செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

சிறு தொடர்கதை : மோனா, மோனிகா, மனிஷா மற்றும் புழக்கடை மோகனா: 2/5 - அப்பாதுரை



    காவல் நிலையத்தில் அதிக அரவமில்லை. ஒரு டியூடி எஸ்ஐ, ஒரு டியூடி பதிவாளர், ஒரு ஏட்டு... மூவரும் சாத்தியிருந்த விசாரணையறையை அவ்வப்போது ஆர்வத்துடன் நோட்டமிட்டனர். அறையுள் காலை ஒன்பது மணிக்கு ஹோட்டல் மேனேஜர் அழைத்து வந்த மதன் ஹரி குழுவினர் இருந்தனர். ரகுவும் ஷோபாவும் வரவில்லை. சீனியர் எஸ்ஐ ரதி அவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார். விசாரணை விவரங்களை உடனிருந்த உதவிப் பதிவாளர் ஒலிப்பதிவு செய்தபடி குறிப்புகளும் எடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய டீ மட்டும் குடிக்கப்படாமல் குளிர்ந்து கொண்டிருந்ததில் அவருக்கு சற்றும் உடன்பாடில்லை.

 
    "மணி பத்தாயிடுச்சு. இன்னிக்கு நிறுத்திக்குவோம். உங்க பிள்ளைங்க போட்டோக்கள் இன்னும் சில வேணும். உங்களை தனித்தனியா விசாரிக்க வேண்டியிருக்கும். நீங்கள்ளாம் பெங்களூருனு விவரம் குடுத்திருக்கீங்க. ஆனா இன்னும் சில நாட்களுக்கு நீங்க இந்த ஊரிலேதான் இருக்கணும்" என்ற ரதி, நிலைய வாசலில் அரவம் கேட்டுத் திரும்பினார். "எங்க பிள்ளைகள் கிடைக்கிற வரை நாங்க இந்த ஊரை விட்டுப் போறதா இல்லை" என்ற ஹரியின் வார்த்தைகள் ரதியின் காதில் விழவில்லை. அறைக்கதவு தட்டப்படாமல் திறந்த வேகத்தில் அனைவரும் சற்றே அதிர்ந்து திரும்பினர். அறையுள் நுழைந்தவர்களைப் பார்த்ததும் இன்னும் அதிர்ந்தனர். டியூடி எஸ்ஐ மற்றும் இரண்டு காவல் அதிகாரிகள், கைகளில் விலங்கிடப்பட்டு நடுத்தர வயது தாடி ஆசாமி ஒருவர், ..தொடர்ந்து.. அச்சமும் குழப்பமும் கலந்த முகத்துடன் மோனிகா.

 
    "அம்மா" என்று ஓடிவந்து ஸ்வேதாவைக் கட்டிக்கொண்டாள் மோனிகா. உடன் சேரப்போனவர்களைத் தடுத்தார் ரதி. "கொஞ்சம் பொறுமையா இருங்க". டியூடி எஸ்ஐ, ரதிக்கு மென்மையான வணக்கம் வைத்தார். "மேடம், இவங்க நம்ம ரோந்து ஏட்டுங்க ஜார்ஜும் தேவாவும்" என்றார். ஜாவும் தேவும் ரதிக்கு தலா ஒரு சல்யூட் வைத்து, "மேடம், இந்தப் பாப்பா இந்தாள் வீட்டுவாசல்ல நின்னு அழுதுட்டிருந்துச்சுங்க. சாரிச்சப்ப எதுவும் பேசாம பிராந்திப் பிடிச்சாப்ல விசும்புதுங்க. வீட்டுக்கதவு தட்டி சாரிச்சப்ப உள்ளே இந்தாளு நல்ல போதைல தூங்கிட்டிருந்தாரு. தனக்கு ஏதும் தெரியாதுன்றாரு. ஆனா அவரைப் பாத்ததும் பாப்பா நடுங்கறதைக் கவனிச்சோம். உடனே அரெஸ்ட் செஞ்சு உங்க மேல்விசாரணைக்கு ஸ்டேஷன் கூட்டி வந்தோம்" என்றனர். ஏதாவது மெடல் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்கள் முகத்தில். "அவரை வெளிலே உட்கார வைங்க பத்து நிமிஷம், இப்ப நீங்க போகலாம்" என்ற ரதி டியூடி எஸ்ஐ காதில் ஏதோ சொன்னார். மெடல் கிடக்கட்டும், ஒரு நன்றி கூட கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்துடன் காவல் அதிகாரிகள் தாடி ஆசாமியுடன் வெளியேறினார்.

 
    சிறிது நிதானமடைந்திருந்த ஸ்வேதாவிடமிருந்து மோனிகாவை விலக்கினார் ரதி. "ஆர் யூ ஆல்ரைட்?" என்றபடி எஸ்ஐ கொண்டு வந்த ஒரு சிறிய போர்வையைப் போர்த்தினார். "குடிக்க ஏதாவது வேணுமா? தண்ணி? பால்? ஹாட் சாக்லேட்? உன் பெயர் என்னம்மா?". பதில் சொல்லாமல் வெறித்த மோனிகாவை விட்டு ஸ்வேதாவிடம் "உங்க மகளை விசாரணை செய்ய வேண்டும். போலீஸ் மருத்துவரை கூட்டி வரச்சொல்லியிருக்கேன். இப்ப வருவாரு, உங்க பெண்ணை ஹெல்த் செக் பண்ண" என்றார்.

 
    அதுவரை வெறித்த மோனிகா புன்னகைத்தாள் . "எனக்கு ஹாட் சாக்லேட் வேணும்" என்றாள். உதவிப்பதிவாளரிடம் சைகை காட்டிய ரதி, "உன் பெயர் என்னம்மா?" என்றார் மறுபடி.

 
    "மோனிகா"

 
    "உனக்கு எத்தனை வயசாகுது?"

 
    "ஒன்பது"

 
    "வயசுக்கு வந்துட்டாங்களா?" என்றார் ஸ்வேதாவிடம். அதிர்ந்த ஸ்வேதா பதில் சொல்லுமுன் "நோ" என்றாள் மோனிகா.

 
    "சாரி. இதெல்லாம் பெண் பிள்ளைகள் கிட்டே கேட்டே ஆக வேண்டிய கேள்வி. யு ஆர் ஸ்மார்ட். எங்கே படிக்கிறே?" என்று வரிசையான பின்புல விசாரணைக் கேள்விகளுக்கு பதில் அளித்தாள் மோனிகா. ஏட்டு கொண்டு வந்த ஹாட் சாக்லேட்டை வாங்கிக்கொண்டாள். 

"நீ மோனாவையோ மனிஷாவையோ பார்த்தியாமா?" என்று ரதி தொடர்ந்தார்.

    "ஆபீசர், என் பெண்ணைக் கொஞ்சம் சாப்பிட விடுங்க.." என்று அருகில் வந்து மோனிகாவின் தோளைத்தொட்டான் ஹரி. "மோனி.. சாப்பிடுமா" என்றான். அதுவரை அமைதியாக இருந்த மோனிகா சீறினாள். ஏறக்குறைய ஒரு வனவிலங்கின் குரல். கையிலிருந்த சூடான பானத்தை ஹரியின் முகத்தில் வீசினாள். ஹரியைப் பார்த்த பார்வையில் கணநேரம் தீவிர வெறுப்பு இருந்தது. அடுத்த கணத்தில் மாறி "அப்பா" என்று கட்டிக்கொண்டாள். திடுக்கிட்ட ஹரி சமாளித்து, "ஆல்ரைட்ரா செல்லம்" என்றான்.

 
    "நான் அந்தாளை விசாரிக்கிறேன்" என்று எழுந்த ரதி, "டாக்டர் வந்து பார்த்ததும் நீங்க எல்லாரும் ஹோட்டல் திரும்பலாம். கொஞ்சம் ஓய்வெடுங்க, பயப்படாதீங்க, சீக்கிரமே மத்த பிள்ளைகளையும் கண்டு பிடிச்சுடுவோம்" என்று வைசாலியைத் தட்டிக் கொடுத்து வெளியேறினார். 

***
   

 ரகுவின் அறைக்கதவைத் தட்டினர் மதனும் வைசாலியும். "எதனா தெரிஞ்சுதா?" என்றான் கதவைத் திறந்த ரகு. "எப்படி இருக்கு ஷோபாவுக்கு?" என்ற வைசாலி பதிலுக்குக் காத்திராமல் உள்ளே சென்றாள். "மோனி கிடைச்சுட்டா. வித் ஹரி. கிளீன் பண்ணிட்டு இங்கே வருவாங்க", மதன் ரகுவைத் தோளில் தட்டினான். "ஷோ எப்படி இருக்கா? மோனி ஒரு தாடிக்கார ஆசாமி வீட்டு வாசல்ல நின்னுட்டிருந்ததா போலீஸ் சொல்லுது. புரியலே. நேத்து அவ மனிஷாவையும் மோனாவையும் தேடி ஷோபா கூட போனதா ஹரி சொல்லலே? ஹோட்டலை விட்டு வெளியே போக வாய்ப்பே இல்லை. ஷோபா மட்டும் இங்க இருக்க இவ எப்படி ஹோட்டலை விட்டு அதுவும் எங்கியோ தெருவுல.. நமக்கு எதிரா யாராவது.."

 
    "கதிர்காமம் மோகனானு சீட்டுல எழுத்துக்கள் மாறினப்பவே எனக்கு ஒரு சந்தேகம்" என்ற ரகு, குரல் தாழ்த்தி "அந்த மோகனாவா இருக்குமோ? பழி கிழி வாங்கறாளா சொன்ன மாதிரி?" என்றான்.

 
    "இத்தனை வருஷம் கழிச்சு நாம ஒண்ணா வந்திருக்குறது தெரிஞ்சு சும்மா விளையாடிப் பாக்கறாளா? இன்னும் உயிரோட இருக்காளா ஒருவேளை?"

 
    "எதுக்கு அனாவசியமா கலங்குறே ரகு? நாம என்ன, குத்தம் செஞ்சுட்டு தலைமறைவா ஓடினமா? ? ஓகே சரி .. அப்படியென்ன பொல்லாத குற்றம் செய்தோமா? ஓகே சரி .. அந்த வயசுல எல்லா ஆண்களும் செய்யாத குத்தம் ஒண்ணும் செய்யலியே?"

 
     "மதன்.. நீதான் இப்ப கலங்குறே. எதுவா இருந்தாலும் நாம எதிர்கொண்டு தான் ஆவணும். ஆனா இப்ப இந்த சமயத்துல இது போல நடக்குறதைப் பத்திக் கேக்குறேன். உயிரோட இருந்துட்டு நம்ம பசங்களைப் பிடிச்சு வச்சு விளையாடறாளா? ஏன்? அதுவும் பேப்பர்ல எழுத்துங்க.."

 
     "பேப்பர் எழுத்துங்க எனக்கும் புதிர்தான். ஆனா மோகனா இறந்ததை நாம எல்லாருமே பார்த்தமே? உயிரோட இருந்தா பதினாறு வருஷம் கழிச்சுதான் பழி வாங்கணுமா? அதுவும் நாம இப்ப வந்திருக்குறது கன்னியாகுமரி. கண்டி எங்கே கன்னியாகுமரி எங்கே?"

 
    அவர்கள் பேசுகையில் கதவைத் திறந்து கொண்டு ஹரி, ஸ்வேதா, மோனிகா மூவரும் வந்தார்கள். ஸ்வேதாவும் மோனிகாவும் உள்ளே செல்ல, ஹரி மதனருக்கே உட்கார்ந்தான். "மோனியைக் கூட்டிட்டு இப்பவே ஊர் திரும்பணும்னு தீர்மானமா இருக்கா ஸ்வேதா" என்றான்.

 
    "என்னடா இது? மனிஷாவும் மோனாவும் கிடைக்க வேணாமா? நீ ஓடறியா? அப்பவும் நீதான் முதல்ல ஓடினே.." என்றான் மதன். ஹரிக்குக் கோபம் வந்தது. "என்னடா பினாத்துரே?"  

    ரகு இயல்பாக மறித்தான். "டேய் டேய்.. அமைதிடா. ஹரி.. நீ வரப்ப நாங்க மோகனா பத்தி பேசிட்டிருந்தோம். நீதானே அன்னைக்கு கண்டில முதல்ல ஓடினே? ஜஸ்ட் எ ஸ்டேட்மென்ட், அவ்வளவுதான். நாம எல்லாருமே கலங்கியிருக்கோம்"

 
    "அவனோட பொண்ணு கிடைச்சதும் கழண்டுக்கறான் பாரு"

 
    "மதன் சும்மா இருடா" என்றான் ரகு. "ஸ்வேதாவோட மனநிலையை சொல்றான் ஹரி, அவ்வளவுதான். அதுல தப்பு ஒண்ணும் இல்லையே? பிள்ளை பிழைச்சு கிடைச்சா முதலில் எனக்கும் அப்படித்தான் தோணும். உனக்கும். ஹரி நீ இப்பவே கிளம்புறதுல அர்த்தம் இருக்கு. போய் அவங்களைக் கொண்டுவிட்டு வரியா? எனக்கென்னவோ பதினாறு வருஷம் முன்னே நம்ம வாழ்க்கைல குறுக்கிட்ட அமானுஷ்யம் திரும்பி இருக்குறதா தோணுது.. நாம அதுக்கு ஒரு முடிவு கட்டிடணும்"

 
    "இல்லடா. ஸ்வேதாவையும் மோனியையும் மதுரைல அவ சித்தப்பா வீட்டுல விட்டு உடனே திரும்பிடுவேன். உங்களை விட்டு போயிடுவனா? நம்ம மத்த பிள்ளைங்க கிடைக்கிற வரைக்கும் நான் இந்த இடத்தில்தான் இருப்பேன்"

 
    "சாரிடா ஹரி, நான் சரியான முட்டாள்" என்றான் மதன்.

 
    "தெரியாத விஷயம் புதுசா இருந்தா சொல்லுடா" என்ற ஹரி, "டேய் ரகு, புதுசா ஒரு ஆளை காலைல ஸ்டேஷன்ல பார்த்தோம். கலைஞ்ச பேன்ட் சட்டை, மேலே ஒரு பிலேசர், தடுமாறும் நடை, கழுத்தளவு வளர்ந்த தலைமுடி, ரெண்டு நாள் தாடி, மீசை, சிவந்த முகம், நெத்திப்பொட்டு எல்லாம் பார்த்ததும் நான் ரொம்பப் பயந்தேன். பெடோ கேசா இருக்குமோனுட்டு..அந்தாளு இந்த ஹோட்டல்ல பழைய சமையல்காரராம். சமையல் வேலை பிடிக்காம பாதிரி வேலை, பூசாரி வேலை, முனி ஆராய்ச்சி... அட்டகாசமா இங்லிஷ் பேசுறான். கேடரிங் படிச்சுட்டு கிறிஸ்டியன் தியாலஜிலயும் டிகிரியாம். ஆனா இப்ப யேசு தாள் பணியாம பேகன் வழிபாடுனு திரியறான்.

 
    "pagan?" என்றான் மதன்.

 
    "ஆமடா. அவனை ரிலீஸ் பண்ணிட்டாங்க.. ஸ்கேரி பட் ஹார்ம்லெஸ் ஆசாமி. ஒண்ணும் பயமில்லே" என்று ஹரி சொல்லி முடிக்கவும் உள்ளிருந்து ஷோபாவின் அலறல் கேட்டது. தொடர்ந்து மோனிகாவின் அலறல். தொடர்ந்து ஸ்வேதாவின் அலறல். நண்பர்கள் விரைந்தனர்.

 
    திமிறிக் கொண்டிருந்த ஷோபாவைக் கட்டி அடக்கிக் கொண்டிருந்தாள் வைசாலி. சற்று தள்ளி அழுது கொண்டிருந்த மோனிகாவை அணைத்துக் கொண்டிருந்தாள் ஸ்வேதா. "ஐம் சாரி ஷோ. நீ இப்படி ஒரு மிருகமா இருப்பேனு நான் நினைக்கவே இல்லை. உன் பிள்ளை தொலைந்ததற்காக என் பெண்ணை அதுவும் உன் வீட்டில் வளர்ந்த ஒரு பெண்ணை இப்படியா கை நீட்டி அடிப்பே? சீ! நீயும் ஒரு தாயா?" என்று சீறினாள்.

 
    திமிறிக்கொண்டிருந்த ஷோபாவின் சொற்களில் பொருளில்லை. "ப்லீஸ் ஸ்வேதா" என்றான் ஹரி.

 
    "ஐ டோன்ட் கேர். நான் இப்பவே என் பெண்ணோட ஊருக்கு போறேன். ஒரு நொடி கூட என்னால இங்கே இருக்க முடியாது" என்று எழுந்த ஸ்வேதாவை அடக்க முயன்ற ஹரியைத் தடுத்த ரகு, "நீ போய்வா ஸ்வேதா. மோனிகாவோட நலம் தான் முக்கியம். ஹரி, நீ துணைக்கு போய்வா" என்றான். தலையசைத்த ஹரி, ஸ்வேதா மோனிகாவுடன் வெளியேறினான். அவர்கள் சென்றதும் "என்ன ஆச்சு வைஷ் ?" என்றான் மதன்.

 
    ஷோபாவைப் படுக்க வைத்தாள் வைசாலி. அருகே கட்டிலில் அமர்ந்து அவளை அணைத்துத் தாங்கிக் கொண்டான் ரகு. "தாங்க்ஸ் வைஷ்". எழுந்த வைசாலி சற்று முன்னும் பின்னும் நடந்து "ரகு, மதன், இது போல நான் பார்த்ததில்லை. சாதாரணமா பேசிட்டிருந்தோம். விளையாட்டா கிட்டே வந்த மோனி ஷோபாவைக் கட்டினா. சிரிச்சுக்கிட்டே ஷோபாவின் கழுத்தை நெறிக்கறாப்ல ரெண்டு கையையும் கொண்டு போனா.. அது மோனியோட சிரிப்பே இல்லை. சட்டுனு என்ன ஆச்சோ தெரியலே.. திடுக்கிட்ட ஷோபா மோனியை பளார்னு அறைஞ்சா. தற்காப்புக்கான ஓவர் ரியாக்சனா நினைச்சேன். ஆனா ஷோபாவோ எதுக்குடி என் கருவைக் கலைச்சேனு மோனி கழுத்தை நெறிக்கத் தொடங்கிட்டா. அதுக்குள்ள இயல்பாயிட்ட மோனி அம்மானு அழ.. சட்டுனு ஷோபாவும் விலக.. மோனி அழுதுகிட்டே ஸ்வேதா கிட்டே போனா.. இதையெல்லாம் பாத்த ஸ்வேதாவும் அலறி.. மோனியை அணைச்சுக்கிட்டு ஒதுங்கினா..". ரகுவும் மதனும் சில்லிட்டுப் போயிருந்தனர்.

 
     "எனக்கும் கொஞ்சம் ஓய்வு வேணும். நான் இங்கயே ஷோவுக்கு துணையா இருந்து ஓய்வெடுக்குறேன்" என்ற வைசாலி ஷோபாவின் அருகே அமர்ந்தாள்.

 
     "உன்னை இங்கே விட்டுப் போக பிடிக்கலே. நான் ஷோபாவைப் பாத்துக்குறேன். நீயும் மதனும் ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க" என்றான் ரகு.

 
     வைசாலி, "நோ. நீங்க மறுபடி போலீஸ்ல இல்லினா அக்கம்பக்கத்துல விசாரிங்க. நம்ம குழந்தைகளை கண்டுபிடிக்கணும், அது வரை ஓய்வு என்பது மாற்றி மாற்றித்தான்" என்றாள் திட்டமாக. "போங்க, குழந்தைகளை மீட்டு வாங்க".
***

     ஷோபாவையும் வைசாலியையும் அறையில் விட்டு இறங்கி வந்தனர் மதனும் ரகுவும். கீழே லாபியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான் ஹரி. "இவன் எங்கே இங்கே வந்தான்?" என்றான் மதன்.

 
     "யாருடா?"

 
     "அந்த பேகன் ஆசாமிடா. காலைல ஸ்டேஷன்ல பார்த்த ஆளு. இவன் வீட்டு வாசல்ல தான் மோனி நின்னுட்டிருந்தாளாம்". அதற்குள் ஹரியின் அருகே வந்துவிட, ஹரி "இவர் பேர் செபஸ்டியன். நடப்பை வைச்சு இவரு ஒரு தியரி வச்சிருக்காரு" என்றான். நால்வரும் அமர்ந்தனர்.

 
     "ஐ கேன் ஹெல்ப் யு ஆல்" என்று தெளிவான ஆங்கிலத்தில் தொடங்கினார் செபஸ்டியன். "குட்டிச்சாத்தான் பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா? புழக்கடை முனி? விவரிக்க இப்ப நேரமில்லை. ஆனா உங்க பிள்ளைங்க மூணு பேரும் இப்ப முனியோட வசியத்துல இருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா அவங்களை குட்டிச்சாத்தானா மாத்துறதுக்குள்ள நீங்க அவங்களை மீட்கணும்"

 
     "எங்கருந்துடா பிடிச்சே இந்த முட்டாளை?" என்றான் ரகு. "யோவ்.. போலீஸ்ல பாத்துக்குவாங்க. எனக்கு கோவம் வரதுக்குளள எழுந்து ஓடிரு"

 
    "யுவர் விஷ் மிஸ்டர் ரகு" என்றார் செபஸ்டியன் மறுபடி ஆங்கிலத்தில். "எனக்கு இதில் ஒரு லாபமும் இல்லை. உதவி செய்ய விரும்புகிறேன், தட்ஸ் ஆல். வளர்ந்தவங்க பேச்சுனு வச்சுக்குங்க. வி ஆர் அடல்ட்ஸ் ஹியர். ஒரு விஷயம் சொல்லிட்டு நான் கிளம்புறேன். பிள்ளைங்க குட்டிச்சாத்தானா மாற, புழக்கடை முனிக்கு ஒரு நரபலி கொடுக்க வேண்டியது அவசியம். குட்டிச்சாத்தானா மாறாத பிள்ளைகளை முனியே காவு வாங்கிடும். உங்க மூணு பிள்ளைகளுமே இப்ப குட்டிச்சாத்தான் பயிற்சி முகாம்ல இருக்குறதா நினைச்சுக்குங்க. அவங்க பயிற்சி முடிஞ்சு கிராஜூவேட் ஆக நரபலி ஒரு தேர்வு போல. ஐம் சாரி மிஸ்டர் ரகு, இந்த பிள்ளைங்க குறி வச்சிருக்குற நரபலி உங்க மனைவி தான்" என்றார். மூவரையும் பார்த்தார். "ஐ விஷ் யு ஆல் குட்லக். உங்க பிள்ளைங்க கிடைக்கணும்னு நானும் பிரார்த்திக்கிறேன். என் உதவி தேவைப்பட்டா என்னை எங்க சந்திக்கமுடியும்னு உங்களுக்குத் தெரியும். நான் வரேன்" என்று வெளியேறினார்.

[தொடரும்] சாத்தியம்: 61.38%

30 கருத்துகள்:

  1. வாசகர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள்: கதையைப் படித்து அதுவரை வெளியான கதை பற்றி மட்டும் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். மேற்கொண்டு கதை எப்படி போகும் என்கிற அனுமானங்களை தவிர்ப்பது நல்லது. அது எழுதுபவரின் inspiration ஐ பாதிக்கும். இது என்னுடைய அனுபவபூர்வமாக, சொந்த கருத்து.

    பதிலளிநீக்கு
  2. ஹி.. அதனால் என்ன சார்? படிக்கிறதே கௌரவம்.
    துப்பறியும் கதை, அமானுஷ்ய கதைகள் எழுதினால் ஒரு சங்கடம். குறிப்பிட்ட சில விதங்களில் தான் கொண்டு போக முடியும். முடிவு பெரும்பாலும் எதிர்பார்ப்பில் அடங்கியதாகவே இருக்கும். நெல்லை சொன்னது போல. அனுபவமுள்ள வாசகர்களுக்கு கதையின் போக்கை யூகிப்பதில் ஒரு நிறைவு கிடைக்கும். உணர்வு பூர்வ கதைகள் எழுதுகனு அடிக்காத குறையா ஜீவி சார் சொல்றாருனா அதுக்கு ஒரு காரணம் இருக்கும்ல? ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேற்கொண்டு கதை எப்படி போகும் என்கிற அனுமானங்களை தவிர்ப்பது நல்லது. அது எழுதுபவரின் inspiration ஐ பாதிக்கும். இது என்னுடைய அனுபவபூர்வமாக, சொந்த கருத்து.//

      ஓகே டன். கௌ அண்ணா

      முக்கியமா எனக்கு இது ஹிஹிஹி இந்த மாதிரி சஸ்பென்ஸ், த்ரில்லர், இன்வெஸ்டிகேஷன் கதைகள்ல நான் வாசித்து வரும் போதே இது எப்படி போகும்...யாரா இருக்கும்னு மனம் பரபரன்னு யோசிக்கும்- வேற ஒண்ணுமில்ல நமக்கும் அப்படியான மூளைத்திறன் இருக்கான்னு பார்த்துக்கத்தான்!!!!! ஹாஹாஹா...

      //அனுபவமுள்ள வாசகர்களுக்கு கதையின் போக்கை யூகிப்பதில் ஒரு நிறைவு கிடைக்கும். //

      ஹாஹாஹா அதே பாயின்ட்!!!!! ஆனா மீக்கு அனுபவம் பத்தாது அதையும் சொல்லிப்புடறேன்!! பொதுவா துப்பறியும் கதைகள் அமானுஷ்ய கதைகள் + (நகைச்சுவை கதைகள்) ரொம்பப் பிடிக்கும்.

      //முடிவு பெரும்பாலும் எதிர்பார்ப்பில் அடங்கியதாகவே இருக்கும். நெல்லை சொன்னது போல. //

      இது எப்பவும் முடியாதுன்னு தோணும். ஆசிரியர் எப்படிக் கொண்டு செல்கிறார்ன்றதைப் பொருத்து.

      கீதா

      நீக்கு
    2. /அ.பூ.க.எ.எ.அடிக்காத குறையா..//

      ஹி..ஹி.. ஆனாலும் ரொ. குறும்பு உங்களுக்கு..

      நீக்கு
  3. ஆஹா அப்பாதுரை ஜி வந்துட்டாரு.... ஹி ஹி ஹி ஹி அதாங்க புழக்கடை முனி ய கதைக்குள்ள இறக்கிட்டார்னு....

    அமானுஷ்ய கதை சுவாரசியம். பிள்ளைங்க எப்படி தப்பிக்குதுண்ணு ஆர்வம் வருது.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இரண்டு வாரங்கள். கதை "கதை" யாகத்தான் இருக்கிறது. ஏகப்பட்ட பாத்திரங்கள். யார் யாருக்கு என்ன உறவு என்று புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கிறது. தற்போதைய தொலைக்காட்சி மெகா தொடர்களை பின்பற்றுகிறாரோ ஆசிரியர் என்றும் தோன்றுகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாத்திரங்களை குறைத்திருக்கலாம். (கதை ஒன்றும் குறைந்து போயிருக்காது). வேணும்னா நாலு பேரை அடுத்த வாரம் பலி போட்டுறவா?

      நீக்கு
  5. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  6. அருமை..
    இரண்டாவது வாரமும் சிறப்பு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  7. கதை கேரக்டர்ஸ நினைவுல வைச்சு யார் யார் என்னன்னு புரிஞ்சுக்க திரும்பவு முதல் பகுதி போய் பார்த்துட்டு வந்தேன்...நிறைய கேரக்டர்ஸா அதுவும் பேரோட வருதா.....யார் யார் ஜோடிங்க....பிள்ளைகள் என்று மீண்டும் நினைவுபடுத்திக் கிட்டு வாசிச்சேன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க பிரச்சினை அடுத்த வாரம் தீர்த்துடவா? அஞ்சு பேரை தூக்கிட்டா போச்சு.

      நீக்கு
    2. ஆ! ஆ! அப்பாதுரை ஜி, நாங்க ஏதோ சொல்றோம்னு அப்படி எல்லாம் பலி போட்டுடாதீங்க! பயமாகீதே ஏற்கனவே மதுரைக்குப் போகத் தயாராகற ஸ்வேதா மோனி ஹரி ஒழுங்கா போய் சேருவாங்களான்னும், இங்க இருக்கற ரகு, ஷோபா மதன் எல்லாம் காவு வாங்காம இருக்கணுமேன்னு நினைச்சா இப்ப நீங்க தூக்கிட்டா போச்சுனு!!!! சொல்றீங்களே! அப்படினா அந்தந்த வாரம் தான் தட்டி அனுப்பறீங்களா. மொத்தமா அனுப்ப்லை போல!

      கீதா

      நீக்கு
  8. அமானுஷ்யம் சுவாரஸ்யமாக இருந்தது.

    சற்று பெயர்க்குழப்பங்கள் வருகிறது....

    பதிலளிநீக்கு
  9. சுவாரஸ்யமான மர்மத்தொடர். தொடரட்டும்..........

    பதிலளிநீக்கு
  10. //"ஐ ஆம் சாரி, மிஸ்டர் ரகு. இந்த பிள்ளைங்க குறி வைச்சிருக்கிற நரபலி உங்க மனைவி தான்..//

    ஐ ஆம் சாரி.. நிதானமா எழுதிக்கிட்டு வந்த நீங்க கடைசி பாரா வந்ததும் கதையை முடிக்க ஏன் இப்படி அவசரப்படறீங்கன்னு தெரிலே.. ப்லீஸ்.. இன்னும் கொஞ்சம் சுத்தியடிச்ச பிறகு இந்த நரபலி விஷயத்துக்கு வந்திருக்கலாம்லே... அதுவும் யாரை நரபலி கொடுக்கப் போறாங்கன்னு..
    போகட்டும். ஆனா நீங்க கதையைக் கொண்டு போற நேக்கும் ஒரு விதத்தில் பார்க்கப் போனா சரி தான்..
    ஓ.கே. இப்படியே
    கண்ட்டினியூ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியா ஐந்து வாரம் தான் கொடுப்பேன் என்று கறாராக இருக்கிறார் ஸ்ரீராம். அதற்குள் முடிக்க வேண்டும்.
      (நாலு வாரத்துக்கு கதையே ஆரம்பிக்காமல் முன்கதை எழுதுறவனை ஐந்தே வாரத்தில் முழு கதையும் சொல்லச் சொன்னால்?)

      நீக்கு
  11. Paganism.. பாகனிஸம்.. பாகன் வழிபாடு... ஓ.கே.
    கடையெழு வள்ளல்களில் ஒருவரை வம்புக்கு இழுத்திருக்க வேண்டாம்லே? :))

    பதிலளிநீக்கு
  12. ஜாவுக்குத் தெரியுமோ Pagan வழிபாடு பற்றின்னு
    வாசித்துக் கொண்டே வரும் இடுக்கில் ஒரு சந்தேகம். ஆனா ஜார்ஜ் லேசில் விட்டுட மாட்டீங்கன்னு மட்டும் தெரியறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேகன் வழிபாடு எல்லாம் இங்கிருந்து போனது தான்.
      ஜாபாலி காலத்துக்கு போகிறது என்று நினைக்கிறேன். இந்திரன், வருணன், ஆதித்யன் வழிபாடு எல்லாம் பேகனிஸம் தானே?

      நீக்கு
    2. அப்படி போடுங்க ஒரு போடு!!

      நீக்கு
  13. முனியோட வசம், குட்டி சாத்தான், பில்லி சூன்யம்
    இதெல்லாம் நம்ம ஊரு சமாச்சாரம். இதுக்கும் பழைய ரோமன் பாகனிஸத்துக்கும் எப்படி முடிச்சுப் போடப் போறீங்கன்னு தெரிலே..
    ஆனா எழுதி மயக்கற விஷயத்திலே எதுவும் சாத்தியம் தான்.

    பதிலளிநீக்கு
  14. 'இன்னும் சில நாட்கள் நீங்க இந்த ஊர்லே தான் இருக்கணும்'-- ங்கற ரதியோட ஆர்டரை யார் யார் மீறப் போறாங்கன்னு தெரிலே...

    பதிலளிநீக்கு
  15. ஹாட் சாக்லேட் பாகன் வழிப்பாட்டில் சிக்கியிருக்கறவங்களை
    வழிக்குக் கொண்டு வர
    உப்யோகமாகக் கூடிய பானமோ? -- அப்படி ஒரு சந்தேகம் வேறே. ஏன்னா, நீங்க விஷயம் இல்லாம ஹாட் சாக்லேட் பானத்தை இங்கே அறிமுகப்படுத்தியிருக்க மாட்டீங்கன்னு ஒரு எண்ணம்.

    பதிலளிநீக்கு
  16. புழக்கடை முனிக்கு ஒரு நரபலி கொடுக்க வேண்டியது அவசியம்.//

    புழக்கடை முனி என்று படித்ததும்
    கந்தர் சஷ்டி கவசத்தில் வரும்
    "பிள்ளைகள் தின்னும் புழைகடை முனியும் , கொள்ளிவாய் பேய்களும்" என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது.

    //என்னடா இது? மனிஷாவும் மோனாவும் கிடைக்க வேணாமா? நீ ஓடறியா? அப்பவும் நீதான் முதல்ல ஓடினே.." என்றான் மதன். ஹரிக்குக் கோபம் வந்தது. "என்னடா பினாத்துரே?"
    ரகு இயல்பாக மறித்தான். "டேய் டேய்.. அமைதிடா. ஹரி.. நீ வரப்ப நாங்க மோகனா பத்தி பேசிட்டிருந்தோம். நீதானே அன்னைக்கு கண்டில முதல்ல ஓடினே? ஜஸ்ட் எ ஸ்டேட்மென்ட், அவ்வளவுதான். நாம எல்லாருமே கலங்கியிருக்கோம்"//

    கண்டில என்ன நடந்தது என்று அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே புழக்கடை. அதே தின்னும்.
      ஒரு பின்புலம் உண்டு. அதாவது புழக்கடை முனி ஒரு குரு மாதிரி. அது பிள்ளைகளை எடுத்து வந்து குட்டிச்சாத்தானாக மாற்றுமாம் (பயிற்சி கொடுக்கும் போல); பிள்ளைகள் குட்டிச்சாத்தானாக மாறினால் அந்த குட்டிச்சாத்தானுக்கு அடிமையாக இருக்குமாம். அப்படி குட்டிச்சாத்தானாக மாறாத பிள்ளைகளை முனியே தின்று விடுமாம்.

      நீக்கு
  17. //பிள்ளைகளை எடுத்து குட்டிச்சாத்தானாக மாற்றுமாம். (பயிற்சி கொடுக்கும் போல)
    பிள்ளைகள் குட்டிச் சாத்தானாக மாறினால் அந்தக் குட்டிச்சாத்தானுக்கு அடிமையாக இருக்குமாம். அப்படி குட்டிச் சாத்தானாக மாறாத பிள்ளைகளை முனியே தின்று விடுமாம்...//

    அட! உண்மை போலவே சொல்வதில் நீங்கள் கில்லாடி தான். அந்த புழக்கடை முனிக்குத் தான், தான் உருவாக்கின குட்டிச்சாத்தானுக்கு தானே அடிமையாகப் போவதில் எவ்வளவு விருப்பம் இருந்திருக்கு, பாருங்கள்..

    'நம்மை உருவாக்கின குரு நமக்கு அடிமையாவதா, வேண்டாம் இந்த வேலை என்று மரியாதை கொடுத்து மதித்த பிள்ளைகளை முனியே தின்று விடுமாம்'ங்கறது என்னங்க, நியாயம்?..

    இதையே இன்னொரு உதாரணத்தோட. பாக்கலாம்.

    மனைவிமார்கள் கொஞ்சம் இறங்கிப் போனால் புருஷனை அடிமைப்படித்தலாம்ன்னு வைச்சிக்கோங்க. 'என்ன இருந்தாலும் இவர் நம் கணவர். இவர் நமக்கு அடிமையாவதா, வேண்டாம் நமக்கு இந்த அபவாதம்' என்று மரியாதை கொடுத்து ஒதுங்குகிற மனைவிமார்களை இந்த புருஷப் பிரகிருதிகள் ஒதுக்கி வைச்சிடுவாங்கன்னா, என்னங்க இது நியாயம்? குட்டிச் சாத்தான் காலத்திலிருந்து இப்ப வரை காலம் ரொம்பத்தான் கெட்டுத்தான் கிடக்கிறது.
    என்னத்தைச் சொல்ல?..

    பதிலளிநீக்கு
  18. புழக்கடை முனி - ஸ்வாரஸ்யம் கூட்டுகிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!