திங்கள், 19 அக்டோபர், 2020

"திங்க"க்கிழமை : சிதம்பரம் கொத்ஸு - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 


சிதம்பரம் கொத்ஸு 



தேவையான பொருள்கள்:



கத்திரிக்காய்(பெரிய மங்களூர் 
கத்தரிக்காயாக இருந்தால்)           - 1
சாதாரண கத்தரிக்காயாக இருந்தால்   - 4 அல்லது 5
புளி  -  எலுமிச்சங்காய் அளவு 
மிளகாய் வற்றல்  -  5
கொத்துமல்லி விரை   -  1 டேபிள் ஸ்பூன் 
கடலைப் பருப்பு   -  1 டேபிள் ஸ்பூன் 
பெருங்காயம்  -  ஒரு சிறு கட்டி 
நல்லெண்ணய் அல்லது சமையல் எண்ணெய் - 4 குழிக்கரண்டி 

தாளிக்க: 

எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை.

எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

இதையெல்லாம் ரெடியாக எடுத்துக் கொண்டு விட்டீர்களா? அவைகளை ஒரு பக்கம் வைத்து விட்டு புளியை வெந்நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஏன் வெந்நீர்? விரைவில் ஊறி விடும், கரைப்பதும் எளிதாக இருக்கும். அது ஒரு பக்கம் ஊறிக் கொண்டிருக்கட்டும், கத்தரிக்காய்களை அலம்பி விட்டு(இதைக் கூட சொல்ல வேண்டுமா? என்று கேட்காதீர்கள், இந்த கொரோனா காலத்தில் கைகளை மட்டுமல்ல காய்களையும் நன்றாக கழுவ வேண்டும்) கரைத்த புளி ஜலத்தில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.  புளி ஜலம் அதிகமாகாமல் கத்தரிக்காய் முழுகும் வரை இருந்தால் போதும். 




கத்தரிக்காய் வெந்து கொண்டிருக்கட்டும், இன்னொரு அடுப்பில் ஒரு சிறிய கடாயில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, முதலில் கடலைப் பருப்பு,  பெருங்காயம் இவைகளை வறுத்துக் கொண்டு பின்னர் கொத்தமல்லி விரை, 
மிளகாய் வற்றல் இவைகளை சிவக்க வறுத்து அவைகளை மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். 


இதற்குள் கத்தரிக்காய்கள் வெந்திருக்கும்.  ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகை வெடிக்கவிட்டு, வெந்த கத்தரிக்காய்களை அதில் போட்டு, நன்றாக மசிக்கவும். பொடித்து வைத்திருக்கும் பொடியை போட்டு சேர்த்து கிளறி இறக்கி வைத்து விடலாம். 





மிக மிக சுவையான இந்த கொத்ஸுவை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை தயிர் சாதம் போன்றவைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். எண்ணெய் நிறைய விடுவதால்  வெளியில் வைத்தாலும் கூட ஒரு வாரம் வரை கெட்டுப்போகாது. குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தினால் அதற்கு மேலும் வைத்துக் கொள்ளலாம். 

சிலர் கடுகு தாளித்தவுடன் பொடியாக அரிந்த வெங்காயத்தை முதலில் வதக்கி விட்டு பின்னர் கத்தரிக்காயை சேர்த்து வதக்குவர். 

========

மின்நிலா 022 - இந்த வார இதழ் :   >>>>> LINK  

========
மின்நிலா தீபாவளி சிறப்பிதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டீர்களா?  மின்னஞ்சல் : engalblog@gmail.com 
========

56 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இந்த நவராத்திரி நாட்களிலும் மற்ற எல்லா
    நாட்களிலும் இறைவன் என்றும் துணை இருக்க வேண்டும்.
    பட்டீஸ்வரம் துர்கா தேவி ,
    தன் படைகளைக் கொண்டு கொடிய
    நோய்களை விலக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அன்பு பானுமதியின் சிதம்பரம் கொத்சு
    வண்ணத்துடன் பளபளக்கிறது.

    சுவையும் நன்றாகத்தான் இருக்கும்.
    செய்முறை அருமையாகச் சொல்லி இருக்கிறார்.
    சுடச் சுடப் பொங்கலும் இருந்தால்
    ரசித்து ருசிக்கலாம். நன்றிமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      உண்மை.. சுடச்சுட சற்று தளர நெய் மணத்துடன் இருக்கும் வெண்பொங்கலுக்கு இந்த கத்திரி கொத்ஸு நல்ல ஜோடி. காலையிலேயே காப்பிக்கு முன்பாகவே பசியை தூண்டி விட்டு விட்டீர்கள். ஹா.ஹா. பானுமதி சகோதரிக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. தீபாவளிக்கு முன்பே பொங்கலா - ! பசியைத் தூண்டுகிறீர்களே!

      நீக்கு
    3. அரிசிப் பொங்கல் போன வாரம் செய்து சுவைத்ததினால், இன்று இங்கு ரவாப் பொங்கல். மழை வேறு காலையிலிருந்தே கொட்டிக் கொண்டுள்ளது. மழைக்கேற்ற மிளகு சீரகம், இஞ்சி...

      நீக்கு
    4. நேற்று இரவு வெண்பொங்கலும், முள்ளங்கி போட்ட வெங்காய சாம்பாரும் (தக்காளி இல்லாமல்), சாபுதானா வடையும், ஒரு இனிப்பும் விருந்தினர்களுக்குச் செய்தேன். மகள், கீரை, கார்ன் போட்டு சாண்ட்விச் செய்திருந்தாள். வேற வழியில்லாமல் 6 மணிக்கு மேல் சாப்பிடுவதில்லை என்பதைத் தளர்த்த வேண்டியதாகிவிட்டது.

      நேற்று மாலை 5 1/2 மணிக்கு காமாட்சி அம்மாவிடமிருந்து மெயில். அவருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் என அறிந்து மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிட்டது. (காணாமல்போன அ. வையும் ஆங்காங்கு புதுப் பட்டத்தோடு பார்க்கிறேன்)

      இந்த இணையம் தரும் உறவுகள்தான் எத்தனை

      நீக்கு
    5. ரவா பொங்கலுக்கு எனக்குப் பிடித்த சைட் டிஷ் கார எலுமி ஊறுகாய் சாறு.

      கமலா ஹரிஹரன் அவர்கள் சொல்வது போல மழை தூறிக்கொண்டே இருக்கு. என்ன பண்ணச் சொல்லலாம் என்று யோசனை. காலைல சாப்பாடு (குழம்பு கூட்டு கரேமது) பண்ணாம டிபன் சாப்பிட்டால் அப்புறம் காய் சாப்பிடவே வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. யோசிக்கிறேன்

      நீக்கு
    6. நன்றி வல்லி அக்கா. பொங்கலுக்கு மட்டுமல்ல சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் செய்முறையில் சிதம்பரம் கொத்ஸு நன்றாக உள்ளது. படங்கள் பசியை தூண்டுகிறது. நானும் வெங்காயம் இல்லாமல்தான் இதைச் செய்வேன். வெங்காயம் சேர்த்தால், "எல்லா புகழும் தனக்கே" என அது சொந்தம் கொண்டாடி விடும். அருமையான ரெசிபி. பானுமதி சகோதரிக்கு பாராட்டுகள்.பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. கொத்ஸு பார்க்க அருமையாக இருக்கிறது எங்க வீட்டில் இதை கத்தரிக்காய் கொத்ஸு - என்று சொல்லுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கத்தரிக்காய் கொத்ஸீதான்,சிதம்பரம் நடராஜருக்கு சம்பா அரிசி சாதத்தோடு, நைவேத்தியமாக படைக்கப் படுவதால் இந்தப் பெயர்.

      நீக்கு
  6. என்றென்றும் நலம் வாழ்க...

    அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  7. புதியதொரு செய்முறைக் குறிப்பு..

    இருந்தாலும்
    சிலவகை கத்தரிக்காய்கள் ஒத்துக் கொள்ளாமல் போகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் கூட சில வகைகத்தரிக்காய்கள் ஒத்துக் கோள்வதில்லை. நன்றி.

      நீக்கு
  8. சிதம்பரம் கொத்சும் சம்பா ரைஸும் 4-5 வருடங்களுக்கு முன் தனியா இருந்தபோது செய்தேன். நன்றாக வரலை. அப்போவிட இப்போ சமைக்கும் திறமை பெட்டரா இருப்பதால் முயற்சிக்கிறேன்.

    சென்னை பழமுதிர்ச்சோலைல கிடைக்கிற மாதிரி கைக்காத கத்தரி பெங்களூர்ல கிடைப்பதில்லை. வரி பிஞ்சால் வாங்கினாலும் சில சமயம் கைக்குது. அதுபோல பீட்ரூட்டும் இங்க சிலசமயம் கவுத்துடுது. இனிப்பே இல்லாமல் சப்புனு நூல்கோல் போல. பீட்ரூட் இனிப்பு வெரைட்டி கண்டுபிடிக்க ஒரு மெதட் வச்சிருக்கோம். ஒர்க் அவுட் ஆகுது. கத்திரிக்காய்க்குத்தான் என்ன பண்ணறதுன்னு தெரியலை (புளி ஜாஸ்தி விட்டால் போதும்னு சொன்னாலும் அவியல், வாங்கீபாத், புளியில்லா கூட்டு அதுக்கு என்ன பண்ணறது?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பீட்ரூட் இனிப்பு வெரைட்டி கண்டுபிடிக்க ஒரு மெதட் வச்சிருக்கோம்.// அது என்ன technic ? விவரமா சொல்லுங்க.

      நீக்கு
    2. தோல் ரொம்ப ஸ்மூத்தாக இருந்தாலும், மேலே காம்பைச் சுற்றியுள்ள 1 இன்ச் பகுதி சொரசொரவென வெளிறி இருக்கணும். இல்லைனா மிகச் சிறிய பீட்ரூட்டுகளாக (தக்களியைவிட சின்னது..இப்போ நிறைய கிடைக்குது, கிலோ 40ரூ) இருக்கணும்.

      நான் பீட்ரூட் கரேமது மிகவும் விரும்பிச் சாப்பிடுவேன் (வெங் லாம் இருக்கக்கூடாது) அதில் இனிப்பில்லாமல் சப் என்று இருந்தால் கொடுமை.

      நீக்கு
    3. அடுத்தமுறை வாங்கும்போது check செய்கிறேன்.

      நீக்கு
  9. பாவெ மேடம் தி பதிவுன்னாலே கதக் கதக்னு இருக்கு. எங்க நாம படம் எடுத்து வச்சிருக்கறது வருதோன்னு.

    நேற்று ஒரு ஸ்வீட் பண்ணினேன். நிச்சயம் அதைக் கண்டுபிடிக்க முடியாது, யார்ட்டயும் சொல்லலை. இரண்டு நாட்களுக்குள் அனுப்பிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா!ஹா! இனிமேல் திங்கற கிழமைக்கு அனுப்பும் முன், உங்களுக்கு அனுப்பி clearance வாங்கி விடுகிறேன். ஒகே வா?

      நீக்கு
  10. அமாவாசை மாசப்பிறப்பு எதுவும் இன்றில்லை. தினம் 6 1/4க்கு வந்து 7 மணிக்கு பெர்மிஷன் போட்டுட்டுப் போறவங்களை இன்னும் காணோமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவராத்திரி பூஜை இருக்காதா?

      நீக்கு
    2. இந்த வருஷம் கொலுவே வைக்கலை. நவராத்திரி பூஜை கொலு வைத்தாலும் பண்ணும் வழக்கம் இல்லை. சுந்தரகாண்டம் தான் படிப்பேன். அதையே இப்போதும் செய்கிறேன். அதனால் காலையிலே எழுந்ததும் காபி, கஞ்சிக்கடமைகளை முடிச்சுட்டு வீடு பெருக்கிச் சுத்தம் செய்து குளித்து முடித்து (அதுக்குள்ளே குஞ்சுலு வந்தால் அதில் அரை மணி) எட்டு மணிக்கு உட்கார்ந்தால் ஒன்பது ஆயிடும். அதன் பின்னர் தான் காலைக் கஞ்சியே குடிப்பேன். அன்றைய நிவேதனம் பண்ணலைனால் அன்றைக்குக் காலைக் கஞ்சியும் நோ! சில நாட்கள் நிவேதனம் பண்ணிட்டு உட்காருவேன். சமயத்தைப் பொறுத்து! இதுக்கு நடுவே சமையல், காய் நறுக்கல், துணி துவைத்தல், உலர்த்தல்னு இருக்கும். சாப்பிடும்போது பனிரண்டில் இருந்து பனிரண்டரை ஆயிடும். இன்று பூத்தொடுத்தல் கூடுதல் வேலை. உடனே கணினியைப் பார்க்க முடியாது. ஆதலால் இன்று இப்போ மத்தியானம் இரண்டு மணிக்குத் தான் கணினிக்கே வந்தேன். இதோ, மூன்று, மூன்றரைக்கெல்லாம் எழுந்துடுவேன். வேலை இருக்கு.

      நீக்கு
  11. நல்லாயிருக்கே...! இதே போல் கொத்ஸு செய்து விட்டு, கொத்தாக கொத்தாக கொத்திடனும்...!

    பதிலளிநீக்கு
  12. பானுமதியின் சிதம்பரம் கொத்சு புது முறையிலே இருக்கு. எனக்கு தீக்ஷிதர்கள் சொல்லிக் கொடுத்தது வேறே முறை, ஆனால் அவங்க செய்து நான் இன்னும் சாப்பிடவில்லை. எப்போப் போனாலும் கல்கண்டுச் சர்க்கரைப் பொங்கல், நெய்யில் செய்த மிளகு வடையே கொடுக்கிறாங்க. இப்போ தீக்ஷிதர் வந்தப்போச் சொல்லி இருக்கேன். அடுத்த முறை சிதம்பரம் வந்தால் சம்பா சாதத்தோடு சிதம்பரம் கொத்சுதான் வேணும்னு! சரினு சொல்லி இருக்கார். எப்போப் போறோமோ அப்போ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்கண்டு பொங்கல் சிதம்பரம் ஸ்பெஷலா? சிதம்பரத்தை சேர்ந்த எங்கள் சம்பந்தி அடிக்கடி கல்கண்டு பாத்தும், சிதம்பரம் கொத்ஸீவும் செய்வார். அவரிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் இந்த செய்முறை.

      நீக்கு
    2. ஆமாம், பானுமதி, நடராஜருக்குக் கல்கண்டு சர்க்கரைப் பொங்கல் விசேஷம். அதே போல் அங்கே சந்நிதியில் இருக்கும் கால பைரவருக்கு நெய் வடை! இது இரண்டும் எப்போப் போனாலும் கிடைச்சுடும். :)))) திருவாதிரையன்று களி (கோயிலில் செய்தது) கொடுத்தார்கள். அது அன்று மட்டுமே கிடைக்கும்.

      நீக்கு
  13. இது மாதிரியும் பண்ணிப் பார்க்கிறேன். இப்போப் போன வாரம் தான் வெண்பொங்கலோடு கத்திரிக்காய் கொத்சு பண்ணினேன். அதுக்கு முன்னால் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் கத்திரிக்காயைச் சுட்டு பைங்கன் பர்த்தாவோடு ஃபுல்கா பண்ணினேன். இப்படியும் பண்ணிப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. சிதம்பரம் கொத்ஸு செய்முறை குறிப்பும், படங்களும் நன்றாக இருக்கிறது.
    நானும் செய்வேன். மாயவர்ம் வந்து தான் சிதம்பரம் கொத்ஸு கற்றுக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. நீங்கள் ஏன் திங்கள் கிழமை பதிவு போடுவதில்லை?

      நீக்கு
  15. http://geetha-sambasivam.blogspot.com/2009/11/blog-post_20.html எங்க தீக்ஷிதரின் மனைவி சொல்லி நான் எழுதின பதிவு. இம்முறையில் ஒரு நாள் பண்ணிப் பார்த்தேன். அதன் பின்னரும் 2,3 முறை பண்ணி இருக்கேன். மாயவரம் போனப்போ அபி அப்பா வீட்டுக்குப் போனப்போ அவர் மனைவியும் இட்லிக்கு இப்படிச் செய்து கொடுத்தார்.

    பதிலளிநீக்கு
  16. பொதுவாகவே கத்தர்க்க்லய் பிடிக்காது இருந்தாலும் பெயர்க்காரணம் தெரிந்து கொள்ள் கூடாதா என்ன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே..? மதுரைத்தமிழனுக்கு அளித்த பதிலில் காரணம் சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு
  17. கத்தரிக்காய் என்றால் பொரித்த காரக்குழம்பும்,தேங்காய் பால் கறியும் ,சம்பலும்தான் பெரும்பாலும் செய்வோம் . உங்கள் கொத்ஸூ அருமை. செய்து பார்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. ஆனால் கொத்ஸு என்றால் நீர்க்க இருக்க வேண்டாமோ?

    பதிலளிநீக்கு
  19. சிதம்பரம் கொத்சு... சுவையான குறிப்பு. ஒன்றிரண்டு முறை செய்ததுண்டு!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!