வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

உள்ளங்காலும் உள்ளங்கையும் சில்லென்றாகும் வண்ணம்..

இளமுருகு எழுதிய பாடல்.  சூலமங்கலம் சகோதரிகள் இசையமைத்து பாடி இருக்கிறார்கள்.

சுட்ட திருநீறெடுத்துத் தொட்ட கையில் வேலெடுத்துத் 
தோகை மயில் மீதமர்ந்த சுந்தரம் ... அந்தக் 
கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனை  
காட்டுவது ஆறெழுத்து மந்திரம்.  - சுட்ட திரு 

ஆறெழுத்து மந்திரத்துள் ஆடும் ஒரு  சுந்தரத்தை 
அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே . அந்திபகல் 
சிந்தனைசெய் நெஞ்சமே ... .  
ஆறெழுத்து மந்திரத்துள் ஆடும் ஒரு  சுந்தரத்தை 
அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே . அந்திபகல் 
சிந்தனைசெய் நெஞ்சமே ... .
அந்த ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதிடினும் 
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே.   
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே.     
அந்த ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதிடினும் 
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே.
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே.      -சுட்ட திருநீறெடுத்து

கந்தனடியை நினைந்து சங்கத்தமிழ் மாலை கொண்டு  
வந்தனை செய்வோர்கள்  மனம்  ஆறுமே 
 வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே 
கந்தனடியை நினைந்து சங்கத்தமிழ் மாலை கொண்டு  
வந்தனை செய்வோர்கள்  மனம்  ஆறுமே 
 வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே பரம் குன்றுவளர் கின்றதொரு தந்துவ ரும் நமக்கு 
நின்று வளம் செல்வம் பதினாறுமே    
பரம் குன்றுவளர் கின்றதொரு தந்துவ ரும் நமக்கு 
நின்று வளம் செல்வம் பதினாறுமே - சுட்ட திருநீறெடுத்து



&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

'பார்வதி என்னை பாரடி' 1993 ல் வெளிவந்த படம்.  V. சேகர் இயக்கத்தில் சரவணன்-  ஸ்ரீ பார்வதி நடித்தது.  ஹீரோயின் கன்னட இறக்குமதி.

கங்கை அமரன் எழுதி இருக்கும்  இந்தப் பாடல் இளையராஜா இசையில் பஹாடி ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.  SPB - சித்ரா பாடி இருக்கிறார்கள்.  SPB குரல் குழைவை ன்றெல்லாம் கேட்டு ரசிக்க வேண்டும்.  

குறிப்பு : காட்சி இங்கு வெளியிட்டால் நிறைய பேர் திட்டுவார்கள் என்பதால் காட்சி இல்லாமல் கானம்.  இளமை பொங்கும் பாடல்.  இளையராஜா இன்டர்லூட் தனி சுகம்.

அந்த ஆரம்ப புல்லாங்குழல்...  நெப்போலியனின் கைவண்ணமாய் இருக்கும்.

முடிவில் பல்லவியை மாற்றி மாற்றி வரிகளை பாடும் அழகு...


முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே
பொங்கும் ஆறே ஆறே இங்கே வேறே யாரே

ஆரோ ஆரிரோ எங்கோ ராகம் கேட்குது
கேட்கும் ராகத்தில் இந்த ஊரே தூங்குது…

முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே
பொங்கும் ஆறே ஆறே

உள்ளங்காலும் உள்ளங்கையும் சில்லென்றாகும் வண்ணம்
உன்னைப் பாதி என்னைப் பாதி ஊதக் காற்று தின்னும்

வெப்பம் ஏற வேண்டும் தேகம் தெப்பம் போல ஆட
வெட்கம் வந்து மேலும் கீழும் வெள்ளம் போல ஓட

அம்மாடி நாணமோ எப்போது நீங்குமோ
அம்மாடி நாணமோ எப்போது நீங்குமோ
மாலையும் மேளமும் கூடினால் நீங்கலாம்

முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே
பொங்கும் ஆறே ஆறே

எட்டிப் பார்க்க யாரும் இல்லை கட்டிப் பார்க்க வேண்டும்
ம்… கட்டிப் பார்த்தால் தப்புச் செய்ய கையும் காலும் தூண்டும்

அங்கம் யாவும் மின்னுதம்மா தங்கப் பாளம் போலே
அந்தம் ஆதி அளப்பதென்ன உந்தன் பார்வையாலே

ஹ எல்லாம் உன் ஏக்கமே இங்கேது தூக்கமே
தன்னானா னான்னனா  இங்கேது தூக்கமே 
ஏக்கமே தீர்க்கவே நாளை நான் பார்க்கிறேன்

முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே
பொங்கும் ஆறே ஆறே

34 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அற்ம் பிற செய்யாமை செய்யாமை நன்று..

    பதிலளிநீக்கு
  2. சுட்ட திருநீ​றெ டுத்துத் தொட்ட கையில்...

    அற்புதமன பாடல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  மாற்றவேண்டும்.  இரண்டு நாளாய் வெளிவேலைகள்.

      நீக்கு
  3. சுட்ட திருநீ​ரெடுத்துத் தொட்ட கையில்...××

    சுட்ட திருநீ​றெ டுத்துத் தொட்ட கையில்... √√√

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  மாற்றவேண்டும்.  இரண்டு நாளாய் வெளிவேலைகள்.

      நீக்கு
  4. பாடலில் சந்தக் கட்டு அற்புதமாக இருக்கும்..

    இப்பாடலை இயற்றியவர் யாரென்று தெரியுமா!..

    மதிப்புக்குரிய
    ஸ்ரீமதி சௌந்தரா கைலாசம் அம்மையார் அவர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி. பாடலின் சந்தக்கட்டு அற்புதம்.

      நீக்கு
  5. சுட்ட திருநீ​றெ டுத்துத் தொட்ட கையில்...

    தனித்துவமான பாடல்...

    தனியாகவே வெளியிட்டு இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
  6. இரண்டாம் பாடலின் வரிகளைப் படிக்க நேர்ந்ததற்கு மறுபடியும்
    சுட்ட திரு நீறெடுக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  7. சுட்ட திருநீ​றெடுத்துத் தொட்ட கையில் வேலெடுத்து...

    அப்போதே 1980 களில் இந்தப் பாடல் பலராலும் புகழப்பட்டதாகும்.. பாடல் வரிகளைக் கூட சில வார இதழ்கள் பிரசுரித்து மகிழ்ந்தன...

    அதன் வழியே தான் இப்பாடலை இயற்றியவர் திருமதி சௌந்தரா கைலாசம் என்பது நினைவில்...

    திருமதி சௌந்தரா கைலாசம் அவர்கள் மிகச் சிறந்த கவிதாயிணி..

    இவரது பதிகப் பாமாலை ஒன்று திருமயிலை ஸ்ரீ முண்டகக் கண்ணி அம்மன் கோயிலில் கல்வெட்டாக உள்ளது..

    பதிலளிநீக்கு
  8. முதல் பாடலின் வரிகளை எவ்வளவு அற்புதமாக செதுக்கி இருக்கிறார்கள்.

    இரண்டாவது பாடல் கேட்ட ஞாபகம் வரவில்லை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவாக பிரபலமில்லாத நடிகர்!  எனவே கேட்டிருக்க வாய்ப்பு குறைவு.  எனக்கு SPB!

      நீக்கு
  9. முதல் பாடல் பல்லாயிரம் முறைகள் ரசித்து கேட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. முதல் பாடல் கேட்ட நினைவும் இருக்கு கேட்காதது போலவும் இருக்கு ஸ்ரீராம்.

    மிக அருமையா இருக்கு முதல் பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இரண்டாவது பாடல் இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம்.

    படம் பெயரும் தெரியலை பாடலும் தெரியவில்லை. 92 என்று பார்த்ததுமே ஓ துளிக்கூட கேட்டிருக்க சான்ஸ் இல்லை என்று தெரிந்துவிட்டது.

    எஸ்பிபி புகுந்து விளையாடுகிறார்.

    அம்மாடியோ தொடக்கத்தில் அவர் கொடுக்கும் அந்த கிமிக்ஸ்!!!!!!

    அதன் பின்னும் கொடுக்கும் பல கிமிக்ஸ் சான்ஸே இல்ல.

    இசையும் அது போல இசைக்கருவிகளும் அதே போல ஆரம்பத்தில் இசை, அந்த புல்லாங்குழல் சூப்பர் ஸ்ரீராம். நீங்க சொல்லிருப்பது போல் இன்டெர்லூட் செம.

    ஒவ்வொரு இசைக்கருவிக்கும் notation எழுதி அமைப்பது என்பது அசாத்திய திறமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இரண்டாவது பாடல் கேட்ட நினைவில்லை.

    பதிலளிநீக்கு
  13. முதல் பாடல் அடிக்கடி கேட்டது, பிடித்த பாடல்.
    அடுத்த பாடல் எனக்கு வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது மாற்றப்பட்டபின் வந்திருக்க வேண்டுமே அக்கா.

      நீக்கு
  14. இரண்டு பாடல்களும் கேட்டதில்லை. பாடல் பகிர்வுக்கு நன்றி.

    கேட்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  15. முதல் பாடல் கேட்ட நினைவில்லை.

    இரண்டாவது பாடலும் கேட்ட நினைவில்லை.

    இரு பாடல்களுமே இப்போதுதான் கேட்டேன். 83-85 களுக்குப் பிறகான தமிழ் திரைப்படப்பாடல்கள் கேட்க வழியில்லாமல் போய்விட்டது. இலங்கை வானொலியும் அப்போது இல்லை. நானும் கேரளத்திற்குப் போய்விட்டதால்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!