூடாது கமலா அக்கா.
நீக்குநான் கவனிச்சிருக்கேன் கமலா! உங்கள் தாழ்வு மனப்பான்மையை.கொஞ்சம் அதிகமாவே இருக்கோ? அதை எல்லாம் தூக்கிக் கடாசிட்டு இங்கே உங்க திறமை, உங்க வருகை, உங்க அருமையான கற்பனை வளம் நிரம்பிய எழுத்து ஆகியவற்றை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். யாரும் பாராட்டவில்லை என்று நினைக்காதீர்கள். நான் எழுதறேன் என்று தெரியுமே தவிர நம்ம ரங்க்ஸுக்கு என்ன எழுதறேன், எதைப் பத்தி எழுதறேன், யாரெல்லாம் படிச்சாங்க, என்ன கருத்து வருது என்பதெல்லாம் தெரியாது. படிச்சதே இல்லை. அவ்வளவு ஏன்? என்னோட கல்யாணப் பதிவுகளைப் படித்து விட்டு என் ரங்க்ஸின் அத்தை பிள்ளை அவரைக் கூப்பிட்டு எல்லாவற்றையும் பற்றிக் கேட்க அவர் திருதிரு! எப்படியோ சமாளிச்சார். ஆகவே வீட்டில் இருக்கிறவங்க படிக்கிறதில்லைனு எல்லாம் வருந்தாதீங்க. என் இரண்டு குழந்தைகளுக்கும் தமிழ் சரளமாக எழுதப் படிக்கத் தெரியாது! அவங்களுக்கு எல்லாம் நான் என்ன எழுதறேன்னே தெரியாது! இதுக்கெல்லாம் கவலைப்பட முடியுமானு அதை எல்லாம் துடைச்சுத் தூக்கிப் போட்டுட்டுத் தான் எழுதிட்டு இருக்கேன். ஆகவே உங்களோட ஆக்கங்கள் தான் முக்கியம்! அதை நீங்கள் நன்றாகவே செய்கிறீர்கள். இனிமேல் தாழ்வு மனப்பான்மை எல்லாம் வரக்கூடாது!
நீக்குஉண்மை.. உண்மை... ஆமோதிக்கிறேன்.
நீக்குவணக்கம் ஸ்ரீராம் சகோதரரே
நீக்குதங்களது அன்பான ஊக்கம் மிகுந்த கருத்துரைகளுக்கு மிக்க மகிழ்ச்சி. என் படைப்புகளை மெருகேற்றி என்னை வளர்த்தது எ. பிதான். என்னென்றும் என் நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி
நீக்குதங்களது விரிவான கருத்துரை கண்டு மனம் மகிழ்ந்தேன். தாங்கள் கூறுவது போல் என்னுடைய தாழ்வு மனப்பான்மை (கொஞ்சம்) அதிகந்தான். என்ன செய்வது.? பிறப்பிலிருந்தே தயை, தாட்சண்யம் பார்த்து வளர்ந்து விட்டதால் இதுவும் வந்து ஒட்டிக் கொண்டு விட்டது. "தாட்சண்யம் தனநாசம்" என எங்கள் அம்மா ஒரளவு வளர்ந்த பின் அடிக்கடிக் கூறி வளர்த்தார்கள். ஆனால், இதை (தா. மனம்) இன்று வரை என் உறவுகளும் தங்களுக்கு சாதகமாக எங்கு சென்றாலும், (இல்லை அவர்கள் இங்கு வந்தாலுமே ) என் உடல் உழைப்புகளாக பயன்படுத்திக் கொண்டார்கள்/கொள்கிறார்கள். சிறு வயதிலிருந்தே முகத்துக்கு நேராகவே குற்றம், குறைகளை சுட்டிக் காட்டி, மனதை நோகடித்து என் இந்த தா. மனப்பான்மையை வளர விட்டார்கள்.அதனால் பதிலுக்கு எவரையும் குறை கூறி நோகடிக்கத் தெரியவில்லை. போகட்டும்...! தங்கள் ஆறுதலான மொழிகள் எனக்கு பக்க பலமாக இனி இருக்கட்டும். தங்கள் அனுபவங்களை பாடமாகச் சுட்டிக் காட்டி தைரியமான வார்த்தைகளையும், மனதில் என் எழுத்துக்களைப் பற்றி ஊக்கமும் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் அளவு கற்பனை வளம் எல்லாம் எனக்கு கிடையாது கமலா அக்கா.. காய்கறி பேசுவது போல அமைத்து சமையல் குறிப்பு, தத்துவ விசாரங்கள், கவிதை என சகல திசைகளிலும் உங்களிடம் திறமை இருக்கிறது.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஉங்கள் அன்பான பாராட்டுகளுக்கு என். மனமார்ந்த நன்றிகள். ஆனால் உங்களிடம் கற்பனை வளம் குறைவு என மட்டும் சொல்லாதீர்கள்... எத்தனை நயமுடன் கூடிய ஆழமான கவிதைகள்... இனிமையான பதிவுகள்.. இதோ, இன்றைய வெள்ளி பதிவில் பால்ய கால நினைவுகளை ஒவ்வொரு வயதிலும் நீங்கள் சுருக்கமுடன் அழகாக எழுதியிருக்கும் முறை கண்டு மிகவும் வியந்து ரசித்தேன்.. இப்படியான உங்கள் திறமைகளுக்கு முன் நான் மிக மிக சாதரணமானவள். இவ்வளவு திறமைகளிலிருந்தும், அன்புடன் மற்றவர்களை மனதாற பாராட்டும் உங்கள் பெருந்தன்மை குணமும் எனக்கு அவ்வளவாக இல்லை. எனினும் உங்கள் பாராட்டுக்களை எனக்கு, என் எழுத்துக்களுக்கு ஊக்கமளிக்கும் டானிக்காக எடுத்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
எனக்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வந்துடாது. இப்படியும், அப்படியும் புரண்டு கொண்டே இருப்பேன். அப்புறமா எப்போ, எப்படி, என்ன மாதிரியான நிலையில் தூங்குவேன் என்பதெல்லாம் தெரியாது. அதை எல்லாம் கவனிக்க முடியாமல் தூங்கி இருப்பேன். மத்தவங்க எப்படித் தூங்கறாங்கனு பார்த்ததில்லை.
பதிலளிநீக்குசமையலில் புடலங்காய் என்றெல்லாம் சாப்பிடுகிறேனோ அன்று மிக மிக ஆழ்ந்த தூக்கம் வந்துவிடும். இரவு படுக்கப்போகும் முன், மிக்ஸியில் சிறிய துண்டு புடலங்காய், சிறிது உப்பு, மோர் சேர்த்து ஓட விட்டு அதைக் குடித்து அரைமணி நேரம் கழித்து படுத்தால், ஆழ்ந்த தூக்கம் குறைந்த பட்சம் நான்கு மணி நேரங்களுக்கு வரும்.
நீக்குமுன்னர் எல்லாம் படுத்த உடனே தூங்கி விடுவேன். இப்போதுதான் இப்படிக் கஷ்டப்பட்டேன். ஆனால் இப்போது பரவாயில்லை. பழைய மாதிரி தூங்க முடிகிறது என்று சமீபத்தில் நினைத்துக்கொண்டேன்.
நீக்கு@கேஜிஜி... நீங்கள் முன்னரே ஒருமுறை இதைச் சொல்லி இருப்பதாக நினைவு. யாருக்காவது சொல்லி ஒருமுறை முயற்சித்துப் பார்க்கவேண்டும்! (ஹிஹிஹி... புடலங்காயை சமைத்துச் சாப்பிடவே எனக்குப் பிடிக்காது...)
நீக்குசொல்றவங்களுக்குக் கவலை இல்லை ஸ்ரீராம்... பூசணி சாறு, புடலங்காய் சாறு ன்னு சொல்லிடுவாங்க. குக் பண்ணாமல் அவற்றைச் சாப்பிடுவது கடினம். தொண்டையில் இறங்காது. ஒருவேளை, தூக்கம் வரலைனா அதனைச் சாப்பிட வேண்டியிருக்கும் என்ற நினைப்பிலேயே அவருக்கு சட்னு தூக்கம் வந்துவிடுகிறதோ?
நீக்குஹா.. ஹா.. ஹா... அவருக்குப் பழகி இருக்கும். நமக்குத்தான் அந்த பயத்திலேயே தூக்கம் வந்து விடும்!
நீக்குபுடலங்காய் என்ன புடலங்காய்! நாங்க கசகசா, ஜாதிக்காய்க்கெல்லாமே அசருகிற ஆள் இல்லையாக்கும். கசகசாவும், ஜாதிக்காயும் வறுத்துப் பொடி செய்து கொண்டு வைத்திருக்கேன். அவ்வப்போது பாலில்/வெந்நீரில் போட்டுக் குடிப்பேன். ஏதோ தூக்கம் வரும், பனிரண்டு மணிக்கப்புறமா. கரெக்டாக் காலை நாலு மணிக்கு cramps ஆரம்பிச்சுடும். கால்களை நகர்த்தக் கூட முடியாது. ஐந்து மணி வரை தவிச்சுட்டு மெதுவா எழுந்துப்பேன். இப்போத் தான் ஐந்து மணிக்கு எழுந்துக்கறது சுமார் ஒன்றரை வருடங்களாக. அதுக்கு முன்னால் நாலரைக்கே எழுந்துப்பேன்.
நீக்குபுடலங்காய் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி வாங்குவார். புடலங்காய்க் கறி, கூட்டு, பொரிச்ச குழம்பு, பஜ்ஜி, வதக்கித் துவையல்னு செய்யறது உண்டு. அதுக்கெல்லாம் அசைந்து கொடுக்காது தூக்கம். மருத்துவர் வேதனை அதிகம் இருப்பதால் தூக்கம் வருவதில்லை என்கிறார். வலி எப்போக் குறையும்! எப்போத் தூங்க ஆரம்பிக்கிறது! அதெல்லாம் ஜூஜூபினு விட்டாச்சு!
நீக்குபூஷணிக்காய்ச் சாறு (வெள்ளைப் பூஷணி) நீங்க குடிச்சதில்லை போல! நம்மவருக்கு நிறையக் கொடுத்திருக்கேன். பூஷணிக்காய்ச் சாறு எடுத்துக் கொண்டு உப்புச் சேர்த்து மிளகு பொடி போட்டுக் குடிச்சிருக்கோம். முள்ளங்கி, வாழைத்தண்டு போன்றவற்றிலும் செய்திருக்கேன். இப்போ எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்குச் சொல்லி அவர் தன் கணவருக்கு தினமும் கொடுப்பதாகச் சொன்னார்.
நீக்குசரிதான்... தூக்கத்துக்கு ஏகப்பட்ட மருந்துகள் இருக்கு போல... கசகசா, ஜாதிக்காய் எல்லாம் சொல்வாங்க.. நானும் கேள்விப்பட்டிருக்கேன்.
நீக்கு//புடலங்காய்க் கறி, கூட்டு, பொரிச்ச குழம்பு, பஜ்ஜி, வதக்கித் துவையல்னு// - அட அநியாயமே... மருத்துவர் தினம் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு சேர்த்து குடிங்க, எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும் என்று சொன்னால், அதில் நல்லா ஜீனி சேர்த்து, கொஞ்சம் வார்மா ஜூஸ் வேளைக்கு ரெண்டு டம்ளர் சாப்பிட்டுவிட்டு எடை குறையலைனு கவலைப்படற மாதிரி இருக்கு.
நீக்குபுடலங்காயை சாறு எடுத்து சாப்பிடணும் இல்லைனா பச்சையா சாப்பிடணும்னு (அப்போ சீனாக்காரனை நினைச்சுக்கணும். எழவுபுடிச்சவன் பூச்சிகளையே சாப்பிடும்போது நமக்கு பச்சையா வெஜிடபிள் சாப்பிட என்ன கேடுன்னு மனசு கேட்கும்) மருத்துவர் கேஜிஜி அவர்கள் சொன்னா, புடலங்காயை பஜ்ஜி சாப்பிட்டேன், பருப்புசிலி சாப்பிட்டேன், ஃப்ரை பண்ணிச் சாப்பிட்டேன்...தூக்கம் வரலைனு சொன்னா அவர் என்ன செய்வார் பாவம்?
ஆனா ஒண்ணு...கசகசா பாயசம் செய்து சாப்பிட்டால் தூக்கம் கேரண்டி. கூடவே ஷுகர் லெவலும் எகிறும்.
//சமையலில் புடலங்காய் என்றெல்லாம் சாப்பிடுகிறேனோ// முதல்லே எடுத்த எடுப்பில் இதைத் தான் சொல்லி இருக்கார் நெல்லை! எங்கே ஒழுங்காப் படிச்சாத்தானே! இன்னொண்ணூ விட்டுட்டேனே! பிஞ்சுப் புடலங்காயைப் பொடியாக நறுக்கி உப்புச் சேர்த்து நன்கு சுருள வதக்கித் தயிரில் போட்டுப் பச்சடியாகச் சாப்பிடலாம். கொடியில் பிஞ்சாக இருக்கும்போதே பறிச்சுப் பண்ணிடணும்.
நீக்குஒரே ஒருமுறை நானே செய்த புடலங்காய்க் கூட்டு எனக்குப் பிடித்திருந்தது. தேங்காய், மிளகு சேர்த்து அரைத்து செய்திருந்தேன்!
நீக்குஆஸ்த்மா தொந்திரவு உண்டு என்பதால் எப்போதுமே தலையணை உயரமாகக் கொஞ்சம் சரிவாகவும் வைத்துவிட்டு உயரமான இடத்தில் தலை இருக்கும்படி வைத்துக்கொள்வேன். ஆனால் இப்படித் தூங்க ஆரம்பித்தாலும் கடைசியில் கீழே இறங்கி இருப்பேன் போல! தலையோடு சேர்த்துக் கழுத்து தினம் தினம் வலிக்கும்.
பதிலளிநீக்குஆஸ்த்மாவுக்கு கைகண்ட மருந்து ஆடாதோடை பொடி. காதி / நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். காலை & மாலை வெறும் வயிற்றில் சுடுநீரில் கலந்து குடித்தால் போதும். மூன்று நான்கு நாட்களுக்குள் ஆஸ்த்மா பறந்தோடிடும்.
நீக்குஆடு தொடா இலை.. அதை எப்படி வேண்டுமானால் எழுதிக் கொள்ளலாம்.
நீக்குஏன் ஆடுகள் தொடாத இலையாக இவை இருக்கின்றன என்ற கேள்வி மனசில் எழுந்தால் போதும்.
தலையணை உயரமாக வைத்துக் கொண்டால் கழுத்து வலி வரும்தான். சாய்த்துக் கொள்ளும் வசதியில் ஒரு கட்டில் இருக்குமே அதை வாங்கிப் பார்க்கலாம். தோள்பட்டையிலிருந்தே உயர்ந்து கொண்டே செல்லும்.
நீக்குஇந்த ஆடாதோடை / ஆடு தொடா இலை வைத்து ஒரு இருமல் மருந்து வருகிறது. பிராஸ்பான் என்கிற பெயரில் கிடைக்கிறது.
நீக்குஸ்ரீராம். கிளைக்கோடினும் ஆ.தொ. இலை சம்பந்தப்பட்டது தான்.
நீக்குதஞ்ஞாவர் சரஸ்வதி மஹால் ஏட்டுச்சுவடிகளிலிருந்து மேல் நாட்டார் பெற்ற மருத்துவ ஞானம் எக்கசக்கம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஓ.. அப்படியா ஜீவி ஸார்? அது கொடின் பாஸ்பேட் கலவையாக இருக்கும் என்று நினைத்தேன்.
நீக்கு@கௌதமன், ஆடாதொடை எல்லாம் கஷாயம் வைச்சு நிறையச் சாப்பிட்டிருக்கேன். நெருஞ்சி முள்ளில் கூடக் கஷாயம் வைச்சுக் குடிச்சிருக்கேன். வல்லாரையும் துவையல், பொரிச்ச குழம்புனு பண்ணிச் சாப்பிட்டிருக்கேன். நம்மவருக்குத் தான் பயம்! ஏற்கெனவே ஞாபக சக்தி அதிகமா இருக்கு! வல்லாரை எல்லாம் சாப்பிட்டியானா ஏழேழு ஜன்மங்களும் நினைவுக்கு வந்துடப்போகுது என்பார்.
நீக்குஸ்ரீராம் சொல்ற கட்டில் மருத்துவமனையை நினைவூட்டும். அதிலும் ஆபரேஷன் முடிஞ்சப்புறமா அந்த மாதிரிக் கட்டில்லே தானே கொண்டு போடறாங்க!
நீக்குஆனாலும் நீங்க ரொம்பப் பொறுமை, சுறுசுறுப்பு கீதா அக்கா... பாஸ் உட்பட நிறைய பேருக்கு இதெல்லாம் செய்ய பொறுமை இருப்பதில்லை.
நீக்கு//ஸ்ரீராம் சொல்ற கட்டில் மருத்துவமனையை நினைவூட்டும்.//
நீக்குஹா... ஹா... ஹா... சொல்வீங்கன்னு நினைச்சேன்!
//பாஸ் உட்பட நிறைய பேருக்கு இதெல்லாம் செய்ய பொறுமை இருப்பதில்லை.// பெரும்பாலானவை வீட்டுத் தோட்டத்திலேயே இருந்த்வை தானே! பிரண்டை எல்லாம் வீட்டிலேயே இருந்தது. மூங்கில் கூடப் போட்டிருந்தோம் வேலி ஓரமா! உயரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வளர்ந்திருந்தது, வெட்டிட்டோம்.
நீக்குபழைய வீட்டு வாசலிலேயே எங்கள் மரத்திலிருந்தே முருங்கைக்கீரை கிடைத்தது. என்ன பயன்?!!!
நீக்குஇதோ வந்துட்டேனே கீதாமா.
பதிலளிநீக்குகுளிர் கொஞ்சம் முடக்கிப் போடுகிறது.
கபம்,பித்தம் தலையைக் காட்டுகிறது:)
நன்றி மா.தோழியுடன் நம் எங்கள் ப்ளாக் நட்பைப்
பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன் நேற்று.
இதோ நான் இருக்கிறேன் என்று வந்து விட்டீர்கள்.
அமேசானில் திரிகடுகம் பொடி கிடைக்கிறது. அல்லது தனித்தனியே dry ginger powder, pepper powder, thippili powder இவற்றின் மொத்த எடை போல இரண்டு பங்கு எடை பனங்கல்கண்டு வாங்கி பொடி செய்து, சேர்த்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போதெல்லாம் இந்த சுக்கு,மிளகு, திப்பிலி பொடியை அரை டீஸ்பூன் சாப்பிட்டால் போதும். வாத, பித்த, கப உபாதைகள் இருக்காது.
நீக்குகேஜிஜி எலலவற்றுக்கும் மருந்து சொல்கிறார். விடை வைத்திருக்கிறார்.
நீக்குஅமேசானுக்கு ஏன் போகணும்? நம்ம ஊர் நாட்டு மருந்துக் கடையிலேயே கிடைக்கிறதே எல்லாம்! நாங்க நிறையப் பயன்படுத்தறோம். முருங்கைக்கீரை சூப்புக்கு மிளகு பொடி, திப்பிலிப் பொடி கொஞ்சம் சேர்ப்பேன். இம்மாதிரிப் பொடிகளை வைத்துத் தான் இருமல் மருந்து ஸ்ரீராமுக்குச் சொன்னேன்.
நீக்குஅதானே, ரேவதியைக் காணோமேனு நினைச்சேன். இது என்னமோ இன்னும் எழுதி இருந்தேன். ஆனால் அதைக் காணோமே! எங்கே போச்சு?
நீக்குஅது சரி, உங்க தங்கைக்கு மட்டும் பூரி வாங்கிட்டுப் போயிருக்கீங்க! அக்கா, அண்ணாவுக்கெல்லாம் ஒண்ணும் இல்லையா? (அப்பாடி, இன்னிக்குச் சாப்பாடு ஜீரணம் ஆயிடும்.) நாராயணா! நாராயணா!
பதிலளிநீக்குஅதானே!
நீக்குஸ்ரீராம் தங்கைக்கோர் கீதம் பாடியிருக்கார்.
நீக்குநானும் அவர்ட்ட கேட்ட ப்ரேமா விலாஸ் முந்திரி அல்வா தருவார்னு நம்பறேன். இப்போ சந்தர்ப்பம் இல்லைனாலும், அவங்க வீட்டுத் திருமணத்திலாவது எனக்கு எப்படியும் தந்துடுவார்னு நினைக்கிறேன். (பாண்டியநாடு யாத்திரையின்போது, கூடலழகர் கோவிலுக்கு முன் மதுரையில் இன்னொரு கோவிலுக்குப் போகும் வழியில் கடையைப் பார்த்தேன்...ஆனா நாங்கதான் நேரா கோவில், அப்புறம் பஸ்ஸில் ஏறி அடுத்த கோவில்னு போய்க்கிட்டிருந்தோமே)
கீதாக்கா... ஏற்கெனவே நான் கொஞ்சம் கவலையில் இருக்கிறேன். என் அக்கா தினமும் ரெகுலராக எங்கள் பிளாக் படிப்பதோடு கமெண்ட்ஸும் பார்ப்பார். இதைக் கட்டாயம் படித்து விட்டு "அப்போ நான் எங்கே இருந்தேன்? எனக்கு இது நினைவில் இல்லையே?" என்பாரோ, எனக்கு ஏன் நீ வாங்கி வரவில்லை?" என்று கேட்பாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வேறு! நல்லவேளை, என் அண்ணன் இதை எல்லாம் படிப்பதில்லை!
நீக்குஎங்கும் வெளியில் செல்வதே சிரமமாக இருக்கும் இந்நேரத்தில் ப்ரேமபாசம்... மன்னிக்கவும், பிரேமவிலாஸ் அல்வாவா? அல்வா கொடுத்தது வேண்டியதுதான்!
நீக்குநெல்லை.. அங்கு சுடச்சுட சாப்பிட்டால்தான் அது நன்றாய் இருக்கும். நீங்கள் சொல்வது ஹேப்பிமேன் முந்திரி அல்வாவோ?
வெளில சாப்பிடுவதற்கே மிகுந்த யோசனையாகத்தான் இருக்கு. ஒரு அவசர வேலையாக சென்னை வந்திருந்தபோது அப்போதும் வெளியில் (உறவினர் வீட்டில் கேட்டரிங் காரர் கொண்டுவந்திருந்த உணவு) சாப்பிடவில்லை. மாம்பலத்தில் லக்ஷ்மி விலாஸ்-திருநெவேலி அல்வா, காராசேவு போன்ற சமாச்சாரங்கள் இருந்தும் அதே பயத்தினால் வாங்கவில்லை. பொதுவா நான் நெல்லை, கல்லிடைக்குறிச்சி போன்ற இடங்களிலிருந்து கொரியரில் இனிப்பு வகைகளைத் தருவித்துக்கொள்வேன். என் பெண்ணின் நண்பி நெல்லையில்தான் இருக்கிறாளாம்-இந்த ஊரடங்கு சமயத்தில். ஆனால் வெளியில் தயாராகும் உணவுப் பொருட்களை வாங்கக்கூடாது என்று பசங்க தடா போட்டிருக்காங்க. அதை மீற முடியாது.
நீக்குஎனக்குமே சட் சட் என்று இனிப்பு வகைகளைச் செய்யும் திறமை வந்துவிட்டதாக எண்ணிக்கொள்வதால், நானே மனதுக்குத் தோன்றும்போது பண்ணிக்கொள்கிறேன்.
நாங்க மெதுவா வெளியில் வாங்கி சாப்பிடத் தொடங்கி விட்டோம். அடையார் ஆனந்த் பவனிலிருந்து இரண்டு மூன்று முறை ஸ்விக்கியில் வாங்கிச் சாப்பிட்டு விட்டோம்!!!
நீக்குஹாஹாஹா, உங்க அக்கா தானும் கருத்துச் சொல்லலாமே ஸ்ரீராம்? சரி, போனால் போகுது, உங்க அண்ணாவை முகநூலில் பார்த்தாலும் இதைப் பத்தி ஒண்ணும் சொல்லவில்லை. சரியா?
நீக்குநாங்க எப்போவானும் முடியாதப்போ வாடிக்கை காடரர் கிட்டே வாங்கறது தான். ஏனெனில் அவங்க சமைப்பது வீட்டில். அதுவும் அவங்க அம்மா, அப்பா, தங்கைகள்! வீட்டு மனிதர்கள் என்பதால் வெளி ஆட்களை விடுவதில்லை என்பதால் நம்பி வாங்கிக்கலாம். ஓட்டல்கள் திறந்தாச்சுனு சொன்னாங்க! ஆனால் எதுவும் வாங்குவது இல்லை. நான் அநேகமாய் வீட்டிலேயே ஏதாவது பண்ணிடறேன். அரைக்கிலோ வேர்க்கடலை வாங்கி உருண்டைக்குப் பதிலா கேக் மாதிரிப் பண்ணி வைச்சேன். அதோடு வேர்க்கடலை+கடலைமாவு+உப்பு+காரம்+பெருங்காயம் சேர்த்துக் கொஞ்சமாக எண்ணெயில் வறுத்து வைத்தேன். இப்படி ஏதேனும் முடிஞ்சதைப் பண்ணி வைச்சுக்கறேன். இல்லைனா இருக்கவே இருக்கு பிரிட்டானியா ரஸ்க்/பிஸ்கட்/மாரி பிஸ்கட்! அதுவும் அலுத்தால் ஏதானும் சுண்டலாகப் பண்ணிடுவேன். கைவசம் பட்டாணி, கொ.க. காராமணி, பயறு இருக்கும்.
நீக்கு//உங்க அண்ணாவை முகநூலில் பார்த்தாலும் இதைப் பத்தி ஒண்ணும் சொல்லவில்லை. சரியா?//
நீக்குநான் சரியான நுணல்!
//இருக்கவே இருக்கு பிரிட்டானியா ரஸ்க்/பிஸ்கட்/மாரி பிஸ்கட்! //
நீக்குஎங்கள் வீட்டில் அதெல்லாம் உள்ளே இறங்காது! உடம்புக்கு ஆகாதது எல்லாம் வாய்க்குப் பிடிக்கும் - எனக்கு உட்பட!
அன்பு ஸ்ரீராம், உடம்பு சரியில்லாததை நீங்கள்
பதிலளிநீக்குசொல்லும்போதே மனம் சிரமப்படுகிறது.
இந்த ஊரில் ஒருவர் லக்ஷக்கணக்கான்
ரூபாயில் மருந்துகளை
சாப்பிட்டுவிட்டு, இந்த நோய்க்கு யாரும் பயப்பட வேண்டாம்னு சொல்லிக்
கொண்டிருக்கிற பைத்தியக்காரத்தனத்தைக் கண்டு கோபம் வருகிறது.
அதைக் கேட்டு மக்களும் ஆடுகிறார்கள்.
என்ன செய்யலாம். இறைவன் விட்ட வழி.
அதெல்லாம் ஒன்றுமில்லை வல்லிம்மா.. இப்போ ரொம்பவே தேவலாம். நீங்கள் சொல்பவருக்கு நோய் வந்தது என்பதே உட்டாலக்கடியாய் இருக்கும்!
நீக்குஎன்னவோ போங்க! யார் நிஜம் பேசறாங்க, யார் பொய் பேசறாங்கனு ஒண்ணும் புரியலை!
நீக்குஅவருக்கு தேர்தல் ஜுரம்!
நீக்குஅந்தத் திகில் கவிதை போல் நீங்க நிறைய எழுதி இருக்கீங்க! ஆனால் பயம்மா வரலை. சிப்புச் சிப்பாய் வந்தது. ஸ்டாலின் மனைவி துர்கா, முடியுள்ள சீமாட்டி, எந்தக் கொண்டை வேணுமானாலும் போடலாம். ஆனால் அம்பத்தூர் வீடு நினைவில் வந்ததென்னமோ நிஜம். அங்கே தூதுவளை, சிறியா, பெரியாநங்கைகள், சித்தரத்தை, பிரண்டை, துளசிக் கூட்டமாக இருக்கும், இப்படி எல்லாம் இருந்தது. தூதுவளை ரசம் வாரம் ஒரு நாள் வைச்சுடுவேன். அக்கம்பக்கத்தில் இருந்தெல்லாம் வந்து பறிச்சுத் தரச் சொல்லுவாங்க. இப்போக் கான்க்ரீட் பூமி!
பதிலளிநீக்குநாட்டுமருந்துக் கடையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தூதுவளை சாக்லேட், வல்லாரை சாக்லேட் எல்லாம் பார்த்திருக்கிறேன். எமரால்ட் (நீலகிரி) பகுதியில் வீட்டு அருகே நிறைய வல்லாரை கீரை காணப்படும். தினந்தோறும் அந்த இலைகளை அப்படியே சாப்பிட்டதுண்டு.
நீக்கு//ஆனால் அம்பத்தூர் வீடு நினைவில் வந்ததென்னமோ நிஜம்.// - அட ஆண்டவா... நானே அந்த பில்டரைக் கூப்பிட்டு எதுக்கும் காண்டிராக்டில் இன்னொரு வரியையும் சேர்த்துடுங்க. சம்பந்தம் இல்லாதவங்க இனிமே, அதை எங்க வீடுன்னு சொன்னா, 1000 ரூபாய் ஃபைன் என்று சொல்லிடுங்க என்று சொல்லப்போகிறேன். ஹாஹா
நீக்கு@கேஜிஜி சார் - வல்லாரை கீரை வெறும்ன சாப்பிடலாமா? உறவினர் வீட்டிலிருந்து பறித்து எங்க வீட்டுல இப்போதா வச்சிருக்கேன்.
நம்ம கவிதையைப் படிச்சா திகிலா வரும்? சிரிப்புதான் வரும்! ஆனால் ஒன்று... இவன் அடுத்த கவிதை எப்போ எழுதுவானோ என்று திகிலாய் இருக்குமோ என்னவோ.. எனக்கு செடிகள் வளர்ப்பதில் சுறுசுறுப்பு கிடையாது. இந்த சிரியா, பெரியா நங்கை எல்லாம் அடையாளமும் தெரியாது. என்னுடன் பணியாற்றும் பெண்ணின் (கிச்சனை ஒட்டிய) தோட்டத்தில் பெரிய இரண்டு பாம்புகள் கும்மாளம் போடுகின்றன அவர் பயந்து கொண்டிருக்கிறார். வனத்துறையிடம் சொன்னால் 13,000 ரூபாய்க்கு டிடி எடுத்துத் தந்தாள் வந்துஇடத்தையே அலசி, சுத்தம் செய்கிறோம் என்கிறார்களாம். அப்போது இந்த நங்கைகள் பற்றி பேச்சு வந்தது.
நீக்குகேஜிஜி... நானும் அப்பாவுக்காக வல்லாரை, தூதுவளை சாக்லேட்டுகள் வாங்கி, நாங்களும் சாப்பிட்டிருக்கிறோம். பெரிய பயன் விளைந்ததில்லை.
நீக்குநெல்லை.. கீதா அக்கா கிட்ட வம்புக்கு போயிகிட்டே இருக்கீங்க... பாவம் அவங்க... (நாங்களும் சொல்வோமே நாராயண...)
நீக்கு//பெரிய பயன் விளைந்ததில்லை.// - வாங்கித்தந்தது இன்னும் நினைவில் இருக்கு இல்லையா? சின்ன வயதில் தங்கைக்கு பூரி வாங்கித் தந்தது இன்ன பிற விஷயங்கள் நினைவுக்கு வந்து இடுகைக்கு உபயோகமாவதே அந்த வல்லாரையினால்தான் என்று பட்சி சொல்கிறது.
நீக்குஹா.... ஹா... ஹா... எதிர்க்கடையில் வாங்கிய அந்த சாக்லேட்டுக்கு அவ்வளவு சக்தியா?
நீக்குகௌதமன் சார், இப்போவும் வல்லாரை, தூதுவளை சாக்லேட் கிடைக்கிறது. ஆனால் நாங்க வாங்கறதே இல்லை. ஊட்டினதும் நினைவில் வருது. அரவங்காடு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவில் ஒரு மருத்துவர் (அப்போச் சின்ன வயசு) நல்லா சிகிச்சை கொடுப்பார். எனக்குப் பல பிரச்னைகள் தீர ஆரம்பித்தன. நம்மவருக்கு மறுபடி சென்னையே மாற்றல் ஆனது! அதுக்கப்புறமா ஊட்டிக்குப் போகவே முடியலை! :( இப்போ நினைச்சாலும் ஏக்கமா இருக்கும்.
நீக்குநெல்லை & ஸ்ரீராம், நல்லா வம்பு வளருங்க! :)
நீக்குஅதானே... அக்காவா அசருவாங்க!
நீக்குஅழகாக விலையெல்லாம் நினைவு வைத்திருக்கிறீர்களே.
பதிலளிநீக்குஐந்து பைசாவுக்கு ஒரு இட்லி,பத்து பைசாவுக்கு
மூன்று இட்லி
இதெல்லாம் 1968 நிலவரம்.
நீங்களும் வாங்கிக் கொண்டு தங்கைக்கும் கொண்டு வந்தது தான் அருமை.
கன்னத்தின் கீழே கை வைத்துக் கொண்டு
நீக்குபடுப்பது நெஞ்சில் கபம் இருந்தாலோ
இல்லை வேறெதாவது அசௌகரியத்தாலோ எனக்கு வரும் வழக்கம்.
இப்போது பேரனும் அப்படியே தூங்குகிறான்.
ஒரு கை முகத்துக்கு ,'இன்னோரு கை
தலையணை மேல் வைக்க:)
விலை ஞாபகம் இருக்கும்மா... எங்கள் பள்ளி நாட்களில் பஸ்ஸ்டாப்ப்பில் நிற்கும்போது ஒரு குண்டுப் பையன் வந்து வயிற்றைத் தொட்டுக்காட்டி "பத்து பைசா கொடுங்க... இட்லி வாங்கிக்கறேன்.. பசிக்குது"ம்பான். ஒருமுறை தியேட்டரில் படம் பார்க்கும்போது எங்களை விட உயர் வகுப்பில் அமர்ந்து ஏதோ தின்றபடியே படம் பார்த்துக் கொண்டிருந்தான். எனவே விலை மறக்காது!
நீக்குதங்கைக்கு வாங்கி வந்தது அவ்வளவு பெரிய விஷயமா என்ன!
இன்று, நாளை எபி வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் இன்று முதல் தான் எபப்டிக் தூங்குகிறோம், மற்றவர்கள் எப்படித் தூங்குகிறார்கள் என்று கவனிப்பார்கள் என்று நம்புகிறேன்!
நீக்குஇப்போ உள்ள குழந்தைகள் நான் பழைய மாதிரி எழுதுவதைப்பார்த்துட்டுத் தப்பா எழுதி இருக்கீங்க என்பார்கள். நான் இப்படித்தான் எழுதினோம் என்றால் ஆச்சரியமா இருக்கும் அவங்களுக்கு. நகைச்சுவைத்துணுக்குகள் எல்லாமே அருமை.ஐடியா அய்யாசாமியின் ஐடியா செல்லுபடியாகக் கூடியது. அதான் ஓட்டல்களில் தரைக்குக் கீழே கார் பார்க்கிங்க் வைச்சிருக்கையில் இப்படித் தளம் போட்டுத்தானே ஆக வேண்டி இருக்கு. உயரே பார்க்கிங் வைச்சாலும் இப்படித் தான் போட்டாகணும். இந்தக் காலங்களுக்கு ஏற்ற கார் ஷெட்.
பதிலளிநீக்குநானும் கொஞ்ச நாட்கள் பழைய மாதிரி எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் புதிய முறையில் எழுதுவது அவசியமானது - அரசுத்துறையில் பணிபுரிவதால்!
நீக்குபுது மாதிரி எழுத்துக்களை எழுதுவதில் தவறில்லை. அப்படி மாற்றியது நிறைய விஷயத்தில், கணிணியில் உபயோகமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் (யாரப்பா அது புர்ச்சி தலைவர்னு எழுதணும்னு சொல்றது?) அப்படி சட்டம் போட்டது சரிதான். தட்டச்சுலயும், அந்த துணையெழுத்து அன்னம் போல தொக்கி நின்னுக்கிட்டு இருக்கும்.
நீக்குதமிழ் எழுத்துக்களை சிறிது மாற்றியது தவறே கிடையாது. சென்ற நூற்றாண்டில் அதற்கு முன்பு எழுதப்பட்டிருந்த தமிழுக்கும் தற்போதைய தமிழுக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. தமிழ் மொழி எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்றவை.
ஆமாம்... கல்வெட்டுகளில் இருக்கும் தமிழை நம்மால் படிக்க முடிவதில்லை.
நீக்குகல்வெட்டில் கிரந்தம் கலந்தே இருக்கும். நான் முயற்சி செய்தால் வாசித்துவிடுவேன், கிரந்தம் தெரியும் என்பதால். ஆனால் அப்படிச் செய்வதில்லை! :( சோம்பல், நிற்க முடியாது, வா, வானு அவசரப்படுத்துவாங்க! எல்லாம் தான்.
நீக்குஓ... கிரந்தம் தெரியுமா? 1800, 1900 ஆரம்பங்களில் இருந்த தமிழை இப்பது படித்தாலே கொஞ்சம் கடினமாக இருக்கும். கவனமாகப் படிக்கவேண்டும்!
நீக்குமற்றபடி வந்து போனதை நினைத்துக் கொண்டிருக்காமல் மனதை வேறு பக்கம் திசை திருப்புங்கள். நல்ல உணவாகச் சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். தினம் முருங்கைக்கீரை சூப் சாப்பிடுவது நல்லது. முருங்கைக்கீரை கிடைக்காத பொருளும் அல்ல.
பதிலளிநீக்குதுர்கா அம்மாக்கு இந்த ஒரு தோட்டம் மட்டுமா. இருந்தாலும்
நீக்குசெடி வளர்த்துப் பயன் அடைவது சுகம் தான்.
நகைச்சுவை துணுக்குகள் அத்தனையும் நன்றாக இருக்கிறது . முக்கியமாக நெளிந்து வகுப்பை விட்டுப்
போவது. ஹஹஹாஹ்ஹஹஹா.
அது சரி கார் சீக்கிரம் இறங்கி விடும். மறுபடி
மக்கர் பண்ணாம ஏறுமா.:)
அனுபவத்துல சொல்றேன்.
என்ன, சுசீலாம்மா சுசீலாம்மாங்கற மாதிரி இங்கே, துர்கா அம்மான்னு சொல்றீங்களே..
நீக்கும்... மரியாதை காமிக்கிறதுங்கிறது எதுக்கும் கொஞ்சம் சேஃப்-தான்..
//மற்றபடி வந்து போனதை நினைத்துக் கொண்டிருக்காமல்//
நீக்குஇல்லை கீதா அக்கா... அதெல்லாம் நினைக்கவில்லை. இருகோடுகள் தத்துவம் போல நண்பர்கள் வட்டத்தில் பெரிய கோடுகள் எல்லாம் வரத்தொடங்கி விட்டதால் என் கோடு சிறிதாகி விட்டது.
முருங்கை சூப் எல்லாம் நம் வீட்டில் கிடைக்காது. பாஸ் மனம் வைக்க மாட்டார்.
ரசித்ததற்கு நன்றி வல்லிம்மா... ஏகாந்தன் ஸார்... மரியாதை இல்லாமல் பேசி மதுரையில் 80 களில் அடி வாங்கி இருக்கிறேன்!
நீக்கு//முருங்கை சூப் எல்லாம் நம் வீட்டில் கிடைக்காது. பாஸ் மனம் வைக்க மாட்டார்.// நீங்க எத்தனையோ சமைக்கையில் இதையும் சமைச்சுக்கலாம்! உங்களுக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ என்னும் யோசனை இருக்குப் போல!
நீக்குஅப்படி இல்லை... நல்லதுன்னா செய்துடுவேன். முருங்கை இலை பிடிக்கவும் பிடிக்கும். பார்ப்போம். நான்தான் செய்துக்கணும்!
நீக்கு//..மரியாதை இல்லாமல் பேசி ..//
நீக்குநீங்கள் அங்கே மரியாதை இல்லாமல் யாரையும் பேசவில்லை. பெயரைக் குறிப்பிட்டதற்கு இந்த வெகுமதி! சிவனையும், ராமனையுமே , ’அட..சிவனே!’, ’அட.. ராமா !’ என்று கேஷுவலாக அங்கலாய்த்துக் குறிக்கும் இந்த மாபெரும் நாட்டில், சில்லுவண்டுகளின் நடவடிக்கைகள்..
ஏகாந்தன் ! 15 அக்டோபர், 2020 ’அன்று’ முற்பகல் 8:06
நீக்குஎன்ன, சுசீலாம்மா சுசீலாம்மாங்கற மாதிரி இங்கே, துர்கா அம்மான்னு சொல்றீங்களே..
ம்... மரியாதை காமிக்கிறதுங்கிறது எதுக்கும் கொஞ்சம் சேஃப்-தான்..///////////// hahaahhahahahahahhahahah.
கையெழுத்து எப்படி இருக்குமோ.
பதிலளிநீக்குஎழுதி அனுப்பலாம். இப்ப ராத்திரி ஆகிவிட்டது. பார்க்கலாம்.
அப்புறமா அனுப்புங்க.
நீக்குமெதுவா அனுப்புங்கம்மா... இதுவரை ஒன்று வந்திருக்கிறது! (யார்னு சொல்ல மாட்டோம்ல!)
நீக்குமாலா மாதவன், கதை அல்லவோ எழுதி அனுப்பி இருக்காங்க? கையெழுத்திலா?
நீக்குஇந்தப் பதிவில் ஒரு பாரா எழுதி அனுப்புங்கன்னு கேட்டிருக்கேனே, கவனிக்கலையா? கதை மின்நிலா தீபாவளி மலருக்கு... இது ஏதாவது ஒரு வியாழனுக்கு.
நீக்குஓஓ ஓஹோ!
நீக்குஉங்கள் கையெழுத்து இன்னும் வரவில்லை கீதா அக்கா!
நீக்குபொக்கிஷப் பதிவில்
பதிலளிநீக்குநகைச்சுவைத் துணுக்குகளைப் படித்திருக்கிறேன்...
தங்கைக்கு இட்லி வாங்கி வந்த வரலாறு அருமை...
நன்றி.
நீக்குநன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்கு//..துாதுவளை செடியைப் பார்த்தாலே, எங்க மாமா, கருணாநிதி ஞாபகம் தான் வரும்.//
பதிலளிநீக்குநல்ல காலம், அந்தச் செடியை வச்சு வளர்க்குறீங்க. இல்லாட்டி.. இல்லாட்டி..
பாவம் கருணாநிதி மாமா !
:))
நீக்குகருணாநிதி என்று பெயரை உச்சரிக்கும் பழக்கம் அவருக்கு இருந்ததில்லை. நானே கலைஞர் என்று தான் எழுதுவது. வாய்மொழியாக பேட்டி எடுத்து எழுதுபவர்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.
நீக்குபொதுவா 'அடைமொழி' கொடுத்து எழுதறவங்க கட்சிக்காரங்கதான். அப்படி இல்லைனா, புரட்சித் தலைவர், இலட்சிய நடிகர், நடிகர் திலகம் என்றுதான் மத்தவங்களையும் கூப்பிடணும். அப்படி இல்லாம கருணாநிதியை மட்டும் சொல்வது...................ஹாஹா
நீக்குஇது அடைமொழி அல்ல. ஒரு மரியாதையில் விளைவது. கண்ணதாசன் என்று எழுதாமல் கவியரசர் என்றும்
நீக்குபாரதியாரை மஹாகவி என்றும் எழுதுவது போல.
இதெல்லாம் அவரவர் உணர்வு சம்பந்தப் பட்டவை. கவியரசர் என்று எழுதும் பொழுதே இன்னொரு கவிப்பேரரசர் வழக்கத்தில் இருப்பது மனசுக்கு உறுத்தலாய் இருக்கும். இது தான் அவரவர் சம்பந்தப்பட்ட உணர்வுகள். இதெற்ககெல்லாம் பொதுவிதி ஏதும் இல்லை.
//இல்லாட்டி.. இல்லாட்டி.. பாவம் கருணாநிதி மாமா !//
நீக்குஹா... ஹா... ஹா... ஏகாந்தன் ஸார்! ஆனால் துர்காம்மா தான் அவரை நன்கு கவனித்துக் கொண்டார் என்று நினைக்கிறேன்.
//கருணாநிதி என்று பெயரை உச்சரிக்கும் பழக்கம் அவருக்கு இருந்ததில்லை.//
நீக்குஆம். உண்மைதான். மாமனாரிடம் மரியாதை மிகுந்தவர். அவர் அப்படிச் சொல்லி இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது ஜீவி ஸார்.
// அப்படி இல்லாம கருணாநிதியை மட்டும் சொல்வது...................ஹாஹா//
நீக்குநெல்லை...! ஒருமுறை மதுரையில் பஸ்ஸ்டாண்டில் அலுவலகம் செல்ல நிற்கும்போது இப்படிப் பெயர் சொல்லி பிடரியில் அடி வாங்கினேன். திரும்பிப் பார்த்தால் ஒரு தடியர்! "கலைஞர்னு சொல்லு" என்றார். "கருணாநிதிதானே அவர் பெயர்?" என்றேன் இளமை தைரியத்தில். மறுபடி ஒரு அடி. நான் மௌனமாக, அவர் கை மறுபடி ஓங்கியது. "கலைஞர் சொல்லு" சொல்லிட்டேன்!
கருணாநிதி தன்னை யாரும் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது, தான் என்றால் 'கலைஞர்' என்பதை முன்னிறுத்தணும் என்பதில் ரொம்பவே ஆசையாக இருந்தார். அவர் இதனைச் சொல்லித்தான் கடைசியில் சோ அவர்களும் கருணாநிதியை கலைஞர் என்று எழுத ஆரம்பித்தார். வடநாட்டு அரசியல்வாதிகளையும் அப்படிச் சொல்லுமாறு சொல்லி அவங்களைக் கஷ்டப்படுத்தினார். வாஜ்பேயி கஷ்டப்பட்டதை நாம்தான் பார்த்தோமே.
நீக்குநீங்க எழுதினதைப் படித்ததும், 'மோதி'ன்னு எழுதுங்கள், 'மோடி' என்று மோடிமஸ்தான் மாதிரி எழுதக்கூடாது என்று சிலர் - நீங்க திருவரங்கத்துக்காரங்க என்று எண்ணிக்கொண்டால் நான் பொறுப்பில்லை - என்னை மிரட்டி எழுதவைக்கிறார்கள். என்ன செய்வது? வல்லான் வகுத்ததே வாய்க்கால்.
நெல்லை... சட்டசபையில் கூட ஒருமுறை இந்தப் பிரச்னை வந்தது என்று ஞாபகம். மாற்றி மாற்றி அடித்துக் கொண்டார்கள்.
நீக்கு//.. கடந்த 1986ல், அதை வாங்கினோம். //
பதிலளிநீக்கு2086-க்குள்ள என்னென்னவெல்லாம் வாங்கப் போறீகளோ.. அதயெல்லாம் பாக்காம, தெரிஞ்சிக்கிறாம போயிருவமோன்னு நெனச்சாத்தான் ஒரே வருத்தம்மா இருக்கு...
:))
நீக்குஹா... ஹா... ஹா... இந்தக் கொரோனா உலகில் எதுவுமே நிரந்தரமில்லை என்று எப்போது புரிந்து கொள்வார்களோ!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். நகைச்சுவை துணுக்குகள் பிரமாதம்! வாய் விட்டு சிரித்தேன். அதுவும் அப்பாவின் பெட்டி லாக்கை சோதித்த, நடன வகுப்பிலிருந்து பாம்பு டான்ஸ் ஆடியபடி வெளியேறிய ரெட்டை வால் ரெங்குடு ... சான்ஸே இல்லை..ஹாஹா!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவணக்கம் பானு அக்கா.. வாங்க... ந. துணுக்குகளை ரசித்ததற்கு நன்றி.
நீக்குநானும் ஸ்ரீராமைப் போல இடது கையை தலைக்கு அடியில் வைத்துக்கொண்டுதான் தூங்கி கொண்டிருந்தேன் . தூங்கி எழுந்ததும் கை வலிக்கத் தொடங்கியதும் அந்த பழக்கத்தை மாற்றிக் கொண்டேன். இப்போதும் கை அனிச்சையாக தலைக்கு முட்டு கொடுக்கச் செல்லும்.
பதிலளிநீக்குஆமாம். எனக்கு இடது தோள்பட்டை அடிக்கடி வலிக்கிறது- இடது கையை உபயோகித்தாலேயே..
நீக்கு//ஸ்ரீபெரும்புதுார் செல்லும் வழியில் எங்களுக்கு ஒரு சிறிய தோட்டம் உள்ளது. // உங்களுக்கு சிறிய என்பது எவ்வளவு ஏக்கர்?
பதிலளிநீக்கு:))
நீக்கு"நாங்க அளந்துல்லாம் பார்க்கறதில்லீங்க... நேரமில்லை!"
நீக்குஅப்பா கொடுத்த காசில் நீங்களும் சாப்பிட்டு விட்டு, தங்கைக்கும் பார்சல் வாங்கி வந்திருக்கிறீர்கள். மிச்ச பைசாவையும் அப்பாவிடம் கொடுத்து விட்டீர்கள். குட்! குட்! அன்பான, பாசமான அண்ணாதான்! இதில் சிவாஜியின் influence உண்டா? ஏன் கேட்கிறேன் என்றால் எம்.ஜி.ஆர்.படத்தை பார்த்து விட்டு அம்மாவிடம் பாசமாக இருந்தார்கள், ரஜினி படத்தை பார்த்து விட்டு உருத்திராட்சம் அணிந்து கொண்டார்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே..?
பதிலளிநீக்குஸ்ரீராம் சிறிய வயதில், சிவாஜி நடித்த தங்கை படத்திலிருந்து டி எம் எஸ் பாடிய 'தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே ' பாட்டை மழலை மொழியில் பாடி, நான் அடிக்கடி கேட்டதுண்டு.
நீக்குசிவாஜி படம் பார்த்தா? எதோ அப்போது தோன்றியது வாங்கி விட்டேன். அதுவே கீதா அக்கா கேட்டிருப்பபது போல ஏன் அக்காவுக்கும், அண்ணனுக்கும் வாங்கவில்லை என்று தெரியவில்லை! நான் சினிமா பார்த்து அந்த ஸ்டைல்களை கைக்கொள்வதில்லை!
நீக்கு@கேஜிஜி... எனக்கு நினைவில்லை!
நீக்கு😍😀😀😀
நீக்குஎழுத்துக்களை சீர்திருத்த வேண்டும் என்ற அவசியம் தமிழுக்கு இருந்ததில்லை. தங்கள் செளகரியத்திற்கேற்ப மாற்றிக் கொண்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
பதிலளிநீக்குலாம்!
நீக்குஜீவி சார்... நீங்க தமிழ் எழுத்துக்கள் வளர்ந்த விதம் பற்றிப் படித்ததில்லை என நினைக்கிறேன். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த எழுத்துக்களை நம்மால் படித்துப் புரிந்துகொள்வது கடினம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் எழுத்துக்களே வித்தியாசமானது. 'அ' எழுத்து, 'ளை' அதாவது ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு - இவைகளே சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இப்போது உள்ளதுபோல அமைந்தது. இவையெல்லாம் எழுத்துச் சீர்திருத்தங்கள் செய்ததனால்தான் சாத்தியமாயிற்று. ஏன், எண் சீர்திருத்தம் கூட 70 வருடங்களுக்கு முந்தைய சமாச்சாரம்தான். எழுத்துச் சீர்திருத்தம் நிகழாமலேயே போயிருந்தால் நாம் தமிழி எழுத்திலேயே இன்றும் இருந்திருப்போம்.
நீக்குஎங்க பூர்வீக வீட்டில் 5 அடிக்கு 3 அடி கலம், 2 அடி உயரப் பெட்டியில் முழுவதும் நிறைய ஓலைச்சுவடிகள் இருந்தன. 95ல் எங்கப்பா அந்த வீட்டை விற்றபோது அவைகளை முழுவதுமாக எறிந்துவிட்டார். நான் சொல்லியிருந்தால் எனக்காக எடுத்துவைத்திருந்திருப்பார். எனக்கு அவற்றின் இழப்பில் ரொம்பவே வருத்தம். அந்த வீட்டில் 40களிலிருந்து வந்த போஸ்ட்கார்ட், இன்லண்ட் லெட்டர், பத்திரிகைகள் போன்றவை இரும்புக் கம்பியில் கோர்த்து (1 1/2 அடி உயரம் இருக்கும்) இரண்டு பார்த்திருக்கிறேன் (78ல்).
மொழிக்கு சீர்திருத்தம் தேவையில்லை. ஆனால் எழுத்துக்கு கண்டிப்பாகத் தேவை.
அடடா... பொக்கிஷமாச்சே... ஓலைச்சுவடிகளா? விட்டு விட்டீர்களே... தூக்கி எறிந்ததற்கு பதிலாக நூலகம் எங்காவது கொடுத்திருக்கலாமே...
நீக்குஎங்க அப்பாவும் ஓலைச்சுவடிகளைத் தூக்கிக்கொடுத்தார். எல்லாம், வைத்தியம் சம்பந்தப்பட்டவை! நான் அப்போத் தமிழ்நாட்டில் இல்லை. ராஜஸ்தானில் இருந்தேன். அதே போல் என் தாத்தாவின் பொக்கிஷமான புத்தகங்கள். ஆனந்த ரங்கம் பிள்ளை டயரி, விநோத ரஸ மஞ்சரி, பிரசண்ட விகடன், யங் இந்தியா எனப் பல புத்தகங்கள்! :( வைமுகோ நாவல்கள், திகம்பர சாமியார் புத்தகங்கள், ஆரணி குப்புசாமி முதலியாரின் நாவல்கள்னு எத்தனை, எத்தனையோ இரண்டு பெரிய பீரோ நிறைய
நீக்குஅடடா... பொக்கிஷங்கள். ஆனால் ஒரு வித்தியாசம். தூக்கிக் கொடுப்பதற்கும், தூக்கி எறிவதற்கும்!
நீக்குநெல்லை.. மாற்றங்களிலிருந்து எதுவும் தப்புவதில்லை. அது அதன் போக்கில் இயல்பாகவே நிகழ்வது. மாற்றம் வேறே சீர்திருத்தம் வேறே. சீர்திருத்தம் என்பது தவறானவைகளைத் திருத்தி முறைபடுத்துவது. அப்படியான நிலை தமிழ் எழுத்துக்களுக்கு நேரவில்லை என்பதையே சொல்லியிருக்கிறேன். தமிழ் எழுத்துக்கள் தவறான முறையில் எழுதப்பட்டு பின் திருத்தப்பட்டதில்லை. அந்தந்த காலகட்ட தேவைகளின் அடிப்படையில் மாற்றதிற்கு உட்படுத்தப்பவை என்றே கொள்ள வேண்டும்.
நீக்கு//மாற்றம் வேறே சீர்திருத்தம் வேறே.// - சார்... இப்போதுள்ளதுபோல அந்தக் காலகட்டத்துல இணையம், தொலைக்காட்சி, மக்களை இணைக்கும் சாதனங்கள் இல்லை. இருந்தாலும் தமிழ்ப் புலவர்கள் ஒன்று கூடி ஓரிடத்தில் விவாதித்து இத்தகைய எழுத்து மாற்றங்கள் நிகழ்ந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் சிறிய அளவில் மாற்றங்களைச் சந்தித்திருக்காது.
நீக்குதற்காலத்தில், தலைக்கனம் கூடி, செருக்குடைய சிறியோர், அதற்கு 'சீர்திருத்தம்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். எழுத்தின் மாற்றம் என்ற அளவில் அதனை எடுத்துக்கொள்ளவேண்டும். நான் 7வது படிக்கும்போது க்கு இரண்டையும் ஒரே எழுத்தாகத்தான் எழுதுவேன். அப்புறம் தமிழாசிரியர், இப்போது அப்படி எழுதுவதில்லை என்று சொல்லி, இரண்டு எழுத்துக்களாக எழுதச் சொன்னார். உங்களால் இ என்ற எழுத்து, ஐ, ளு, மு, போன்றவை அடைந்த மாற்றங்களைப் புரிந்துகொள்வது கடினம். ர க்கும் ற வுக்குமே மிகக் கடுமையான வேறுபாடுகள். இதில் தேவைகள் வரவில்லை, மாற்றங்கள் வந்திருக்கின்றன. முன்பு கிரந்தத்தில், 4 எழுத்துகள் ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதப்பட்டன. பிறகு அது ஓலையில் அதிக இடத்தை எடுத்துக்கொள்கிறது என்று கூட்டெழுத்துகள் மட்டும் உபயோகப்படுத்தப்பட்டன.
அப்பாடி.. ஒரு வழியாக மாற்ர்த்திற்கும் சீர்திருத்தத்திருக்கும் இருக்கும் விததியாசத்தை உங்களுக்கு பரிய வைத்து விட்டேன்.
நீக்குஈய எழுத்துருக்க்ச்ள் கொண்டு அச்சிடும் கால கட்டத்தில் இந்த மாற்றம் செளகரியமாக இருந்ததால் மிகவும் வரவேற்கப் பட்டது. இந்த எழுத்தமைப்பு மாற்றத்தில் பெரியார் முன்னிலைப் படுத்தப்படதால் சீர்திருத்தம் என்று பெயத் கொண்டது. அதற்காக நீங்களும் எழுத்துச் சீர்திருத்த்ம் என்று அழைக்க வேண்டாம். சரியா?
தட்டச்சு பிழைகளுக்கு பொறுத்துக் கொள்க.
நீக்குபைந்தமிழ், செந்தமிழ், தங்கத்தமிழ் என்றெல்லாம் தங்களின் மொழியைப் புகழ்ந்துகொண்டு திளைத்திருந்த தமிழர்களின் நாட்டில், அதே தமிழை(!) ’காட்டுமிராண்டி மொழி’ என்று கேஷுவலாக வர்ணித்து அங்கேயே வளர்ந்தார் ஒருவர். இந்தப் பண்டிதரே தன் ‘குடியரசு’ இதழின் தலையங்கத்தில் (20-1-1935) தமிழ் மொழியில் செய்யவேண்டிய ‘சீர்திருத்தங்களை’ப்பற்றி எழுதுகிறார். 43 வருடங்களுக்குப் பின் 1978-ல். திடீரென அசரீரி வந்து சொன்னதைப்போல், அதற்கான அரசாணை வெளியிட்டு தமிழைச் ‘சீர்திருத்தி’விட்டதாகப் பெருமைகொள்கிறார் ஒரு முதல்வர்.
நீக்குதமிழைத் தவிர வேறெந்த மொழிக்கு இத்தகைய பாக்யம் கிட்டும், இப்பாரதப் பெருநாட்டில்!
இந்த மாதிரி எழுத்துக்களை மாற்றுவதால் ஒரு பின் விளைவு உண்டு. இப்போவே பழைய எழுத்துக்களை இப்போதுள்ள ஜெனெரேஷனால் படிக்க முடியாது. ஒரு நூறு வருடங்களுக்குப் பிறகு இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளவும் தெரியாது. அப்புறம், 20ம் நூற்றாண்டில் னை அன்னம் போல இருந்தது, பிறகு இரு எழுத்துக்களாக மாறிவிட்டன என்று அப்போதுள்ளவர்கள் ஆராய்ச்சி செய்து புரிந்துகொள்வார்கள். இப்படித்தான் நாம் தமிழ் எண்களை மறந்துவிட்டோம்.
நீக்குமொழியில் அரசியல் கலப்பது ரொம்பவே ஆபத்து.
எம்.ஜி.ஆர். தனக்கு தி.கவிடமிருந்து அல்லது தீவிர தமிழ் ஐயாக்களிடம் நல்ல பேர் எடுத்துக்கொள்ள அந்த எழுத்து மாற்றத்தை ஏற்றுக்கொண்டார். அது நல்ல முடிவு என்பது என் எண்ணம்.
இப்போ பொதுவா கிரந்தத்தில் கெ என்ற எழுத்து 'கே' என்பதைக் குறிக்கும். அதைக் குறிலாக்க, அதன் மேல் ஒரு புள்ளி வைப்பார்கள். (ஓலையில் இது செய்யமாட்டார்கள். படிப்பவர்கள் அவர்களது புத்தியை உபயோகித்துப் புரிந்துகொள்ளணும். இல்லைனா ஓலை பழுதுபட்டுவிடும்). பழைய தமிழ் எழுத்துகளிலும் ஓ என்பதற்கு ஒ என்பதுதான் உபயோகப்பட்டது. 'ஒ' என்பதைக் குறிக்க 'ஒ' என்பதன் மீது ஒரு புள்ளி வைப்பார்கள். கிரந்தத்தில் கை என்பதை இரண்டு ஒற்றைக் கொம்பும் க வும் போடுவார்கள். இதெல்லாம் எழுத்தின் மாற்றங்கள்.
தூங்குவதிலும் சந்தேகமா?
பதிலளிநீக்குஎனக்கு ஏதோ காரணத்தால் இடது கை ரொம்பவே வலிக்கிறது. அனேகமாக தூங்கும்போது உடலுக்குக் கீழ் கை போய்விடுகிறது என நினைக்கிறேன்.
சந்தேகம் இல்லை நெல்லை. அவதானிப்பு! எனக்கும் இடது தோள்பட்டை வலிக்கிறது.
நீக்குஎன்ன இது! எனக்குள்ள ப்ரச்னைகள் இங்கு உலவுகின்றன..
நீக்குDaily problem with shoulder.
நீக்குஓ... அப்போ இது எல்லோருக்கும் இருக்கா? அப்போ ரொம்பக் கவலைப்பட வேண்டாம்!
நீக்குகுப்புறப்படுத்துத் தூங்குவது சரியான நிலை கிடையாது. வயிற்றை அழுத்தும் (நம்மில் பலருக்கு சாப்பிட்டு அரை மணி நேரத்துக்குள்ள படுக்கும் வழக்கம் உண்டு). சரியா சீரணம் ஆகாது. மூச்சும் சரியா விட முடியாது.
பதிலளிநீக்குநான் படுக்கும்போது பக்கத்தில் யார் படுத்திருந்தாலும், அதற்கு மறுபுறம் திரும்பித்தான் தூங்குவேன் (இல்லைனா, கொஞ்சம் உயரமா இல்லை கொஞ்சம் கீழே). அடுத்தவங்க மூச்சுக்காத்து படக்கூடாதுன்னு.
குப்புறப்படுத்துத் தூங்கினால் இதயத்துக்கு நல்லதில்லை என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் கூட எதிர்ப்புறம் திரும்பிப் படுத்து தூங்குவதே வழக்கம்.
நீக்கு//எனக்கும் செடி, கொடிகள் மீது எப்போதும் ஆர்வம் அதிகம். எங்கு சென்றாலும், அங்கிருந்து ஏதாவது ஒரு செடியை வாங்கி வந்து, வீட்டில் வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.// - எனக்கு நல்ல வீடுகள் இடங்கள் மீது எப்போதும் ஆர்வம் அதிகம். எங்கு சென்றாலும் அப்படிப்பட்ட இடத்தையோ வீட்டையோ பார்த்தால், அங்கு வசிப்பவரை விரட்டிவிட்டு அந்த வீட்டை எனதாக்கிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் - என்று அவங்க வீட்டுல உள்ள ஒருவர் இப்படி பேட்டி கொடுத்தால் சொல்லுவாரோ?
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... தனதாக்கிக்கொள்ள ஏதோ ஒரு சாக்கு!
நீக்குநானும் தூக்கத்தில் தலையணையை மடக்கி உயரமாக்கி தூங்கிவிடுகிறேன்..விழித்தம் மீண்டும் சரியாக்கி தூங்கிப்பின் விழித்தால் தலைணை மடங்கி உயரமாகி இருக்கும்.ஏனோ இது அனிச்சைச் செயலாகவே தொடர்கிறது..வெகுகாலமாய்..
பதிலளிநீக்குதலையணையை மடக்கினால் அதன் இயல்பு நிலை மாறிவிடும் என்று தோன்றும் எனக்கு. எனவே அப்படிக் செய்வதைத் தவிர்த்து விடுவேன். ஆனாலும் என் பாஸ் உட்பட சிலர் அப்படிச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். நன்றி ரமணி ஸார்.
நீக்குஸ்டாடிங் டிரபிள் ஜோக் அருமை...
பதிலளிநீக்குநன்றி ரமணி ஸார்.
நீக்குபடுத்துத் தூங்கும் முறை - குப்புறப் படுத்துத் தூங்குவது நல்லது என்று இப்போது சொல்கிறார்கள். சாதாரணமாக இப்படிப் படுத்தால் திட்டுவதுண்டு! :) எந்த மாதிரி படுத்தால் தூங்க முடிகிறதோ அப்படி படுக்க வேண்டியது தான்.
பதிலளிநீக்குகையெழுத்து - புதிய புதிய யோசனைகள் வந்து கொண்டே இருக்கிறது உங்களுக்கு! எழுதப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பொக்கிஷம் பகுதியில் ஜோக்ஸ் அனைத்தும் சிரிக்க வைத்தன.
ஆமாம்... குப்புறப்படுத்துத் தூங்கக்கூடாது என்றுதான் முன்னர் சொல்வார்கள்.
நீக்கு//எழுதப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.//
புரிந்தது!!!
நன்றி வெங்கட்.
ஒருக்களித்துப் படுப்பதே நல்லது.. ஆழ்ந்த தூக்கத்தில் எப்படியெல்லாம் புரள்வோமோ .. அதற்கு உத்தரவாதம் ஒன்றுமில்லை...
நீக்குஆண்கள் குப்புறப் படுப்பதும்
பெண்கள் மல்லாக்கப் படுப்பதும்
குடும்பத்துக்கு ஆகாது என்பார்கள் -
அந்த காலத்துப் பெரியோர்கள்...
அவர்கள் கூற்றில் உண்மையும், மேன்மையும் இருக்கும்.
நீக்குஆமாம் துரை செல்வராஜூ ஸார்... நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீக்குமருத்துவர் சி.கே மாணிக்கவாசகம் அவர்கள் சரியான முறை உறங்ககுதல் பற்றி சொல்லும் போது
பதிலளிநீக்குபடுக்கும் போது ஒரு பக்கமாக சாய்ந்து கால்களை மடக்கி படுப்பதுதான் நலம் என்கிறார்.
மல்லாந்து படுத்தால் கால்மூட்டுக்குக்கீழே தலையணை வைத்து படுக்க வேண்டும் என்கிறார்.
எனக்கு இடது கை மடித்து காது பக்கம் இருக்கும். இடது பக்கம் திரும்பி படுத்தே பழக்கம் ஆகி விட்டது.
தூக்கம் சரியாக இருப்பது இல்லை இப்போது எனக்கு. தினம் 4.30க்கு எழுந்து கொள்வேன். ஆனால் இப்போது 3, மணி 3.30க்கு எழுப்பி விடுகிறது. மதியமும் தூக்கம் இல்லை. மாலை 7 மணிக்கே அசத்தும்.
வாங்க கோமதி அக்கா... சென்ற வருடம் வரை எனக்கு காலுக்குத் தலையணை வைத்துக் கொள்வதே பிடிக்காது. அதே போல தரையில்தான் படுப்பேன். கட்டிலில் படுக்கப் பிடிக்காது! இப்போதும் தரையில்தான் படுக்கிறேன் என்றாலும் காலுக்குத் தலையணை வைத்துக் கொள்கிறேன். நம்மை அறியாமலேயே நாம் ஒருக்களித்துப் படுத்துதான் தூங்குகிறோம்.
நீக்குஇரவு ஒன்பது மணி சுமாருக்குப் படுத்து விடுவேன். பத்து மணிக்குள் தூங்கி விடுவேன். காலை மூன்றரைக்கு விழிப்பு வந்து விடும். ஆயினும் நான்கே முக்காலுக்கு எழுவேன்!
//ஒரு ரூபாய்க்கு என்ன செலவு செய்யலாம் என்று ஓரிரு வாரங்கள் முன்பு பேச்சு வந்தபோது என் பிறந்த நாளுக்கு என் அப்பா ஒரு ரூபாய் கொடுத்து கேன்டீனில் சாப்பிட்டு வா என்று அனுப்பியது நினைவுக்கு வந்து சொல்லி இருந்தேன்.//
பதிலளிநீக்குஅப்பா கொடுத்த 1 ரூபாய்க்கு மிட்டாய், பிஸ்கட் என்று வாங்கி சாப்பிட ஆசை இல்லையா? சிறு வயதில் பயமில்லாமல் தனியாக ஓட்டலுக்கு போய் சாப்பிட்டு பார்ச்சல் வீட்டுக்கு தங்கைக்கும் வாங்கி வந்தது ஆச்சிரியம் தான்.
நாங்கள் மருத்துவக்கல்லூரி குடியிருப்பில் வாசித்தோம். அங்கிருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கேன்டீன் அது என்பதால் கூட்டம் இருக்காது. மேலும் என் தந்தை மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் பணிபுரிந்ததால் கேன்டீன்காரரை நன்கு தெரியும். எனவே பயமில்லை!
நீக்குதிகில் கவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதுர்கா சொல்லிய செய்திகள் படித்தேன்.
நானும் மாயவரத்தில் வீட்டில் , வல்லாரை, தூதுவளை , ஓமவல்லி, துளசி, பொன்னாகண்ணி கீரை, மஞ்ச்சள் கரிசலாகண்ணி கீரைகள் வைத்து இருந்தேன்.
இங்கு ஓமவல்லி, துளசி, பிரண்டை வைத்து இருக்கிறேன்.
நானும் வல்லாரை துவையல் அரைப்பேன். மாயவரத்தில் வாரா வாரம் கும்பகோணத்திலிருந்து ஒருவர் பலவிதமான கீரைகள் கொண்டு வந்து தருவார் மதியம் வருவார். அவரிடம் தூதுவளை வல்லாரை, வெந்தயக்கீரை வாங்குவேன்.
அப்புறம் இரு வயதான அம்மா தேங்காய், எலுமிச்சை, தூதுவளை வல்லாரை கீரை, மணத்தக்காளிக்கீரை, சுண்டைக்காய் கொண்டு வந்து கொடுப்பார், அவரிடமும் வாங்குவேன். வல்லாரை, கூட்டு அவர்கள் சொல்லி தந்தார்கள்.
நினைவாற்றலுக்கு வல்லாரையும், சளி, தும்மலுக்கு தூதுவளையும், வயிற்றுபுண் வாய் புண்ணுக்கும் மணத்தாளி கீரை பச்சை சுண்டைக்காய் பலவித நன்மைகள் தரும்.
இங்கு மார்கெட் போனால் கிடைக்கும் இப்போது கொரோனா அச்சத்தால் மார்கெட் போவது இல்லை.
நாங்கள் மட்டும்தான் ஆரோக்ய சமையல் எதுவுமே செய்வதில்லை என்று நினைக்கிறேன். எல்லோரும் எல்லாம் முறையாய் செய்கிறீர்கள்.
நீக்குபொக்கிஷ சிரிப்புகள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஎது எப்படி இருந்தால் என்ன எழுத தலைப்பும் கருவும் கிடைத்து விட்டது நான் தூங்கும்முறையை சொல்கிறேன் இடடு பக்கம் சரிந்து படுத்தால்தான் தூக்கம்வருமானால் மருத்துவர்கள் எழுந்திருக்கும்போது வலது புறந்தான் எழ வேண்டுமென்கிறார்கள்கை எழுதே போட்டால் சரியாக வருவதில்லை இதில் வேறுஎழுத்து சீர்திருத்தம்பற்றியா
பதிலளிநீக்கு// எது எப்படி இருந்தால் என்ன எழுத தலைப்பும் கருவும் கிடைத்து விட்டது //
நீக்குஹா... ஹா... ஹா... தேடிப் பிடிச்சுடுவோம்ல... எதையாவது வைத்து அரட்டை அடித்து விடுவோம்ல...! நன்றி ஜி எம் பி ஸார்.
//..இப்படிப் பெயர் சொல்லி பிடரியில் அடி வாங்கினேன். திரும்பிப் பார்த்தால் ஒரு தடியர்!//
பதிலளிநீக்குதடியர் கூடடம்! பெயர் சொன்னால் பிடரியில் அடிப்பது, அடுத்தவன் சொத்தை அபகரித்து ஆட்டம்போடுவது, கொள்ளையடிப்பதே கொள்கையென வாழ்வது - அரைநூற்றாண்டுக்கும் மேலாக இவர்கள் ‘காட்டி’வரும், ‘வளர்த்து’ வரும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள் இவைதாம்..
தடியன் என்று சொன்னால் மறுபடி அடி விழுமோ என்கிற அச்சம் பின்னங்கழுத்தில் குறுகுறுக்கிறது! அது ஒரு அனுபவம்! அதிகாலை ஐந்தரை மணிக்கு அடி வாங்கிய அனுபவம்!
நீக்கு*கூட்டம்
பதிலளிநீக்கு// ’வேண்டாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது’
பதிலளிநீக்குஎன்றது
அருகிலிருந்து ஒரு குரல் //
உடனே அடுத்த லைட்டையும் ‘ஆன்’ செய்து அப்படியும் இப்படியுமா பார்த்திருப்பீர்களே..
இல்லை. சமர்த்தாக லைட் போடாமல் மயங்கி விழுந்து விட்டேன்.
நீக்குகதம்பம் அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குபல்சுவை. அருமை. நகைச்சுவைத் துணுக்குகளை அதிகம் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஸார்.
நீக்குநன்றாக தூக்கம் வந்தால் சரி தான்...
பதிலளிநீக்குமந்தார இலை - சுவை அருமை...
தூதுவளை இலை அரைச்சு...
தொண்டையில தான் நனைச்சு...
நன்றி DD.
நீக்குஅடடே... அண்மைக் காலமாய் (எவ்வளவுநாளாய் என்று தெரியவில்லை) இடப்பக்கமாய் ஒருக்களித்து படுக்கும்போது அனிச்சையாய் இடக்கை காதருகே வந்து விடுகிறது.எனக்கு மட்டுமோ என்று நினைத்தேன்...
பதிலளிநீக்குஅட... பாரதி... அப்படியா? ஆச்சர்யம்தான்!
நீக்குதூக்கம் குறித்த அலசலும் ஆராய்ச்சியும் சுவாரஸ்யம். தேர்ந்தெடுத்த படங்களும் சிறப்பு சேர்க்கின்றன. ஒரு ரூபாய்க்கு சாப்பிட உட்கார்ந்திருக்கும் சிறுவன் ஸ்ரீராம் படமும் சேர்த்தி :). தங்கைக்கு பார்சல் வாங்கியதில் பெற்றோருக்கு மகிழ்ச்சி, வாசிப்பவருக்கும் நெகிழ்ச்சி. திகில் கவிதை திடுக்கிட வைத்தது.
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு.