வியாழன், 6 ஜூலை, 2023

மூன்றில் ஒன்று.. நீ என்னிடம் சொல்லு..

 மூன்று விஷயங்கள்...   மூன்று விஷயங்கள் பற்றி பேசவேண்டும்.

அந்த விழாவுக்குப் போனதில் நடந்த மூன்று நிகழ்ச்சிகள் பற்றி பேச வேண்டும்.

திருமணம் போன்ற விசேஷங்களுக்குச் செல்லும்போது அந்நிகழ்ச்சியை என்றும் நினைவில் வைத்திருக்க வீடியோ எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள்.  நல்ல விஷயம்தான்.  நானும் செய்வேன்.  நீங்களும் செய்வீர்கள்.  

பெரும்பாலும் இப்படி வீடியோ எடுப்பவர்கள் என்ன செய்வார்கள் என்றால், நிகழ்ச்சி நடக்கும் நேரம் முக்கியமான தருணங்களில் மேடையில் நடப்பதை மறைத்துக்கொண்டு படம் எடுப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே...  போதாக்குறைக்கு நாமும் நம் செல்போனில் அவர்களுக்கு இடையில் புகுந்து நம் படமெடுக்கும் திறமையையும் காண்பிப்போம்.  பின்னால் அமர்ந்திருப்பவர்கள் பாவம்..  படம் எடுப்பவர்களின் பின்னழகைத்தான் பெரும்பாலும் தரிசிக்க வேண்டும்.  அதற்குதான் அவர்கள் போடும் அட்சதை சென்று விழும்! 


இங்கு ஒன்றைச் சொல்லவேண்டும்.  அட்சதை போடுவது பற்றி.  மண்டபம் முழுவதும் நிறைந்திருப்பவர்கள் எத்தனைபேர் மங்கலநாண் பூட்டும் சமயமோ, அல்லது ஆசீர்வாதம் வழங்கும் நேரமோ மேடைக்கு அருகில் வந்து அட்சதையை சம்பந்தப்பட்டவர்கள் சிரசில் போடுகிறார்கள்?  இருக்கும் இடத்திலிருந்தே மேடையை நோக்கி 'த்ரோ' செய்வார்கள்.  கடமை முடிந்தது.  அட, அதை விடுங்கள்.  மேடையில் நடக்கும் மங்கள வைபவத்தை கவனிப்பவர்கள் எத்தனை பேர்?  அவரவர் ஆங்காங்கே நின்று நீண்ட நாள் கழித்து சந்திப்பவர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்கள்.  இல்லை, தலைகுனிந்து மோனத்தவம் செய்து கொண்டிருப்பார்கள்.  சிலர் செல்போனில், சிலர் சும்மா...!

வழக்கமாக இது மாதிரி விழாக்கள் நீண்ட நாள் சந்திக்காத உறவுகளை சந்திக்கும் வாய்ப்பாகவும் இருக்கிறதுதான்.  ஒருவரை ஒருவர் பார்த்து பேச, விஷயங்களை பரிமாறிக்கொள்ள வசதிதான்.  அதற்கு இதுமாதிரி கெட் டுகெதர்கள் மிக்க உபயோகம்தான்.  சில சமயங்களில் இது மாதிரி விழாக்களில் இன்னொரு திருமணம் கூட நிச்சயமாகும்தான்.  அதுவரை உறவுகளுக்கிடையே இருந்து வந்த சில தவறான புரிதல்கள் சரியாகும்தான்.

எல்லாம் சரிதான்..  ஆனால்.... 

ஆனாலும் நாம் சென்றிருப்பது தம்பதிகளை ஆசீர்வதிக்க, அல்லது அவர்களிடமிருந்து ஆசி பெற என்பதை நினைவில் கொண்டு மேடை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த வேண்டும், பங்கெடுக்க வேண்டும்.  அவர்களை தனியாக உணர வைக்கக் கூடாது.  அப்புறம் இருக்கவே இருக்கிறது இடைவேளை நேரங்கள்.  சாப்பிடும்போது, நிகழ்ச்சிகளின் இடைவேளைகளில், மாலை இரவுகளில் அளவளாவலாம்.

சரி..  வழக்கம்போல சொல்ல வந்த விஷயம் டிராக் மாறுகிறது.  நான் இங்கு முதல் விஷயமாக பேச வந்தது வீடியோ பற்றி...  இந்த வீடியோக்ராபர்கள் இருக்கிறார்களே..  அவர்கள் ரொம்ப விசுவாசமானவர்கள்.  பெரும்பாலும் மேடையைத்தான் படம் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.  எப்போதாவது வந்திருக்கும் விருந்தினர்களை எடுப்பார்கள்.  மேடையைத் தவிர அவர்கள் அதிகம் எடுப்பது வீடியோக்காரரை அமர்த்தி இருக்கும் குடும்பத்தாரை..  அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ, அங்கெல்லாம் கேமரா பின்தொடரும்,  பெண் வீட்டார் வீடியோ ஏற்பாடு செய்திருந்தால், மாப்பிள்ளை வீடே கூட கொஞ்சம் கம்மியாய்த்தான் வீடியோவில் இருக்கும்.  அப்போ மற்றவர்கள்?  Gift கொடுக்க மேடையில் நிற்கும்போது எப்படியும் வீடியோவில் இடம்பெற்று விடுவோம்.  மற்ற சமயங்களில் எங்காவது, எப்போதாவது கண்ணில் படுவோம்.  விரைந்து நகரும் கேமிரா பார்வையில், பார்வையாளர்களில் நாமும் அமர்ந்திருப்போம்.


ஆனால் இந்த விழாவில் நான் பார்த்த வீடியோக்ராபர் வித்தியாசமானவர்.  


முன்னர் அகேஷனாலாகவும் இப்போதெல்லாம் நிறைய பங்க்ஷனிலும் இவரை நான் பார்க்கிறேன். உற்சாக ஊற்று.  இரண்டு மூன்று உதவியாளர்கள் வைத்திருக்கிறார்.  பாலாஜி விடியோஸ்.  உள்ளே நுழைந்த கணம் முதல் அந்த உற்சாகம் எதிர்ப்படுவோர் அனைவரிடமும் தொற்றிக்கொள்ளச் செய்து விடுகிறார்.  நிறையபேர் இவரை தங்கள் ஆஸ்தான வீடியோகிராபராக வரித்துக்கொண்டு விட்டனர்.  அவர்கள் வீட்டு விழாக்களில் எல்லாம் இவர் வீடியோ தான்.  கிட்டத்தட்ட எல்லோரையும் பெயர் தெரியுமளவு பரிச்சயமாகி இருக்கிறார்.  விழாவில் குழுமி இருப்போர் ஒருவரை விடுவதில்லை.  புதிதாக உள்ளே வரும் ஒருவரையும் விடுவதில்லை.  எல்லோரையும் ஒருமுறை அல்ல, அவ்வப்போது வீடியோவில் பதிவு செய்து விடுகிறார்.  அதுவும் ஒரே மாதிரி அல்ல.  அவர்களை வித்தியாசமாக நிறுத்தி வைத்து, வித்தியாசமான போஸ்களில், ஜோடியாய் தனியாய் கேண்டிடாய் என்று எடுத்து கவர்ந்து விடுகிறார்.


சில விழாக்களில் இவர் கலந்து கொண்டாரா என்கிற சந்தேகம் வரும் அளவு சிலர் எந்தப் படத்திலும், காணொளியிலுள்ள விழுந்திருக்க மாட்டார்கள்.  கேமிரா இங்கு வரும்போது அவர் அங்கிருப்பார்.  அங்கு செல்லும்போது இங்கிருப்பார்.  யதேச்சையாகத்தான்....

அது இவரிடம் நடக்காது.


நீங்கள் எதிரில் வந்தால் உங்களையும் விதம் விதமாய் படம் பிடித்து விடுவார். கூடவே அவரைப்பற்றி பேசச்சொல்லி ஒரு ரெக்கார்டிங்கும் கேட்பார்.  திறமை, உழைப்பு..   தனது திறமையை விளம்பரமாக்கிக் கொள்ளும் திறமை.

தான் செய்வதை ரசித்துச் செய்கிறார். சிடுசிடுப்பதில்லை.     சிரித்த முகம்..  பேஸ்புக்கில் இருக்கிறார்.

இனி இரண்டாவது சம்பவத்துக்கு வருகிறேன்.

==============================================================================================================

பார்த்திருக்கிறீர்களா?  கேட்டிருக்கிறீர்களா?


பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி(65), பாரதியாரின் கவிதைகள், கட்டுரைகளை இந்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்காக கச்சேரி, சொற்பொழிவு வடிவில் உலகம் முழுவதும் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
பாரதியாருக்கு தங்கம்மா பாரதி, சகுந்தலா பாரதி ஆகிய 2 மகள்கள் இருந்தனர். தங்கம்மா பாரதி மகள் லலிதா பாரதி. இவரது மகன்தான் வெ.ராஜ்குமார் பாரதி. சிறு வயதிலே முறைப்படி கர்நாடக, ஹிந்துஸ்தானி இசைகளைக் கற்றுக் கொண்டவர்.
அடிப்படையில் பொறியாளரான இவர், இசை மீதான ஆர்வத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பாடகராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்படுகிறார். பாரதியார் போலவே தமிழ் மொழி மீது பற்றுக்கொண்டு தமிழ் புலமை பெற்ற இவர், இசைத் துறையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.
பாரதியார் பாடல்களை குறுந்தகடு வடிவில் வெளியிட்டு அதனைப் பரப்புவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
பாரதி பாடல்களுக்கு இசை: பாரதியாரின் பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார். சில திரைப்படங்களில் பின்னணிப் பாடல்களையும் பாடியுள்ளார். மற்ற தமிழ் அறிஞர்களைப்போல் ராஜ்குமார் பாரதியும் தமிழ் மொழியையும், பாரதியாரின் கவிதைகளையும், கட்டுரைகளையும் உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்.
ஆனால், அவருக்கு இதுவரை தமிழக அரசால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பாரதியாருக்குப் பின் அவரது கொள்ளுப்பேரனுக்கு அவர் செய்து வரும் சேவைகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இதுகுறித்து மதுரை மகாகவி பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றத்தின் செயலாளர் ரா.லெட்சுமிநாராயணன் கூறியதாவது: தமிழக அரசு பாரதியார் கவிதைகள், கட்டுரைகளை நன்கு கற்று அவரின் சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்து மக்களிடம் கொண்டு சேர்ப்போருக்கு `மகாகவி பாரதியார் விருது' வழங்குகிறது. அவர்களைப்போலவே பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியும், பாரதியார் கவிதைகள், பாடல்களைப் பாடியும், கட்டுரைகள் எழுதியும் சொற்பொழிவாற்றியும் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறார். மேலும், சமூக முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டு வருகிறார்.
தமிழ்நாடு தவிர ராஜ்குமார் பாரதி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, கனடா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தமிழ் சங்கங்களின் ஏற்பாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பாரதியாரின் கவிதைகளைப் பாடி தமிழ் மொழிக்கும், பாரதியாருக்கும் சிறப்புச் செய்து வருகிறார்.
பாரதியாரின் தேசியப் பாடல்களை முறையான சங்கீத சுருதி, ராகம், தாளத்தோடு பாடக்கூடியவர். கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்றாலும் அங்கு முதலில் பாரதியார் கவிதைகளைப் பாடுவார். பாரதியாரின் பெண் விடுதலை, பெண் உரிமை, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றி ராஜ்குமார் பாரதி தனது பேச்சால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
பாரதியின் கட்டுரைகளை சிறப்பான முறையில் சொற்பொழிவாற்றும் ஆற்றலைப் பெற்றவர். இவர் கலைமாமணி, சங்கீத நாடக அகாடமி விருது பெற்றுள்ளார். இந்த விருதுகளை அவர் பெற்றிருந்தாலும் இதுவரை தமிழக அரசு வழங்கும் ‘மகாகவி பாரதியார்’ விருது அவருக்கு வழங்கப்படவில்லை.
அதனால், 2023-ம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருதை தமிழக அரசு வழங்க வேண்டும். பாரதியாரின் குடும்பத்தினர், அந்த விருதை அவருக்கு வழங்க வேண்டும் என்று கூற மாட்டார்கள். பாரதியாரின் கொள்கைகளைப் பரப்பும், பின்பற்றும் எங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள்தான் கேட்க வேண்டும். இந்த விருதைபெற, பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதிக்கு முழு தகுதி உண்டு. தமிழ்மொழிக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பாடுபடுவோரைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவிக்கு வேண்டியது தமிழக அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: இந்து தமிழ் திசை - நன்றி கந்தசாமி ஸார். (முகநூல்)
==============================================================================================

நான் எடுத்தவைதான்... நீங்களும் ரசிக்க....

கத்திப்பாரா மேம்பாலம் கட்டப்படும்போதே அது ஆரம்பிக்கும் முன் அந்த இடத்தை புகைபபடம் எடுத்து வைக்க ஆசைப்பட்டேன். புறா பறக்கவிடும் நேரு சிலையுடன் வெளியூர் பஸ்கள் வந்து திரும்பி நிற்கும் இடம் அதுதான். அங்கு கணிசமாக பயணிகள் இறங்கி விடுவார்கள். ஆனால் எந்த இடத்தில நின்று எடுப்பபது என்று வாகாக இடம் கிடைக்காததால் அப்படி எடுக்க முடியவில்லை.

கீழே உள்ள படம் அசோக் பில்லர், உதயம் தியேட்டர் உள்ள இடம், உதயம் தியேட்டர் வாசலிலிருந்து எடுத்தேன். இப்போது என்ன மாறுதல் என்று உங்களுக்கு தெரியும்தானே? சாலையின் நடுவே பிரம்மாண்டமாய் மெட்ரோ ரயில் பாதை பாலம் செல்லும் இப்போது.


எப்போதும் காஃபியைத்தானே படம் எடுக்கிறோம்? எப்போதும் அதைத்தானே குடிக்கிறோம் என்று ஒருமுறை 'சாய்' ஆர்டர் செய்து அது வந்த உடன் எடுத்த படம். காஃபி என்றால் நுரையுடன் இருக்கும். 'ச்சாயி'ல் அது இல்லை! நீங்கள் 'ச்சாயை' அப்படியே குடிப்பீர்களா? இல்லை சாஸரில் ஊற்றி குடிப்பீர்களா? காஃபிக்கு ஆயிரம் சிங்கிநாதம் சொல்கிறோமே, தரமான சாய் என்பது எப்படி இருக்க வேண்டும்?


=====================================================================================================

பழசு ஒன்று மீளாய்...



பசுக்கள்
திரும்பி விட்டன
மேய்ச்சலிலிருந்து.
மேய்ப்பனைத்தான் காணோம்.
வெள்ளை மாடொன்றின்
கொம்பில்
மாட்டியிருக்கிறது
உடைந்த புல்லாங்குழலின்
துண்டு ஒன்று...

=====================================================================================

நியூஸ் ரூம் : பானுமதி வெங்கடேஸ்வரன்

கேரளா,திருவனந்தபுரத்தில் லாட்டரி சீட்டு விற்கும் ஒருவரிடம் லாட்டரி சீட்டு வாங்கிய அவரது மகளுக்கு ரூ.75 லட்சம் பரிசு விழுந்திருக்கிறது. மகளுக்கு கிடைத்த 75 லட்சத்தை தவிர ஏஜெண்டுகளுக்கு கிடைக்கும் பரிசு தந்தைக்கு கிடைக்குமாம். ஒரு கல்லுலரெண்டு மாங்காய்!

ராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோவில்,பொட்டகவயல் கிராமத்தில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி உள்ளது. ஜூன் 30ம் தேதி வங்கி நேரம் முடிந்ததும், அதன் மேலாளர் தன் நண்பரிடம் வங்கியை பூட்டி விட்டு செல்லும்படி சொல்லிவிட்டு, சென்றிருக்கிறார். அவரது நண்பர் பூட்ட மறந்து விட்டாராம்.. இரவு பத்து மணி வரை வங்கி பூட்டப்படாமல் இருந்ததை பார்த்த பொது மக்கள் ஊராட்சித் தலைவரிடம் கூற அவர் கலெக்டருக்கு தகவல் தெரிவித்து, அவர் நடவடிக்கை எடுத்ததன் பேரில் வங்கி மேலாளர் வந்து வங்கியை பூட்டியிருக்கிறார். இதில் ஒரு நல்ல விஷயம் பணம்,எதுவும் திருட்டுப் போகவில்லை.

கர்நாடகாவில் குடும்பத்திற்கு மாதம் 10 கிலோ அரிசி தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த் காங்கிரஸ், இப்போது, போதுமான அரிசியை மத்திய அரசு வழங்காததால் 5கிலோ அரிசியோடு, ரூ.170 ரொக்கம் அளிக்க முடிவு செய்திருக்கிறது.

கர்னாடகாவுக்கு ஆபத்து அதிக மழையால் பாதிப்பு நேரிடும். உலக அளவில் மூன்று தலைவர்க:ளின் உடல் நலத்திற்கு கேடு.…- பெங்களூரில் இருக்கும் ஒரு சாமியார் அருள்வாக்கு -  யாகவா முனிவர் நினிவுக்கு வரவில்லை?

ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இந்த வருடம் இந்தியாவிலிருந்து இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் மரகதமணி, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். போன்றவர்கள் இடம் பெறுகிறார்கள்.

பொறியியல் பொருள்கள் ஏற்றுமதியில் மூன்று ஆண்டுகளாக தமிழகம் முதலிடம்.

மைசூர் சந்தன சோப்பின் விற்பனையை உய்ர்த்த ஆலோசனை கேட்டிருக்கும் அமைச்சர். கர்னாடகத்தின் பெருமைக்குரிய தயாரிப்பான மைசூர் சந்தன சோப் தரமாக இருந்தாலும் 3% மட்டுமே ஏற்றுமதியாகிறது. இதை கூட்டுவதற்கு தொழில் முனைவர்களிடம் ஆலோசனை கேட்கப் பட்டிருகிறது. விற்பனை உயர்ந்து மணம் வீசட்டும். 



==============================================================================

பொக்கிஷம் :






55 கருத்துகள்:

  1. ஆனாலும் நாம் சென்றிருப்பது தம்பதிகளை ஆசீர்வதிக்க, அல்லது அவர்களிடமிருந்து ஆசி பெற என்பதை நினைவில் கொண்டு மேடை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த வேண்டும், பங்கெடுக்க வேண்டும். //

    டிட்டோ. ஸ்ரீராம்.

    ஆனா, நீங்க இதுக்கு முன்னால் சொல்லியிருக்கும் அத்தனையையும் ஆமோதிக்கிறேன்.

    இதில் கூட ஒன்று சேர்த்துக்கோங்க....இப்படி உறவுகள் பல நாட்கள் கழித்து சந்திப்பதில் - வேண்டாத விஷயங்களும் பேசப்படும்....விவாகரத்து முதல் மரணம் வரை. என்ன போட்டிருக்காங்க? பொண்ணு வீட்டுல? மாப்பிள்ளை வீட்டுல என்ன போட்டிருக்காங்க?
    "ஏய் நீ சாப்ட்டாசா? சாப்பாடு எப்படி? நல்லாருந்தா சாப்பிடுவேன் இல்லைனா நடையை கட்ட வேண்டியதுதான்....முந்தின பந்தில சாப்பிட்ட" ........." வந்து மெதுவா சொல்லிட்டுப் போனா....."....." நல்லால்லைனு.....

    எனவே எனக்குத் தோன்றும் சின்னதாகத் தானா சேரும் கூட்டத்தோடு நிகழ்வை முடித்துவிட வேண்டும் என்று. சும்மா வந்து வம்பு பேசி பேருக்கு அட்சதை போட்டு...உதட்டளவில் வாழ்த்தி, சோ ஸ்வீட்னு சொல்லி .....

    சும்மா....பாரு என்ன கூட்டம் மண்டபம் கொள்ளாம என்று தங்கள் நிகழ்வின் பெருமையைச் சொல்லிக்கவும், புள்ளிவிவரக்கணக்கு மாதிரி......

    உண்மையான மனதுடன் வந்து நெஞ்சார வாழ்த்தி நிகழ்வில் மனதார மகிழ்வுடன் கலந்து கொள்ளும் நாலு உறவுகள் நட்புகள் போதுமே என்று தோன்றும்.

    கூட்டம் கூட கூட சாப்பாட்டின் தரமும் தாழும் என்பது என் எண்ணம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பாட்டு தரம் சரியில்லைன்னா கொஞ்சம் சிரமம்தான் கீதா!! அதைச் சொல்லி காட்டியே காலி செய்து விடுவார்கள். ஆனால் எல்லோருடைய சுவைக்கும் தக்கவாறு உணவு தயாரித்தாலும் சிரமம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சுவை! வம்பு பேசுதல்.... ம்ம்ம்.. அது எங்குதான் இல்லை?

      நீக்கு
  2. அட! பாலாஜி! எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது ஆனால் தெரியும். ஜாலியானவர். கவனித்திருக்கிறேன். சட்டென்று எந்த நிகழ்வில் என்று நினைவில்லை. என்னை எடுக்கச் சம்மதித்ததில்லை!!!! யதேச்சையாக வந்திருப்பேனோ என்னவோ...

    யெஸ் ரொம்ப ரொம்ப ரசித்துச் செய்வார்.

    பாஸ் தரப்பு விழாவோ? அவங்க அம்மா இருப்பது தெரிகிறது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட..  பாலாஜியைத் தெரியுமா உங்களுக்கு?  அவர் பாகுபாடு எல்லாம் பார்க்க மாட்டாரே...

      நீக்கு
    2. விவேக் ஜோக்.....தெரியும் ஆனா அவருக்கு என்னைத் தெரியாது!!!! ஹாஹாஹாஹா...

      பாகுபாடு - படம் எடுப்பதில்தானே?!!!! ம்ஹூம்....ரொம்பக் கஷ்டப்பட்டு அவரிடம் சொல்லி .....ஆனால் எனக்குத் தெரியாமல் நேர வாய்ப்புண்டு. ஆனால் நல்ல கவரேஜ் ....அப்பொது இப்படியான பெரிய போர்ட் விளம்பரம் பார்த்த நினைவில்லை...ஆனால் மிக அழகாக தன் தொழில் விருத்தியை செய்வார். இவர் பழைய டெக்கில் போட்டு பார்க்கும் வீடியோக்களை பென் ட்ரைவில் போட்டுத் தரும் தொழில்நுட்பமும் செய்பவர். மடிப்பாக்கம் என்று நினைவு

      கீதா

      நீக்கு
    3. பாஸ் சித்தி வீட்டு விழாக்களில் இவர்தான் போட்டோகிராபர்.

      நீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான கோணத்தில் இன்றைய பதிவு..

    சிறப்பு..

    பதிலளிநீக்கு
  5. மனிதரின் மனோ பாவங்களை இயல்பாகச் சொல்லிச் செல்கின்றது பதிவு..

    அருமை..

    பதிலளிநீக்கு

  6. மூன்று விஷயங்கள் என்கிறீர்கள். ஆனால் வீடியோ மற்றும் வீடியோஎடுப்பவர் பற்றியே கட்டுரை உள்ளது. பாக்கி இரண்டு விஷயங்கள் எவை?
    அவை ராஜ்குமார் பாரதி பற்றிய கட்டுரையும் மாறிவரும் சென்னையைப் பற்றியதும் தானா?

    இங்கு கேரளத்தில் சாய் தான் பிரதானம், காபி விளைந்தாலும் காப்பிக்குடி மிக அரிது. கேரள மக்கள் கட்டன் சாய் என்கிற பால் இல்லாத சாயயை அதிகம் விரும்புவர். அதிலும் எலுமிச்சை சேர்த்து லெமன் டீ என்று குடிப்பார்கள்.

    ஒரிஜினல் சாய் என்பது கிறீன் டீ யை வெந்நீரில் இட்டு வடிகட்டி தண்ணீருக்கு பதில் குடிப்பது. அது தனி கலர். தனி சுவை.
    '
    ஜோக்குகள் போட்டோ போட்டோவாக இல்லாமல் ஸ்கேன் செய்தது போல் உள்ளது.

    ரிவேர்ஸ் மோர்ட்கேஜ் போன்று வரதட்சிணை தருவது நல்ல ஐடியா. வரும் 1000த்தை RD யில் போட்டு முழு தொகையை பின்வலிக்கலாம். மிளகாய் வற்றல் ஜோக் நிஜத்தில் நடப்பதுதான். 100 ல் இருந்து 300 ரூபாயாக விலை ஏறிவிட்டது. பச்சை மிளகாய் 120 ரூபாய். ஆமாம் ராஜிவ் காந்தி எப்போது தமிழ்நாடு பட்ஜெட் தயாரித்தார்?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது விஷயம் அடுத்த வாரமும், மூன்றாவது விஷயம் அதற்கடுத்த வாரமும் வரும்!

      மலையாலாக் கரையோரத்தில் சாய் பெருமை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்!  பேசனுக்கும் க்ரீன் டீ பற்றி சொல்லி இருந்தீர்கள்!

      ஜோக்ஸ் போட்டோவாக எடுத்ததுதான்.  ஸ்கேன் செய்யவில்லை!  பட்ஜெட் - அது கிண்டல்!

      நீக்கு
  7. பாரதியின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியைத் தெரியாமலா...!! அவர் பாடியும் கேட்டிருக்கிறேன். நன்றாகப் பாடுவார். இடையில் அவர் குரலுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது என்று நினைவு...சமீபத்தில் கேட்டதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அவர் பாடல் ஏழாவது மனிதன் படத்தில் கேட்தோடு சரி!

      நீக்கு
  8. கத்திப்பாரா இப்போது அந்த நேரு சிலை எங்கிருக்கு என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்...பாலம் இருக்கிறதே....நடுவில் வட்ட வடிவில் இருக்குமே அங்கா/? பல முறை சென்றிருக்கிறேன் அங்கு இருந்த வரை. ஆனால் நினைவு ம்ம்ம்ம்..

    அசோக் பில்லர் பழைய படம் சூப்பர்..... இடமும் நினைவிருக்கிறது இப்போதையதும்....மாற்றங்கள் தெரியுமே ஸ்ரீராம்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரு சிலை பாலத்தின் அடியிலேயே ஒரு ஓரத்தில் இருக்கிறது.  முன்னர் எப்போதோ படம் எடுத்தப் போட்டிருக்கிறேன்.  பேஸ்புக்கில் போட்டேனோ..   நினைவில்லை.

      இப்போது மெட்ரோ வரும் இடங்களையும் புகைப்படம் எடுத்து வைத்திருந்திருக்கலாம்!

      நீக்கு
  9. தேநீருக்கும் நுரை வரும் ஸ்ரீராம்....பாலைப் பொருத்து..நம் வீட்டில் முழு பாலில் தான் தேநீர் தயாரிப்பு. எனவே நுரை வரும் ஆனால் ஆற்றுவதில்லை...சின்ன விஷ்ணு சக்கரம் போல இருக்கும் electrical whipper மிகச் சிறிய சாதனம் மைத்துனர் வீட்டில் உண்டு. அதைப் போட்டு நுரைக்கவிடுவது.

    எனக்குக் கேரள வழக்கப்படி கட்டன் சாய், அதில் எலுமிச்சை பிழிந்து குடிப்பது பிடிக்கும். ஆனால் சர்க்கரை இல்லாமல்.

    ஆனால் சில வருடங்களாக பச்சைத் தேநீர் - green tea காலையில்...மதியம் என்று இரண்டு அல்லது மூன்று வேளை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காபியில் வரும் நுரை போல தேநீரில் வரும் நுரை நிலைத்து நிற்காது கீதா.. உடனே மறைந்து விடும்! ஏனோ எனக்கு க்ரீன் டீ மீது நம்பிக்கையும் இல்லை, விருப்பமும் இல்லை!

      நீக்கு
  10. கவிதை அருமை, ஸ்ரீராம்...மறைபொருளாய் சொல்லும் விஷயம் சோகம். ஒரு சின்னக் கதையே அதில் ஒளிந்திருக்கிறது. அதான் பசுக்கள் சோகத்தோடு இருக்கின்றனவோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  அது சோகமாய் இருப்பதுபோல தோன்றுவது கவிதையைப் படித்த நம் மனப்பிரமை!

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  வணக்கம்.  இறைவன் நம்மைக் காக்கட்டும்.

      நீக்கு
  12. நியூஸ் ரூம் செய்திகள் பார்த்தாச்சு. இந்த வருடம் பருவமழை பெய்கிறதா? ஒரு வேளை நகருக்குள் கார்மேகம் திரண்டாலும் இங்க எதுக்குப் பெய்யணும் என்று காற்று கடத்திக் கொண்டு சென்றுவிடுகிறது. வேறு எங்கேனும் பெய்யுமோ என்னவோ...

    அருள்வாக்குக்கு என்ன பஞ்சம் நம்மூரில்

    கீதா

    பதிலளிநீக்கு
  13. அருமை
    புகைப்படக்காரர் போற்றுதலுக்கு உரியவர்

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. நாங்கள் பட்டுக்கோட்டையில் ஒரு நண்பர் வீட்டுத்திருமணத்திற்கு போய் இருந்தோம். அவர்கள் வீட்டில் கல்யாணத்திற்கு வந்தவர்கள் கையில் சிறு குங்கும சிமிழ் போல் கொடுத்தார்கள், அதில் அட்சதை இருந்தது, அதனுடன் சிறு குறிப்பும் எழுதி வைத்து இருந்தார்கள். மணமக்கள் உங்களிடம் ஆசி பெற வருவார்கள், அப்போது அவர்களுக்கு அட்சதை போட்டு ஆசீவாதம் செய்யுங்கள் என்று.
    திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் வரிசையாக அனைவரிடமும் ஆசி பெற்று சென்றார்கள்.

    நான் இதை ஒரு பதிவில் போட்டு இருக்கிறேன்.

    வீடியோக்ராபர் பாலாஜி போல இருந்தால்தான் தொழிலில் வெற்றிப்பெற முடியும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! கோமதிக்கா, இது நல்ல விஷயம்.

      நான் வாசித்திருக்கிறேனோ இதை உங்கள் பதிவில்....லேசாக நினைவுக்கு வருகிறது

      கீதா

      நீக்கு
    2. ஆஹா.. நல்ல ஐடியா அது கோமதி அக்கா.

      நீக்கு
  16. பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதிக்கு விருதுகள் கிடைக்க வாழ்த்துகள். விருது பெற தகுதியானவர்தான்.

    பதிலளிநீக்கு
  17. பானுமதி வெங்கடேஸ்வரன் நியூஸ் ரூமில் சொல்லி இருப்பது போல கேரளாவில் உள்ள வைக்கம் கோவிலில் லாட்டரி விற்பவர்கள், வயதானவர்கள் நிறைய இருந்ததை பார்க்க முடிந்தது.
    அவர்களை படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. கவிதை அருமை, மற்றும் பொக்கிஷபகிர்வுகள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. ஆஹா! உப்புமால போடுற மிள்காய் வற்றலை நானும் வீணாக்கமாட்டேனே!!! தட்டுல போட்டா குப்பைத்தொட்டிக்குத்தானே போகும்னு தட்டில் போடும் முன்னரேயே எடுத்து தனியா வைச்சு....ஹிஹிஹிஹி..ஜோக்ல சொல்றாப்லதான்!!!!!

    டாக்டர் ஜோக் ரசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ...   நாங்கள் உப்புமாவில் மோர் மிளகாய் - வீட்டில் தயார் செய்தது - போடுவோம் என்பதால் சேர்த்து சாப்பிட்டு விடுவோம்!

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதியில் திருமண விழாக்களில் புகைப்படம் எடுப்பவரின் திறமையும், கவனிப்பும் பாராட்டத்தக்கது அவர் இந்த கலையில் மென்மேலும் முன்னேற்றமடைய வாழ்த்துகள்.

    நிறைய பேர், ஒரு விழாவில், பார்க்காமல் தவற விட்ட சுற்றத்தை பார்க்கவும், அந்த சமயத்தில் அவர்கள் தரும் தகவல்களுடன் பிறருக்கு கைப்பேசியில் பேசி மகிழவுந்தான் வருகிறார்கள்.ஒரு திருமண பந்தத்தில் மணமக்களுக்கு நெருங்கிய சுற்றங்கள் மட்டுமே, வேறு வழியின்றி மனதில் தோன்றும் எத்தனையோ வித போராட்டங்களில் ஏதோ ஒரு கடுப்புடன் அருகிலேயே உதவிக்காக நிற்பார்கள். பிறகு, உங்கள் சுற்றம் என்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் வேறு அவரவர் இல்லத்திற்கு திரும்பிய பின் இல்லத்திருக்கும் கணவன் மனைவியிடையே அவர்களுடனான புகைச்சல்கள் எழும். . இது வீட்டுக்கு வீடு வாசற்படி.. (பின்னே, வாசற்படி என்ற ஒன்றை வைக்காத/ இருக்காத வீட்டையும் யார் மதிப்பார்கள்.. :)) ) இது உலக இயல்பு.

    கவிதை ஒரே சோகம்.. மேய்ப்பவனை காணாத சோகம் பசுக்களின் முகத்தில். புல்லாங்குழல் உடைந்தாலும், மேய்ப்பவன் எப்படியாவது நலமுடன் வந்து சேர்ந்துவிட வேண்டும் இந்தப் பசுக்களுக்காக.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வேறு வழியின்றி மனதில் தோன்றும் எத்தனையோ வித போராட்டங்களில் ஏதோ ஒரு கடுப்புடன் அருகிலேயே உதவிக்காக நிற்பார்கள். //

      ஹா.. ஹா.. ஹா.. இது புதுசு!

      // பிறகு, உங்கள் சுற்றம் என்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் வேறு அவரவர் இல்லத்திற்கு திரும்பிய பின் இல்லத்திருக்கும் கணவன் மனைவியிடையே அவர்களுடனான புகைச்சல்கள் எழும் //

      ஆமாம்.. ஆமாம்.. நானும் கவனித்திருக்கிறேன்.

      நீக்கு
  21. வீடியோ எடுப்பவர் - ஆஹா... மகிழ்ச்சி. பாரதியாரின் வாரிசு - சிறப்பான தகவல்.

    மற்ற தகவல்களும், துணுக்குகளும் நன்று. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  22. திருமண காணொளி பற்றிய அலசல் சிறப்பு

    பதிலளிநீக்கு
  23. மூன்றில் ஒன்றின் முதல் பாதியில் சொல்லியிருப்பது உண்மை. திருமணத்துக்குச் செல்லுபவர்கள் சிந்திக்க வேண்டியது. பாராட்டுக்குரிய வீடியோகிராபருக்கு நல்லதொரு அறிமுகம். கவிதை சிறப்பு. தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    இன்றைய பகுதியில் மற்ற பகிர்வுகளும் நன்றாக் உள்ளன. பாரதியாரின் கொள்ளு பேரன் பற்றி அறிந்து கொண்டேன். அவரின் திறமைக்கு ஏற்றவாறு அவருக்கும் சிறந்த விருதுகள் தந்து அரசு கௌரவபடுத்த வேண்டும்.

    தாங்கள் எடுத்த படங்கள் அழகாக இருக்கிறது. நாங்கள் சென்னையிலிருந்தோமே தவிர நான் இங்கெல்லாம் ஒருபோதும் அழைத்துச் செல்லப்படவில்லை. உதயம் தியேட்டர் இப்போதுதான் வந்துள்ளதோ ? இப்போது சென்னையில் நல்ல மாற்றங்கள். காஃபி படத்திற்கு பதிலாக தேனீர் படமென்றாலும், எனக்கு அவ்வளவாக தேனீர் பிடிக்காததால், அந்தப் படம் ஒரளவு பிடித்துள்ளது.

    மனத்திற்குள் ஒரு இனம் புரியாத வலியுடன் கவிதையை மீண்டும் படித்து ரசித்தேன்.

    செய்தி அறை பகுதிகள் படித்து தெரிந்து கொண்டேன். தென்மேற்கு பருவ மழை இதுவரை இங்கு ஏமாற்றித்தான் வருகிறது.

    ஜோக்ஸ் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. வீடியோ எடுத்த நண்பருக்கு வாழ்த்துகள்...

    கவிதை வரிகள் - சிலவற்றை சிந்திக்க வைக்கிறது...

    பதிலளிநீக்கு
  26. நுரை பொங்க ஆத்தினால் காஃபி ஆறிடாதோ? எனக்கெல்லாம் கொதிக்கக் கொதிக்கக் காஃபி வேணும். இப்போத்தான் சில நாட்களாகப் பற்கள் தகராறு செய்வதால் பற்களில் படாமல் காஃபி குடிக்க வேண்டி இருக்கு! யாரு அங்கே இன்னும் பல்லைப் பத்திச் சொல்லலையேனு நினைச்சேன்னு முணுமுணுப்பது? அது எப்போவுமே உண்டு. அதிகம் கவனிச்சுக்க மாட்டேன். அதான் போலிருக்கு இப்போக் கோபம் வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  27. ராஜ்குமார் பாரதியின் கச்சேரிகளை நிறையக் கேட்டிருக்கேன். முன்னெல்லாம் பொதிகையில் தவறாமல் இடம் பெறும். நடுவில் அவர் குரலுக்குப் பிரச்னை வந்தப்போ ரொம்பவே வருத்தமா இருந்தது. மறுபடி பாட ஆரம்பிச்சாலும் முன்னத்தனை சிறப்பு இல்லை. :(

    பதிலளிநீக்கு
  28. பொதுவாகத் திருமணங்களிலே மண்டபம் அமைவதில் இருந்து ஆரம்பித்து, சாப்பாடு, அலங்காரங்கள், ஃபோட்டோகிராஃபர் ஆகியோர் அமைவதும் அதிர்ஷ்டத்தைப் பொறுத்துத் தான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!