ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 34 : நெல்லைத்தமிழன்

 

கோகுலத்தில், நந்தகீலா பவனில் தரிசனம் முடிந்த பிறகு நாங்கள் பலராமர் பிறந்த இடத்தைக் காணச் சென்றோம்.

 

சந்துகள்தாம். செல்லும் வழியில் யசோதா மாதா பவன், நவனீதப் பிரியன் கோவில் என்று பலவற்றைக் கண்டோம், ஆனால் ஒன்றிலும் நுழையவில்லை.  நவநீதப் பிரியன் கோவிலின் மேல் மாடம், மரத்தினால் ஆனது, கண்ணைக் கவர்ந்தது. அதுபோல யசோதா மாதா பவனின் வாசலும். செல்லும் வழியில் பசுக்கள் கட்டிப்போட்டிருக்கும் இடமெல்லாம் பார்த்தோம்.



எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்



செல்லும் வழியில் பாலில் செய்த இனிப்புகள் விற்கும் கடைகளைப் பார்த்தோம். இருந்தாலும் ஒரு காய்கறி/பழங்கள் விற்கும் கடையில் மேலே உள்ள கொத்தைப் பார்த்தேன். இது பழங்கள் போல எனக்குத் தோன்றியது. தில்லி வெங்கட்டுக்குத் தெரிந்திருக்கலாம்.

 

பலராமர் பிறந்த இடத்திற்குச் செல்லும் வழியில் உள்ள நுழைவாயில்

ஐந்து நிமிடங்கள் நடந்து நாங்கள் வந்தடைந்த இடம், பலராமர் பிறந்த இடம்.

இங்கு ஒரு கோவில் இருக்கிறது. கோவிலா இல்லை கொடிகள் சூழ்ந்த இடமா என்று தெரியவில்ல. அவ்வளவு வண்ணக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. பலராமர் தன் மனைவி ரோகிணியுடன் இருக்கும் இடம். இதனைத் தரிசித்தோம்.

 

கோவிலுக்குள் ஏகப்பட்ட வண்ண வண்ண கொடிகள்


பலராமர் தன் மனைவி ரோகிணியுடன் காட்சி தரும் இடம்.

 

ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவர்களது பெற்றோரைச் சந்திக்கும் ஓவியம் ராஜா ரவிவர்மா வரைந்தது. இந்த ஓவியத்திலிருந்து, தந்தைக்கு மூத்த மகனும் தாய்க்கு கடைசி மகனும் ரொம்பப் பிடிக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா?


அந்தக் கோவிலிலேயே சாண்டில்ய மஹரிஷிக்கான சன்னிதி. ஸ்ரீகிருஷ்ணரும் பலராமரும், சாந்த்வீபனி மஹரிஷியின் குருகுலத்தில்தான் பயின்றார்கள் என்று படித்திருக்கிறேன். இந்தச் சன்னிதி என்ன என்று தெரியவில்லை.

 

கோவில் சுவற்றில் பார்த்த அழகிய படங்கள்

பலராமர் கோவிலில் தரிசனம் செய்த பிறகு, நாங்கள் பேருந்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். கோகுலத்தில் பால் உற்பத்தி அதிகம் என்பதால், அங்கு நிறைய பால் சம்பந்தமான இனிப்புக் கடைகள் (உள்ளூர்வாசிகளால் தயாரிக்கப்படுவது)  இருந்தன. யாத்திரைக் குழுத் தலைவர், ரெகுலராக வாங்கும் ஒரு கடையில், லஸ்ஸி, ரஃப்டி, ஜாமூன், தயிர் போன்றவைகளை வாங்கிக்கொள்ள வேண்டுமானால் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னார். (அவர், தற்போது கடை நட த்துபவரின் தாத்தா காலத்திலிருந்தே பரிச்சியமானவர்)

 

எல்லாம் பத்து, இருபது ரூபாய்க்குள். ரொம்ப சுவையாக இருந்தன.

பிறகு அங்கிருந்து பேருந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு நடக்க ஆரம்பித்தோம்.   கோகுலத்திற்கு விடை கொடுத்துவிட்டு அங்கிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் இருந்த கோவர்தனத்திற்குச் சென்றோம்.  ஒரு மணி நேரத்திற்குள் கோவர்தனத்தை அடைந்தோம். இங்கு ஒரு காலத்தில் கோவர்த்தன மலை இருந்தது. அதனைத்தான் ஸ்ரீகிருஷ்ணர் ஒற்றை விரலால் தூக்கி, அதன் கீழே கோகுலத்தில் இருந்த மக்கள் மற்றும் பசுக்களைப் பெரும் மழையிலிருந்து பாதுகாத்தார்.


கோவர்தனம் அடைந்த பிறகு, அங்கிருந்து கோவிலுக்குச் செல்ல எலெக்ட்ரிக் ஆட்டோதான். பேருந்து செல்ல இயலாது. நாங்கள் 6 பேருக்கு ஒரு ஆட்டோ என்ற விகிதத்தில் ஆட்டோவில் சென்று மானச கங்கா கோவிலை பத்து நிமிடங்களில் அடைந்தோம்.   


கோவர்தனத்தில் நாங்கள் சென்ற இடம் முகாரவிந்த் என்ற கோவில். இது ஜடிபுரா என்ற கிராமத்தில் உள்ளது, இது மதுராவிலிருந்து 28 கிமீ தூரம். கோவர்தன கிரி என்பது முகாரவிந்த் என்று சொல்லப்படும் இடத்தில்தான் ஆரம்பிக்கிறது. இந்தக் கோவில், மானச கங்கை என்று அழைக்கப்படும் ஏரியின் வட கரையில் அமைந்துள்ளது. கோவர்தன கிரி, ஒரு சாபத்தினால் நாள்தோறும் சிறிது சிறிதாகச் சுருங்கியதாம். இங்கு அந்தக் குன்றின் ஆரம்பமான கல் (தண்டவதி சிலா) வணங்கப்படுகிறது. இங்கிருந்து பகவானின் விக்ரஹம் ஸ்ரீநாத்ஜி கோவிலுக்கு (நாத்த்வாரா) சென்றபோது இந்த  சிலாரூபம் 6 அடி உயரமுடையதாக பூமியில் புதையுண்டதாக இருந்ததாம். தற்போது உள்ள சிலா, பூமியில் புதையுண்ட நிலையில் இருக்கும் நிலை தெரியும்.

 

இந்த முகாரவிந்தக் கோவிலுக்கு ஸ்ரீகிருஷ்ணர், நாத்த்வாரகையிலிருந்து வருடத்திற்கு ஆறு மாதங்கள் வருவதாக ஐதீகம். (மழைக்காலம்). அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்களாம். இந்தக் கோவிலில் (இடத்தில்) இறைவன் இருப்பதை பக்தர்களால் உணரமுடியும் என்று சொல்கின்றனர்.  (அதை உணர ஆழ்ந்த பக்தி இருக்கணுமேஅது எங்க எனக்கு இருக்கு?)

 

பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆட்டோவில் முகாரவிந்த கோவிலை நோக்கிச் செல்லும்போது கண்ட காட்சி. 


ஆட்டோவில் செல்லும்போது சாலையின் ஓரங்களில் இருந்த சுவற்றில் ஸ்ரீகிருஷ்ணர் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் இருந்தன. இது அந்த நகரின் புனிதத்தைக் குறிப்பதாக இருந்தது.


பக்தர்களும் ஒரு விரிப்பை விரித்து, அதில் படுத்து வணங்கி, மீண்டும் விரிப்பை விரித்து, அதில் வணங்கி என்று முழு கோவர்த்தன சாலையில் வணங்கிக்கொண்டே கோவிலை நோக்கிச் செல்கிறார்கள். (நாம் அடிப் பிரதட்சணம் செய்வது போல, அவங்க கீழே விழுந்து வணங்கி, எழுந்து மீண்டும் விழுந்து வணங்கிஎன்று செல்கிறார்கள். புத்த கயாவிலும் பிட்சுக்கள் இவ்வாறு செய்வதைப் பார்த்திருக்கிறேன்)

 

கோவர்தன் முகாரவிந்த் கோவில் நுழைவாயில்    முதலில் சென்றது லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில். இது தென்னிந்திய பாணியிலான கோவில் (பலப் பல வருடங்களுக்கு முன்னால் தென்னிந்தியர்களால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படுவது)

 


கோவில் மண்டபம் மற்றும் மூலவர்.

பழமையான கோவில் இது. இதனைப் பற்றி வரும் வாரத்தில் காண்போமா?

 

 (தொடரும்) 

63 கருத்துகள்:

  1. ​//தந்தைக்கு மூத்த மகனும் தாய்க்கு கடைசி மகனும் ரொம்பப் பிடிக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா?//
    தந்தைக்கு மகள் தான் எப்போதுமே பிடிக்கும். தாய்க்கு மகன்.
    //(அதை உணர ஆழ்ந்த பக்தி இருக்கணுமே… அது எங்க எனக்கு இருக்கு?)//
    ஹா ஹா ஹா. கோயில்களுக்குப் போவது படம் எடுத்து எ பி யில் பதிவு எழுதத்தான் என்று கொள்ளலாமோ?
    காய்கறிக்கடையில் உள்ள பழங்கள் தக்காளி என்று தோன்றுகிறது.
    படங்கள் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். நாங்க மூணு பேர் பசங்க. அதனால எனக்கு இப்படித் தோன்றியது. நீங்கள் எழுதியிருக்கறதைப் படித்த பிறகு, எங்கள் வீட்டில் நடப்பதைப் பார்த்து, நீங்கள் சொல்லியிருப்பது சரியோ என யோசிக்கிறேன். இரண்டு பெண்களை மாத்திரமே பெற்றெடுத்தவர்கள் மனநிலை எப்படி இருக்கும்?

      நீக்கு
  2. வசுதேவ சுதம் தேவம்
    கம்ச சாணூர மர்தனம்
    தேவகி பரமானந்தம்
    கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். இனி வரும் சில பல வாரங்கள் முழுவதுமே ஶ்ரீகிருஷ்ணர் சம்பந்தப்பட்டதுதான்.

      நீக்கு
  3. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். இனி வரும் மூன்று நான்கு நாட்களில், பஞ்சாமிருதப் பிரசாத்த்துடன் சுவாமிமலை முருகன் தரிசனம் வாய்க்கவேண்டும்.

      நீக்கு
  4. கோகுலாஷ்டமி சமயத்தில் இனிய பதிவு...

    வழக்கம் போல படங்கள்..

    மகிழ்ச்சி

    கோகுலாஷ்டமி நல் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவைத் தயார் செய்து அனுப்பும்போதும் இது மனதில் உதிக்கவில்லை. உதித்திருந்தால் பொருத்தமான, யாத்திரையின்போது எடுத்திருந்த படத்தையும் சேர்த்திருப்பேன்.

      வாழ்த்துகளுக்கு நன்றி. கும்பகோணத்தில் தஞ்சையில் கோகுலாஷ்டமிக்கு (ஶ்ரீஜெயந்திக்கு) சம்பந்தமான இனிப்புகள் கிடைக்கும் என யோசிக்கிறேன்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பல வாரங்களுக்குப் பிறகு காலையில் வந்திருக்கிறீர்கள். தண்ணீர் பிரச்சனை தீர்ந்ததா? இன்னமும் உறவினர்கள் வீட்டில் இருப்பதால் வேலைப் பளு அதிகமா?

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவும், படங்களும் எப்போதும் போல அருமையாக உள்ளது. படங்களின் வாயிலாக இறைவன் ஸ்ரீ கிருஷ்ண பலராமரை தரிசித்துக் கொண்டேன். இங்கெல்லாம் என்னால், எங்கே போக முடிய போகிறது என்ற எண்ணத்தை உருவாக்க முடியாதபடிக்கு அழகான தங்கள் எழுத்துக்கள் கூடவே தாங்கள் சென்று தரிசித்த, பார்வையிட்டு ரசித்த இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. அழகான ஓவியங்கள். மகன்களை அணைத்திருக்கும், தந்தை, தாய் ஓவியத்தை கண்குளிர பார்த்து ரசித்தேன். இனியும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் திருவருளால் நாங்கள் 106 திவ்யதேசங்களையும் தலிசனம் செய்துவிட்டோம் (பலவற்றை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள்). அவற்றில் பல கோவில்கள், குறிப்பாக திருநாங்கூர் காஞ்சீபுரம் போன்ற பகுதிகளில் உள்ளவை மிகச் சிறிய கோவில்கள். முடிந்தவரை அவற்றைப் பற்றி எழுத ஆசை.

      நீக்கு
  7. மாடங்கள் செம கலை வடிவங்கள், நெல்லை. கவர்கின்றன.

    காய்கறி/பழங்கள் விற்கும் கடையில் மேலே உள்ள கொத்தைப் பார்த்தேன். இது பழங்கள் போல எனக்குத் தோன்றியது. //

    cherry tomatoes போன்று தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொத்தாக இருந்ததுனா Golden berries, எனப்படும் Rasbhari யாக இருக்கும்.

      கீதா

      நீக்கு
    2. இங்கயும் பார்க்கிறேன் இதை. கிலோ 150 லிருந்து 200க்குள்

      கீதா

      நீக்கு
    3. கால் கிலோ....கால் விட்டுப் போச்சு

      கீதா

      நீக்கு
    4. இது அதுவல்ல கீதா ரங்கன் அக்கா. தில்லி வெங்கட் நாகராஜன் வந்து சொன்னால்தான் உண்டு.

      இன்று (இப்போ) எங்க வளாகத்துல நாம்தாரி கடையின் வேன், பழங்களைக்கொண்டுவந்திருந்தாங்க. அதில் நான் பார்த்த பச்சை திராட்சைக் கொத்துக்களை வாழ்நாளில் முதல் முறையாக இப்போதுதான் பார்க்கிறேன். படம் எடுத்துப் போட்டால் நான் பார்க்கும்போது இருந்த பிரமிப்பு வராது. இதுபோல நான் பிலிப்பைன்ஸில் வாங்கின தேங்காய் படத்தை ஸ்ரீராமுக்கு பல வருடங்களுக்கு முன்னால் அனுப்பினேன். அது அவருக்கு பிரமிப்பை உண்டுபண்ணவில்லை (எனக்கு உண்டுபண்ணியது. 1 லிட்டர் தண்ணீர் தரும் தேங்காயையோ இல்லை 1 1/2 லிட்டர் தண்ணீர் தரும் இளநீரையோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் பிலிப்பைன்ஸில் பார்த்தேன்)

      நீக்கு
    5. ஹாஹா.... என் வருகைக்கு காத்திருக்கிறீர்கள் போல! :) இவை ஹிந்தியில் Bபேர் என அழைக்கப்படும் இலந்தைப் பழம். இங்கே சீசனில் நிறைய கிடைக்கும். மலை இலந்தை வகையைச் சேர்ந்தவை.

      நீக்கு
  8. ஓவியத்தைப் பார்த்ததும் ராஜா ரவிவர்மா போல இருக்கிறதே என்று வாசித்துவந்தால் உங்கள் வரி பார்த்துவிட்டேன்.

    இந்த ஓவியத்திலிருந்து, தந்தைக்கு மூத்த மகனும் தாய்க்கு கடைசி மகனும் ரொம்பப் பிடிக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா?//

    அது ஓவியரின் எண்ண ஒட்டத்தில் வரையபப்ட்டது நெல்லை. அதை வைத்து எப்படி நாம் முடிவு செய்ய இயலும்.

    பொதுவாக அப்பாவிற்குப் பெண்ணும், அம்மாவிற்கு மகனும் பிடிக்கும்னு சொல்லுவாங்க.

    இருக்கலாம் ஆனால் மகள்கள் பருவ வயதிற்குப் பிறகு அம்மாவோடு நெருக்கமாக இருப்பாங்க. பிள்ளைகள் தந்தையோடு. மகள்களுக்குத் தங்களுடைய தனிப்பட்ட உணர்வுபூர்வமான விஷயங்களைப் பேசி பகிர அம்மா தான் (இதில் சில எதிர்வினைகளும் வர வாய்ப்புண்டு அதாவது அம்மா நல்ல அம்மாவாக இருந்தால் மகளுக்குச் சரியான அறிவுரை வழங்குவாங்க!!!). மகள்களுக்குத் தந்தையைப் பிடிக்கும் என்றாலும் தந்தையிடம் பல விஷயங்களைச் சொல்ல முடியாது. அது போல மகன்களுக்கு அம்மா மீது பிரியம் இருந்தாலும் தந்தையோடு பேசுவது இருக்கும். தந்தையும் சரியாக வழிநடத்துபவராக இருகக்ணும்.

    ஆனால் இவை எல்லாமே பெற்றோரைப் பொருத்தும் வளர்ப்பைப் பொருத்தும் இருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும். கண்மூடித்தனமான பாசம் இல்லாத பெற்றோர் குழந்தைகளை நன்றாக வழி நடத்துவாங்க அவங்களுடைய தனிப்பட்ட ஸ்பேஸிற்குள் நுழையாமல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுமே மகள்களாக இருந்தாலும் சரி மகன்களாக இருந்தாலும் சரி மேற்சொன்னதே.

      பொதுவாக மனைவி அமைவதெல்லாம்னு இல்லை கணவன் அமைவதெல்லாம்னு சொல்வதுண்டு ஆனால் நான் சொல்வது நல்ல பெற்றோர் அமைவதெல்லாம்னு ஏன்னா அந்த மகன் தானே கணவனாகிறான் அந்தப் பெண் தானே மருமகளாகிறாள்!

      கீதா

      நீக்கு
    2. முதல் கருத்தில் நீங்க நல்லாச் சொல்லியிருக்கீங்க. அம்மாவிடம்தான் தனிப்பட்டவற்றை பெண் பகிர்ந்துகொள்ள முடியும், அதுபோலை பையன் அப்பாவிடம். மற்றபடி மனதில் அன்பு, அப்பாவிற்கு மகளிடமும் அம்மாவிற்கு பையனிடமும் என்பது உண்மைதான்.

      நீக்கு
  9. சாண்டில்ய மகரிஷி? புதுசா இருக்கிறதே. சாண்டில்ய மகரிஷின்னு பார்த்ததும் சாண்டில்யன் எப்ப மகரிஷியானார்ன்னு ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அங்கு பால் சாமான்கள் எல்லாமே நல்லாருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்தியாவில் பாலால் செய்யப்படும் உண்டாக்கப்படு பொருட்கள் எல்லாமே அருமையா இருக்கும். ஆனால் பாருங்க, நான் துணி சோப்பு இன்னபிற லிக்விட்கள் போட்டு பாலைப் போன்று போலி பால் தயாரித்து அதில் இனிப்புகள் தயாரிக்கும் விதத்தை காணொளியில் பார்த்திருக்கிறேன். அதனால் வட நாட்டின் இனிப்புகள் என்றால் எனக்கு எப்போதுமே சந்தேகம்தான்.

      நீக்கு
  11. படங்களும் விவரங்களும் எல்லாமே நல்லாருக்கு, நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  12. பலராமன் பிறந்த இடம் ,கோவர்த்தனம் அழகாக இருக்கிறது.

    ரவிவர்மாவின் ஓவியம் மனதை கவர்கிறது.

    நவநீதப்பிரியன் கோவில் மரத்தால் ஆன மேல்மாடம் கலைநயம் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    பதிலளிநீக்கு
  13. பலராமன் பிறந்த இடம் ,கோவர்த்தனம் அழகாக இருக்கிறது.

    ரவிவர்மாவின் ஓவியம் மனதை கவர்கிறது.

    நவநீதப்பிரியன் கோவில் மரத்தால் ஆன மேல்மாடம் கலைநயம் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    பதிலளிநீக்கு
  14. அழகிய படங்கள் தரிசனம் கிடைத்தது நன்றி தமிழரே....

    பதிலளிநீக்கு
  15. பதிவு மிக அருமை. கிருஷண ஜெயந்தி சமயத்தில் கண்ணன் வாழ்ந்த , விளையாடிய இடங்களை (பலராமன் பிறந்த இடம் ,கோவர்த்தனம் )
    பார்த்தது மகிழ்ச்சி. மன நிறைவு.

    //நவநீதப் பிரியன் கோவிலின் மேல் மாடம், மரத்தினால் ஆனது, கண்ணைக் கவர்ந்தது. //

    ஆமாம், உண்மை மிக அழகாய் இருக்கிறது.

    ஒவ்வொன்றையும் பார்க்கும் போது நினைவுகள் வந்து போகிறது.

    கோவரத்தன கிரியை மக்கள் பரிக்கிரமா என்ற வழிபாட்டை செய்வதை பார்த்து மெய் மறந்து போனது . அவர்களின் பக்தி நமக்கு மெய் சிலிர்க்க வைக்கும். நீங்கள் போன போது விரிப்பு விரித்து வணங்கி போகிறார்கள் நாங்கள் போய் பல ஆண்டுகள் ஆகி விட்டது, அப்போது அப்படியே அடிக்கு அடி கீழே விரிப்புகள் விரிக்காமல் விழுந்து வணங்கி போவார்கள்.

    திபெத்திய மக்களும் இப்படி கைலை மலையை வணங்கியதைப்பார்த்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். நான் வட நாட்டில் மக்களின் பக்தியைக் கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். பொதுவா நாங்க சொல்றது, தென்னிந்தியாவில் உடை, appearance மற்றும் பல கட்டுப்பாடுகள் கோவிலுக்குப் போவதற்கு உண்டு, ஆனால் வட இந்தியாவில் பக்தி உணர்வு அதிகம் என்று சொல்வாங்க. அதாவது நாம கடவுளை, நீங்க ரொம்ப பெரியவர், நாங்க சின்னவங்க, கொஞ்சம் பவ்யமா தூரமா இருந்து வணங்கிக்கிறோம் என்று இருப்போம், ஆனால் வடக்கே அவங்க ரொம்ப closeஆ, பக்தியோடு உணர்வு பூர்வமா இருப்பாங்கன்னு சொல்வாங்க. பரிக்ரமா என்று கயிலாயத்தையும், கோவர்தனத்தையும் பண்ணுவது ஆச்சர்யம்தான்.

      நம்ம ஊரிலும் (தென் தமிழ்நாட்டில்) ஒரே நாளில் ஓடி பல கோவில்களுக்குச் சென்று வழிபடுவது, பாதயாத்திரையில் பல கோவில்களுக்குச் செல்வது என்றும் உண்டே.

      இது போன்று நான் புத்தகயாவிலும் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  16. முகாரவிந்த் செய்திகளும் சாலையில் போகும் போது எடுத்த படங்களும் அருமை.

    நாங்களும் கோகுலத்தில் லஸ்ஸி சாப்பிட்டோம், கடைகள் படம் அருமை.

    கடைத்தெருவில் கண்ணன் பாடல் கேஸட்டுகள் வாங்கினோம்.
    கண்ணன் பிறப்பு அன்று அந்த பாடல்களை கேட்டு மகிழ்வோம்.இந்தி பாடல்கள் தான். கேட்க இனிமையாக இருக்கும்.

    கோவிலுக்குள் ஏகப்பட்ட வண்ண வண்ண கொடிகள் என்ற படத்தில் கேவில் முன்னே உள்ள கடைகளும் தெரிகிறது. ஆடைகள் தொங்குகிறது. அதில் அந்தக்கால உடைகள் தொங்குது பாருங்கள். ராஜஸ்த்தான் கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட கைத்தறி ஆடைகள் அவை.

    அங்கு உள்ள கடைகளில் ராதையின் ஆடை வாங்கினோம் பேத்திக்கு.

    அவள் இரண்டு வயது குழந்தை சிவப்பு வண்ணத்தில் கண்ணைகவரும் ஆடை.

    மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் அலங்கார தோரணங்கள் வாங்கினோம்.

    ஓவியங்கள், படங்கள் எல்லாம் அருமை.

    லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவிலை அடுத்த பதிவில் பார்க்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நீங்களும் அங்கெல்லாம் போனது பற்றி எனக்கு மிகவும் சந்தோஷம். நாளை/நாளை மறுநாள் ஸ்ரீஜெயந்தி, கிருஷ்ணஜெயந்தி.

      நாங்கள் பயணப்படப்போவதால் இந்த முறை ஒன்றிரண்டு பண்ணினால் போதும் என்று சொல்லிவிட்டேன். இனி வரும் வாரங்கள் வெகு வேகமாகச் செல்லும். காரணம் கண்ணன் வாழ்ந்த இடங்களை வெகு வேகமாகப் பார்க்கப்போகிறோம்.

      நீக்கு
    2. மீண்டும் பயணமா? மகிழ்ச்சி. பயணம் இனிதாக கண்ணன் துணையிருப்பான்.

      நீக்கு
  17. தஞ்சாவூர் ஆகட்டும்..
    கும்பகோணம் ஆகட்டும்..

    மாயூரம்
    ஆகட்டும்...

    பிரியாணி
    சவர்மா வகையறாக்கள் பெருகி விட்டன..

    உணவகத் தொழிலில் பக்தியும் இல்லை.. சிரத்தையும் இல்லை..
    சுத்தம் சுகாதாரமும் இல்லை..

    நான் இப்படியான கடைகளில் நுழைவதும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு இருக்கிறது புகழ்பெற்ற சைவ உணவகங்கள் துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  18. வெல்லச்சீடை, உப்புச்சல்சீடை, தட்டை எல்லாமே அடுக்களையில் தயாராகி விட்டாலே கிருஷ்ண ஜெயந்தி வந்து விட்டதென்று அர்த்தம்.

    எல்லோருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். இது எதுவுமே தயாராகவில்லை. ஆயினும் கிருஷ்ணஜெயந்தி வந்துவிட்டது.

      நீக்கு
  19. நெல்லை, நவநீதப்பிரியன் கோயில் பெயரை அங்கு ஹிந்தியில் எப்படி எழுதியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
  20. அடடா! முதல் படத்திலிருக்கும் அந்த மாட்டைப் பார்க்கையில் பாவமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயர்கள், நிரையை நன்றாக வளர்ப்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. இருந்தாலும், மாறிவரும் சூழ்நிலையில் மேய்ச்சல் நிலமின்றி இருப்பது ரொம்பவே வித்தியாசம்தான். வீட்டுக் கொட்டடி போன்ற சூழல்.

      By the by, என் மகள், பிரிட்டன் சூப்பர் மார்க்கெட்டில் கோமியம் பாட்டில்களில் அடைத்து விற்பனைக்குக் கிடைப்பதை படமெடுத்து அனுப்பியிருந்தாள்.

      நீக்கு
    2. அப்படியா? அமெரிக்காவில்? கேட்கவே வேண்டாம்.
      அத்தனையும் கிடைக்கிறது.
      பூஜைக்கான பாத்திரங்கள், பஞ்ச பாத்திர உத்திரணி, சுவாமி படங்கள்,
      ஸ்தோத்திர புத்தகங்கள், ஏன் தர்ப்பைக் கட்டு கூட அழகான நீள வாக்கில் ப்ளாஸ்ட்டிக் கவர்களில் அடைத்து.

      நீக்கு
  21. Birth Place of Lord Balaram
    பதாகையில்
    இரண்டாவதாக எழுதப்படிருக்கும் மொழி,
    என்ன மொழி நெல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஹிந்தி வாசிக்கத் தெரியும். ஆனால் பேசத் தெரியாது. பதாகையில் சட்னு வாசிக்க முடியாத மொழி என்றால் லோகல் மொழியாக இருக்கும். போஜ்பூரியாக இருக்கலாம்.

      நீக்கு
    2. இரண்டாவது வரியில் இருப்பது குஜராத்தி! தங்கள் தகவலுக்காக.

      நீக்கு
  22. தாயார் தேவகியாரின் அணைப்பில் கிருஷ்ணரைப் பார்த்ததுமே, அட! ரவிவர்மா வரைந்தது போலவே இருக்கிறதே என்ற நினைக்கையிலேயே
    கீழிருக்கும் உங்கள் வரிகளைப் படித்து லேசான புன்முறுவல்!
    இது வர்ணம் வரைந்தது, இது லதா, இது கோபுலு, இது ஜெயராஜ் -- என்று கண்டுபிடிக்கிறோமில்லையா, அதே போலத்தான் போலும் இதுவும் என்று நினைத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குமே ஓவியம் மிகவும் பிடித்திருந்தது. மனக்கண்ணால் காண்பதை தூரிகையின் உதவியுடன் நமக்குப் பார்க்கத் தரும்போது அது தரும் மகிழ்ச்சியே தனி ஜீவி சார்

      நீக்கு
  23. சாண்டில்ய மகரிஷியின்
    சன்னிதி!--
    படம் பார்த்துப் புளகித்துப் போனேன்.
    சாண்டில்ய கோத்திரம்
    சார்ந்தவன் நான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... உங்களுக்கு அது காணக்கிடைக்காத படம், தகவல் ஜீவி சார்.

      நீக்கு
  24. எங்கு பார்த்தாலும்
    சுவர் சித்திரங்களாகத் தீட்டி வைத்திருக்கிறார்களே?.
    வாழ்க அவர்கள் கலாரசனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புனிதமான இடத்தில் யாரும் சுவரைப் பாழ்படுத்திவிடக் கூடாது, கண்ணன் நினைவே மனதில் இருக்கணும் என்பதற்காக இருக்கும். நன்றி.

      நீக்கு
  25. ஸ்ரீ லஷ்மி நாராயணரை வணங்கி தரிசித்தேன்.
    புண்ணியமெல்லாம் உங்களுக்கே!
    நன்றி, முரளிதரன்!

    பதிலளிநீக்கு
  26. ஸ்ரீ லஷ்மி நாராயணர் கோயில் பற்றித் தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன்.
    எல்லா புண்ணியமும்
    அறியா விஷயங்களை படங்களுடன் அறியத் தந்த உங்களுக்குத் தான்.
    மிக்க நன்றி நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிருஷ்ணஜெயந்தியை ஒட்டி இந்தப் பதிவுகள் வருவது ரொம்ப மகிழ்ச்சி. தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி ஜீவி சார்.அடுத்தடுத்த பகுதிகள் உணர்வுபூர்வமாக இருக்கும்.

      நீக்கு
  27. சிறப்பான தகவல்களும் படங்களும். அருமையான இடங்கள். இங்கே சென்று வந்த நினைவுகள் மனதில் இப்போதும் பசுமையாக.

    பதிலளிநீக்கு
  28. //பக்தர்களும் ஒரு விரிப்பை விரித்து, அதில் படுத்து வணங்கி, மீண்டும் விரிப்பை விரித்து, அதில் வணங்கி என்று முழு கோவர்த்தன சாலையில் வணங்கிக்கொண்டே கோவிலை நோக்கிச் செல்கிறார்கள். (நாம் அடிப் பிரதட்சணம் செய்வது போல, அவங்க கீழே விழுந்து வணங்கி, எழுந்து மீண்டும் விழுந்து வணங்கி… என்று செல்கிறார்கள்.//

    இப்படிச் செய்வதற்கு பெயர் தண்டவத் பரிக்ரமா. கோவர்த்தன கிரியை முழுவதுமாக இப்படி நமது அங்கங்கள் அனைத்தும் நிலத்தில் படும்படி நமஸ்கரித்து கைகளை நீட்டி வணங்கி, அந்த இடத்தில் மார்க் செய்து கொண்டு, மீண்டும் அங்கே நமஸ்கரித்து என மொத்தமாக மலையை நமஸ்தரித்தபடியே சுற்றி வருவார்கள். பார்ப்பதற்கு சாதரணமாக இருந்தாலும் மிகவும் கடினமான ஒரு வழக்கம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!