வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

எங்கள் Blog ஆசிரியர் kayjee அவர்களுக்கு - எங்கள் அஞ்சலி.

 


எங்கள் Blog ஆசிரியர் குழுவில் ஒருவரும், என்னுடைய மூன்றாவது அண்ணனும் ஆகிய திரு K G சுப்ரமணியன் புதன்கிழமை - 14-08-2024 அன்று இரவு பத்தரை மணி சுமாருக்கு காலமானார். 

Blog ஆரம்பிக்கலாமா என்று நான் யோசனை செய்து எங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கலந்து ஆலோசித்த நாட்களில், ஊக்கம் கொடுத்து, என்னை blog ஆரம்பிக்கச் சொன்னவர் அவர். 

எங்கள் குடும்பத்தின் என்சைக்ளோபீடியா என்றே அவரைச் சொல்லலாம். 

அவர் பிறந்தது 2.12.1943. 

நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் LME படித்து, 1963 ஆம் ஆண்டு டிப்ளோமா பட்டம் பெற்றார். 

பிறகு, அரவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் சேர்ந்து chargehand, சூப்பர்வைசர் என்றெல்லாம் பணிபுரிந்து, சில வருடங்களில் சொந்தத் தொழில் செய்வதற்காக குடும்பத்துடன் சென்னை வந்தார். அப்பொழுதைய மத்திய அரசாங்கத்தின் entrepreneur (one million jobs project ) திட்டத்தின் கீழ் ஒரு workshop (kayjees services) ஆரம்பித்து ITI படித்தவர்களுக்கு வேலை கொடுத்து workshop நடத்தினார். தி நகர் கோடம்பாக்கம் போன்ற  வாடகைக்கு எடுக்கப்பட்ட இடங்களில் workshop நடந்தது. 

பிறகு இராமாபுரம், ராயலா நகரில் சொந்த இடம் வாங்கி, வீடு கட்டி, சில காண்ட்ராக்ட் வேலைகளை எடுத்து வெற்றிகரமாக நடத்தினார். MFL (Madras Ferilisers Limited ), கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட வேலைகள் சில என்று காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்தார். 

தன்னுடைய மகன், மகள், பேரன்கள் உட்பட சகோதர சகோதரிகளிடமும் மிகவும் பாசம் வைத்திருந்தார். நண்பர்கள் உறவினர்கள் என்று பலருக்கும் அவர் கன்ஸல்டண்ட் ஆக இருந்து பல ஆலோசனைகளை வழங்கினார். 

சிறிது காலமாக நோய்வாய்ப் பட்டு இருந்த அவர் காலமானது எங்கள் எல்லோருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எ பி ஆசிரியர் kayjee பற்றிய எங்கள் நினைவுகளை அவ்வப்போது சில பதிவுகளில் பகிர்கிறோம். 

::கௌதமன்:: 

= = = = = = = = = = = = =

 

39 கருத்துகள்:

  1. தங்களது துயர் தீர - வேண்டிக் கொள்கின்றேன்..

    இறையருள் துணை நிற்பதாக..

    பதிலளிநீக்கு
  2. KGSன் இறப்பு அறிந்தேன். எ பி ஆசிரியர்களுடைய துக்கத்தில் பங்கு கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடைவதாக.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. ஈடு செய்ய இயலா இழப்பு. தங்கள் துயரில் இணைகிறேன்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    மிகவும் வருத்தமான செய்தியறிந்தேன். தங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தங்கள் அனைவரின் மனமும், இத்துயரிலிருந்து நீங்கி தைரியமாக இருக்க இறைவன் துணை புரிவாராக.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. கேஜிஎஸ் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமான செய்தி. அவரது ஆன்மா சாந்தியடைவதாக.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கே ஜி எஸ் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமான ஒன்று அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. ஆழ்ந்த அஞ்சலிகள். நெடு நாட்களுக்கு முன் அவரை நேரில் சந்தித்து அளவளாவிய நினைவு மீண்டது.

    பதிலளிநீக்கு
  8. கேஜிஎஸ் அவர்கள் நிறைய டெக்னிகல் knowledge உள்ளவர். கௌதமன் அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் படிக்கும்போது, எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து மேலெழுந்து வந்தவர் என்பதை அறியலாம். கேஜி யக்ஞராமன் அவர்களின் 80ம்? ஆண்டு விழாவில்தான் அவர்களைச் நேரில் சந்தித்தேன். நிறையப் பேசிக்கொண்டிருந்தோம். அவர்தான் ஞாயிறு பட உலாப் பகுதிகளை எப்போதும் நிரப்பி வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அத்தகைய பிரயாணத்தின் நெல்லைப் பகுதியில் அவர் திடீரென்று சுகவீனமுற்று, பிறகு நலம் பெற்றார். அதனை விளக்கமாக எழுதினால் பிறருக்கும் பயன் கிடைக்கும் எனச் சொல்லிக்கொண்டிருந்தேன். இந்த வருட மார்ச் மாதம் கும்பகோணத்தில் அவரைப் பார்த்தேன், ஆனால் பேசும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை (பிறர் கூப்பிட்டாலொழிய நானாகப் போய் யாரிடமும் பேசும் சந்தர்ப்பம் குறைவு). அவர் அவருடைய பேரனுடன் பேசிக்கொண்டிருந்ததும் ஒரு காரணமாக இருக்கும். எதிலும் ஆர்வம் நிறைந்த மனிதர். கற்றுக்கொள்ள வயது ஒரு காரணம் அல்ல என்பதைப் பின்பற்றியவர். எபியைப் படிக்க ஆரம்பித்து நானும் திபதிவு போன்ற பகுதிகளை அனுப்பியபோது, கேஜிஎஸ் அவர்களின் மனைவி மறைந்ததை அறிந்தேன். எபியின் பின்னூட்டத்தில் இரங்கல் தெரிவித்தபோது, சொந்த விஷயங்கள் அனைத்தையும் ப்ரைவேட்டாக வைத்துக்கொள்ள நினைப்பவர் கேஜிஎஸ்என்று சொன்னதால் அதனை உடனே நீக்கிவிட்டேன்.

    கேஜிஎஸ் அவர்களுக்கு உறவினர்கள் அனைவரும் நெருக்கம் என்றாலும் கௌதமன் நெஞ்சில் அவர் தனி இடத்தைப் பிடித்திருப்பார்.

    அவரை இழந்துவாடும் அனைவருக்கும் என் மனமார்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. திரு. கே. ஜி. எஸ். அவர்களின்
    மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
    அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறோம்

    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  10. We saw him in Sriram's quarters for the first time and he visited us with Sriram, KGG and his wife. Extraordinary person.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறையச் சொல்லணும்னு இருந்தேன். ஆனால் என்னோட சொந்தப் பிரச்னைகள் காரணமாகக்கணினியில் வேலை செய்ய நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. அவங்க அண்ணன், தம்பிகள் அனைவருமே கணிதத்தில் அபார தேர்ச்சி பெற்றவர்கள் என்றாலும் கேஜி எஸ்ஸின் திறமை தனித்துவம் வாய்ந்ததுனு தோன்றும்.

      நீக்கு
  11. .எ. பி. குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவருடைய ஆன்மா இறைவனின் காலடியில் இளைப்பாறட்டும்.

    எனது தளத்தில் ஜெயக்குமார் ஐயா அவர்களின் கருத்துரை கண்டு உடன் வந்தேன்.

    பதிலளிநீக்கு
  12. KayJee அவர்களின் மறைவு காலை வாட்ஸப் தந்த அதிர்ச்சி. அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  13. அவருடைய ஆன்மா இறைவனின் காலடியில் இளைப்பாறட்டும்.
    அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  14. ஆழ்ந்த இரங்கல்கள்... குடும்பத்தினர், உறவினர்களுக்கு அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  15. ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்ம சாந்திக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  16. ஆழந்த இரங்கல்கள் . அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் மன ஆறுதலையும், தேறுதலையும் தர வேண்டுகிறேன் இறைவனிடம்.

    கேரளா பக்கம் போய் வைத்தியம் பார்த்து கொண்டு படங்கள் எல்லாம் தொடர்ந்து போட்டுக் கொண்டு இருந்தார். கேள்வி பதில்கள் நிகழ்ச்சியில் நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்வார் , படித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. அன்னாரின் ஆன்மா இறைவனிடம் சேரவும், ஆகுடும்பத்தினர் அனைவரும் இந்த இழப்பை இறைவனின் அருளால் கடந்திடவும் பிரார்த்தனைகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. இன்றுதான் படித்தேன் ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

    அவரது குடும்பத்தினர் இத்துயரில் இருந்து மீள வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  19. இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். சுவாரசியமாக எந்த நுட்பம் பற்றியு பேசக்கூடியவர். ஏபி குழுவுக்கு ஒரு இழப்பு. வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!