திங்கள், 26 ஆகஸ்ட், 2024

"திங்க"க்கிழமை : ஓட்ஸ் இட்லி - மனோ சாமிநாதன் ரெஸிப்பி

 

சமீப காலமாக எங்கள் வீட்டில் மாவு இட்லி வேண்டாம் என்று என் மகன் சொல்லஆரோக்கியமான விதமாக இருக்க வேண்டுமென்று இந்த ஓட்ஸ் இட்லி செய்ய ஆரம்பித்து இப்போதெல்லாம் இரவு நேரங்களில் இது தொடர் கதையாகி விட்டது. 

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இந்த ஓட்ஸ் இட்லிகஞ்சிஆம்லட் என்று பல வடிவங்களில் எங்கள் இல்லத்தில் இடம் பெற்று வருகிறது. இப்போது ஓட்ஸ் இட்லிக்கு போகலாம்....

ஓட்ஸ் இட்லி


தேவை:

முக்கால் கப்- ஓட்ஸ்

முக்கால் கப்- ரவா

தயிர்- முக்கால் கப்

நெய்- 1 ஸ்பூன்

எண்னெய்-1 ஸ்பூன்

சீரகம்- 1 ஸ்பூன்

பெருங்காயப்பொடி-அரை ஸ்பூன்

பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-2

இஞ்சி துருவல்- 1 ஸ்பூன்

கடலைப்பருப்பு- 2 ஸ்பூன்

கறிவேப்பிலை- 1 கொத்து

தேவையான உப்பும் நீரும்

பேக்கிங் சோடா அல்லது ஈனோ சால்ட்- அரை ஸ்பூன்


செய்முறை:

வாணலியில் நெய்எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் சீரகம்கடலைப்பருப்பு  போட்டு தாளிக்கவும்.

அதிகம் சிவக்காமல் உடனேயே ப.மிளகாய்இஞ்சி பெருங்காயப்பொடிகறிவேப்பிலை சேர்த்து குறைந்த தீயில் கிளறவும்.

ரவாவை சேர்த்து கிளறவும். ஐந்து நிமிடம் கிளறினால் போதும். சிவக்க வேண்டியதில்லை.

ஓட்ஸை மிக்ஸியில் ஒரு முறை அடித்து கொரகொரப்பாக எடுத்து ரவாவில் சேர்த்து மேலும் ஒரு 2 நிமிடம் நன்கு கலந்து கிளறி எடுத்து ஆற வைக்கவும்.


ஆறிய ரவா
ஓட்ஸ் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஈனோ சால்ட் சேர்த்து கலக்கவும்.


பின் தயிர்
உப்புபோதுமான அளவு நீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து ஒரு அரை மணி நேரம் மூடி வைத்து ஊற விடவும்.

பிறகு திறந்து பார்க்கையில் சற்று கெட்டியாக மாவு இருந்தால் மேலும் சிறிது மோர் அல்லது நீர் சேர்த்து மறுபடியும் இட்லி மாவு பதத்துக்கு கலக்கவும்.



ஐந்து நிமிடம் கழித்து இட்லித்தட்டில் ஊற்றி 12 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

மிருதுவான ஓட்ஸ் இட்லி தயார்!!


குறிப்பு:

தாளிதத்துக்கு பின் துருவிய காரட்சோள முத்துக்கள்சிறிதளவில் வெங்காயம்தக்காளி என்று சேர்த்து வதக்கி எடுக்கலாம்.

எந்த சிவப்பு சட்னியும் இதற்கு நல்ல பக்கத்துணையாக இருக்கும்.


***************************************************************************************************************************************************

33 கருத்துகள்:

  1. ஓட்ஸ் இட்லி பார்க்க அழகாக இருக்கிறது. ஓட்ஸ் மனம் எனக்கு பிடிப்பதில்லை. ரவா ஒரு பங்கு சேர்ப்பதால் ஓட்ஸ் மனம் குறைந்து விடும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சோள முத்துக்கள் -- புதுமையான வர்த்தை அழகை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. ஓட்ஸ் இட்லி செய்முறையும் குறிப்பும், படங்களும் நன்றாக இருக்கிறது.
    மருமகளும் செய்வாள்.
    கடைசி படம் மீன் தட்டில் ஓட்ஸ் இட்லி பார்க்க நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. ஓட்ஸ்இட்லி செய்முறைக் குறிப்பு நன்று.

    பதிலளிநீக்கு
  6. ஓட்ஸ் ரெடிமேட் இட்லி மாவு தற்போது எல்லா சூப்பர் மார்க்கெட் லேயும் கிடைக்கிறது.
    அதை வாங்கி கொஞ்சம் தயிர்
    ஊற்றி அரைமணி நேரம்
    ஊறவைத்து இட்லி ஊற்றினால் நன்றாக இருக்கிறது

    கே. சக்ரபாணி
    சென்னை 28

    பதிலளிநீக்கு
  7. இன்றைக்கு எனது ஓட்ஸ் குறிப்பை வெளியிட்டுள்ளதற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!!

    பதிலளிநீக்கு
  8. மனோ அக்கா ஓட்ஸ் இட்லி சூப்பர்!!! நல்ல செய்முறைக் குறிப்பு.

    எங்கள் வீட்டிலும் ஓட்ஸ் இட்லி செய்வதுண்டு. சில வருடங்களாகவே.

    உங்கள் குறிப்புகளையும் பார்த்துக் கொண்டேன்.

    நான் ஈனோ/பேக்கிங்க் சால்ட் பயன்படுத்தாமல் நாம் எப்பவும் செய்யும் இட்லி மாவைப் புளிக்க வைப்பது போல் புளிக்க வைத்து விடுகிறேன். Probiotic நல்லது என்பதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகரன்!
    ஓட்ஸ் மணம் நீங்கள் சொல்வது போல சிலருக்கு பிடிக்காது தான்! அதோடு அதன் கொழகொழப்புத்தன்மையைக்குறைப்பதற்காகவும் ஓட்ஸோடு ரவா சேர்த்து அல்லது இட்லி ரவா அல்லது அவல் பொடி சேர்த்து தான் இந்த மாதிரி பதார்த்தங்கள் செய்வது! ஓட்ஸ் கஞ்சி செய்யும்போது கூட காய்கறிகள் சேர்த்து செய்யும்போது அதன் மணமும் குணமும் மாறுபடுகிறது!

    பதிலளிநீக்கு
  10. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!!

    பதிலளிநீக்கு
  11. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!!

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றி சகோதரர் சக்ரபாணி!!

    பதிலளிநீக்கு
  13. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கீதா!
    நீங்கள் சொல்வது போல ஈனோ சால்ட் சேர்க்காமல் புளிக்க வைத்து செய்து பார்க்கிறேன். இட்லி மாவைப்போல 8 மணி நேரம் புளிக்க வைத்து விடுவீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா அல்லது அதற்கு முன்பே கூட - ஊரின் வெப்பநிலையைப் பொருத்து - புளித்து நுரைத்து இருந்தால் செய்யலாம் அக்கா.

      கீதா

      நீக்கு
  14. மனோ அக்கா, எங்கள் வீட்டில் இனியவர்கள் என்பதால் அரிசி சேர்த்து செய்வது குறைவாகி பல வருடங்களாக ஆகிவிட்டது. கேழ்வரகு இட்லி, தோசை, கம்பு, சோளம் இட்லி, தோசை, மற்ற சிறு தானியங்களில் இட்லி தோசை, பொங்கல் என்று நாம் பொதுவாக அரிசி சேர்த்துச்செய்யும் உணவுகளை இப்படி.

    ரவா இட்லிக்குக் கூட நான் புளிக்க வைத்துச் செய்கிறேன் மனோ அக்கா. ஈனோ சேர்க்காமல். முதல் நாளே கலந்து வைத்துவிட்டு. அது போல குஜராத்தி டோக்ளாவும் உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா! இப்போதெல்லாம் எந்த வகை அரிசி என்றாலும் அதில் ருசி இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். முன்பெல்லாம் அரிசி சாதம் என்றால் அது பச்சரிசி சாதம் என்றாலும் சரி, புழுங்கலரிசி சாதம் என்றாலும் சரி, அதில் தனி ருசி தெரியும். இப்போது வரும் அரிசியில் சுவையோ ருசியோ இருப்பதில்லை. நாவில் ருசி தெரிவதில்லை. இங்கும் [ துபாயிலும் ] இந்தியாவிலிருந்து தான் இறக்குமதி செய்கிறார்கள். எல்லோருடைய கருத்தும் எப்படியென்று தெரியவில்லை. அதனாலேயே இட்லி, தோசையெல்லாம் எனக்கு பிடிப்பதில்லை அவ்வளவாக. அது போல சிறுதான்ய வகைகளும் வீட்டில் யாருக்கும் பிடிப்பதில்லை. கேழ்வரகும் ஓட்ஸும் தான்.
      முன்பெல்லாம் ஈனோ சால்ட் அல்லது பேக்கிங் சோடா சேர்த்து செய்ய யோசிப்பேன். அப்புறம் ஒரு சிறுநீரக மருத்துவர் பேக்கிங் சோடா வெறும் தண்ணீரில் கலந்து குடிப்பதிலேயே உடலுக்கு பெரும் நன்மை இருக்கிறது என்று தெரிவித்ததால் அதற்கப்புறம் எப்போதாவது ஈனோ சால்ட் அல்லது பேக்கிங் சோடா சேர்ப்பதில் விதிகளை தளர்த்தி விட்டேன்.
      சில சமயங்களில் மாவு அதிகம் புளித்து விட்டாலும் பயமாக இருக்கிறது. மூன்று நாட்களுக்கு மேல் இட்லி மாவு ஃப்ரிட்ஜில் இருந்தாலும் புளித்து விடுகிறது. நாட்டு மருத்துவர் புளித்த மாவு கபத்தை உண்டாக்கும் என்கிறார். அது வயிற்றுப்பிரச்சினைகளையும் உண்டாக்குவதுடன் சர்க்கரையையும் அதிகமாக்கி விடுகிறது என்பது அனுபவத்தில் தெரிந்தது. அதனால் தான் ஓட்ஸ், ரவா, கேழ்வரகு இட்லிகள் நிறைய புழக்கத்தில் வந்து விட்டன!!

      நீக்கு
  15. மனோ அக்கா நீங்க செய்திருக்கும் இட்லி சூப்பரா வந்திருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  16. அக்கா நீங்க எந்த வகை ஓட்ஸ் சேர்க்கறீங்க? நான் பொதுவாகப் பயன்படுத்துவது Rolled ஓட்ஸ், அதில் நார்ச்சத்து அதிகம் என்பதால். இல்லை என்றால் தானியமாகக் கிடைக்கும் cut ஓட்ஸ் ரவை போன்று உடைத்து வரும் வகை.

    ரவையை வறுப்பது போன்று ஓட்ஸை சிறிதாக வறுத்துக் கொண்டு, ரவை பக்குவத்திற்குப் பொடித்துக் கொண்டு, நாம் மற்ற இட்லி செய்வது போல் உளுந்தை ஊற வைத்து அரைத்து அதில் ஓட்ஸ் சேர்த்தும் செய்யலாம் அக்கா நன்றாக வரும். வெந்தயமும் சேர்த்து அரைப்பதுண்டு. பல வருடங்களாக சிறு தானியங்களைப் பயன்படுத்துவதால் இப்படி பரீட்சார்த்தங்கள் செய்து தெரிந்து கொண்டதுதான், அக்கா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றொன்று நான் செய்வது, புளிப்பதற்கு அவல் (நான் பெரும்பாலும் சிவப்பு கெட்டி அவல் சேர்க்கிறேன்) கால் பங்கு சேர்த்துக் கொண்டால், அல்லது ஒரு கைப்பிடி துவரம் பருப்பு சேர்த்துக் கொண்டால் நுரைத்து புளித்து விடுகிறது.

      அவல் சேர்ப்பது இட்லி மிருதுவாகவும் வருகிறது இப்படி கேழ்வரகு, கம்பு, சோளம், ஓட்ஸ் இட்லி செய்யும் போது (தானியமும் உளுந்தும் மட்டும் சேர்த்து செய்யறப்ப அவல் கால்பங்கு சேர்த்துக் கொண்டால்)

      கீதா

      நீக்கு
    2. நான் பெரும்பாலும் quaker instant oats தான் உபயோகிப்பது வழக்கம். எப்போதாவது rolled oats வாங்குவேன். நானும் உளுந்தை உபயோகித்து செய்திருக்கிறேன்.

      சில சமயம் உளுந்தில் அவ்வளவாக திருப்தி இல்லாவிடில் அவலை அரிசி யுடன் சேர்ந்தரைப்பதுண்டு. எங்கள் உணவகத்திலேயே இட்லி மெதுவாக வர அவல் அல்லது பழைய சாதம் சிறிது சேர்த்தரைக்கச் சொல்லியிருக்கிறேன்.
      கீதா! நீங்கள் நிறைய வகைகளை சுவையாக சொல்லுகிறீர்கள்! உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே?

      நீக்கு
  17. பார்ப்பதற்கு காஞ்சிபுரம் இட்லி மாதிரி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. பதில்கள்
    1. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!!

      நீக்கு
  19. ஓட்ஸ் இட்லி நன்றாக வந்துள்ளது. படம் நன்று.

    எனது அண்ணி ஒருவரும் ஓட்ஸ் இட்லி,தோசை, செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  20. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  21. சற்று நேரத்திற்கு. முன்பு தான் திருச் செந்தில் நாதன் தரிசனம்...

    மகிழ்ச்சி..

    ஷண்முக மணியைக் கண்டதும் எல்லாமே மறந்து போயிற்று...

    வெளியில் அமர்ந்திருக்கின்றோம்...

    இனிமேல் தான் வேண்டிக் கொள்ள வேண்டும் என்றால் -

    புதிதாக என்ன இருக்கின்றது!?...

    அனைத்தும்
    அவனே அறிவான்!..

    பதிலளிநீக்கு
  22. 2010 களில் ஓட்ஸ் விருப்ப உணவு..

    ஓட்ஸ் குதிரைகளுக்கானது என்றறிந்ததும் விட்டு விட்டேன்...

    பதிலளிநீக்கு
  23. ஓட்ஸ் வியாபார தந்திரம்..

    இயற்கையான பசி தோன்றலை தாமதப்படுத்துகின்றது..

    பதிலளிநீக்கு
  24. ஓட்ஸ் சில சமயம் பயன்படுத்தியதுண்டு. பிறகு ஏனோ பயன்படுத்துவதில்லை.

    குறிப்பு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!