வியாழன், 15 ஆகஸ்ட், 2024

எருமை என்றால் ஏளனமா?

 


அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்...


&&&&&&


எனக்கு ஆல்பர்ட் என்றொரு நண்பன் இருந்தான்.  என்னோடு ஐந்தாவது ஆறாவது உடன் படித்தவன்.  அவ்வப்போது சில நண்பர்கள் பெயரை டைப் செய்து முகநூலில் இருக்கிறார்களா என்று தேடுவதுண்டு.  அப்படி ஆல்பர்ட் பெயரைத் தேடியபோது ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்தது.

அது...

கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது என்று தெரிந்தது.  நீங்கள் முன்னரே அறிந்திருப்பீர்கள்.

ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. அதுவே உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக இருந்தது.1957 இல் துவங்கப் பட்ட இந்த பஸ் சேவை "ஆல்பர்ட்" என்று அழைக்கப்பட்டது.

​£145 லண்டனிலிருந்து கல்கத்தாவுக்கு கட்டணமாகவும்,  ஆச்சரியகரமாக கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு £85 ம் கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது.  உணவு, தங்குமிடம் எல்லாம் சேர்த்துதான் இந்தக் கட்டணம்.  ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தூங்க இடம், Fan, புத்தகங்கள் படிக்கும் வசதி  என்று தூள் கிளப்பி இருக்கிறார்கள் அப்போதே.

1957 ஏப்ரல் 15 அன்று இந்த பயணத்தின் முதல் பயணம் தொடங்கி, 50 நாட்கள் கழித்து ஜூன் 5 ஆம் தேதி கல்கத்தாவை அடைந்திருக்கிறது.

லண்டனிலிருந்து புறப்பட்டு மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லேவியா, பல்கேரியா, துருக்கி, இரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக கல்கத்தாவை வந்து சேரும்.  .இது ஹிப்பி ரூட் என்று அறியப்பட்டிருக்கிறது.  

​சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி என்று செல்லும் பஸ் பயணமே நமக்கெல்லாம் பொறுமை இருக்காது.  வடநாட்டு யாத்திரைகளை இதே போல இடைவெளி விட்டு சில நாட்களில் முடிக்கிறோம்.   ஆனால் இது போல பல்வேறு நாடுகளை சுற்றி பஸ்ஸில் செல்வது  செல்வது சுவாரஸ்யமானதாக இருந்திருக்கும்.

இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11 நாடுகள் வழியாக ஓடி சுமார் 50 நாட்களில் லண்டனில் இருந்து கல்கத்தாவை அடையும் விதத்தில் இயக்கப்பட்டது​.  ஒரே பஸ்தான் என்று தெரிகிறது.  வந்து திரும்பும்!

பேருந்தின் கட்டணமாக ரூ.8000 வசூலிக்கப்பட்டது

1976 வரையில் இந்த பஸ் சேவை இயக்கத்தில் இருந்தது.

ஆல்பர்ட் டிராவல்ஸ் நிறுவனம் இந்த சேவையினை இயக்கியது, ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணை​த்த இந்த சேவை ஒரு அதிசயமே.....!!!

​The trip was equipped with reading facilities, separate sleeping bunks for all passengers, fan-operated heaters, and a kitchen. There was a forward observation lounge on the upper deck of the bus. The trip was more like a tour than just a trip. The bus provided radio and a music system for parties.[1] It had time to spend at tourist destinations in India, including Banaras and the Taj Mahal on the banks of the Yamuna. Shopping was also allowed in Tehran, Salzburg, Kabul, Istanbul and Vienna. என்கிறது விக்கி 

சில வருடங்களுக்குப் பின் இந்த பஸ் விபத்துக்குள்ளானது,  பயனற்று போன இந்த பஸ்ஸை ஆண்டி ஸ்டூவர்ட் என்கிற பிரிட்டிஷ் ஒபயணி வாங்கி அதை மொபைல் வீடாக மாற்றி வைத்துக் கொண்டாராம்.  அந்த டபுள் டேக்கருக்கு ஆளாபர்ட் என்று பெயரிட்டு சிட்னியிலிருந்து இந்தியா வழியாக லண்டனுக்கு அக்டோபர் 8 1968 ல் கிளம்பி 132 நாட்கள் பயணத்தில் லண்டனை அடைந்தாராம்.

இந்த சேவை இரான் புரட்சி, மற்றும் இந்தியா போலாகிஸ்தான் மோதல்கள்  காரணமாக 1976 ல் நின்று போனதாம்.

==================================================================================================================

                                                                   இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 

- திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த மூதாட்டி மேரி75. சிலுவத்துார் ரோடு பகுதியில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்தார். மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.  அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் மேரி ஆம்புலன்சில் ஏற மறுத்து வீட்டுக்கு போகனும் என்னை விடுங்கள் என அழுது அடம் பிடித்தார்.  தலையில் ரத்தம் வழிந்தபடி இருந்ததால் ஆம்புலன்ஸ் ஊழியர்களும் அவருக்கு சிகிச்சை கொடுக்க முயன்றனர். அதற்கும் மூதாட்டி ஒத்துழைப்பு தராததால் அவர்களும் அங்கிருந்து புறப்பட்டனர். முடிவில் அங்கிருந்தவர்கள் மூதாட்டி மேரியை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மீரட்: பரேலியில் 14 மாதத்தில் ஒன்பது பெண்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கொலையுண்ட பெண்களின் உடல்கள் வயற்காட்டில் நண்பகலில் கண்டெடுக்கப்பட்ட பட்டிருக்கின்றன. அவர்களின் உடைகள் அலங்கோலப்படுத்தப் பட்டிருந்தாலும் வன்புணர்வு நடந்ததாக தெரியவில்லை. எல்லா கொலைகளும் ஒரே மாதிரியில் நடந்திருப்பதால் இவற்றை செய்தது சீரியல் கில்லராக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.  

-  டாக்கா, பங்ளாதேஷ்: பங்ளாதேஷில் சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு பாதிப்புகள் இருந்தாலும்,அங்கிருக்கும் காளி கோயில் அர்ச்சகராக பணியாற்றுகிறவர் என்ன நடந்தாலும், "இந்த கோவில் பணியை விட்டு செல்லமாட்டேன்". என்று சொல்லியிருக்கிறார். பரம்பரையாக அந்த கோவில் அர்ச்சகராக இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவராம். அதில் பன்னிரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவராம் இப்போதிருக்கும் அர்ச்சகர்.

-  பாம்புகளின் விஷத்தின் வீர்யம் அவற்றின் வயதைப் பொறுத்து மாறுபடும் என்பதை பெங்களூர் IISc ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்ய உதவுமாம்.

டில்லி: தாயின் நகைகளை திருடி விற்று அந்த பணத்தில் காதலிக்கு ஐஃபோன் பரிசளித்த ஒன்பதாம் வகுப்பு மாணவன். தந்தையில்லா அந்த பையனை தாய் தனியாளாக வேலை செய்து வளர்த்து வருகிறார்.

-  தூத்துக்குடி: மாணவர்களுக்கிடையே நிலவிய முன் விரோதம், அதனால் விளைந்த சண்டையில் இரு கோஷ்டிகளுக்கிடையே கைகலப்பு. அதில் இரு மாணவர்கள் கத்தியால் சரமாரியாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். 

வயநாடு நிவாரண நிதியாக கேரள முதல்வரிடம் ரூ. ஐந்து கோடி வழங்கியது அதானி குழுமம். மலையாள நடிகர் பிருத்விராஜ் ரூ. 75 லட்சம் வழங்கியிருக்கிறார்.

அதிக மன அழுத்தம் இருந்தால் இதய ரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்படலாம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் தகவல்.

தெலுங்கானா: சிரிசில்லா மாவட்டத்தை சேர்ந்த பிரணய் குமார் என்பவர், நம் தேசியப் பறவையான மயிலை வேட்டையாடி, சமைத்து தன் யூ டியூபில் பகிர்ந்திருக்கும் காரணத்திற்காக கைது செய்யப் பட்டிருக்கிறார். இதற்கு முன் காட்டுப் பன்றியை வேட்டையாடி சமைத்து போட்ட வீடியோவும் சர்ச்சையை கிளப்பியது. 

சென்னை: சென்னைமாநகர காவல்துறை ஆகஸ்ட் 26ஆம் தேதியை விபத்தில்லா நாளாக அனுஷ்டிக்க உள்ளது. இதன் பொருட்டு மாநகர பேருந்து ஓட்டுனர்கள், ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுனர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், உணவு வழங்கும் நிறுவன ஊழியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
 
ஸ்பென்சர் சிக்னல் அருகே இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களையும், காரில் சீட் பெல்ட் அணிந்து ஓட்டியவர்களையும் பாராட்டி  டீ ஷர்ட் வழங்கினார் சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர்.

==================================================================================================

                                                         இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

புதனில் வைரம்?  அப்போ வியாழனில்?  கீழே கொடுத்திருக்கேன் பாருங்க...!


**************************

சோழப்பேரரசின் ஆட்சிமுறை பற்றிய புத்தகத்திலிருந்து........


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

                                                இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

கல்கி ஆன்லைனில் படித்த இரெண்டு சுவாரஸ்யமான விஷயங்கள்....

**  வியாழன் கிரகம் சூரியனிலிருந்து தூரமாக இருப்பதால், அதன் வளிமண்டலத்தின் மேல் அடுக்குகள் சுமார் -145 டிகிரி செல்சியஸுக்குக் கீழே இருக்கும். இதில் முதலில் நீங்கள் உறைந்து போவீர்கள். பின்னர் அந்த கிரகத்தை நீங்கள் நெருங்கும்போது, உள்வெப்ப நிலை காரணமாக வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதை உணர்வீர்கள். இறுதியில் கிரகத்தின் மேற்பகுதியை அடைவதற்கு முன்பாகவே, நீங்கள் பஸ்பமாகி ஆவி ஆகிவிடுவீர்கள்.   

**  ஜூபிடர் கிரகத்திற்கு திடமான நிலப்பரப்பே கிடையாது. அது ஒரு மிகப்பெரிய வாயுப் பந்து. ஒருவேளை நீங்கள் ஜூப்பிட்டர் கிரகத்தில் விழுந்தாலும், அதன் தரைப்பகுதியை அடைவதற்கு பதிலாக, அதன் அடர்த்தியான மையப் பகுதியில் நேரடியாக போய் விழுவீர்கள். வியாழனின் மையமானது பாறை, உலோகங்கள் மற்றும் ஹைட்ரஜன் சேர்மங்களின் கலவையான கனமான தனிமங்களை கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது.  கல்கி ஆன்லைன்.

\]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

                                                     இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

இணையத்திலிருந்து இன்டெரெஸ்ட்டிங்காக...

இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நிறுவனங்களின் அதிபர் ராம்நாத் கோயங்காவின் அழைப்பின் பேரில் (04-10-1979) விஜயதசமி அன்று தினமணி கதிரின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார் நா பா.
தினமணி கதிர், தினமணியின் இலவச இணைப்பாக இல்லாமல் ஒரு தனி இதழாத வெளிவந்து கொண்டிருந்த காலம் அது. (நா.பா.வுக்குப் பிறகு கி. கஸ்தூரி ரங்கன் தினமணி கதிர் பொறுப்பை ஏற்றார். அவர் காலத்தில் தான் தினமணி கதிர் தினமணியின் இலவச இணைப்பாக மாற்றப்பட்டது.
தினமணி கதிரில் நா.பாவுக்கு முந்தைய ஆசிரியராக பழுத்த ஆன்மிகவாதியும் பாரதி அன்பருமான கே ஆர்.வாசுதேவன் பொறுப்பேற்றிருந்தார்.  கே. ஆர். வாசுதேவன் தினமணி கதிர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு, தினமணியின் துணை ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். நா.பா. கதிர் ஆசிரியப் பீடத்தை அலங்கரித்தார்.
நா. பாவைக் கதிருக்கு ஆசிரியராக்கியதில், அதன் முந்தைய ஆசிரியரான
கே.ஆர்.வாசுதேவனுக்குப் பங்கு உண்டு. ராம்நாத் கோயங்காவின் ஆலோசகரான ஆடிட்டர் குருமூர்த்திக்கும் பெரும் பங்கு உண்டு.
நா.பா. ஒரு சில ஆண்டுகளே கதிருக்கு ஆசிரியராக இருந்த போதிலும், அந்தக் காலகட்டத்தில் பல உயர்ந்த இலக்கியப் பணிகளைக் கதிரின் மூலம் ஆற்றினார்.
அவர் தயாரித்த முதல் கதிர் இதழில் அவர் எழுதிய தலையங்கம், அச்சுக் கோக்கப்படாமல் அவரது முத்து முத்தான கையெழுத்தில் அப்படியே பிரசுரமாயிற்று. தீபத்தில் இலக்கிய மேடை' என்ற பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த நா.பா., கதிரிலும் கேள்வி பதில் பகுதியைத் தொடங்கினார். 'மணிவண்ணன் பதில்கள்' என்ற தலைப்பில் பதிலளிக்கலானார்.
நா.பா.வின் நிசப்த சங்கீதம், சாயங்கால மேகங்கள் போன்ற சமூக நாவல்கள் கதிரில்தான் வெளிவந்தன. அவரது புகழ்பெற்ற சரித்திர நாவல்களில் ஒன்றான ராணி மங்கம்மாள்', அவர் கதிர் ஆசிரியராய் இருந்த காலத்தில் கதிரில் எழுதியதுதான்.
நா.பா. கதிருக்கு ஆசிரியரானதும் பல உயர்நிலை இலக்கியவாதிகள் கதிரில் எழுத முன் வந்தார்கள்.  தி.ஜானகிராமன் தமது கடைசி நூலான 'அபூர்வ மனிதர்கள்' என்ற கட்டுரைத் தொடரைக் கதிரில்தான் எழுதினார். ர.சு. நல்லபெருமாள் தூங்கும் எரிமலைகள் என்ற நாவலை எழுதினார். இந்திரா பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன், அசோகமித்திரன், ஆர். சூடாமணி, கி.ராஜநாராயணன், சுஜாதா போன்ற பல முக்கியமான படைப்பாளிகளின் படைப்புகள் வெளிவந்து கதிருக்கு இலக்கிய மெருகு கூடியது. சிறுகதைப் போட்டி, பாரதியார் கட்டுரைப் போட்டி எனப் பல போட்டிகளையும் நடத்தி பற்பலரது எழுத்தாற்றல் வெளிச்சத்துக்கு வரவும் நா.பா. வழி செய்தார்.
கி.வா. ஜகந்நாதன் தலைமையில் துணுக்கு எழுத்தாளர் மாநாடு ஒன்றை எக்ஸ்பிரஸ் வளாகத்திலேயே சிறப்பாக நடத்தினார். சிறுமுகை கதிரேசன், சங்கரி புத்திரன் போன்ற பல துணுக்கு எழுத்தாளர்கள் அந்த மாநாட்டில் ஆர்வத்தோடு பங்குகொண்டு உரையாற்றினார்கள்.
தினமணி கதிர் வார இதழை மட்டுமல்லாமல், கதைக்கதிர் என்ற ஒரு மாத இதழையும் எக்ஸ்பிரஸ் நிர்வாகம் நடத்தி வந்தது. அந்த மாத இதழுக்கும் நா.பா. வே ஆசிரியப் பொறுப்பேற்றிருந்தார். கதைக் கதிர், மாதநாவல் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. மாதந்தோறும் ஓரொரு நாவல் வீதம் ஆண்டுக்குப் பன்னிரண்டு நாவல்களை அது வெளியிட்டது. நா.பா. அதன் ஆசிரியராக இருந்தபோது அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், ஆர். சூடாமணி போன்ற பல முக்கியமான எழுத்தாளர்களின் முழுநாவல்கள் அதில் அடுத்தடுத்து வெளிவந்தன.
கல்கி, தீபம், தினமணி கதிர் ஆகிய இதழ்கள் மூலம் நா. பா. ஆற்றிய தமிழப்பணி, தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்து விட்டது. யார்க்கும் அஞ்சாத நெஞ்சுரம், தகுதியானவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஊக்குவித்தல், முற்றிலும் வணிகமயமாகி விடாமல் இதழைப் பாதுகாத்தல், நல்லிலக்கியத்திற்குக் களம் அமைத்துத் தருதல், உண்மையின் பக்கம் நின்று போராடுதல், எப்போதும் அறச் சீற்றத்தோடு இயங்குதல் போன்ற இயல்புகளை இதழாசிரியர் என்ற வகையில் நா. பா. கொண்டிருந்தார் எனக் கூறலாம்.
- திருப்பூர் கிருஷ்ணன்
நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

எமனேறும் வாகனமே...



வசவாய் சொல்லவில்லை 
வழக்காட வந்திருக்கிறேன் 
கனத்த உருவமா, கரிய நிறமா 
எது 
உங்கள் கண்களை உறுத்துகிறது?

எமனேறும் வாகனம் என்பதால் 
எருமையை எட்டவே  
நிறுத்தி விட்டீர்களா?

எருமை 
என்று சொன்னால் 
அது  
கோபித்துக் கொள்வதில்லை.
எனக்குதான் 
அப்படி சொல்வது 
நாகரீகக் குறைவாய் 
மரியாதைக் குறைவாய் 
படுகிறது. 

காலம் காலமாக அப்படியே 
பழகிவிட்ட காரணத்தால் 
ஏனோ 
அதைக் குறிப்பிட 
எருமை மாடு 
என்று சொல்லும்போதே 
ஏளனமாக சொல்வது போலதான் 
மனதில் படுகிறது 

நாய்க்கும் பூனைக்கும் 
பசுவுக்கும் ஏன், காளைக்கும் 
குதிரைக்கும் 
கொடுக்கும் மரியாதையை 
ஏன் 
எருமைக்கு கொடுப்பதில்லை?

நாயை 
நாய் என்று கூப்பிடுவதில்லை 
ஜிம்மி என்றோ ஜில்லு 
அழைத்து விடுகிறோம்.
அதுவே 
ஆங்கிலப் பெயராய் வைத்தால் 
அதனினும் சௌகர்யம் 
பூனையை பூனை 
என்று அழைப்பதில்லை 
பசுமாட்டைக் கூட 
லட்சுமி என்று 
அழைத்து விடுகிறோம் 
காளையைப் பார்த்தாலும் 
பக்தியோ, பயமோ 
கைகூப்பி 
ஒதுங்கி விடுகிறோம்.

ஒரே ஒரு 
பாடலைத் தவிர 
எந்தத் திரைப்படத்திலும் 
ஏனோ 
எருமையைக் கொண்டாடவேயில்லை.

காளை பசு என்று 
ஜெண்டர் வித்தியாசம் 
இருப்பது போல 
எருமைக்கு 
தனி அடையாளம் இல்லை.
ஆண் எருமை, பெண் எருமை!

எருமைகள் ராஜ்ஜியத்தில் 
ஏதோ ஒருநாள் 
வரலாம் 
சுய மரியாதைக்கான 
சுதந்திர போராட்டம் 

                                                              இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

                                                      இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

இணையத்திலிருந்து....

அவள் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்...

நயாகரா நீர்வீழ்ச்சியை பின்னணியாகக் கொண்டு தங்கள் படத்தை எடுக்குமாறு இரண்டு சுற்றுலாப் பயணிகள் கேட்டுக் கொண்டனர். பின்னணியில் நின்றிருக்கும்  ஜப்பானிய மாணவி தன் தற்கொலையை நினைத்துக் கொண்டிருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. கற்பனை செய்து பாருங்கள், அப்பாவித்தனமாக உங்கள் புகைப்படம் எடுக்கப்படும் அதே நேரம் , தெரியாத நபரின் கடைசி படத்தைப் பதிவுசெய்துள்ளீர்கள் என்று அறியும்போது..., 

இந்த படத்தில், படம் எடுக்கபப்டுபவர்களின் பின்னால் அயனோ டோகுமாசு நயாகரா நீர்வீழ்ச்சியைக் பார்த்துக்கொண்டு  சிவப்பு உடையில் காணப்படுகிறார், சில நிமிடங்களுக்கு பின்பு அவர் நயாகரா நீர்வீழ்ச்சியில் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

                                                                 இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.



**************************************************************************************************************

                                                             இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

பொக்கிஷம்  :

1962 ம் வருட கல்கி என்று நினைக்கிறேன்...  அதிலிருந்து சில தொகுப்புகள்...


இசை அரசி....


காந்தி இசை அரசிக்கு என்ன எழுதி இருக்கிறார் என்று அவரே வந்து சொன்னால்தான் புரியுமோ...!



JKC ஜோக் இல்லா பொக்கிஷம் வீண் என்று கருத்து தெரிவித்ததால் இரண்டு ஜோக்குகளை இணைத்திருக்கிறேன்!


நான் தைத்துக் கொண்ட சட்டைகளில் எல்லாவற்றிலும் உள் பாக்கெட் இருக்கும்!

                                     இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.



இந்த வாரமும் ஏதோ குறைகிற மாதிரி தோன்றுகிறது என்று JKC  Sir சொல்கிறாரா என்று பார்க்கவேண்டும்!

55 கருத்துகள்:

  1. Bombay 28-9-44

    Dear Subbulakshmi,
    Rajaji has told me everything about
    your good work in connection with
    knowledgeable ........
    .............
    (எல்லாத்தையும் நானே எழுதிவிட்டால் எப்படி? மற்றவர்களுக்கும் சான்ஸ் கொடுக்கணும், இல்லையா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு

    2. Bombay 28/9/44

      Dear Subbulakshmi,

      Rajaji has told me everything about your good work in connection with Kasturba memoirial fund by using your musical gifts. May God bless you.
      yours
      மோ க காந்தி

      நீக்கு
  2. ஜெகேஸி ஸாருக்கு சிரிப்பு வரும்ன்னு தோணலே.. அதுசரி, ஜோக்ன்னா சிரிப்பு வந்து தான் ஆகணுமா, என்ன?
    கிச்சு கிச்சு மூட்டினாலும் சிரிப்பே வராத 'சோ'வின் ஜோக்குகள் எத்தனை இல்லை?

    பதிலளிநீக்கு
  3. எத்தனை இடத்தில் தான் எம்.எஸ்.-ஸை quote செய்வீர்கள்? ( எம்.எஸ்.ஸைப் பற்றி பிரஸ்தாபிப்பீர்கள்?)

    பதிலளிநீக்கு
  4. கடைசிப் படத்திற்கு 'நாணமோ, இன்னும் நாணமோ?'ன்னு தலைப்பு
    கொடுக்கத் தவறியதை குறைதலில் சேத்துக்கலாமோ, ஜேஸி ஸார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ,இந்த படத்தில் ஷோபனாவின் முகத்தில் குறும்பு மிளிருவதாக எனக்குத் தோன்றுகிறது.

      நீக்கு
  5. ஹெலன் கெல்லருடன்.. அட! எத்தனை எம்.எஸ்.கள்? எம்.எஸ். சம்பந்தப்பட்ட ஒரு சுதந்திர தின போட்டோ கிடைக்காதது தான் குறை..

    பதிலளிநீக்கு
  6. எருமைக் கவிதை அருமை.

    அதுவும் கடைசிப் பாராவின்
    கடைசி இரண்டு வரிகள் அற்புதம்.

    பசுவைக் கொண்டாடும் சமயங்களிலெல்லாம் நானும் இது போல நினைத்துக் கொண்டதுண்டு.

    பதிலளிநீக்கு
  7. பெரும்பாலான பத்திரிகை படிப்போருக்கு
    தெரிந்த விஷயத்தை சொல்வதற்கு திருப்பூர் கிருஷ்ணன் எதற்கு?

    (கதிரில் நா.பா. பணியாற்றும் பொழுது அவருக்கு உதவியாளர் போல இருந்தவர் தி.கி.)

    பதிலளிநீக்கு
  8. லண்டன் பஸ் பயணம் தெரிந்தது தான் என்றாலும் கட்டுரையில் விவரங்கள் நிறைய உள்ளன.

    இன்றைய நியூஸ் ரூமில் நெகட்டிவ் செய்திகள் கூடுதல் என்று தோன்றுகிறது.
    மேரி மூதாட்டி சிகிச்சை மறுப்பு, 9 பெண்கள் கொலை, தாயின் நகைகளை திருடி காதலிக்கு ஐ போன் பரிசளிப்பு, மாணவர் கத்திக்குத்து, தேசிய பறவை விருந்து என்று. பாசிட்டிவ் என்றால் சனிக்கிழமைக்கு போகட்டும் என்று கருதினார் போலும்.

    தீட்டு என்பது நீட்டு என்று இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. நீட்டோலை (written agreement) காண்பித்து சுந்தரரை ஆட்கொண்ட கதை தெரியும் அல்லவா?

    வியாழன் அன்று வியாழன் பற்றிய செய்தி வெளியிட காத்திருந்தீர்களா? செய்தி புதிது.

    மக்களை மாக்கள் எனறு கூறுவதைபோல் எருமை என்று கூறிவிட்டீர்கள்.
    எருமைகள் ராஜ்ஜியத்தில்
    ஏதோ ஒருநாள்
    வரலாம்
    சுய மரியாதைக்கான
    சுதந்திர போராட்டம்

    சுய மரியாதை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சுதந்திரம் பறிபோகிறது என்று சொல்கிறேன்.

    வயலுக்கு இறைத்த நீர் புல்லுக்கு பாய்வதைப்போல் கம்பிகதைகள் பக்கமும் போய் விட்டீர்கள் என்று தோன்றுகிறது. ஜாக்கிரதை.

    ஐயம் மடம் தவிர மற்ற சொற்களின் இரண்டாம் அர்த்தம் அறிந்ததில்லை. நாகம் என்றால் சேலையோ?

    பொக்கிஷத்தில் ஜோக்குகள் இருந்தாலும் முந்திரியாய் இல்லாமல் கடலைப் பருப்பாய் உள்ளன. சகித்துக் கொண்டேன்.

    அனுஸ்காவை விட்டு விட்டு முதிர் கன்னியான சோபனா படம் ஏன்? யாரைக்கண்டு நாணுகிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடிதம் தீட்டு - கடிதம் எழுது. ஓவியம் தீட்டு, ஓவியம் எழுது இரண்டுமே ஒரே பொருள்.

      நீட்டோலை - நீள் ஓலை. ஒரே ஓலையில் (பனையோலை) விஷயத்தை எழுதி அனுப்பினால் அது நீட்டோலை, திருமுக ஓலை. தூதுவர்கள் கொண்டுசெல்வது. இதனையே ஒரு நூலாக எழுத, பல ஓலைகள்உபயோகித்து அவற்றைக் கட்டிவைத்தால் சுவடி அல்லது பொத்தகம் (தட்டச்சுப்பிழையில்லை). கவளி என்பது பேச்சுவழக்கில் கவுளி என ஆகி, வெற்றிலைக் கட்டுக்கு இப்போது உபயோகப்படுகிறது.

      நீக்கு
    2. //இன்றைய நியூஸ் ரூமில் நெகட்டிவ் செய்திகள் கூடுதல் என்று தோன்றுகிறது.// எனக்கும் அப்படித்தான் தோன்றியது. சில வாரங்கள் அப்படி அமைந்து விடுகிறது. நன்றி.

      நீக்கு
  9. பூவிருந்தவல்லியில்
    இராமானுஜ கூடத் தெருவில் தான் ர்நா.பா.வுக்கு வீடு இருந்தது. அங்கிருந்து தினமும் 'எக்ஸ்பிரஸ் எஸ்ட்டேட்'க்கு வந்து போவார்.
    எ.எ.லிருந்து திருவல்லிக்கேணி போகும் ரூட்டில் அண்ணா சிலை இருக்கும் இடத்திலிருந்து எல்லீஸ் சாலைக்கு ரோடு வலது பக்கம் திரும்பும். திரும்பியவுடன் இரண்டாவதாக இருக்கும் சந்து போலவான தெரு, நல்லதம்பித் தெரு.
    இந்தத் தெருவிலிருந்த ஒ வீடு போன்ற ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தது 'தீபம்'
    ஆபிஸ். (சொல்லப்போனால் ஒரு ஹால். இரண்டு அறைகள்) ஹாலில் திண்டு போல ஒரு மெத்தை போட்டிருக்கும்.
    பிற்காலத்தில் நா.பா.வுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த பொழுது பூவிருந்தவல்லி போகாமல் பெரும்பாலும் இங்கேயே தங்கி விடுவார். நா.பா.வின் அக்கா மகன் திருமலை எனக்கு வாய்த்த அருமை நண்பர்.

    இதே கட்டிடத்தின் முதல் மாடியில் தான் ஜே.கே. ஆசிரியராய் இருந்த 'ஞானரதம்' இதழின் அலுவலகம் இருந்தது.

    நான் காஞ்சீபுரத்தில் இருந்தேன். சென்னை வர பல சமயங்களில் ஜே.கே.யைப் பார்க்க ஞானரதம் ஆபிஸ் வருவேன். ஜே.கே. இல்லாவிட்டாலும் அருமை நண்பர் அறந்தை நாராயணன் இருப்பார். அறந்தை 'ஜனசக்தி'யில் இருந்த பொழுதே எனக்கு நெருக்கம்.

    வந்தது வந்தோம் என்று இரண்டாம் மாடிக்குச் சென்றால் பெரும்பாலும் நா.பா. இல்லாவிட்டாலும் திருமலை இருப்பார். அவரையும் பார்த்து விட்டுப் போவதற்கே சென்னை வந்த மாதிரி எனக்கிருக்கும்.

    இனி திரும்பி வராத இளமைப் பருவ நினைவுகள் இவை.

    பதிலளிநீக்கு
  10. இந்த கல்கத்தா - லண்டன் பஸ் சேவை பற்றி வாசித்திருக்கிறேன் ஸ்ரீராம். என்ன ஒரு ஜாலி ட்ரிப் இல்லியா?

    //ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தூங்க இடம், Fan, புத்தகங்கள் படிக்கும் வசதி என்று தூள் கிளப்பி இருக்கிறார்கள் அப்போதே.//

    ஆமாம் எனக்கும் இது ஆச்சரியமான விஷயம். அதுவும் இங்கிருந்து செல்ல கட்டணம் கம்மி.

    ஒரு பேருந்துதான். அப்ப 8000 என்பது மிகப் பெரியதாச்சே! ஆனால் 50 நாள் பயணம் எனும் போது கம்மிதான்னும் தோணும்.

    நான் ஆச்சரியப்பட்ட விஷயம் இது, ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பஸ் படங்கள் நெட்டில் இருக்கே ஸ்ரீராம், இணைக்க முடியலையோ?

    நான் இது பத்தி தெரிந்து கொண்டது பல வருஷங்கள் முன்பு மகனும் நானும் அவனுடைய சில தேர்வுகளுக்காகவும் வினாடி வினாவுக்காகவும் படித்தப்ப.....இணைய வசதி வந்ததும் படங்கள் எல்லாம் பார்த்து எனக்கு ஆச்சரியம்

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நியூஸ் ரூம் - கண்டெடுக்கப்பட்ட பட்டிருக்கின்றன. - கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தச் செய்தி திரில்லர் கதை போல இருக்கு. //14 மாதத்தில் ஒன்பது பெண்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்//

      அது வரை தெரியாமல் ஒரே நாளில் 9 ம் கண்டெடுக்கப்பட்டிருக்கோ?

      கீதா

      நீக்கு
    2. //அது வரை தெரியாமல் ஒரே நாளில் 9 ம் கண்டெடுக்கப்பட்டிருக்கோ?// அப்படி இல்லை, எல்லா உடல்களும் வயற்காட்டில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன, வேறு வேறு நாட்களில். எல்லா கொலைகளும் நடுப்பகலில்தான் நடந்திருக்கின்றன. எல்லா கொலைகளுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமையை குறிக்க அமைக்கப்பட்ட வாக்கியம் தவறாக புரிந்து கொள்ள பட்டிருக்கிறது.

      நீக்கு
    3. ஒரு சொல், இரு பொருள் கவிதை... இது போல கண்ணதாசன் கவிதை ஒன்று உண்டு. முழு கவிதை நினைவில் இல்லை, 'அச்சு வண்டி ஓடுவதேன், அக்காள் உறவு ஆடுவதேன் அக்காளையிட்டு'
      தெருத்திண்ணை மெழுகுவதேன், ...அச்சாணியிட்டு'
      என்றெல்லாம் வரும்.

      நீக்கு
  13. ஐ ஐ எஸ் ஸி ஆராய்ச்சி மிக மிக பயனுள்ள ஆராய்ச்சி! அந்த வளாகத்துக்குள்ளேயே நிறைய பாம்புகள் உண்டு!

    //வயநாடு நிவாரண நிதியாக கேரள முதல்வரிடம் ரூ. ஐந்து கோடி வழங்கியது அதானி குழுமம். மலையாள நடிகர் பிருத்விராஜ் ரூ. 75 லட்சம் வழங்கியிருக்கிறார்.//

    இந்த ரெண்டும் தான் செய்தியில் ஹைலைட் ஆகிருக்கோ! நிறைய விஐபிக்கள் உதவியிருக்காங்க பண ரீதியாகவும் வேறு உதவிகளாலும்

    கீதா

    பதிலளிநீக்கு
  14. புதனில் வைரம்!!!!! கொஞ்சம் பயமாவும் இருக்கு நம்ம மக்களை நினைத்தால்! வியாழன்ல ப்ளாட்டினம் இருக்கும் ஸ்ரீராம்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்! அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. காந்தியின் கிறுக்கல் எழுத்தை சரியாக புரிந்து கொண்ட ஜீ.வி. சாருக்கும், ஜெயகுமார் சாருக்கும் பிக் சல்யூட்! என்ன இருந்தாலும் பெரியவர்கள் பெரியவர்கள்தான்__/\____/\__

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. எருமை பற்றிய கவிதை அருமை..

    அனைத்துலக எருமைகளின் சார்பாக மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  20. தீட்டப்பட்டன என்பதுதான் தீட்டு என்ற பெயர்ச்சொல்லாகவும் சொல்லப்படுகிறது போலும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. கல்கி ஆன்லைன் - இந்த இரு விஷயங்களும் வாசித்திருக்கிறேன்.

    நா பா பற்றிய விஷயங்கள் வெகு சுவாரசியம். எப்படியான காலமாக இருந்திருக்கிறது என்ற ஒரு ஏக்கமும் எழுகிறது.
    அருமையான பணியாற்றியிருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. நாய்க்கும் பூனைக்கும்
    பசுவுக்கும் ஏன், காளைக்கும்
    குதிரைக்கும்
    கொடுக்கும் மரியாதையை
    ஏன்
    எருமைக்கு கொடுப்பதில்லை?//

    அப்படிச் சொல்லுங்க! கடைசி நச்! ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்.

    எங்க குடும்பத்தில் யாராச்சும் எருமைன்னு திட்டினா என் மகனுக்குக் கோபம் வந்துவிடும். எருமை மாட்டைக் கேவலப்படுத்தாதீங்கன்னு சொல்லிடுவான் (எங்கிட்டருந்து வந்ததுதான்!!!) அது போல நாயேன்னு திட்டினாலும்.

    பாவம் பசுவை எல்லாரும் வணங்கறாங்க! ஆனா எருமை மாட்டின் ஸ்டேட்டஸ் என்னவோ இப்படி. எருமை மாட்டின் பாலில் புரதமும் கால்சியமும் கூடுதல். பல விஷயங்களும் புராணங்கள், மதம் இறைவன் சம்பந்தப்படுத்திச் சொல்லப்படுவதால் இப்படிபலர் மூளையில் சிறுவயதிலேயே சிலவை பதிந்துவிடுகின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. எருமை மாட்டைப் பற்றி ஒரே ஒரு சினிமாப் பாடல் மந்திரி குவாரியில் வரும்,"எருமை கண்ணுக்குட்டி, என்னருமை கண்ணுக்குட்டி, என்னும் கண்ணுக்குட்டி" பாடல்தான்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகப் பிரிவினை திரைப் படத்தின் தாழையாம் பூ முடித்து பாட்டில் எருமை சிறப்பிக்கப்பட்டிருக்கும்..

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      இந்தப்பாடலை நானும் நிறைய தடவைகள் கேட்டிருக்கிறேன். பழைய கால பாட்டுகளில், எருமையை சிலாகித்து நல்ல பாடல். எருமை பால், தயிர் போன்றவை நல்ல திக்காக இருக்கும். சின்ன வயதாக அம்மா வீட்டில் இருக்கும் போது அப்போதெல்லாம் நாங்கள் உபயோக படுத்தி உள்ளோம். பிறகு எதனாலோ முழுவதுமாக பசுவின் பால், என மாறி விட்டோம். இப்போது அந்தப் பெயரில் வருபவைகள் அனைத்தும் கலப்படங்கள் என்ற தகவலும் கலங்க வைக்கிறது. காலங்களுடன் நாமும் மாறி யாருடைய நலன்களையும் யோசிக்க மறந்து விட்டோம் என்பது வேதனை. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்ட பழைய கால அந்த எருமை பாடலுடன், "புது வெள்ளம்" என்ற படத்தில், நடிகர் சிவக்குமார் பாடுவதாக "எருமை அண்ணாச்சி" என்ற பாடலையும் இப்போதுதான் தேடலில் கேட்டு ரசித்தேன்.

      இந்த வாரம் எருமையின் பெருமைகளை நினைவுபடுத்தியமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி. (எத்தனை தடவைகள் ஒன்றும் தெரியாத "எருமை" என பால்ய வயதிலும், இப்போது அனைவரிடமும் (மானசீகமாக) திட்டு வாங்கி வருகிறோம். (நான் என்னை குறிப்பிட்டுள்ளேன். ஹா ஹா ஹா.) இன்றைய தினத்தில் அந்த பொறுமை மிக்க எருமைகளுக்கு அன்பான நன்றிகள். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    எருமை கவிதை மிக அருமை. அதன் மனதின் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். உலக மொத்த எருமைகளின் வாழ்த்து உங்களுக்கு நிச்சயம். அழகான கவிதையை தந்த தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. *மந்திரிக்குமாரி என்பது மந்திரி குவாரி என்று வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  26. அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    மருத்துவமனை போனால் நம்மைக் கொன்று விடுவார்கள் என்று மூதாட்டி நினைத்து இருக்கலாம். பாட்டி போகாத வரையில் நல்லது.

    லண்டன் கொல்கத்தா பேருந்து விடயம் அறிந்ததே... ஆனால் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// மருத்துவமனை போனால் நம்மைக் கொன்று விடுவார்கள் என்று மூதாட்டி நினைத்து இருக்கலாம். பாட்டி போகாத வரையில் நல்லது.///

      எப்படி ஜி இந்த மாதிரி எல்லாம்?...

      நீக்கு
  27. ஓ இப்போது தான் ஞாபகம் வந்தது. படத்தில் இருக்கும் ஷோபனா மணிசித்திர தாழ் மலையாள படத்தில். ஆவி குடிகொண்ட பைத்தியக்காரத் தோற்றம் + நாட்டிய அடவுகள் கலந்து முகத்தில் தோன்றும் பொலிவு பாராட்டுதலைப் பெற்றவை. சிறந்த நடிகை விருதை பெற்றுத் தந்தது.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
  28. நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.

    லண்டன் கல்கத்தா பஸ்சேவை பற்றி இப்பொழுதுதான் அறிந்தேன் ஆச்சரியம் .

    நியூஸ்ரூம் நன்று.

    கவிதை நன்று. இசை அரசி ,பகிர்வு சிறப்பு.

    ஜோக்ஸ் சுமார்.

    சுதந்திரதின நாட்டியத்துடன் இன்றைய பகிர்வு நிறைவு.( அனுவின் இடத்தில்) :)

    பதிலளிநீக்கு
  29. ஒரு சொல் இரு பொருள் சேலைக்கு நாகம்னு ஒரு பொருள் உண்டு என்பது இப்பதான் தெரிகிறது. பாம்பு மாதிரி சுத்தி வளைச்சு இருப்பதாலா?!!!

    ஆஆஆ! அப்ப இத வாசிச்சு புடவை கட்டுறவங்க அதைக் கட்டும் போது இப்படி யோசித்துவிட்டால்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. காந்தியின் எழுத்து நிஜமா புரியலையோ ஸ்ரீராம். நான் வாசித்துவிட்டேன்!! முடியாதவங்களுக்கு இங்கு தரட்டுமா??ஹிஹிஹிஹ்

    பொக்கிஷம் படங்கள் சூப்பரா இருக்கு

    சமீபத்தில் ஷோபனா கண் அசைவு bhபாவத்தினாலேயே மீடியாக்கு பதில் சொன்னது சூப்பரா இருந்தது

    கீதா

    பதிலளிநீக்கு
  31. கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு விட்ட பஸ்ஸை பற்றி விரிவான விளக்கம். அருமையாக இருந்தது. 76 வரை அந்த பஸ் ஓடியிருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது,

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  32. செய்திகளையும் வாசித்துக் கொண்டேன். ஒரு சில செய்தித்தாளில் வாசித்த நினைவு.

    புதன் வியாழன் (ஜுபிடர்) பற்றிய விவரங்கள் தகவல்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  33. தினமணிக்கதிர், நாபா பற்றிய தகவல்களும் சுவாரசியம்.

    பொக்கிஷப் படங்களில் காந்தியின் கையெழுத்தை வாசிப்பது சிரமமாகத்தான் இருக்கிறது.

    படங்கள் எல்லாம் பொக்கிஷங்கள்தான்.

    நயாகரா அருவியின் அருகில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் எங்கோ பார்த்த நினைவு இப்படியான ஒரு குறிப்புடன்

    உங்கள் கவிதையை மிகவும் ரசித்தேன். வித்தியாசமான சிந்தனை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  34. அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  35. இது ஹிப்பி ரூட் என்று அறியப்பட்டிருக்கிறது. //

    ஹிப்பி ரூட் பற்றி அறிந்து கொண்டேன்.

    செய்திகள் சில கவலை அளிக்கிறது.

    தேசியப் பறவையான மயிலை வேட்டையாடி, சமைத்து தன் யூ டியூபில் போட்ட செய்தி படித்த போது ஏன் இப்படி என்ற கேள்வி எழுந்தது.

    வயலை நாசம் செய்யும் மயில்களை விஷம் வைத்து கொன்று போட்டு இருப்பத்தைப்பார்த்து வருந்தி அவைகளை குழி தோண்டி புதைக்கும் பெரியவரை கைது செய்வார்கள். அவர் படும் அவதியை கடைசி விவசாயி படத்தில் பார்த்தது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  36. எமனேறும் வாகனமே...
    கவிதை நன்றாக இருக்கிறது.
    " ஒரு எருமை மாடு இருந்தால் போது அந்த குடும்பம் பிழைத்து கொள்ளும்" என்று பக்கத்து வீட்டு மாமா எருமை மாடு வைத்து இருந்தவர் சொல்வார். எருமை பால் விற்பார் அவர்.(திருவெண்காட்டில் இருந்த போது)
    பொக்கிஷபகிர்வுகள் நன்று.

    பதிலளிநீக்கு
  37. தகவல் தொகுப்பு நன்று.

    ஜப்பானிய பெண்ணின் கடைசி படம் - வேதனை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!