செவ்வாய், 20 அக்டோபர், 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை :  மாய நோட்டு  1/4 - ஜீவி 

மாய நோட்டு 
ஜீவி 1/4

ங்கி  கேஷ் கவுண்ட்டரின் வலது உச்சியில் இருந்த எலெக்ட்ரானிக்  எண் பலகை ஒளிர்ந்து  52  என்று டோக்கன் எண்ணை  ஒலிபரப்பி என்னை உசுப்பி விட்டது.

பெஞ்சில் அமர்ந்திருந்தவன் கவுண்ட்டரை நோக்கி விரைந்தேன்.  டோக்கனைக் கொடுத்ததும்  சரிபார்த்து விட்டு  "எப்படி வேண்டும்?"  என்றார் கேஷியர்.

"ஐநூறாகவே கொடுத்து விடுங்கள்.."  என்றேன்.   அது தான் என்  வழக்கம்.  மாத ஆரம்பத்தில்  இருபதாயிரம் ரூபாய்க்கு  ஐநூறு ரூபாய் நோட்டுகளாகவே எடுத்து  வருவது தான் வழக்கம்..  ஒரு ரப்பர் பேண்ட் சுற்றி பாண்ட் பாக்கெட்டில் போட்டு வருவது சுலபம். 

காசாளர்   ஐநூறு ரூபாய் நோட்டுகளை டிராயரிலிருந்து எடுத்து அடுக்கி  மிஷினில்   வைத்து இயக்கிய பொழுது   கவுண்ட்டரின்  முன் பக்கம் இருந்த   மிஷின்  திரையில் 38  என்று காட்டியது.  இன்னும்  இரண்டு நோட்டுகளை கேஷியர் எடுத்து செருகி மிஷினை இயக்கியதும்  40  எண்ணைக் காட்ட  நோட்டை எடுத்து என் பாஸ் புக்கில் வைத்துத் தந்தார்.  ரப்பர் பேண்ட் கேட்டு வாங்கிக் கொண்டேன்.  சந்தேகத்திற்கு நானும் ஒருதடவை நோட்டுக்களை எண்ணி திருப்தியுடன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.   உடனே வங்கியை விட்டு வெளிவராமல்,  பாஸ்புக்  எண்ட்ரி மிஷினிடம் சென்று  பதிவு  செய்து கொண்டேன்.   இன்றைய தேதியில்  90456 ரூபாய் இருந்தது. 

வழக்கமாக  பால்காரன், பூக்காரம்மா,  பேப்பர் பையன்,  காஸ் சிலிண்டர் சப்ளை,  காய்கறி. மளிகை சாமான்கள் --  இவ்வளவு தான் பணமாகக் கொடுக்கும் செலவுகள்.  எழுபத்து ஐந்து வயதுக்கு மேலாகி விட்டதல்லவா,    இந்த தேசத்தில்  எந்த மருத்துவ  காப்பீடு  திட்டங்களுக்கும் லாயக்கற்ற வயது.  அல்லது அவர்கள் சீந்தாத வயசு.  ஆகையால்,   தன் கையே தனக்குதவி  என்ற ஞானத்தில்  எதிர்பாராத அவசர செலவுகளுக்கு வேறொரு வங்கியின் டெபிட் கார்ட் இருக்கிறது.  அந்த வங்கிக் கணக்கில் இரண்டு லட்சமாவது இருப்பில் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வேன்.

காசாக கொடுக்க வேண்டிய செலவுகளுக்கு  ஐநூறு ரூபாயை கொடுத்து  பாக்கியை சில்லறை நோட்டுகளாக அடுக்கி வைத்துக் கொள்வது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது.  அவை சிறு  சிறு செலவுகளுக்குத் தோன்றாத் துணையாய் இருக்கும்.  அதனால்  நூறு, ஐம்பது, இருபது,  பத்து என்று சில்லறை நோட்டுகளும் கைவசம் எப்பொழுதும் இருக்கும்.  காசு கொடுத்துத் தான் எல்லாம்.  கடன் என்ற பேச்சுக்கே இடமில்லை.    வீட்டின் வரவு  செலவு  கணக்குகள் அத்தனையும்  பல வருஷங்களாக என் பொறுப்பில் தான்.

"ஏங்க..   வாசல்லே  யாரோ  கூப்பிடறாங்க,  பாருங்க..  கைவேலையா இருக்கேன்..."

எக்னாமிக் டைம்ஸ் கலர்ப் பேப்பரில் ஷேர் மார்க்கெட் நிலவரங்களை மேய்ந்து கொண்டிருந்தவன்,  நேற்றைய மார்க்கெட் சரிவின் சலிப்பினூடே  வாசல் பக்கம் வந்தால்  தார்ப்பாச்சு வேஷ்டியும் பை வைத்து தைத்த பனியன் - முண்டாசுமாய் கிராமத்து தோற்றத்தில்  ராகவையா.    ரொம்ப வருஷமாய் எங்கள் சாப்பாட்டுக்கு  அரிசி சப்ளை செய்கிற  வியாபாரி.

"வழக்கம் போல கொண்டு வர்ற ஐட்டம் தானே கொண்டு வந்திருக்கே?..  அதான் காண்றதுன்னு.." என்றேன்.

"அதே தான் சாமி.  இப்போ போனா  ரெண்டு மாசத்துக்கு வர மாட்டேன்.  சேர்த்து வாங்கிக்கங்க.." என்றான்.

"அம்மா என்ன சொல்லுவாங்கன்னு  தெரியலியே?.. எதுக்கும் கேட்டுகிட்டு வந்திடறேன்.." என்று உள் பக்கம் திரும்பினேன்.

அதற்குள் ஜானகியே  கையைத் தொடைத்தபடியே வந்து விட்டாள்.    "என்ன, ராகவையா?..  எப்படியிருக்கீங்க?.." சட்டென்று பழக்கமானவர்களிடம்  நெருக்கம் கொண்டு விடுவாள் ஜானகி.

"உங்க புண்ணியத்திலே நல்லா இருக்கேம்மா..  ரெண்டு மாசம் கழிச்சுத் தான் வருவேன்..  அதான் சேர்த்து வாங்கிக்கங்கன்னு ஐயா கிட்டே சொல்லிக்கிட்டிருக்கேன்."

"அப்படியா?..  ஏன் வரமாட்டீங்க?.."

"பேத்திக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு.  பத்திரிகை கொடுக்க  எப்படியும் வருவேன்..  "

"ஓ..  அப்படியா?  ரொம்ப சந்தோஷம்ப்பா..   நன்னா இருக்கட்டும்.." என்று வாழ்த்தினாள்  ஜானகி.  "அதே அரிசி..  அதே  விலை தானே?.. "

"அதேதாம்மா..  மார்க்கெட்லே பத்து ரூபா கூடியிருக்கு.. இருந்தாலும் உங்க கிட்டே  நா கேக்க முடியுமா?..   ரெண்டு மாச கணக்குப்படி  தனிப்பையிலே போட்டு கொண்டாந்து இருக்கேன்.." என்று ஒரு  கோணிப்பையை தொட்டுத் தூக்கி  "எங்கே வைக்கட்டும், ஐயா?.."  என்று என்னைப் பார்த்துக் கேட்டான்.

"உள் ஹால்லே கொண்டு வந்து வைச்சிடு..  அப்புறம் நான் எடுத்து வைச்சிக்கறேன்.. "

"ராகவையா..  காசு வாங்கிண்டு கிளம்பிடாதே..  காபி கலக்கறேன்..  சாப்பிட்டுப் போவே.." என்று ஜானகி உள்பக்கம் வந்தாள்.

ஹாலில் கொண்டு வந்து அரிசியை வைத்தான் ராகவையா.  நான் கேல்குலேட்டரை எடுத்து கணக்குப் போட்டு  காசு எடுத்து வர உள்பக்க பீரோவிற்கு நகர்ந்தேன்.

அதற்குள்  ஜானகி காப்பியோடு வந்து விட்டாள்.  "உக்காந்து சாப்பிடு.."  என்று  காப்பியை சின்ன ஸ்டூலின் மேல் வைத்தாள்.


பீரோவினுள் லாக்கர் மாதிரியான ஒரு சின்ன தடுப்புக்குள்      ஒரு சின்ன  பை.   அந்தப் பையினுள் ஒரு பிளாஸ்டிக் டப்பா.  அந்த டப்பா தான் எனக்கு ரூபாய் நோட்டுகளை வைக்கும்   கருவூலம்.   அதில்  பாங்கிலிருந்து  எடுத்து  வந்திருந்த ஐநூறு ரூபாய்  கட்டை எடுத்தேன். ராகவையாவுக்கு இரண்டாயிரம் ரூபா தர வேண்டும்.   ஐநூறு  ரூபாவா  நாலு கொடுத்து விடலாம் என்ற எண்ணத்தில்  ஜன்னல் வெளிச்சப்பக்கம் வந்து  கட்டிலிருந்து நோட்டை எடுக்கும் போது ஒரு நோட்டில்  ஏதோ கருப்பாய் திட்டாய் இருப்பது போலிருந்தது.   அந்த நோட்டை மட்டும் கட்டிலிருந்து உருவி தனியே எடுத்துப் பார்த்தேன்.


நோட்டில்  காந்தி தாத்தா அச்சுக்குக் கொஞ்சம்  தள்ளி ஓரப் பக்கமாக  தீயில் சுட்டிருந்தது.  சுட்ட இடத்தில் சின்னதாய் அரக்குக் கலரில் பொத்தல்.  சிகரெட் பிடிச்சபடியே நோட்டை வாங்கியிருப்பானோ?..  அல்லது நோட்டை எண்ணியபடியே சிகரெட் பிடிச்சிருப்பானோ?  இல்லை,  டாஸ்மாக் சம்பந்தப்பட்ட பிரக்ஞையற்ற செயலாய் இருக்குமோ?..  'அட!  வங்கியில் எண்ணிப் பார்க்கும் பொழுது கண்ணுக்குத் தெரியலையே'  என்று நொந்து கொண்டேன்.

'அதுக்கென்ன,   யாருக்காவது நாலைந்து நோட்டாக கொடுக்கும் பொழுது நோட்டோடு  நோட்டாக சேர்த்துக்  கொடுத்தால்  போச்சு..' என்று நினைத்த அடுத்த வினாடியே  'அதான்  ராகைவையாவுக்கு இப்போ நாலு நோட்டு கொடுக்கப் போறையே..  அதோடு சேர்த்துக் கொடுத்துடு..' என்று மனசின் ஒரு மூலையிலிருந்து  ஆலோசனை பிறந்தது.

ஆலோசனையை  செயல்படுத்த எத்தனிக்கும் போதே, 'கூடவே, கூடாது..'  என்று   அதே மனசின் புனர் ஆலோசனை பிடிவாதம்  பிடித்தது..  'பாவம்.  சொந்த நிலத்தின் விளைச்சலை உனக்காக தூக்கிக் கொண்டு வந்திருக்கான்..  பேத்திக்கு கல்யாண்ம்ன்னு வேறே நல்ல சேதியோடு வந்திருக்கான்..   சொந்த பந்தத்தை அழைக்கிற மாதிரி உனக்கும் பத்திரிகை வைக்கறதா சொல்றான்.. அவனைப் போய் ஏமாத்த நினைக்கிறையே!  சீ..  நீ எல்லாம் ஒரு மனுஷனா?'  என்று மனசின் இன்னொரு பகுதி காறித் துப்பியது.

"என்னங்க..  ராகவையா வெயிட்டிங்..  அவனும் இன்னும் நாலு இடத்துக்குப் போகணுமிலே?"   என்று ஹாலிலிருந்து ஜானகியின் குரல்..

சட்டென்று ஒரு முடிவுக்கு  வந்தேன்.

நெருப்புச் சுட்ட அந்த நோட்டை  பிளாஸ்டிக்  டப்பாவிலேயே வைத்து விட்டு  பார்த்து பார்த்து  புதிய நோட்டுகளாக  நான்கு  நோட்டுகள் கட்டிலிருந்து உருவிக் கொண்டு வெளியே வந்தேன்.   ஜானகி,    ராகவையாவிடம் அவன் பேத்தி கல்யாண நிச்சயப்பு  விஷயங்களைக் கேட்டுக்  கொண்டி ருந்தாள்.

நான் வந்ததும், "பாவம்.. எவ்வளவு நேரம் அவனுந்தான் நிப்பான்?"  என்று அவள் கரிசனம் கூடியது.  அந்த எவ்வளவு நேரத்தில்  எனக்குள்  எத்தனை போராட்டம் என்று நினைத்துக் கொண்டேன்.

நான்  கொடுத்த நோட்டுகளை வாங்கிக் கொண்டு ஒரு கும்பிடு போட்டு விட்டு ராகவையா  போய் விட்டான்.

உள்ளே போனேன்.    வெளியே போனால் எடுத்துச் செல்லும் பர்ஸில்   கைச்செலவுக்காக  ஐந்து ஐநூறு ரூபா நோட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டு   அதன் மத்தியில்  அந்த நெருப்பு பட்ட  நோட்டை நுழைத்து வைத்தேன்..  யாருக்கானும் கொடுக்கும் பொழுது நோட்டோடு நோட்டாக சேர்த்துக் கொடுத்து விடலாம் என்பதற்காக இந்த ஏற்பாடு.


மாலை வந்ததும்  கடைத்தெரு பக்கம் போய்  இந்த செல்லா  நோட்டை யாரிடமாவது தள்ளி விடலாமா என்று மனசில்  நமநம.   "கடைத்தெரு போறேன்..  ஏதாவது வேணுமா?" என்று ஜானகியிடம் கேட்டதற்கு  "நாளைக்கு வெள்ளிக்கிழமை அல்லவா?.. பூஜைக்கு வேணும்..  வாழைப்பழம் கைவசம் இருக்கு..   பாக்கு கூட இருக்கு..  ரெண்டு ரூபாவுக்கு வெற்றிலை மட்டும்  வாங்கி வாங்க.."  என்றாள்.

இருநூறு, முன்னூறு செலவு வைக்கிற மாதிரி இவள்   ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்தால் இரண்டு ரூபாவுக்கு சொல்கிறாளே  என்று எரிச்சலாக வந்தது.   ஒருவழியாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே வந்தேன்.

காற்று  சுகமாக இருந்தது, மனசுக்கு இதமாக இருந்தது.  ஒரு ஐநூறு ரூபா ஏமாந்ததற்கு இந்த அளவு மனச் சலிப்பு கூடாது என்று தோன்றியது.   'வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டும்; அது இருந்தால்  எவ்வளவு வேணுமானாலும்  சம்பாதித்துக் கொள்ளலாம்..'  என்று அனுபவ ஞானம் போல  ஒரு சந்நியாசி நேற்று டிவியில் சொன்னது நினைவுக்கு  வந்து  செயற்கையாக  ஒரு சந்தோஷ வேட்கையை மனசுக்குள்   உற்பத்தி செய்து கொண்டேன்.  வலிய சிரிப்பை வரவழைத்துக் கொள்வது  கஷ்டமான காரியம் தான்.   நாகேஷே அது பற்றிச் சொன்னதாக  ராத்திரி மலரும்  பூ பத்திரிகையில் பெட்டிச் செய்தி படித்திருக்கேன்.    அதை நினைத்த பொழுதே  இயல்பாகவே சிரிப்பு வந்து விட்டது.  அதே மூடில்  கடைத்தெருவில் காசுக் கடைத் தெரு பக்கம் ஒரு உலா வந்தேன்.

எங்கள் ஊர் முரளி ஸ்வீட்  பிரபலமான கடை.  காசுக்கடைத் தெருவில் தான் இருக்கிறது.  நகைகளுக்கும் ஸ்வீட்களுக்கும் என்ன பந்தமோ தெரியவில்லை.   ஆனால் முரளிக்கு அது பற்றித் தெரிந்திருக்கிறது.  அதனால்  தான் காசுக்கடை தெருவில்  லாலா கடை வைத்திருக்கிறார். 


இனிப்புக் கடையில்  வழக்கம் போலவே செம  நெரிசல்.  முரளி கடை இனிப்பு என்றால் அது என்னவோ பைத்தியமாக அலைகிறார்கள்.   தினப்படிக்கு எவ்வளவு லாபம் என்று கணக்கு போட நேரமில்லாத வியாபாரம்.  இந்த நோட்டுக்கு இந்த மாதிரி காசில் புரள்கிற ஆளிடம் போய்ச் சேருவது தான் சரியான இடம் என்று தீர்மானித்து விட்டேன்.  பத்தோடு பதினொன்று கூட இல்லை  ஆயிரமாயிரத்தோடு ஒன்றாக இந்த  நோட்டும் சேர்ந்தால் இதை மாற்றிக் கொள்ள அவர்களுக்கு ஆயிரம் வழிகள் இருக்கும் என்ற எண்ணம்.

கூட்ட நெரிசலில் பர்சை பறிகொடுத்து விடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடனேயே படியேறினேன்..   எனக்கு முன்னால்  நின்றிருந்த இரண்டு  வரிசையை ஒரு வழியாக சமாளித்து  விதவிதமான இனிப்புகள் நிரப்பப்பட்ட கண்ணாடி கேஸை ஒரு வழியாக நெருங்கி விட்டேன்.    எனக்கு வாயில் போட்டால் கரையும்  நைஸ் மைசூர்பா ரொம்ப இஷ்டம்.  ஆனால் ஜானகியோ  'என்னங்க, எப்போ பார்த்தாலும் மைசூர்பாகு?' என்று  நான் லாலா கடைகளில் மைசூர் பாகு வாங்கிக் கொண்டு வந்தால் சலித்துக் கொள்வாள்.  கடை ஸ்வீட்டுகளை வாங்கினால்  வீட்டில் செய்வதற்கு சிரமமான ஐட்டமாக இருக்க வேண்டும்  என்பது அவள் பாலிஸி;   அதனால் அவள்  விருப்பப்படி என்ன தேரும் என்று  நோட்டமிட்டேன்.  ஒன்றும் பிடிபடவில்லை.

இந்த ஆள் எதையாவது சட்டுபுட்டுனு வாங்கி நகர்ந்தால் தேவலை என்று தோன்றியது போலும்.  கடைப்பையன் ஒருவன் எக்கு தப்பாக ஆராய்ந்து கொண்டிருந்த என்னிடம் நெருங்கி "என்ன ஸார் வேணும்?" என்றான்.


தடிமனான வெண் சுருட்டு போல ஒரு  அயிட்டம்;  அதன்  நடு மத்தியில் பச்சையாக  ஒரு வட்டம் போல  உருட்டி வைக்கப்பட்டிருந்த   இனிப்பு  சமாச்சாரத்தைச் சுட்டிக் காட்டி, விலை கேட்டேன்.   அவன் கீழே குனிந்து பார்த்து விட்டு,  "காஜூ பிஸ்தா ரோலா?... கிலோ  800 ரூபா" என்றான்.


சட்டென்று "அரை கிலோ கொடு.." என்றேன்.  குறைந்த பட்சம் மூன்று ஐந்நூறு ரூபா நோட்டாவது  கவுண்ட்டரில்  தருவது நல்லது என்று தோன்றியது.  அப்போத்தான் 'அந்த' நோட்டையும் மூன்றில் ஒன்றாகச் சேர்த்துத் தர வாகாக இருக்கும்.   அந்த ஞானத்தில், "அப்புறம்  ஒரு கிலோ மிக்ஸர்.  ரிப்பன் பக்கோடா  அரை கிலோ.;" என்று ஹோட்டல் சர்வர் போல விடுவிடு வேகத்தில் அடுக்கினேன்.

"ஸ்பெஷல்  மிக்ஸராவே போட்டுடட்டுமா?" என்றான் பையன்.

"அதென்ன ஸ்பெஷல்?"

"ஸ்பெஷல்ன்னா  அதிலே முந்திரிப்பருப்பெல்லாம் கணிசமா போட்டிருப்போம்.."

"ஓ.  அப்படியா?.. ஸ்பெஷலாகவே  போட்டுடு.."

"மூணாவது அயிட்டம் என்ன சொன்னீங்க?"

"ரிப்பன் பக்கோடா..."  என்று கண்ணாடி தடுப்புக்குள் இருந்ததைக் காட்டினேன்.

"ஓ..  நாடாவா?"  என்று நான் குறிப்பிட்டதைத் தெரிந்து கொண்டான் பையன்.

எனக்கோ  'அந்த' கரைபடிந்த ஐநூறு ரூபாய் நோட்டை வெகு சாமார்த்தியமாக மாற்றுவதிலேயே நினைப்பு பூராவும் மண்டிக் கிடந்தது.  திட்டமிட்ட ப்ளான் படி  நோட்டோடு நோட்டாக சேர்த்துக் கொடுத்து விட வேண்டும்  என்பதே ஜபித்தலாக இருந்தது.

ஐந்தே நிமிஷம் தான்.  எடை மிஷினில் நிறுத்து  பைகளில் போட்டு வாய்ப் பகுதியில் லேபிள் ஒட்டி,  ஒரு பில்லை மட்டும் அதோடு பின் பண்ணி இன்னொரு பில்லை  என் கையில் தந்து....  நான்  கேஷ் கவுண்ட்டருக்கு வந்து விட்டேன்.
                                               
மொத்தம்  ஆயிரத்து முன்னூறு ரூபா பில் தொகை..  மூன்று  ஐநூறில் 'அந்த' நோட்டும் ஒன்றாக இருந்தால் பாக்கி இருநூறு வாங்கிக் கொண்டு  லாலா கடை விட்டு  லல்லல்லா பாடிக் கொண்டே தெருவுக்கு வந்து விடலாம்  என்று மனம் வெகுவாக கணக்கு போட்டு தீர்மானித்திருந்தது.

[தொடரும் ]

43 கருத்துகள்:

  1. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லா நாட்களும் இறைவன் அருளால்

    நிறைவோடு இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. ஜீவி சாரின் கதை.அனுபவ பூர்வமாக இருக்கிறது.
    இத்தனை கணக்காக எல்லாவற்றையும்
    எழுதி இருக்கிறாரே.... பாங்க் போய் வந்த உணர்வு.
    ஆஹா அந்த சுதந்திர நாட்கள்.
    கறை படிந்த நோட்டு எத்தனை
    பாடுபடுகிறது. பாடு படுத்துகிறது!!!!
    நெல்லூர் அரிசி வீட்டுக்கு வந்த காலங்கள்.
    அப்போது 300 ரூபாய்க்கு 75 கிலோ மூட்டை
    அரிசி கிடைத்த காலம்.
    அதன் பிறகு அரிசிக்கணக்கு மறந்து போய் விட்டது.

    அருமையாக மனப் போராட்டங்களை விவரித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வல்லிம்மா.

      //இத்தனை கணக்காக எல்லாவற்றையும்
      எழுதி இருக்கிறாரே....//

      இந்தக் கதை சமீபத்தில் தான் எழுதியது. சென்ற ஜூன் மாதம் என்று நினைக்கிறேன். எங்கள் பிளாக்கிற்காகவே எழுதியது. Exclusively for Engal blog. அதனால் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஃபிரியாக எழுத முடிந்தது.

      //பாங்க் போய் வந்த உணர்வு.//

      என் மாம்பலம் வாழ்க்கையில் அத்தனை வங்கிகளும் பக்கத்துப் பக்கத்திலேயே.
      அதனால் நேரடி விசிட் ரொம்ப ரொம்ப செளகரியமாக இருந்தது. வங்கிக்குப் போவது வாக்கிங் போவது போல.

      //கறை படிந்த நோட்டு எத்தனை
      பாடுபடுகிறது. பாடு படுத்துகிறது!!!! //

      போகப்போகத் தெரியும். அந்த நோட்டின் வாசனை (மகிமை) புரியும்.

      அந்த நோட்டு தான் இந்தக் கதையின் நாயகன். அந்த நோட்டின் கதை தான் இந்தக் கதையும் கூட.

      உங்களுக்கு இந்தக் கதை வழக்கம் போல பிடிக்கும். தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.

      இந்தப் பகுதியை வாசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, சகோ. அன்பான வணக்கம்.

      எல்லாம் நலமே விளைய வேண்டிக் கொள்வோம். நன்றி.

      நீக்கு
  5. கணக்கு போட்ட மனதுக்கு முரளியின் கணக்கு என்னவோ ?

    சுவாரஸ்யம் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யம் தொடரும் தேவகோட்டையாரே!

      அடுத்த செவ்வாய் அடுத்த பகுதி. வந்து வாசித்துக் கருத்திட்டு விடுங்கள். நன்றி.

      நீக்கு
  6. சுவாரசியமான கதை. நோட்டை லாலா கடையில் கொடுத்தாலும் அங்கே சுத்தி இங்கே சுத்தி மறுபடி அவரிடமே வந்துடப் போறது! :)))) நாங்க இம்மாதிரி நோட்டுக்களை வங்கியிலேயே திரும்பக் கொடுத்துட்டு மாற்றி விடுவோம். அரசாங்கம் இதுக்குனு சட்டமே போட்டிருக்கே! பொதுமக்கள் கொண்டு வரும் கிழிந்த நோட்டு, செல்லாத நோட்டு, எழுதியவை போன்றவற்றை மாற்றிப் புது நோட்டுக் கொடுக்கணும்னு! அநேகமாக் கொடுத்துடுவாங்க. பிரச்னை ஏதும் இருந்ததில்லை. கூட்ட நேரமானால் தான் கடுப்படிப்பாங்க! அப்படியும் கிடைச்சுடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்கிற மாதிரி அவரிடமே வந்துடப் போறது என்பது கொஞ்சம் ஈஸியான முடிவு. ஆனால் கதையை கொஞ்சம் ஒடித்து திருப்பி வளைத்துத் தானே நமக்குப் பழக்கம்? அதனால் பார்க்கலாம்.

      'பணத்தை எண்ணி சரிபார்த்துச் செல்லவும்' என்ற கேஷ் கவுண்ட்டர் பக்கத்திலேயே எல்லா வங்கிகளிலும் ஒரு சின்ன போர்டு வைத்திருப்பார்கள்.
      அந்தக் காலம் என்றால், எந்த தவறுக்கும் நாங்கள் ஜவாப்தாரியல்ல என்ற வரி சேர்ந்திருக்கும். நமக்கென்று ஒரு நியாயம் இருப்பதால் வீட்டுக்கு எடுத்துப் போன பிறகு திருப்பி கொண்டு வந்து கொடுத்து குறை சொல்லுதல் நமக்கும் அழகல்ல. சட்டப்படி பார்த்தால் வங்கியை அதற்குப் பொறுப்பாக்கவும் முடியாது. இருந்தாலும் திருப்பித் தருவதற்கு சில நடைமுறைகள் உண்டு. சான்றுகளோடு கைப்பட கடிதம் எழுதித் தந்து மாற்றிக் கொள்ளலாம். கடைசி கட்டம் ரிசர்வ் வங்கியை அணுகுதல். எந்த இடத்திலும் தான் நம் காரியங்களை இலகுவாக சாதித்துக் கொள்ள நமக்கென்று யாரைவது பிடித்து வைத்திருக்கிறோமே! அவர்கள் மூலம் சாதித்துக் கொள்ளலாம். அப்படியும் இல்லை என்றால் கொஞ்சம் குனிந்து, குழைந்து போக வேண்டும், அவ்வளவு தான்! அரசாங்க சட்டம் எல்லாம் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள் தான்! குறைபாடு உள்ள கரன்ஸிகளை மாற்றிக் கொள்வதற்கு சில வழி முறைகள் உண்டு. அதன் படி தான் மாற்றிக் கொள்ள வேண்டும். 'நான் மாற்றினேனே' என்றால் உங்களுக்கு இருக்கும் சாமர்த்தியம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்று தான் கொள்ள வேண்டும்.

      அரசாங்க சட்டம் பற்றி இதை வாசிக்கும் வங்கிகள் சம்பந்தப்பட்ட யாராவது தான் விளக்க வேண்டும்.

      நீக்கு
    2. என் தம்பியிடம் கேட்டுச் சொல்கிறேன். ஆனால் வங்கிகளில் பழைய நோட்டை வாங்குவதற்கு மறுப்பதில்லை. இப்போக்கூடச் சில நாட்கள் முன்னர் வீட்டுக்கு எதிரே இருக்கும் HDFC வங்கியில் சில நோட்டுக்களை மாற்ற நேர்ந்தது. நீங்க சொன்னாப்போல் எல்லாம் நிபந்தனைகள் போட்டுப் பார்க்கலை. முன்னால் இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் அப்படி இல்லை. கடிதம் ஏதும் எழுதிக் கொடுத்ததில்லை. ஆனால் கொஞ்சம் சாவகாசமாக மத்தியானங்களில் போனால் கிடைச்சுடும். காலை அவசரத்தில் கொஞ்சம் கஷ்டம் தான்.

      நீக்கு
    3. கேஷ் கவுண்ட்டரிலிருந்து பெற்ற பொழுதே சரி பார்த்து விரும்பாத நோட்டை மாற்றிக் கொண்டால் பிரச்னையே இல்லை. வீட்டுக்கு எடுத்துப் போய் பிறகு சாவகாசமாய் மாற்றிக் கொண்டால் தான் அவர்களுக்கும் அசெளகரியம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியே முகம் சுளிக்காமல் உங்களிடம் வாங்கிக் கொண்டால், இன்னொருவருக்குக் கொடுக்கும் நோட்டுகளில் அதைக் கலந்து விடுவார்கள். ஒவ்வொரு நோட்டு கட்டும் செக் செய்து கையெழுத்திடப் பட்டிருக்கும். நீங்கள் புகார் கொடுக்கும் பொழுது தான் ஏன் அவர்கள் சரியாகப் பரிசோதித்து கையெழுத்திடவில்லை என்ற கேள்வியே எழுகிறது. இப்பொழுது உங்களூக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
      இந்தக் கதையில் வருவது பழைய நோட்டு அல்ல. சிகரெட் தீயால் பொசுக்கப் பட்ட நோட்டு. வீட்டுக்குப் போன பிறகு தான் அதைப் பார்க்கிறார். நீங்கள் சொல்வதற்கும் இதற்கும் இருக்கும் வித்தியாசங்கள் உங்களுக்கேத் தெரியும்.

      நீக்கு
    4. :)))))))))) புகாரெல்லாம் கொடுத்ததே இல்லை. யாரோ கொடுத்த நோட்டுக்களைக் கூட மாற்றி இருக்கோம். எதுக்கும் எஸ்பிஐயில் இருந்த/இப்போதும் இருக்கும் என் தம்பியையும் கேட்கிறேன். எப்படிப் பட்ட நோட்டானாலும் வங்கியில் மாற்றி இருக்கோம். சமயங்களில் கடைத்தெருவில், அல்லது காய்கறிக்காரர்கள்னு கொடுத்திருப்பாங்க! அவற்றையும் மாற்றி இருக்கோம்.

      நீக்கு
    5. இத்தோடு முடிச்சுக்கறேன். :)))))

      நீக்கு
    6. அடுத்த பகுதி இன்னும் விசேஷம். வந்திடுங்க :))

      நீக்கு
  7. ரொம்ப நீளமாய்ப் போனாலும் எண்ண ஓட்டங்கள் படிக்கச் சுவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, கீதாம்மா. அந்த சுவைக்காகத் தான் நீளம்.

      'ஏம்பா.. சட்டுபுட்டுன்னு அந்த சிலையை செதுக்கிட்டு அடுத்த சிலை வேலையை ஆரம்பிக்கறது தானே?"

      "இதோ முடிச்சிடலாங்க.. இந்த அம்மன் சிலை கழுத்து காசு மாலைலே கொஞ்சம் நகாசு வேலை செஞ்சுடலாம்ன்னு பாக்கறேன். அதான்..."

      நீக்கு
  8. என்னோட புத்தக வெளியீடு பற்றிப் போட்ட பதிவுக்கு யாருமே வரலையே? அடுத்த பதிவை உடனே போட்டுவிட்டதாலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இந்த கமெண்ட்டைப் பார்த்தபின் சென்று பார்த்தேன்.  அதற்குள் அடுத்த பதிவை நீங்கள் வெளியிட்டுவிட்டு படியால் நிறைய பேர்கள் பார்க்க முடியாமல் போயிருக்கலாம்.  வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.

      நீக்கு
    2. நான் முகநூலில் வாழ்த்தி விட்டேன். 

      நீக்கு
    3. நான் பார்த்து படிச்சிட்டுத் தானே மறுவேலை பார்த்தேன்?. வெங்கட்ஜியின் உதவியைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் படிச்சதும், அந்த வெங்கட்ஜியே தன் தளத்தில் இந்த நூலுக்கு ஒரு அறிமுகம் எழுதி அவர் வட்டத்தில் பிரபலப்படுத்தலாமே என்றும் நினைத்துக் கொண்டேன். ஏன்னா,
      தொடர்ந்து பலர் எழுதும் இந்த மாதிரி விமர்சன அறிமுகங்கள் அவர் தளத்தில் வந்து கொண்டிருப்பதால் தான்.

      நீக்கு
  9. கறை படிந்த்ச் நோட்டை
    எப்படியாவது கை மாற்றி விடவேண்டும்...
    இயல்பான மனப் போராட்டம்...

    ஜீவி அண்ணாவின் கை வண்ணமே தனி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பி துரையின் மன வண்ணமோ அப்பழுக்கற்றது.

      எங்கள் பிளாக் வாட்ஸாப் க்ரூப்பில் உங்களிடமிருந்து ஒரு எதிர்பார்ப்பைச் சொல்லியிருந்தேனே, பார்த்தீர்களா?..

      நீக்கு
    2. எங்கள் பிளாக் வாட்ஸாப் குருப்பில்
      நான் இணைந்து கொள்ளவில்லையே!..

      நீக்கு
  10. அந்த ரூபாய் நோட்டு சென்றுவிட்டதா? என்ற ஆவல் அதிகரிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ரூபாய் நோட்டு என்னிடம் தான் இருக்கிறது. அடுத்த பகுதியில் படம் எடுத்துப் போடுகிறேன், ஐயா.

      நீக்கு
  11. வங்கிக்குச் சென்று பணம் எடுத்த நாட்களெல்லாம் மலை ஏறி விட்டன. ஏ.டி.எம்., நெட் ட்ரான்ஸஃபர் என்று மாறி விட்டோம். எனவே பழைய நாட்களை நினைக்க வைத்தது கதை. வங்கிகளுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இருந்த தொடர்பு அற்று போனது கொஞ்சம் வருத்தம்தான் .இது போன்ற நோட்டுகளை வங்கியிலேயே கொடுத்து மாற்றி விடுவேன். அங்கு சுற்றி, இங்கு சுற்றி மீண்டும் இவரிடமே வந்து விடுமோ? 
     

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது கதை பற்ற்ய கருத்தல்ல முடல் பகுதியை படித்ததும் தோன்றிய எண்ணம்டான் ஏமாற்றப்பட்டடுபோல் தானும் ஏமாற்றுவது தவறாகது என்று நினைப்பது மனித இயல்புதானே

      நீக்கு
    2. @ பா.வெ.

      //எனவே பழைய நாட்களை நினைக்க வைத்தது கதை. //

      பா.வெ. இப்பொழுதும் நான் அப்படித் தான் இருக்கிறேன். ஏனென்றால் அதற்கான அடிப்படை தேவை இருக்கிறது. எது எதற்கு நெட் வழி பண மாற்றலோ, டெபிட் கார்டோ, காசோலையோ அது அதற்கு அது.

      //இது போன்ற நோட்டுகளை வங்கியிலேயே கொடுத்து மாற்றி விடுவேன்..//

      அது பற்றிய அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ளுங்களேன். இந்த முதல் அத்தியாய கதை போக்குக்கும் அதற்கும் என்ன வித்தியாசம் என்று சொல்கிறேன்.

      //அங்கு சுற்றி, இங்கு சுற்றி மீண்டும் இவரிடமே வந்து விடுமோ? //

      இதையே சொன்ன கீதாம்மாவுக்கும் மறுமொழி தந்திருக்கிறேன்.

      நீக்கு
    3. ஜிஎம்பீ ஐயா, உங்கள் அவதானிப்பு அற்புதம்.

      இந்த முதல் பகுதியை வாசித்த அனுபவிப்பில் வெளிப்பட்ட ஒரே பின்னூட்டம் உங்களது தான். நேரடியாக கதையோடு சம்பந்தப்பட்டதைச் சொல்லியிருக்கிறீர்கள்.

      //தான் ஏமாற்றப்பட்டது போல், தானும் ஏமாற்றுவது தவறாகாது என்று நினைப்பது மனித இயல்பு தானே?//

      மாணிக்க வரிகள் ஐயா. மனித இயல்பை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். தலை வணங்குகிறேன்.

      நீக்கு
    4. நாங்க முக்கியமானவற்றுக்கு ஏடிஎம், இணைய வழி என்று வைத்திருந்தாலும் சில சமயங்களில் வங்கி மூலமும் பணம் எடுப்பது உண்டு. அப்போது நோட்டுக் கிழிந்திருந்தாலோ, எண்ணெய்க்கறை இருந்தாலோ உடனே கவனித்துக் கொடுத்துவிட்டு மாற்றிக் கொண்டதும் உண்டு.

      நீக்கு
  12. // இந்த மாதிரி காசில் புரள்கிற ஆளிடம் போய்ச் சேருவது தான் சரியான இடம் என்று தீர்மானித்து விட்டேன். //

    ஓஹோ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஓஹோக்கு அர்த்தம் என்ன டி.டி.? அப்படியா என்று அர்த்தமா?..

      இல்லை, அப்படியா நினைக்கிறீர்கள் என்று (எதிர்மறையில்) அர்த்தமா?..

      அப்படியா நினைக்கிறீர்கள் என்பது உங்கள் எண்ணம் என்றால் அதற்கான காரணத்தை அடுத்த வரியிலேயே விளக்கிச் சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு
  13. எங்கள் வீட்டில் கிழிந்த, மஞ்சள்கரை பட்ட நோட்டுக்கள் எல்லாம் பஸ்ஸில் போகும் போது, கடைத்தெருவில் கொடுத்து விடுவார்கள். அதை எல்லாம் சேர்த்து வைத்து வங்கிக்கு போகும் போது மாற்றுவோம்.(ஏமாற்ற நல்ல ஆட்கள் கிடைத்து விட்டது என்று நினைப்பார்கள் போலும்)

    கதை நன்றாக இருக்கிறது. அந்த நோட்டு அப்படியே அவரிடமே இருக்கும் எங்கும் போகாது என்று நினைக்கிறேன் .நாம் ஏமாந்து வாங்கினாலும் அடுத்தவரை ஏமாற்ற மனம் அஞ்சும்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஜீவி சகோதரரே

    கதை மிகவும் நன்றாக உள்ளது. ஒரு செல்லாத பணம் நம்மிடம் வந்து விட்டால், அதை யாரிடமாவது எப்படியும் (தள்ளி) கொடுத்து விட வேண்டுமென்ற மனப்போராட்டம் கதையில் இயல்பாக காண்பிக்கபடுகிறது. அடுத்த வாரம் அந்த ஐநூறு ரூபாய் நோட்டு இவரின் (கதை நாயகரின்) கை மாறியோ,அல்லது மாறாமலோ யாருக்காகவெல்லாம் மீண்டும் சுற்றப் போகிறது என்பதைக் காண ஆவலாக காத்திருக்கிறேன். இப்படி கதையுடன் படிக்கும் அனைவருமே ஒன்றிப் போகும்படி எழுதும் உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்களுடன் பாராட்டுக்கள்.

    கதையை மாலைக்குள் படித்து விட்டேன். இங்கு ஒரே மழையாக உள்ளதால்,கரண்ட் நெட் தொடர்புகள் பிரச்சனை தந்து விட்டது. அதனால் உடனே கருத்திட முடியாமல் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்க்கம், சகோ. எங்கே காணோம் என்று நானும் நினைத்திருந்தேன். முன் பின்னூட்டத்தைப் பார்த்து எப்படியும் வந்து விடுவீர்கள் என்ற நினைப்பும் கூடவே இருந்தது. மின்சாரம் இல்லாது போயிற்று என்ற செய்தி தெரிந்து எனக்கும் மிகவும் வருத்தமாக போய்விட்டது.

      'உருண்டோடிடும் பணம் காசு' என்று அந்நாளைய திரைப்பாடல் வரி ஒன்று உண்டல்லவா?.. பணத்தின் இயல்பும் அது படைக்கப்பட்டதின் காரணமும் அதுவே தான். பணம் யாரிடமும் தங்கி பாசிப்பிடித்தது போன்ற நிலை அடையக் கூடாது. அது சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது அதன் வாழ்வுக்கான விதி. பொருளாதார உண்மை.

      ஒரு தமிழ்த் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. ஆயிரம் ரூபாய் என்று பெயர் என்று நினைவு. சாவித்திரி நாயகியாக நடித்த படம். ஒரு ஏழைக்கு ஆயிரம் ரூபாய் அதிர்ஷ்ட வசமாய் கிடைக்க அவர் என்னவெல்லாம் அவஸ்தைகள் படுகிறார் என்பதைத் துல்லியமாக எடுத்துரைத்த படம்.

      தங்கள் வாசிப்பு அனுபவத்திற்கு நன்றி. அடுத்த செவ்வாய், அடுத்த பகுதியில் மீண்டும் தொடரலாம். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி, சகோதரி..

      நீக்கு
  15. வாங்க, கோமதிம்மா..

    பொதுவாக இந்த மாதிரி ரூபாய் நோட்டுகள் வகையில் நாம் ஏமாறுவது நமது கவனக்குறைவால் தான். அல்லது 'அதெல்லாம் மாறும் அம்மா. வைச்சிக்கங்க, வேறே காசு எங்கிட்டே இல்லே. நா எங்கே நோட்டா அச்சடிக்கறேன்.. உங்களை மாதிரி ஒருத்தர் கொடுத்ததைத் தான் நான் ஒங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்..' என்று ரொம்ப இயல்பாக சிறு வியாபாரிகள் சொல்வார்கள்.

    மனசறிந்து அடுத்தவரை ஏமாற்ற மனம் இடம் கொடுப்பதில்லை என்பது உண்மையான உண்மை. பத்து ரூபாய் நாம் ஏமாற்றினால் இருபது ரூபாய் நமக்கு இழப்பு ஏற்படும் என்று நினைப்பது அடுத்த நிலை. ஏனென்றால் நாம் அப்படியே வளர்க்கப் பட்டிருக்கிறோம்.

    'ஏமாறாதே, ஏமாறாதே.. ஏமாற்றாதே ஏமாற்றாதே...' என்பது இரண்டும் நடக்காது இருப்பதற்கான ஒரு சாதுர்யமான கவிதை வரி. அவ்வளவு தான். ஆனால் நாட்டில் என்னவோ இரண்டும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  16. தொடர்வதற்கு நன்றி, கரந்தையரே!

    நாளை அடுத்த பகுதி. வாசித்து விடவும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!