ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 32 : நெல்லைத்தமிழன்

 

மதியம் 1 ½ மணிக்கு ஆக்ராவிலிருந்து புறப்பட்ட எங்கள் பேருந்து சுமார் 4 மணிக்கு கோகுலத்தை அடைந்ததுகோகுலம் கிராமம் யமுனை நதிக்கரையில் இருக்கிறதுகோகுலத்தின் நுழைவாயிலை அடைவதற்கு முன்பு சாதாரண பாதையில் நடக்கிறோம். இரு புறமும் வளையல், இனிப்பு, படங்கள் போன்ற கடைகள் இருக்கின்றன.

பேருந்து நிறுத்திய இடத்திலிருந்து நடந்து சென்றோம். கோகுலம் கிராமத்தின் நுழைவாயில். நினைவிருக்கட்டும்இந்தக் கிராமம் யமுனை நதிக் கரையில் அமைந்துள்ளது. அக்கரையில் சிறிது தூரத்தில் மதுரா நகரம்.

வளையல், ஜால்ரா கடைகளைத் தவி கணிசமான அளவில் இனிப்புக் கடைகளும் இங்கு உள்ளன. இங்கு வசிக்கும் மனிதர்களைவிடப் பசுக்கள் அதிகமாம். அதனால் பாலுக்கும் அது சார்ந்த இனிப்புகளுக்கும் பஞ்சமில்லை.

வழியில் பார்த்த ஒரு கோசாலை (பசுக்களைப் பராமரிக்கும் இடம்). கோகுலத்தில் மனிதர்களைவிட பசுக்களின் எண்ணிக்கை அதிகமாம்.









சிறிய சந்துகளாக இருக்கும் பாதை வழியாக நாங்கள் நடந்து சென்றோம். சுவர்களை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சம்பந்தமான படங்கள் அலங்கரித்தன.


சுமார் பத்து நிமிடங்கள் நடந்தால் யமுனை நதிக்கரை தெரியும் இடத்தை அடையலாம். சிறிய சந்துகளாக இருந்தாலும், சுவரெங்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணனை நினைவுபடுத்தும் விதமான பெரிய அளவு சுவரோவியங்கள். வடநாட்டில், எந்த ஒரு புனித இடத்திற்கும், கோவில் முக்கியமான இடம் கிடையாது. அந்த மண்ணை மிதித்தாலே நமக்கு அந்த இத்திற்குப் போனதற்கான பலன் கிடைத்துவிடும். கோகுலம், கோவர்தன், பிருந்தாவனம், நைமிசாரண்யம் போன்ற பல இடங்களில் அப்படித்தான். கிருஷ்ணன் தவழ்ந்து விளையாடிய கோகுலம் மண்ணை மிதித்ததே எங்களுக்குப் புல்லரித்தது

எவ்வளவு அழகாக யமுனை நதி இருக்கிறது பாருங்கள்அமைதியான இந்த நதியினில் ஓடத்தில் சென்றால் எவ்வளவு அழகாக இருக்கும்நள்ளிரவில், சிறைக்காவலர்கள் மயக்கத்தில் கிடக்க, வசுதேவர், தன் குழந்தையைத் தலையில் ஏந்திக்கொண்டு, ஆதிசேஷன் குடை போல குழந்தை கிருஷ்ணரைப் பாதுகாக்க, இந்த யமுனை நதியைத் தாண்டித்தான் கோகுலத்திற்கு வந்தார்.

அழகான யமுனை என்று கண் வைத்துவிடாதீர்கள். ஒரு முறை சென்றிருந்தபோது இந்த யமுனை ஆற்றின் நிலையைப் பார்த்தேன். அதனை அடுத்த வாரம் பகிர்கிறேன். நமக்கு நீர்நிலையை விட சுயநலமே மிகப் பெரிது என்று காட்டுகின்ற படங்கள் அவை.

கோகுலத்தில் இது முக்கியமான படித்துறை

இந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததும், கோகுலத்தைச் சேர்ந்த ஒருவர், கோகுலத்தின் புனிதத் தன்மையையும், வரலாற்றையும், கிருஷ்ணன் மதுராவிலிருந்து யமுனை ஆற்றைத் தாண்டி இரவில் வசுதேவரால் கொண்டுவரப்பட்டதையும், கோகுலத்தில் வளர்ந்ததைப் பற்றியும் சொன்னார். பிறகு அங்கிருந்து கோகுலத்தில் நந்தகோபர் மாளிகை இருந்ததாக நம்பப்படும் இடத்திற்குச் செல்கிறோம். இதுவும் சில நிமிடங்கள் நடக்கும் தொலைவில் இருக்கிறது. ஆனால் எல்லாமே சந்துகள்தாம்.

வழியில் யோகமாயா பிறந்த இடம் (ஜன்மஸ்தான்) என்று ஒரு இடத்தைப் பார்த்தோம். உள்ளே செல்லவில்லை. இவரைத்தான் வசுதேவர், கிருஷ்ணனுக்குப் பதிலாக மதுரா சிறைக்குத் தூக்கிச் செல்லப்போகிறார்.

சென்ற பாதையின் தோற்றம் (சந்துகள் என்று குறிப்பிட்டேனே அது). இங்கு பாதைகளில் பளிங்கு டைல்ஸ் பதித்திருக்கிறார்கள், அதற்கான பணத்தைத் தந்து உதவியர்களின் பெயரோடு.

நாம் நந்தபவனுக்கு வந்து சேர்ந்துவிட்டோம்இந்த இடத்தில்தான்  நந்தகோபர் மாளிகை இருந்த தாம் (இதெல்லாம் நம்பிக்கையின்பாற்பட்ட து)

இந்த வாரப் பகுதியை படங்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டு நிறுத்திக்கொள்கிறேன். நாம் இங்கு பார்க்கப்போவது குழந்தை கிருஷ்ணர் சன்னிதிஇதைப்பற்றி அடுத்த வாரம் நாம் பார்க்கலாம். ஆனாலும் அந்த சன்னிதியின் படத்தைப் போட்டு இந்தப் பதிவை முடிக்க நினைக்கிறேன். நம்மை அந்த கிருஷ்ணர் காக்கட்டும்.

 (தொடரும்)

49 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம்,வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம். இந்த ஞாயிறு பிரயாணம் இல்லையா? (இந்த வாக்கியத்துக்கே இரண்டு பொருள் வருகிறதே. No travel. Travel, is it not?

      நீக்கு
    2. வணக்கம் , வாழ்க வளமுடன் நெல்லை, உங்களுக்கு சனி இரவு பதில் கொடுத்தேன். இப்போதுதான் காலை எங்களுக்கு, (7.13. )
      ஓவிய பிரபஞ்ச கண்காட்சி, வான் கோக் கண்காட்சி போகலாம் மாலை என்றார்கள் . டிக்கட் கிடைத்தால் போவோம். முன் பதிவு செய்ய வேண்டும்.

      நீக்கு
    3. ஆஹா ஓவியக் கண்காட்சியா? சூப்பர். எனக்கும் பல ஓவியங்கள் சிற்பங்கள் நிறைந்த பதிவுகளை எபி ஞாயிறில் வெளியிட ரொம்ப ஆசை. கேஜிஜி எபி வாசகர்களுக்கும் எபிக்கும் அத்தகைய கலைக்கண்கள் தற்போது இல்லை என்று சொல்லிவிட்டார்கள்

      நீக்கு
  2. கோகுலத்தை மீண்டும் தரிசனம் செய்து கொண்டேன்.

    கோகுலம், கோவர்தன், பிருந்தாவனம், நைமிசாரண்யம் போன்ற பல இடங்களில் அப்படித்தான். கிருஷ்ணன் தவழ்ந்து விளையாடிய கோகுலம் மண்ணை மிதித்ததே எங்களுக்குப் புல்லரித்தது. //

    ஆமாம், அவர் தவழ்ந்து விளையாடிய இடங்களை தரிசிக்கும் போது, அவர் குழந்தையாக இருக்கும் போது செய்த லீலைகளை மன கண்ணில் கண்டு மன மகிழ்ச்சியும், நெகிழ்வும், புல்லரிப்பும் ஏற்பட்டது உண்மை.

    பசுக்கள் எல்லாம் அழகாய் இருக்கும். எங்களை உட்கார வைத்து கண்ணின் பெருமைகளை சொல்லி த்ரையில் நம் பேர் எழுதிய டைல்ஸ் வைக்க நன்கொடை கேட்ட்டார்கள்.
    யமுனை ஆறு, முக்கியமான படித்துறை படங்கள் அழகு.
    சுவர் ஓவியங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணனின் பெருமைகளை சொல்லி பளிங்கு டைல்ஸ் பதிக்க நன்கொடை கேட்டார்கள்.

      நீக்கு
    2. வாங்க கோமதி அரசு மேடம். அந்த நடைமுறைகள் மாறவில்லை. சாதாரண கிராம்மாகவே இருக்கிறது. நாம் கற்பனை செய்துவைத்திருப்பது போல, பெரிய மாடமாளிகைகள் அந்தக் காலத்திலும் இருந்திருக்காது. ந்ந்தகோபர் ஆயர்பாடி கிராமத்தின் தலைவராக, கொஞ்சம் பெரிய வீட்டில் இருந்திருக்கலாம்.

      நீக்கு
    3. நாம் சினிமா படங்களில், ஓவியங்களில் பார்த்த காட்சிகள் நம் மனகண்முன் விரியும் அதை தான் சொன்னேன்.
      ஒரு இடத்தில் கண்ணன் தொட்டிலை ஆடிவிடலாம் என்றார்கள்
      ஆட்டி விட்ட போது சின்ன கண்ணனை ஆட்டிய மகிழ்ச்சி கிடைத்தது.
      கோவர்த்தனத்தில் பாறைகளில் அவர் விளையாடிய கால் தடங்கள் என்று காட்டிய போது மனம் அவர் நண்பர்களுடன் விளையாடி காட்சிகள் வந்து போனது. "கிருஷ்ணா " நாடகத்தை தொடர்ந்து பேரனுடன் பார்த்ததால் இப்போது அந்த கண்ணன் என் மனதில் பதிந்து விட்டான்.

      நீக்கு
    4. கண்ணன் தொண்டில் மற்ற இடங்கள் எல்லாமே பிற்காலத்தில் ஏற்பட்டவைகளாக இருக்கலாம். அந்த இடத்தில் சிவன் சன்னிதியும் அதற்கு பிரசாதங்கள் கண்டருளப் பண்ணுவதையும் அவற்றைத்தான் பூசாரிகள் எடுத்துக்கொள்வதையும் கண்டேன்

      நீக்கு
  3. கோகுலத்திற்கு கூட்டிச்சென்றது மகிழ்ச்சி. சுவர் ஓவியங்கள் நன்றாக இருந்தாலும் என்னவோ சாதாரணமாக தென்படுகின்றன. ரவி வர்மா, மணியம், கொண்டையராஜு போன்றோரின் ஒரு தனி தெய்வீக தன்மை இல்லாமல் இருப்பதாக தோன்றுகிறது. படங்களில் முகலாய வரைகலை பாதிப்பு இருப்பதாக தோன்றுகிறது. (நீண்ட கண்கள், கூரிய மூக்கு, போன்ற அம்சங்கள்)

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்... இது கண்ணனின் கிராம்ம் என்று நினைவுபடுத்த முயலும் விதமான, போஸ்டர்கள் ஒட்டி அதைக் கலைத்துவிடக் கூடாது என்பதற்காக சுவர் முழுவதும் இருக்கும்படியான சாதாரண ஓவியங்கள்தாம்.

      முகலாயர் வரைகலை என்று ஒன்று இருந்தத்தாகத் தெரியவில்லை.

      நீக்கு
  4. கோகுலம் என்பது என்ன மொழிச் சொல்?.. அதை சுலபமாக தமிழில் அர்த்தப்படுத்திக் கொள்வதாக அமைந்திருப்பது ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... அர்த்தம் உங்களுக்குப் புரிந்திருக்காதா என்ன? வடமொழிச் சொல். தமிழர்களுக்குப் புரியும்படி கண்ணதாசன் சொல்லியிருக்கிறாரே... ஆயர்பாடி

      நீக்கு
    2. ஆயர்பாடி என்ற வார்த்தையெல்லாம் கோகுலத்திற்கு ஈடாகாது. என் உணர்வின் வெளிப்பாடு இது, நெல்லை.

      நீக்கு
    3. ஆயர்பாடி என்ற வார்த்தையெல்லாம் கோகுலத்திற்கு ஈடாகாது. என் உணர்வின் வெளிப்பாடு இது, நெல்லை.

      நீக்கு
    4. உண்மைதான் ஜீவி சார்... மொழிபெயர்ப்பு செய்து ஒரு இடத்தின் பெயரைக் கொண்டுவந்துவிட முடியாது. ஆனால் கண்ணதாசன் 'ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில்' என்று மிக இயல்பான மொழியில் கொண்டுவந்திருக்கிறார். பொதுவா modernization வந்தால் அந்த இயற்கைப் பொலிவு மறைந்துவிடுகிறது

      நீக்கு
  5. முருகன் திருவருள்
    முன் நின்று காக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடி கடைசி ஞாயிறு.... அறுபடை தரிசனம் என்ற மனநிலையில் இருக்கிறீர்களா துரை செல்வராஜ் சார்?

      நீக்கு
  6. பளிங்கு டைல்ஸ் பூராவும் பெயர்ந்து காலில் குத்துகிற மாதிரி கிடக்கிறதே! நம் அறநிலையத் துறை மாதிரி சம்பந்தப்பட்ட நிர்வாகம் (அப்படி ஏதேனும் இருந்தால்) சரி செய்யக் கூடாதா என்று தோன்றியது. அங்கேயெல்லாம் கோயில்களை நிர்வாகம் செய்வது யார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பராமரிப்பு சுமார். உள்ளூர் நிர்வாகம் இதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும். கோவில்களை (கோகுலம்) நிர்வாகம் செய்யும் உள்ளூர் குழு இருந்தாலும் அந்த அந்த இடத்தைப் பார்த்துக்கொள்ளுபவர்கள் பக்தர்களிடம் காசு வாங்கிக்கொள்கிறார்கள். பெரிய மாற்றங்கள் தென்படவில்லை

      நீக்கு
  7. அது என்ன உள்ளூர் குழுவோ போங்கள்!
    அந்தந்த மாநில அரசுகள்
    தலையிட்டு கோயில் சொத்துக்களைப் பராமரிக்க தகுந்த ஏற்பாடுகளைச் செய்தால் தான் பழம்பெருமை வாய்ந்த இடங்களை காப்பாற்ற முடியும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாநில அரசுகள் நிர்வகித்தால் ஊழல் பெருகி, கோவில் சொத்துக்கள் களவாடப்படும் என்பது என் எண்ணம். இதன் காரணம் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சியின் எண்ணவோட்டத்திற்கேற்ப நடைமுறைகள் மாறிவிடும்.

      நீக்கு
    2. ஊழல் எங்கு தான் இல்லை? விட்டுத் தள்ளுங்கள். எத்தனை நூற்றாண்டுகள் தாண்டி பாண்டிய, சோழர் காலக் கோயில்கள் எல்லாம்
      சுவாமிக்கு நித்ய கால பூஜையோடு கோபுர அழகோடு
      எவ்வளவு பொலிவாக இருக்கின்றன?. அது தானே நமக்கு வேண்டும்?..

      நீக்கு
    3. நித்யகால பூசையுடன் கோபுர அழகுடன் பொலிவாகத்தான் இருக்கின்றன.... கோவிலுக்கான வரும்படி கோவில் பொலிவுக்குச் செலவழித்தால் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும். இப்போது பணம்லாம் வசதியான கார்களுக்கும் புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கும் செலவழிக்கப்படுகின்றன

      நீக்கு
  8. யோகமாயா என்று கூகிலிட்டுப் பார்த்தேன். நிறைய அரிய தகவல்கள்
    கொட்டிக் கிடக்கின்றன.
    எல்லாவற்றையும் மனத்தில் கொண்டு எழுதுவது அசாத்தியமான விஷயம்.
    ஆர்வமுள்ள நண்பர்கள் கூகுள் தேடலில் தேடிப்பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணனுக்காக மதுரா சிறையில் யோகமாயா கிடத்தப்பட்டு, கம்சன் அழுகுரல் கேட்டுக் கொல்ல முயன்று தோல்வியடைந்து கிருஷ்ணர் ஆயர்பாடியில் வளர்வதை அறிவது, இந்த யோமாயைதான் பிற்கால அம்மன் வழிபாட்டின் தோற்றுவாய் எனப் பல்வேறு விஷயங்கள் உள்ளன ஜீவி சார்

      நீக்கு
  9. கோகுலம் , யமுனைநதி , கடைகள், என நன்றாக உள்ளது.
    கண்ணன் சுவர்ஓவியங்கள் வரைந்திருப்பது சிறப்பு.

    கோகுலக் கண்ணனை தரிசித்தோம்.

    பதிலளிநீக்கு
  10. கோகுலம் வாயில் ரொம்ப அழகா இருக்கு அதாவது கலை வடிவம் கோணத்தில் இல்லை ஆனால் கிராமத்திற்குள் நுழைவது இயல்பான ஒரு கிராமமாகச் சிறிய தெருக்களுடன் இருபப்து அழகா இருக்கு.

    யமுனை ஆற்றினை பார்த்ததும் உடனே யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலேன்னு பாட்டும், யமுனா நதி இங்கே பாட்டும் டக்குனு வந்துவிட்டது மனதில் வாயில்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்(க்கா). இயல்பான கிராமமாகத்தான் தோன்றியது... ஆனால் பாருங்க...நிறைய டூரிஸ்ட் வருவதால் கிராமத்தின் நிலை மாறிவருகிறது.

      யமுனை ஆற்றின் கரையில் இருக்கும் இயல்பான கிராமம். ஆனா பாருங்க..நாம யமுனை ஆற்றை வைத்திருக்கும் விதம் அக்கிரமம்

      நீக்கு
  11. எனக்கு அந்த யமுனை படித்துறை கோகுலத்தில் இருப்பது ஆற்றங்கரை ரொம்பப் பிடித்துவிட்டது. கூடவே நீங்க தில்லியில் இருக்கும் யமுனா மாதிரி படங்கள் போடப்போறேன்னு பயமுறுத்தறீகளே நெல்லை!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே யமுனாதான் இங்கேயும். ப்ரயாக்ராஜில் அதோ கருப்பா இருக்கே அதுதான் யமுனான்னு சொல்வாங்க. இங்க எப்படி இருக்குன்னு நீங்க படத்துல பார்க்கத்தானே போறீங்க.

      நீக்கு
  12. நந்தகோபர் இருந்த வீடு கொஞ்சம் கிராமத்து பண்ணை வீடு போல இருந்திருக்கும் அதை இப்ப ரொம்பவே மாற்றி அமைச்திருக்காங்கன்னு தோணுது.

    கிராமம் ரொம்ப அழகா இருக்கு அதாவது முன்பும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் கொஞ்சம் வித்தியாசங்களுடன். ஆனால் நல்லகாலம் அதிகம் மாறவில்லைன்னே நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரை பண்ணையார் ரேஞ்சுக்குக் கொண்டுபோயிட்டீங்களே கீதா ரங்கன்(க்கா)

      நமக்கு மாத்திரம் டைம் மெஷின் இருந்து அதில் முற்காலங்களுக்குச் சென்று இடங்கள் எப்படி இருந்தன என்று பார்க்கும் வசதி இருந்தால், எனக்கு ஞாயிறு பதிவுகளுக்குப் படங்களுக்குக் குறைவிருக்காது.

      நீக்கு
  13. வழியில் எல்லாம் கிருஷ்ணர் சம்பந்தட்ப்பட்ட படங்கள் எல்லாமே சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கிராமத்தில் கிருஷ்ணர் வாழ்ந்தார் என்று அங்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு நினைவுபடுத்தும்விதமாக செல்லு வழியெங்கும் கிருஷ்ணர் படங்கள். அங்கு வேறு மதத்தினரே கிடையாதாம் (இன்றுவரையான்னு தெரியாது)

      நீக்கு
  14. ஓவியங்களின் படங்கள் அழகு.

    தகவல்கள் சிறப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  15. கோகுலத்தின் தரிசனம்.. சிறப்பு..

    புண்ணியம்..

    காலையிலேயே வாசித்து விட்டேன்...

    (அடித்துப் பிடித்துக் கொண்டு
    முதல் ஆளாகக் கருத்துரைத்தால் ஸ்ரீராம் பொற்கிழியா கொடுக்கப் போகின்றார்?.. )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜு சார். ஸ்ரீராமைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கே பொற்கிழி தரவேண்டிய நிலைமை.

      நீக்கு
  16. /// நாம யமுனை ஆற்றை வைத்திருக்கும் விதம் அக்கிரமம்///

    நீர் நிலைகளைப் பாழச்க்குவதில் நமக்கு நிகர் நாமே...


    இங்கே தஞ்சை யில் சிற்ப்பு மிகு அகழியில் குப்பைகளையும் கட்டிட இடிபாடுகளையும் கொட்டிக் கொண்டு இருக்கின்றனர்..

    மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்க முடியாதது அகழி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டு அப்புறம் கீழடியை காசு செலவழித்துத் தோண்டும் புத்திசாலிகள் நாம்

      நீக்கு
  17. ////ஆடி கடைசி ஞாயிறு.... அறுபடை தரிசனம் என்ற மனநிலையில் இருக்கிறீர்களா துரை செல்வராஜ் சார்?...////


    அப்படித்தான் இருந்தேன்..

    நேற்று சனிக்கிழமை மாலை சின்னதாக அசௌகரியம்...

    நாற்காலியில் இருந்து எழுந்தபோது சற்றே தலை சுற்றல்..

    வீட்டுக்கு தெரிந்ததும் தடையிட்டு விட்டார்கள்..

    இன்று வெயிலும் அதிகம்..

    வெளியூரில் கருப்பசாமி பூஜை.. அங்கும் செல்வதற்கு இயலவில்லை..

    முழங்கால் வலியும் தீரவில்லை..

    முருகா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் திடுமென ஏற்பட்ட முதுகு வலியால் நாலு நாட்கள் திருமலைப் பயணத்தை கேன்சல் செய்தேன். 12,000 வீண் என்பதைவிட பெருமாள் தரிசனம் வாய்க்கவில்லை என்பதில் வருத்தம். எல்லாவற்றிலும் காரணம் இருக்கும்

      நீக்கு
    2. உண்மை தான்..

      உடல் நலனைக் கவனித்துக் கொள்ளவும்..

      நீக்கு
  18. கோகுலம், விருந்தாவன், மதுரா, பர்சானா என கிருஷ்ணரின் பாதம் பட்ட இடங்களில் சில நாட்கள் தங்கியிருக்க எண்ணமுண்டு. பார்க்கலாம் எப்போது வாய்ப்பு அமைகிறது என!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். நீங்கள் இன்னும் அங்கெல்லாம் செல்லவில்லையா இல்லை சில நாட்கள் தங்கி தரிசனம் செய்யவில்லையா?

      நீக்கு
    2. வாங்க தில்லி வெங்கட். நீங்க இந்த இடங்களுக்கெல்லாம் போயிருப்பீங்க, சில நாட்கள் அங்க தங்கணும் என்ற ஆசை விரைவில் நிறைவேறட்டும்

      நீக்கு
    3. சென்றிருக்கிறேன் நெல்லை... சில நாட்கள் தங்கும் எண்ணம் உண்டு.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!