சத்து மாவு
தினை - 200 grm
கம்பு – 200 grm
பச்சரிசி – 200 grm
பச்சைப் பயறு– 200 grm
வறுத்த வேர்க்கடலை – 200 grm
முத்துச்சோளம் – 200 grm
பொட்டுக்கடலை – 200 grm
முந்திரிப் பருப்பு – 200 grm
பாதாம் பருப்பு – 200 grm
உளுத்தம் பருப்பு - 100 grm
கொள்ளு – 100 grm
கேழ்வரகு – 100 grm
ஏலக்காய் – 10 Pcs
வறுத்த வேர்க்கடலை தவிர்த்த மற்ற தானியங்கள் அனைத்தையும் தனித் தனியாக வாணலி ஒன்றில் எண்ணெய் இல்லாமல் மிதமான சூட்டில் நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் ஒன்றாகக் கலந்து மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்து காற்று புகாத டப்பாவில் பத்திரப்படுத்திக்கொள்ளவும்.
கீழ்க்குறித்தவை இருவருக்கானது..
உடல் நலமுடையோர்க்கு:
சத்து மாவு – 2 tbsp
பசும்பால் – 300 ml
தண்ணீர் – 100 ml
வீட்டுச் சர்க்கரை – தேவைக்கு
குங்குமப்பூ சிறிதளவு
பாலை ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் காய்ச்சவும்..
தண்ணீர் சேர்த்து சத்து மாவை கட்டி பிடிக்காமல் நன்கு கரைத்து, பாத்திரத்தில் பால் தளதளத்து வரும் போது ஊற்றி சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கி அதில் குங்குமப் பூவைத் தூவவும்..
விருப்பமானால் ஒரு ஸ்பூன் பசு நெய் சேர்த்துக் கொள்ளலாம்..
இதில் வேறுமுறை:
தேங்காய்ப்பால் 300 ml
தண்ணீர் – 100 ml
கல் உப்பு – தேவைக்கு
பசும் பாலுக்குப் பதிலாகத் தேங்காய்ப்பால் சேர்த்தும் செய்யலாம்... எனில் தனியாக நெய் தேவை இல்லை..
இந்த செய்முறையில் நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு வாரம் இருமுறை போதும்
***
2)
சிவப்பு அவல் உருண்டை :
சிவப்பு அவல் 500 grm
சத்து மாவு 3 tbsp
தேங்காய்த் துருவல் 100 grm
சிவப்பு அவலை மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.. சற்று நேரம் ஊறியதும் அதனுடன் சத்து மாவையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்றாகக் கிளறி உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.. தேவையெனில் மேலும் சிறிதளவு மாவு சேர்த்துக் கொள்ளவும்..
நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குநெல்லை அவர்களுக்கு
நீக்குவணக்கம்.. நன்றி
வாங்க நெல்லை.. வணக்கம்.
நீக்குநல்ல செய்முறை.
பதிலளிநீக்குவிரைவில் காலை உணவுக்கு சத்துமாவுக்கு மாறலாம் என நினைத்திருக்கிறேன்.
சாத்த்தைவிட சத்துமா இன்னமும் ஆரோக்கியத்துக்கு நல்லது
சத்து மாவு ஆரோக்கியத்துக்கு நல்லது..
நீக்குஅன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
டயபடிக்ஸ் வராமல் தற்காத்துக்கொள்ளும் முறைகள் என்ன? இதுபோல ப்ரெஷரைக் கட்டுப்படுத்துவது எப்படி?
பதிலளிநீக்குசைவ உணவு முறை கொண்டோர்க்கு மட்டும்..
நீக்குவெள்ளைச் சர்க்கரை (ஜீனி), மைதா, மூன்று நாட்கள் வரைக்கும் கெடாமல் இருக்கும் பால், தயிர், மோர், செயற்கை வெண்ணெய், நெய், சுத்திகரிப்பு செய்யப் பட்ட சமையல் எண்ணெய் இவற்றை விட்டு விலகினாலே ஆரோக்கியம் தான்!..
சமீபத்தில் ரஜினி பேசிய ஒரு க்ளிப்பிங் கேட்டேன். "நான் வெள்ளை நிறத்தில் உள்ள எதையும் சாப்பிடுவதில்லை... பால், தயிர், மோர், மைதா, சர்க்கரை, சோறு, (சற்று இடைவெளி விட்டு ) மாத்திரை..." என்று அடுக்கினார்.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
நோக்க நோக்க
நொடியில் நோக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க துரை அண்ணா.. வணக்கம்.
நீக்குஇன்று சமையலறையின் பக்கம் வந்திருக்கும் அனைவருக்கும் நல்வரவு..
பதிலளிநீக்குஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..
நானும் நன்றி!
நீக்குசெய்முறை விளக்கம் அருமை ஜி
பதிலளிநீக்குவருக ஜி..
நீக்குஅன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார்.///
நீக்குஅவ்வண்ணமே வேண்டிக் கொள்வோம்..
வீட்டிலும் இதுபோல் செய்வார்கள்... பசியையும் குறைக்கும்...
பதிலளிநீக்குஅன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
நான் இதனுடன், கறுப்புக் கவுனி அரிசி, பார்லி, பாசிப்பருப்பு,பச்சரிசிக்குப் பதிலாப் புழுங்கல் அரிசி எனச் சேர்த்துப்பேன். கவுனி அரிசி எல்லாம் அரைக்கிலோ போட்டுடுவேன். கேழ்வரகும் கிட்டத்தட்ட அரைக்கிலோ போடுவேன். ஏலக்காய் போடுவதில்லை. ஏனெனில் நாங்க மோர் விட்டுக் குடிப்போம். அப்படிப் பால் சேர்க்கும் நாட்களில் ஏலக்காயைத் தனியாகப் பொடி செய்து சேர்த்துப்பேன். இதிலேயே நெய் சேர்த்துக் கொண்டு முந்திரிப்பருப்பு வறுத்து வெல்லத்தூள் அல்லது கருப்பட்டித்தூள் சேர்த்து உருண்டையாகவும் பிடிச்சு வைச்சுப்பேன். நன்றாக இருக்கும். தினம் காலை ஆகாரமாகப் போடும் கஞ்சி இது தான்.இப்போ உள்ள சூடு காரணமாக நான் மட்டும் சாதத்தில் நீர் விட்டு உப்புப் போட்டு மோர் விட்டுக் கரைத்துக் குடிப்பேன். அப்படியும் சூடெல்லாம் தணிவதில்லை என்பது வேறே விஷௌஅம். :(
பதிலளிநீக்குஇது நல்லாருக்கே...
நீக்குகவுனி அரிசி அருமை தான் .. ஆனால் விலையை நினைக்கையில் ..,
அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
நன்றியக்கா..
சத்துமா குறிப்புகள் அருமை.
பதிலளிநீக்குநானும் வீட்டில் செய்வதுண்டு.18- 21 சாமான்கள் போட்டு.
அதில் நீங்கள் சொல்லியிருப்பது போல் லட்டு எல்லாமும் செய்யலாம்.
நல்ல குறிப்புகள் சத்துமாவை எப்படிப் பயன்படுத்தும் செய்முறைக் குறிப்புகளூம்...
கீதா
நல்ல குறிப்புகள் சத்துமாவை பயன்படுத்துவது செய்முறைக் குறிப்புகளூம்...//.
நீக்குஅன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..
நன்றி சகோ..
Geetha Sambasivam "திங்கக்கிழமை : சத்துமாவு - துரை செல்வராஜூ ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:
பதிலளிநீக்குநான் இதனுடன், கறுப்புக் கவுனி அரிசி, பார்லி, பாசிப்பருப்பு,பச்சரிசிக்குப் பதிலாப் புழுங்கல் அரிசி எனச் சேர்த்துப்பேன். கவுனி அரிசி எல்லாம் அரைக்கிலோ போட்டுடுவேன். கேழ்வரகும் கிட்டத்தட்ட அரைக்கிலோ போடுவேன். ஏலக்காய் போடுவதில்லை. ஏனெனில் நாங்க மோர் விட்டுக் குடிப்போம். அப்படிப் பால் சேர்க்கும் நாட்களில் ஏலக்காயைத் தனியாகப் பொடி செய்து சேர்த்துப்பேன். இதிலேயே நெய் சேர்த்துக் கொண்டு முந்திரிப்பருப்பு வறுத்து வெல்லத்தூள் அல்லது கருப்பட்டித்தூள் சேர்த்து உருண்டையாகவும் பிடிச்சு வைச்சுப்பேன். நன்றாக இருக்கும். தினம் காலை ஆகாரமாகப் போடும் கஞ்சி இது தான்.இப்போ உள்ள சூடு காரணமாக நான் மட்டும் சாதத்தில் நீர் விட்டு உப்புப் போட்டு மோர் விட்டுக் கரைத்துக் குடிப்பேன். அப்படியும் சூடெல்லாம் தணிவதில்லை என்பது வேறே விஷயம் :(
மறுபடியும் ப்ளாகர் வேலை ஆரம்பிச்சிருக்கு. காணாமல் போனதை இழுத்துக் கொண்டு வந்திருக்கேன்.
நீக்குப்ளாக்கர் ப்ளாக்கர் - தான்...
நீக்குசத்துமா வித்தியாசமாக இருக்கு... இப்படிச் செய்து வைத்தால் ஆரோக்கியம்தான்.. ஊரில் உளுந்து பயறு அரிசி மட்டும்தான் சேர்த்து முன்பு செய்வார்கள் என நினைக்கிறேன், இப்போ எல்லோரும் சிறுதானியத்துக்கு மாறிவிட்டமையால், இது மிகச் சிறந்த உணவுதான்...
பதிலளிநீக்குஇதில் அவசரத்துக்குக் கரைச்சு, தோசையாகக் கூட வார்க்கலாம் என நினைக்கிறேன்.
கங்கை மகள் அதிரா..
நீக்குதாங்கள் செய்து பார்க்கவும்..
அன்பின் வருகைக்கு கருத்துரைக்கு மகிழ்ச்சி..
நன்றி ..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவாக சத்து மாவு செய்முறை மிகவும் நன்றாக உள்ளது. நாங்கள் முன்பு எங்கள் குழந்தைகளுடன் வாழ்ந்த காலத்தில் அன்றைய கால கட்டத்தில்இந்த மாதிரி வீட்டிலேயே சத்து மாவு தயார் செய்து உபயோகப்படுத்தினோம். பின்பு செய்வதற்கு சௌளகரியபடாததினால் வெளியில் நல்ல பிராண்டாக வாங்கினோம். அதுவும் பல காலமாக நின்று போனது. இப்போது சின்னக் குழந்தைகள் (பேரன், பேத்தி) சத்துமாவில் கஞ்சி போட்டு தந்தால் குடிப்பதில்லை. காலப்போக்கில் ஒரு சமயம் அவர்களுக்கும் பிடித்தமானதாக ஆகும். அப்போது பார்க்கலாம் என விட்டு விட்டோம்.
தங்கள் பக்குவம் நன்றாக உள்ளது. இதுபோல் செய்து பார்க்கிறேன். இன்று காலையில் எப்போதும் போல் பதிவுகளுக்கு வர இயலவில்லை. கொஞ்சம் வேறு வேலைகள் வந்து விட்டன. அதனால் தாமத வருகை. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வேலை சிரமங்களுக்கு இடையேயும் பதிவுக்கு வந்து தங்களது கருத்தினைக் கூறியதற்கு மிகவும் நன்றி..
நீக்குவளரும் தலைமுறை களின் அணுகுமுறை எல்லாவற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது..
காலம் மாறும்..
மகிழ்ச்சி.. நன்றி..
சத்துமாவு செய்முறைகள் அருமை.
பதிலளிநீக்கு