புதன், 14 பிப்ரவரி, 2024

எந்தெந்த விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம்?

 

 பானுமதி வெங்கடேஸ்வரன்: 

குடும்பத்திலும்,வெளி வட்டாரத்திலும் எந்தெந்த விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம்? எவையெவற்றில் மற்றவர்களை கலந்து முடிவெடுக்க வேண்டும்?

# யாரையும் பாதிக்காத விஷயங்களில் தீர யோசித்து நாமே ஒரு முடிவு எடுக்கலாம். 

மற்ற விஷயங்களில் - பாதிக்கப்படும் நபர் அல்லது அவருக்கு நெருக்கமான நபர்கள் இவர்களைக் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது சரியாக இருக்கும் அல்லது பிரச்சனைகள் எதுவும் தோற்றுவிக்காததாக இருக்கும் .

நம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் பல நல்ல குணங்களை பார்த்தாலும், அவற்றை கடைப்பிடிக்க நாம் ஏன் முயலுவதில்லை?

& அப்படி முயலாமல் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நான் பொதுவாக நண்பர்கள், உறவினர்களிடம் நான் காணும் எனக்குப் பிடித்த நல்ல குணங்களை நானும் கடைபிடிப்பேன். 

= = = = = = =

எங்கள் கேள்விகள் : 

கீழ்க்கண்ட இரண்டிரண்டு பொருட்களில் உங்கள் தேர்வு அல்லது பிடித்தது எது? ஏன்? 

1) பெரிய கடுகு, சிறிய கடுகு 

2) பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் 

3) (மக்காச்) சோளக் கொண்டை, பேபி கார்ன் 

4) மாங்காய், மாவடு 

5) பெரிய உருளைக்கிழங்கு, பேபி பொட்டேட்டோ 

= = = = =   =

KGG பக்கம் : 

JTS ஆசிரியர்கள் பற்றி ஒவ்வொருவாராகக் குறிப்பிட்டு வருகிறேன். 

இரண்டாம் வருட படிப்பின் போது வரலாறு / புவியியல் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்கும் ஒரே ஆசிரியர். துரைராஜ் என்று பெயர். இரண்டு பாடங்களையும் நன்றாக சொல்லிக்கொடுத்தார். எப்பொழுதும் சாந்தமாகவே பாடம் நடத்துவார். 

சில சமயங்களில் கோபம் வரும்போது - " என்னை கோபமூட்டாதீர்கள்; நான் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவன். கோபம் வந்தால் - எங்கள் மாவட்டத்துக்காரர்கள் அருவாளைத் தூக்குபவர்கள். அப்படித் தூக்கினால் கொலை செய்யவும் அஞ்சமாட்டார்கள். நானும் அப்படித்தான்" என்பார். 

புவியியல் பாடத்தில் / பரிட்சையில் அவர் அடிக்கடி கேட்கும் கேள்வி : " சென்னை, பெங்களூர் மற்றும் மங்களூர் இவை மூன்றும் கிழக்கு மேற்காக ஏறக்குறைய ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. ஆனால் பெங்களூர் மற்ற இரண்டு இடங்களையுமவிட எப்பொழுதும் குறைந்த சீதோஷ்ண நிலையிலேயே எப்பொழுதும் இருக்கிறது. இதன் காரணம் என்ன? " 

அதற்கான காரணத்தையும் அவரே விளக்கினார். அதை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்! அதாவது 'கடல் மட்டத்திற்கு மேலே செல்லச் செல்ல, வெப்பம்  ஒவ்வொரு முன்னூறு அடி உயரத்திற்கும் ஒரு டிகிரி celcius குறையும். பெங்களூர் கடல் மட்டத்தைவிட மூவாயிரம் அடிகள் மேலே அமைந்துள்ளது. எனவே பெங்களூர் -  சென்னை, மங்களூர் போன்ற கடல் மட்ட நகரங்களைவிட குறைந்த சீதோஷ்ண நிலையில் உள்ளது' ஒவ்வொரு பரிட்சையிலும் இந்த பதிலை எழுதி முழு மதிப்பெண்கள் பெற்றேன். கேள்விகள் கொஞ்சம் மாற்றம் இருக்கும். Why Ooty is cooler than Coimbatore? போன்று சிறிய மாற்றங்கள் இருந்தாலும் விடை ஒன்றுதான்! 

பெங்களூர் குளிரை அனுபவிக்கும் இந்த நாட்களில் ஆசிரியர் துரைராஜ் ஞாபகம் அடிக்கடி வரும். சென்னை, பெங்களூர் மங்களூர் உட்பட எல்லா ஊர்களையும் பார்த்ததும்  அவற்றின் சீதோஷ்ண நிலையை உணர்ந்ததும் எனக்கு வாய்த்தது அதிசயமே! 

அவருடைய காலத்தில்தான் நான் சோசியல்ஸ்டடீஸ் பாடத்தில் நூற்றுக்கு தொன்னூற்று ஐந்து மதிப்பெண்கள் எல்லாம் வாங்கி  அசத்தினேன். 

ஆங்கிலப் பாடத்திலும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அதற்குரிய தமிழ்ச் சொல் கூறி விளக்குவார். to - என்றால் க்கு என்பதை சொல்ல அவர் கூறிய விளக்கம் : " when you say " give 2 idlies to the child " it means பாப்பாவு'க்கு' இரண்டு இட்லி கொடு. - இதில் உள்ள 'க்கு' என்பதுதான் ஆங்கிலத்தில் 'to'. எவ்வளவு எளிய விளக்கம் ! இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது. எப்பொழுதும் ஞாபகம் இருக்கும். 

= = = = = = =

36 கருத்துகள்:

  1. காலை வணக்கம்! காதலர் தின வாழ்த்துகள்!காலமெல்லாம் காதல் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே! நம்ம ஆசிரியர்கள் வாசகர்கள் எல்லோரும் கி கா!!

      நீக்கு
    2. ஹாஹாஹா! கௌ அண்ணா ஆசிரியர்களும் வாசகர்களும் கி கா >???!!!! யாரங்கே!!! பஞ்சாயத்தை கூட்டுங்க!

      முதல் கண்டனம் கி என்று சொன்னதற்கு!!!!!!!!! ஹிஹிஹிஹி

      அடுத்த கண்டனம் - கி காக்களுக்குக் காதல் வரக் கூடாதா!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    3. முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூட வரும் என்று பாடி இருக்கிறார்கள் .

      நீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. சிறிய கடுகுதான் என் தேர்வு. அதில்தான் ருசி இருப்பதாகத் தோன்றும்.

    இரண்டு வெங்காயமும் தேர்வுதான். வெங்காய சாம்பார் தவிர மற்றவைக்கு பெரிய வெங்காயம் ஓகே. சட்னு வேலை முடியும்.

    பேபிகார்ன் என் ஏரியா அல்ல. பெரிய சோளம்தான்.

    மாங்காய் மாவடின் உபயோகம் வெவ்வேறு. பொதுவா மாங்காய் எனக்குப் பிடித்தமானது.

    பெரிய உருளை பேபி பொட்டடோ இரண்டுமே நல்லது என்றாலும் பேபி கார்ன் போல, பேபி உருளையின் உபயோகம் குறைவு.

    அது சரி..வளர்வதற்குமுன் பறித்து, இளமையிலேயே வாழ்க்கையை முடிப்பது சரிதானா? வடு, உருளை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளர்வதற்கு முன்பே .. எனக்கும் அப்படித் தோன்றுவதுண்டு.

      நீக்கு
  4. ஆசிரியர் துரைராஜ் அவர்களைப் பற்றிய செய்தி சிறப்பு..

    பதிலளிநீக்கு
  5. பானுக்க உங்க கேள்வி இன்னும் கொஞ்சம் Specific ஆக இருந்திருக்கலாமோ? அதாவது குடும்பத்தின் கணவனா, மனைவியா, குழந்தைகளா? இதைப் பொருத்துதானே பதில் இருக்க முடியும்!

    மனைவிக்குச் சில power அதாவது பண ரீதியாக அல்லது அந்த மனைவிக்கு/பெண்ணிற்கு உரிமைகள் இருந்தால்தான் சில விஷயங்களில் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியும். பொருளாதாரத்திற்குச் சார்ந்திருக்காமல் இருக்க நேரும் பெண்களுக்குக் கூட அந்த உரிமைகள் கொடுக்கப்பட்டிருந்தால்தானே முடிவு எடுக்க முடியும் இல்லையா?

    ஓவ்வொருவருக்கும் personal space இருக்கலாம் கொடுக்கப்படலாம் இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்தைப் பொருத்துதான் இது.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. சில குழந்தைகள் வளர்ந்த பிறகும் கூட அதாவது adult ஆன பிறகும் கூட பெற்றோரைச் சார்ந்துதான் இருப்பார்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாமல் எடுப்பார்க்கைப்பிள்ளைகளாக மாறுவதும் உண்டு. குடும்பத்திலேயே!! அதாவது ஆண் தன் மனைவிக்கு (மனைவி dominating personality) ரொம்ப அடங்கிச் செல்பவராக செல்லும் சூழலில் இருந்தால் தன் பெற்றோர் விஷயத்தில் முடிவு எடுப்பதற்குச் சிரமப்படுவார்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஊரில், திருவனந்தபுரத்தில் இருந்தவரை பெரிய கடுகுதான் அங்கு கிடைக்கும். (இப்போது சின்னது கிடைக்குமாக இருக்கலாம். இப்பதான் சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்டனவே!) சென்னை வந்த பிறகுதான் சிறிய கடுகு பார்த்தேன்.

    எனக்கு இரண்டுமே ஓகே. இரண்டுமே நன்றாகப் பொரிய வேண்டும். கடுகு தாளிப்பு ரொம்பப் பிடிக்கும். தயிர்சாதத்திற்குப் போடும் போது சின்னது போட்டால் நல்லாருக்கும் பார்க்க. பெரிசு போட்டால் முழித்துக் கொண்டு தெரியும்!! குழம்பு ரசம் போன்றவற்றில் பெரிசு போட்டாலும் ரொம்பத் தெரியாது.

    மாங்காய், மாவடு இரண்டுமே பிடிக்கும். மாவடு தானாக விழுந்தவற்றை எடுத்துக் கொண்டால் ஓகே. ஆனால் மரத்தில் இருந்தால் வடுவை பெரிதாகும் முன்னர் பறிக்க வேண்டுமா என்று தோன்றும். ஊரில் வீட்டிலும் மாமரம் இருந்தது, மாமியார் வீட்டிலும் மாமரங்கள் உண்டே!!! அப்போது மாமியார் பச்சையாக விழுந்ததைத்தான் பொறுக்கி எடுத்துப் போடுவாங்க. பறிக்க மாட்டாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பெ வெ சி வெ இரண்டுமே பிடிக்கும் சிலதுக்கு சி வெ சிலதுக்கு பெ வெ.

    மக்காச்சோளம் ரொம்பப் பிடிக்கும். பேபிகார்ன் சூப் மற்றும் மஞ்சூரியன் பிடிக்கும்.

    பெரிய உகி குகி இரண்டுமே பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. துரைராஜ் சார் மிக அருமையான ஆசிரியர்.

    //" சென்னை, பெங்களூர் மற்றும் மங்களூர் இவை மூன்றும் கிழக்கு மேற்காக ஏறக்குறைய ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. ஆனால் பெங்களூர் மற்ற இரண்டு இடங்களையுமவிட எப்பொழுதும் குறைந்த சீதோஷ்ண நிலையிலேயே எப்பொழுதும் இருக்கிறது. இதன் காரணம் என்ன? " //

    இந்தக்கேள்வி ஒரு வழக்கமான கேள்வியாக இருந்தது அப்போது. பரீட்சைகளில்.

    அதே விடைதான். என்றாலும் பாருங்க இப்ப பெங்களூரின் நிலைமை !!
    இப்ப el nino la nino பற்றியும் சொல்லிக் கொடுப்பாங்க என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. to வுக்கான விளக்கம் உதாரணம் சூப்பர். இப்படி உதாரணங்களுடன் ஆங்கிலத்தில் உள்ள சில இப்படியானவற்றிற்குச் சொல்லிக் கொடுத்தால் எங்கு to, எங்கு for, between எல்லாம் போட வேண்டும் என்று பள்ளியிலேயே சொல்லிக் கொடுத்தால் இன்னும் நன்றாக விளங்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சிறிய கடுகுதான் . பெரியது கறிகளில் முழிப்பதுபோல இருக்கும்.

    சின்னவெங்காயம் பிடிக்கும். குறைவாகப் போட்டாலே கறிகளில் மணம் இருக்கும்.

    பேபிகோன்,பெரிய சோளம், இரண்டுமே பிடிக்கும்.

    மாங்காய்தான்.

    கிழங்கு இரண்டுமே பிடிக்கும் வெவ்வேறு உபயோகத்துக்கு.

    Kgg பக்கம் நல்ல ஆசிரியர் கிடைத்தால் மதிப்பெண்களுடன் பாடத்தில் பிடிப்பும் வரும்.

    பதிலளிநீக்கு
  12. சில ஆசிரியர்களின் நினைவு இப்படித்தான் நம்முடன் எப்போதும் பயணிக்கிறது. ஒவ்வொரு 300 அடிக்கும் 1 degree குறையும் போன்ற தகவல் அது போன்று க்கு என்பது ஆங்கிலத்தில் to எல்லமே அருமை. to வின் அர்த்தம் மட்டுமல்ல அந்த உதாரண வரியையும் அல்லவா இவ்வளவு வருடங்கள் ஆஅகியும் மறக்காமல் இருக்கச் செய்துவிட்டார்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. 1) பெரிய கடுகு, சிறிய கடுகு

    சிறிய கடுகுதான் பிடிக்கும்.

    பெரிய கடுகு எடுத்து எடுத்து வைப்பேன். கடுகு கொஞ்சமாய் போட வேண்டும் எனக்கு.

    2) பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம்
    சிறிய வெங்காயம் போட வேண்டியதற்கு அது போட்டால் தான் சுவை.


    3) (மக்காச்) சோளக் கொண்டை, பேபி கார்ன்

    மக்காசோளம் தான் சுவை. பேபி கார்னைவிட

    4) மாங்காய், மாவடு

    இரண்டும் பிடிக்கும்


    5) பெரிய உருளைக்கிழங்கு, பேபி பொட்டேட்டோ

    இரண்டும்

    பதிலளிநீக்கு
  14. துரைராஜ் சார் பற்றிய செய்திகள் அருமை. நல் ஆசிரியர்கள் என்றும் நினைவுகளில் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அருமை.

    பெரிய கடுகு வெடித்தாலும், அமைதியாக கடாய்யுனுள் இருக்கும். சிறிது படபடவென பொரிந்து விட்டு முக்கால்வாசி வெளியே ஓடி விடும். அ தற்கு கோபம் அதிகம்.

    இரண்டுமே கிடைக்கும் சமயங்களுக்கேற்ப பயன் படுத்துவேன். .

    பேபி கார்ன் மக்காச்சோளம் என எதையுமே நாங்கள் அவ்வளவாக பயன்படுத்தியதில்லை. இப்போதும் எங்கள் பெரிய குழந்தைகள் அவ்வளவாக விரும்புவதில்லை. பேரன் பேத்தி விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால், பெண் வயிற்று பேத்திக்கும் பிடிப்பதில்லை.

    பெ. வெ சி. வெ அனைத்துமே உபயோகத்தில் உண்டு. அது போல் மாங்காயும், , வடுவும். . வடு இப்போது சாப்பிடுவதில்லை. உ. கியும் சின்னதை விட பெரியதுதான் அதிக உபயோகம்.

    தங்களுக்கு கிடைத்தமாதிரி நல்ல வாத்தியார் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருந்தால் நன்றாக இருந்துருக்கும் ம். வாத்தியார் என்ற பயமின்றி பாடங்களை அழகாக புரிந்து கொள்ளலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. கேள்வி பதில்கள் நன்று. ஆசிரியர் குறித்த குறிப்புகள் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!