வியாழன், 1 ஆகஸ்ட், 2024

சோன்பப்டி

 உங்களுக்கு ஸ்வீட் வகையறாக்களின் எது ரொம்பப் பிடிக்கும்?

இந்தக் கேள்விக்கு யோசித்து நிறைய சொல்லலாம்.  ஆவின் போன்ற நிறுவனங்களால் பால் அல்வா என்று சொல்லப்படும் திரட்டுப்பால் முதல் வட இந்திய ஸ்வீட் வகைகள் சில.  உதாரணமாக பாஸந்தி அல்லது ரசமலாய்.  இந்த இரண்டுக்குமே என்ன பெரிய வித்தியாசம் என்று எனக்குத் தெரியாது.  அப்புறம் பெங்காலி ஸ்வீட்ஸ்.  ஆனாலும் அவையும் அதிகம் சாப்பிட்டால் அலுத்துப் போகும்.  ஆமாம், திரட்டுப்பாலை திரட்டுப்பால் என்று சொல்லாமல் பால் அல்வா என்று ஏன் சொல்கிறார்கள்?  ஆனாலும் வீட்டில் என் பாட்டி செய்யும் திரட்டுப்பாலுக்கு ஈடாகாது இதெல்லாம்...

ரசகுல்லாவை எல்லோரும் சிறப்பித்துச் சொல்வார்கள்.  ஆனால்  நீண்ட நாட்களாக அதன் பெயரை மட்டுமே அறிந்து, கைக்கு வராத காலங்களில் அதன்மேல் தவறான ஒரு பெரிய எதிர்பார்ப்பு என் நாக்கில் நான் வைத்திருந்த காரணத்தினால், அது முதலில் என் நாக்குக்கு வந்ததும் அது அதை நிராகரித்தது.  "நான் நினைத்தது இதுவல்ல.  என் நினைவுக்குகளில் இருக்கும் சுவை வேறு.."

சில சமயங்களில் நம் எதிர்பார்ப்பே நமக்கு எதிரி.  இது இது இப்படிதான் இருக்கும், இப்படிதான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் எதை அணுகினாலும் ஏமாற்றம்தான் மிஞ்சும்.  இந்த விஷயம், சுவை அல்லாத மற்ற விஷயங்களில் ஏமாற்றம் தவிர, அது விரக்தியில், கோபத்தில்  முடியாமல் இருந்தால் நல்லது. (தத்துவம் எண் 98347213)

First Impression is the Best Impression என்பது போல  நம் நாக்குக்கு First cook is the best cook . நாவறியும் சுவைகளில் முதல் சுவை அம்மாவின் சமையல், அம்மாவின் கைப்பக்குவம்.  அதற்குப் பிறகு வெங்கடேஷ் பட்டே வந்து சமைத்தாலும் அது அம்மாவின் சமையலுக்கு இரண்டாம் பட்சம்தான் என்னும்போது மனைவியின் சமையலில் குற்றம் காண்பது மனித இயல்பு.  ஏன், அந்த மனைவியே கூட தன் அம்மாவின் சமையலை தான் முதலில் சிலாகிப்பார்.  என்ன சொல்கிறீர்கள்? 

ஆனால் பெரும்பாலான வீடுகளில் இன்று அம்மாக்கள் சமைக்கிறார்களா இல்லையா, தெரியாது!  சமையலுக்கு ஆள், தினமும் குழம்பும் கூட்டு, பொரியல் ரசம் மட்டும் ஆர்டரின் பெயரில் என்று வாங்கி ஓட்டினால் எந்தக் குழந்தை அதன் அம்மாவின் கைப்பக்குவம் அறியும்!

ஸ்வீட் வகைக்கு மறுபடி வருகிறேன்.  

பிடித்த ஸ்வீட் இருக்கட்டும்..  பிடிக்காத ஸ்வீட் எது?

எனக்கு சோன்பப்டி.   தள்ளுவண்டியில் மணியடித்துக் கொண்டே  வட இந்தியன் போல சிலர் கொண்டு வரும் சோன்பப்டி சின்ன வயதில் நான் விரும்பி சாப்பிட்டதுண்டு.  அதென்னவோ அவன் பெரும்பாலும் மாலை வேலைகளில்தான் வருவான். பத்து பைசாவுக்கு சின்ன பொட்டலத்தில் சலூனில் உதிர்ந்த தாத்தாவின் தாடி மயிர் போல நிறைத்துக் கொடுப்பான்.  இந்த உவமானம் பின்னர் தோன்றியது.  அப்போதே தோன்றி இருந்தால் அதுவும் பிடித்திருக்காது!  கொஞ்சமாக கிடைத்ததாலேயே அதுவும் பிடித்ததோ என்னவோ..

இப்போது பாக்கெட்களில், டப்பாவில் கிடைக்கும் கலர் கலரான, வெவ்வேறு வாசங்களில் வரும் சோன்பப்டி அன்று சாப்பிட்ட தாத்தாவின் தாடி மயிர் சோன்பப்டியிலிருந்து மாறுபட்டது.  பிடிக்கவே பிடிக்காது.  இப்போதும் தள்ளுவண்டியிலும் கொண்டு வருகிறார்கள்.  அது பழைய சுவையில் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அது மாறி விட்டதா, நான் மாறி விட்டேனா தெரியவில்லை.

நடிகர் மோகனை ஏழைகளின் கமலஹாசன் என்பார்கள்..  அதுபோல காஸ்ட்லீ ஸ்வீட் வாங்க வேண்டாம் என்று யோசிப்பவர்கள் ரீசனபிள் விலையில் கிடைக்கும் சோன்பப்டியை வாங்கி வந்து விடுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல், ரவா உப்புமா போல இதுவும் ஒரு ஆபத்பாந்தவன்.  சமயங்களில் பெட்டிக்கடை உட்பட, எந்தக் கடையில் வேண்டுமானாலும் கிடைக்கும்.  எதுவும் வாங்காமல் வந்து விட்டோமே என்று நாக்கைக் கடிப்பவர்கள், சட்டென பக்கத்துக்கு கடையில் புகுந்து இதை வாங்கி விடலாம்!

ஒரு வீட்டுக்குச் செல்லும்போது எதையாவது வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டுமா என்றால், ஆம்,  எங்களுக்கு அந்தப் பழக்கம் உண்டு.  அந்தப் பழக்கம் இல்லாத வெகு சிலர் இருக்கிறார்கள்.  நிம்மதியான மக்கள்.  நமக்கும் தொல்லை இல்லை.

திருமதி ஆதி வெங்கட் தனது ஒரு பதிவில் குறிப்பிட்ட மஞ்சள் குங்குமம் டப்பாக்கள், ரவிக்கை பிட் போல சோன்பப்டியும் என்னைப்  பொறுத்தவரை வாங்கியதும் வேறு கைக்கு மாற்றி விடுவேன்!  கிட்டத்தட்ட ஹால்டிராம் இதற்கு தனியுரிமையே கொண்டாடுகிறார்கள்! 

இன்னொரு விஷயம்.  நம்  வீட்டுக்கு வருபவர்கள் அன்போடு எதையோ வாங்கி வருகிறார்களே என்று சந்தோஷப்பட வேண்டும்தான்,  ஆனால் என் அலுவலக நண்பர் ஒருவர் எப்போது வந்தாலும் அதென்னவோ ஜாங்கிரிதான் வாங்கி வருவார்.  அவருக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் போலும்!  அதையாவது வாங்கி வருகிறார் என்று சந்தோஷப் பட்ட அதே அளவு ஒவ்வொரு முறையும் அதைத் திறந்து 'இந்த முறையாவது வேறு ஏதாவது ஸ்வீட் இருக்குமா?' என்று ஏமாந்தும் இருக்கிறேன்!

ஒரு நண்பர் முதல் முறை வரும்போது பால் பேடா வாங்கி வந்தார்.  அவரை குஷிப்படுத்த உடனே அதைத் திறந்து ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அவருக்கும் நீட்டினேன்.  அந்தச் சிறிய ஸ்வீட்டின் ஓரத்தில் சிறிது கிள்ளி எடுத்துக் கொண்டவர் (எனக்காக விட்டுக் கொடுக்கிறாராம்)  "பிடிக்குமா?" என்றார்.  உண்மையில் எனக்கு மில்க் ஸ்வீட்ஸ்களில் பால்கோவா ஓகே.  மற்றவை இரண்டாம் பட்சம் கூட இல்லை, மூன்றாம், நான்காம் பட்சம்தான்.  ஆனால் அதற்காக பிடிக்காது என்றா சொல்வீர்கள்?  

அவ்வளவுதான்.  இன்று வரை அவர் வந்தால் பால் பேடாதான். 

"ஸ்ரீராமுக்கு ரொம்பப் பிடிக்கும்"  அவ்வ்வ்வ்வ்வ்.......
===========================================================================================

நியூஸ் ரூம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

25 பேருக்கு வழங்க ஆர்டர் செய்த சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத விழுப்புரம் ஹோட்டல் உரிமையாளருக்கு 35,000 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம்.  கொடுத்த சாப்பாட்டுக்கு ரசீது கூட தர மறுத்திருந்தாராம் ஹோட்டல் உரிமையாளர்.

பெங்களூரு கிரிநகர் - புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நண்பனின் மனைவிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற, பைக் திருட்டில் ஈடுபட்ட ஆந்திரா பழ வியாபாரி கைது செய்யப்பட்டார்.

ஆர்டர் செய்த உணவில் பல்லி இருந்ததாக, எலி இருந்ததாக ஒரு வாரமாக செய்தி.  இன்று பல்செட்..  ம பி கார்கோன் மாவட்டத்தில் ஒரு விழாவில் தரப்பட்ட சாக்லெட்டை எடுத்து வந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியை சாக்லெட்டை ருசித்துக் கொண்டிருந்தபோது ஒரு சாக்லெட்டை கடிக்கவே முடியவில்லையே என்று பிரித்துப் பார்த்தபோது அதனுள் பல்செட்டின் 4 பற்கள் இருந்தனவாம்.  விசாரணை நடக்கிறதாம்.

கொக்கைன் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுவதாலோ, கடத்தல்காரர்கள் வீசி எறியும் கொக்கைன் மிச்சங்களாலோ...  பிரேசில் கடலில் உள்ள சுறா மீன்கள் கொக்கைன் போதைப் பொருளால் பாதிக்கப்பட்டிருப்பதை, ஆவற்றிடமிருந்து  மாதிரி எடுத்துக் பார்த்து, அந்நாட்டு விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கிறார்கள்.  பெரும்பாலான  பெண் சுறாக்கள் ர்ப்பமாக இருந்தாலும், குழந்தையை கொக்கைன் பாதித்ததாக தெரியவில்லையாம்.

வாக்குவாத சர்ச்சையின் உச்சகட்ட ஆத்திரத்தில் உடன் வந்த இன்னொரு பஸ்ஸின் டிரைவரை டோல் அருகே பஸ்ஸை ஏற்றிக் கொன்ற இந்த பஸ்ஸின் ஓட்டுநர் - சம்பவம் மாண்டியா அருகே.

பொள்ளாச்சி-உடுமலை சாலையில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் இட்லி மற்றும் வடை பார்சல் வாங்கிய சுந்தர் என்பவர், பார்சலுக்கென்று தனியாக அதிகப்படியாக கட்டணம் வசூலித்தது தவறு, அதற்காக ஹோட்டல் நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று உணவகத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், வீட்டிலிருந்து பாத்திரம் கொண்டு வந்தால் கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவிப்பு பலகை வைத்திருக்கிறார். உணவு பாதுகாப்பு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட பேக்கிங் பொருள்கள் மூலம் உணவு வழங்கங்கப்பட்டதை நிரூபித்திருக்கிறார். எனவே அவர் இழப்பீடு எதுவும் தரத் தேவையில்லை என் அந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.

- லடாக்கின் லே யில் தற்சமயம் 32 டிகிரி வெப்பம் நிலவுவதால் காற்றின் அடர்த்தி மிகவும் குறைந்து விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்க முடியாத சூழல் என்பதோடு வெப்ப அலை வீசுவதால் கிட்டத்தட்ட 30 விமானங்கள்(spice jet & Indigo) ரத்து செய்யப் பட்டிருக்கின்றன.

- கர்நாடகாவில் இந்த வருடம் பட்டப்படிப்பில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 90% குறைந்திருக்கிறது.

- சேத்துபட்டு ரயில் நிலையத்தில் கத்தியோடு திரிந்த மூன்று பேர்கள் கைது. விசாரணையில் அந்த மூன்று பேரும் புதுக்கல்லூரி மாணவர்கள் என்பதும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் மீது இருந்த பகை காரணமாக அவர்களை கொலை செய்யவதற்காக கத்தியோடு அலைந்ததாக தெரிகிறது.

- புனே: பதினாறு வயதான, பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் பதினான்காவது மாடியில் இருக்கும் தங்களுடைய வீட்டின் பால்கனியிலிருந்து குதித்து இறந்திருக்கிறான்.  காரணம் ஆன் லைன் விளையாட்டிற்கு அடிமையான அவன் விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டில் கொடுக்கப்பட்டிருந்த ஆணை ‘குதி’(jump) என்பதாகும். அதற்கு கட்டுப்பட்ட அவன் யோசிக்காமல் செயல் படுத்தி விட்டான்.- கடவுளே!  எங்கு சென்று கொண்டிருக்கிறது நம் இளைய சமுதாயம்...

- ஆக்ரா: அரசு துவக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் பள்ளி நேரத்தில் வகுப்பில் தூங்கியிருக்கிறார், அதுவும் எப்படி? பாயை விரித்து படுத்துக் கொண்டு, மாணவர்களை விசிறச் சொல்லி, தூங்கியிருக்கிறார். இன்னொரு நாள் குழந்தைகளை பிரம்பால் அடித்திருக்கிறார். இவைகள் சோஷியல் மீடியாவில் பரவ, அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். – அடடா! நான் துவக்கப் பள்ளியில் படித்த பொழுது சோஷியல் மீடியா இல்லையே??

- பெலகாவி: திருவிழாவில் காணாமல் போன நாய் நான்கு நாட்களில் 195 கி.மீ. நடந்தே எஜமானர் வீட்டை அடைந்திருக்கிறது.

- புதுடில்லி:மின்சார கார்களைப் பயன்படுத்தும் 51 சதவீதம் பேர், இன்ஜின் கார்களுக்கு திரும்ப நினைப்பதாக, பார்க்கிங் சேவைகளை வழங்கும் 'பார்க் பிளஸ்' நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. சார்ஜிங் கட்டமைப்பு, குறைந்த வேக சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் பிரச்னைகளும் இருப்பதால், இந்திய சூழ்நிலைகளுக்கு ஹைபிரிட் கார்கள் சிறந்ததாக இருக்கும் என, ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

==================================================================================================

ஹிஹிஹி....


===============================================================================================

ஃபேஸ்புக்கில் படித்து வியந்தது.....



\\\\\\\\\\\\\\\\\\\\\\\\//////////////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\//////////////////////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\\\///////////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\

மனம் ரசிக்கும் மழையை 
உடல் ரசிப்பதில்லை!

பட உதவி (மட்டும்)  : திரு R. கந்தசாமி ஸார், FACE BOOK.


சன்னலில் நின்றா,  சாலையில் நின்றா 
எங்கிருந்து பார்க்கிறீர்கள் 
சாரல் மழையை.. 

ரசிப்பதற்கும் 
இயற்கையோடு 
இணைந்து நனைவதற்கும் 
இருக்கும் 
சுகமான வித்தியாசம் 
உணர்ந்திருக்கிறீர்களா?

சளிபிடிக்கும் 
சாத்தியங்களைத் தாண்டி 
மின்னல்தாக்கும் 
மரங்களின் கீழே 
ஒதுங்காமல் 
யாரோ நம்மைப் 
பார்க்கிறார்கள் 
என்ற லஜ்ஜையின்றி 
யாருமற்ற சாலையில் 
ஓடி ஆடி நனைந்திருக்கிறீர்களா?

ஆயின்,  அந்த கணம் 
 வாழ்ந்திருக்கிறீர்கள்   
உங்கள் வாழ்க்கையை
பரிபூரணமாய்.



ரசிக்கிறியா?  கவிதையா...  டேய்..   மழை பெய்தால் எங்க நிலைமையை யோசித்துப் பார்த்தியா...  உங்களுக்கெல்லாம் வீடு இருக்கற கொழுப்புடா...

==========================================================================================================

வெளிநாட்டுப் பயணம் பற்றி ஜெயகாந்தன் 


வெளிநாட்டு பயணம் - ஜெயகாந்தன்
நான் வெளி நாடுகளுக்குப் போனதில்லை. அன்னியர் வீட்டில் நுழைந்து பார்த்து, "அங்கே அது இருக்கிறது; இது இருக்கிறது, நம்மிடம் அதெல்லாம் இல்லையே...' என்று, தம் வீட்டோடு ஒப்பிட்டு ஏங்கி, அங்கலாய்க்கும், அலையும் குணமே, வெளிநாடு சுற்றிப் பார்க்கும் பலரிடமும் நிறைந்திருப்பதாக, எனக்குத் தோன்றுகிறது. வேடிக்கை பார்ப்பதற்காகச் சிலர் செல்கின்றனர். எனக்கோ, நம் வீதிகளில் நடக்கும் வேடிக்கைகளே, இன்னும் பார்த்துத் தீரவில்லை. புதுமைகளை ரசிப்பது எனில், என்னைத் தேடி வரும் ஒவ்வொன்றுமே, புதுமையாக இருக்கின்றன. கற்றுக் கொள்வதற்காக எனில், என்னைச் சுற்றி இருக்கும் மிகக் குறுகிய வட்டத்தில் கூட, நான் காணவும், கற்கவும், ஏராளமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.
ரஷ்ய எழுத்தாளர்களான கோகோல், புஷ்கின், தாஸ்தியேவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனீவ் ஆகியோரின் படைப்புகளைப் படித்திருக்கிறேன். அவர்கள் நேசித்த ருஷ்ய ஆத்மா மிக உயர்வாக இருந்தது. அதன் காரணமாகவே, ரஷ்யாவை காண, நான் ஒருமுறை இசைந்தேன்.
நம் பெருமையை உலகு அறிவதற்காக, அதனால், உலகு பயன் உறுவதற்காக - ஒரு விவேகானந்தர் போல் நம்மால் போக முடியுமா?
அல்லாமல், லண்டனில் இட்லி - சாம்பார், கும்பகோணம் வெற்றிலை - சீவல் கிடைப்பதைப் பற்றி, கதை அளந்து, ஜப்பானிய, "கீய்ஷா' பெண்களைப் பார்த்து, "அப்பப்பா... அச்சச்சோ!' என்று வாய் பிளந்து, ஆச்சரியப் படுவதற்கும் தானா போக வேண்டும்!
சுங்க இலாகா சோதனை, வருமான வரி சர்ட்டிபிகேட், பாஸ்போர்ட், விசா, அறிமுகக் கடிதங்கள், இத்யாதி சங்கடங்களைத் தாங்கிக் கொண்டு, ஒரு சர்வதேச கைதி போல, இந்தச் சடங்குகளைச் சுமந்து கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் ஏறியும், இறங்கியும், நான் சாதிக்கப் போவது ஏதுமில்லை என்று எனக்குத் தெரியும். நான் இருக்குமிடத்தில் தான், எனக்குச் சிறப்பு.
எங்கும், எல்லாரும் சுதந்திரமாகத் திரியும் காலம் வரும். அப்போது, எல்லாருக்கும் இந்த மோகம் குறையும். எனக்கு, இப்போது இந்த மோகம் இல்லை.
- ஜெயகாந்தன் ஒரு கட்டுரையில்.
நன்றி - தினமலர்

 நன்றி திரு R. கந்தசாமி 

===============================================================================================

வெள்ளம் வந்தாலும் சீரியல் முக்கியம் பாஸ்....!  

இணையத்திலிருந்து 'வினோத இந்தியா' என்கிற பக்கத்திலிருந்து.....!

Floods happen all around the world, but in some places, there’s no choice but to deal with them as they are. India is one of those places, for many families. If a flood isn’t that severe, you may find people just walking around in ankle-deep water because there’s no alternative.  Technically these types of floods aren’t that bad, but only relatively speaking. It’s just that they could certainly be much worse.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


பொக்கிஷம் :- 

1962 கல்கி - அமுதசுரபி..


இந்தக் கடை இன்னும் இருக்குமா?


வினோபாஜி யின் வாழ்த்து ராஜாஜிக்கு 


ஓவியர் உமாபதி தெரியுமா?  அவரின் அரசியல் கார்ட்டூன்ஸ்...  அப்போதைய அரசியல் நினைவுக்கு வருகிறதா?


அடப்பாவி...  யோவ்....


அமுதசுரபியில் 1963 ல் வெளிவந்த ஒரு சிறுகதை.  கார்த்திகா என்னும் ஓவியரை நான் அறிந்ததில்லை.  ஓவியத்தைப் பாருங்கள்...  அந்தியில் இருக்கும் உருவம் முன்னாலே..  கலங்கித் தெரிகிறது.  என்ன மனக் கஷ்டமோ...  கதையின் தலைப்பு வேறு 'மன நிழல்' என்றிருக்கிறது.   அந்தியின் இடதுபுறம் அரும்பும் மலர்கள்..  வலதுபுறம் வளர்ந்த வாலிபம்..  வாழ்க்கையின் பருவங்கள்...  கதை எதைப்பற்றியதாய் இருக்கும் என்று நாம் நினைப்போமோ அதற்கு மாறாகக் கூட இருக்கலாம்!

150 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... அவ்வப்போது பிஸியாகி விடுகிறீர்கள். பிரார்த்தனைக்கு நன்றி. வணக்கம் அக்கா.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் ப(ல)ல் சுவையுடன் அருமை. சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் செய்தியறை செய்தி தொகுப்புகளை எப்போதுமே மிகவும் ரசித்திருக்கிறேன்.இன்றைய தினத்தில் அறியாத பல செய்தி தகவல்களை சேகரித்து தந்த அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா. செய்திகளில் ஸ்ரீராமின் பங்கும் இருக்கிறது. அவர் பெருந்தன்மையோடு தன் பெயரை போட்டுக் கொள்வதில்லை. முதல் நான்கு செய்திகள் அவர் உபயம்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    தங்களின் இனிப்பான முதல் பகுதி எண்ணங்களை அழகாக தந்துள்ளீர்கள். அந்தக்காலம் மணியடித்து தள்ளுவண்டியில் வரும் சோன்பப்டி நினைவுகள் அருமை. ஏதோ தேவலோக அமிர்தம் மாதிரி வாங்கி சாப்பிட்ட இளவயது நினைவுகள் இன்று உங்களின் இந்த கட்டுரையை பார்த்ததும் என்னை இங்கு வரவழைத்து விட்டது.

    /சில சமயங்களில் நம் எதிர்பார்ப்பே நமக்கு எதிரி. இது இது இப்படிதான் இருக்கும், இப்படிதான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் எதை அணுகினாலும் ஏமாற்றம்தான் மிஞ்சும். இந்த விஷயம், சுவை அல்லாத மற்ற விஷயங்களில் ஏமாற்றம் தவிர, அது விரக்தியில், கோபத்தில் முடியாமல் இருந்தால் நல்லது. (தத்துவம் எண் 98347213/

    /ஒரு வீட்டுக்குச் செல்லும்போது எதையாவது வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டுமா என்றால், ஆம், எங்களுக்கு அந்தப் பழக்கம் உண்டு. அந்தப் பழக்கம் இல்லாத வெகு சிலர் இருக்கிறார்கள். நிம்மதியான மக்கள். நமக்கும் தொல்லை இல்லை./

    /ஏன், அந்த மனைவியே கூட தன் அம்மாவின் சமையலை தான் முதலில் சிலாகிப்பார். என்ன சொல்கிறீர்கள்?/

    இப்படி பல இடங்களில் தாங்கள் கட்டுரையில் இயல்பாகவும், உண்மையாகவும், நகைச்சுவையாகவும் எழுதிய வரிகளை மிகவும் ரசித்துப் படித்தேன். தங்கள் எழுத்தின் சிறப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பாராட்டுகளோடு என் வணக்கங்களும் .பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே .

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்த வரிகளை எடுத்துக் போட்டு ரசித்து, பாராட்டி இருப்பதற்கு நன்றி கமலா அக்கா.  மகன் ஊருக்கு போயாச்சா?

      //பாராட்டுகளோடு என் வணக்கங்களும் //

      பாராட்டு சரி, வணக்கங்கள் எதற்கு? நான் தான் சின்னப் பையன். உங்களை வணங்க வேண்டும்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      /மகன் ஊருக்கு போயாச்சா?/

      இல்லை.. இந்த தடவை பல வேலைகளின் காரணமாக ஊருக்கு புறப்பட்டுச் செல்ல கொஞ்சம் தாமதமாகும். மருமகளின் சுற்றங்கள் அம்மா, அப்பா, அண்ணா குடும்பம், அக்கா குடும்பம் (நிறைய பேர்) என வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதால், /வரவிருப்பதால், எனக்கு சமையல், மற்றும் பிற வேலைகள் கைகளை இறுக்கமாக கட்டியிருக்கிறது. (கைப்பேசியை கையில் எடுக்க இயலாமல்) அதனால் என்னால் முன்பு போல் நம் நண்பர்களின் பதிவுகளுக்கு தினமும் வர இயலவில்லை. நிலைமை சரியானதும் முன்பு போல் பதிவுகளுக்கு தினமும் வருவேன். (ஏற்கனவே நம் சகோதரி கோமதி அரசு அவர்களிடம் இதுபற்றி கூறியுள்ளேன்.)

      இப்போது எங்கள் வீட்டிலும் இந்த சோன்பப்டி (சுற்றங்களுக்காக ) வாங்கியிருப்பதால் , உங்கள் சோன்பப்டி பதிவு. என்னை இழுத்து வந்து விட்டது.(அது என்னவோ உங்கள் வியாழன் பதிவுக்கும், எங்கள் வீட்டின் நிகழ்வுகளுக்கும் ஒரு முன்ஜென்ம தொடர்பு உள்ளது ஆச்சரியமான விஷயம்.!!:)) )

      இரண்டாவதாக இன்று சற்று உடல் நிலை பாதிப்பு (ஜலதோஷம்) காரணமாக இரவு சரியாக உறக்கம் வரவில்லை. நீங்கள் ஜலதோஷற்காக தந்த ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. நானும் அவைகளை இரண்டொரு நாட்களாக கடைப்பிடித்து வருகிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. // உங்கள் வியாழன் பதிவுக்கும், எங்கள் வீட்டின் நிகழ்வுகளுக்கும் ஒரு முன்ஜென்ம தொடர்பு உள்ளது ஆச்சரியமான விஷயம்.!!:)) ) //

      ஹா..  ஹா..  ஹா..  முன்னமே சொல்லி இருக்கிறீர்கள்.  ஜலதோஷம் இருந்தால் நாவுக்கு ஸ்ட்ரைக் செய்யத்தோன்றி விடும்.  சுவை காட்டாது, சாப்பிடத் தோன்ற வைக்காது!

      நீக்கு
  4. "ச்சீ" யா,?

    மாணவன் என்று வேண்டுமென்றே குறிப்பிட்டிருப்பதை 'அவன்' என்று திருத்திப் படித்தால் குரூரம் பொதிந்திருப்பது புலப்படும்.

    எது எப்படியானாலும் எல்லாம் நம் 'பார்வை'யில் இருக்கிறது என்று பெரிய மனுஷத்தனமாய் பூசி மெழுகவும் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அதற்கு தனி அர்த்தம் கிடைத்து விடும்!  ஆனால் இது குரூரத்துக்கு அல்ல, அசட்டுத்தனத்தை ரசிப்பதற்கு!

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    வெள்ளம் வந்தாலும், சீரியல் முக்கியம்.. படம் செய்தி. ஹா ஹா ஹா.

    மழைக் கவிதை அருமை. கவிதையை ஒரு கோபத்தோடு (ஆனாலும் செல்லக் கோபத்துடன்) ரசிக்கும்? செல்லத்தின் படம் அருமை. நானும் பாதகமில்லாத மழையில் நனைவதை விரும்பியிருக்கிறேன். (ஆனால், இப்போது சாத்தியமில்லை. அதுவும், இரண்டொரு நாட்களாக சளி, ஜுரத்துடன் அவதிப்படும் இந்தக் காலகட்டத்தில்.) பாராட்டுக்கள் சகோதரரே. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சளி, ஜுரம் எங்கெங்கும் பரவிக் கொண்டே இருக்கும் போல...    உப்புநீர் கொப்பளியுங்கள்..  ஜீரகக்கஷாயம் குடியுங்கள்..  சித்தரத்தை (சித்தரோட அத்தை அல்ல!) வாயில் அடக்கிக் கொள்ளுங்கள்...  வெந்நீரே குடியுங்கள்!

      மழையில் நனைவது பிடிக்கும் என்றாலும் நம் சுயகட்டுப்பாடு நம்மை தடுத்து விடுகிறது!

      நீக்கு
    2. // சித்தரோட அத்தை// ஹாஹாஹா! வாய் விட்டு சிரித்து விட்டேன்.

      நீக்கு
  6. ஆச்சரியம்! வினோபாஜி தமிழில் எழுதினாரா?

    அவர் தந்தை என்று விளித்திருந்தது நெகிழ வைத்தது.

    'ஜய் ஜகத்' !!!!

    இன்றைய அரசியல் நடிப்பு சக்ரவர்த்திகள்
    ஆயிரம் தபஸ் பண்ணினாலும் அவரின் இந்த உலகப்பார்வை கிடைக்காது!

    பூமி தான அந்த ரிஷியின்
    பாதம் பட்டு பாரதம் பெரும் பேறு பெற்ற காலம் அது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொக்கிஷத்துக்காக பக்கங்களை புரட்டிக்கொண்டே வந்தபோது கண்ணில் பட்ட இதைப் பார்த்ததும் எனக்கும் 'அட' என்று வியப்புதான்.  இன்றைய பொக்கிஷ தலைப்பு அதன் அர்த்தத்தை அடைந்தது!  தன்னலமற்ற உண்மையான அந்த தபஸ்விகள் செய்த புண்ணியம்தான் நம்மை இன்னும்  காத்துக் கொண்டிருக்கிறியாது.

      நீக்கு
  7. இந்த வாரக் கவிதை
    உண்மையின் தரிசனம்!

    அந்த பரிபூரண சுகத்தை உணர்ந்திருக்க யாருமற்ற தனிமையில் நட்ட நடு சாலையில் மழைக் குளியலில் பாதாதி கேச
    வருடலில் நாமும் சாரல்மழையும் மட்டும் தான் என்ற பிணைப்பின் சுகத்தை சுகித்திருக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த கேள்வி:

      ஷவரில் நின்று
      சாரல் என்று கற்பிதம் கொண்டால்
      இந்த பரிபூரண சுகம்
      சாத்தியமோ?
      சொல்லுங்கள்.

      நீக்கு
    2. அந்த மழையில் நனையும் சுகத்தை நீங்களும் உணர்ந்திருப்பது சுகம்.  கூட்டத்தோடு மழையில் உற்சாகக் குளியல் போடுவது ஒருரகம், தனிமையில் கிடைக்கும் இந்த வாய்ப்புகளில் கிடைக்கும் சுகம் ஒருரகம்.  சமயங்களில் இந்த சுகத்தை, இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அருகில் யாரும் இல்லையே என்று கூட ஏக்கம் வந்துவிடும்!

      நீக்கு
    3. ஷவரில் நின்று சாரல் என்று நினைத்தா....  ஊ ஹூம்.  கானமயிலாட கதைதான்!  நான் ஷவரில் குளிப்பதே இல்லை.  

      நீக்கு
    4. மழையில் நனைவதைப் போன்ற உணர்வைத் தரும் ஷவர் உண்டு. எங்கள் ராமாபுரம் வீட்டில் இருந்தது. எனக்கு மிகவும் பிடிக்கும்.

      நீக்கு
    5. எனக்கென்னவோ ஷவரில் நனைவது மழையில் நனையும் உணர்வைத் தருவதில்லை!

      நீக்கு
  8. யுவர் ஹானர் ஸ்வீட் ஆராய்ச்சியில் லட்டு, கோதுமை அல்வா, பாதாம் அல்வா, மைசூர் பா, ரவா கேசரி, அசோகா முதலியவற்றை குறிப்பிடாததை ஆட்சேபிக்கிறேன்.

    பா வெ செய்திகளில் முதல் மூன்று செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டி இருக்கிறது.

    தற்போதைய தினமலர் செய்திகள் மாறுபட்ட திசையில் செல்வது போன்று தோன்றுகிறது. கவனம் தேவை.

    குருட்டுப் பெண் ஜோக் சரியில்லை. எல்லோரும் குளியல் அறையில் இருந்து வெளி வரும்போது இடுப்பில் துண்டாவது இருக்கும். அது பழக்கம் ஆன ஒன்று.

    நிழல்கள் பற்றிய செய்தியை யார் நாள் முழுதும் கோயிலில் நின்று சரி பார்ப்பது? நிழலுக்கு ஒளி தேவை. இது கருப்பா வாந்தியெடுத்தான் என்பது காக்காய் காக்கையா வாந்தியெடுத்தான் என்று மாறியது போல் உள்ளது.

    ரசிப்பதும், ரசிக்காததும் மனம் தான். உடல் மனதின் கண்ட்ரோலில் அல்லவா உள்ளது? உடல் ஒன்றும் தன்னைத் தானே செய்வதில்லை.

    கந்தசாமியின் கவிதை நன்றாக இருக்கிறது.

    ஜீவி சார் வெளிநாட்டில் இருப்பதால் ஜெயகாந்தன் கட்டுரையை இங்கு உட்படுத்தினீர்களா?

    மன நிழல் பொக்கிஷம் ஈர்க்கிறது. மனமே நிழல் தானே! நிஜம் இல்லையே.

    இன்றைய பதிவில் எதோ ஒன்று குறைவதாகத் தோன்றுகிறது. என்ன என்பது பற்றி ஆலோசித்து பின்னர் சொல்கிறேன்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தடவை தோழர் ஜீவா அவர்கள் ரஷ்யா சென்றிருந்த பொழுது ஜெயகாந்தனின்
      கதையொன்றை வாசித்து ரசித்ததாக சொன்ன பொழுது
      "சோவியத் பூமியில் தான் ஜீவாவுக்கு ரசனைகள் வெளிப்படும்" என்று ஜே.கே. சொன்னது தான் நீங்கள் எழுதியிருந்ததைப்
      பார்த்ததும்
      என் நினைவுக்கு வந்தது, ஜெஸி ஸார்.

      நீக்கு

    2. ​ஜீவாவில் உள்ள வா வி ஆகி விட்டது????

      நீக்கு
    3. JKC ஸார்...   நீங்கள் சொல்லி இருக்கும் ஸ்வீட்க்கள் விடுபட்டுதான் விட்டன.  அதில் ரவா கேசரி தவிர மற்றவற்றை என் விருப்பமாக டிக் செய்கிறேன்!

      நீதிமன்ற வழக்குகள் என்று போட்டிருக்கும் அடக்காமல் இருந்திருக்காது.  நடந்திருக்கலாம்.  தினமலர் பொய்ச்செய்திகள் போட்டதா எனக்குத் தெரியவில்லை.  சமயங்களில் அதன் தலைப்புகள் ரைமிங்காய் ரசிக்கும்படியும் இருக்கும்.

      குருட்டுப்பெண் ஜோக்கில் அப்படியும் சில அசடுகள் இருப்பார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.  அசட்டு நம்பிக்கை.   மேலும் ஜோக் சொன்னால் அனுபவிக்கனும்; ஆராயக்கூடாது!!!  ஜோக்குக்கு கையுண்டா, காலுண்டா, இல்லை கண்தான் உண்டா?!!

      கோவில் நிழல் செய்திகள் ஏதோ சொல்கிறார்கள், பரவசத்துடன் படிக்கிறோம்.  அவ்வளவுதான்.  உள்ளே இருப்பது கடவுள் என்று நம்பவில்லையா?  அது போலதான்.  ஒரு நிமிட ஆச்சர்யங்கள், பரவசங்கள்!

      //கந்தசாமியின் கவிதை நன்றாக இருக்கிறது//
      Grrrrrrrr..  படம்தான் அவர் பகிர்ந்ததை எடுத்துக் போட்டிருக்கிறேன்.  கவிதை (என்று சொன்னதற்கும் நன்றி)  என்னுடையதாக்கும்!  இப்போது படத்துக்கு கீழே ஒரு சிறு விளக்கமும் கொடுத்திருக்கிறேன்!
      //ஜீவி சார் வெளிநாட்டில் இருப்பதால் ஜெயகாந்தன் கட்டுரையை இங்கு உட்படுத்தினீர்களா? //
      அப்படி இல்லை.  ஆனால் இதைப் பகிர எடுத்தபோதுகட்டாயம் அவர் நினைவுக்கு வந்தார்!

      மன நிழல் படம் ஈர்க்கும் என்று நான் நம்பியது உண்மையாகி இருக்கிறது.

      நீக்கு
    4. ஜேகேயின் பதில் புன்னகைக்க வைக்கிறது ஜீவி ஸார்.

      நீக்கு
    5. JKC Sir..   ஜீவி ஸாரின் மகன் பெயர் ஜீவாதான்!  அவரும் ஒரு வலைத்தளம் வைத்திருக்கிறார்.

      நீக்கு
    6. // இன்றைய பதிவில் எதோ ஒன்று குறைவதாகத் தோன்றுகிறது. என்ன என்பது பற்றி ஆலோசித்து பின்னர் சொல்கிறேன். ..//

      கட்டாயம் சொல்லுங்கள்.  சிலசமயம் வழக்கமாக இருக்கும் எல்லா ஐட்டங்களும் இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவதாகத் தோன்றும்தான்.  அது மனம் இன்னும் ஏதோ எதிர்பார்க்கிறது என்று சொல்லலாமா!  ஹிஹிஹி 

      நீக்கு
    7. jeevagv.blogspot.com

      'என் வாசகம்' என்று தலைப்பு கொண்ட என் மகன் ஜீவாவின் வலைத்தளம் இது.
      நம்ம கீதா சாம்பசிவம்
      அவர்கள் உள்ளடக்கிய
      எழுத்து, பக்தி, சங்கீத ஆர்வலர்கள் கொண்ட அந்நாளைய தளம் அது. சொல்லப் போனால் என் மகன் வலைத்தளத்தில் எழுதுவதைப் பார்த்துத் தான் எனக்கும் ஆசை வந்து ஒரு தளத்தை உருவாக்கித் தரச் சொல்லி எழுத ஆரம்பித்தேன். jeeveesblog.blogspot.com (பூவனம்) உருவான கதை இது தான்.

      நீக்கு
    8. @ Jeevi Sir,
      ஒரு காலத்தில் நாங்க எல்லோரும் ஜீவா உட்பட (கபீர் அன்பன்) என்னும் நண்பரும் போட்டி போட்டுக் கொண்டு பக்திக்கட்டுரைகளாக எழுதுவோம். நாங்கள் நண்பர்கள் சிலர் சேர்ந்து இதற்கெனவே ஆசார்ய ஹ்ருதயம் என்னும் பெயரில் வலைப்பக்கத்தில் மாற்றி மாற்றி எழுதியும் இருக்கோம். ப்ளாகர்ஸ் யூனியன் என ஒன்று ஆரம்பித்தும் எழுதினோம். அவங்கல்லாம் இப்போ எங்கே? நான் ஒருத்தி மட்டும் தான் அந்தக் குழுவில் ஏதோ எழுதி வருகிறேன். ஜீவா கூட பையர் பிறந்தப்புறம் (அப்படியா ஜீவா) எழுதுவதைக் குறைச்சு விட்டார்னு நினைக்கிறேன். இப்போ இரு வருடங்களாக எனக்குள்ளும் தொய்வு. ஆனாலும் விடாமல் பிடிச்சுட்டுத் தொங்கிண்டு இருக்கேன்,

      நீக்கு
    9. கீதாம்மா,
      தாங்களும் இதைப் பார்த்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. முடிந்தால்
      வாட்ஸாப்பிலோ மொபைலிலோ தொடர்பு கொள்கிறேன். மிக்ல நன்றிம்மா.

      நீக்கு
  9. ​//பெருமாளும்/ / இதை பெரும்பாலும் என்று திருத்திவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தி விட்டேதேன்.  நன்றி.  அப்பாடி..  எங்கே என்று நீங்கள் சொல்லவில்லையா?  தேடித்தேடி முதலிலிருந்தே வாசித்து வந்து திருத்தினேன்!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      நானும் இந்த தட்டச்சுப் பிழையை கவனித்தேன். கருத்துக்களில் குறிப்பிட்டு சொல்லவும் நினைத்தேன். ஆனால், பதிவுகளில், "பெரும்பாலும்" இப்படி யதேச்சையாக வரும் இந்த தட்டச்சுப் பிழைகளை சுட்டிக்காட்டினால், மனது வருத்தப்படுமோ என நினைத்து விட்டு விட்டேன். :)) சிறிய பிழைகள்தாம் எத்தனை பொருளை மாற்றித் தருகிறது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. பிழைகளை சுட்டிக் காட்டுவதில் தவறில்லை அக்கா.  அப்போதுதானே திருத்திக்கொள்ள முடியும்.   பிழையான பாட்டுக்கு கமலா அக்கா (பாராட்டுப்) பரிசளித்தார் என்று நாளை வரலாறு சொல்லக்கூடாது அல்லவா?!!  ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
    4. எடிட் மோடில் find and replace உபயோகப்படுத்துவீர்கள் என்று நினைத்தேன்.
      Jayakumar

      நீக்கு
    5. பிளாக்கரில் அந்த வசதி கிடையாது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  10. வினோத இந்தியா (2)

    கங்கைப் படித்துறையில்
    திறந்த வெளி தொலைக்காட்சியில்
    அரசியல்
    வியாதிகளின்
    அண்டப்புளுகு ஆகாசப்
    பொய்ப்புராணங்களைக்
    தங்களை மறந்த மெஸ்மரிசஸ சூழலில் செவிமடுக்கும் அப்பாவி
    பொதுமக்களும்
    இப்படித் தான்
    இருப்பார்கள் போலிருக்கு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்வியாதிகள் என்றில்லை நடிக மகா ஜனங்களின், சில சமயம் நம் ஆளுமை மிக்க நண்பர்களும் கூட இதில் அடங்குவர் ஜீவி ஸார்.    அதுசரி,  அரசியல்வியாதிகள் பேசுவதையும், நடந்து கொள்வதையும் மட்டுமா பார்த்து பொதுஜனம் அவர்களுக்கு வாக்களிக்கிறது என்று நினைக்கிறீர்கள்?  அப்படியாயின்...   சரி, விடுங்கள்!

      நீக்கு
  11. மணல் மேட்டில் இருக்கும் நாய் படத்தையும் படத்திற்கான வாசகத்தையும் படித்தபோது, நேற்று இருவர் நாய்க்குக் குளிருமே என ஜிகிஜிகு உடை அடிவித்து வாக்கிங் கூட்டிச் சென்றது நினைவுக்கு வருகிறது.

    அனிமல் பிளானட் போன்றவை பார்க்கும்போது, காட்டில் ஆங்காங்கே ஓலைத் தடுப்பு அமைத்துத் தந்தால் மழைக்காலத்தில் விலங்குகளுக்கு சௌகரியமாக இருக்குமே என யோசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அவை இயற்கையை இழந்து விடும்!  குரங்குகளுக்கு வாழைப்பழம் கொடுத்தால் அவை சோம்பேறிகளாகி உணவு தானாக தேடுவதை நிறுத்தி மக்களை அண்டி கேட்க ஆரம்பித்து விடும் என்பார்களே, அது போல...

      நீக்கு
    2. நேற்று வளாகத்தில் ஒரு குட்டிப் பூனையை கழுத்தில் கயிறுட்டு வளாகத்தில் வாக்கிங் கூட்டிச் செல்வதைப் பார்த்தேன். விநோத மனிதர்கள் நிரம்பிய உலகம் இது.

      நீக்கு
    3. பூனையை கயிறு கட்டியா?  அடப்பாவிகளா...!

      நீக்கு
    4. வெளி நாடுகளில் குளிர் காலங்களில் செல்லப்பிராணிகளுக்கு குளிர் காலத்தில் கண்டிப்பாக ஸ்வெட்டர், சாக்ஸ்,குல்லா போன்றவை அணிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கம் அபராதம் விதிக்கும்.

      நீக்கு
  12. ஜெயகாந்தன் எழுத்து சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதை நினைக்க வைத்தது. உள்ளூர் எழுத்தாளர்கள் எல்லோரும் குப்பை, படித்து அறிந்துகொள்ள அவற்றில் ஒன்றுமே கிடையாது என்பதால்தான் அவர் ருசிய எழுத்தாளர்களின் நாவல்களைப் படித்தார் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சொல்லி இருப்பதற்கு இப்படியா அர்த்தம் தோன்றுகிறது ஜீவி ஸார்?

      நீக்கு
  13. சோன்பப்டி..... பகுதி நன்று. ஸ்வீட்டில் எது பிடிக்காது? இதுக்கு அனேகமா இனிப்புப் பிரியர்கள் யாருக்குமே பதில் சொல்ல முடியாது. வெவ்வேறு இனிப்புகள் ஒரு டிரேயில் இருக்கும்போது நம் மனது எதை விரும்பும் என்பது சந்தர்ப்பத்தையும் அந்த இனிப்புகளின் செய்நேர்த்தி (அழகிய வடிவமைப்பு)யையும் பொறுத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  என் கை சட்டென மைசூர்பா பக்கம் போகக்கூடும்!

      எல்லோரும் ஒரேயடியாக காஜூ வாங்கி கொடுத்து அதையே தள்ளி வைக்க வைத்தார்கள் சமீபத்தில்!

      நீக்கு
  14. அனைவருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  15. சோன்பஃடி மிகவும் பிடித்தது..

    சிவ மங்கல உணவு/ இனிப்புகளில் பிடிக்காதது என்று எதுவும் இல்லை,..

    ஆனால் சில வருடங்களாக அனைத்தில் இருந்தும் விலகி விட்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் ஒரு உயர்ந்த நிலைதான். மனம் துணிய வேண்டும்.

      நீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. இனிப்புகள் பற்றி, அதன் சுவை, நினைவலைகள் , உங்களின் எண்ணங்கள் பற்றி எழுதி அசத்தியிருக்கிறீர்கள் ஸ்ரீராம்! சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகரன் எழுதியது போல அல்வாக்கள், வெல்ல இனிப்புகள் இன்னும் மற்ற இனிப்புகளை விட்டு விட்டீர்கள்!
    //பாஸந்தி அல்லது ரசமலாய். இந்த இரண்டுக்குமே என்ன பெரிய வித்தியாசம் என்று எனக்குத் தெரியாது.//
    பாஸந்தி பாலைக் குறுக்கி அதன் ஏடுகளை சேகரித்துக்கொண்டே வந்து பால் கெட்டியானதும் அந்த ஏடுகள் சேர்த்து சீனி ஏலம் சேர்த்து கெட்டியாக வருவது பாஸந்தி. பாலைத்திரித்து மைதா கலந்து செய்வது ரசகுல்லா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கெட்டியாக வருவது பாஸந்தி. பாலைத்திரித்து மைதா கலந்து செய்வது ரசகுல்லா. //

      நான் வித்தியாசம் தெரியாது என்று சொன்னது பாஸந்தி Vs ரஸமலாய்.  

      வாங்க மனோ அக்கா.  இன்னும் கூட கலகலா, சூர்யகலா, சந்திரகலா, பதர்ப்பேணி எல்லாமும் உண்டு! 

      ஆனால் முக்கியமாக பிடிக்காத ஸ்வீட்ட்டைப் பற்றித்தான் நான் சொல்ல வந்தேன் என்பதால் அவற்றை சுருக்கி விட்டேன்!  மறந்து, மறைத்து விட்டேன்!

      நீக்கு
    2. //சூர்யகலா, சந்திரகலா,../ சமீபத்தில் ஒரு ஹோட்டலில் சூ.க.,ச.க. இரண்டையும் அருகருகே வைத்த்ருந்தார்கள், இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டதற்கு, "ஸூர்யகலா சூர்யகலா போல இருக்கும், சந்திரகலா சந்திரகலா சந்திரகலா போல இருக்கும்" என்றார் :))) எப்பூடி?

      நீக்கு
    3. மிகத் தெளிவான பதில். உண்மையான பதில்!!

      நீக்கு
    4. சூர்யகலா சூரியனைப் போல் முழுமை பெற்று ஓரங்களில் சூரியக் கதிர் போலச் சுருட்டி இருப்பாங்க. உள்ளேயும் மாவாவுடன் சேர்க்கும் பொருட்கள் வேறுபடும். சந்திரகலா அரை வட்டம். கிராம்பால் மூடுவார்கள். இதிலும் மாவாவுடன் தேங்காய் சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன். சாப்பிட்டு ரொம்ப வருஷங்கள் ஆகி விட்டன. இங்கே விற்பதெல்லாம் சும்மா கலாதான். :(

      நீக்கு
    5. ரசமலாய்க்கு மாவாவுடன் கொஞ்சமே அளவாக மைதா சேர்த்து நன்கு பிசைந்து உருட்டிக் கொண்டு ஜீரா கொதிக்கையில் அதிரசம் போல் தட்டிப் போடுவாங்க. இன்னொரு பக்கம் நல்லா பாலை நன்றாகக் குறுக்கிக் கொண்டு சர்க்கரை அளவாகச் சேர்த்துத் தேவையான வாசனைகளும் சேர்க்கணும். அநேகமாக மஞ்சள் கலரில் பாதாம் அரைச்சுத் தான் சேர்த்திருப்பாங்க ரசமலாய் நன்கு வெந்து ஜீரா குறுகியதையும் இந்தப் பாலைச் சேர்த்துக் கொதிக்க விட்டு (அதிகம் கொதிக்கக் கூடாது. ரசமலாய் பிரிந்து விடும்.}ப் பின் சூடாகவோ குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.

      நீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. அம்மாவின் கைப்பக்குவம் 25 வயது வரை தான்! ஆனால் மனைவியின் கைப்பக்குவம் தொடர்வது இறுதி வரையில்! ஆனால் சிறு வயது நினைவுகளில் அதன் இனிமையில் பழகிப்போன மனது அம்மாவின் கைப்பக்குவத்தை நினைத்துக்கொண்டே தானிருக்கும். அது மனித இயல்பு. இளம் வயதில் அம்மாவின் கைப்பக்குவத்தின் ருசியையும் அன்பையும் உணரும் மனது ஆளுமை வந்த பிறகு மனைவியும் அதே அன்புடன் அதே ருசியுடன் சமைத்தாலும் ஏதாவது குறையை சொல்லத்தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மைதான். நாவுணர்ந்த முதல் ருசி முத்திரை ருசியாய் சுவை நரம்புகளில் பதிந்து விடுகிறது.  அப்புறம் அந்தப் பதிவு அப்படியே இருந்தாலும், மனைவியின் சுவை நாவில் ஒரு தனி இடத்தைப் பிடித்து, வெளியில் சாப்பிடச் சென்றால் ஒப்பிடவும் வைக்கிறது!

      நீக்கு
  20. சோன்பப்டி - தாத்தா தலைமுடி மாதிரி - உங்க கற்பனைதான் சூப்பர் கற்பனை - இப்ப ப்ளாக்ல கீழ வர உதிர்ந்து இனிப்புதான் போங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா... ஹா...  

      //இப்ப ப்ளாக்ல கீழ வர உதிர்ந்து இனிப்புதான் போங்க!//

      ஆமாம்..  என்ன சொல்ல வர்றீங்க கீதா?!!

      நீக்கு
  21. எனக்கு ரொம்பப் பிடிச்ச ஸ்வீட். இதோடு தின்னவேலி அல்வா ரொம்பப் பிடிக்கும். குலாப்ஜாமூன், ரஸகுல்லா கூட ரொம்பப் பிடிக்கும். எல்லா ஸ்வீட்டுமே பிடிக்கும் ஆனா அளவா ருசித்த காலம் போய் இப்ப தள்ளி நிக்க வேண்டியதாகிடுச்சு! கண்ணால பாத்து சந்தோஷப்பட்டுக்கறேன்.

    முதல் பகுதி சூப்பர். உங்க நினைவுகள் கற்பனை எல்லாமே சூப்பர் போங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. அல்வாக்கள் ஏனோ எப்போதாவதுதான் மனதுக்கு / நாவுக்கு பிடிக்கிறது! ரசகுல்லா பற்றிய என் ஏமாற்றத்தை பதிவிலேயே சொல்லி இருக்கிறேன்!

      நீக்கு
    2. கொல்கொத்தா K C Das ரசகுல்லா தான் பேமஸ். அவர் தான் முதல் முதலில் ரசகுல்லாவை கண்டுபிடித்தவர் என்று பெருமை உண்டு.
      https://kcdasonline.com/

      நீக்கு
    3. பார்த்தேன். படத்தில் சட்டென பார்க்க ஒரு படம் நுங்கு போல இருக்கிறது! ஏனோ கவரவில்லை!

      நீக்கு
    4. @கீதா ரங்கன்: இன்று ஸ்ரீராமின் நகைச்சுவையுணர்வு அதிகமாகத்தான் இருக்கிறது.

      நீக்கு
  22. எனக்கு சிறுஅகவை முதலே... இனிப்பு நாட்டமில்லை.

    பால்கோவா சாப்பிடுவேன்.
    பக்கோடா விரும்பி சாப்பிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சுவைத்திருக்கிறீர்களா ஜி?

      நீக்கு
  23. பதில்கள்
    1. ஆ..  கீதா அக்கா..  வாங்க...   ஆனாலும் பப்டி பிடிக்காது!

      நீக்கு
    2. ஒரு சோன்பப்டி சாப்பிடறதுக்காக ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் வண்டி கட்டிட்டு கிளம்ப முடியுமா கீசா மேடம்?

      நீக்கு
    3. வரவழைச்சு சாப்பிடுங்கன்னு சொல்றாங்க!

      நீக்கு
    4. இப்போல்லாம் தமிழ்நாட்டிலேயே முக்கியமாய்த் திருச்சி ரிலையன்ஸில் கிடைக்குது. மாமா எப்போ ரிலையன்ஸ் போனாலும் இரண்டும் வாங்கி வந்துடுவார். :))))) அதைக் கட்டியாகப் பெயர்த்து எடுப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். எடுத்துக் கொடுப்பேன்.

      நீக்கு
  24. எனக்கு ருசியில் - அம்மாவின் ருசி, பாட்டியின் ருசி, மாமியாரின் ருசி என்று ஏகப்பட்ட ருசிகள் மனதில். தனிப்பட்டு அம்மாவின் என்று ஏனோ இல்லை. ஒரு வேளை பாட்டிகளின் கீழ் வளர்ந்ததாலோ என்னவோ ஆனால் என் அம்மா நன்றாகச் செய்வார். இப்பவும் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  இப்படி வேறு இருக்கா?  நான் என்னைப்பற்றியே சிந்தித்து விட்டேன்!

      நீக்கு
  25. அவரை குஷிப்படுத்த உடனே அதைத் திறந்து ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அவருக்கும் நீட்டினேன். //

    ஹாஹாஹா அப்படி மட்டும் செஞ்சுடவே கூடாது அவங்க வரப்ப எல்லாம் அதேதான் நமக்குப் பிடிக்கும்னு வாங்கி வந்துட்டே இருப்பாங்க!!!!! ஆஆஆஆஆஆஆஅ

    எனக்கும் அப்படி நிகழ்ந்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. ராஜஸ்தான் குஜராத் சோன்பப்டி செமையா இருக்கும் ஸ்ரீராம், ஸ்வீட்டும் அளவா இருக்கும்.

    ஆனாலும் நீங்க சொன்னாப்ல சின்ன வயசுல வாசல்ல பாட்டில்ல போட்டு வைத்திருக்கும் சோன்பப்டி செமையா இருக்கும். பேப்பர்ல சுத்தி தருவாங்க.

    இங்க பங்களூர்ல இப்பவும் விக்கறாங்க வீட்டு பக்கத்துல

    முன்ன எல்லாம் பங்களூர்ல வீட்டு வாசல்ல சோன்பப்டி செய்யும் மெஷினோடு வந்திருவாங்க நாம சர்க்கரையும் மைதாவும் கொடுத்துட்டா நம்ம கண்ணு முன்னாலேயே செஞ்சு கொடுப்பாங்க, அப்படி ஒரே ஒரு முறை சாப்பிட்டிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே கீதா அக்காவும் ராஜஸ்தான் சோன்பப்டி பற்றி சொல்லி இருக்காங்க...  ஆ..  மைதாவா?  சாப்பிடக்கூடாதாமே...  செல்வாண்ணா சொல்லி இருக்கார்...

      நீக்கு
  27. முதல் பகுதி இனிப்பு - சாப்பாடு - என்பதால் செய்திகளிலும் சாப்பாட்டு நியூஸ்!!!

    சாக்லேட்டில் பல்செட் ஓ மை!!! என்னப்பா நடக்குது!

    வெளியில் சாப்பிடவே பயமாகீது!

    பொள்ளாச்சி உடுமலை ஹோட்டல் - நுகர்வோர் தீர்ப்பு சரியானதே.

    ஊறுகாய் வைக்கலைன்னு கூட வழக்கு பதிஞ்சு ரூபாயா?

    குதித்து இறந்த பையனை நினைத்தால் அவன் பெற்றோர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. Parenting என்பது மிக மிக முக்கியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  சாப்பாட்டு விஷயம் செய்திகளிலும் இடம்பெற்றது  யதேச்சையானது!

      நீக்கு
  28. அந்த சீ எனும் சின்ன பெட்டி விஷயத்தில் அவள் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் ஓகே அப்ப எல்லோரும் இருக்கும் அறை? யில் அந்தப் பையன் ஆடையில்லாமல் எப்படி? மத்தவங்களுக்கு கண் தெரியுமே! தனியாக இருப்பவன் என்றால் கூட ஓகே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரிச்சுட்டு வுட்டுடணும்..  ரொம்ப ஆராயக்கூடாது... ஓகே?!!

      நீக்கு
  29. நிழல் வைத்து மர்மக்கதைகள் இருக்கு! இந்தக் கோயிலே நிழல் மர்மமா இருக்கே!!! ஆச்சரியமாக இருக்கு நேரில் பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  30. ஆஹா மழை இனிமை...உங்கள் கவிதை இனிமை சுகம்...

    இதோ இங்க நேத்து அடிச்சது பாருங்க...ரசித்தேன். ஓடி ஆடி நனனைந்த அனுபவம் உண்டே ஸ்ரீராம். ரொம்பப் பிடிக்கும்.

    ஆனா பாருங்க இப்பல்லாம் ரோட்ல நின்னு நனையவா முடியுது? ஓடும் தண்ணீர் என்ன தண்ணீர்ன்னு நினைக்குமே!

    நகர்புறம்லருந்து தள்ளி இயற்கையான சூழலில் நனையணும்!

    இப்ப நனைய ஆசைதான் முதல்ல என் ஹியரிங்க் எய்ட் அது பத்திரமா வைச்சாதான் நனைஞ்சு சுகிக்க முடியும்! பிரபஞ்சமே அமைதியா இருக்கும் ஆனா மழையின் ரிதத்தை அனுபவிக்க முடியாது! ஆனாலும் நனைஞ்சு ரசிக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒரு இயற்கையான சூழல் போல படத்தில் இருக்கும் இடம் இருப்பதால்தான் இந்தக் கற்பனை!

      நீக்கு
  31. மணல் மேட்டின் மேல பைரவர் ஃபோட்டோக்கு போஸ்!!! உங்க வீட்டுப் பக்கம் போலத் தெரியுது! உங்க வரி பார்த்து சிரித்துவிட்டேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. ஜெயகாந்தன் அவர்களின் பேட்டி யோசிக்க வைக்கிறது. இது அவருடைய மன நிலை, கருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அப்போதைய கருத்து.  அது கூட பின்னர் மாறி இருக்கும்!

      நீக்கு
  33. அடப்பாவிங்களா தண்ணீர் வீட்டுக்குள்ள வந்த போதும் இப்படி டிவி வேலை செய்யுதா? ஆச்சரியமா இருக்கே. அது இருக்கட்டும் தண்ணீர் கூடினா கூட யாருக்கும் தெரியாது போல!!!!!! ஒரு வேளை இன்னும் மழை வருமா தண்ணீர் கூடுமோன்னு டிவில பார்த்து தெரியறதுக்குள்ள இங்க தண்ணி நின்னுட்டா இருக்கும்!!!! அந்தக் கண்றாவி தண்ணில இப்படி!!!

    ஆஅங்கில வரிகள் ஓரளவு சரிதான்...ஆனா சென்னைல திடீர்னு தண்ணி கூடிச்சே வீடுகள்ல ஏரி அணை திறந்துவிட்டு! அதை நினைச்சா பயமாதான் இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'அந்நாளை நினைக்கையில் என் மனது ஆடுதடா' என்று பாடலாம்...  எனக்கு தண்ணீரைக் கண்டால் பயம் வநததே அதற்குப் பிறகுதான்.  இன்றுவரை தீரவில்லை.

      நீக்கு
  34. ஆச்சாரிய வினோபா பாவே அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த மாமனிதர். அவரைப் பற்றி கல்லூரியிலும் தெரிந்து கொண்டிருக்கிறேன்! எங்கள் பாடத்திலும் உண்டு. அவரது கருத்துகள் எல்லாம் மிக மிக அற்புதமான கருத்து.

    அவர் 8 மொழிகளைக் கற்றவர் கற்றுக் கொண்டு அந்தந்த ஊர்களில் அந்தந்த மொழியில் மக்களோடு உரையாடியவர். பூமி தான இயக்கத்துக்காக நாடு முழுவதும் பயணம் செய்தவர். விவசாயிகளுக்காகப் பேசியவர். சர்வோதயா இயக்கம் என்று...எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சார்ய வினோபா பாவே இன்றைய நிலையில் ஆச்சர்ய வினோபா பாவே.

      நீக்கு
    2. சின்ன வயசில் பள்ளி நாட்களில் (ஆரம்பப் பள்ளி) இவர் மதுரைக்கு பூமிதான இயக்கத்திற்காக வந்ததும் இவருக்குப் பெருமளவில் வரவேற்புக் கொடுத்ததும் மதுரை சந்தைத் திடலில் இவரின் சொற்பொழிவு நடந்ததும் இவரைப் பார்க்க அப்பா எங்களை அழைத்துச் சென்றதும் பசுமையான நினைவுகள். ஆனால் என் தாத்தாவிற்கு (அம்மாவின் அப்பா) இவரையும்/காந்தியையும் அறவே பிடிக்காது. உனக்கு இப்போப் புரியாதும்மா. போகப்போகப் புரிஞ்சுப்பே என்பார்.எனக்குப் புத்தகப்படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் இந்தத் தாத்தா தான். ஆனால் நாங்கல்லாம் "அப்பா" என்றே கூப்பிட்டிருக்கோம். பாட்டியைத் "தாத்தாம்மா"

      நீக்கு
  35. மன நிழல்! கதை சோகம் போல்தான் தெரிகிறது அந்த ஓவியமும் அதைச் சொல்வதாகத்தான் தெரிகிறது ஸ்ரீராம். ஓவியம் ரொம்ப நல்லா வரைஞ்சிருக்காங்க கார்த்திகா!ஆமாம் பெயர் புதுசா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  36. ஸ்வீட் என்று சொன்னாலே போதும். எனக்கு எல்லா ஸ்வீட்டும் ருசித்துச் சாப்பிடுவேன். உங்கள் அனுபவங்கள் ரசனைகள் கலந்து எழுதியிருக்கிறீர்கள். சோன்பப்டி பற்றிய உங்கள் கற்பனை இதுவரை இப்படி யாரேனும் யோசித்திருபார்களா என்று எண்ண வைத்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளஸிஜி.  இப்போதுதான்  எதை எடுத்தாலும் சாப்பிடும் முன் பயமுறுத்துகிறார்களே...

      நீக்கு
  37. நியூஸ் ரூம் செய்திகளில் ஊறுகாய் வைக்காததால் நுகர்வோர் கோர்ட் அபராதம் விதித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    சிறுவர்களைப் பாதிப்பது போதைப் பொருள் மற்றொன்று இப்படியான விளையாட்டுகளும் போதைதான்.

    எஞ்சின் கார்தான் எனக்கு ஓகே என்று தோன்றும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரைப் பற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை. செல்போன் போதை கஞ்சா போதைக்கு ஈடானது.

      நீக்கு
  38. ஹைதரபாத் கோயில் செய்தி மிகவும் வியப்பு கொள்ளச் செய்தது. இப்படி நிறைய அற்புதங்கள் நம் நாட்டில் பல கோயில்களிலும் இருக்கின்றதுதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  39. மழையைப் பற்றிய உங்கள் கவிதை அருமை.

    நான் பல வருடங்களாக பாலக்காட்டிலிருந்து எங்கள் ஊருக்கு பைக்கில் சென்று வந்ததால் எதிர்பாராமல் வந்த மழையில் நனைந்த அனுபவங்கள் நிறைய உண்டு. என்னதான் ரெயின் கோட் போட்டு பைக் ஓட்டினாலும். மழைக்காலங்களிலும் அப்படிப் பயணித்ததுண்டு. ஒரு சில சமயங்களில் மட்டுமே பேருந்தில் சென்று வந்ததுண்டு.

    சிறிய மழை தூரல் என்பது ரசனையானது. மழை வரவில்லை என்றாலும் கஷ்டம். அதிகமாகப் பெய்து உயிரிழப்புகள் நேரும் போதும் ரசிக்க முடியாமல் ஆகிறது. வயநாடு மலைச்சரிவினால் எங்கள் ஊர் நதியில் பல உடல்கள் மிதந்தன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளஸிஜி.  பைக்கில் நனைந்து கொண்டே செல்வது நல்ல அனுபவம்தான் - பின்னர் ஜலதோஷம் பிடிக்காமல் இருந்தால்...  அப்போது பாட்டு ஏதாவது மனதில் ஓடுமா?

      நீக்கு
  40. கார்ட்டூனை ரசித்தேன் குறிப்பாக பானைக்குள் யானை!

    அது போல அந்த ஒரு ரூபாய் ஜோக். இரன்டும் பார்த்து சிரிப்பு வந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நாளைய ஜோக்குகள் தனிதான். மனதிற்கு இதமாகவும், அதற்கான கார்ட்டூன்களும் நன்றாகவும் இருக்கும்.

      துளசிதரன்

      நீக்கு
    2. எல்லாமே நல்லா இருக்கும்னு சொல்ல முடியாது.  இப்போது பார்க்கையில் நிறைய சவசவன்னு இருக்கும்!

      நீக்கு
  41. ' கோவை-உடுமலை இடையேயுள்ள உணவகத்தில் நடந்த பிரச்சினையையும் அதற்கான நுகர்வோர் தீர்ப்பையும் படித்தேன்.
    இங்கே பெரும்பாலான உணவகங்களில் பார்சலுக்கான கட்டணம் கட்டாயம் இருக்கும். எங்கள் உணவகம் உள்பட! மெனு கார்டில் அதற்கான அறிவிப்புமிருக்கும். பாக்கேஜ் பொருள்கள் அநியாய விலை விற்கின்றது. நிறைய பேர் மெஸ் சாப்பாடு வாங்குகிறார்கள்.
    தினமும் மதிய சாப்பாடே 200 பேருக்கு இருக்கும். அவற்றை பாக்கேஜ் பண்ணுவது, VANல் ஏற்றுவது, அதற்கு இரண்டு ஓட்டுனர்கள், அவர்களுக்கு சம்பளம், சரியான நேரத்தில் கஸ்டமர்களிடம் ஒப்படைப்பது என்று நிறைய வேலைகள் இருக்கின்றன. உணவகம் நடத்துவது அத்தனை சிரமம்!! அதில் நல்ல பேரை வாங்குவது அதையும் விட சிரமம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே சேவையில் குறைபாடு இருந்தாலோ, தரத்தில் குறைபாடு இருந்தாலோ தண்டனைக்குரிய குற்றம்.  இங்கே அப்படியா?  முதல்வரே சோதிக்கிறேன் என்கிற பெயரில் சாதத்தை ருசி பார்த்துவிட்டு நாக்கிலிருந்து எச்சில் சாதத்தை வழித்து எடுத்து அதே பாத்திரத்தில் உதறும் நாடு!

      நீக்கு
    2. அரசு கொடுக்கும் உணவின் தரம் பற்றி அதை உண்ணும் குழந்தைகளே சிறப்பாகச்சொல்லுவதில்லை எனக் கேள்வி. மேலும் நீர் சுத்தமாக இல்லை என்பதால் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கும் வருவதாய்ச் சொல்கின்றனர்.

      நீக்கு
  42. ' மன நிழல் ' ஓவியம் மிகவும் அருமை! ஒரு சில கோடுகளில் அந்த முதியவரின் தனிமையையும் மனக்கவலைகளையும் அழகாகக் காண்பித்திருக்கிறார் ஓவியர்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களே ஒரு திறமையான ஓவியர்.  உங்களுக்கு அதன் அருமை கட்டாயம் புரியும்.

      நீக்கு
  43. மழை கவிதைக்கு தூண்டிய புகைப்படமே கவிதை!
    குருட்டுப் பெண் இனிப்பு கொடுத்தாள்.. துணுக்கில் நோ லாஜிக். அம்மணமான ஆணைப் பார்த்தால் அலறியிருக்க மாட்டாளா? என்று தோன்றியது. இல்லாவிட்டால்,"எனக்கே இப்போத்தான் பார்வை கிடைச்சிருக்கு,அதையும் பறிக்கப் பார்க்கறாயே பாவி! " என்று வடிவேலு பாணியில் திட்டி இருப்பாள் என்றும் தோன்றியது. அப்புறம் ஜோக் சொன்னால் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது" என்று விட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மழை கவிதைக்கு தூண்டிய புகைப்படமே கவிதை! //

      ஆஹா..  அதேதான்...  அந்தப் படம் என்னை பாக்கும்போதெல்லாம் படுத்திக் கொண்டிருந்தது, படுத்திக் கொண்டிருக்கிறது.  இந்த இடத்துக்கு எப்போது போவோம் என்று நினைக்க வைக்கும் படம்.

      ஹிஹிஹி  ஆராயாமல் அப்படியே விட்டதற்கு தேங்க்ஸ்.  ஜோக் என்னுடையதல்ல.  பழைய எஸ் எம் எஸ் காலத்து ஜோக்.

      நீக்கு
  44. உமாபதியின் கார்ட்டூனில் எழுத்துகள் தெளிவாக இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினியில் என்னால் படிக்க முடிகிறது.  எனினும் புத்தகம் 1960 களின் காகிதம் என்பதால் அப்படி இருக்கலாம்.

      நீக்கு
  45. son papdi is made from Besan also. different taste. Besan= kadalai mavu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல வித விதமா சோன்பப்டி உண்டு. எனக்கு அவை ரொம்பப் பிடிக்கும். என்ன ஒண்ணு, அவங்க ஏகப்பட்ட சொத்து சேர்ப்பதற்காக, இனிப்புகளின் விலையைக் கன்னா பின்னாவென்று அதிகரித்துவிட்டார்கள்.

      எனக்கு புசுபுசுவென்று இருக்கும் சோன்பப்டிகள் பிடிப்பதில்லை. கேக் போல ஓரளவு கெட்டியாக இருப்பவைதான் பிடிக்கும். அதனால் பிராண்டட் சோன் பப்டி பக்கமே போகமாட்டேன். அவைகள் பாமாயில் கலந்து தயாரிக்கறாங்க.

      கீசா மேடம் ரொம்பப் படிச்சவங்க. இனிமேல் இங்கிலீஷ்லதான் எழுதணும் என்று நினைச்சிருக்காங்க போலிருக்கு.

      நீக்கு
    2. மன்னிக்கவும்... எனக்குப் பிடிக்காத ஸ்வீட்! ஸோ, நோ கமெண்ட்ஸ்....!

      நீக்கு
    3. -ஹல்திராமில் கூட விதம் விதமான வாசனைகள், ஷேப்புகளில் சோன்பப்டி கிடைக்கும். எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைத்தது இப்போதெல்லாம் அண்ணாச்சி கடைகளிலும் கிடைக்கிறது. ஆனால் நான் சொல்வது மைதாவில் பண்ணியது இல்லை. கேக் மாதிரிக் கடலைமாவில் பண்ணின சோன்பப்டி. குஜராத்தில் மைதாவில் பண்ணினதும் கிடைக்கும். கொஞ்சம் பொரபொரவென இருக்கும். கடலைமாவில் பண்ணுவது ராஜஸ்தான் சிறப்போனு நினைச்சுப்பேன். ருசியே தனி. முன்னெல்லாம் மாமா பிகானேர் டூர் போனால் கட்டாயம் இதுவும் ரபடியும் வாங்கி வருவார். இங்கே எல்லாம் வந்ததும் வடமாநில இனிப்புக்களுக்கு ஏங்கி இருக்கோம். இதில் ஜிலேபி மட்டும் தி.நகரில் பஸ் நிலையம்/ போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே இருக்கும் உ.பி.காரர் கடையில் கிடைக்கும். சமோசாவும் அங்கே சிறப்பாக இருக்கும். இப்போல்லாம் கடையே இருக்கோ என்னமோ தெரியாது.

      நீக்கு
    4. //கீசா மேடம் ரொம்பப் படிச்சவங்க. இனிமேல் இங்கிலீஷ்லதான் எழுதணும் என்று நினைச்சிருக்காங்க போலிருக்கு.// haahaahaa yesso yessu

      நீக்கு
  46. ஊர் சுற்றும் சோன்பப்டி...ஹா..ஹா..

    மழைக் கவிதை பிடித்தது. மழையில் நனையவும் பிடிக்கும்.

    நியூஸ்ரைம் பல செய்திகளுடன் அருமை.

    மழை நீருக்குள் இருந்து ரிவி பார்ப்பது கரண்ட் சாட் இருந்தால் ஆபத்தில் முடியுமே

    துணுக்கு சுமார்.மனநிலை ஓவியம் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  47. உமாபதி என்றதும் எனக்கு இவர் நினைவு தான் வந்தது.

    பத்திரிகை ஆசிரியர் ஜி. உமாபதி பற்றி யாருக்கானும் தெரியுமோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிஞ்ச மாதிரியும் இருக்கு, தெரியாத மாதிரியும் இருக்கு!

      நீக்கு
    2. உமா என்ற பத்திரிகையின் ஆசிரியர்.
      ஆனந்த் தியேட்டரின் உரிமையாளர்
      அரு.ராமநாதன் எழுதி
      டி.கே.எஸ்.சகோதரர்கள் பட்டி தொட்டியெங்கும் நாடகமாய் போட்ட 'ராஜராஜ சோழன்' கதையை பிர்மாண்ட திரைப்படம் ஆக்கியவர்.
      ம.பொ.சி. அவர்களின் தமிழரசு கட்சித் தொண்டர்.
      இப்படி இவர் பற்றிச் சொல்ல இன்னும் நிறைய இருக்கு....

      நீக்கு
    3. நினைவுக்கு வந்து விட்டது.  அது மட்டுமல்ல, அவர் அக்னி நட்சத்திரம் படத்தில் வில்லனாகவும் நடித்திருப்பார்.

      நீக்கு
  48. //ஏன், அந்த மனைவியே கூட தன் அம்மாவின் சமையலை தான் முதலில் சிலாகிப்பார். என்ன சொல்கிறீர்கள்? //

    ஆமாம், உண்மைதான்.

    //ஒரு வீட்டுக்குச் செல்லும்போது எதையாவது வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டுமா என்றால், ஆம், எங்களுக்கு அந்தப் பழக்கம் உண்டு. //
    எல்லோர் வீட்டுக்கும் நாங்களும் வாங்கி போவோம்.என் அம்மா சொல்வார்கள் பெரியவர்கள், குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கு கண்டிப்பாய் ஒன்று வாங்கமல் போக கூடாது என்று.

    நம் ஊரில் எது சிறப்போ அதை அவர்கள் ஊருக்கு போகும் போது வாங்கி போகலாம். அவருக்கு அது பிடிக்கவில்லை என்றால் அடுத்த முறை வேறு அவருக்கு பிடித்த இனிப்பை வாங்கி போகலாம்.



    அந்தப் பழக்கம் இல்லாத வெகு சிலர் இருக்கிறார்கள். நிம்மதியான மக்கள். நமக்கும் தொல்லை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கோமதி அக்கா. என் அம்மாவும் சொல்வார். என் பாஸும் வெறும் கையுடன் ஒரு வீட்டுக்குச் செல்ல சம்மதிக்கவே மாட்டார்.

      நீக்கு
  49. முன்பு சோன்பப்டி கண்ணாடி ஜாடியில் விற்கும் சோன்பப்டி பிடிக்கும் மணி அடித்து கொண்டு விற்பவர் வருவார் அப்போது எல்லா குழந்தைகளும் அவரை சூழ்ந்து கொள்ளும். குழந்தைகள் கையில் இருக்கும் காசுக்கு ஏற்ப அவர் பொட்டலங்களை தருவார்.

    பெரிய பொட்டலம் வைத்து இருக்கும் பிள்ளைகளை பார்த்து சிறிய பொட்டலம் வைத்து இருக்கும் குழந்தைகள் ஏக்கமாக பார்ப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். பார்த்திருக்கிறேன். எப்போதாவது நானும் வாங்கி இருக்கிறேன். அப்பா காசு கொடுக்க மாட்டார்!

      நீக்கு
  50. //விளையாட்டில் கொடுக்கப்பட்டிருந்த ஆணை ‘குதி’(jump) என்பதாகும். அதற்கு கட்டுப்பட்ட அவன் யோசிக்காமல் செயல் படுத்தி விட்டான்.- கடவுளே! எங்கு சென்று கொண்டிருக்கிறது நம் இளைய சமுதாயம்...//

    நியூஸ் மனதை வருந்த செய்கிறது .
    மழை கவிதை அருமை, எனக்கும் எப்போதும் மழையில் நனைவது பிடிக்கும். சிறு வயதில் அம்மாவிடம் நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன். இப்போது மழை பெய்தால் அதை காணொளி எடுத்து மகிழ்கிறேன்.

    பொக்கிஷ பகிர்வு கள் எல்லாம் அருமை.
    மன நிழல் ஓவியம் அருமை பெரியவர் தன் பழைய காலங்களையும் இப்போது தன் தனிமை சோகத்தையும் நினைத்து பார்ப்பது போல இருக்கிறது. அவருக்கு பின்னால், கவலை இல்லா பிள்ளை பருவம்(சிறுவன், சிறுமி விளையாட்டு), வாலிப வயது, கணவன், மனைவி, என்று காட்டுகிறார் ஓவியர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதை கனக்கச் செய்யும் செய்திதான் அது. என்ன பாவம் செய்தார்களோ அவன் பெற்றோர்?

      கவிதை, பொக்கிஷப் பகிர்வுகள் பாராட்டுகளுக்கு நன்றி கோமதி அக்கா,

      நீக்கு
  51. இனிப்பு - எல்லாமே பிடிக்கும். பிடிக்காது என்று இனிப்பு ஒன்றும் இல்லை. :)

    ஹால்டிராம் - ஹல்திராம்...

    மற்ற தகவல்களும் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!