புதன், 7 ஆகஸ்ட், 2024

வியாபாரம் செய்பவர்களுக்கு வேடம் முக்கியமா?

 

ஜீவி: 

2026- சட்டசபை தேர்தல்லே திமுகவும் பாஜாகவும் பெருந்தலைவர் வாஜ்பாய் அவர்கள் வழிகாட்டியது போல கூட்டணி அமைக்கலாம்.

ஊஹூம். அதெல்லாம் நடக்காது என்பது உங்கள் பதிலாக இருந்தால் ஆணித்தரமான காரணங்கள் குறைந்த பட்சம் நான்காவது சொல்லுங்களேன்.

# 1. இந்தியா என்பது ஒரு தனி நாடு அல்ல பல நாடுகள் சம்மதித்து இருக்கும்  " ஒன்றியம் " எனும் கொள்கை .

2. இந்திக்குப் பரம விரோதிகள்.

3. பிராமணியம் (?) சநாதனம் இரண்டும் ரொம்பவும் கெடுதல் எனும் சித்தாந்தம்.

4. கட்சிக்காரர்களுக்கு வரம்பு மீறிய சலுகையும் அவர்கள் சுயநலம் காரணமாகப்பெரும் தவறு செய்தால் கூட கண்டுகொள்ளவேண்டியதில்லை என்ற‌ விதிமுறை.‌

5. ஆதரவு காட்டுவோருக்கு தனிமனிதரேயானாலும் அசாதாரண சலுகைகள்.‌

6. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இங்கு வாழும் பார்ப்பனர் வந்தேறிகள் என்று எண்ணும் மனப்பாங்கு.‌

7. இந்து அல்லாத இதர மதத்தினருக்குக் காட்டும் சலுகைகள் உணர்வுகள் இந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக மறுக்கப்படுவது.‌

8. வரம்பு மீறி சம்பாதிப்பதில் அளவுக்கதிகமான ஈடுபாடு.‌

இதில் பலவும் அங்கும் இருக்கிறதே என்றால்,  தீவிரம் எந்த அளவு என்பதில் பெரிய வேறுபாடு.

& ஊஹூம் இதெல்லாம் நடக்காது என்று சொல்ல நான் தயாராக இல்லை. 

நெல்லைத்தமிழன்: 

1.ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாருமே ஏன் நெற்றி நிறைய பட்டை, உருத்திராட்சக் கொட்டை, காவி உடை என்று பக்திமயமாகக் காட்சியளிக்கிறார்கள்? இதுபோலவே யோகா மாஸ்டர் என்றால் வெண்ணிற ஆடை/காவி ஆடை, நெற்றியில் குங்குமம் அல்லது சந்தனம் என்று காட்சியளிப்பதன் காரணம் என்ன?     

# வரும் "வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக இந்த மேக் அப் யுக்தி தேவைப்படுகிறது.‌ ஜோதிடம் யோகா இரண்டுமே வேதத்திலிருந்து பெறப்பட்டது என்று சொல்கிறார்கள்.‌ அதற்கிசைவான பிம்பம் வேண்டாமா‌ ?

& வேடம் போடும் இன்னொரு இடமும் ஞாபகம் வருகிறது. அசோக் லேலண்ட் கம்பெனி - உள்ளே என்னதான் பதினாறு பைசா டிஃபன், எட்டு பைசா டீ என்று கொடுத்தாலும், காலை நேரத்தில் தொழிலாளர்கள் கூட்டமாக ரயிலில் இருந்து இறங்கி வேகமாக வரும்போது, நுழைவாயில் அருகே, சூடான டிஃபன் வியாபாரம் நடக்கும். விலை நாற்பது பைசா / ஐம்பது பைசா போல இருக்கும்.

என்னுடைய நண்பர் தனசேகரன், ' இருடா - அதோ அந்த ஐயர்கிட்ட இடியாப்பம் வாங்கிக்கிட்டு போகலாம் ' என்று ஒரு ஆளிடம் செல்வார். ஒரு மொட்டை ஆசாமி, வாய் நிறைய வெற்றிலை போட்டுக் குழப்பியபடி, வெற்று மார்பு, பூணூல் சகிதம் பரபரவென்று தாமரை இலைகளில் இட்லி , இடியாப்பம், குருமா என்று கட்டிக் கொடுத்து சில்லறைகளை வாங்கி பெட்டியில் போட்டுக்கொண்டு பிஸியாக இருப்பார். 

அருகில் சென்று பார்த்தபோது அவர் அணிந்திருந்த தடி பூணூலில் சரியாக நான்கு இழைகள் மட்டும் இருந்தன. 

'பாரு ஐயர் கிட்ட வாங்கினால் சுத்தமான டிஃபனாகக் கிடைக்கும்' என்ற நண்பரிடம், " இவர் ஐயர் என்றால், நான்தான் ஜவஹர்லால் நேரு" என்றேன்!  

2.  பெங்களூரு குளிர், ரொம்ப வெயில் இல்லாமல் வானம் மந்தமாக இருப்பது, மழை என்று ஜிலுஜிலுவென, 9 மாதங்கள் இருக்கின்றன. சென்னை சென்றால், கசகசவென கடும் வெயிலுடன் இருக்கிறது. இந்தச் சென்னையிலா இத்தனை வருடம் குப்பை கொட்டினோம் என்று எண்ணவைக்கிறது. உங்களுக்கு எப்படி?  

# எனக்கும் அப்படித்தான். ஃப்ரிட்ஜ், ஏ.ஸி , வாஷிங் மெஷின் - ஏன் ஸீலிங் ஃபேன் இல்லாமல் இருந்திருக்கிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.‌

& எனக்கும் அப்படித்தான்! முதலில் சென்னையில் முப்பத்து ஐந்து ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டு பிறகு பெங்களூரு வந்ததால் அப்படி தோன்றுகிறதோ என்றும் நினைக்கிறேன். முதலில் பெங்களூரு பல ஆண்டுகள் - பிறகு சென்னை என்று சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? யோசித்துப் பார்க்க இயலவில்லை! 

 3. இனிப்புகளில், பாதுஷா/தேங்காய் பர்பி/மைதா பர்பி என்று எடுத்துக்கொண்டால், கிலோ 1000 ரூபாயிலும் கிடைக்கிறது, கிலோ 500 ரூபாய்க்கும் இருக்கிறது, பெட்டிக்கடைகளில் 1 piece (எங்கள் ஊரில் எண்ணம் என்று சொல்வாங்க. 3 எண்ணம் என்றால் 3 pieces) 10 ரூபாய்க்கும் கிடைக்கிறது. ஏன் இந்த விலை வித்தியாசம்?

# இடு பொருட்களின் தரம், செய்முறையில் சுத்தம், இடைநிலை விநியோகஸ்தர் எண்ணிக்கை,  தொழிலாளர் ஊதிய ஏற்றத்தாழ்வு இப்படிப் பல காரணங்கள் இருக்கும். ருசியும் விலைக் கேற்ப தானே இருக்கிறது ?

கே. சக்ரபாணி சென்னை 28. 

வெய்யிலுக்கு. குடை பிடித்துக்கொண்டு  போன அனுபவம்  உண்டா?

# உண்டு. 

& வெயிலுக்கு எல்லாம் குடைபிடித்துக்கொண்டு போவதில்லை. எனக்கு மட்டும்தான் குடைபிடித்துக்கொண்டு போவேன். 

சின்னவீடு  என்பதற்கும்  சிறியவீடு  என்பதற்கும் உள்ள  வித்தியாசம்  என்ன?

# இந்த "சின்ன வீடு" , "முருங்கைக்காய்" ரக பதிவுகள் என்றால் எனக்கு அலர்ஜி. தமன்னா படம் அனுஷ்கா பட விவாதம் மாதிரி..

& சி'றி'ய வீட்டுக்கு பெரிய றி ; பெ'ரி'ய வீட்டுக்கு சிறிய ரி என்று குழப்பாமல், சின்ன வீட்டுக்கு சின்ன 'ன' இருப்பதுதான் வித்தியாசம்!  

கடலை  மிட்டாயை  விரும்பாதவர்களே உலகத்தில். யாரும்  இருக்க மாட்டார்கள் என  நினைக்கிறேன்  சரியா?

#  சரியாக இருக்கலாம்.  ஆனால் என் ஆதிகால நண்பர் ஒருவருக்குப் பிடிக்காத இரண்டு பொருட்கள் வேர்க்கடலை & வாழைப்பழம்.

பல் இல்லாத நபர்கள் க.மி யை விரும்ப இயலாதே.

& சிறு வயதில் எனக்கு க மி பிடிக்காது. தேங்காய் பர்பிதான் பிடிக்கும். 

போஸ்ட்மார்ட்டம் என்பது  இறந்தபின்  உடலை பரிசோதனை செய்வது 

போஸ்ட் சர்ஜரி என்பது அறுவைசிகிச்சை க்கு பிறகு  என்பது 

போஸ்ட்  ரிடயர்மென்ட்  என்பது. பணி ஓய்வு பெற்ற பிறகு

அப்போ

போஸ்ட் ஆபீஸ் என்பது  அலுவலகம்   முடிந்தபிறகு  என்பதுதானே?

# எதுவோ ஒன்று ஆனபின் தகவலை எழுதிக் கொண்டு போய் அனுப்ப நாம் செல்லும் ஆபீஸ் என்பதால் போஸ்ட் ஆஃபீஸ்.

கோ என்றால் பசு : பால் என்றால் மில்க்  . கோபாலை பயன் படுத்தி ஏன் யாரும் காபி போடுவதில்லை ?

2. லூசு  பைத்தியம் என்ற  வார்த்தையை  உபயோகிக்காத குடும்பமே இருக்க முடியாது.  சரிதானே?

# லூசு அல்லது  பைத்தியம் இருக்கும் எல்லா வீடுகளிலும் நாகரிகம் கருதி (லூசுகள் மனம் புண்படுமே என்று)  பயன்படுத்தமாட்டார்கள்.

3. நம்பிக்கையின்  உச்சகட்டம்   டி வி  ரிமோட்வேலைசெய்யவில்லை என்றால் இரண்டு தட்டு தட்டினால் வேலை செய்யும் என்று நம்புவதுதானே?

(கே. ஜி. ஜி அவர்களுக்கு  2 & 3 வது  உங்கள் அபிமான  நடிகைகள் அனுஷ்கா. தமன்னா  வீட்டிலும். நடக்கிறது என்பதை  தெரிவித்துக்கொள்கிறேன். ) 

# நம்பிக்கை அல்ல அனுபவம்.‌ இரண்டு தட்டு தட்டி நூறு முறையாவது சரியாக  வேலை செய்திருக்கிறதே.

= = = = = =

KGG பக்கம் : 

வேலை தேடிக்கொண்டிருந்த நாட்களில் வெயில் நேரத்தில் வீட்டில் சமர்த்தாக புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். மாலை நேரம் வந்ததும், உலா கிளம்பிவிடுவேன். 

எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்வேன். முக்கியமாக மூர் மார்க்கெட் சென்று பழைய புத்தகங்களை மேய்ந்து, சில பிடித்த புத்தகங்களை வாங்குவேன். 

முதன் முதலில் மூர் மார்க்கெட் சென்றபோது, ஒரு கடையில், " மேஜிக் செய்வது எப்படி? " என்று ஒரு புத்தகம், Transphone என்ற ஒரு புத்தகம், ஒன்று முதல் ஒன்பது வரை ட்ரான்சிஸ்டர் ரேடியோ, என்ற புத்தகம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்தேன். எல்லாவற்றிற்கும் குறிப்பிட்டுள்ள விலைகளைக் கூட்டினால் மூன்று ரூபாய் வந்தது. 

கடைக்காரர், நான்கு ரூபாய் விலை என்றார். 'புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கும் விலையே மொத்தம் மூன்று ரூபாய்தானே' என்றேன். 

'இந்தப் புத்தகங்கள் எல்லாம் இப்போ பிரிண்ட்ல கிடைக்காது - அதனால்தான் அவ்வளவு விலை' என்றார் கடைக்காரர். 

" சரி. திரும்பி வரும்போது வாங்கிககொள்கிறேன். மற்ற கடைகளைப் பார்த்துவிட்டு வருகிறேன் " என்று சொல்லிக்  கிளம்பினேன்.  

இரண்டு வரிசைகள் தாண்டி இருந்த வேறு ஒரு கடையில் மேஜிக் புத்தகமும், ட்ரான்சிஸ்டர் ரேடியோ புத்தகமும் இருந்தன. வேறு சில கதைப் புத்தகங்களைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, விலை விஜாரித்தேன். நாம் எதைத் தேர்ந்தெடுத்து விலை விஜாரிக்கிறோமோ அதை எப்போதுமே விலை அதிகமாகச் சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். 

அந்தப் புத்தகத்திற்கு ஆனை விலை சொன்னதும், ' அப்பாடி விலை அதிகம் ' என்று சொல்லிவிட்டு, சுவாரஸ்யமில்லாமல் இருப்பவனாகக் காட்டிக்கொண்டு - எனக்கு வேண்டிய இரண்டு புத்தகங்களை காட்டி - ' இது என்ன விலை? இதுவும் அதிக விலைதானா ?' என்று கேட்டுவிட்டு, அடுத்த கடை நோக்கி செல்பவன் போல நடித்தேன். 

கடைக்காரர், அந்த ரெண்டு புத்தகமும் சேர்ந்து முக்கால் ரூபாய்தான் என்றார். 

நான் என்னுடைய சட்டைப் பைக்குள் பார்த்துவிட்டு, 'என்னிடம் எட்டணாதான் இருக்கு' என்றேன். 

'சரி. அதைக் கொடுத்துவிட்டு, ரெண்டு புத்தகத்தையும் வாங்கிக்க' என்றார் கடைக்காரர். 

சந்தோஷமாக இரண்டு புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். 

சென்னை மூர் மார்க்கெட் ஷாப்பிங் செய்வது எப்படி என்றும் பேரம் பேசுவது எப்படி என்றும் ஓரளவு முதன் முதலில் தெரிந்துகொண்டது இப்படித்தான். 

== = = =

ரீட்டா & மீட்டா 03. 

1) ஆனந்த் ரீத்திகா திருமணம்; ஆனந்தின் முன்னாள் காதலி ரீட்டாவிடமிருந்து மிரட்டல் கடிதம். 

2) ஆனந்த் எழுதிய காதல் கடிதங்களை திரும்ப அவனிடமே சேர்ப்பிக்க பத்து லட்ச ரூபாய் அனுப்பச் சொல்கிறாள் ரீட்டா. 

அக்கவுண்ட் விவரங்கள் 'ரகசிய' பக்கத்தில் என்று எழுதியிருந்ததைப் படித்தவுடன், ஆனந்த், ரீட்டா அனுப்பியிருந்த சிவப்பு உறையை கவனமாகக் கத்தரித்து அதன் உள் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த விவரங்களை மொபைல் ஃபோன் மூலம் படம் பிடித்துக்கொண்டான். ஆனந்த் ரீட்டா இருவரும் அந்தக் காலத்தில் ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதிக்கொண்ட நாட்களில் முக்கிய விவரங்களை கடிதத்தின் உறையின் உள்பக்கத்தில் எழுதுவது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்திருந்த ரகசிய இடம். பிறகு ரீட்டாவிடமிருந்து  வந்திருந்த கடிதங்கள், உறைகள் எல்லாவற்றையும் தன்னுடைய அறையில் இருந்த பேப்பர் shredding மெஷினுக்கு இரையாக்கினான். 

ஆனந்த் தன்னுடைய பாங்க் அக்கவுண்ட் பேலன்ஸ் என்ன இருக்கிறது என்று பார்த்தான். ரெடி காஷ் இருபத்துநான்கு லட்ச ரூபாய் இருந்தது. 

நண்பனுக்கு பத்து லட்ச ரூபாய் உதவி செய்யப்போவதாக ரீத்திகாவிடம் சொல்லிவிட்டு, அன்றே, ரீட்டாவின் அக்கவுண்டுக்கு பத்து லட்ச ரூபாய் அனுப்பிவைத்தான். 

நான்கு நாட்கள் கழித்து ஆனந்த் பெயருக்கு ஒரு கூரியர் பார்சல் வந்தது. ரீட்டாவின் புதிய விலாசம் அந்த பார்சல் மீது எழுதி இருந்தது.  அதையும் தன்னுடைய மொபைல் போனில் படம்பிடித்துக்கொண்டான் ஆனந்த். 

கூரியர் மூலமாக வந்த, தான் எழுதிய காதல் கடிதங்கள், அதனோடு ரீட்டா எழுதியிருந்த 'நன்றி' கடிதம் (இனி உன் வாழ்வில் நான் குறுக்கிடமாட்டேன்!) எல்லாவற்றையும்  பேப்பர் shredding மெஷின் வாயில் போட்டுக் கடித்துத் துப்பியது. 

இரண்டு வாரங்கள் ஆனந்துக்கு நிம்மதியாகக் கழிந்தது. ரீத்திகா இண்டஸ்ட்ரீஸ், ரீத்திகா கெமிக்கல்ஸ், ரீத்திகா டெக்ஸ்டைல்ஸ், ரீத்திகா மெஷின் டூல்ஸ் - என்று ஏகப்பட்ட ரீத்திகா & coவின்  வரவு செலவு, நிர்வாகம், எல்லா விஷயங்களையும் திறம்பட பார்த்துக்கொண்டான் ஆனந்த். 

எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைக்கும்போது, மீண்டும் ரீட்டாவிடமிருந்து ஒரு சிவப்புக் கடிதம். 

(தொடரும்) 

= = = = = = = = = = =

53 கருத்துகள்:

  1. இவர் ஐயர் என்றால் நான்தான் ஜவஹர்லால் நேரு - ஹா ஹா ஹா... திருப்பதியில் ஜீயர் சேவைக்காக காலையில் வெளியே நிற்கும்போது, ஒரு சில வேடதாரிகளும் வரிசையில் நிற்பார்கள். மஹாதுவாரத்துக்குள் நுழைவதற்கு முன்பு ஜீயரின் அடிப்பொடிகள் சரியாக்க் கண்டுபிடித்து வரிசையிலிருந்து வெளில அனுப்பிடுவாங்க. அதை நினைவுபடுத்தியது

    பதிலளிநீக்கு
  2. ருசியும் விலைக்கேற்ப - பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. தெருக்கடை பஜ்ஜியைவிட வீட்டில் நன்றாக இருக்கும் என்று நம்புகிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த புதன் கிழமை கேள்வியா?

      நீக்கு
    2. ருசி விலைக்கேற்ப இருப்பதில்லை...அது சரிதான்

      ஆனா

      //தெருக்கடை பஜ்ஜியை விட வீட்டில் நன்றாக இருக்கும் என்று நம்புகிறீர்களா?//

      நிச்சயமா நல்லா இருக்கும்!

      இல்லைனு நினைக்கற ஆண்களும் சரி பெண்களும் சரி கல்யாணமே பண்ணிக் கூடாதாக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  3. பெருந்தலைவர் வாஜ்பாய் - ஒரே ஒரு பெருந்தலைவர்தான் உண்டு. அதுபோல ஒரே ஒரு கவியரசுதான்.

    பெரும்பாலும் தமிழனின் குணம் செத்தபிறகு துதி பாடுவது. இருக்கும்போது குறை சொல்வது. இதுக்கு விதிவிலக்கு திமுக கொள்ளையர்கள். பசு பன்றியோடு சேர்ந்தால் என்னாகுமோ அதுதான் பாஜக திமுகவோடு சேர்ந்தால் ஆகும்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. நெல்லை வரிந்து கட்டி நிறைய கேள்விகள் கேட்டுள்ளார். ஜீவி அமெரிக்காவில் அமர்ந்துகொண்டு பா ஜ க, தி மு க கூட்டணி பற்றி கேட்கிறார். சில பதில்கள் குறிப்பிடும்படியாக உள்ளன, கூட்டணி பற்றிய பதிலும், நேரு, அய்யர் பதிலும்.

    படித்துமுடிக்கும் முன்னரே லேலண்ட் பரீட்சை பாஸாகி விட்டீர்களே. படிப்பு முடிந்தவுடன் வேலையில் சேர்ந்திருப்பீர்கள் தானே. இதில் வேலை இல்லாமல் திரிந்த காலம் எங்கே இருக்கிறது. புதன் கேள்வி அல்ல.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிப்பு முடித்தது ஏப்ரல் 1971. சென்னை வந்தது ஆகஸ்ட் 1971.
      வேலையில் சேர்ந்தது டிசம்பர் 1971. நான்கு மாத காலம் வேலையில்லா டிப்ளமோ பட்டதாரி!

      நீக்கு
  6. வாசகர்களின் கேள்விகளுக்கு
    நகைச்சுவை உணர்வுடன்
    தாங்கள் அளிக்கும் பதில்கள்
    வரவேற்க்கத்தக்கது. ரசிக்கிறோம்
    நன்றிகள் பல
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  7. இன்றைய கேள்வி பதில்கள் வழக்கத்தை விட ஸ்வாரஸ்யம் அதிகம்.... நகைச்சுவை ததும்பும் பதில்கள் ரசிக்க வைத்தன.

    கேஜிஜி பக்கம் மற்றும் ரீட்டா தொடர் - இரண்டையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  8. கௌ அண்ணா அந்த தெருவோரக்கடைகள் படம் ரொம்ப நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நெல்லையின் இரண்டாவது கேள்விகளுக்கு

    ஆசிரியர்களின் பதிலை டிட்டோ செய்கிறேன். நானும் முதலில் சென்னை வாசியாக இருந்துவிட்டு இப்ப இங்கு. எனக்கு இயல்பாகவே குளிர் பிடிக்கும் அதீத குளிர் கூட அதற்கானவற்றை அணிந்து கொண்டு அல்லது வீட்டிற்குள் சிறிது ஹீட்டர் போட்டுக் கொண்டு சமாளித்துவிடலாம் ஆனால் வெயிலின் கடுமையை முடியவில்லை.

    கடவுளே! சூரியனை கொஞ்சம் கவனிச்சுக்கோங்க! சூரிய கடவுள் கோவிச்சுக்கிட்டு பெங்களூரையும் இனி வதைக்கிறேன் பாருங்க என்று இங்கு ஃபோக்கஸ் பண்ணிடாம இருக்கணும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சின்ன வீடு இந்தச் சின்ன என்ற சொல்லை நம்ம மக்கள் கேவலப்படுத்திட்டாங்க அது போல தண்ணி, adjust பண்ணுவது....இன்னும் நிறைய சொற்கள் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கடலை மிட்டாய் ரொம்பப் பிடிக்கும்...ஆனா ஹூம் என்ன சொல்ல!! ஸ்வீட்டு

    கடலை சிலருக்கு அலர்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல் உறுதி இல்லை என்றால் கமி வேண்டவே வேண்டாம்!

      நீக்கு
  12. போஸ்ட் - ஹாஹாஹாஹா நெல்லை நம்ம செந்தில் ஸ்டைல் கேள்வி கேட்டிருக்கார்!!!!! கில்லர்ஜி நினைவுக்கு வராரு.

    post என்ற சொல்லுக்குப் பல பொருள் இருக்கே! அதை பயன்படுத்தும் விதத்திலும் இருக்கு.

    postmortem இது ஒரே சொல்

    post surgery, post office என்பதில் அது தனியாக இடைவெளி விட்டு அடுத்த சொல் வருது. அப்படி வரப்ப அதன் பொருள் அதற்கு அடுத்தாப்ல வர சொல்லைப் பொருத்து பொருள் கொள்வது

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ ஸாரி! இது நெல்லை இல்லையா?

      சக்ரபாணி சாரின் கேள்வியா....

      கௌ அண்ணா அடுத்த பார்ட் வரப்ப கொஞ்சம் இடைவெளி அல்லது நடுவில் கோடு ஏதாச்சும் போடுங்கணா....டக்குனு குழப்புது

      கீதா

      நீக்கு
  13. கௌ அண்ணா திடீர்னு 2, 3 ந்னு வருது கீழ....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1) போஸ்ட் ஆபீஸ் கட் ஆகிவிட்டது! 2 & 3 பற்றி சக்ரபாணி சார் கீழே ஒரு குறிப்பு கொடுத்திருப்பதால், அதை கட் செய்யவில்லை!

      நீக்கு
  14. விடாது கருப்பு போன்று விடமாட்டாள் இந்த ரீட்டா! நினைச்சேன் 10 ஓடு நிக்காதுன்னு. அது சரி எதுக்கு லெட்டர் மூலம் இப்பதன வாட்சப் அது இதுன்னு ஏகப்பட்ட டெக் இருக்கே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரீட்டா, ஆனந்த் இருவருமே மொபைல் மாற்றிவிட்டார்கள். ஒருவரை ஒருவர் மொபைல் எண் கேட்டுக் கொள்ளவில்லை. இருவருமே மொபைல் எண் மற்றவருக்கு தெரிய வேண்டாம் என்று நினைக்கிறார்கள் போலிருக்கு.

      நீக்கு
    2. ஓ அப்படி போகிறதா கதை!!

      கீதா

      நீக்கு
  15. ரெயில் வே கடைகள் படம் நன்று.

    இனிப்புகளில் கடலை மிட்டாய் ஓரளவு பிடிக்கும்.

    மூர்மார்கட் பேரம்பேச பழகிக் குடுத்திருக்கிறது.

    மீண்டும் ரீட்டாவிடம் இருந்து சிவப்புக் கடிதம் என்ன செய்தியோ ? .....பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  16. கௌ அண்ணா உங்கள் வாசிப்பு ஆர்வம் சப்ஜெக்ட் சூப்பர்!!

    பாருங்க கொஞ்சம் வேஷம் நடிப்பு மூர்மார்க்கெட்டுக்குத் தேவையா இருக்கு பாருங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. கண்ணாடி உடைந்து விட்டது.. பாரம்பரிய கடை என்று சென்றால் சோதனையின் போது சொல்லிய விவரப்படி புதியது இல்லை..

    ஆயிரம் ரூபாய் இழப்பு.. என்னவென்று கேட்டால் நீங்க சொல்லிய அளவுகள் தான்.. பார்வைத் திறன் சில நாட்களில் சரியாகும் என்று சொல்லி அனுப்பி விட்டான்...

    அடுத்து என்ன செய்ய?..
    புரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கர நேத்ராலயா சென்று கண் பரிசோதனை செய்துகொள்ளவும்.

      நீக்கு
    2. தங்களது அன்பினுக்கு நெஞ்சார்ந்த நன்றி கௌதம் ஜி..

      நீக்கு
  18. பள்ளி இறுதித் தேர்வில் மாணவன் ஒருவன் அதிக பாடங்களில் 100-க்கு 100 மார்க்குகள் வாங்கி பாஸ் செய்து அந்தப் பள்ளிக்கே பெரும் மதிப்பு கொடுக்கிற மாதிரி தேர்ச்சி பெற்றிருந்தான்.
    அவனைக் குறிப்பிட்டு அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், "அவன் ஒரு தத்தி. மண்டூகம். படிப்பு என்றால் என்னவென்றே தெரியாத அறிவிலி." என்று வசை பாடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆசிரியரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? -- அடுத்த புதனுக்கான கேள்வி ஐயா.

    பதிலளிநீக்கு
  19. பழம்பெரும் கடை என்பதெல்லாம் சும்மா...

    போனவர் அவரது மூளையைக் கழற்றிக் கொடுத்து விட்டா போனார்?..

    ஏதோ ஒரு சில அனுபவங்கள்... அறிவுரைகள்...


    அதை வைத்துக் கொண்டு இன்றைக்கு ஆடுகின்றன காலி பெருங்காய டப்பாக்கள்..

    பதிலளிநீக்கு
  20. பெருங்காயம் இருந்த டப்பா தானே என்றால் பெருங்காயமே தீர்ந்து போன பிறகு!...

    ?..

    கிராமத்துப் பழமொழி மாதிரி ஆகி விட்டது எனது கண்ணாடிக் கதை!...

    பதிலளிநீக்கு
  21. உலக அரசியலைப் பற்றி கற்க லண்டனில் ஏதோ பயிலகம் இருப்பதாகவும்
    பல்வேறு நாட்டு
    அரசியல்வாதிகள் அங்கு
    பதிவு செய்து கொண்டு அரசியல் கல்வி கற்பதாகவும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.. நம் தேசத்து அரசியல்வாதிகள் யாராவது சென்ற காலத்தில் இந்தப் பயிலகத்தில் உலக அரசியல் கல்வி கற்றிருக்கிறார்களா?
    இது பற்றி மேலதிக தகவல்கள் ஏதானும் உங்களுக்குத் தெரியுமா?
    -- அடுத்த புதனில் கொஞ்சம் விளக்கமாக இது பற்றித் தெரிந்து கொள்ள ஆசை.

    பதிலளிநீக்கு
  22. கேள்விகளும் அதற்கான பதில்களும் பொதுத்தளத்தில் பொது விஷயங்கள் பற்றி நம்முள் கலந்துரையாடுவதற்காக ஒரு வாய்ப்பு ஏற்படுத்துவதாக கொள்ள வேண்டுகிறேன். யாருடைய பதிலும் அவரவருக்கு தெரிந்த அளவில் இருக்குமே தவிர அதுவே அறுதியான இறுதியான பதிலாக இருந்து விடாது என்ற ஞானமும் நம்முள் பதிந்தால் இந்தப் பகுதி சிறப்பாக அமையும்.

    பதிலளிநீக்கு
  23. //தொழிலாளர்கள் கூட்டமாக ரயிலில் இருந்து இறங்கி வேகமாக வரும்போது, நுழைவாயில் அருகே, சூடான டிஃபன் வியாபாரம் நடக்கும். விலை நாற்பது பைசா / ஐம்பது பைசா போல இருக்கும்.//

    ரயில்வே கடை டிஃபன் வியாபார செய்தியும் படமும் அருமை.


    //சென்னை மூர் மார்க்கெட் ஷாப்பிங் செய்வது எப்படி என்றும் பேரம் பேசுவது எப்படி என்றும் ஓரளவு முதன் முதலில் தெரிந்துகொண்டது இப்படித்தான். //

    மிக நன்றாக பேரம் பேசி இருக்கிறீர்கள்.
    நாங்கள் மூர் மார்க்கெட்டில் பேரம் பேச தெரியாமல் ஏமாந்து இருக்கிறோம்.

    //எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைக்கும்போது, மீண்டும் ரீட்டாவிடமிருந்து ஒரு சிவப்புக் கடிதம். //

    கதை நன்றாக போகிறது, அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்புடன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!