வியாழன், 26 நவம்பர், 2020

அன்புள்ள மான்விழியே..

எங்கள் அனுதாபங்கள்

மிகவும் சிரமப்படாமல் இறைவன் திருவடியை அடைந்திருக்கிறார் அரசு ஸார்..  காலை புயல் செய்தியைப் பார்க்க அதிகாலை எழுந்து தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து அக்காவிடம் இரண்டு மிளகு கடிக்கக் கேட்டிருக்கிறார்.  அப்புறம் வாயில் ஊதச்சொல்லி செயற்கை சுவாசத்துக்குக் கேட்டிருக்கிறார்.  அதற்குள் இறைவன் அவரை அழைத்துக் கொண்டு விட்டார்.

​கோமதி அக்காவின் கணவரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.  நேற்று அவர் மறைவுச் செய்தி கேட்டபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.  அக்காவுக்கு என்ன ஆறுதல் சொல்ல என்று தெரியவில்லை.  இந்தக் கடினமான காலங்களைக் கடக்க இறைவன் அக்காவுக்குத் துணை நிற்கவேண்டும்.  அவர் குடும்பமே இறைச் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குடும்பம்.​

அக்காவுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.  இறைவன் இந்தச் சோதனையத் தாங்கும் மனவலிமையை அவர்களுக்கு கொடுக்கப் பிரார்த்திக்கிறோம்.

=========================================================================================================

'குழந்தையும் தெய்வமும்' என்கிற படத்தில் வரும் பாடல்.  டி எம் எஸ் - பி சுசீலா  குரலில் வரும் பாடல்  "அன்புள்ள மான்விழியே...   ஆசையில் ஓர் கடிதம்..." 


'பேசும் தெய்வம்' படத்தில் டி எம் எஸ் குரலில் வரும் பாடல் "நான் அனுப்புவது கடிதம் அல்ல..."



ஒரு சுவாரஸ்யம்.   மேலே உள்ளே இரண்டு பாடல்களுமே வாலி எழுதியது!  எம் எஸ் விஸ்வநாதன் இசை.

'சேரன் பாண்டியன்' என்று ஒரு படம்.   அதில் ஒரு பாடல்.  "காதல் கடிதம் வரைந்தேன்... " , மனோவும் ஸ்வர்ணலதாவும் பாடியது.  சௌந்தர்யன் எழுத எஸ் ஏ ராஜ்குமார் இசை.

'காதல் கோட்டை' படம்.  தேவா இசையில் அகத்தியன் எழுதிய "நலம்.. நலமறிய ஆவல்..."  எஸ் பி பாலசுப்ரமணியம் - அனுராதா ஸ்ரீராம் பாடியது.  இதுவும்  கடிதம் எழுதும் பாணியில் அமைந்த பாடல்தான்.

'தேவா' என்று ஒரு படம்.  எஸ் பி பி குரலில் "ஒரு கடிதம் எழுதினேன்...  என் உயிரை அனுப்பினேன்..."  வாலி எழுதிய பாடல்!



'பல் பல் பல் தில் கே பாஸ்' (பல்லும், பாஸும் நீங்கள் நினைக்கும் அர்த்தம் அல்ல!) என்று ஒரு பாடல் ஹிந்தியில் உண்டு.  'பிளாக்மெயில்' என்கிற படத்தில் கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில்  கிஷோர் குரலில் அருமையான பாடல்.   தர்மேந்திரா எழுதிய லெட்டரை ராக்கி படிப்பதே பாடலாய்... 



அஞ்சல் பெட்டி 520 என்று ஒரு படம்.  டி என் பாலு இயக்கத்தில் சிவாஜி கணேசன் - சரோஜா தேவி நடித்த படம்.  1969 இல் வெளிவந்தது.

1970 இல் வெளிவந்தது 'தபால்காரன் தங்கை' திரைப்படம்.  ஜெமினியும் வாணிஸ்ரீயும் நடித்தது.  

போஸ்ட்மாஸ்டர் பொன்னுசாமி என்று ஒரு படம் எடுத்திருக்கலாம்!  எடுக்கவில்லை.  

ஆனால் போர்ட்டர் பொன்னுசாமி என்று ஒரு படம் வந்தது.  அதையும் நான் பார்த்துத் தொலைத்தது வேற விஷயம்.  இதிலேயே இன்னொரு சிந்தனை என்ன என்றால் போர்ட்டர் பற்றி தமிழில் வந்த ஒரே படம் போர்ட்டர் பொன்னுசாமிதான் என்று நினைக்கிறேன்.  அடியார் எடுத்து, நடித்தது.  தேங்காய் சீனிவாசன் கதாநாயகன் என்று நினைவு.  ஹிந்தியில் போர்ட்டர்  சம்பந்தமாக அமிதாப் நடித்த 'கூலி' படம் வந்ததது!



கடவுள் அமைத்த மேடை படத்தில் சிவகுமார் தபால்காரராக வருவார்.  தாவணிக்கனவுகள் படத்தில் பார்த்திபன் தபால்காரராக வருவார்.  விதி படத்தில் ஒரு காட்சியில் பாக்யராஜ் தபால்காரராக வருவார்.  Palkon Ki Chhaon Mein என்கிற ஹிந்திப் படத்தில் ராஜேஷ்கன்னா தபால்காரராக வருவார்.



இன்றைய வெட்டி ஆராய்ச்சி எதைப் பற்றி என்று உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்!

=============================================================================================

அந்த நாளிலிருந்து சட்டென மனதில் நிற்கும் பௌலர்கள் லிஸ்ட் யோசித்துப் பார்த்தேன்.



ஆன்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்ஷல், பேட்டர்ஸன், வால்ஷ், தாம்ஸன், டெனிஸ் லில்லி, போத்தம், இம்ரான், கபில்தேவ், ரிச்சர்ட் ஹாட்லீ, மேக்ராத், வாசிம் அக்ரம், ஷேன் வார்னே,

இதை இன்னும் சுருக்கினால் வால்ஷ், இம்ரான், வாசிம், மேக்ராத், வார்னே.

இதுபோல பேட்ஸ்மேன் லிஸ்ட் ஒன்று பார்த்தால் விவியன் ரிச்சர்ட்ஸ், அர்விந்த் டி சில்வா, ரணதுங்கா, ஜஹீர் அப்பாஸ், வெங்சர்க்கார், கவாஸ்கர், விவிஎஸ் லஷ்மண், திராவிட்,​ சச்சின் ​




சட்டென நினைவுக்கு வரும் லிஸ்ட், என் விருப்பத்தில்!

================================================================================================

பொக்கிஷம் :


ஒரு ஜெ... ஜோக்!


அப்படியா அதிரா?


அப்போதெல்லாம் ஓவியர்கள் கதையில் எந்த இடத்தை ஓவியமாக வரைந்திருக்கிறோ என்று இடம் சுட்டி பொருள் விளக்கினார்கள் போல!



பூச்சிக்குத்தெரியுமா புத்தகத்தின் அருமை?  அருமையான இந்த எழுத்தாளர்களின் படைப்புகளைக் காப்பாற்றி வைக்க முடியாமல் போனது சோகம்.




ஒரு விமர்சனம் படிக்கிறீர்களா?  படிக்க முடிகிறதா?


54 கருத்துகள்:

  1. நற்காலை வணக்கம்.
    எல்லோரும் பத்திரமாக இருக்க இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  2. கோமதிக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது.:(
    சொடக்குப் போட்டது போல இறைவன் அழைத்துக் கொண்டுவிட்டார்.

    கோமதியின் மகள் மகன், பேரன், மருமகள், தில்லி பேரன் ,பேத்தி எல்லோருக்கும்
    என் ஆழ்ந்த அனுதாபங்களும் வருத்தமும். சொல்லி முடியாத துயரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறுதல்கள் பலனளிக்காத தருணம். காலம்தான் ஆற்றவேண்டும்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. அதென்னவோ உண்மைதான் ஸ்ரீராம்! ஆனாலும் துக்கத்தில் இருப்பவர்களை ஆற்றுப்படுத்துவது நண்பர்கள் உறவினர்களுடைய கடமை ஆயிற்றே!

      திருமதி கோமதிக்கும் குடும்பத்தினருக்கும் .எனது ஆழ்ந்த இரங்கல்கள்

      நீக்கு
  3. கதைகளும், பட விமரிசனமும் அருமை.
    ஆண்டவன் கட்டளை நாங்கள் ரசிக்காத படம்.
    இன்று தபால்காரர் தினமா.

    எல்லாப் பாடல்களுமே அருமையானவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தபால்காரர் தினமெல்லாம் இல்லை. சும்மா வெட்டி ஆராய்ச்சி.

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கடந்து போன "நிவர்" புயல் யாருக்கும் அதிக பாதிப்பைத் தராமல் கடந்து சென்றிருக்கும் என நம்புகிறேன். அனைத்து நண்பர்களும் எவ்விதமான பிரச்னைகளும் இல்லாமல் சௌக்கியமாக இருப்பார்கள் என நம்புகிறேன், பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. வணக்கம். கொரோனாவைப் பார்த்ததும் பயந்துபோன நிவர் பவர் இழந்ததாம்!

      நீக்கு
    2. நீங்க வேற ஶ்ரீராம்.. அடித்த புயலில் கொரானா காலி என்று சொல்வீர்கள் என்று பார்த்தால்...

      நீக்கு
  5. இந்தப் பதிவுக்கும் வந்துவிட்டது "நீ ரோபோவா?" என்று கேட்டுக் கொண்டு! எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என ஆச்சரியப்பட்டு அலுத்து விட்டது. இப்போதெல்லாம் இதை வழக்கமாக எடுத்துக் கொள்ள ஆரம்பிச்சாச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு இன்றுதான் கேட்கிறதா? எனக்கு நான்கு நாட்களாக ஒவ்வொருவர் பதிவிலும் கேட்குறது!

      நீக்கு
    2. எப்போப் பார்த்தாலும் இத்தனை மணிக்குத்தான் நெட், இவ்வளவு நேரம்தான், அப்புறம் இந்தச் சமயத்தில்தான், முதல் பின்னூட்டம் கொரோனா ப்ரார்த்தனை என ரோபோ மாதிரியே இருந்தால் ஏன் கூகுள் கேட்காது? ஏன் ஆறு மாசம் முன்னாலயே கேட்கலைனு ஆச்சர்யம் ஹாஹா

      நீக்கு
  6. திருமதி கோமதி அவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கமுடியாத இந்த தருணத்தைக் கடக்க அக்காவுக்கு மனதிடத்தை அந்த ஆண்டவன் அருளவேண்டும்.

      நீக்கு
  7. கோமதிக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்றே புரியவில்லை. மகன், மருமகள், மகள், பேரன்கள், பேத்தி எல்லோரும் வர முடிந்ததா என்ற கவலை நேற்றிலிருந்து. சென்னை விமான நிலையம் மூடி இருக்காங்க. என்னவோ ஒண்ணும் சரியா இல்லை. மனசே பேதலித்தாற்போல் இருக்கு நேற்றுச் செய்தி கேட்டதில் இருந்து. நாங்களும் மதுரையில் அவங்க வீட்டுக்குப் போயிருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அதே கவலை, கேள்விகள்தான். அக்கா மனதிடத்துடன் இருக்கிறார்களா என்றும் கவலை.

      நீக்கு
    2. ஆமாம் கீதக்கா ரொம்ப ஷாக்கிங்க் செய்தி. சில நாட்கள் முன் கோமதி அக்காவோடு பேசினேன்.

      என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. மனதை டைவர்ட் செய்ய முயற்சி செய்தாலும் மீண்டும் அங்குதான் வந்து நிற்கிறது. அக்காவைப் பற்றிய நினைவே.

      அவங்களிடம் இப்ப பேசும் தைரியமும் இல்லை. என்ன சொல்ல முடியும்? அவர்கள் மீண்டு வர கொஞ்சம் டைம் எடுக்கும்.

      காலம்தான் ஆற்ற வேண்டும்

      இறைவனிடம் பிரார்த்திப்போம்....வேறு சொல்ல வார்த்தைகள் இல்லை

      கீதா

      நீக்கு
    3. இன்னிக்குக் காலம்பர கோமதியிடம் பேசினேன். மிகவும் வருத்தத்துடன் இருப்பதால் அவர்களால் சரியாகப் பேச முடியலை. பேசும்போதே அழுகை வந்து விடுகிறது. எல்லா முதலுதவிகளும் செய்தேன், பிழைக்கவில்லையே என்று வருந்துகிறார்கள். மகன் மட்டும் வருகிறாராம். மருமகளுக்கு அறுவை சிகிச்சை நடந்திருப்பதால் கோமதியின் பெண் அங்கே உதவிக்குப் போய் இருக்கார். ஆகவே அவங்களும் மருமகள், பேரன்கள், பேத்தி யாரும் வர முடியலை. இன்றிரவு மும்பை வருகிறார் மகன். பின்னர் அங்கிருந்து மதுரை செல்ல வேண்டும். இப்போதைக்கு அதான் அவங்க கவலைப்படும் விஷயமாகவும் இருக்கிறது. வேறே என்ன சொல்வது!

      நீக்கு
    4. அட???? இப்போக் கேட்கலை, ரோபோவானு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கேட்டாச்சு! :(

      நீக்கு
  8. கோமதி அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

    பதிலளிநீக்கு
  9. க்ரிகெட் பாட்ஸ்மன் பட்டியல்ல காவஸ்கரா?
    போலர்ல ஜூலியன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர். வெஸ்ட் இன்டீஸ் பௌலரைக் கண்டால் இந்திய அணி பேன்டை நனைத்த காலம், WIக்கு போரடிச்ச போதெல்லாம் இந்திய அணியோட விளையாடி தெளிய வச்சு தெளிய வச்சு அடித்த காலம், 7ம் விக்கட்லேர்ந்து விளையாட பயந்து-அவங்க வேகப் பந்து வீச்சாளரைத் தாங்க முடியாமல், பேடி போன்றவர்கள் டிக்ளேர் செய்த அல்லது விக்கெட்டை விட்டுத் தள்ளி நின்ற காலம், காவஸ்கர் வந்து அணியை பிரமிக்கச் செய்தார். நிறைய வெற்றிகளை ஆரம்ப காலத்தில் கொடுத்த இயக்குநர், தக்க வைத்துக்கொள்ள தடுமாறி சேஃப் கதைகளையே கையாண்ணு நம்மை போரடிப்பதுபோல காவஸ்கரும் சுயநலனால் கட்டையைப்போட்டு ரெகார்டுகளை பிற்காலத்தில் குறி வைத்ததால் அவர் சாதனைகளை மறந்துவிட முடியுமா? இந்தியாவில் அவர்தான் கிரிக்கெட் விளம்பர முன்னோடி. கபில் விளையாட்டை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தவர்.

      நீக்கு
    2. // க்ரிகெட் பாட்ஸ்மன் பட்டியல்ல காவஸ்கரா?
      போலர்ல ஜூலியன்? //

      தல... உமது வாழ்வை எளிய தமிழ் பிள்ளைகளின் தலைவர் ஒருவர் சொல்லி விட்டார்...? எப்போது ஊருக்கு வரீங்க... பேசுவோம்...!

      நீக்கு
  10. திருமதி கோமதிஅரசு அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இத்துயரத்தினைத் தாங்கிக் கொள்ளும் வல்லமையை எல்லாம் வல்ல இறைவன் தந்தருள வேண்டும்...

    பதிலளிநீக்கு
  11. க்ரிகெட் பாட்ஸ்மன் பட்டியல்ல காவஸ்கரா?
    போலர்ல ஜூலியன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறிப்பிடுவது வெஸ்ட் இண்டீஸின் ஆல்ரவுண்டர் பெர்னார்ட் ஜூலியனா?

      நீக்கு
  12. கோமதி அக்காவின் குடும்பத்தினர்களுக்கு இந்த எதிர்பாராத அதிர்ச்சியையும்,சோகத்தையும் தாங்கி மீண்டு வரும் மன வலிமையை கடவுள் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  13. இது என்ன திப்பிச பதிவா? இருப்பதை வைத்து ஒப்பேற்றி விட்டீர்கள். குறையொன்றும் இல்லை.

    பதிலளிநீக்கு
  14. ஆண்டவன் கட்டளை விமர்சனம் எழுதியிருப்பவர் தேவிகாவின் ரசிகரா? ஏகாந்தன் சார் வந்தால் கிரிக்கெட் வீரர்களின் லிஸ்டில் மாறுதல் வரலாம்.

    பதிலளிநீக்கு
  15. ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் துயரமான செய்தி

    பதிலளிநீக்கு
  16. முதல் செய்தியினால் இன்றைய பதிவு சோபிக்கவில்லை. அதற்கு ஏற்ற மாதிரி *வெட்டி ஆராய்ச்சி* கடுப்பேத்தியது என்று சொன்னால் தவறில்லை

    பதிலளிநீக்கு
  17. கோமதி அரசு மேடம் துக்கத்தில் பங்கு கொள்கிறோம். ஆறுதல் கூற முடியாத இழப்பு

    பதிலளிநீக்கு
  18. சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு இந்த துயரமான காலகட்டத்தை கடந்து வர இறைவன் மனோபலத்தை தர வேண்டுமாய் நேற்றிலிருந்து பிரார்த்தித்துக் கொண்டேயுள்ளேன். திரு. அரசு அவர்களின் பிரிவை தாங்கும் சக்தியை இறைவன் சகோதரிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் தந்தருள வேண்டும். வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனம் மிகவும் பாரமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  19. சகோ அவர்களுக்கு எமது ஆறுதல்களை கூறி இறைவன் இவைகளை தாங்கி கடந்து போகும் மனதை தருமாறு வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. அரசு சாரின் தீடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும். அவரது ஆன்ம சாந்திக்கும், கோமதிம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கிடைக்கவும் என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. திரு அரசுவை சந்தித்துஇருக்கிறேன் மென்மையயானவர் கஷ்டப்படாமல் போனது ஆறுதல் திருமதி கோமதியும் துக்கம்களைவார் உலக நியதிதானே அவருக்கு ஆழ்ந்த இர்ங்கல்கள்

    பதிலளிநீக்கு
  24. இந்த வியாழன் அவ்வளவு ரசிக்கமுடிய வில்லை(என்னால்*)

    பதிலளிநீக்கு
  25. தபால் ஆராய்ச்சி, சினிமா (இன்று வெள்ளியா என ஒரு குழப்பம்!), இலக்கியம் ஆகியவற்றோடு கிரிக்கெட். Pleasant surprise! Getting ready for tomorrow's Aus vs Ind match at Sydney? காலை எட்டுமணிக்கு ஸோனி சிக்ஸ் சேனல்..

    Bowlers லிஸ்ட்டில் WI's Michael Holding, Curtley Ambrose, England's Derek Underwood வராததில் ஆச்சரியம்.

    ’அந்தநாளிலிருந்து’ என்றபின் batsmenகளில் இன்னும் பிரபலப் பெரிசுகள் இருக்கிறதுகளே:
    England's Geoff Boycott, David Gower, Australia's Ian Chappel, Allan Border, Adam Gilchrist, SL's Aravinda de Silva, WI's Gordon Greenidge, SA's Graeme Smith, ABD, India's Pataudi, Mohinder Amarnath..


    பதிலளிநீக்கு
  26. கோமதி அக்காவை நினைத்தால் என்னால எதுவும் பண்ண முடியாமல் இருக்கிறது... கோமதி அக்காவுக்கு மனத் தைரியத்தைக் கொடுத்து அவவை இத்துயரிலிருந்து மீண்டுவர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  27. கருத்துகளைத் தந்த அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. திருமதி கோமதி அரசு அவர்கள் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
    விரைவில் துயரிலிருந்து விடுபட வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. சகோதரி திருமதி கோமதி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  30. செய்தி அறிந்ததில் இருந்தே மிகவும் வருத்தமாக இருக்கிறது .....

    இறைவன் துணை இருந்து அவர்களை காக்கட்டும் ..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!