திங்கள், 12 ஆகஸ்ட், 2024

"திங்க"க்கிழமை  : பலா கொட்டை கறி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

 பலா கொட்டை கறி



பலாப் பழம் சீசனில் பலாச்சுளை வாங்குவோம். அதில் இருக்கும் கொட்டைகளை வீணாக்காமல் சாம்பார்,கூட்டு இவைகைளில் 'தான்' ஆகப் போடலாம். நிறைய இருந்தால் கறியாகவும் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

பலா கொட்டைகள்

காரப்பொடி

மஞ்சள் பொடி

உப்பு

செய்முறை:


பலா கொட்டைகளை கனமான கல், அல்லது குழவியால் லேசாக தட்டினால் அதன் மேலிருக்கும் வழுவழுப்பான தோலை உரிப்பது சுலபமாக இருக்கும். 

அதன் பிறகு அந்த பலா கொட்டைகளை கொஞ்சம் உப்பு போட்டு, வேக வைத்துக் கொள்ளவும். 

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, வேக வைத்த பலா கொட்டைகளை அதில் சேர்த்து, காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து அடுப்பை 'சிம்'மில் வைத்து வதக்கினால் மொறுமொறுப்பாக வரும். மிகவும் சுவையான இந்த வியஞ்சனம் சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு நல்ல கூட்டு. 

24 கருத்துகள்:

  1. பலா கொட்டை குழம்புன்னா எனக்கு பிடிக்கும். குழம்பில் போட்ட ப.கொட்டை முந்திரி பருப்பை மெல்வது போலவே இருக்கும். இது வரை பலாக்கொட்டை கறி சாப்பிட்டதில்லை. அது சரி, வியஞ்சனம் (வெஞ்சனம்ன்னு சொல்லுவாங்களே, அதுவா?) என்றால் தொட்டுக்கற சமாச்சாரமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியஞ்சனம் என்றால் உணவிற்காக கறி என்று பொருள். உங்களுக்குத் தெரியாததா?

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. ​பலாக்கொட்டையை இங்கு நாங்கள் சக்ககுறு என்று சொல்வோம். காய்ந்த பலாக்கொட்டைகளை முதல் நாள் இரவே ஊறவைத்து விடுவோம். மேல்தோலை எளிதில் நீக்கமுடியும். சற்றே சொரசொரப்பான கல்லில் கொட்டைகளை தேய்த்து சிவப்புத தோலையும் எடுத்து விடவேண்டும். அப்போதுதான் சாப்பிட எதுவாக இருக்கும்.

    இப்படி தோல் நீக்கிய பலாக்கொட்டையை குக்கரில் ஒரு விசில் வர வேகவைத்து பின்னர் எடுத்து நமக்கு வேண்டிய கறி வறுவல், அவியல், போன்றவற்றை செய்யலாம்.. அல்லது சாம்பார் வைக்கலாம். பலாக்கொட்டை முருங்கைக்காய் அவியல் மிகருசியாக, மணமுடன் இருக்கும். வேகவைத்த கொட்டைகளை இரண்டாக வெட்டி சமையல் செய்வது உசிதம். உப்பு காரம் அப்போது தான் கொட்டையில் படிந்து இருக்கும்.

    படங்கள் எடுக்க சிறிது மெனக்கெட்டிருந்தால் அழகாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பலாக்கொட்டை முருங்கைக்காய் அவியல் மிகருசியாக, மணமுடன் இருக்கும்.// முயற்ச்சிக்கிறேன். எங்கள் வீட்டில் சிவப்பு தோலை எடுக்கும் வழக்கம் இல்லை. விளக்கமான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. பலாக்கொட்டை கறி ரொம்ப பிடிக்கும். நல்லாருக்கு.

    வேக வைத்து எடுத்தால் தோல் சீக்கிரம் வந்துவிடும். சிவப்பும் கூட எளிதில் எடுக்கலாம். நான் சிவப்புத் தோல் எடுத் தும் செய்வேன் எடுக்காமலும் செய்வேன்.

    பொரியலில், கூட்டில், அவியலில் , சக்கைக் கூட்டில் என்று செய்யலாம்.

    சும்மா சுட்டும் சாப்பிடுவது உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  6. பலாக்கொட்டை பிரியாணி, பலாக்கொட்டை குருமா, வறுவல் என்று பல வகைகளில் பலாக்கொட்டையை சமைக்கலாம். ஆனாலும் சாம்பாரில் போட்டு சாப்பிடும் ருசி தனி!!

    பதிலளிநீக்கு
  7. நெய்வேலியில் இருந்தவரை நிறைய விதங்களில் பலாக்கொட்டை, சமையலில் பயன்படுத்தியதுண்டு. இங்கே பழமாக கிடைக்காது! பிஞ்சு கிடைக்கும் - கட்டல் என்று ஹிந்தியில் அழக்ப்பார்கள். அதனை வைத்து கட்டல் கா சப்ஜி செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். முன்பு எங்கள் வீட்டில் பலா மரம் இருந்தது. அதனால் பலாக்கொட்டை நிறைய கிடைக்கும். இப்போது குறைவாகத்தானே வாங்குகிறோம்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவில் தங்கள் செய்முறையாக பலாக்கொட்டை கறி நன்றாக வந்துள்ளது. செய்முறையும், படங்களும் மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. பலாக்கொட்டை கறி நன்றாக இருக்கின்றது.

    எல்லோரும்கூறியதுபோல பலாக்கொட்டை பலவித சமையல்களில் இடம் பிடிக்கிறது.

    நாங்கள் தேங்காய்பால்கறியும் தேங்காய் பால்விட்ட காரக்கறியும் ,செய்வோம்.
    ,காராமணி, பாகற்காய் பீன்ஸ்களிலும்கலப்போம். கட்லட், சுண்டல் செய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலாக்கொட்டையில் எத்தனை விதங்கள் உள்ளன என்பது தெரிகிறது. நன்றி.

      நீக்கு
  10. பலாக்கொட்டை கறி நன்றாக வந்துள்ளது என்றாலும் ஊருக்கு ஊர் கைப் பக்குவம் வேறு வேறு..

    பதிலளிநீக்கு
  11. பலாக்கொட்டை கறி நன்றாக இருக்கிறது.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  12. பலாக்கொட்டை கறி செய்முறையை வெளியிட்ட எ.பி.க்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!