பாலச்சந்தரின் திரைக்கதை இயக்கத்தில், பிரபு, ரமேஷ் அரவிந், மீனாக்ஷி சேஷாத்திரி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் 1994 இல் வெளியான படம் டூயட்.
முன்குறிப்பு : இந்தப் பாடல் ஓரிரு மாதங்களுக்கு முன்னால் முன்தேதியிட்டு சேமிக்கப்பட்டது. அப்போது நிலை வேறு. இப்போது? இதைதான் சென்ற வெள்ளி தேதி மாற்றி பகிர நினைத்திருந்தேன். அன்றுதான் மீண்டும் கணிணிப் பக்கம் வந்ததால் செய்ய முடியவில்லை. எனவே எஸ் பி பிக்கான அஞ்சலியாய் இந்தப் பாடலை இங்கு பகிர்கிறேன். குறிப்பாக இரண்டாவது பாடல். இரண்டு காணொளிகளையும் பார்க்கலாம்.
பிரகாஷ்ராஜுக்கு முதல் தமிழ்ப்படம். கேபிக்கு உதவி இயக்குனராய் இந்தப் படத்தில் பணி புரிந்திருக்கிறார் சரண்.
வைரமுத்துவின் பாடல்களுக்கு ஏ ஆர் ரெஹ்மான் இசை. இந்தப் படத்தில் காதிரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் சிறப்பிடம் வகித்தது.
பிரபுவும் ரமேஷ் அரவிந்தும் அண்ணன் தம்பி. ஒரே பெண்ணைக் காதலித்து அதனால் விளையும் விபரீதங்கள் படத்தின் கதை. இது Cyrano de Bergerac என்கிற பிரெஞ்சு படத்திலிருந்து இன்ஸ்பைர் ஆகி எடுக்கப்பட்ட படம்.
இரண்டு இனிய பாடல்கள் இன்றைய பகிர்வாய்... முதலில் மெட்டுப்போடு மெட்டுப்போடு பாடல்... இசையினாலும் அதிரும் தாளத்தினாலும், எஸ் பி பியின் குரலாலும் கவரவைக்கும் பாடல். இந்தப் பாடலை ரெஹ்மான் ஆனந்தபைரவி ராகத்தின் சாயலில் அமைத்திருக்கிறார்.
மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது நெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம் எத்தனை எத்தனை
தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டி சுட்டுப்போடு
இது மக்கள் பாட்டு தன்மானப் பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்க்கைப்பட்டு
கல் லூரிப் பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்று வரும் சபதம் போட்டு
இது கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு
கட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு
தாய்ப் பாலைப்போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ்மக்கள் வீட்டைச் சென்று தட்டும் பாட்டு
இனி கண்ணீர் வேண்டாம் புதுக் கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க
மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம்பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
அடுத்து இன்றைய ஸ்டார் சாங்... எஸ் பி பி குரலில் இழையும் பாடல். சோகத்தை பிழிந்து தரும் பாடல். சூப்பர் சிங்கர் மேடை என்று நினைக்கிறேன். இளம் பாடகர்களின் வேண்டுகோளுக்கிணங்க எஸ் பி பி இந்தப் பாடலைப் பாடுகிறார். விருந்தினர் வரிசையில் அமர்ந்திருக்கும் மீனாக்ஷி சேஷாத்திரி கண்ணில் கண்ணீர் வழிகிறது. அனுராதா ஸ்ரீராம் தாங்க முடியாமல் ஓடி வந்து அழுகையுடன் எஸ் பி பி தோளில் சாய்ந்து விடுகிறார். பார்வையாளர்களில் ஒருவர் தாங்க முடியாமல் கண்களைத் துடைத்துக் கொள்வார். செட்டப் என்று நினைத்து விடாதீர்கள். கேட்டால் உங்கள் கண்களும் கலங்கும். கட்டாயம் கட்டாயம் அந்த உணர்ச்சி வெள்ளத்தைக் காண இதையும் பார்த்து விடுங்கள். அப்புறம் ஒரிஜினலையும் கேட்டு மகிழலாம்.
அவ்வளவு அருமையாக அங்கே மேடையில் மறுபடி பாடுகிறார் எஸ் பி பி. இந்தப் பாடல் மாண்ட் ராக அடிப்படையில் அமைந்த பாடல். இந்த ராகம் சோகத்துக்கு உரித்தானது போல... சிகரம் அப்படத்தில் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே' பாடலும் மாண்ட் ரகம்தான் என்று நினைவு. அது இன்னொரு வெள்ளியில்.
சரணங்களில் எஸ் பி பி யின் குரல் உயரத்துக்குப் போகும்போதும் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும்போதும் பாடல் வரிகளின் சோகம் கேட்பவர்களைத் தாக்கும். நடுவில் மீனாக்ஷியைப் பார்த்ததும் பிரபு சாக்ஸபோனில் உற்சாக டியூனுக்குச் சென்று விட்டு ரமேஷ் முகம் பார்த்து அபப்டியே சோகத்துக்கு மாறுவது க்ளாஸ்.
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதைக கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா... இல்லை வீழ்வதா..
உயிர் வாழ்வதா... இல்லை போவதா..
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா... தடுமாற்றமா..
என் நெஞ்சிலே... பனி மூட்டமா..
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதைக கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு..
பதிலளிநீக்குநலம் வாழ்க..
நலமே விளையட்டும்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார் வணக்கம்.
நீக்கு1994 ல் இந்தப் படத்தின் கேசட் ஓடி ஓடித் தேய்ந்திருந்தது எனது வீடியோ பிளேயரில்...
பதிலளிநீக்குமிகவும் பிடித்த பாடல்.. பாலு அவர்கள் மேடயில் பாடும் பாடல் எனது சேமிப்பில் உள்ளது.
ஓஹோ... மறைவுக்கு முன்னரே இந்தக் காட்சி பார்க்கும்போது கண் கலங்க வைத்து விட்டார்.
நீக்குஎன் தாய் கொடுத்த
பதிலளிநீக்குதமிழுக்கில்லை தட்டுப்பாடு..
இதே படத்தில்
இன்னொரு வசன கவிதையில்
தமிழுக்குப் பஞ்சம்... - என்று
வேடிக்கையான ஒரு குழப்பம் வரும்..
அப்படியா? எந்தப் பாடலில் என்று யோசிக்கிறேன். சமயங்களில் பாடல்களில் அர்த்தமில்லாத வரிகள் அமைந்து விடும்.
நீக்குதமிழுக்குப் பஞ்சம்..
நீக்கு- என்ற வார்த்தைகள் பிரபு மீனாக்ஷியை நேரில் சந்தித்ததும் பேசும் கவிதை போன்ற வசனங்களுக்குள்!..
ஓ.. அப்போது பாடலில் இல்லை.
நீக்குஇனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம். அன்பு துரை.
பதிலளிநீக்குஎன்றும் வளமுடன் வாழப்
பிரார்த்தனைகள்.
காலை வணக்கம் வல்லிம்மா... வாங்க...
நீக்குஇரண்டு பாடல்களுமே அற்புதமானவை.
நீக்குஅதுவும் இரண்டாவது பாடல் மனத்தைப் பிழிந்துவிடும்.
இந்தப் படம் ஈஸ்ட் கோஸ்ட் சாலாயில் ஒரு திரப்பட அரங்கம்
இருக்குமே அங்கே பார்த்தோம். ட்ரைவ் இன் .ஆ! பிரார்த்தனா,
எஸ்பி பி பாடும் சூப்பர் சிங்கரில் மீனாக்ஷி சேஷாத்ரி இல்லையே.
பாடகி சுஜாதாவின் மகள் தான் இருக்கிறார்.
அனுராதா ஸ்ரீராம் மிகவும் மென்மை. உருகிவிடுவார்.பாலு சார்.
இன்னும்மனம் ஆறவில்லை. என்ன குரல் அப்பா இது.
மிக மிக நன்றி அன்பு ஸ்ரீராம். எத்தனை தடவை பார்த்திருப்பேனோ
தெரியவில்லை,.
ஓ.. நடுவில் கண்ணில் பட்ட ஒரு உருவத்தை நான் மீனாட்சி சேஷாத்ரி என்று நினைத்து விட்டேன்.
நீக்குஅது மீனாக்ஷி சேஷாத்ரி இல்லைனு சொல்ல இருந்தேன். ரேவதி சொல்லிட்டார். அதோடு அந்தப்பெண் அழுததாகவும் தெரியலை.
நீக்குஎனக்கு அனுஷ்னா நல்லாத் தெரியும். இவங்களைத் தெரியவில்லை.
நீக்குHahaha.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம். வாங்க கமலா அக்கா..
நீக்குஅனைவருக்கும் நல்வரவும் காலை/மாலை வணக்கமும். அனைவர் வாழ்க்கையிலும் இனிமையும், ஆரோக்கியமும் சேர்ந்து அனைவரும் மகிழ்வுடன் வாழப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. வணக்கம்.
நீக்குஎஸ் பி பியின் நினைவுகளில் மூழ்கடித்துவிட்டீர்கள். காணொளியை பிறகுதான் பார்க்கணும்.
பதிலளிநீக்குமுன்னரே கண்கலங்கவைக்கும் பீணொளி.. இப்போ இன்னும்..
நீக்கு//பீணொளி..// ?????????????????????
நீக்குஅலுவலகம் செல்லும் வழியில் பயணத்துக்கு நடுவே மொபைல் டைப்பிங்! கண்டுக்காதீங்க... காணொளிதான் அது!
நீக்குசொன்னால் விநோதமா இருக்கும். சட் என்று இன்று என்ன கிழமை எனக் கேட்கும்போது எபி இடுகையைப் படித்ததை நினைவில் வைத்து இன்று புதன், வியாழன்... என்று சொல்கிறேன்.
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா.்்
நீக்குசும்மா ஊத்தாதீங்க...
நீக்குசெவ்வாய் கிழமை மட்டும் உங்களிடம் 'என்ன கிழமை இன்று!' என்று யாரும் கேட்பதில்லை போலும்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டுமே அருமையானது. நீங்கள் கூறுவது போல் இரண்டாவது பாடல் மனதை உருக்கி கண்களை கலங்க வைத்துவிடும். அந்த ராகத்தின் தன்மை போலும்.. கானடா ராகமும் கண்ணீர் வரவழைக்கும் ராகந்தான் இல்லையா? அதில் அமைந்த பாடல்களும் மனதை உருக்கி விடும். வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலும் கண்ணீரை வரவழைக்கும். காத்திருக்கிறேன்.
இந்தப் படமும் தொலைக்காட்சியில் எப்போதோ பார்த்துள்ளேன்.இந்தப் பாடல்கள்ளை அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். இதில் அனைவரின் நடிப்பும் நன்றாக இருக்கும். இயல்பாக அனைவரும் அவரவர் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருப்பார்கள்.
எஸ்.பி பி குரலுக்கு கேட்கவா வேண்டும். தெய்வ அருள் பெற்றவர். அவர் சூ. சி மேடையில் பாடிய பாடல்களை இப்போது அடிக்கடி கண்ணீரோடு கேட்டுக் கொண்டுதான் உள்ளேன். இந்தப் படத்தின் தகவல்களுக்கும், அருமையான பாடல்களை இன்று பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிகள். பாடல்களை பிறகு (வீட்டில் அனைவரும் எழுந்த பின்) நிதானமாக கேட்டு ரசிக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படம் நானும் எப்போதோ தொலைக்காட்சியில் பார்த்ததுதான் கமலா அக்கா,
நீக்கு//தெய்வ அருள் பெற்றவர்.//
எனக்கும் அப்படிதான் தோன்றும். நம்மை மகிழ்விக்கும் பாடகர்கள் அனைவரும் தெய்வ அருள் பெற்றவர்கள்.
வணக்கம் சகோதரரே
நீக்குஇரண்டாவது பாடலில் வரும் ராகந்தான் "அஞ்சலி, அஞ்சலி புஸ்பாஞ்சலி" பாடலும் என்று தோன்றுகிறது? இல்லை அது வேறு ராகமோ? கானடா ராகத்தில் ஒரு பாடல் நே. வி. மாக என்றேனும் ஒரு நாள் பகிருங்களேன் . சென்ற தடவை நான் கேட்ட "இது சத்தியம்" படப்பாடல் மாறி வந்து விட்டது. சிவாஜி, சாரதா பாடும் "சின்னஞ்சிறிய வண்ணப்பறவை" கானடா ராகந்தான் என நினைக்கிறேன். அதை தவிர்த்து வேறு ஏதாவது.. நான் சங்கீதத்தில் ஒரு ஞா. சூன்யம். இந்தப் பாடல் என கேட்க கூடத் தெரியவில்லை. ஏதோ ஆசை. உங்களையே முடிந்தால் தேடிப் போட சொல்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா அக்கா... சின்னஞ்சிறிய வண்ணப்பறவை கானடா இல்லை என்று நினைக்கிறேன். அந்தப் பாடலைக் கேட்கிறீர்களா? இல்லை, கானடாவில் அமைந்த ஒரு திரைப்படப் பாடலா?
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். இரண்டும் மிக இனிமையான பாடல்கள். இந்தப்படம் வெளியான சமயத்தில் நாங்கள் மஸ்கட்டில் இருந்தோம். அப்போதெல்லாம் வெளியே செல்லும் பொழுது காரில் ஒலிக்கவிட்டு கேட்டுக்கொண்டே செல்லும் பாடல்களில் டூயட், ஜென்டில்மேன், புதிய முகம் படப்பாடல்கள்தான் பெரும்பாலும். ஏனென்றால் மகனுக்கும்,மகளுக்கும் மிகவும் பிடித்த பாடல்கள் அவை.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... காலை வணக்கம். எல்லோருக்குமே பிடித்த பாடலாயிருக்கிறது.
நீக்குநேயர் விருப்பமாக நான் கேட்க விரும்பும் பாடல் சிட்டுக்குருவி படத்தில் "என் கண்மணி, என் காதலி, இளமாங்கனி எனைப்பார்த்ததும் சிரிக்கின்றதேன்.." பாடல்.
பதிலளிநீக்குஇந்தப் பாடல் (என் கண்மணி... இதில்தானே 'நன்னாச் சொன்னேள் போங்கோ' என்ற வரி வரும்) எங்கு ஒலித்தாலும் என் நினைவு, உடல் எல்லாமே 9ம் வகுப்பு ஹாஸ்டல் வாழ்க்கைக்குச் சென்றுவிடும் (இதுபோல இளமை எனும் பூங்காற்று, டக்னு பாடல் நினைவுக்கு வரலை, சரத்பாபு-ஜீப்பில் போய்க்கொண்டே பாடும் பாடல்....). இப்பவும் இந்த வரிகளைப் படிக்கும்போதே என் மனது ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டது.
நீக்குசரத்பாபு ஜீப்பில் போய்க் கொண்டே பாடும் பாடல் -
நீக்கு" செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
என்மீது மோதுதம்மா!.. "
இளையராஜாவின் இசையில்
கவியரசரின் பாடல்..
பாடலும் அழகு...
பாடல் காட்சியில் ஷோபாவும் அழகு..
தமிழ்த் திரையுலகைப் புரட்டிப் போட்ட படம் - முள்ளும் மலரும்..
உள்ளூர் நூலகத்தில் படித்த நாவல்..
நீக்குநாவலின் போக்கு நினைவில் இல்லை..
ஆனால் காளியை மறக்க இயலாது..
அதேபோல
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு..
நெய் மணக்கும் கத்தரிக்கா...
- பாடலுடன் படாபட் ஜெயலட்சுமியையும் மறக்க முடியாது...
நேயர் விருப்பம் போட்டுடுவோம் பானு அக்கா...
நீக்குநிறைய பாடல்கள் அது கேட்ட காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்று விடும் நெல்லை.
நான் முள்ளும் மலரும் நாவல் படித்ததில்லை. படம்தான் பார்த்தேன். ரஜினியின் அருமையான படங்களில் முதலிடம்.
நாவலை எழுதியது?
நீக்குதோழர் டி. செல்வராஜ்.
முள்ளும் மலரும் நாவல் - எழுதியவர் உமாசந்திரன்..
நீக்குகரெக்ட். யாராவது திருத்துவார்களா என்று எதிர்பார்த்துக் காத்துருந்தேன்.
நீக்குகல்கி வெள்ளிவிழா பரிசுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் "முள்ளும் மலரும்!" வேறொரு நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதாயும் உமாசந்திரனின் அப்போதைய நிலைமையை உத்தேசித்து அவருக்கு முதல் பரிசு அறிவித்ததாகவும் சொல்வார்கள். எவ்வளவு உண்மை என்பது தெரியாது. ஆனால் இரண்டாம் பரிசு பெற்ற "கல்லுக்குள் ஈரம்" ர.சு.நல்லபெருமாள் எழுதின நாவலும் (உலக்கை நாயகர் இதைத் தழுவித்தான்"ஹே ராம்!" படம் எடுத்தார்.படத்தில் முதல் மனைவி இறந்ததாய்க் காட்டுவாங்களோ? இதில் நாவலில் காதலி! மூன்றாம் பரிசு பெற்றது பி.வி.ஆரின் "மணக்கோலம்!" இதுவும் அருமை! இவற்றுக்கு முதல் பரிசு கிடைத்திருக்கணும் என எனக்குத் தோன்றும்.
நீக்கு'
நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு கீதா அக்கா... பானு அக்காவும் பயங்கர ஞாபக சக்தி உள்ளவர். எப்போதோ படித்ததை வரிக்குவரி நினைவுகூர்வார்.
நீக்குஅனுஷ் அபிமானியே, சைலன்ஸ் பார்த்து விட்டீர்களா?
பதிலளிநீக்குஅப்படி ஒரு படமா? பார்க்க முயற்சிக்கிறேன் பானு அக்கா.
நீக்குமுகநூலில் விமரிசனங்கள் பார்த்தேன். படிக்கலை!
நீக்குஇங்கு என் குழந்தைகள் இந்தப்படம் நான்கு நாட்களுக்கு முன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மதியம் அவர்கள் குழந்தைகளின் அட்டகாசத்தில் தொடர்ந்து பார்க்க முடியாமல், அவர்கள் சைலன்ஸ ஆனதும் (தூங்கியதும்) மறுபடி தொடர்ந்து போட்டு மாலைக்குள் பார்த்து விட்டார்கள். நன்றாக இருந்ததா என கேட்க நினைத்து, வேலை மும்மரத்தில் நானும் சைலன்ஸாக இருந்து விட்டேன்:)
நீக்கு//இது Cyrano de Bergerac என்கிற பிரெஞ்சு படத்திலிருந்து இன்ஸ்பைர் ஆகி எடுக்கப்பட்ட படம்.// அப்படியா? சஞ்சய்தத், சல்மான் கான், மாதுரி தீட்சித் நடித்த ஹிந்தி படம் ஒன்றி் ரீ மேக் அல்லவா?
பதிலளிநீக்குநீங்கள் ஸாஜன் படத்தைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இனிமையான பாடல்களைக் கொண்ட படம். அது கதை வேறு மாதிரி...ஆனால் ஒரு பெண்ணை இருவர் விரும்புவது மட்டும் ஒற்றுமை. மிக இனிமையான பாடல்கள் கொண்ட படம் அது. அதிலும் எஸ் பி பி உண்டு.
நீக்குஸாஜன் படம் 2,3 தரம் தண்டனை போலப்பார்க்க நேர்ந்தது! :))))))
நீக்குபாடல்களுக்காகவும் மாதுரிக்காகவும் நான் படத்தை ரசிப்பேன்!
நீக்குஇரண்டும் நல்ல பாடல்களே.... ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குநான் ரசித்த பாலசந்தர் படங்களில் இதுவும் ஒன்று. பாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கும். இப்பதிவு மூலமாக அவற்றை மறுபடியும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்... நீங்கள் கேபி ரசிகர் என்பதை அறிவேன்.
நீக்குநான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்...
பதிலளிநீக்குநன்றி DD... பாடல் வரிகளிலேயே பதில்!
நீக்கு93 ல் ஒருநாள்.. ஆடியோ கேசட் விற்கும் கடையில் சந்தனம் குங்குமத்துடன் கையில் சாக்ஸபோனைத் தாங்கிய கோலத்தில் திரு.கத்ரி கோபால்நாத் அவர்களது கேசட்..
பதிலளிநீக்குவாங்கிச் சென்று கேட்டதன் பிறகு அடிக்கடி அவரது கேசட்டுகளை வாங்கும்படிக்கு நேர்ந்தது...
டூயட் படத்தில் சாக்ஸபோனுடன் ராஜாங்கமே நடத்தியிருப்பார்...
இசையும் தமிழும் என்றும் வாழ்க..
என்றென்றும் வாழ்க..
டூயட் வரும் முன்பே நீங்கள் கதிரி கோபால்நாத் ரசிகரா? நான் அவ்வளவு விரும்பிக் கேட்டதில்லை.
நீக்குஎம்.எஸ்.கோபாலகிருஷ்ணனைத் தெரிந்திருந்தால் கத்ரியையும் கட்டாயம் தெரிந்திருக்கணும்! நாங்க மங்களூர் போனப்போக் கத்ரியும் போனோம். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சிவன் கோயில். சாயங்காலத்தில் போனதால் முழுக்க முழுக்கப் பார்க்க முடியலை! மேலே ஏறி, கீழே இறங்கினு 2,3 சந்நிதிகள் பார்த்ததே முடியாமல் போய்விட்டது. கோயில் குருக்களில் இருந்து ஊழியர்கள் வரை அனைவரும் ஹிந்தி பேசினார்கள்!
நீக்குஇங்கு எனக்குப் பழக்கமாக சாகுல் ஹமீது என்னும் இளைஞர் (அப்போது வயது 20) தான்.. இசை ஆர்வம் உடையவர்... இசைக் கருவிகள் இல்லாமல் இசைக்கவும் பாடவும் செய்வார்...
பதிலளிநீக்குஅவருடன் சேர்ந்து - கவியரர், மெல்லிசை மன்னர், இளைய ராஜா படைப்புகளை அலசுவது உண்டு..
டூயட் படத்தின் இந்தப் பாடல் ஏற்படுத்திய தாக்கத்தினால் ஆறேழு பாடல்களை நான் எழுதிக் கொடுக்க அவற்றுக்கு இசை கூட்டி டேப் ரெகார்டரில் பதிவு செய்தார்..
அருமையான நாட்கள் அவை...
சாகுல் ஹமீது இங்குதான் இருக்கிறார்..
அந்தப் பாடல்கள் எங்கே சென்று ஒளிந்து கொண்டனவோ... பாடல்கள் பதிவு செய்யப் பட்ட கேசட்டும் வீணாகி விட்டது...
தவிர நண்பர்கள் சிலர் சேர்ந்து பாலைவனத்தில் ஒரு ஆட்டுக்குட்டி - என்று வீடியோ படம் (95 ல்) எடுத்தார்கள்.. இரண்டு பாடல்கள் கொடுத்தேன்... இசைக் கலைஞர்களைக் கொண்டு சாகுல் இசையமைத்துக் கொடுத்தார்...
பிரமாதமாக இருந்ததாக பேசிக் கொண்டார்கள்... ஆனால் அந்தக் குறும் படத்தை நான் பார்க்கவில்லை ..
அடடே... என்ன புதிய தகவல்... அதுவும் அசத்தும் தகவல் சொல்கிறீர்கள்? சூப்பர் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஉங்களது பாராட்டைக் கண்டு அழுது விட்டேன் ஸ்ரீராம்...
நீக்குதில்லா மோகனாம்பாள் படத்தில் ஆச்சி ம்னோரமா ஏக்காத்துடன் சொல்ல்வாத்..
நீக்குஎல்லாந்தே கற்றேன்.. என்ன பிரயோசனம்?.. - என்று..
ஆனாலும் இப்படி இசை எழுத்து இவற்றால் நான் எய்தியவை ஏகாந்தமானவை...
அந்த நாட்களை நினைத்து விட்டாலே
நெஞ்சுக்குள் அமுதம் சுரந்து வாழ்நாளை நீட்டித்து விடும்...
அதனால்தான் கவியரசர் பாடினார்...
நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை..
எந்த நிலையிலும்
எனக்கு மரணம் இல்லை!..
அட!..
நீக்குதில்லானா மோகனாம்பாள் படத்தில் ஆச்சி மனோரமா ஏக்கத்துடன் சொல்வார்...
என்றிருக்க வேண்டும்..
வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
நீக்குஉங்களது திறமைகள் வியக்க வைக்கின்றன. . எப்போதுமே கதை கவிதைகள் என சிறப்பாக எழுதி அசத்தும் உங்களுக்கு பாடல் எழுதுவது ஒரு பெரும் சிரமமில்லையே.. எனினும் ஸ்ரீராம் சகோ கூறுவது போல் புதிதான தகவல்கள் தந்து எங்களை மேலும் அசத்துகிறீர்கள். தங்களுக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். இங்கு அதையனைத்தும் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களன்பின் பாராட்டுக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.. நன்றி..
நீக்குசாகுல் ஹமீது என்னும் பெயர் அடிக்கடி கேட்ட பெயர். குறும்படத்துக்கெல்லாம் பாடல்கள் எழுதிக் கொடுத்திருக்கும் தகவல்கள் புதுசு. எத்தனை திறமைகள்! ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! பாராட்டுகள்! வாழ்த்துகள்! நினைவில் இருந்தால் அந்தப் பாடல்களை ஓர் பதிவில்பகிர்ந்து கொள்ளுங்கள். எழுத நேர்ந்த சந்தர்ப்பங்களையும் குறிப்பிட்டு!
நீக்குசகோ துரை செல்வராஜூ அவர்கள் பாடல்கள் எழுதி கொடுத்த விவரம் அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அவை இப்போது இல்லை என்று படிக்கும் போது வருத்தமாக இருக்கிறது.
நீக்குபாராட்டுக்கள், வாழ்த்துக்கள். கீதா சொல்வது போல் நினைவு இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சாகுல் ஹமீது இங்கு தான் பணி புரிகின்றார்..
நீக்குஅவரிடம் ஏதும் பழைய பிரதிகள் உள்ளனவா என விவரம் கேட்டு தெரிவிக்கிறேன்.. இல்லையெனில்
ஊருக்குச் சென்றதும் பழைய பெட்டியில் தேடிப் பார்க்க வேண்டியது தான்..
26 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவு தான் எத்தனை மகிழ்ச்சியை உண்டாக்குகிறது!..
நீக்குஉண்மையான நண்பர் கிடைப்பதும், அவரோடு இசை, இலக்கியம் என ஒத்துப்போவதும், தன் திறன் வெளிப்பட வாய்ப்பு அமைவதும் எல்லாம் இறையருள்தான். உங்களுக்கு அது இருந்திருக்கிறது. இருக்கிறது.
நீக்கு// தெய்வத்தின் அருள்..//
பதிலளிநீக்குதம்து மனோ வாக்கு காயத்தினால் - இலக்கியம் (வலைப்பதிவு), இசை பாடல், நாடகம், நாட்டியம் - என, மற்றவர் மனம் மகிழச் செய்பவர்கள் எல்லாமே தெய்வத்தின் அருள் பெற்றவர்கள் தாம்..
அதில் சந்தேகமே இல்லை..
கடவுள் எங்கே?.. என்று பதிவு போட்டால் கூட - அங்கே தமிழின் அருளும் அன்பும் நிச்சயம் உண்டு..
இந்த டூயட் பட பாடல் காட்சியில் பிரபு, ரமேஷ் அரவிந்த் இருவர் நடிப்பம் பிரமாதம். அந்தகைய ஈடுபாடுடன் கூடிய நடிப்பு இல்லையெனில் பாடல், அதற்கான இசை எல்லாமே சொதப்பியிருக்கும்.
பதிலளிநீக்குஎஸ்.பி.பி-யையே முன்னிலைப்படுத்தும் பொழுது மற்ற விஷயங்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை -- என்றும் இதற்கு மறுமொழி அளிக்கலாம்.
நீக்குஆம். அப்படியும் சொல்லலாம் ஜீவி ஸார். ஆனால் பிரபுவின் நடிப்பும் அந்தக் காட்சியில் நன்றாகவே இருக்கும்.
நீக்கு//அடுத்து இன்றைய ஸ்டார் சாங்... எஸ் பி பி குரலில் இழையும் பாடல். சோகத்தை பிழிந்து தரும் பாடல். சூப்பர் சிங்கர் மேடை என்று நினைக்கிறேன். //
பதிலளிநீக்குஆமாம், விஜய் சூப்பர் சிங்கர் மேடைதான்.
நானும் கேட்டேன் . அவர் இறந்த பின் நிறைய பேர் இதை பகிர்ந்து விட்டார்கள்.
சில பாடகர்கள் சினிமாவில் பாடியது போல் பாட மாட்டார்கள் மாற்றி பாடுவார்கள், ஆனால் இவர் அப்படியே பாடுவார். பாடி பாடி குரல் என்றும் இளமை.
பாடலை கேட்டு மீண்டும் மனதில் பாரம்.
சூப்பர் சிங்கர் பார்ப்பதை எல்லாம் நிறுத்தி விட்டேன் கோமதி அக்கா... இது மட்டும் கண்ணில் பட்டது. இன்னொன்று நான் ரசிக்கும் எஸ் பி பி வீடியோ ஸ்பூர்தியுடன் எஸ் பி பி இருக்கும் ராகங்கள் மாறுவதில்லை பாடல்.
நீக்குபாடல்கள் கேட்டேன் பாடல்கள் மூலம் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
பதிலளிநீக்குஇறவா வரம் பெற்றவர்.
உண்மை. நன்றி கோமதி அக்கா.
நீக்குஆம் நிஜம்தான்..கண்கலங்குவதைத் தடுக்கமுடியவில்லை..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி ரமணி ஸார்..
நீக்குஅழகான இனிமையான பாலு சாரின் குரலிலமைந்த பாடல் .எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசையும் .
பதிலளிநீக்குஅந்த சாக்ஸபோன் இசை நெளியும் உருகும் குழையும் அதற்கேற்ப பாலு சாரின் குரலும் செம .இந்த மூவி வந்தப்போ ஸ்கூலில் இருந்தேன் .மீனாட்சி சேஷாத்திரி அணியும் அனார்கலி வகை சுரிதார் அப்போ பிரபலம் அது சரி படத்தில் பிரகாஷ் ராஜை மறந்துட்டீங்க :) கையில் இருக்கும் உருட்டு பிரம்பை கீழே தவறவிடுவாரா அதை எடுக்க ரசிகசிகாமணிஷ் பாய்வாங்க :) கேபி யாருக்கோ உள்குத்து கொடுத்தாரான்னு கிசுகிசு வந்தது :) நல்லதொரு பாடலை கேட்டுட்டு வேலைக்கு புறப்படறேன் :)
ஷ்ஹ்ஹ் அவசர டைப்பிங் :) ஆசிரிய பயிற்சி ஸ்கூலில் .அங்கே புடவை கட்ட கட்டாயம் நோ சல்வார் அதை குறிப்பிட்டேன் :) நல்லவேளை பூனை பார்க்கலை
நீக்குஓ... இந்தக் களேபரத்தில் பிரகாஷ் ராஜ் மனதில் பதியவில்லை! நன்றி ஏஞ்சல்.
நீக்கு2012 வாக்கில் கன்னட தொலைக்காட்சி ஒன்றி நடந்தஹெடெ தும்பி ஹாடுவனா என்னு பாட்ல் ரியாலிடி ஷோ நிகழ்ச்சியில் எஸ்பி பி நடுவராக இருப்பார் அவர் சிறார்களை ஊக்குவிக்கும் அழகே தனி அதற்காகவே கன்னடம் தெரியாவிட்டாலும் ஈடுபாட்டுடன் பார்ப்போம் எஸ்பிபியின் பாடல் என்றும் அருமை
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி ஜி எம் பி ஸார்.
நீக்குஎன் காதலே
பதிலளிநீக்குமிகவும் பிடித்தமான பாடல்
நன்றி நண்பரே...
நீக்குகாதலே.. கேட்டேன். ஈடுபட்டால்தான் எந்த ஒரு கலையும் ஒளிரும். தன்னைக் காட்டிக்கொள்ளும். எஸ்பிபி, சுசீலா போன்றோரிடம் அது நிறைய உண்டு. அமைதியாக எங்காவது அமர்ந்து கேட்கலாம்.
பதிலளிநீக்குStill I would have preferred only audio for such songs. TV shows and the characters as caricatures around.. NO.
நானும் அதை மிக அடிக்கடி சொல்லி இருக்கிறேன் ஏகாந்தன் ஸார். விதிவிலக்காக சில காட்சிகள் ரசிக்கும்படியும் இருப்பது உண்டு.
நீக்குஇரண்டுமே அருமையான பாடல்கள். கேட்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குஏகாந்தன் சார் சொல்வது போல இந்த டிவி ஷோஸ் - A big no no! for me too! :)
நன்றி வெங்கட்.
நீக்கு//இந்த டிவி ஷோஸ் - A big no no! for me too! :)//
நானும் பார்ப்பதில்லை வெங்கட்.
மிகவும் சிறப்பான பாடல்கள்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்கு