இது ரொம்ப வருஷங்களுக்கு முன்பேயே நான் கற்றுக்கொண்ட குறிப்பு. காலை நேரத்தில் இட்லி, தோசையில் சலிப்பு வரும்போது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் பலகாரம். இதற்கு தக்காளி சட்னி மட்டுமே நல்ல பக்கத்துணை!
தேவையான பொருள்கள்:
சலித்த மைதா- 1 கப்
தேங்காய்த்துருவல் [ பூந்துருவல்]- ஒரு கப்
சலித்த அரிசி மாவு- 1 கப்
தேவையான உப்பு
சீரகம்- அரை ஸ்பூன்
ஓரளவு சூடான வென்னீர்
பத்ரி பொரிக்க தேவையான எண்ணெய்
செய்முறை:
மைதா, அரிசி மாவு, தேங்காய் துருவல் மூன்றையும் சீரகம், தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீரை ஊற்றி பிசைய வேண்டும். கொஞ்சம் அதிகமாக கவனக்குறைவாக தண்ணீர் சேர்த்தாலும் மாவு இளகி விடும்.
மாவை நன்கு பதமாகப்பிசைந்த பிறகு மூடி வைத்து விட்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் மீடியம் சூட்டில் இருக்க வேண்டும்.
ஒரு பட்டர் பேப்பரை ஒரு அடிக்கு ஒரு அடி என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு அதன் மீது எண்ணெய் தடவவும். இப்போது ஒரு நெல்லி அளவு மாவை உருண்டையாக எடுத்து மெலிதாக தட்டவும்.
உடனேயே எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
பத்ரி நன்கு உப்பி வரும்போது அதைத் திருப்பிப்போட்டு சிறிது வெந்த பின்பு எடுக்கவும். இரு பக்கமும் அதிகம் சிவந்து விடாதபடி பொரித்து எடுக்கவும்.
இது சூடாக சாப்பிடும்போது மிகவும் சுவையாக இருக்கும். இரண்டு பேராக செய்தால் ஒரு தடவைக்கு நாலைந்து போட்டு எடுக்கலாம்.
மேலும் சில குறிப்புகள் :இந்த பத்ரி வகை பலகாரங்கள் கேரளத்தைச் சேர்ந்தது. கேரள மக்கள் விரும்பி உண்ணும் இந்த PATHRI பொதுவாக பச்சரிசியில் செய்வது. அரிசி பத்ரி என்று சொல்லாமல் அரி பத்திரி என்று தான் சொல்லுவார்கள். இதில் நிறைய வகைகள் சுவையாய் செய்யப்படுகின்றன! சட்டி பத்ரி, முட்டை பத்ரி, நெய் பத்ரி, பால் பத்ரி என்று நிறைய உண்டு. நாம் இடியாப்ப மாவை தயாரிப்பது போலவே தான் இந்த பத்ரி பொடியும் செய்வது. வெள்ளயாக, மெல்லிய சப்பாத்திகளாக செய்யப்படும் இந்த அரி பத்ரிக்கு பக்கத்துணை அசைவ/சைவ குழம்பு வகைகள் தான்! கேரளத்திலிருந்து அடுக்கடுக்காக நிறைய பத்திரிகள் அவ்வப்போது உறவினர்கள் மூலமாக இங்கே நிறைய வீடுகளுக்கு வரும். பொதுவாய் இங்கே அமீரகத்தில் மலையாளிகள் அதிகமென்பதால் இங்கே எல்லா ஹைப்பர் மார்க்கெட்டுகளிலும் அரிசி பத்ரி பாக்கெட்டுகளில் கிடைக்கும். அதை இலேசாக சுட வைத்து கோழி, கறிக்குழம்புகளை பக்கத்துணையாக வைத்துக்கொண்டு சாப்பிடுவார்கள்..
********************************************************************************
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து..
பதிலளிநீக்குதமிழ் வாழ்க..
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
பத்ரி சாத்வீக உணவு..
பதிலளிநீக்குகுவைத்தில் இருந்தபோது சாப்பிட்டிருக்கின்றேன்...
மைதா கலந்து செய்ததை சாப்பிட்டதில்லை..
அதில் விருப்பமும் இல்லை..
மைதா கலக்கப்பட்ட உணவு வகைகளுடன் புலால் வகையாறாக்களும் சேர்ந்து கொண்டு உடலுக்கு தொல்லை கொடுக்கின்றன..
பதிலளிநீக்குஇன்றைய உணவு நாகரிகம் இதுவாகி விட்டது..
நமக்கெதுக்கு ஊர் வம்பு?..
பத்திரி பொரித்தெடுக்காமல் தோசைக் கல்லிலும் சுட்டு எடுக்கலாம். மிகவும் மெல்லிதாக பேப்பர் போன்று பூரிக்கட்டையால் தேய்த்து எடுத்து சப்பாத்தி போல் சுட்டு, தொட்டுக்கொள்ள மட்டன் ஷ்டியூ வைத்து அபாரமான இரவு/காலை உணவு ஆக கொள்வார்கள். .
பதிலளிநீக்குதற்போது கேரளத்தில் half cooked சப்பாத்தி போன்று half cooked பரோட்டாவும் கடைகளில் விற்க ஆரம்பித்து விட்டார்கள்.
Jayakumar
கேரளத்திலருந்து வரும் மசாலா தோசை, அப்பம், மசால்வடைமற்றும் பல உணவுகள் (தற்காலத்தில் வரும் சப்பாத்தி பரோட்டா போன்று) 2007லேயே கல்ஃப் தேசங்களில் கடைகளில் கிடைக்கும். சுவையில் குறையில்லை.
நீக்குஇன்றைய நலங்கொல்லிகளில் முன்நிற்பதாகிய ஷவர்மா அரைவேக்காடு தான்!..
பதிலளிநீக்குஅரிசி பத்ரியை வாங்கிச் சாப்பிட முனைந்திருக்கிறேன். எனக்குப் பிடிக்கவில்லை. இது மலையாளிகளுக்கே உரித்தான உணவு என்று நினைத்துக்கொண்டேன். (அது போல பாலக்காடன் மட்டா அரிசி)
பதிலளிநீக்குமைதா பத்ரி என்பது பூரி வகையில் சேர்ந்தது. நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இளவயது ஹாஸ்டலில் சப்பாத்தி, பூரிக்கு நிறைய மைதாவும் உபயோகிப்பார்கள். நன்றாக இருக்கும். மைதா பற்றிய பீதி, எச்சரிக்கை உணர்வு வந்த பிறகு அதன் உபயோகம் வெகுவாக்க் குறைந்துவிட்டது.
எனது குறிப்பான மைதா பத்ரியை இன்றைக்கு இங்கே வெளியிட்டிருப்பதற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
பதிலளிநீக்குபிறகு வருகிறேன்!
@ அன்பின் நெல்லை..
பதிலளிநீக்குஉறைநிலையில் சப்பாத்தி பரோட்டா வகைகள்
வளைகுடா நாடுகளில் கிடைக்கும். சுவையில் குறையில்லாதவை...
உண்மை தான்..
குவைத்தில் உணவக நிறுவனம் ஒன்றில் பல நிலைகளிலும் பொறுப்பாளராக இருந்திருக்கின்றேன்..
வளைகுடா நாடுகளின் உணவுப் பாதுகாப்புச் சட்டங்களைப் பற்றி இங்குள்ளவர்களுக்கு என்ன தெரியும்?..
அந்த மாதிரி விதிமுறை/ தண்டனைகளை நடைமுறைப் படுத்துவதற்கு இங்குள்ள உணவு ஏவாரிகள் தான் விட்டு விடுவார்களா?..
மைதா மாவுக்கு உரிய காலம் ஆறு மாதங்களே..
நம்ம ஊர் தெருவோரக் கடைகளில் ருசிப்போருக்கு
மைதாவின் நிலை தெரியுமா?..
மைதா பத்ரி விரும்புவோருக்கு நல்ல குறிப்பு.
பதிலளிநீக்குமலையாளிகளின் ஃபேவரிட் உணவு வகை பதார்த்தம்.
பதிலளிநீக்குநன்றாக வந்து இருக்கிறது.
மைதா பத்ரி செய்முறையும் படங்களும் அருமை.
பதிலளிநீக்குவேளச்சேரி யில் அப்பார்ட்மெண்ட் பூமிக்குள் இறங்கி விட்டதாமே...
பதிலளிநீக்குஸ்ரீராம் குடும்பத்தில் கௌதம் ஜி குடும்பத்தில் அனைவரும் நலம் தானே..
பதிலளிநீக்குநலமே !
நீக்குஇனிய கருத்துரைகள் சொன்ன அனைவருக்கும் அன்பு நன்றி!!
பதிலளிநீக்குஅருமை... நன்றாக உள்ளது...
பதிலளிநீக்குமைதா பத்ரி பற்றி இப்போதுதான் அறிய வருகிறேன். செய்முறை குறிப்பு அருமை. முயன்று பார்க்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு