வியாழன், 1 ஜூன், 2023

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ...

 நான்கு நண்பர்கள். 

அதில் அமிதாப் எழுத்தாளர். அமித் ஸ்ரீவாத்சவ்.   எதையுமே வியாபாரமாக பார்ப்பவர்.  அறிவு ஜீவி என்று தன்னைத்தானே நினைத்துக் கொள்பவர்.  அவர் புத்தகங்கள் இளைஞர்களால் இளைஞிகளாலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன.  அடுத்தவர் ஜாவேத்.  போமன் இரானி.  துணிக்கடை வைத்திருப்பவர்.  அவர் மனைவி நீனா குப்தா.  இவர் தன் ஜாவேத், நைட்டி போன்ற பெண்கள் உடை விற்பதே பெண்களிடம் ஜொள்ளு விடத்தான் என்று நினைப்பவர்.  அடுத்தவர் ஓம் ஷர்மா. அனுபம் கேர்.  எனக்கு இவர் கேரக்டர் அமைப்பு மிகவும் பிடித்திருந்தது.  நான்காமவர் பூபேன்.  டானி டென்ஜாங்பா.  கௌரவத்தோற்றம்தான்.  ஆனால் இவரது ஆசையை நிறைவேற்றத்தான் இவர் நண்பர்கள் மூவரும் எவரெஸ்ட் கிளம்புகிறார்கள்.  முதல் காட்சியில் பூபேன் பிறந்த நாள் விழா.  அனுபமுக்கு நண்பர் மேல் கோபம்.  பிரியமும் உண்டு.  மறைந்திருக்கிறது.  அந்த பிறந்தநாள் விழா இரவு புபேனின் கடைசி இரவு.  பூபேன் விழாவில் நால்வரும் எவரெஸ்ட் சென்று வருவதைப் பற்றி சொல்கிறார்.  அவர் நெடுநாள் விருப்பம் அது.  நண்பர்கள் மறுத்துக்கொண்டே, ஒத்திப்போட்டுக்கொண்டே வருவது.  சொல்ல மறந்து விட்டேனே..  நால்வருமே வயது அறுபதைக் கடந்தவர்கள்.

நண்பனின் மறைவால் அதிர்ச்சி அடையும் நண்பர்களில் அமித் புபேனின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுக்கிறார்.


மற்ற இருவரும் முதலில் மறுத்தாலும் பின்னர் அமிதாப் சொன்னபடி நண்பனின் விருப்பத்தை நிறைவேற்ற எவரெஸ்ட் புறப்படுகிறார்கள்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை, தடங்கல்.  அமிதாப் மட்டும் பிடிவாதமாக நிற்கிறார்.  வெளிவர இருக்கும் அவரது புத்தகத்துக்கு விளம்பரம் தேடத்தான் இப்படி செய்கிறார் என்று அனுபம் குற்றம் சாட்டுகிறார்.  பார்ட்டியில் அமிதாப் அப்படி சொல்லியிருப்பார்.  அமிதாப் புத்தகத்தையே மறுபடி முதலில் எழுத இருப்பதாகச் சொல்கிறார்.

அனுபம் தனது உறவுகளை முப்பது வருடங்களாகப் பிரிந்து வாழ்பவர்.  பழைய புத்தகக்கடை வைத்திருப்பவர்.  அங்கு மால் கட்ட அவர் இடத்தைக் கேட்பவர்களிடம் எரிந்து விழுகிறார்.  அவர் மகனுக்கோ மாடர்னாக மாற ஆசை.


ஜாவேத் கிட்டத்தட்ட தன் விருப்பத்தை மனைவிமேல் தன்னையும் அறியாமல் திணித்து வைத்திருப்பவர்.  அல்லது நீனா குப்தாவுக்கு தனது சொந்த விருப்பம் என்ன என்பது கூட மறந்து போயிருக்கிறது.  அவரிடம் பொய் சொல்லி விட்டுதான் மலைக்கு கிளம்புகிறார் ஜாவேத்.  அமிதாப்பின் ஐடியா அது.  ஜாவேத்தின் உடல்நிலை காரணமாக நீனா குப்தா மறுப்பார் என்று பயம்.  ஒரு கட்டத்தில் நீனாவுக்கு உண்மை தெரிந்து விடுகிறது.

அமித்தின் மனைவி இருக்கிறார்.  ஆனால் இருவரும் அமிதாப்பின் ஒரு ஈகோ காரணமாக பல வருடங்களாய் பிரிந்து வாழ்கிறார்கள்.  அமித் தனக்கு வயதாகி விட்டது என்பதை வெளிப்படுத்த மறுக்கிறார். அல்லது ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.  'கிழடுதட்டிப்போன' மனைவியின் அருகில் நிற்பதை, இருப்பதைத் தவிர்க்கிறார்.

இந்த விஷயங்கள் எல்லாம் படத்தில் வெளிப்படையான கதைகளாய் வராது.  அதுபாட்டுக்கு நகரும் கதையில் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியவை.  புபேனுக்கு மிகவும் பிடித்த பாடலான "யே ஜீவன் ஹை இஸ் ஜீவன்கா.." என்னும் அந்த அற்புதமான கிஷோர் பாடல் படத்தில் அவ்வப்போது முக்கியமான காட்சிகளில் பிட் பிட்டாக இடம்பெறும்.  

தனது உறவினர் இல்லத்தில் நடைபெறும் பேச்சால் உடைந்துபோகும் அனுபம் வேகமாக வெளியேறுவதும், அமிதாப் பின்தொடர்ந்து சமாதானப்படுத்துவதும், அனுபம் உடைந்து போவதும், அப்போது அமித் இந்தப் பாடலின் வரிகளை ஒலிக்க விடுவதும், முதலில் கோபத்துடன் நிறுத்த முயலும் அனுபம் பின்னர் அழுதுகொண்டே கேட்பதும்...   நான் மிக ரசித்த காட்சி.  கண்கலங்க வைத்த காட்சி.

மலைகளிடம் எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கும் என்பார் பூபேன்.  என்கிறது படம்.  ட்ரெக்கிங்கில் இவருடன் இணைந்து வரும் மற்ற இளசுகள் முதலில் தள்ளி நின்றாலும் பின்னர் இவர்களை கவனிப்பது, அமித்துக்கு அங்கு கிடைக்கும் பாடம்..  திரும்பும்போது போமன் இரானிக்கு உரைக்கும் உண்மை..

நட்பின் மேன்மை, உறவுகளை பேணுவது, உண்மையாக இருப்பது, நெகிழ்ச்சியான தருணங்கள் என்று பல்வகை விஷயங்களை படம் போகிறபோக்கில் சொல்லிக்கொண்டே செல்கிறது.  சற்றே நீளம் என்று விமர்சகர்கள் சொல்லி இருந்தார்களாம்.  எனக்குத்தோன்றவில்லை.  நான் மிக மிக மிக மிக ரசித்துப் பார்த்த படம்.  ஜனவரியிலேயே பார்த்து விட்டேன் என்றாலும் மறுபடி இப்போது பத்து நாட்களுக்குமுன் ஒரு முறை பார்த்தேன்.   படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாம்.

அமிதாப் இப்படிப்பட்ட படங்களில் நடிக்கும்போது நம்மூர் கிழடுகள் இப்போதும் நாயகியின் பின்னும், துப்பாக்கியும் கையுமாகவும் அலைவது அவர்கள்  தப்பா, தயாரிப்பாளர், இயக்குனர் தப்பா?



எவரெஸ்ட் எல்லா கேள்விகளுக்கும் பதில் வைத்திருக்கிறது என்பது புபேனின் நம்பிக்கை.  அவருக்கென்று யாரும் கிடையாது.  மூன்று நண்பர்கள் மட்டும்.  அமிதாப், அனுபம் கேர், போமன் இரானி. எவரெஸ்ட் எனும் மங்கை தனக்காகக் காத்திருப்பதாய் பூபேன் நணபர்களிடம் சொல்கிறார்.  மலைக்குச் செல்ல அழைக்கிறார்.  பல வருடங்களாய் நணபர்களும் டபாய்த்துக் கொண்டே வருகிறார்கள்.

ஒருநாள் பூபேன் (பட ஆரம்பம்) செத்துப் போகிறார்.  நண்பனின் விருப்பத்தை நிறைவேற்ற அமிதாப் முடிவெடுக்கிறார்.  முதலில் தயங்கும் எதிர்க்கும் மற்ற இரு நண்பர்களும் அப்புறம் இணைகிறார்கள்.  நடுவில் வந்து இணைந்து கொள்கிறார் சரிகா.  அப்புறம் தெரிகிறது அவர் புபேனின் முன்னாள் காதலி என்று!  நல்ல வசதியான வரன் கிடைத்ததும் புபேணிடம் கூட சொல்லாமல் அவரை மணந்து கொண்டு செட்டில் ஆனவர்.

மலைக்கு அழைத்துச் செல்லும் கோஷ்டியின் தலைவியின், மற்றும் மற்ற அங்கத்தினர்கள் பொறுமையை சோதிக்கிறார்கள் பெரிசுகள்.  அமிதாப் தனக்கு அல்சைமர் ஆரம்ப நிலையில் இருப்பதை நண்பர்களிடம் கூட சொல்லாமல் மறைத்து விடுகிறார்.  பின்னால் மாட்டிக் கொள்கிறார்.  அந்த புகழ்பெற்ற எழுத்தாளரின் போலி எழுத்துகள் தோலுரிக்க படுகின்றன.

முதலில் நீனாவுக்கு தெரியாமல், அப்புறம் அவருக்குத் தெரிந்ததும் அவரையும் எதிர்த்து மலைப்பயணம் வருகிறார் போமன்.  அவர் மகள் மூலம் அவர்களுக்கு ஒரு கசப்பான அனுபவம்.  அதைக் கசப்பாக நினைக்கக் கூடாது, வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லும் அமிதாப்பை முறைக்கிறார்கள்...  யே ஜீவன் ஹை...


அனுபமையும் ஒருவகையில் மாட்ட வைத்துதான் அழைத்து வருகிறார் அமிதாப்.  நணபர்களுக்கு  தன் சொந்த ஊரையும் (கோரக்பூர்) மாளிகையையும் உறவுகளையும் பெருமையாக அறிமுகப்படுத்த நினைக்கும் அனுபம் கேருக்கு அவர் சொத்தில் பங்கு கேட்கவே வந்துள்ளதாக அவர் அண்ணனால் அநியாயமாக குற்றம் சாட்டப்படுகிறார்.  மனம் நொந்து வெளியில் சென்று கங்கைக்கரையில் தனியாய் அமர்ந்து அழும் அனுபம் கேரை சமாதானப் படுத்துகிறார் அமிதாப்..  யே ஜீவன் ஹை...

தங்களுடன் தற்செயலாக வருவது போல வரும் சரிகா புபேனைக் காதலித்து ஏமாற்றியவர் என்று தெரிகிறது.  மன்னிப்பு கேட்டு அழுகிறார் சரிகா..  நண்பர்கள் கோபப்படுகிறார்கள்.  யே ஜீவன் ஹை ...

ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையின் தவறுகளை உணரவைத்து பாடம் புகட்டுகிறாள் எவரெஸ்ட் பெண்.  பார்க்க வேண்டிய படம்.



This is life 
These are the colors of these life
This is the way of life
This is life

These are the colors of these life
This is the way of life
A bit of sadness, A bit of happiness
A bit of sadness, A bit of happiness
A bit of shadow, A bit of noon
The good and bad moments are here only

This is life
Don’t think that in this we will win or lose 
Don’t think that in this we will win or lose
Don’t think in this life you are winning or losing

Just accept it what life has offered you
The way method of life accept it whatever it may be

Leave this stubbornness, don’t break this moment
Every moment is as delicate as mirror
Every moment is like a mirror

This is life
These are the colors of these life
This is the way of life 
This is life

Not with money or worldly happiness not with home or door
Not with money or worldly happiness not with home or door
Lovers breathe is linked with his beloveds, lovers love
One may leave this world but this is such a relationship that it never breaks

This is life
These are the colors of these life
This is the way of life

A bit of sadness, A bit of happiness
A bit of shadow, A bit of noon
The good and bad moments are here only

=====================================================================================================

மேலே சொல்லி இருக்கும் படத்தைப் பார்க்க விரும்பினால் லிங்க் இதோ....

விரும்புங்கள் என்று சஜஸ்ட் செய்கிறேன்!  என்ன, பார்த்து விட்டு "ஸ்ரீராம்  சொன்ன அளவு இல்லை" என்பீர்கள்.  பரவாயில்லை.  பார்த்து விடுங்கள்!

ZEE 5 லும் பார்க்கக் கிடைக்கும்.  

===============================================================================================

படித்ததில் ரசித்தது...

`சுப்பிரமணி’ யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!.
கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். `பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்!
பாரதிராஜாதான் `கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார்.
அம்மாவை `ஆத்தா’ என்று தான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டு விட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின் போதுதான் அவருக்கு
இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!
கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது `மிஸ்டர் பெல்’ என்று கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்தத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்றுவரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!
மிகப் பிரபலமான கவுண்டமணி –செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!
இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.
கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு .எந்நேரமும் அந்த நிறம் சூழ
இருந்தால்கூட`சரி’ என்பார். `இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ் –கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!
உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு, `பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!
திருப்பதி ஏழுமலையான் தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாரா வாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டமணி!
சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜீன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!
கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவை பற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டு கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!
புகைப்பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்து கொள்கிற வழக்கம் கிடையாது தனிமை விரும்பி!
ஓஷோவின் புத்தங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசு செய்வார்!
கவுண்டமணி தி.நகர் ஆபீஸீக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்து பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!
கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டு கொள்ளப் பிடிக்காது. `என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம், அவருக்கு பட்டம் கிடையாதுடா!’ என்பார்
·
ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!
கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய
இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். `நம் செளகர்யம் பார்த்தா பத்தாது.... ஜனங்க நடமாட செளகர்யம் கொடுக்கணும்’ என்பார்!
எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்‌ஷன்
வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம்
இது!
டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார், `மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்தரிப்பது ஏமாற்று வேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!
கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் `ஒண்ணா இருக்கக்
கத்துக்கணும்’ `வரவு எட்டணா செலவு பத்தணா’, `நடிகன்’, அட... என்னடா
பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்து கொள்வார்!
`மறக்கவேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’
என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்து விட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்து விடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!
ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலைகாட்டியது இல்லை!
தொகுத்து வழங்கியவர்
திருமதி ஆனந்திராம்குமார்
நன்றி: ஆனந்த விகடன்
நன்றி கந்தசாமி R - Face Book

==========================================================================================

இணையத்தில் ரசித்த படங்கள்...



===============================================================================

சில வருடங்களுக்கு முன்னால் எனக்கு வந்த ஒரு திருமணப் பத்திரிகை. அதில் இப்படி விவரம் சொல்லி அச்சடித்திருந்தார்கள். அப்போது எடுத்து வைத்த போட்டோ...






=======================================================================================



வெளிச்சத்தில் கொஞ்சம் 
வேறொருவரிடம் கொடுத்து விட்டு 
வேலைகளை முடித்து 
கடலுக்குள் மறைகிறான் 
கதிரவன்.
=================================================================================================



நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 

*இன்டர்நேஷனல் க்ரெடிட் கார்டை பயன்படுத்தி வெளிநாடுகளில் செலவு செய்யும் பணத்திற்கு 20% வரி விதிக்கப் படும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பெங்களூர் இனிப்பகங்களில் மைசூர்பாக் விற்பனை எகிறியது. காங்கிரஸ் வெற்றி பெற்ற செய்தி வந்ததும் சில கடைகளுக்கு 500 கிலோ மைசூர் பாக்கிற்கு ஆர்டர் வந்ததாம். கன்னடியர்களுக்கு மைசூர்பாக்தான் முக்கியமான இனிப்பாமே?

காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிப்போம் என்று வாக்குறுதி அளித்ததையடுத்து கர்நாடகாவில் சில கிராம மக்கள் மின்சார கட்டணம் செலுத்த மறுப்பு. இது பற்றி அரசிடமிருந்து சரியான உத்தரவு எங்களுக்கு வராததால் எங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது என்று மின்சார வாரிய அதிகாரிகள் வருத்தம். 

அதே போல பேருந்துகளில் ஏறும் பெண்கள், "பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம் என்று அறிவித்திருக்கிறார்கள், எனவே டிக்கெட் வாங்க மாட்டோம்" என்கிறார்களாம். பதவிக்கு வந்திருக்கும் காங்கிரஸ் அரசு, பேருந்துகளில் கர்னாடக மாநில பெண்களுக்கு மட்டும்தான் இந்தச் சலுகை, பிற மாநில பெண்களுக்கு கிடையாது என்று கூறியிருக்கிறது.  

எலக்ட்ரானிக் சிடியிலிருந்து பெங்களூர் விமான நிலையம்(60 கி.மீ.) செல்ல ஊபர் காரரின் கட்டணத் தொகை (ஊபர் எக்ஸெல்) ரூ.4,051/-, ஊபர் பிரீமியம் ரூ.2584.99 மட்டுமே!!

மேற்படிப்புக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 150% உயர்ந்திருக்கிறதாம். அதே போல் அலுவலகங்களில் உயர் பதவிக்கு உயரும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறதாம்.  அந்த கண்ணாடி கூரை(glass ceiling) தகர்க்கப்பட்டு வருகிறதா?

தமிழக முதல்வர் ஸ்டாலினின் சிங்கப்பூர்,ஜப்பான் விஜயத்தால் பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. அவற்றுள் முக்கியமானது ஜப்பானிய ஓம்ரான்(OMRON) நிறுவனம் மருத்துவ கருவிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழகத்தில் நிறுவ இருக்கிறது.  

ஐ.பி.எல். போட்டியின் இறுதிப் போட்டியை 36 பில்லியன் மக்கள் ஜியோ சினிமா ஆப் மூலம் பார்த்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

* இதில் தவறில்லை என்பது சிலரின் கருத்து. ஏனென்றால் அது எப்படியும் நம் நாட்டிற்கு சேர வேண்டிய பணம்தான். இங்கு செலவானால் வரி கட்ட வேண்டும். அதை தவிர்க்க சிலர் ஓவர் ஸ்மார்ட்டாக வெளிநாடுகளில் க்ரெடிட் கார்ட் மூலம் செலவு செய்கிறார்கள். அந்த ஓவர் ஸ்மார்ட்னெசிற்கு வைக்கப்பட்ட ஆப்புதான் இது என்கிறார்கள். 

================================================================================================================
 

பொக்கிஷம்  :

யாராவது உதவின்னு வந்தா அதுல விழுந்துடுவாருங்க...



மீண்டும் கோகிலா எபெக்ட்!  


அப்போ இது அம்மா காலம்!


சிங்கம் மாதிரியான ஆண் போல!


சாக்குபோக்கு சதாசிவம்!


ஆரம்ப கால அறநிலையத்துறை!

88 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    Unchaay படம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. முன்னரும் அது குறித்து படித்தேன்.

    மற்ற தகவல்களும் நன்று. பத்திரிகை துணுக்குகள் அனைத்தும் ரசித்தேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக ஒரு முறை பார்க்க​லாம்..  அதேபோல குட்பை என்றொரு படம் வந்ததது.  அதையும் பார்க்கலாம்.  நன்றி வெங்கட்.

      நீக்கு
    2. ஓ ! 'குட்பை' யா !! அவசரத்தில் 'குப்பை' என்று படித்துவிட்டேன்!

      நீக்கு
  2. தலைப்பு நினைவுபடுத்திவிட்டது! அருமையான பாடலை!!

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  இந்தப் பதிவுக்கு நேற்று இரவு வரை வேறு தலைப்பு வைத்திருந்தேன்.  அப்புறம்தான் இதை மாற்றினேன்.

      நீக்கு
  3. கவுண்டமணி பற்றிய பகுதி நல்லா இருந்தது.

    அவரை, என் ஒரே நண்பனின் அக்கா திருமணத்தின்போது சந்தித்தேன். அவன் அப்பாவுக்கு நணபர் (தேனாம்பேட்டை). வெளிச்சம் படாமல் தனியாக அமர்ந்திருந்தார்.

    இன்னொருமுறை சந்திக்க வாய்ப்பு வரவில்லை.

    பதிலளிநீக்கு
  4. இந்த வார நகைச்சுவை நன்றாக இருந்தது. ஜெ... எப்போ வரைந்தாலும் ஒரே முகம்தான்.

    பதிலளிநீக்கு
  5. கதை ஈர்க்கிறது. ஹிந்தி மலையாள celluloid களில் இப்படி வித்தியாசமாகப் படம் எடுக்கிறார்கள்!!! நம் பக்கத்தில்....!!??

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் பக்கத்தில் ஒரே மாதிரிதான், துப்பாக்கி, தாதா, டுமீல்.. டுமீல் இரைச்சல்....

      நீக்கு
    2. அதே அதே.....இப்படியான நுண்ணிய உணர்வுகள் வெளிப்படும் கதைகள் இருக்கும் போது....எதற்கு டுமீல் டுமீல் என்னவோ இவங்க எதிர்காலத்தை சமுதாயத்தை நல்லதாக்கிடாறாப்ல!!!

      கீதா

      நீக்கு
    3. இல்லாவிட்டால் சாதியைத் தூக்கிக் கொண்டு வந்து அரசியல் சீனிவார்கள்!

      நீக்கு
    4. ஹைஃபைவ்! ஸ்ரீராம். சரி அப்புறமா வாரேன்....வேலை கெடக்குல்லா...

      கீதா

      நீக்கு
  6. ஆஹா எவரெஸ்ட்....நமக்கோ சுற்றுவதும் அதுவும் மலைப்பக்கம் - இமயமலை வேறு.......ரொம்பப் பிடித்த விஷயம் ...

    கடைசி வரி - நச் நச் - சொல்ல நினைத்தேன் கருத்தில்..நீங்கள் சொல்லிட்டீங்க!! அதான் நம்மூர் கிழடுகள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஓ கடைசி இல்லையா....அந்த கிழடு வரி! ஹிஹிஹி.....அதுக்கு அப்புறம் தொடர்கிறது!!!

    உண்மைதான் ஸ்ரீராம்...மலைகள் நமக்குப் பல விடைகள் சொல்லும் . மலைகள் மட்டுமில்லை இயற்கையிடம் நமக்கான விடைகள் பல இருக்கு கூர்ந்து கவனித்தால். இந்தக் கருத்து எனக்கு ஆழமாக மனதில் பதிந்த ஒன்று அனுபவத்தினால். வரும்....எங்கள் தளத்தில்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவா...  இரண்டாம் முறை பார்த்ததும் தோன்றியதை மறுபடி எழுதி விட்டேன்.  முதலாவதையும் நீக்க மனமில்லை..  அதுதான்!

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. /// ஆரம்ப கால அறநிலையத் துறை!.. ///

    இந்த மாதிரி துக்கடாக்களினால் தான் ஆனந்த விகடன் ஆசிரியர் சிறைக்குச் செல்ல நேர்ந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வேறு.  எம் எல் ஏ க்களை இரு விதமாக சித்தரிந்திருந்தார் என்று நினைவு.

      நீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. திரையில் பார்க்கும் நடிகர்கள் நிஜ வாழ்வில் மிகவும் வித்யாசமாக இருப்பார்கள் என்பதற்கு கவுண்டமணி மற்றுமோர் உதாரணம்.

    இணைய போட்டோக்கள் திகில் ஊட்டவில்லை. மாறாக இது என்ன என்று கேட்க வைக்கிறது.

    wedding invitation. அழைப்பை விட்டு விட்டு பாடம் சொல்லிக் கொடுப்பதில் முன்னிலை வகிக்கிறது. அழைப்பு சடங்குகளை காண வாரீர் என்பதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தோன்றுகிறது. ஆசீர்வாதத்திற்கு அல்ல.

    இடுப்பை கிள்ளாதே மற்றும் , வீட்டில் சிகரெட் பிடிக்காத ஜோக்கும் நன்று. . நேர பொங்க முன்னரே வெளியிட்ட ஞாபகம்.

    கவிதை ஓகே.

    Jayakumar

    Jayakumar

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. நான் இந்த படம் பார்த்து விட்டேன் எனக்கும் படம் பிடித்து விட்டது.
    நண்பர்களின் நட்பு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு கதை.
    எவரெஸ்ட் சிகரம் அழைத்து செல்லும் குழு . எவரெஸ்ட் சிகரம் பார்த்து நண்பர்கள் ரசித்து மகிழ்வது. எல்லாம் அருமை., நாமும் மகிழ்கிறோம்.நிறைய இடங்கள் கண்ணில் நீர் துளிர்க்க வைக்கும் படம். சரிகாவும் உதவிகள் செய்கிறார் ..

    நீங்கள் நன்றாக பட விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நீங்களும் பார்த்து விட்டீர்களா? நான் ரொம்ப ரசித்த படங்களில் ஒன்று. நிறைய இடங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் மனதில்.. நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  15. /// அது வேறு..  எம் எல் ஏ க்களை இரு விதமாக சித்தரித்திருந்தார் என்று நினைவு.///

    இது தான் அது என்று நான் சொல்லவில்லையே..

    அது வேறு.. என்பது எனக்குத் தெரியும்..

    அப்போதைய ஆனந்த விகடன் வேறு....

    அதனுடன் ஆத்மார்த்த நட்பு பூண்டிருந்தவர்களுள் நானும் ஒருவன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் அது என்று அல்ல, அந்த வகை இல்லை என்று சொல்ல வந்தேன்.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பம் பகிர்வு அருமை. திரைப்பட விமர்சனம் நன்கு தெளிவாக தந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு பாராவையும் படிக்கும் போது படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. எங்கள் வீட்டில் மற்ற அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களிடம் கேட்க வேண்டும். நானும் பார்க்கிறேன்.

    நடிகர் கவுண்டமணி பற்றிய தகவல்கள் சிறப்பு. அவர் எதிலும் (விழாக்கள். பேட்டிகள்) கலந்து கொள்ளாமல் தனிமை விரும்பியாக இருப்பார் என படித்திருக்கிறேன். மேலும் அவரைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டேன். மனிதர்கள் பலவிதம். நாம் பார்க்கும் பார்வையில் அவர்கள் வித்தியாசபட்டாலும், அவரகளின் இயல்பான குணங்கள் என்றும் மாறுவதில்லை.

    கவிதை அருமை. தன்னிடமிருப்பதை பிறருக்கு மனமுவந்து தரும் கொடை குணமுள்ள கதிரவனுக்கு பிறந்த கர்ணனுக்கும் அந்த குணம் அப்படியே வந்ததில் அதியசமில்லை.

    நீயூஸ் ரூம் தகவல்களுக்கு சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மிக்க நன்றி.

    மீண்டும் பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  அவசியம் படம் பாருங்கள்.  இங்கேயே லிங்க் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.  மற்ற பாராட்டுகளும் நன்றி.

      நீக்கு
  17. GoodBYE என்கிற இந்தி ப்டம் பாருங்கள் ஸ்ரீராம், அமிதாப் நடித்த படம் அதுவும் பிடிக்கும் .ஒரு வீட்டில் நடக்கும் இறப்பும் அதன் பின் ஏற்படும் மன மாற்றங்களும் சொல்லும் கதை. நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதே பார்த்து விட்டேன். கோமதி அக்கா.  முதல் கமெண்ட்டாக வெங்கட்டுக்கும் சிபாரிசு செய்திருக்கிறேன் பாருங்கள்.  அற்புதமான படம்.

      நீக்கு
  18. யே ஜீவன் ஹை பாடல் பிடித்த பாடல், காணொளி பார்த்தேன் பாடல் கேட்டேன். நன்றி.

    கவுண்டமணி பற்றிய செய்தி படித்து அவரைப்பற்றி அறிந்து கொண்டேன்.

    பொக்கிஷபகிர்வு
    நேரே போங்க நன்றாக இருக்கிறது.


    உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. நியூஸ் ரூம் செய்திகள் வாசித்தேன்.


    பானுமதி அவர்கள்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.  பாடலும் நீங்கள் முன்னரே கேட்டிருக்கிறீர்கள் என்பது சிறப்பு.

      நீக்கு
  19. ஸ்ரீராம் படத்தின் சுட்டி வேலை செய்யலை. வீடியோ இல்லை என்று வருகிறது.

    Zee 5 ல் தான் பார்க்க வேண்டும் போல ஆனால் பணம் கட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். Dailymotion ல் வருகிறது. பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது முயற்சி செய்யுங்கள். மறுபடி கொடுத்திருக்கிறேன்.

      நீக்கு
  20. பாட்டு ரொம்ப நல்லாருக்கு இப்பதான் கேட்கிறேன். அதிக இசை சத்தம் இலாமல் அமைதியாக அழகான பாடல்...அர்த்தமுள்ள பாடல் - நீங்க ஆங்கிலத்தில் கொடுத்திருக்கும் பொருள் வைத்துதான்...ஹிஹிஹிஹி.....முதல் வரி புரிகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கிஷோரின் ரசிகன். ரொம்ப நான் ரசிக்கும் பாடல் அது.

      நீக்கு
  21. கவுண்டமணி பற்றிய செய்திகள் வெகு சுவாரசியம். படத்தில் பார்ப்பதற்கும் நிஜத்திலும் என்ன ஒரு பெரிய வித்தியாசம்!!!!

    ஒரு சில ஆங்காங்கே வாசித்திருக்கிறேன் குறிப்பாக ஹாலிவுட் படங்கள் பார்ப்பது பற்றியும், அறிவாளி என்றும் மீடியாபக்கம் வரமாட்டார் என்பது பற்றியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவுண்ட்டமணி ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ..   போகப்போக ரொம்பவே கனிந்து விட்டார்.

      நீக்கு
  22. இணையத்துப் படங்களை ரசித்தேன் ஆனால் பயமுறுத்துவதாக எதுவும் இல்லை. எனக்கு கிராஃபிக்ஸோ என்று தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. கல்யாணப் பத்திரிகை இப்படி படங்களும் விளக்கங்களும் கொடுத்து அடிப்பது இடையில் ஒரு ஃபேஷன். இப்போது எப்படி என்று தெரியவில்லை. தமிழிலும் கொடுக்கறாங்க.
    அது போல உபநயனப்பத்திரிகையும் அப்படித்தான் படங்களோடு விளக்கங்களோடு...

    பத்திரிகையில் உள்ள படத்தில் அந்தப் பையன் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பச் சின்னப் பையன் முகம்!!! பெண்ணும் அது போல சின்னப் பெண் போல படம் போட்டிருக்காங்க!!!!!

    என்னமோ எனக்கு இப்படி விளக்கங்கள் ஈர்ப்பதில்லை!

    அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, நலுங்கு விளையாடி அடுத்தாப்ல தேன் நிலவு!!! கதிரவன் மறைந்து நிலவு எழுகிறது! அதான், ஸ்ரீராம், அடுத்து உங்க கவிதைக்கான படம் அதைச் சொன்னேன்! பொருத்தமாகிப் போச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..  இது பழைய பத்திரிகைதான்.  அப்போது கொஞ்சம் ரசிக்கும்படி இருந்தது.

      நீக்கு
  24. கவிதை ஓகே! நல்லாருக்கு. "சரி நாளைக்கு வரேன். அது வரை பாத்துக்கங்கன்னு அமெரிக்காவுக்குப் போகிறான் கதிரவன்...போற வழில ஒவ்வொரு ஊருக்கா வெளிச்சம் கொடுத்துக்கிட்டே...

    கீதா

    பதிலளிநீக்கு
  25. நியூஸ் ரூம் - 200 யுனிட் இல்வசம்னு அறிவித்துவிட்டு அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு இதையும் பொதுமக்கள் செய்தியாகச் சேர்த்துக் கொள்ளலாம்!!!

    பெண்களுக்கு பேருந்தில் பயணிக்க இலவசம். முதல்ல இதுவே சரியானது கிடையாது. சரி அதை விடுங்க....//கர்னாடக மாநில பெண்களுக்கு மட்டும்தான் இந்தச் சலுகை, பிற மாநில பெண்களுக்கு கிடையாது என்று கூறியிருக்கிறது. //

    இதெப்படி கண்டுபிடிப்பாங்களாம்? அறிவு ஜீவிங்க நம்ம ஆட்சியாளர்கள்!

    //எலக்ட்ரானிக் சிடியிலிருந்து பெங்களூர் விமான நிலையம்(60 கி.மீ.) செல்ல ஊபர் காரரின் கட்டணத் தொகை (ஊபர் எக்ஸெல்) ரூ.4,051/-, ஊபர் பிரீமியம் ரூ.2584.99 மட்டுமே!!//

    யம்மாடியோவ்...அக்கா ஹெலிகாப்டர் விட்டிருக்காங்க உங்க பகுதிலருந்து விமானநிலையம் போக.!!!

    //அவற்றுள் முக்கியமானது ஜப்பானிய ஓம்ரான்(OMRON) நிறுவனம் மருத்துவ கருவிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழகத்தில் நிறுவ இருக்கிறது. //

    யாரு தொடங்கப் போறாங்க!!!???? அடுத்த பதில் நான் சொல்லமாட்டேனாக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. மீண்டும் கோகிலா எஃபெக்ட், நேர்ர்ர்ர்ர்ர்ர் ராஅ போங்க இரண்டும் ஹாஹாஹா..

    ரொம்ப சிரித்தது சிங்கம் மாதிரியான ஆண் போல....ரெண்டுமே.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. பார்க்க வேண்டிய படம் - குறித்துக் கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  28. //வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்///

    எதுக்காக ஆயிரம் இருக்கும் என க அங்கிள் ஜொன்னார்ர்ர்?:).. ஏன் 2000 இருக்கப்பிடாதோ பத்தாயிரம் இருக்கப்பிடாதோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா..   அது ஒரு ப்ளோவுல சொல்ற வார்த்தைதானே!

      நீக்கு
  29. போஸ்ட் படிக்கத் தொடங்கியதும், வியாழன் போஸ்ட்டின் ஆரம்பமாக பெரும்பாலும் ஸ்ரீராம் உண்மைச் சம்பவம்தானே பகிர்வார் என்பதால, அவரறிஞ்ச உண்மைச் சம்பவம்போல என நினைச்சுப் படிச்சு... பாதியில் அமிதாப் அங்கிளைப் பார்த்ததும்.. ஓ அவரின் பெயரும் இருக்கே அப்போ அவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவமாக்கும் என கதைரையின் நுனிவரை வந்து ஆர்வத்தோடு படிக்கையில்தான் புரிஞ்சது.... பட விமர்சனம் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆரம்பமே ஜொள்ளியிருக்கலாமெல்லோ.. சரி போகட்டும் விடுங்கோ நல்லாத்தான் சொல்லியிருக்கிறீங்கள்..

    பதிலளிநீக்கு
  30. //நம்மூர் கிழடுகள் இப்போதும் நாயகியின் பின்னும், துப்பாக்கியும் கையுமாகவும் அலைவது///

    ஹையோ ஆண்டவா ... ஸ்ரீராம் எதுக்கும் ஹெல்மெட் போட்டுக்கொண்டு கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிருங்கோ கொஞ்ச நாளைக்கு ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்ததுமே சிரித்து விட்டேன் அதிரா.. ஹெல்மெட் வேறு பையன் கொண்டு போயிருக்கிறான்!​

      நீக்கு
  31. கவுண்டமணி அவர்களின் கதைத்தொகுப்பு நன்று. கவுண்டமணி-செந்தில் பிடிக்காதோர் இருக்க மாட்டினம், ஆனா ஒன்று எல்லோரும் கொஞ்சக்காலம் கொடிகட்டிப் பறந்துவிட்டுக் காணாமல் போய் விடுகின்றனர்... இப்போ சூரி, சந்தானம் கூட எங்கும் காண முடியவில்லையே... பண ஆசையால தனிப்படம் நடிக்கிறோம் என வெளிக்கிட்டுக் காணாமல் போய்விடுகின்றனர் போலும்... புதிசாகப் பலர் வருகின்றனர், ஆனா ஆரையும் ரசிக்க முடியவில்லை...

    ஆந்தை அசைவம் உண்ணுமோ???...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரி சந்தானம் என்று காமெடியனுக்கெல்லாம் ஹீரோ ஆசை வந்து ஹீரோவாகி விட்டனர்.

      நீக்கு
    2. எனக்கு கவுன்டமணி/செந்தில் ஜோடிகளின் நகைச்சுவைக் காட்சிகள் பிடிக்கவே பிடிக்காது! ஏதோ ஒன்றிரண்டு பார்த்திருப்பேன். கரகாட்டக்காரன் வாழைப்பழ ஜோக் மாதிரி. மற்றபடி அந்த நகைச்சுவைக் காட்சிகள் வந்தால் பார்க்க மாட்டேன்.

      நீக்கு
    3. அதது பார்பபதற்கு ஒரு மூட்!

      நீக்கு
  32. கதிரவன் கவிதை அழகு.

    பொக்கிஷம்.. நேராப் போங்கோ.. புரியவே இல்லை எனக்கு கர்ர்ர்:))

    ஹா ஹா ஹா இடிப்பில் கிள்ளுவது புரிஞ்சுபோச்ச்ச்ச்:))..

    கோயில் தர்மகர்த்தாவையும் விட்டுவைப்பதில்லையோ.. அவர்களுமா எம்பி மார்போல ஆகிட்டினம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  எவ்வளவு தூரமோ அவ்வளவு வளைகிறார் என்பது ஜோக்!  வாய்ப்பு கிடைத்தால் எல்லோரும் திருடர்கள்தாம்!  இருங்கள் நீங்கள் சொல்வதற்கு முன்னாடியே கட்டிலுக்கு கீழே போய்விடுகிறேன்!

      நீக்கு
  33. கவுண்டமணி. க்ரேஸி மோகனின் மறைவின்போது துக்கம் விஜாரிக்க வந்திருந்ததை ஏதோ பத்திரிக்கைப் படம் ஒன்றில் பார்த்த நினைவு. ஆள் ரொம்ப டவுனாகிவிட்டார்போல. உற்சாக பானம், சிகரெட் இத்யாதிகளின் விளைவோ என்று தோன்றியது. இந்தக் கட்டுரை வேறுமாதிரி செல்கிறது.. நல்லது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவுண்ட்டர் சகல விதத்திலும் ரசனையான மனிதர்!

      நீக்கு
    2. மனோ பாலா மரணத்திற்கும் உதவியாளரோடு வந்திருந்தார். அவர் 16 வயதினிலே படம் நடித்தபோது அவருக்கு 40 வயது இருக்கலாம். (79ம் வருடம் என்று நினைவு. அல்லது 39). இப்போ அவருக்கு 84 வயது. ஏகாந்தன் சார், கவுண்டமணி என்னவோ 60 வயது என்று நினைத்துவிட்டார் போலிருக்கு. அவர் கதாநாயகனாக திரும்பவும் நடிக்கும்போதே அவர் வயது பளிச்சுனு தெரியும். அவர், தன்னைவிட நிச்சயம் வளரமாட்டான் என்று நினைத்தும், செந்திலினுடைய நல்ல குணம் தெரிந்தும் தன்னுடன் வைத்துக்கொண்டார். எல்லா நகைச்சுவை நடிகர்களையும்போல, பிறரை வளரவிட்டதில்லை.

      நீக்கு
    3. கவுண்ட்டமணி சிவாஜி கணேசனின் 'ராமன் எத்தனை ராமனடி' படத்திலேயே மிகச்சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.  ஸ்கூல் பஸ் டிரைவர் வேடம்.  முத்துராமன் டிரைவராக வருவார்.  அவர்தான் குழந்தையின் தந்தை.  அவரைத் தேடினால் அடுத்த வாரம் இவர் டிரைவராக வருவார்.

      நீக்கு
    4. நான் அவர் வயது 65-70 போல இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன்!

      நீக்கு
  34. Danny Denzongpa! பெயரைக் கேட்டே ரொம்ப நாள் ஆயாச்சு.. இந்த அந்த நாளைய ஹிந்தி வில்லனைப் பிடிக்கும். பாலிவுட்டில் ப்ரேம் சோப்ரா, ப்ரான் எனப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன பழைய கொடூரர்களுக்கிடையில், டானி .. வித்யாச மேனரிஸம்ஸ்... ஸ்மார்ட் லுக்கிங் நெகடிவ் கேரக்டர்.. சிக்கிம் தந்த சிங்கம்!

    அனுபம் கேர் (Kher), போமன் (Boman) இரானி, டானி டென்ஜோங்பா எனத் திறமையான நடிகர்கள். Suraj Barjatya நன்றாக இயக்கியிருக்கிறார்போலும். பார்க்கலாம் போலிருக்கிறது. என்ன, படம் ஹிட்டா! இது கொஞ்சம் ஜாஸ்தி.. நம்பக் கஷ்டமாயிருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Danny நடித்த படங்கள் நானும் பார்த்திருக்கிறேன்.  அவர் குரலில் பாடலும் கேட்டிருக்கிறேன் (காலா ஸோனா).  படம் நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.  குறுக்கீடுகள் இன்றி பாருங்கள், ஆங்காங்கே வசனங்களை ரசித்தபடி!  குட்பையும் பார்க்கலாம்!

      நீக்கு
    2. ஒரு அருமையான பாடலை மறந்து விட்டேன்.  பேஸ்புக்கில் மெமரிஸ் இப்போதுதான் பார்த்தேன்.  இதே நாளில் 2013 ல் அந்தப் பாடல் பற்றி பகிர்ந்துள்ளேன். அபி தோ ஜீ லேயின் படத்தில் டேனி டென்சோங்பா. நடிப்பில் கிஷோர் பாடல் து லாலி ஹை

      நீக்கு
    3. இந்தப் படமும் பாதியில் இருக்கு. டானி இறந்த பின்னர் நண்பர்கள் சந்திப்பது வரை பார்த்தேன். முழுதும் இன்னமும் பார்க்கவில்லை. சில சமயம் நாம் பார்த்த படம் தேடுதலில் போட்டுக் கொண்டு வர வேண்டி இருக்கு. அப்படி வரும் படங்கள் சுத்திண்டே இருக்கு. ஆகவே லிஸ்டில் வரும்போது மட்டுமே தேர்வு செய்து பார்க்க வேண்டி இருக்கு. நேற்றைய தேடலில் ஊஞ்சாயி கிடைக்காமல், மிஸஸ் அன்டர்கவர் கிடைச்சது. அதான் பார்த்துக் கொண்டிருந்தேன். ராதிகா ஆப்தே!

      நீக்கு
    4. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் படம் ரெஸ்யும் செய்யவா என்று கேட்டு காத்துக்கொண்டிருக்கும்.  பார்க்கலாம்.  அவசியம் பாருங்கள்.  மிஸஸ் அண்டர்கவர் நானும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    5. எனக்கு அப்படி எல்லாம் கேட்கவில்லையே? :(

      நீக்கு
  35. ஓ.. விரட்டி விரட்டி ஞாபகப்படுத்திக்கொள்கிறீர்கள். பாடல் கிஷோரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்!  இப்போது பேஸ்புக் பார்த்துக் கொண்டிருக்கும்போது அன்று இதே நாளில் பகிர்ந்ததைக் காட்டியது.  என்ன பொருத்தம் என்று இங்கேயும் சொல்லி விட்டேன்!

      நீக்கு
  36. பார்க்கும் ஆவலைத் தரும் திரை பார்வை அருமை.

    தொகுப்பு மிக நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!